கு – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குகை 1
குங்குமங்கள் 1
குங்குமம்தான் 1
குஞ்சரம் 2
குட்டியொடு 1
குட 2
குட-பாலின் 1
குடக 1
குடத்தையும் 1
குடம் 1
குடமுழவினோடு 1
குடமுழா 1
குடமூக்கில் 1
குடி 6
குடிதான் 1
குடியா 1
குடியிருந்து 1
குடியே 1
குடை 1
குடைந்து 8
குண்டத்தில் 1
குண்டரை 1
குண்டலம் 3
குண்டாடி 1
குண்டாடிய 1
குண்டாடும் 1
குண்டிகை 1
குண்டு 2
குண்டையூர் 5
குண 2
குண-பால் 1
குணக்குன்றே 1
குணத்தானை 2
குணத்தினராய் 1
குணத்தினை 1
குணம் 7
குணமும் 1
குத்தி 2
குதிகொண்டு 1
குதிகொள் 1
குதிகொள்ள 2
குதிகொள்ளும் 3
குப்பை 2
கும்ப 1
கும்பிடும் 1
குமண 1
குமரன் 3
குமரனை 1
குமரி 2
குமுதமே 1
குமைத்த 1
குமைத்தானை 1
குமையா 1
குயவனார்க்கு 1
குயில் 13
குயிலும் 1
குர 1
குரக்கு 2
குரங்கணில்முட்டம் 1
குரங்கணில்முட்டமும் 1
குரங்காடுதுறை 1
குரங்கு 3
குரங்குத்தளியாய் 1
குரம்பை-வாய் 1
குரல் 1
குரலாய் 1
குரவம் 4
குரவு 3
குரவோடு 1
குரா 1
குரிசில் 1
குரு 3
குருக்கத்தி 1
குருக்கத்திகள் 1
குருக்கேத்திரம் 1
குருகாவூர் 10
குருகு 5
குருகுகாள் 1
குருடா 1
குருதி 1
குருந்து 2
குரும்பை 2
குருவி 2
குருவே 1
குரை 5
குரைக்க 1
குரோத 1
குல்லை 1
குல 4
குலச்சிறை-தன் 1
குலத்தவரொடு 1
குலத்தில் 1
குலத்தினால் 1
குலத்து 1
குலம் 1
குலம்இலாதானை 1
குலவனே 1
குலவானது 1
குலவிய 1
குலவு 1
குலா 1
குலாவி 3
குலுங்க 1
குலை 6
குலைகளை 1
குலைத்த 1
குவலயத்தோர் 1
குவளை 4
குவளையும் 1
குவைகளும் 1
குவையும் 1
குழகர் 1
குழகரோ 1
குழகன் 2
குழகனே 1
குழகனை 3
குழகா 3
குழகும் 1
குழல் 11
குழலார் 1
குழலாள் 9
குழலாளை 1
குழலி 2
குழலினார் 1
குழலினார்கள் 1
குழலும் 5
குழலை 1
குழற 1
குழறி 1
குழாம் 1
குழி 2
குழிந்து 1
குழிப்பட்ட 1
குழியாதே 1
குழியில் 1
குழியும் 1
குழு 1
குழுவுடன் 1
குழை 18
குழைக்கும் 1
குழைத்து 1
குழைந்து 1
குழைய 1
குழையாதார் 1
குழையாய் 2
குழையார் 1
குழையானை 1
குழையும் 3
குழைவு 1
குளங்கள் 2
குளத்திடை 3
குளிக்கும் 1
குளித்த 1
குளித்து 1
குளிர் 13
குளிர்தரு 1
குளிர்ந்து 2
குளிர்ப்பு 1
குளிர்வாரே 1
குளிர 2
குளிரும் 2
குளீயீர் 1
குற்ற 2
குற்றங்கள் 1
குற்றம் 10
குற்றம்-தன்னொடு 1
குற்றமிலியை 1
குற்றமும் 2
குற்றமே 3
குற்றாலம் 1
குற்றாலா 1
குற்று 2
குற்றேவல் 4
குற 1
குறடும் 1
குறத்திகள் 1
குறவர் 1
குறவனார்-தம் 1
குறள் 2
குறி 2
குறிக்கோள் 1
குறித்து 1
குறிப்பினொடும் 1
குறிப்பு 3
குறிப்பொடே 1
குறியில் 1
குறியே 2
குறுக்கைநாட்டு 1
குறுக்கையே 1
குறுக 1
குறுகாதவர் 1
குறுகார் 1
குறுகி 1
குறும் 3
குறும்பற்கும் 1
குறும்பில் 1
குறை 4
குறைந்து 1
குறைபடாமே 1
குறைய 2
குறையா 4
குறையாத 1
குறையின் 1
குறைவா 1
குறைவு 4
குன்ற 4
குன்றம் 2
குன்றமே 1
குன்றா 1
குன்றி 1
குன்றில் 1
குன்றிலிடை 1
குன்று 2
குன்றும் 1
குன்றையார் 1
குனிப்பதே 1
குனிவு 1

குகை (1)

உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல் – தேவா-சுந்:80/1
மேல்

குங்குமங்கள் (1)

உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
மேல்

குங்குமம்தான் (1)

கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
மேல்

குஞ்சரம் (2)

கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர் – தேவா-சுந்:19/1
கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
மேல்

குட்டியொடு (1)

முலைகள் உண்டு தழுவி குட்டியொடு முசுக்கலைகள் – தேவா-சுந்:826/3
மேல்

குட (2)

குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
மேல்

குட-பாலின் (1)

தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்

குடக (1)

வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம் – தேவா-சுந்:95/2
மேல்

குடத்தையும் (1)

மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
மேல்

குடம் (1)

குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
மேல்

குடமுழவினோடு (1)

கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர் – தேவா-சுந்:369/2
மேல்

குடமுழா (1)

கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:503/2
மேல்

குடமூக்கில் (1)

கோட்டம் கொண்டார் குடமூக்கில் கோவலும் கோத்திட்டையும் – தேவா-சுந்:172/1
மேல்

குடி (6)

குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை – தேவா-சுந்:328/2
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்-தன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:393/2
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்

குடிதான் (1)

குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ – தேவா-சுந்:320/2
மேல்

குடியா (1)

குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா – தேவா-சுந்:265/2
மேல்

குடியிருந்து (1)

குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன் – தேவா-சுந்:77/2
மேல்

குடியே (1)

குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
மேல்

குடை (1)

குண்டாடிய சமண் ஆதர்கள் குடை சாக்கியர் அறியா – தேவா-சுந்:840/3
மேல்

குடைந்து (8)

கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:492/3
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/3
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/2
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/2
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர – தேவா-சுந்:886/1
மேல்

குண்டத்தில் (1)

வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/3
மேல்

குண்டரை (1)

குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய் – தேவா-சுந்:1015/1
மேல்

குண்டலம் (3)

குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந்தொழிலானை – தேவா-சுந்:627/1
மேல்

குண்டாடி (1)

குண்டாடி சமண் சாக்கிய பேய்கள் கொண்டாராகிலும் கொள்ள – தேவா-சுந்:154/1
மேல்

குண்டாடிய (1)

குண்டாடிய சமண் ஆதர்கள் குடை சாக்கியர் அறியா – தேவா-சுந்:840/3
மேல்

குண்டாடும் (1)

குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:308/3
மேல்

குண்டிகை (1)

குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர் – தேவா-சுந்:738/1
மேல்

குண்டு (2)

குண்டு ஆடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் – தேவா-சுந்:727/1
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
மேல்

குண்டையூர் (5)

கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:199/3
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/3
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/3
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
மேல்

குண (2)

கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே – தேவா-சுந்:266/2
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
மேல்

குண-பால் (1)

தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்

குணக்குன்றே (1)

குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
மேல்

குணத்தானை (2)

ஒப்பு அரிய குணத்தானை இணையிலியை அணைவு இன்றி – தேவா-சுந்:522/3
குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை – தேவா-சுந்:875/2
மேல்

குணத்தினராய் (1)

பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
மேல்

குணத்தினை (1)

குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
மேல்

குணம் (7)

அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/4
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே – தேவா-சுந்:252/3
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி – தேவா-சுந்:619/1
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:790/1
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:791/1
மேல்

குணமும் (1)

தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே – தேவா-சுந்:555/2
மேல்

குத்தி (2)

சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/2
மேல்

குதிகொண்டு (1)

குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
மேல்

குதிகொள் (1)

குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
மேல்

குதிகொள்ள (2)

கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
மேல்

குதிகொள்ளும் (3)

கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/3
மேல்

குப்பை (2)

ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம் – தேவா-சுந்:74/1
உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல் – தேவா-சுந்:80/1
மேல்

கும்ப (1)

கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
மேல்

கும்பிடும் (1)

கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
மேல்

குமண (1)

குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
மேல்

குமரன் (3)

அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/3
மேல்

குமரனை (1)

ஆத்தம் என்று எனை ஆள்உகந்தானை அமரர் நாதனை குமரனை பயந்த – தேவா-சுந்:638/1
மேல்

குமரி (2)

குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி
தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக – தேவா-சுந்:797/2,3
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ – தேவா-சுந்:1009/1
மேல்

குமுதமே (1)

ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறங்கை அனம் – தேவா-சுந்:1032/3
மேல்

குமைத்த (1)

கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
மேல்

குமைத்தானை (1)

கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:572/1,2
மேல்

குமையா (1)

கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
மேல்

குயவனார்க்கு (1)

தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
மேல்

குயில் (13)

கொடிகளிடை குயில் கூவும் இடம் மயில் ஆலும் இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:96/1
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால் – தேவா-சுந்:369/3
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று – தேவா-சுந்:380/1
கூடும் அன்ன பெடைகாள் குயில் வண்டுகாள் – தேவா-சுந்:381/1
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/3
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
மேல்

குயிலும் (1)

கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும் – தேவா-சுந்:1016/1
மேல்

குர (1)

கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
மேல்

குரக்கு (2)

குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
மேல்

குரங்கணில்முட்டம் (1)

முந்தை ஊர் முதுகுன்றம் குரங்கணில்முட்டம்
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர் – தேவா-சுந்:310/1,2
மேல்

குரங்கணில்முட்டமும் (1)

கோலம் நீற்றன் குற்றாலம் குரங்கணில்முட்டமும்
வேலனூர் வெற்றியூர் வெண்ணிக்கூற்றத்து வெண்ணியே – தேவா-சுந்:114/3,4
மேல்

குரங்காடுதுறை (1)

கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல் – தேவா-சுந்:318/3
மேல்

குரங்கு (3)

வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே – தேவா-சுந்:719/4
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே – தேவா-சுந்:937/4
மேல்

குரங்குத்தளியாய் (1)

கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா – தேவா-சுந்:479/1
மேல்

குரம்பை-வாய் (1)

குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன் – தேவா-சுந்:77/2
மேல்

குரல் (1)

தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
மேல்

குரலாய் (1)

கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே – தேவா-சுந்:482/3
மேல்

குரவம் (4)

குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:325/3
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று – தேவா-சுந்:380/1
குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப – தேவா-சுந்:1007/3
மேல்

குரவு (3)

குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம் – தேவா-சுந்:59/1
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சுந்:204/1
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/3
மேல்

குரவோடு (1)

குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும் – தேவா-சுந்:1002/1
மேல்

குரா (1)

கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
மேல்

குரிசில் (1)

மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/3
மேல்

குரு (3)

குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/4
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
மேல்

குருக்கத்தி (1)

கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
மேல்

குருக்கத்திகள் (1)

முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
மேல்

குருக்கேத்திரம் (1)

குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி – தேவா-சுந்:797/2
மேல்

குருகாவூர் (10)

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:289/4
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:290/4
வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:291/4
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:292/4
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:293/4
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:294/4
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:295/4
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:296/4
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:297/4
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை – தேவா-சுந்:298/2
மேல்

குருகு (5)

குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு – தேவா-சுந்:372/1
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/4
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி – தேவா-சுந்:774/1
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
மேல்

குருகுகாள் (1)

வண்டுகாள் கொண்டல்காள் வார் மணல் குருகுகாள்
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:377/1,2
மேல்

குருடா (1)

அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன் – தேவா-சுந்:558/2
மேல்

குருதி (1)

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன் – தேவா-சுந்:71/1
மேல்

குருந்து (2)

குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/3
குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப – தேவா-சுந்:1007/3
மேல்

குரும்பை (2)

குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/3
மேல்

குருவி (2)

குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
மேல்

குருவே (1)

குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் – தேவா-சுந்:262/2
மேல்

குரை (5)

குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
மேல்

குரைக்க (1)

சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள் – தேவா-சுந்:441/1
மேல்

குரோத (1)

கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை – தேவா-சுந்:49/3
மேல்

குல்லை (1)

குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் – தேவா-சுந்:1006/3
மேல்

குல (4)

குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை – தேவா-சுந்:187/1
செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான் – தேவா-சுந்:525/3
இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை – தேவா-சுந்:739/2
மேல்

குலச்சிறை-தன் (1)

பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/2
மேல்

குலத்தவரொடு (1)

பெரும் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே – தேவா-சுந்:739/4
மேல்

குலத்தில் (1)

இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:971/2
மேல்

குலத்தினால் (1)

குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன் – தேவா-சுந்:77/2
மேல்

குலத்து (1)

அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/3
மேல்

குலம் (1)

ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய – தேவா-சுந்:806/1
மேல்

குலம்இலாதானை (1)

குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:345/2
மேல்

குலவனே (1)

குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:345/2
மேல்

குலவானது (1)

கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம் – தேவா-சுந்:94/2
மேல்

குலவிய (1)

கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் – தேவா-சுந்:775/2
மேல்

குலவு (1)

கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம் – தேவா-சுந்:1033/3
மேல்

குலா (1)

சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
மேல்

குலாவி (3)

கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/3
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/2,3
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர் – தேவா-சுந்:659/3
மேல்

குலுங்க (1)

கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
மேல்

குலை (6)

குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:123/2
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/3
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
மேல்

குலைகளை (1)

மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி – தேவா-சுந்:752/2
மேல்

குலைத்த (1)

குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
மேல்

குவலயத்தோர் (1)

குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர்
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/3,4
மேல்

குவளை (4)

கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார் – தேவா-சுந்:777/1
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர – தேவா-சுந்:886/1
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/3
மேல்

குவளையும் (1)

காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும் – தேவா-சுந்:290/3
மேல்

குவைகளும் (1)

தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/2
மேல்

குவையும் (1)

கழை நீர் முத்தும் கனக குவையும்
சுழல் நீர் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:954/3,4
மேல்

குழகர் (1)

கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர்
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/2,3
மேல்

குழகரோ (1)

கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
மேல்

குழகன் (2)

குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/2
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல் – தேவா-சுந்:838/3
மேல்

குழகனே (1)

குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
மேல்

குழகனை (3)

கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:301/3
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/4
மேல்

குழகா (3)

குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா
முடியால் வானவர்கள் முயங்கும் திரு காளத்தியாய் – தேவா-சுந்:265/2,3
கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா – தேவா-சுந்:479/1
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
மேல்

குழகும் (1)

கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
மேல்

குழல் (11)

வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன் – தேவா-சுந்:71/1
மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து – தேவா-சுந்:735/3
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும் – தேவா-சுந்:862/2
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும் – தேவா-சுந்:866/2
மேல்

குழலார் (1)

முழு நீறு அணி மேனியன் மொய் குழலார்
எழு நீர்மை கொள்வான் அமரும் இடம் ஆம் – தேவா-சுந்:947/1,2
மேல்

குழலாள் (9)

மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர்பங்கு உடையாய் – தேவா-சுந்:200/1
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சுந்:204/1
வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:205/2
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:250/3
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:257/3
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:259/2
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
மேல்

குழலாளை (1)

வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை – தேவா-சுந்:495/2
மேல்

குழலி (2)

குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
மேல்

குழலினார் (1)

குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
மேல்

குழலினார்கள் (1)

வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:68/2
மேல்

குழலும் (5)

மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
பறையும் குழலும் ஒலி பாடல் இயம்ப – தேவா-சுந்:326/1
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/3
பாண் ஆர் குழலும் முழவும் விழவில் – தேவா-சுந்:951/3
மேல்

குழலை (1)

குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம் – தேவா-சுந்:116/1
மேல்

குழற (1)

கூடி பொந்தில் ஆந்தைகள் கூகை குழற
வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர் – தேவா-சுந்:323/2,3
மேல்

குழறி (1)

கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/2,3
மேல்

குழாம் (1)

கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம்
இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/3,4
மேல்

குழி (2)

கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/2
மேல்

குழிந்து (1)

கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
மேல்

குழிப்பட்ட (1)

ஆழ் குழிப்பட்ட போது அலக்கண் இல் ஒருவர்க்கு ஆவர் – தேவா-சுந்:79/3
மேல்

குழியாதே (1)

போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:346/3
மேல்

குழியில் (1)

குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:966/4
மேல்

குழியும் (1)

குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
மேல்

குழு (1)

கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்

குழுவுடன் (1)

கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
மேல்

குழை (18)

வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:261/2
வேறா உன் அடியேன் விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:286/1
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே – தேவா-சுந்:440/2
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி – தேவா-சுந்:479/3
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
சங்க வெண் குழை காது உடையானை சாமவேதம் பெரிது உகப்பானை – தேவா-சுந்:629/2
குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/2
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:868/3
குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே – தேவா-சுந்:880/4
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/3
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே – தேவா-சுந்:937/4
மேல்

குழைக்கும் (1)

குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
மேல்

குழைத்து (1)

குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
மேல்

குழைந்து (1)

கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்

குழைய (1)

புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
மேல்

குழையாதார் (1)

குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே – தேவா-சுந்:880/4
மேல்

குழையாய் (2)

சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல – தேவா-சுந்:245/1
சந்து ஆர் வெண் குழையாய் சரி கோவண ஆடையனே – தேவா-சுந்:273/1
மேல்

குழையார் (1)

திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/3
மேல்

குழையானை (1)

கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/2,3
மேல்

குழையும் (3)

துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு – தேவா-சுந்:920/1
மேல்

குழைவு (1)

குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே – தேவா-சுந்:880/4
மேல்

குளங்கள் (2)

குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
மேல்

குளத்திடை (3)

வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும் – தேவா-சுந்:290/2
பொழில் ஆரும் சோலை புக்கொளியூரில் குளத்திடை
இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:934/3,4
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:941/3,4
மேல்

குளிக்கும் (1)

குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம் – தேவா-சுந்:957/2
மேல்

குளித்த (1)

இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:934/4
மேல்

குளித்து (1)

துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
மேல்

குளிர் (13)

கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் – தேவா-சுந்:255/1
குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா – தேவா-சுந்:265/2
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே – தேவா-சுந்:298/4
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் – தேவா-சுந்:732/1
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:994/2
குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் – தேவா-சுந்:1006/3
மேல்

குளிர்தரு (1)

குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும் – தேவா-சுந்:1002/1
மேல்

குளிர்ந்து (2)

கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:214/4
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:708/3
மேல்

குளிர்ப்பு (1)

விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
மேல்

குளிர்வாரே (1)

கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே – தேவா-சுந்:319/4
மேல்

குளிர (2)

என்தன் மனம் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:843/4
எண்ணிய கண் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:850/4
மேல்

குளிரும் (2)

கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும்
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/3,4
மேல்

குளீயீர் (1)

குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி – தேவா-சுந்:797/2
மேல்

குற்ற (2)

குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை – தேவா-சுந்:685/1
மேல்

குற்றங்கள் (1)

குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
மேல்

குற்றம் (10)

கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி – தேவா-சுந்:68/1
குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ – தேவா-சுந்:320/2
கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை – தேவா-சுந்:574/1
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை – தேவா-சுந்:875/2
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர் – தேவா-சுந்:965/2
மேல்

குற்றம்-தன்னொடு (1)

குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி – தேவா-சுந்:619/1
மேல்

குற்றமிலியை (1)

கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
மேல்

குற்றமும் (2)

கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய – தேவா-சுந்:845/2
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/4
மேல்

குற்றமே (3)

குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/4
மேல்

குற்றாலம் (1)

கோலம் நீற்றன் குற்றாலம் குரங்கணில்முட்டமும் – தேவா-சுந்:114/3
மேல்

குற்றாலா (1)

கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா – தேவா-சுந்:479/1,2
மேல்

குற்று (2)

குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
குண்டு ஆடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் – தேவா-சுந்:727/1
மேல்

குற்றேவல் (4)

குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய – தேவா-சுந்:167/1
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் – தேவா-சுந்:262/2
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் – தேவா-சுந்:306/3
மேல்

குற (1)

மான குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி – தேவா-சுந்:806/3
மேல்

குறடும் (1)

சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் – தேவா-சுந்:702/1
மேல்

குறத்திகள் (1)

குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள்
முன்றிலிடை பிடி கன்று இடும் முதுகுன்றரே – தேவா-சுந்:441/3,4
மேல்

குறவர் (1)

குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
மேல்

குறவனார்-தம் (1)

குறவனார்-தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை – தேவா-சுந்:183/1
மேல்

குறள் (2)

பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:869/3
மேல்

குறி (2)

குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/2
மேல்

குறிக்கோள் (1)

கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ – தேவா-சுந்:4/2
மேல்

குறித்து (1)

கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
மேல்

குறிப்பினொடும் (1)

குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
மேல்

குறிப்பு (3)

குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/2
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:790/1
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:791/1
மேல்

குறிப்பொடே (1)

கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
மேல்

குறியில் (1)

குறியில் வழுவா கொடும் கூற்று உதைத்த – தேவா-சுந்:952/1
மேல்

குறியே (2)

குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா – தேவா-சுந்:247/2
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் – தேவா-சுந்:262/2
மேல்

குறுக்கைநாட்டு (1)

கொண்டல்நாட்டு கொண்டல் குறுக்கைநாட்டு குறுக்கையே – தேவா-சுந்:113/4
மேல்

குறுக்கையே (1)

கொண்டல்நாட்டு கொண்டல் குறுக்கைநாட்டு குறுக்கையே – தேவா-சுந்:113/4
மேல்

குறுக (1)

கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார் – தேவா-சுந்:839/2
மேல்

குறுகாதவர் (1)

கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/3
மேல்

குறுகார் (1)

குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
மேல்

குறுகி (1)

கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
மேல்

குறும் (3)

கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய் – தேவா-சுந்:992/1
மேல்

குறும்பற்கும் (1)

பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/2
மேல்

குறும்பில் (1)

கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா – தேவா-சுந்:479/1
மேல்

குறை (4)

உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் – தேவா-சுந்:1006/3
மேல்

குறைந்து (1)

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
மேல்

குறைபடாமே (1)

கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே
ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் – தேவா-சுந்:46/1,2
மேல்

குறைய (2)

திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய
புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/1,2
கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
மேல்

குறையா (4)

கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம் – தேவா-சுந்:94/2
குறையா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:326/3
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
மேல்

குறையாத (1)

குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் – தேவா-சுந்:306/3
மேல்

குறையின் (1)

அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
மேல்

குறைவா (1)

ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/3
மேல்

குறைவு (4)

எற்றால் என் குறைவு என் இடரை துறந்தொழிந்தேன் – தேவா-சுந்:212/2
குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/2
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/2
மேல்

குன்ற (4)

கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:605/1
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/4
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ – தேவா-சுந்:1009/1
மேல்

குன்றம் (2)

கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
மேல்

குன்றமே (1)

பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
மேல்

குன்றா (1)

குன்றா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:321/3
மேல்

குன்றி (1)

குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/2
மேல்

குன்றில் (1)

குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:966/4
மேல்

குன்றிலிடை (1)

குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள் – தேவா-சுந்:441/3
மேல்

குன்று (2)

குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர் – தேவா-சுந்:659/3
மேல்

குன்றும் (1)

கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் – தேவா-சுந்:511/3
மேல்

குன்றையார் (1)

வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மேல்

குனிப்பதே (1)

குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள் – தேவா-சுந்:440/2,3
மேல்

குனிவு (1)

குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1

மேல்