கை – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 41
கைகள் 2
கைகளால் 3
கைத்தலத்து 1
கைத்தவர்க்கும் 1
கைதை 2
கைதொழல் 1
கைதொழு-மின் 1
கைதொழுது 2
கைதொழும் 1
கைதொழுவார் 1
கைதொழுவேன் 1
கைப்பர் 1
கைம்மா 2
கைம்மாவின் 2
கைம்மை 1
கையது 3
கையர் 5
கையன் 3
கையனே 1
கையால் 4
கையான் 1
கையானும் 1
கையானே 2
கையானை 3
கையில் 12
கையினன் 1
கையினனே 3
கையினார் 1
கையினால் 1
கையினானை 1
கையினீர் 1
கைவிட்டு 1
கைவிடுவான் 1


கை (41)

ஆர்த்திட்டதும் பாம்பு கை கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:11/4
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி – தேவா-சுந்:52/3
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/3,4
போர்த்தவர் ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகல – தேவா-சுந்:193/2
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே – தேவா-சுந்:215/1
விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/3
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:272/3
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:283/3
கை ஆர் வளை காடுகாளோடும் உடனாய் – தேவா-சுந்:324/3
கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:349/2
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/4
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே – தேவா-சுந்:464/3
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
பெற்றுளன் ஆம் பெருமையனை பெரிது அடியேன் கை அகன்றிட்டு – தேவா-சுந்:526/3
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/3
மாற்று களிறு அடைந்தாய் என்று மத வேழம் கை எடுத்து – தேவா-சுந்:807/1
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/2
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
கலவ மயில் போல் வளை கை நல்லார் – தேவா-சுந்:930/1
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம் – தேவா-சுந்:944/2
வளை கை மடவார் மடுவில் தட நீர் – தேவா-சுந்:944/3
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும் – தேவா-சுந்:1028/1
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/3
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/4
மேல்


கைகள் (2)

காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட – தேவா-சுந்:337/3
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
மேல்


கைகளால் (3)

முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/3
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திரு கைகளால்
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:446/3,4
மேல்


கைத்தலத்து (1)

மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
மேல்


கைத்தவர்க்கும் (1)

வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள – தேவா-சுந்:677/2
மேல்


கைதை (2)

கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/3,4
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
மேல்


கைதொழல் (1)

கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
மேல்


கைதொழு-மின் (1)

கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின்
எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால் – தேவா-சுந்:727/2,3
மேல்


கைதொழுது (2)

கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால் – தேவா-சுந்:100/1
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
மேல்


கைதொழும் (1)

தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
மேல்


கைதொழுவார் (1)

அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
மேல்


கைதொழுவேன் (1)

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே – தேவா-சுந்:199/1,2
மேல்


கைப்பர் (1)

கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
மேல்


கைம்மா (2)

கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/3
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
மேல்


கைம்மாவின் (2)

கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர் – தேவா-சுந்:299/2
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
மேல்


கைம்மை (1)

தென்னூர் கைம்மை திரு சுழியல் திரு கானப்பேர் – தேவா-சுந்:117/1
மேல்


கையது (3)

நிலன் உடை மான் மறி கையது தெய்வ – தேவா-சுந்:107/1
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/2
மேல்


கையர் (5)

படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:139/3
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/1,2
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/3
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/3
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர்
பேழை சடையர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:548/3,4
மேல்


கையன் (3)

மானை இடத்தது ஓர் கையன் இடம் மதம் மாறுபட பொழியும் மலை போல் – தேவா-சுந்:94/3
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:97/4
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
மேல்


கையனே (1)

மறி சேர் அம் கையனே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:247/3
மேல்


கையால் (4)

கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால்
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/1,2
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் – தேவா-சுந்:133/2
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மேல்


கையான் (1)

அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
மேல்


கையானும் (1)

சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா – தேவா-சுந்:307/1
மேல்


கையானே (2)

கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/4
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே
மறைக்காட்டானே திரு மாந்துறையாய் மாகோணத்தானே – தேவா-சுந்:480/2,3
மேல்


கையானை (3)

வெம் கனல் மா மேனியனை மான் மருவும் கையானை
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:521/3,4
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/3,4
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
மேல்


கையில் (12)

கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில்
அனல் உடையார் அழகு ஆர்தரு சென்னி – தேவா-சுந்:107/2,3
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ – தேவா-சுந்:190/1
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/2
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/3
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில்
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/1,2
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/3
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான் – தேவா-சுந்:878/2
மேல்


கையினன் (1)

கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன்
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/2,3
மேல்


கையினனே (3)

மறி சேர் கையினனே மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:262/1
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
அனல் சேர் கையினனே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:276/4
மேல்


கையினார் (1)

சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி – தேவா-சுந்:998/3
மேல்


கையினால் (1)

கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/2
மேல்


கையினானை (1)

விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
மேல்


கையினீர் (1)

மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/3
மேல்


கைவிட்டு (1)

ஊனை காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே – தேவா-சுந்:484/4
மேல்


கைவிடுவான் (1)

பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன் – தேவா-சுந்:518/1

மேல்