பே – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சு 3
பேச்சை 1
பேசவும் 1
பேசன்-மின் 2
பேசாதார் 2
பேசி 12
பேசிட 2
பேசில் 1
பேசின 1
பேசினால் 1
பேசினும் 2
பேசு-மின் 1
பேசும் 1
பேசுவார் 1
பேசேன் 2
பேடை 2
பேடைகள் 1
பேடைகாள் 1
பேடைமஞ்ஞையும் 1
பேடையை 1
பேண 1
பேணா 2
பேணாது 2
பேணாய் 1
பேணி 2
பேணிய 1
பேணியே 1
பேணில் 1
பேணீராகிலும் 1
பேணுதல் 1
பேணும் 1
பேணுமவர்க்கு 2
பேதுறவும் 1
பேதை 3
பேதையேன் 1
பேய் 10
பேய்கள் 3
பேயனே 1
பேயாய் 1
பேயார்க்கும் 1
பேயும் 1
பேயொடு 2
பேயோடு 1
பேயோடேனும் 1
பேர் 14
பேர்த்தே 1
பேர்ந்தவர்க்கு 1
பேர்வதேயாகில் 1
பேரா 1
பேராது 1
பேராளர் 1
பேரி 1
பேரும் 2
பேரூர் 1
பேரூரர் 1
பேரெண் 1
பேழ் 1
பேழ்கணிக்க 1
பேழை 2
பேறனூர் 1
பேறுசெய்து 1


பேச்சு (3)

பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:874/4
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:875/4
மேல்


பேச்சை (1)

பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
மேல்


பேசவும் (1)

புன்மைகள் பேசவும் பொன்னை தந்து என்னை போகம் புணர்த்த – தேவா-சுந்:168/3
மேல்


பேசன்-மின் (2)

வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:448/4
பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/4
மேல்


பேசாதார் (2)

பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:874/4
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:875/4
மேல்


பேசி (12)

சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு – தேவா-சுந்:54/3
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி
பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க – தேவா-சுந்:661/1,2
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/1,2
முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன் – தேவா-சுந்:741/2
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:793/4
மேல்


பேசிட (2)

பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
மேல்


பேசில் (1)

பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால் – தேவா-சுந்:749/2
மேல்


பேசின (1)

பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
மேல்


பேசினால் (1)

பேர் ஓர் ஆயிரமும் உடையானை பேசினால் பெரிதும் இனியானை – தேவா-சுந்:580/1
மேல்


பேசினும் (2)

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலா – தேவா-சுந்:340/1
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/2
மேல்


பேசு-மின் (1)

ஏசின பேசு-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:455/4
மேல்


பேசும் (1)

என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே – தேவா-சுந்:659/2
மேல்


பேசுவார் (1)

பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம் – தேவா-சுந்:289/2
மேல்


பேசேன் (2)

மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன் – தேவா-சுந்:747/2
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால் – தேவா-சுந்:749/2
மேல்


பேடை (2)

விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே – தேவா-சுந்:970/1
மேல்


பேடைகள் (1)

அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
மேல்


பேடைகாள் (1)

சக்கிரவாளத்து இளம் பேடைகாள் சேவல்காள் – தேவா-சுந்:375/1
மேல்


பேடைமஞ்ஞையும் (1)

பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
மேல்


பேடையை (1)

பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே – தேவா-சுந்:513/3,4
மேல்


பேண (1)

காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார் – தேவா-சுந்:196/1
மேல்


பேணா (2)

வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:397/1,2
பேணா முனிவன் பெரு வேள்வி எலாம் – தேவா-சுந்:951/1
மேல்


பேணாது (2)

இழித்து உகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேணாது
ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட – தேவா-சுந்:53/1,2
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை – தேவா-சுந்:940/1
மேல்


பேணாய் (1)

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
மேல்


பேணி (2)

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உன் கழல் ஏத்துவார்கள் – தேவா-சுந்:44/1
பேணி நாடு அதனில் திரியும் பெருமான்-தனை – தேவா-சுந்:122/1
மேல்


பேணிய (1)

பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை – தேவா-சுந்:497/2
மேல்


பேணியே (1)

பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/2
மேல்


பேணில் (1)

பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில்
தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து – தேவா-சுந்:719/2,3
மேல்


பேணீராகிலும் (1)

பேணீராகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன் – தேவா-சுந்:146/2
மேல்


பேணுதல் (1)

வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் – தேவா-சுந்:739/1
மேல்


பேணும் (1)

பேதை பெருமான் பேணும் பதி ஆம் – தேவா-சுந்:959/2
மேல்


பேணுமவர்க்கு (2)

கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:574/2
கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:578/1
மேல்


பேதுறவும் (1)

பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழிய – தேவா-சுந்:844/2
மேல்


பேதை (3)

சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு – தேவா-சுந்:76/1
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
பேதை பெருமான் பேணும் பதி ஆம் – தேவா-சுந்:959/2
மேல்


பேதையேன் (1)

பெற்றிருந்து பெறாதொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன் – தேவா-சுந்:556/2
மேல்


பேய் (10)

மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய்
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/1,2
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
தெள்ளிய பேய் பல பூதம் அவற்றொடு – தேவா-சுந்:106/1
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை – தேவா-சுந்:449/2
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/2
பேய் மாறா பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு – தேவா-சுந்:977/3
குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய்
மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ – தேவா-சுந்:1015/1,2
மேல்


பேய்கள் (3)

குண்டாடி சமண் சாக்கிய பேய்கள் கொண்டாராகிலும் கொள்ள – தேவா-சுந்:154/1
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:542/4
மேல்


பேயனே (1)

பேயனே பித்தனே என்பரால் எம்பிரானையே – தேவா-சுந்:450/4
மேல்


பேயாய் (1)

பேயாய் திரிந்து எய்த்தேன் பெறல் ஆகா அருள் பெற்றேன் – தேவா-சுந்:2/2
மேல்


பேயார்க்கும் (1)

பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/2
மேல்


பேயும் (1)

பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
மேல்


பேயொடு (2)

பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/2
மேல்


பேயோடு (1)

பெம்மான் ஈம புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே – தேவா-சுந்:538/2
மேல்


பேயோடேனும் (1)

பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம் – தேவா-சுந்:972/1
மேல்


பேர் (14)

அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார் பெண்ணோடு ஆணும் அல்லர் – தேவா-சுந்:180/1
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த – தேவா-சுந்:424/2
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம் – தேவா-சுந்:529/1
பேர் ஆயிரவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:546/4
பேர் ஓர் ஆயிரமும் உடையானை பேசினால் பெரிதும் இனியானை – தேவா-சுந்:580/1
பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன் – தேவா-சுந்:613/3
பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான் – தேவா-சுந்:841/3
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:912/3
ஆரூர் திரு மூலட்டானத்தே அடி பேர் ஆரூரன் – தேவா-சுந்:974/2
பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன் – தேவா-சுந்:980/2
மேல்


பேர்த்தே (1)

பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/2
மேல்


பேர்ந்தவர்க்கு (1)

மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே – தேவா-சுந்:197/3,4
மேல்


பேர்வதேயாகில் (1)

பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
மேல்


பேரா (1)

பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்று இலரே – தேவா-சுந்:268/4
மேல்


பேராது (1)

பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி – தேவா-சுந்:914/1
மேல்


பேராளர் (1)

பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:914/4
மேல்


பேரி (1)

பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
மேல்


பேரும் (2)

பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார் பெண்ணோடு ஆணும் அல்லர் – தேவா-சுந்:180/1
பேரும் ஓர் ஆயிரம் என்பரால் எம்பிரானுக்கே – தேவா-சுந்:452/4
மேல்


பேரூர் (1)

பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே – தேவா-சுந்:481/3
மேல்


பேரூரர் (1)

பேரூரர் பெருமானை புலியூர் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே – தேவா-சுந்:922/4
மேல்


பேரெண் (1)

பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் – தேவா-சுந்:496/2
மேல்


பேழ் (1)

பேழ் வாய் அரவின் அணையானும் பெரிய மலர் மேல் உறைவானும் – தேவா-சுந்:537/1
மேல்


பேழ்கணிக்க (1)

பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/1,2
மேல்


பேழை (2)

பேழை சடையர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:548/4
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
மேல்


பேறனூர் (1)

பேறனூர் பிறை சென்னியினான் பெருவேளூர் – தேவா-சுந்:318/1
மேல்


பேறுசெய்து (1)

கெதி பேறுசெய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே – தேவா-சுந்:800/4

மேல்