கொ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கரை 2
கொக்கின் 1
கொக்கு 2
கொகுடிக்கோயில் 11
கொங்கில் 2
கொங்கு 6
கொங்கே 1
கொங்கை 4
கொங்கையார் 1
கொங்கையுடன் 1
கொட்டி 1
கொட்டு 2
கொட்டும் 1
கொடா 1
கொடி 14
கொடிகளிடை 1
கொடிகளும் 1
கொடிய 1
கொடியரோ 1
கொடியன் 1
கொடியாய் 1
கொடியார் 1
கொடியான் 1
கொடியானே 1
கொடியும் 2
கொடியேன் 4
கொடிறன் 1
கொடிஇடையவளோடும் 1
கொடு 6
கொடுக்ககிற்றிலேன் 1
கொடுக்கிலாதானை 1
கொடுக்கும் 2
கொடுகு 1
கொடுகொட்டி 3
கொடுங்குன்றம் 1
கொடுத்த 3
கொடுத்தல் 2
கொடுத்தாய் 2
கொடுத்தானை 1
கொடுத்தீர் 1
கொடுத்து 3
கொடுந்தொழிலானை 1
கொடுப்பார் 9
கொடுப்பானை 1
கொடும் 1
கொடும்பாடன் 1
கொடுமை 1
கொடுமைகள் 1
கொடுமையால் 1
கொடுவினையே 1
கொடை 1
கொண்-மினோ 1
கொண்ட 23
கொண்ட-கால் 1
கொண்டது 1
கொண்டதும் 3
கொண்டல் 4
கொண்டல்காள் 2
கொண்டல்நாட்டு 1
கொண்டவனே 2
கொண்டாடி 1
கொண்டாடுதல் 1
கொண்டாயே 2
கொண்டார் 9
கொண்டார்க்கு 4
கொண்டாராகிலும் 1
கொண்டால் 2
கொண்டான் 1
கொண்டானை 2
கொண்டிட்டு 1
கொண்டிருந்த 1
கொண்டீர் 15
கொண்டீரே 1
கொண்டு 77
கொணர் 1
கொணர்ந்து 19
கொத்து 4
கொத்தை 1
கொதியினால் 1
கொந்து 2
கொம்பின் 1
கொம்பினை 1
கொம்பு 2
கொம்பும் 2
கொம்பை 1
கொம்பொடு 1
கொய் 5
கொய்த 1
கொய்ய 1
கொய்யா 1
கொல் 3
கொல்ல 1
கொல்லி 1
கொல்லும் 2
கொல்லை 9
கொலை 5
கொலைகள் 1
கொவ்வை 1
கொழித்து 3
கொழு 1
கொழுந்தினை 1
கொழுந்தே 2
கொழுந்தை 1
கொழும் 4
கொள் 67
கொள்க 1
கொள்கை 2
கொள்கையனை 1
கொள்கையால் 1
கொள்கையினானை 1
கொள்வது 3
கொள்வதே 3
கொள்வர் 1
கொள்வரோ 1
கொள்வார் 1
கொள்வான் 2
கொள்வீர் 2
கொள்வேன் 1
கொள்வோனே 1
கொள்ள 4
கொள்ளாமை 1
கொள்ளி 1
கொள்ளிடத்தின் 3
கொள்ளியை 1
கொள்ளும் 9
கொள 1
கொளும் 1
கொற்ற 1
கொற்றவன் 1
கொற்றவனார் 1
கொற்று 1
கொன்றாய் 1
கொன்று 2
கொன்றை 33
கொன்றையன் 1
கொன்றையனே 1
கொன்றையான் 1
கொன்றையினாய் 5
கொன்றையினான் 2
கொன்றையினானை 5
கொன்றையுடன் 1
கொன்றையும் 7
கொன்றையொடு 2


கொக்கரை (2)

கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர் – தேவா-சுந்:369/2
விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம் – தேவா-சுந்:503/1
மேல்


கொக்கின் (1)

கோல அரவும் கொக்கின் இறகும் – தேவா-சுந்:956/1
மேல்


கொக்கு (2)

மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
மேல்


கொகுடிக்கோயில் (11)

கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:299/3,4
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/3,4
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில்
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/3,4
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:302/3,4
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில்
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/3,4
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில்
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:304/3,4
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில்
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:305/3,4
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:306/3,4
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில்
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/3,4
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில்
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/3,4
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில்
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி – தேவா-சுந்:309/2,3
மேல்


கொங்கில் (2)

கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா – தேவா-சுந்:479/1
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய் – தேவா-சுந்:922/3
மேல்


கொங்கு (6)

கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/3
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே – தேவா-சுந்:433/1
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் – தேவா-சுந்:732/1
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும் – தேவா-சுந்:1016/1
மேல்


கொங்கே (1)

கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை – தேவா-சுந்:935/2
மேல்


கொங்கை (4)

வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய் – தேவா-சுந்:56/3
குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம் – தேவா-சுந்:59/1
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே – தேவா-சுந்:252/3
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
மேல்


கொங்கையார் (1)

கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர – தேவா-சுந்:886/1
மேல்


கொங்கையுடன் (1)

வார் ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை – தேவா-சுந்:248/2
மேல்


கொட்டி (1)

கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:503/2
மேல்


கொட்டு (2)

கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர் – தேவா-சுந்:128/3
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:301/3
மேல்


கொட்டும் (1)

பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/2
மேல்


கொடா (1)

உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் – தேவா-சுந்:916/3
மேல்


கொடி (14)

கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை – தேவா-சுந்:64/3
கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா – தேவா-சுந்:247/2
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண – தேவா-சுந்:699/1
சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
கொடி அணி நெடு மாட கூடலையாற்றூரில் – தேவா-சுந்:862/3
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ – தேவா-சுந்:1009/1
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட – தேவா-சுந்:1029/3
மேல்


கொடிகளிடை (1)

கொடிகளிடை குயில் கூவும் இடம் மயில் ஆலும் இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:96/1
மேல்


கொடிகளும் (1)

தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/2
மேல்


கொடிய (1)

கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை – தேவா-சுந்:572/1
மேல்


கொடியரோ (1)

ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை – தேவா-சுந்:330/3
மேல்


கொடியன் (1)

விடை ஆர் கொடியன் வேத நாவன் – தேவா-சுந்:928/2
மேல்


கொடியாய் (1)

விடை ஆரும் கொடியாய் வெறி ஆர் மலர் கொன்றையினாய் – தேவா-சுந்:269/1
மேல்


கொடியார் (1)

கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல் – தேவா-சுந்:328/3
மேல்


கொடியான் (1)

சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:839/3
மேல்


கொடியானே (1)

வேங்கூர் உறைவாய் விளமர்நகராய் விடை ஆர் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர்நகராய் நல்லூர் நம்பானே – தேவா-சுந்:483/2,3
மேல்


கொடியும் (2)

கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/3
விடையும் கொடியும் சடையும் உடையாய் மின் நேர் உருவத்து ஒளியானே – தேவா-சுந்:418/1
மேல்


கொடியேன் (4)

கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ – தேவா-சுந்:4/2
கூத்தா தந்து அருளாய் கொடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:257/4
கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர் – தேவா-சுந்:320/3
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத – தேவா-சுந்:983/3
மேல்


கொடிறன் (1)

கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி – தேவா-சுந்:155/1
மேல்


கொடிஇடையவளோடும் (1)

கூடலையாற்றூரில் கொடிஇடையவளோடும்
ஆடல் உகந்தானை அதிசயம் இது என்று – தேவா-சுந்:871/1,2
மேல்


கொடு (6)

அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை – தேவா-சுந்:640/1
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன் – தேவா-சுந்:731/2
கொடு மழு விரகினன் கொலை மலி சிலையினன் – தேவா-சுந்:733/1
கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம் – தேவா-சுந்:1033/3
மேல்


கொடுக்ககிற்றிலேன் (1)

கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
மேல்


கொடுக்கிலாதானை (1)

கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:341/2
மேல்


கொடுக்கும் (2)

அறிவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:75/4
அணைவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:78/4
மேல்


கொடுகு (1)

கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:498/1
மேல்


கொடுகொட்டி (3)

கோணல் மா மதி சூடரோ கொடுகொட்டி காலர் கழலரோ – தேவா-சுந்:334/1
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே – தேவா-சுந்:433/1
விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம் – தேவா-சுந்:503/1
மேல்


கொடுங்குன்றம் (1)

நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த – தேவா-சுந்:314/1
மேல்


கொடுத்த (3)

நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/3,4
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
மேல்


கொடுத்தல் (2)

புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/2
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
மேல்


கொடுத்தாய் (2)

கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான் – தேவா-சுந்:281/2
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
மேல்


கொடுத்தானை (1)

மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை மணியினை பணிவார் வினை கெடுக்கும் – தேவா-சுந்:695/1
மேல்


கொடுத்தீர் (1)

தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர்
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/2,3
மேல்


கொடுத்து (3)

விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட – தேவா-சுந்:566/2
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா – தேவா-சுந்:715/2
மேல்


கொடுந்தொழிலானை (1)

குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந்தொழிலானை
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/1,2
மேல்


கொடுப்பார் (9)

கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:341/2
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/2
வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:343/2
பஞ்சதுட்டனை சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:344/2
குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:345/2
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:346/2
வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:347/2
முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:348/2
கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:349/2
மேல்


கொடுப்பானை (1)

குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை
கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:574/1,2
மேல்


கொடும் (1)

குறியில் வழுவா கொடும் கூற்று உதைத்த – தேவா-சுந்:952/1
மேல்


கொடும்பாடன் (1)

கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
மேல்


கொடுமை (1)

நின்ற வினை கொடுமை நீங்க இருபொழுதும் – தேவா-சுந்:843/1
மேல்


கொடுமைகள் (1)

கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/2
மேல்


கொடுமையால் (1)

கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே – தேவா-சுந்:822/1
மேல்


கொடுவினையே (1)

குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
மேல்


கொடை (1)

கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன் – தேவா-சுந்:398/3
மேல்


கொண்-மினோ (1)

பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/2,3
மேல்


கொண்ட (23)

கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே – தேவா-சுந்:46/1
ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட – தேவா-சுந்:53/2
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன் – தேவா-சுந்:71/1
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள் – தேவா-சுந்:378/1
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:378/2
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் – தேவா-சுந்:378/3
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/1
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன் – தேவா-சுந்:398/3
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன் – தேவா-சுந்:613/3
அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட
நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:693/3,4
தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/3,4
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:767/3
மேல்


கொண்ட-கால் (1)

காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:972/2,3
மேல்


கொண்டது (1)

ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1
மேல்


கொண்டதும் (3)

ஆர்த்திட்டதும் பாம்பு கை கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:11/4
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:376/4
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:378/4
மேல்


கொண்டல் (4)

உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர் – தேவா-சுந்:87/2
கொண்டல்நாட்டு கொண்டல் குறுக்கைநாட்டு குறுக்கையே – தேவா-சுந்:113/4
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
மேல்


கொண்டல்காள் (2)

வண்டுகாள் கொண்டல்காள் வார் மணல் குருகுகாள் – தேவா-சுந்:377/1
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:378/1,2
மேல்


கொண்டல்நாட்டு (1)

கொண்டல்நாட்டு கொண்டல் குறுக்கைநாட்டு குறுக்கையே – தேவா-சுந்:113/4
மேல்


கொண்டவனே (2)

மலை மேல் மா மருந்தே மட மாது இடம் கொண்டவனே
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/2,3
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:285/2,3
மேல்


கொண்டாடி (1)

சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி
மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/1,2
மேல்


கொண்டாடுதல் (1)

கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி – தேவா-சுந்:840/1
மேல்


கொண்டாயே (2)

கோடிக்குழகா இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:323/4
அடிகேள் அன்பு அதுவாய் இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:328/4
மேல்


கொண்டார் (9)

ஆகம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:169/2
போகம் கொண்டார் கடல் கோடியில் மோடியை பூண்பது ஆக – தேவா-சுந்:169/3
அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார்
தஞ்சம் கொண்டார் அடி சண்டியை தாம் என வைத்து உகந்தார் – தேவா-சுந்:170/1,2
தஞ்சம் கொண்டார் அடி சண்டியை தாம் என வைத்து உகந்தார் – தேவா-சுந்:170/2
நெஞ்சம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டு – தேவா-சுந்:170/3
கோட்டம் கொண்டார் குடமூக்கில் கோவலும் கோத்திட்டையும் – தேவா-சுந்:172/1
வேட்டம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:172/2
ஆட்டம் கொண்டார் தில்லை சிற்றம்பலத்தே அருக்கனை முன் – தேவா-சுந்:172/3
தஞ்சம் கொண்டார் தமக்கு என்றும் இருக்கை சரண்அடைந்தார் – தேவா-சுந்:192/3
மேல்


கொண்டார்க்கு (4)

நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:169/4
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:170/4
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:172/4
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:192/4
மேல்


கொண்டாராகிலும் (1)

குண்டாடி சமண் சாக்கிய பேய்கள் கொண்டாராகிலும் கொள்ள – தேவா-சுந்:154/1
மேல்


கொண்டால் (2)

வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
காயம் காட்டி கண் நீர் கொண்டால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:970/4
மேல்


கொண்டான் (1)

கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான்
கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள – தேவா-சுந்:224/2,3
மேல்


கொண்டானை (2)

படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை – தேவா-சுந்:582/1,2
பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:625/2,3
மேல்


கொண்டிட்டு (1)

கண்டானே கண்-தனை கொண்டிட்டு காட்டாயே – தேவா-சுந்:981/3
மேல்


கொண்டிருந்த (1)

கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
மேல்


கொண்டீர் (15)

பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர்
கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம் – தேவா-சுந்:55/1,2
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி நீரும் மனத்தீரே – தேவா-சுந்:67/2
அம் பொன் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:892/4
அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:893/4
ஆன வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:894/4
அம் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:895/4
அரிய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:896/4
அறிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:897/4
அணிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:898/4
அரும் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:899/4
ஆய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:900/4
ஆதி வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுக என்று – தேவா-சுந்:901/2
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:965/3
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:974/3
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:974/4
மேல்


கொண்டீரே (1)

பொருந்தி திரு மூலட்டானமே இடமா கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:973/2,3
மேல்


கொண்டு (77)

கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை – தேவா-சுந்:11/1
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/3,4
பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/3,4
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/3,4
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/3,4
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார் – தேவா-சுந்:42/1
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்துவேனுக்கு – தேவா-சுந்:42/3
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
அகத்து அடிமை செயும் அந்தணன்தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான் – தேவா-சுந்:88/1
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
பீடு பெற பெரியோர் திடம் கொண்டு மேவினர்-தங்களை காக்கும் இடம் – தேவா-சுந்:103/2
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் – தேவா-சுந்:170/1
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார் – தேவா-சுந்:176/2
அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:179/4
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா – தேவா-சுந்:203/2
ஆடு-மின் அன்புடையீர் அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு
சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து – தேவா-சுந்:221/1,2
கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை – தேவா-சுந்:225/1
அரியவன் அட்டபுட்பம் அவை கொண்டு அடி போற்றி நல்ல – தேவா-சுந்:226/2
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே – தேவா-சுந்:252/3
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய் – தேவா-சுந்:266/3
கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:301/2
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும் – தேவா-சுந்:302/1
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/2
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர – தேவா-சுந்:334/3
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/3
குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/1,2
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே – தேவா-சுந்:415/1
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி – தேவா-சுந்:420/2
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் – தேவா-சுந்:484/1
வானை காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே – தேவா-சுந்:484/2
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:489/3
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/2
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/4
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர் – தேவா-சுந்:502/2
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/4
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே – தேவா-சுந்:507/3,4
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:535/3
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:538/3
பெய்யும் மா மழை பெரு வெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் – தேவா-சுந்:561/3
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலி கொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை – தேவா-சுந்:641/1
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே – தேவா-சுந்:706/1
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/2
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
ஆர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:786/3,4
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
அலைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:787/3,4
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டு இழி – தேவா-சுந்:823/3
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/3
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட – தேவா-சுந்:853/3
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
ஊர்-தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று – தேவா-சுந்:864/1
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் – தேவா-சுந்:874/2
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை – தேவா-சுந்:935/2
ஊன் ஆர் உடை வெண் தலை உண் பலி கொண்டு
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம் – தேவா-சுந்:948/1,2
இண்டை கொண்டு அன்பு இடையறாத – தேவா-சுந்:955/3
வாக்கு என்னும் மாலை கொண்டு உன்னை என் மனத்து – தேவா-சுந்:978/3
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு
ஊன் உடை இ உடலம் ஒடுங்கி புகுந்தான் பரந்தான் – தேவா-சுந்:987/2,3
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் – தேவா-சுந்:995/2
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டு அடி சேர்வு அறியா – தேவா-சுந்:1022/1
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/3
ஒருவர்க்கு ஒருவர் அரிதாகில் உடை வெண் தலை கொண்டு ஊர்ஊரன் – தேவா-சுந்:1031/1
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர் – தேவா-சுந்:1036/3
மேல்


கொணர் (1)

கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:834/1
மேல்


கொணர்ந்து (19)

உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:37/3
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/3
குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:123/2
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:124/2
சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:126/2
மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:128/2
தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:129/2
செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:130/2
மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:131/2
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ – தேவா-சுந்:365/2
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:720/4
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:723/4
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/4
வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:726/4
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும் – தேவா-சுந்:790/3
மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை – தேவா-சுந்:803/2
மேல்


கொத்து (4)

கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:322/3
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக – தேவா-சுந்:544/1
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:867/3
மேல்


கொத்தை (1)

குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர் – தேவா-சுந்:965/2
மேல்


கொதியினால் (1)

கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
மேல்


கொந்து (2)

கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் – தேவா-சுந்:255/1
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:865/3
மேல்


கொம்பின் (1)

கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/3
மேல்


கொம்பினை (1)

கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/3
மேல்


கொம்பு (2)

மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த – தேவா-சுந்:848/1
மேல்


கொம்பும் (2)

கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
மேல்


கொம்பை (1)

கொம்பை பிடித்து ஒருக்கு காலர்கள் இருக்கால் மலர் தூவி – தேவா-சுந்:794/1
மேல்


கொம்பொடு (1)

கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
மேல்


கொய் (5)

கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
கொய் ஆர் பொழில் கோடியே கோயில்கொண்டாயே – தேவா-சுந்:324/4
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
கொய் அணி மலர் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:863/3
மேல்


கொய்த (1)

கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் – தேவா-சுந்:775/2
மேல்


கொய்ய (1)

கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய
என்னை கிளி மதியாது என எடுத்து கவண் ஒலிப்ப – தேவா-சுந்:804/2,3
மேல்


கொய்யா (1)

கொய்யா மலர் கோங்கொடு வேங்கையும் சாடி – தேவா-சுந்:130/1
மேல்


கொல் (3)

கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன் – தேவா-சுந்:316/1
கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே – தேவா-சுந்:478/2
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
மேல்


கொல்ல (1)

கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய – தேவா-சுந்:845/2
மேல்


கொல்லி (1)

கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
மேல்


கொல்லும் (2)

கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை – தேவா-சுந்:572/1
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
மேல்


கொல்லை (9)

கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை – தேவா-சுந்:11/1
குறவனார்-தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை
மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர் – தேவா-சுந்:183/1,2
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:203/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி மேயவனை – தேவா-சுந்:208/1
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/3
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
கொல்லை வல் அரவம் அசைத்தானை கோலம் ஆர் கரியின் உரியானை – தேவா-சுந்:579/2
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
மேல்


கொலை (5)

சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:500/2
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
கொடு மழு விரகினன் கொலை மலி சிலையினன் – தேவா-சுந்:733/1
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல் – தேவா-சுந்:835/2
மேல்


கொலைகள் (1)

குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
மேல்


கொவ்வை (1)

கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/2
மேல்


கொழித்து (3)

பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
வாரும் அருவி மணி பொன் கொழித்து
சேரும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:943/3,4
மேல்


கொழு (1)

கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே – தேவா-சுந்:478/2
மேல்


கொழுந்தினை (1)

குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
மேல்


கொழுந்தே (2)

கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே – தேவா-சுந்:266/2
கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே – தேவா-சுந்:478/2
மேல்


கொழுந்தை (1)

செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான் – தேவா-சுந்:525/3
மேல்


கொழும் (4)

குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு – தேவா-சுந்:372/1
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும் – தேவா-சுந்:837/3
மேல்


கொள் (67)

படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/2
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை – தேவா-சுந்:64/3
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/3
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/4
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:90/4
முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ – தேவா-சுந்:91/2
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணன் வலஞ்சுழி – தேவா-சுந்:121/1
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் – தேவா-சுந்:121/2
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள்
மறை ஆர் வானவனே மறையின் பொருள் ஆனவனே – தேவா-சுந்:280/1,2
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
இடம் கொள் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:312/4
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/3
இலை கொள் சோலை தலை இருக்கும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:376/1
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:376/2
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/3
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
மை கொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:591/4
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன் – தேவா-சுந்:666/2
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/3
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:696/4
நீரில் நின்று அடி போற்றி நின்மலா கொள் என ஆங்கே – தேவா-சுந்:767/2
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை – தேவா-சுந்:768/2
மை கொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கை – தேவா-சுந்:775/1
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் – தேவா-சுந்:786/1
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:786/3
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:787/3
கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
இலை கொள் சூலப்படையன் எந்தை பிரான் இடம் – தேவா-சுந்:826/2
குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/2
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/4
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/2
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:878/3
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை – தேவா-சுந்:893/2
வார் இடம் கொள் வனமுலையாள்-தன்னோடு மயானத்து – தேவா-சுந்:909/1
பணம் கொள் அரவம் பற்றி பரமன் – தேவா-சுந்:927/1
மற கொள் அரக்கன் வரை தோள் வரையால் – தேவா-சுந்:946/1
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம் – தேவா-சுந்:946/2
நற கொள் கமலம் நனி பள்ளி எழ – தேவா-சுந்:946/3
மேல்


கொள்க (1)

உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
மேல்


கொள்கை (2)

பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
மேல்


கொள்கையனை (1)

மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/2,3
மேல்


கொள்கையால் (1)

குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
மேல்


கொள்கையினானை (1)

கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
மேல்


கொள்வது (3)

ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:47/4
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/2
ஆதல்செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்வது அழகிதே – தேவா-சுந்:423/2
மேல்


கொள்வதே (3)

செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில் – தேவா-சுந்:184/3
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில் – தேவா-சுந்:553/3
மேல்


கொள்வர் (1)

பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் – தேவா-சுந்:550/2
மேல்


கொள்வரோ (1)

புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/3
மேல்


கொள்வார் (1)

தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மேல்


கொள்வான் (2)

வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
எழு நீர்மை கொள்வான் அமரும் இடம் ஆம் – தேவா-சுந்:947/2
மேல்


கொள்வீர் (2)

விற்று கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன் – தேவா-சுந்:965/1
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர்
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/2,3
மேல்


கொள்வேன் (1)

நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே – தேவா-சுந்:939/4
மேல்


கொள்வோனே (1)

பொய்யே உன்னை புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளா கொள்வோனே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய் – தேவா-சுந்:421/1,2
மேல்


கொள்ள (4)

குண்டாடி சமண் சாக்கிய பேய்கள் கொண்டாராகிலும் கொள்ள
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/1,2
கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே – தேவா-சுந்:415/3
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:420/3
குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள் – தேவா-சுந்:441/3
மேல்


கொள்ளாமை (1)

மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/2,3
மேல்


கொள்ளி (1)

கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே – தேவா-சுந்:515/1
மேல்


கொள்ளிடத்தின் (3)

உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
மேல்


கொள்ளியை (1)

இடு பலி கொள்ளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:846/4
மேல்


கொள்ளும் (9)

படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை – தேவா-சுந்:328/2
ஐயம் கொள்ளும் அ அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:336/4
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/2
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:499/2
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:500/2
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/2
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:504/3
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும்
பித்தர் கடவூர்மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:544/3,4
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
மேல்


கொள (1)

காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
மேல்


கொளும் (1)

குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/2
மேல்


கொற்ற (1)

கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
மேல்


கொற்றவன் (1)

கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
மேல்


கொற்றவனார் (1)

கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/3
மேல்


கொற்று (1)

அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
மேல்


கொன்றாய் (1)

கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான் – தேவா-சுந்:281/2
மேல்


கொன்று (2)

பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார் – தேவா-சுந்:500/1
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே – தேவா-சுந்:822/1
மேல்


கொன்றை (33)

வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த – தேவா-சுந்:47/1,2
குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம் – தேவா-சுந்:59/1
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார் – தேவா-சுந்:69/3
வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு – தேவா-சுந்:189/1
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே – தேவா-சுந்:239/2
சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே – தேவா-சுந்:293/2
ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர் – தேவா-சுந்:367/1
மத்தம் மா மலர் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும் – தேவா-சுந்:368/1
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/2
கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய் – தேவா-சுந்:422/2
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே – தேவா-சுந்:433/1
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் – தேவா-சுந்:484/1
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
மரு ஆர் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல – தேவா-சுந்:540/1
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக – தேவா-சுந்:544/1
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/4
அடல் விடையினன் மழுவாளினன் அலரால் அணி கொன்றை
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:724/1,2
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/3
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் – தேவா-சுந்:763/1
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் – தேவா-சுந்:786/1
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா – தேவா-சுந்:788/1
பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம் – தேவா-சுந்:823/2
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க – தேவா-சுந்:906/1
தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய – தேவா-சுந்:908/2
புனை தார் கொன்றை பொன் போல் மாலை புரி புன் சடையீரே – தேவா-சுந்:969/2
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட – தேவா-சுந்:1029/3
மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை – தேவா-சுந்:1035/1
மேல்


கொன்றையன் (1)

வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:597/2
மேல்


கொன்றையனே (1)

கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:279/3
மேல்


கொன்றையான் (1)

வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
மேல்


கொன்றையினாய் (5)

விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால் – தேவா-சுந்:216/1
விடை ஆரும் கொடியாய் வெறி ஆர் மலர் கொன்றையினாய்
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே – தேவா-சுந்:269/1,2
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/2
தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே – தேவா-சுந்:555/2
பொன் நவிலும் கொன்றையினாய் போய் மகிழ் கீழ் இரு என்று – தேவா-சுந்:910/1
மேல்


கொன்றையினான் (2)

தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:907/2,3
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
மேல்


கொன்றையினானை (5)

தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
மழைக்கு அரும்பும் மலர் கொன்றையினானை வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:596/1
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/2
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை – தேவா-சுந்:768/2
மேல்


கொன்றையுடன் (1)

விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் – தேவா-சுந்:274/2
மேல்


கொன்றையும் (7)

தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
மட்டு ஆர் மலர் கொன்றையும் வன்னியும் சாடி – தேவா-சுந்:128/1
தாரும் தண் கொன்றையும் கூவிளம் தன் மத்தமும் – தேவா-சுந்:452/1
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி – தேவா-சுந்:776/1
மேல்


கொன்றையொடு (2)

சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1

மேல்