மி – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 5
மிக்கு 3
மிக 25
மிகு 11
மிகுத்த 1
மிகுத்து 1
மிகை 1
மிசை 13
மிஞ்சு 1
மிடற்றன் 2
மிடற்றாய் 4
மிடற்றான் 1
மிடற்றானே 1
மிடற்றானை 2
மிடற்றில் 1
மிடற்றினனே 2
மிடற்றீர் 3
மிடற்று 1
மிடறன் 1
மிடறு 1
மிடுக்கிலாதானை 1
மிடுக்கு 3
மிண்டர்க்கு 1
மிண்டரை 1
மிண்டற்கு 1
மிண்டாடி 1
மிண்டாடிய 1
மிண்டு 1
மிதந்த 1
மிதித்து 1
மிழலை 11
மிழலைநாட்டு 1
மிழலையுள் 1
மிழற்றும் 1
மிளகும் 1
மிளகொடு 1
மிளிர் 2
மிளிர்தரு 1
மிளிர்ந்து 1
மிளிரும் 2
மிறை 1
மிறையும் 1
மின் 8
மின்அனையாள் 1
மின்னவன் 2
மின்னாய் 1
மின்னானே 1
மின்னினது 1
மின்னும் 2


மிக்க (5)

அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து – தேவா-சுந்:568/1
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/2
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/3
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க
நமர் பயில் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1003/3,4
மேல்


மிக்கு (3)

மிக்கு இறை ஏயவன் துன்மதியாய்விட – தேவா-சுந்:110/1
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய – தேவா-சுந்:999/1
மேல்


மிக (25)

கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன் – தேவா-சுந்:76/2
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
சீரின் மிக பொலியும் திரு பூவணம் – தேவா-சுந்:111/1
காடேல் மிக வலிது காரிகை அஞ்ச – தேவா-சுந்:323/1
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:332/4
தேனை ஆடு முக்கண்ணரோ மிக செய்யரோ வெள்ளைநீற்றரோ – தேவா-சுந்:333/1
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:335/4
வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன் – தேவா-சுந்:492/1
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி – தேவா-சுந்:564/2
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து – தேவா-சுந்:733/3
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன் – தேவா-சுந்:743/1
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி – தேவா-சுந்:802/2
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி – தேவா-சுந்:806/2
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
நின்ற இ மா தவத்தை ஒழிப்பான் சென்று அணைந்து மிக
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1012/1,2
அங்கு இயல் யோகு-தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிக
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1014/1,2
மேல்


மிகு (11)

கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் – தேவா-சுந்:102/1
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே – தேவா-சுந்:246/2
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் – தேவா-சுந்:397/3
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:810/4
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/4
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம் – தேவா-சுந்:1025/1
மேல்


மிகுத்த (1)

நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
மேல்


மிகுத்து (1)

முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


மிகை (1)

குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
மேல்


மிசை (13)

ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம் – தேவா-சுந்:74/1
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/3
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/2
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு – தேவா-சுந்:639/2
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/2
தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
மர உரி புலி அதள் அரை மிசை மருவினன் – தேவா-சுந்:730/2
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:833/3
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை
திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை – தேவா-சுந்:896/1,2
மேல்


மிஞ்சு (1)

இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/4
மேல்


மிடற்றன் (2)

எம்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கு என்றும் அளிக்கும் மணி_மிடற்றன் – தேவா-சுந்:41/1
கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
மேல்


மிடற்றாய் (4)

மை ஆரும் மிடற்றாய் மருவார் புரம் மூன்று எரித்த – தேவா-சுந்:253/1
கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய்
உமை ஓர்கூறு உடையாய் உருவே திரு காளத்தியுள் – தேவா-சுந்:260/2,3
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:280/3
கார் ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டானத்து – தேவா-சுந்:282/3
மேல்


மிடற்றான் (1)

வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான் – தேவா-சுந்:1000/1
மேல்


மிடற்றானே (1)

பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/2
மேல்


மிடற்றானை (2)

கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
கார் ஆரும் மிடற்றானை காதலித்திட்டு அன்பினொடும் – தேவா-சுந்:912/2
மேல்


மிடற்றில் (1)

விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/4
மேல்


மிடற்றினனே (2)

செய்யார் மேனியனே திரு நீல_மிடற்றினனே – தேவா-சுந்:272/1
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே – தேவா-சுந்:275/2
மேல்


மிடற்றீர் (3)

தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர்
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/2,3
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
கார் நிலவு மணி_மிடற்றீர் இங்கு இருந்தீரே என்ன – தேவா-சுந்:908/3
மேல்


மிடற்று (1)

சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/2
மேல்


மிடறன் (1)

விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன் – தேவா-சுந்:827/2
மேல்


மிடறு (1)

கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
மேல்


மிடுக்கிலாதானை (1)

மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
மேல்


மிடுக்கு (3)

மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார் – தேவா-சுந்:176/1
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னை – தேவா-சுந்:296/2
இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:502/4
மேல்


மிண்டர்க்கு (1)

மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன் – தேவா-சுந்:747/2
மேல்


மிண்டரை (1)

மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ – தேவா-சுந்:1015/2
மேல்


மிண்டற்கு (1)

வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மேல்


மிண்டாடி (1)

மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
மேல்


மிண்டாடிய (1)

மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே – தேவா-சுந்:840/4
மேல்


மிண்டு (1)

மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன் – தேவா-சுந்:747/2
மேல்


மிதந்த (1)

காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
மேல்


மிதித்து (1)

எல்லை மிதித்து அடியேன் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:845/4
மேல்


மிழலை (11)

மிழலைநாட்டு மிழலை வெண்ணிநாட்டு புரிசையே – தேவா-சுந்:116/4
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை
இச்சை ஊர் எமது அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:313/3,4
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும் உடனே உறைவிடம் – தேவா-சுந்:892/2,3
திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/2,3
தேனை ஆட்டு உகந்தீர் செழு மாட திரு மிழலை
மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/2,3
சிந்தைசெய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும் – தேவா-சுந்:895/2,3
திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் – தேவா-சுந்:896/2,3
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/2,3
திணிந்த மாடம்-தொறும் செல்வம் மல்கு திரு மிழலை
தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/2,3
தெரிந்த நான்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர் – தேவா-சுந்:899/2,3
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/2,3
மேல்


மிழலைநாட்டு (1)

மிழலைநாட்டு மிழலை வெண்ணிநாட்டு புரிசையே – தேவா-சுந்:116/4
மேல்


மிழலையுள் (1)

வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள்
ஆதி வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுக என்று – தேவா-சுந்:901/1,2
மேல்


மிழற்றும் (1)

தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல் – தேவா-சுந்:832/3
மேல்


மிளகும் (1)

கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
மேல்


மிளகொடு (1)

கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
மேல்


மிளிர் (2)

மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே – தேவா-சுந்:239/2
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
மேல்


மிளிர்தரு (1)

மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/2
மேல்


மிளிர்ந்து (1)

தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
மேல்


மிளிரும் (2)

மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
மேல்


மிறை (1)

மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/2
மேல்


மிறையும் (1)

மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்று செய்து திரிவேன் – தேவா-சுந்:743/2
மேல்


மின் (8)

மின் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:3/3
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே – தேவா-சுந்:239/2
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:249/3
விடையும் கொடியும் சடையும் உடையாய் மின் நேர் உருவத்து ஒளியானே – தேவா-சுந்:418/1
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/3
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/3
மின் நெடும் செஞ்சடையான் மேவிய ஆரூரை – தேவா-சுந்:851/1
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி – தேவா-சுந்:906/2
மேல்


மின்அனையாள் (1)

மின்அனையாள் திரு மேனி விளங்க ஒர் – தேவா-சுந்:109/1
மேல்


மின்னவன் (2)

மின்னவன் மின்னவன் வேதத்தின் உட்பொருள் ஆகிய – தேவா-சுந்:463/2
மின்னவன் மின்னவன் வேதத்தின் உட்பொருள் ஆகிய – தேவா-சுந்:463/2
மேல்


மின்னாய் (1)

வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான் – தேவா-சுந்:877/2
மேல்


மின்னானே (1)

மின்னானே செக்கர் வானத்து இள ஞாயிறு – தேவா-சுந்:976/3
மேல்


மின்னினது (1)

புயலினை திருவினை பொன்னினது ஒளியை மின்னினது உருவை என்னிடை பொருளை – தேவா-சுந்:599/3
மேல்


மின்னும் (2)

மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/2
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1

மேல்