பொ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொக்க 1
பொக்கம் 1
பொக்கையின் 1
பொங்கிய 3
பொங்கு 6
பொடி 23
பொடிக்கொண்டு 1
பொடிசெய்த 1
பொடித்தான் 1
பொடிப்படுத்த 1
பொடிபட 1
பொடியரோ 1
பொடியா 2
பொடிஆடியை 1
பொத்தின 1
பொத்து 1
பொதி 1
பொதிந்து 1
பொதியில் 1
பொதியும் 1
பொதியே 1
பொது 1
பொந்தில் 3
பொய் 9
பொய்கை 13
பொய்கைகள் 2
பொய்கையில் 1
பொய்கையும் 1
பொய்ம்மையாளரை 1
பொய்மையாலே 1
பொய்யர் 1
பொய்யவன் 1
பொய்யனை 1
பொய்யா 2
பொய்யாத 1
பொய்யாது 1
பொய்யே 4
பொரு 8
பொருட்படுத்துவான் 1
பொருத்தமேல் 1
பொருது 10
பொருந்த 3
பொருந்தி 1
பொரும் 2
பொருவனார் 1
பொருள் 14
பொருள்-தன்னை 1
பொருள்கள் 1
பொருள்களும் 1
பொருள்படுத்து 2
பொருள்பால 1
பொருளா 1
பொருளாய் 3
பொருளால் 1
பொருளாலே 1
பொருளானை 2
பொருளினை 1
பொருளும் 1
பொருளே 1
பொருளை 3
பொல்லா 1
பொல்லாத 1
பொல்லேன் 1
பொலி 2
பொலிந்து 1
பொலியும் 2
பொழி 2
பொழிந்து 4
பொழிந்தும் 1
பொழிய 3
பொழியும் 2
பொழில் 94
பொழில்-வாய் 1
பொழில்கள் 1
பொழிலது 1
பொழிலின் 1
பொழிலும் 1
பொழிலூடே 2
பொழிவானை 1
பொழுதில் 1
பொழுதும் 1
பொள்ளல் 1
பொறி 5
பொறியும் 1
பொறிவாயில் 1
பொறுக்கிலராகில் 1
பொறுக்கும் 2
பொறுக்குமோ 1
பொறுத்தாய் 1
பொறுத்தால் 1
பொறுத்திட 1
பொறுத்திடுவர் 1
பொறுத்து 1
பொறுப்பானை 1
பொறை 2
பொன் 56
பொன்_உலகு 1
பொன்களே 1
பொன்மணி 1
பொன்ற 1
பொன்றுவித்த 1
பொன்னவன் 2
பொன்னானே 1
பொன்னானை 1
பொன்னி 5
பொன்னினது 1
பொன்னினை 1
பொன்னும் 3
பொன்னுலகம் 1
பொன்னூர் 1
பொன்னூர்நாட்டு 1
பொன்னே 2
பொன்னை 3
பொனை 1


பொக்க (1)

தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
மேல்


பொக்கம் (1)

எயிலார் பொக்கம் எரித்த எண் தோள் முக்கண் இறைவன் – தேவா-சுந்:877/1
மேல்


பொக்கையின் (1)

நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி – தேவா-சுந்:664/1
மேல்


பொங்கிய (3)

பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர் உரி போர்த்தது என்னே – தேவா-சுந்:1011/3
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1012/2
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1014/2
மேல்


பொங்கு (6)

பொடி ஏறு திரு மேனி பெருமானை பொங்கு அரவ கச்சையானை – தேவா-சுந்:303/1
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/2
பொங்கு ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:935/3
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
மேல்


பொடி (23)

பொடி அணிவார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:108/4
தூயார் சூடு பொடி ஆடிய மேனியர் வானில் என்றும் – தேவா-சுந்:197/2
சிலையால் முப்புரங்கள் பொடி ஆக சிதைத்தவனே – தேவா-சுந்:271/1
பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சுந்:279/1
பொடி ஏறு திரு மேனி பெருமானை பொங்கு அரவ கச்சையானை – தேவா-சுந்:303/1
பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து – தேவா-சுந்:304/1
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/3
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ சுடலை பொடி
நீறு அன்றி சாந்தம் மற்று இல்லையோ இமவான்மகள் – தேவா-சுந்:447/1,2
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை – தேவா-சுந்:517/1
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆக – தேவா-சுந்:519/1
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
செம் பொன் பொடி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:794/4
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும் – தேவா-சுந்:813/1
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும் – தேவா-சுந்:862/2
மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன் – தேவா-சுந்:878/1
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான் – தேவா-சுந்:1000/1
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1012/2
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1014/2
மேல்


பொடிக்கொண்டு (1)

மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் – தேவா-சுந்:370/2
மேல்


பொடிசெய்த (1)

நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த
இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்செய்வார் – தேவா-சுந்:543/1,2
மேல்


பொடித்தான் (1)

பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
மேல்


பொடிப்படுத்த (1)

புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/1,2
மேல்


பொடிபட (1)

பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:86/4
மேல்


பொடியரோ (1)

ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை – தேவா-சுந்:330/3
மேல்


பொடியா (2)

பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/2
காமன் பொடியா கண் ஒன்று இமைத்த – தேவா-சுந்:961/1
மேல்


பொடிஆடியை (1)

வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம் – தேவா-சுந்:825/1,2
மேல்


பொத்தின (1)

பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன் – தேவா-சுந்:518/2
மேல்


பொத்து (1)

பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:67/1
மேல்


பொதி (1)

பொதியே சுமந்து உழல்வீர் பொதி அவம் ஆவதும் அறியீர் – தேவா-சுந்:800/1
மேல்


பொதிந்து (1)

நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும் – தேவா-சுந்:680/1
மேல்


பொதியில் (1)

சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
மேல்


பொதியும் (1)

பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
மேல்


பொதியே (1)

பொதியே சுமந்து உழல்வீர் பொதி அவம் ஆவதும் அறியீர் – தேவா-சுந்:800/1
மேல்


பொது (1)

தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
மேல்


பொந்தில் (3)

கூடி பொந்தில் ஆந்தைகள் கூகை குழற – தேவா-சுந்:323/2
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:348/3
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே – தேவா-சுந்:508/4
மேல்


பொய் (9)

பொய் தன்மைத்து ஆய மாய போர்வையை மெய் என்று எண்ணும் – தேவா-சுந்:81/1
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/3
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள் – தேவா-சுந்:456/3
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/4
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே – தேவா-சுந்:659/2
பொய் அடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ – தேவா-சுந்:904/2
மேல்


பொய்கை (13)

அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் – தேவா-சுந்:135/3
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர் – தேவா-சுந்:137/2,3
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர் பொய்கை
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் – தேவா-சுந்:292/2,3
அரும்பு உடை மலர் பொய்கை அல்லியும் மல்லிகையும் – தேவா-சுந்:293/3
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:349/3
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:359/4
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
அடக்கினானை அம் தாமரை பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:611/4
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/3
துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/3
மேல்


பொய்கைகள் (2)

போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:129/3
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:132/3
மேல்


பொய்கையில் (1)

நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/2
மேல்


பொய்கையும் (1)

மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
மேல்


பொய்ம்மையாளரை (1)

பொய்ம்மையாளரை பாடாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:340/2
மேல்


பொய்மையாலே (1)

பொய்மையாலே போது போக்கி புறத்தும் இல்லை அகத்தும் இல்லை – தேவா-சுந்:48/1
மேல்


பொய்யர் (1)

பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:67/1
மேல்


பொய்யவன் (1)

பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன் – தேவா-சுந்:264/1
மேல்


பொய்யனை (1)

பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை – தேவா-சுந்:591/2
மேல்


பொய்யா (2)

பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் – தேவா-சுந்:133/3
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே – தேவா-சுந்:237/1
மேல்


பொய்யாத (1)

பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து – தேவா-சுந்:304/1
மேல்


பொய்யாது (1)

பொய்யாது என் உயிருள் புகுந்தாய் இன்னம் போந்து அறியாய் – தேவா-சுந்:283/2
மேல்


பொய்யே (4)

கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ – தேவா-சுந்:4/2
பொய்யே உன்னை புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளா கொள்வோனே – தேவா-சுந்:421/1
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன்-தன்னை போகாமே – தேவா-சுந்:531/1
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்


பொரு (8)

புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய் – தேவா-சுந்:24/1
புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே – தேவா-சுந்:746/2
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
திரை பொரு தண் பழன திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1010/4
மேல்


பொருட்படுத்துவான் (1)

நான் என பாடல் அந்தோ நாயினேனை பொருட்படுத்துவான்
எனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1017/2,3
மேல்


பொருத்தமேல் (1)

பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் புற்று எடுத்திட்டு இடம்கொண்ட – தேவா-சுந்:745/3
மேல்


பொருது (10)

பொன்னே மணிதானே வயிரமே பொருது உந்தி – தேவா-சுந்:3/2
பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/4
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
பொருது சாத்தொடு பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:509/4
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/4
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை – தேவா-சுந்:726/2
மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி – தேவா-சுந்:752/2
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/1,2
மேல்


பொருந்த (3)

போய் அமலாமை தன் பொன் அடிக்கு என்னை பொருந்த வைத்த – தேவா-சுந்:173/2
பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/1,2
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
மேல்


பொருந்தி (1)

பொருந்தி திரு மூலட்டானமே இடமா கொண்டீரே – தேவா-சுந்:973/2
மேல்


பொரும் (2)

பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:769/3
மேல்


பொருவனார் (1)

பொருவனார் புரிநூலர் புணர் முலை உமையவளோடு – தேவா-சுந்:771/1
மேல்


பொருள் (14)

ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா – தேவா-சுந்:5/2
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் – தேவா-சுந்:36/3
ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம் – தேவா-சுந்:74/1
மறை ஆர் வானவனே மறையின் பொருள் ஆனவனே – தேவா-சுந்:280/2
பாடி படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ – தேவா-சுந்:439/2
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு – தேவா-சுந்:459/1,2
பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன் – தேவா-சுந்:518/2
பொள்ளல் இ உடலை பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி – தேவா-சுந்:608/1
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/3
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/2
எண்தானே எழுத்தொடு சொல் பொருள் எல்லாம் முன் – தேவா-சுந்:981/2
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
மேல்


பொருள்-தன்னை (1)

கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
மேல்


பொருள்கள் (1)

புரியும் மறையோர் நிறை சொல் பொருள்கள்
தெரியும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:950/3,4
மேல்


பொருள்களும் (1)

மறைகள் ஆயின நான்கும் மற்று உள பொருள்களும் எல்லா – தேவா-சுந்:761/1
மேல்


பொருள்படுத்து (2)

பொறுத்தாய் எத்தனையும் நாயேனை பொருள்படுத்து
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம் – தேவா-சுந்:231/2,3
நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனை பொருள்படுத்து
சங்கிலியோடு எனை புணர்த்த தத்துவனை சழக்கனேன் – தேவா-சுந்:528/2,3
மேல்


பொருள்பால (1)

சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மேல்


பொருளா (1)

பொய்யே உன்னை புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளா கொள்வோனே – தேவா-சுந்:421/1
மேல்


பொருளாய் (3)

கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:605/1
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:613/1
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
மேல்


பொருளால் (1)

அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/2
மேல்


பொருளாலே (1)

நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே
போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால் – தேவா-சுந்:640/2,3
மேல்


பொருளானை (2)

விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை
அடையில் அன்பு உடையானை யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-சுந்:872/1,2
உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானை – தேவா-சுந்:876/1
மேல்


பொருளினை (1)

பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
மேல்


பொருளும் (1)

பொள்ளல் இ உடலை பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி – தேவா-சுந்:608/1
மேல்


பொருளே (1)

பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
மேல்


பொருளை (3)

அரு மணியை முத்தினை ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்-தம் பெருமானை அரு மறையின் பொருளை
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/1,2
புயலினை திருவினை பொன்னினது ஒளியை மின்னினது உருவை என்னிடை பொருளை
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/3,4
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை
புனைதரு புகழினை எங்களது ஒளியை இருவரும் ஒருவன் என்று உணர்வு அரியவனை – தேவா-சுந்:600/2,3
மேல்


பொல்லா (1)

பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
மேல்


பொல்லாத (1)

பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
மேல்


பொல்லேன் (1)

நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன்
மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்று செய்து திரிவேன் – தேவா-சுந்:743/1,2
மேல்


பொலி (2)

பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
திரிதந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:809/4
மேல்


பொலிந்து (1)

பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க – தேவா-சுந்:906/1
மேல்


பொலியும் (2)

சீரின் மிக பொலியும் திரு பூவணம் – தேவா-சுந்:111/1
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே – தேவா-சுந்:190/4
மேல்


பொழி (2)

கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் – தேவா-சுந்:93/1
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
மேல்


பொழிந்து (4)

கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1
பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர – தேவா-சுந்:754/1
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
மேல்


பொழிந்தும் (1)

மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய – தேவா-சுந்:807/2
மேல்


பொழிய (3)

உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய
மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:131/1,2
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
மேல்


பொழியும் (2)

மானை இடத்தது ஓர் கையன் இடம் மதம் மாறுபட பொழியும் மலை போல் – தேவா-சுந்:94/3
ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும்
வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின் – தேவா-சுந்:832/1,2
மேல்


பொழில் (94)

அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/4
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/3
விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/2
பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் – தேவா-சுந்:78/3
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:86/4
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:90/4
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/2
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே – தேவா-சுந்:121/4
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/3
மை மாம் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:241/3
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:242/3
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:243/3
மை ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:246/3
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் – தேவா-சுந்:255/1
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் – தேவா-சுந்:268/1
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/3
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/3
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:288/1
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/3
குன்றா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:321/3
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:322/3
கொய் ஆர் பொழில் கோடியே கோயில்கொண்டாயே – தேவா-சுந்:324/4
குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:325/3
குறையா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:326/3
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகை – தேவா-சுந்:329/2
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/2
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில்
புன்னை கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:357/3,4
ஆய பைம் பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:363/4
அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:380/2
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/4
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/2
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
வளம் கிளர் பொழில் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன் என்று – தேவா-சுந்:592/1
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/4
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:663/4
சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான் – தேவா-சுந்:664/2
தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட – தேவா-சுந்:700/3
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் – தேவா-சுந்:704/3
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/3
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/3
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் – தேவா-சுந்:780/3
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/4
மலை சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள் – தேவா-சுந்:803/1
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:810/4
தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:816/4
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:819/2
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:820/2
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை – தேவா-சுந்:821/2
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:865/3
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:867/3
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில்
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:882/1,2
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:891/1,2
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம்கொண்ட – தேவா-சுந்:912/1
பொழில் ஆரும் சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:934/3
சூத பொழில் சூழ் சோற்றுத்துறையே – தேவா-சுந்:959/4
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும் – தேவா-சுந்:986/3
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/3
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/2
மேல்


பொழில்-வாய் (1)

வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய்
தேன் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:948/3,4
மேல்


பொழில்கள் (1)

கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே – தேவா-சுந்:481/2
மேல்


பொழிலது (1)

மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது
ஏறு உடை அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:736/3,4
மேல்


பொழிலின் (1)

வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின்
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல் – தேவா-சுந்:832/2,3
மேல்


பொழிலும் (1)

புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/3
மேல்


பொழிலூடே (2)

தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து – தேவா-சுந்:719/3
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு – தேவா-சுந்:802/3
மேல்


பொழிவானை (1)

கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:605/1
மேல்


பொழுதில் (1)

திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில்
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/2,3
மேல்


பொழுதும் (1)

புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
மேல்


பொள்ளல் (1)

பொள்ளல் இ உடலை பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி – தேவா-சுந்:608/1
மேல்


பொறி (5)

பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:90/4
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
மேல்


பொறியும் (1)

பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர – தேவா-சுந்:754/1
மேல்


பொறிவாயில் (1)

பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/4
மேல்


பொறுக்கிலராகில் (1)

பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
மேல்


பொறுக்கும் (2)

குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:694/3,4
தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:695/3,4
மேல்


பொறுக்குமோ (1)

வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மேல்


பொறுத்தாய் (1)

பொறுத்தாய் எத்தனையும் நாயேனை பொருள்படுத்து – தேவா-சுந்:231/2
மேல்


பொறுத்தால் (1)

உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
மேல்


பொறுத்திட (1)

பொய் அடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ – தேவா-சுந்:904/2
மேல்


பொறுத்திடுவர் (1)

பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்த-கால் – தேவா-சுந்:902/1
மேல்


பொறுத்து (1)

பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
மேல்


பொறுப்பானை (1)

பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/2
மேல்


பொறை (2)

கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:618/2
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/2
மேல்


பொன் (56)

விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
பொன் அனையான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:109/4
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய – தேவா-சுந்:149/3
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
போய் அமலாமை தன் பொன் அடிக்கு என்னை பொருந்த வைத்த – தேவா-சுந்:173/2
பொன் ஆர் மேனியனே புலி தோலை அரைக்கு அசைத்து – தேவா-சுந்:239/1
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர் – தேவா-சுந்:249/1
போர் ஆரும் கரியின் உரி போர்த்து பொன் மேனியின் மேல் – தேவா-சுந்:282/1
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே – தேவா-சுந்:297/2
கெடுவிப்பாய் அல்லாதார் கேடு இலா பொன் அடிக்கே – தேவா-சுந்:297/3
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/4
ஆளும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:374/2
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன்
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:378/3,4
ஆடும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:381/2
அத்தன் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:382/2
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/4
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
எல்லை இல் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி – தேவா-சுந்:491/1
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி என்று – தேவா-சுந்:496/1
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே – தேவா-சுந்:513/4
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை – தேவா-சுந்:517/1
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/3
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன்
ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால் – தேவா-சுந்:595/1,2
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/2
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி – தேவா-சுந்:673/3
புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து – தேவா-சுந்:676/2
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின் – தேவா-சுந்:770/1
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் – தேவா-சுந்:780/3
செம் பொன் பொடி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:794/4
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே – தேவா-சுந்:851/4
அம் பொன் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:892/4
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க – தேவா-சுந்:906/1
பொன் நவிலும் கொன்றையினாய் போய் மகிழ் கீழ் இரு என்று – தேவா-சுந்:910/1
வாரும் அருவி மணி பொன் கொழித்து – தேவா-சுந்:943/3
புனை தார் கொன்றை பொன் போல் மாலை புரி புன் சடையீரே – தேவா-சுந்:969/2
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே – தேவா-சுந்:1017/1
ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை – தேவா-சுந்:1026/1
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
மேல்


பொன்_உலகு (1)

புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து – தேவா-சுந்:676/2
மேல்


பொன்களே (1)

புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
மேல்


பொன்மணி (1)

புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி – தேவா-சுந்:756/1
மேல்


பொன்ற (1)

புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
மேல்


பொன்றுவித்த (1)

பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
மேல்


பொன்னவன் (2)

பொன்னவன் பொன்னவன் பொன்னை தந்து என்னை போக விடா – தேவா-சுந்:463/1
பொன்னவன் பொன்னவன் பொன்னை தந்து என்னை போக விடா – தேவா-சுந்:463/1
மேல்


பொன்னானே (1)

பொன்னானே புலவர்க்கு நின் புகழ் போற்றல் ஆம் – தேவா-சுந்:976/1
மேல்


பொன்னானை (1)

பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
மேல்


பொன்னி (5)

பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும் – தேவா-சுந்:767/1
சுழல் நீர் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:954/4
துதையும் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:958/4
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
மேல்


பொன்னினது (1)

புயலினை திருவினை பொன்னினது ஒளியை மின்னினது உருவை என்னிடை பொருளை – தேவா-சுந்:599/3
மேல்


பொன்னினை (1)

பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை – தேவா-சுந்:690/1
மேல்


பொன்னும் (3)

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை – தேவா-சுந்:603/1
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:786/3
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:787/3
மேல்


பொன்னுலகம் (1)

பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் – தேவா-சுந்:1021/2
மேல்


பொன்னூர் (1)

பொன்னூர்நாட்டு பொன்னூர் புரிசைநாட்டு புரிசையே – தேவா-சுந்:117/4
மேல்


பொன்னூர்நாட்டு (1)

பொன்னூர்நாட்டு பொன்னூர் புரிசைநாட்டு புரிசையே – தேவா-சுந்:117/4
மேல்


பொன்னே (2)

பொன்னே மணிதானே வயிரமே பொருது உந்தி – தேவா-சுந்:3/2
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
மேல்


பொன்னை (3)

புன்மைகள் பேசவும் பொன்னை தந்து என்னை போகம் புணர்த்த – தேவா-சுந்:168/3
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
பொன்னவன் பொன்னவன் பொன்னை தந்து என்னை போக விடா – தேவா-சுந்:463/1
மேல்


பொனை (1)

என் பொனை என் மணியை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:848/4

மேல்