சொ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொரிந்து 1
சொரிய 2
சொரியும் 2
சொல் 23
சொல்பாடாய் 1
சொல்பால 1
சொல்பொருள் 1
சொல்ல 2
சொல்லல் 1
சொல்லலும் 1
சொல்லவே 1
சொல்லாய் 5
சொல்லார் 1
சொல்லி 13
சொல்லிடில் 1
சொல்லிய 1
சொல்லியவே 1
சொல்லியும் 1
சொல்லில் 1
சொல்லிற்று 1
சொல்லினீர் 1
சொல்லீர் 4
சொல்லு 1
சொல்லு-மின் 2
சொல்லுக 1
சொல்லுதல் 1
சொல்லும் 10
சொல்லுவது 1
சொல்லுவன் 2
சொல்லுவார் 2
சொல்லுவார்க்கு 1
சொல்லுவாரை 1
சொல்லுவேற்கு 1
சொல்லே 9
சொல்லேன் 1
சொல்லை 1
சொல 1
சொலார் 1
சொலி 1
சொலீர் 1
சொலும் 8
சொற்பொருளாய் 1
சொன்ன 17
சொன்ன-கால் 2
சொன்னால் 1
சொன்னாலும் 3
சொன 1


சொரிந்து (1)

சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
மேல்


சொரிய (2)

மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/3,4
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய
மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய – தேவா-சுந்:798/2,3
மேல்


சொரியும் (2)

கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/4
மேல்


சொல் (23)

தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் – தேவா-சுந்:82/1
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை – தேவா-சுந்:111/3
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல்
பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/3,4
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும் – தேவா-சுந்:302/1
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல்
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/2,3
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல்
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/3,4
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அகலிடத்தில் – தேவா-சுந்:529/3
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே – தேவா-சுந்:583/3
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/2
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல்
பெரும் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே – தேவா-சுந்:739/3,4
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/3
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
நாடிய இன் தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/3,4
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அடி நாய் சொல் – தேவா-சுந்:881/3
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அடி நாய் சொல்
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே – தேவா-சுந்:881/3,4
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:891/4
புரியும் மறையோர் நிறை சொல் பொருள்கள் – தேவா-சுந்:950/3
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள் – தேவா-சுந்:953/3
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/4
கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
எண்தானே எழுத்தொடு சொல் பொருள் எல்லாம் முன் – தேவா-சுந்:981/2
மேல்


சொல்பாடாய் (1)

தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
மேல்


சொல்பால (1)

சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மேல்


சொல்பொருள் (1)

ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
மேல்


சொல்ல (2)

சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான் – தேவா-சுந்:71/3
சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
மேல்


சொல்லல் (1)

சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/4
மேல்


சொல்லலும் (1)

சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே – தேவா-சுந்:557/2
மேல்


சொல்லவே (1)

கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே – தேவா-சுந்:822/1,2
மேல்


சொல்லாய் (5)

சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ – தேவா-சுந்:147/2
துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா – தேவா-சுந்:485/1
தோன்ற நின்று அருள்செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய்
மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில் – தேவா-சுந்:553/2,3
ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே – தேவா-சுந்:934/2
மேல்


சொல்லார் (1)

துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார்
நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு – தேவா-சுந்:75/2,3
மேல்


சொல்லி (13)

தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/2
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று – தேவா-சுந்:45/1
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர் – தேவா-சுந்:48/2
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/3,4
ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும் – தேவா-சுந்:450/3
கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/1,2
வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:499/1,2
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து – தேவா-சுந்:681/2
தூற்ற தரிக்கில்லேன் என்று சொல்லி அயல் அறிய – தேவா-சுந்:807/3
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/4
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் – தேவா-சுந்:842/1,2
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:998/3,4
மேல்


சொல்லிடில் (1)

சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு – தேவா-சுந்:76/1
மேல்


சொல்லிய (1)

சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே – தேவா-சுந்:557/2
மேல்


சொல்லியவே (1)

சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து – தேவா-சுந்:681/2
மேல்


சொல்லியும் (1)

கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே – தேவா-சுந்:181/2
மேல்


சொல்லில் (1)

சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
மேல்


சொல்லிற்று (1)

துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
மேல்


சொல்லினீர் (1)

தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர்
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/1,2
மேல்


சொல்லீர் (4)

உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே – தேவா-சுந்:54/2
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/3,4
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/2
மேல்


சொல்லு (1)

கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
மேல்


சொல்லு-மின் (2)

வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:336/1
மேல்


சொல்லுக (1)

தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர் – தேவா-சுந்:900/1
மேல்


சொல்லுதல் (1)

சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும் – தேவா-சுந்:228/3
மேல்


சொல்லும் (10)

நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/4
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/4
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:490/4
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/4
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/4
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/4
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/4
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:496/4
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
மேல்


சொல்லுவது (1)

சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
மேல்


சொல்லுவன் (2)

பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள் – தேவா-சுந்:456/3
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
மேல்


சொல்லுவார் (2)

ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார்
போம் ஆறு என் புண்ணியா புண்ணியம் ஆனானே – தேவா-சுந்:977/1,2
மேல்


சொல்லுவார்க்கு (1)

நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
மேல்


சொல்லுவாரை (1)

தோன்ற நின்று அருள்செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய் – தேவா-சுந்:553/2
மேல்


சொல்லுவேற்கு (1)

நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
ஆவா என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:975/3,4
மேல்


சொல்லே (9)

சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/4
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/4
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:26/4
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:27/4
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/4
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:29/4
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
மேல்


சொல்லேன் (1)

சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
மேல்


சொல்லை (1)

சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
மேல்


சொல (1)

குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
மேல்


சொலார் (1)

எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார்
பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ – தேவா-சுந்:444/1,2
மேல்


சொலி (1)

முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து – தேவா-சுந்:799/1
மேல்


சொலீர் (1)

துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர்
பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் – தேவா-சுந்:435/2,3
மேல்


சொலும் (8)

ஆரம் ஆவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:361/4
அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/4
ஆறு தாங்கியா சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:365/4
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:366/4
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:367/4
அத்தி ஈர் உரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:368/4
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:369/4
ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:370/4
மேல்


சொற்பொருளாய் (1)

சோதியன் சொற்பொருளாய் சுருங்கா மறை நான்கினையும் – தேவா-சுந்:985/2
மேல்


சொன்ன (17)

மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/3,4
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/3,4
முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே – தேவா-சுந்:69/2
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/3,4
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/3,4
ஆரா இன்னமுதை அணி நாவல் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/2,3
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/2,3
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/3,4
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள் – தேவா-சுந்:549/3
அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே – தேவா-சுந்:569/4
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
சொன்ன எனை காணாமே சூளுறவு மகிழ் கீழே – தேவா-சுந்:910/2
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன
மாலை மதித்து உரைப்பார் மண் மறந்து வானோர் உலகில் – தேவா-சுந்:994/2,3
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/3,4
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் – தேவா-சுந்:1026/2,3
மேல்


சொன்ன-கால் (2)

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால்
வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:964/3,4
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/3,4
மேல்


சொன்னால் (1)

அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன் – தேவா-சுந்:558/2
மேல்


சொன்னாலும் (3)

அற்றவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும்
பெற்றபோது உகந்து பெறாவிடில் இகழில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:136/3,4
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும்
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/3,4
அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும்
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/3,4
மேல்


சொன (1)

அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/3

மேல்