நு – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு


நுங்கி (2)

நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/3,4
நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனை பொருள்படுத்து – தேவா-சுந்:528/2
மேல்


நுண் (6)

மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/2
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டிடை – தேவா-சுந்:440/1
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/4
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மேல்


நுண்ணியனாய் (1)

திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய்
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/1,2
மேல்


நுண்இடையார் (1)

வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
மேல்


நுண்இடையாரொடு (1)

குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி – தேவா-சுந்:619/1
மேல்


நுண்இடையாள் (4)

மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:249/3
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த – தேவா-சுந்:848/1
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி – தேவா-சுந்:906/2
மேல்


நுதல் (3)

கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/2
மேல்


நுதலர் (1)

கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் – தேவா-சுந்:541/2
மேல்


நுதலால் (1)

வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
மேல்


நுதலாள் (2)

சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/3
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க – தேவா-சுந்:1006/1
மேல்


நுதலாளொடு (1)

பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:819/3
மேல்


நுதலி (1)

ஒண் நுதலி பெருமானார் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:907/4
மேல்


நும் (7)

சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும் – தேவா-சுந்:365/1
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/2
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள் – தேவா-சுந்:489/1
மேல்


நும்மை (2)

பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/3,4
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் – தேவா-சுந்:1021/1
மேல்


நுமக்கு (1)

ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:332/1
மேல்


நுரை (3)

மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி – தேவா-சுந்:129/1
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் – தேவா-சுந்:997/3
மேல்


நுழை (3)

மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல் – தேவா-சுந்:868/1
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/2
மேல்


நுழைத்தன (1)

கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
மேல்


நுழைந்து (1)

தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து
வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே – தேவா-சுந்:719/3,4
மேல்


நுன் (3)

உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன் – தேவா-சுந்:212/1
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/2
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
மேல்


நுன்தன்னை (1)

ஐய நுன்தன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:264/4
மேல்


நுன்னை (1)

பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:212/4
மேல்


நுனக்கு (1)

மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/1,2
மேல்


நுன்அலது (1)

நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான் – தேவா-சுந்:295/2
மேல்


நுனை (4)

புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:864/3
மேல்


நுனையே (2)

எம்பெருமான் நுனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும் – தேவா-சுந்:205/1
நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன் – தேவா-சுந்:209/1

மேல்