பி – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சை 8
பிச்சை_உண்ணி 1
பிச்சைக்கு 2
பிஞ்ஞக 1
பிஞ்ஞகன் 2
பிஞ்ஞகனை 1
பிடவூரன் 1
பிடி 9
பிடிக்கு 1
பிடித்த 1
பிடித்து 4
பிடிப்ப 1
பிடிப்பது 1
பிண்டம் 2
பிணக்காடு 1
பிணக்கினை 1
பிணக்கோலம் 1
பிணம் 3
பிணி 13
பிணிப்பட 1
பிணியும் 1
பிணை 2
பிணைகளின் 1
பித்த 1
பித்தர் 2
பித்தரே 1
பித்தரை 1
பித்தரோ 1
பித்தன் 1
பித்தனே 2
பித்தனை 1
பித்தா 1
பித்தாடி 1
பிதற்றி 3
பிதற்று 1
பிதற்றுதல் 1
பிதற்றும் 1
பிதிர் 1
பியற்கும் 1
பிரசம் 1
பிரமற்கும் 1
பிரமன் 10
பிரமனும் 1
பிரமாணம் 1
பிரனார் 1
பிரான் 25
பிரானது 3
பிரானார் 11
பிரானாரை 1
பிரானிரே 1
பிரானே 9
பிரானை 29
பிரிகிலார் 1
பிரிதலை 1
பிரிந்திருக்கேன் 11
பிரிந்து 2
பிரியமாட்டேன் 1
பிரியா 1
பிரியாத 1
பிரியாது 1
பிரியாளே 1
பிரிவித்த 1
பிரிவு 1
பில்கும் 1
பிலம் 1
பிழம்பு 1
பிழிந்து 1
பிழுக்கை 1
பிழை 4
பிழைக்கேம் 1
பிழைகள் 1
பிழைத்த 1
பிழைத்த-கால் 1
பிழைத்தது 1
பிழைத்தனகள் 1
பிழைத்திட்டதை 1
பிழைத்திடினும் 1
பிழைத்து 1
பிழைப்பனாகிலும் 2
பிழைப்பு 2
பிழையாமை 1
பிழையேன் 2
பிழையை 2
பிள்ளை 6
பிள்ளைக்கும் 1
பிளந்த 1
பிளந்தானும் 2
பிளந்து 1
பிளவு 1
பிளிறீ 1
பிளிறு 1
பிளை 1
பிற 1
பிறங்கிய 1
பிறங்கு 1
பிறங்கும் 2
பிறத்தல் 1
பிறத்தலும் 1
பிறந்த 2
பிறந்தார்கள் 1
பிறந்து 2
பிறந்தும் 1
பிறந்தே 1
பிறந்தேன் 2
பிறந்தோம் 1
பிறப்பதும் 1
பிறப்பர்-தம் 1
பிறப்பிலியை 2
பிறப்பின் 1
பிறப்பு 4
பிறப்பும் 2
பிறர் 5
பிறரை 1
பிறவா 3
பிறவாத 1
பிறவாதவனே 1
பிறவாமை 1
பிறவாமைக்கே 1
பிறவாமையே 1
பிறவாய் 1
பிறவார் 1
பிறவி 12
பிறவியை 2
பிறவு 1
பிறவேன் 1
பிறவேனாகிலும் 1
பிறை 23
பிறைசூடீ 1
பிறைநுதலார் 1
பிறையனூர் 1
பிறையானை 3
பிறையுடை 1
பிறையும் 5
பிறையோடு 1
பின் 11
பின்பு 1
பின்னல் 1
பின்னும் 1
பின்னை 7
பின்னையாய் 1
பின்னையே 1


பிச்சை (8)

ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:47/4
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர் – தேவா-சுந்:313/2
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர் – தேவா-சுந்:502/2
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/2
உச்சியன் பிச்சை_உண்ணி உலகங்கள் எல்லாம் உடையான் – தேவா-சுந்:997/2
மேல்


பிச்சை_உண்ணி (1)

உச்சியன் பிச்சை_உண்ணி உலகங்கள் எல்லாம் உடையான் – தேவா-சுந்:997/2
மேல்


பிச்சைக்கு (2)

இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை – தேவா-சுந்:582/2
மேல்


பிஞ்ஞக (1)

பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை – தேவா-சுந்:497/2
மேல்


பிஞ்ஞகன் (2)

பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:462/3,4
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன்
குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/1,2
மேல்


பிஞ்ஞகனை (1)

பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால் – தேவா-சுந்:389/2
மேல்


பிடவூரன் (1)

பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன்
தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் – தேவா-சுந்:980/2,3
மேல்


பிடி (9)

முன்றிலிடை பிடி கன்று இடும் முதுகுன்றரே – தேவா-சுந்:441/4
முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து – தேவா-சுந்:799/1
திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/4
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய – தேவா-சுந்:806/1
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி – தேவா-சுந்:806/2
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/3
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:822/4
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:825/4
மேல்


பிடிக்கு (1)

பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
மேல்


பிடித்த (1)

பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மேல்


பிடித்து (4)

பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே – தேவா-சுந்:464/3
கொம்பை பிடித்து ஒருக்கு காலர்கள் இருக்கால் மலர் தூவி – தேவா-சுந்:794/1
பிடித்து ஆடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றோம் அன்றே – தேவா-சுந்:913/4
மேல்


பிடிப்ப (1)

காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம் – தேவா-சுந்:670/1
மேல்


பிடிப்பது (1)

பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:446/4
மேல்


பிண்டம் (2)

பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம் – தேவா-சுந்:99/2
மேல்


பிணக்காடு (1)

பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா – தேவா-சுந்:998/1
மேல்


பிணக்கினை (1)

பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
மேல்


பிணக்கோலம் (1)

மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/3
மேல்


பிணம் (3)

பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/2
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
பேய் மாறா பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு – தேவா-சுந்:977/3
மேல்


பிணி (13)

பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:292/1
அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:482/2
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:483/1
பிணி வார் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:545/4
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
என்னை நான் மறக்கும் ஆறு எம்பெருமானை என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை – தேவா-சுந்:751/4
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/2
மேல்


பிணிப்பட (1)

பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
மேல்


பிணியும் (1)

கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை – தேவா-சுந்:604/1
மேல்


பிணை (2)

கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
மேல்


பிணைகளின் (1)

பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
மேல்


பித்த (1)

நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
மேல்


பித்தர் (2)

பெற்றரை பித்தர் என்று கருதேன்-மின் படிக்கரையுள் – தேவா-சுந்:227/3
பித்தர் கடவூர்மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:544/4
மேல்


பித்தரே (1)

பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
மேல்


பித்தரை (1)

பித்தரை ஒத்து ஒரு பெற்றியர் நற்றவை என்னை பெற்ற – தேவா-சுந்:184/1
மேல்


பித்தரோ (1)

பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/2
மேல்


பித்தன் (1)

பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை – தேவா-சுந்:445/2
மேல்


பித்தனே (2)

பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம் – தேவா-சுந்:289/2
பேயனே பித்தனே என்பரால் எம்பிரானையே – தேவா-சுந்:450/4
மேல்


பித்தனை (1)

பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை – தேவா-சுந்:497/2
மேல்


பித்தா (1)

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா – தேவா-சுந்:1/1
மேல்


பித்தாடி (1)

பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:918/4
மேல்


பிதற்றி (3)

காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி – தேவா-சுந்:423/1
பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் – தேவா-சுந்:496/2
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:674/3,4
மேல்


பிதற்று (1)

பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை – தேவா-சுந்:445/2
மேல்


பிதற்றுதல் (1)

பெரும் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே – தேவா-சுந்:739/4
மேல்


பிதற்றும் (1)

ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
மேல்


பிதிர் (1)

பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


பியற்கும் (1)

மானை தோல் ஒன்றை உடுத்து புலி தோல் பியற்கும் இட்டு – தேவா-சுந்:181/3
மேல்


பிரசம் (1)

கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
மேல்


பிரமற்கும் (1)

பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
மேல்


பிரமன் (10)

கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் – தேவா-சுந்:207/1
பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள் – தேவா-சுந்:280/1
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:496/3
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் – தேவா-சுந்:540/3
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/3
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் – தேவா-சுந்:1000/2
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம் – தேவா-சுந்:1025/1
மேல்


பிரமனும் (1)

பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
மேல்


பிரமாணம் (1)

பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
மேல்


பிரனார் (1)

பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
மேல்


பிரான் (25)

பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான்
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/1,2
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை – தேவா-சுந்:115/2
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர் – தேவா-சுந்:117/3
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/2,3
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:209/3
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:219/1
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பு அரிது ஆய பிரான்
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/1,2
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/2
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/3
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:219/4
மங்கை ஒர்கூறு உடையான் வானோர் முதல் ஆய பிரான்
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/2,3
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான் – தேவா-சுந்:237/2,3
அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய் – தேவா-சுந்:510/3
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:606/4
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/3
பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம் – தேவா-சுந்:823/2
இலை கொள் சூலப்படையன் எந்தை பிரான் இடம் – தேவா-சுந்:826/2
இடம்கொண்டு இருந்த பிரான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:909/4
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
நிலம் தரு மாமகள்_கோன் நெடு மாற்கு அருள்செய்த பிரான்
நலம் தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:999/3,4
அமர் பயில்வு எய்தி அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான்
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/2,3
மேல்


பிரானது (3)

யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:94/4
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
அட்ட புயங்க பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:100/4
மேல்


பிரானார் (11)

பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
பின்னையே அடியார்க்கு அருள்செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:135/4
பெற்றபோது உகந்து பெறாவிடில் இகழில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:136/4
பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
மேல்


பிரானாரை (1)

எந்தை பிரானாரை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:842/4
மேல்


பிரானிரே (1)

பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் – தேவா-சுந்:362/2,3
மேல்


பிரானே (9)

இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:614/4
இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:615/4
இன்னம் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:616/4
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:617/4
இழித்தேன் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:618/4
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:619/4
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:620/4
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:621/4
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:622/4
மேல்


பிரானை (29)

பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை
என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை – தேவா-சுந்:571/2,3
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/2,3
காடில் ஆடிய கண்நுதலானை காலனை கடிந்திட்ட பிரானை
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை – தேவா-சுந்:575/1,2
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை – தேவா-சுந்:576/2
கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:578/1
நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/3,4
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை
ஆரூரன் அடி காண்பதற்கு அன்பாய் ஆதரித்து அழைத்திட்ட இ மாலை – தேவா-சுந்:580/2,3
திருவின்_நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்செய்திடும் தேவர் பிரானை
உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/1,2
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/1,2
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/3,4
பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/3,4
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/2,3
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/4
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/4
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/2,3
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார் – தேவா-சுந்:635/1
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/3
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/2,3
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை – தேவா-சுந்:691/2
எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை
அங்கம் நான்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும் – தேவா-சுந்:692/2,3
உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே – தேவா-சுந்:873/4
பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:874/4
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:875/4
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/4
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே – தேவா-சுந்:878/4
நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே – தேவா-சுந்:879/4
மேல்


பிரிகிலார் (1)

பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:496/2,3
மேல்


பிரிதலை (1)

பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/4
மேல்


பிரிந்திருக்கேன் (11)

எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:518/4
எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:519/4
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:520/4
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:521/4
எ பரிசு பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:522/4
என் ஆக பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:523/4
என் செய நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:524/4
என் அறிவான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:525/4
எற்று உளனாய் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:526/4
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:527/4
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:528/4
மேல்


பிரிந்து (2)

பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
மேல்


பிரியமாட்டேன் (1)

மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன் – தேவா-சுந்:783/1
மேல்


பிரியா (1)

அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் – தேவா-சுந்:438/3
மேல்


பிரியாத (1)

பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை – தேவா-சுந்:915/2
மேல்


பிரியாது (1)

பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி – தேவா-சுந்:914/1
மேல்


பிரியாளே (1)

அவ்வ திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே – தேவா-சுந்:834/4
மேல்


பிரிவித்த (1)

பெரும் பாலன்-தனக்காய் பிரிவித்த பெருந்தகையே – தேவா-சுந்:277/2
மேல்


பிரிவு (1)

பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம் – தேவா-சுந்:972/1
மேல்


பில்கும் (1)

கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும்
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/1,2
மேல்


பிலம் (1)

பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய – தேவா-சுந்:999/1
மேல்


பிழம்பு (1)

திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
மேல்


பிழிந்து (1)

தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/4
மேல்


பிழுக்கை (1)

பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் – தேவா-சுந்:550/2
மேல்


பிழை (4)

பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/2
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்த-கால் – தேவா-சுந்:902/1
மேல்


பிழைக்கேம் (1)

வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதி மாந்திய மாந்தர் – தேவா-சுந்:795/2
மேல்


பிழைகள் (1)

பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
மேல்


பிழைத்த (1)

பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
மேல்


பிழைத்த-கால் (1)

பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்த-கால்
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் – தேவா-சுந்:902/1,2
மேல்


பிழைத்தது (1)

பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
மேல்


பிழைத்தனகள் (1)

ஒறுத்தாய் நின் அருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனை பொருள்படுத்து – தேவா-சுந்:231/1,2
மேல்


பிழைத்திட்டதை (1)

பெற்றிருந்து பெறாதொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன் – தேவா-சுந்:556/2
மேல்


பிழைத்திடினும் (1)

பொய் அடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ – தேவா-சுந்:904/2
மேல்


பிழைத்து (1)

பிழைத்து ஒரு கால் இனி போய் பிறவாமை பெருமை பெற்றேன் பெற்றது ஆர் பெறுகிற்பார் – தேவா-சுந்:596/2
மேல்


பிழைப்பனாகிலும் (2)

பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் – தேவா-சுந்:550/2
பெட்டனாகிலும் திருவடி பிழையேன் பிழைப்பனாகிலும் திருவடிக்கு அடிமை – தேவா-சுந்:551/3
மேல்


பிழைப்பு (2)

பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்று இலரே – தேவா-சுந்:268/4
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால் – தேவா-சுந்:749/2
மேல்


பிழையாமை (1)

கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண – தேவா-சுந்:699/1
மேல்


பிழையேன் (2)

பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன்
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/2,3
பெட்டனாகிலும் திருவடி பிழையேன் பிழைப்பனாகிலும் திருவடிக்கு அடிமை – தேவா-சுந்:551/3
மேல்


பிழையை (2)

பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/2
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
மேல்


பிள்ளை (6)

அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
மேல்


பிள்ளைக்கும் (1)

கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/3
மேல்


பிளந்த (1)

செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
மேல்


பிளந்தானும் (2)

மா வாய் பிளந்தானும் மலர்மிசையானும் – தேவா-சுந்:132/1
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
மேல்


பிளந்து (1)

பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர் உரி போர்த்தது என்னே – தேவா-சுந்:1011/3
மேல்


பிளவு (1)

சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம் முன் – தேவா-சுந்:999/2
மேல்


பிளிறீ (1)

அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/3
மேல்


பிளிறு (1)

பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
மேல்


பிளை (1)

பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/3
மேல்


பிற (1)

பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை – தேவா-சுந்:940/1
மேல்


பிறங்கிய (1)

பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த – தேவா-சுந்:743/3
மேல்


பிறங்கு (1)

பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம் – தேவா-சுந்:823/2
மேல்


பிறங்கும் (2)

பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/3
மேல்


பிறத்தல் (1)

தாய் அவளாய் தந்தை ஆகி சாதல் பிறத்தல் இன்றி – தேவா-சுந்:173/1
மேல்


பிறத்தலும் (1)

சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின் – தேவா-சுந்:593/1
மேல்


பிறந்த (2)

இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி – தேவா-சுந்:520/3
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
மேல்


பிறந்தார்கள் (1)

சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/2
மேல்


பிறந்து (2)

இங்ஙனம் வந்து இடர் பிறவி பிறந்து அயர்வேன் அயராமே – தேவா-சுந்:521/1
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் – தேவா-சுந்:1021/1
மேல்


பிறந்தும் (1)

துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை – தேவா-சுந்:360/1
மேல்


பிறந்தே (1)

இ மாய பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் – தேவா-சுந்:241/2
மேல்


பிறந்தேன் (2)

பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன் – தேவா-சுந்:488/2
கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக – தேவா-சுந்:551/1
மேல்


பிறந்தோம் (1)

இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:971/2
மேல்


பிறப்பதும் (1)

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பது இல்லை – தேவா-சுந்:178/1
மேல்


பிறப்பர்-தம் (1)

இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை – தேவா-சுந்:739/2
மேல்


பிறப்பிலியை (2)

பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/2,3
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை – தேவா-சுந்:879/1,2
மேல்


பிறப்பின் (1)

வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
மேல்


பிறப்பு (4)

மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
ஏழு மா பிறப்பு அற்று எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:770/4
மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை – தேவா-சுந்:837/1
மேல்


பிறப்பும் (2)

இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழ்ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய் – தேவா-சுந்:416/3
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
மேல்


பிறர் (5)

நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம் – தேவா-சுந்:289/2
எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார் – தேவா-சுந்:444/1
நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன் – தேவா-சுந்:748/1
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம் – தேவா-சுந்:972/1
மேல்


பிறரை (1)

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே – தேவா-சுந்:964/1
மேல்


பிறவா (3)

கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன் – தேவா-சுந்:210/2
பெண்ணோடு ஆண் அலியாய் பிறவா உரு ஆனவனே – தேவா-சுந்:284/2
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே – தேவா-சுந்:481/3
மேல்


பிறவாத (1)

பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன் – தேவா-சுந்:488/2
மேல்


பிறவாதவனே (1)

பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/3
மேல்


பிறவாமை (1)

பிழைத்து ஒரு கால் இனி போய் பிறவாமை பெருமை பெற்றேன் பெற்றது ஆர் பெறுகிற்பார் – தேவா-சுந்:596/2
மேல்


பிறவாமைக்கே (1)

பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே – தேவா-சுந்:465/4
மேல்


பிறவாமையே (1)

எம் கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே – தேவா-சுந்:935/4
மேல்


பிறவாய் (1)

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
மேல்


பிறவார் (1)

முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/2
மேல்


பிறவி (12)

அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி
வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/3,4
மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/3
மானுட பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:74/3
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம் – தேவா-சுந்:99/2
இ மாய பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் – தேவா-சுந்:241/2
இங்ஙனம் வந்து இடர் பிறவி பிறந்து அயர்வேன் அயராமே – தேவா-சுந்:521/1
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/3
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால் – தேவா-சுந்:844/1
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி – தேவா-சுந்:970/3
மேல்


பிறவியை (2)

பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/2
நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி – தேவா-சுந்:664/1
மேல்


பிறவு (1)

பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
மேல்


பிறவேன் (1)

முடியேன் இனி பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ – தேவா-சுந்:4/1
மேல்


பிறவேனாகிலும் (1)

பேணீராகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன் – தேவா-சுந்:146/2
மேல்


பிறை (23)

பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல – தேவா-சுந்:245/1
பிறை ஆரும் சடை எம்பெருமான் அருளாய் என்று – தேவா-சுந்:258/1
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் – தேவா-சுந்:274/2
பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள் – தேவா-சுந்:280/1
பேறனூர் பிறை சென்னியினான் பெருவேளூர் – தேவா-சுந்:318/1
ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை
ஆறு தாங்கிய சடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:330/3,4
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/4
பிறை அன்றி சூடுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:451/4
கோணிய பிறை சூடியை கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:497/1
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
பிறை ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:543/4
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/3
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
சிகரத்திடை இள வெண் பிறை வைத்தான் இடம் தெரியில் – தேவா-சுந்:720/1
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும் – தேவா-சுந்:813/1
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/2
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க – தேவா-சுந்:1006/1
மேல்


பிறைசூடீ (1)

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா – தேவா-சுந்:1/1
மேல்


பிறைநுதலார் (1)

பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார்
நீடு மாடங்கள் மாளிகை-தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:671/3,4
மேல்


பிறையனூர் (1)

பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப்புலியூர் – தேவா-சுந்:314/2
மேல்


பிறையானை (3)

தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை
அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:768/2,3
மேல்


பிறையுடை (1)

பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
மேல்


பிறையும் (5)

வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த – தேவா-சுந்:743/3
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
பிறையும் கங்கையும் சூடி பெயர்ந்து ஆடும் பெருமானார் – தேவா-சுந்:873/2
ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவள சடையான் – தேவா-சுந்:932/1,2
மேல்


பிறையோடு (1)

பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே – தேவா-சுந்:775/4
மேல்


பின் (11)

தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர் – தேவா-சுந்:183/2
பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ – தேவா-சுந்:321/2
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் – தேவா-சுந்:1003/1
மேல்


பின்பு (1)

கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
மேல்


பின்னல் (1)

பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க – தேவா-சுந்:661/2
மேல்


பின்னும் (1)

முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
மேல்


பின்னை (7)

துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர் – தேவா-சுந்:435/2
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/2
பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/2
கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:618/2
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/3,4
பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழிய – தேவா-சுந்:844/2
மேல்


பின்னையாய் (1)

பெரிய நஞ்சு அமுது உண்டதும் முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை – தேவா-சுந்:685/2
மேல்


பின்னையே (1)

பின்னையே அடியார்க்கு அருள்செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:135/4

மேல்