மொ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு


மொட்டு (4)

மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:128/2
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/2
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:503/3
மேல்


மொண்ட (1)

மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/4
மேல்


மொய் (2)

காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
முழு நீறு அணி மேனியன் மொய் குழலார் – தேவா-சுந்:947/1
மேல்


மொய்த்த (3)

மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு – தேவா-சுந்:667/1
மேல்


மொய்த்து (1)

மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
மேல்


மொழி (8)

குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம் – தேவா-சுந்:116/1
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/3
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:131/3
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள் – தேவா-சுந்:719/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
அங்கம் மொழி அன்னார் அவர் அமரர் தொழுது ஏத்த – தேவா-சுந்:814/1
மேல்


மொழிந்த (2)

முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/2
மேல்


மொழிந்தவர் (1)

முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
மேல்


மொழிய (3)

தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:376/4
முற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:379/4
மேல்


மொழியார் (1)

பண் இசை ஆர் மொழியார் பலர் பாட – தேவா-சுந்:105/3
மேல்


மொழியாள் (2)

கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி – தேவா-சுந்:487/2
மேல்


மொழியாளை (1)

பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
மேல்


மொழியாளொடு (1)

பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/3
மேல்


மொழியினும் (1)

முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:348/2
மேல்


மொழியும் (1)

அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
மேல்


மொழியேன் (1)

முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன்
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/2,3

மேல்