நூ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூல் 16
நூலும் 2
நூறினார் 1


நூல் (16)

மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா – தேவா-சுந்:191/3
பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சுந்:279/1
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே – தேவா-சுந்:461/4
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர் – தேவா-சுந்:541/1
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு – தேவா-சுந்:867/1
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம் – தேவா-சுந்:957/2
தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் – தேவா-சுந்:980/3
புல்கிய ஆரணன் எம் புனிதன் புரி நூல் விகிர்தன் – தேவா-சுந்:990/2
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல்
உரை பெருக உரைத்து அன்று உகந்து அருள்செய்தது என்னே – தேவா-சுந்:1010/1,2
மேல்


நூலும் (2)

இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
மேல்


நூறினார் (1)

நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார்
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திரு கைகளால் – தேவா-சுந்:446/2,3

மேல்