ஊ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊட்டிக்கொண்டு 1
ஊட்டிட 1
ஊட்டிடும் 1
ஊடல் 1
ஊடி 2
ஊடியும் 1
ஊடினால் 1
ஊடு 1
ஊடும் 1
ஊண் 4
ஊர் 99
ஊர்-தொறும் 1
ஊர்கள்-தோறும் 1
ஊர்கின்ற 1
ஊர்தரு 3
ஊர்தரும் 1
ஊர்தான் 1
ஊர்தி 3
ஊர்தீ 1
ஊர்ப்புறம் 1
ஊர்வது 2
ஊர்வனவும் 1
ஊரன் 41
ஊரனேன் 1
ஊரனை 1
ஊரிடை 1
ஊரினும் 1
ஊரும் 18
ஊர்ஊர் 1
ஊர்ஊரன் 4
ஊழ்வினை 1
ஊழி 2
ஊழி-தொறு 1
ஊழிகள் 1
ஊழிகளும் 1
ஊழியான் 1
ஊழியும் 1
ஊழும் 1
ஊறல் 2
ஊறி 1
ஊறும் 5
ஊன் 9
ஊன்ற 1
ஊன்றி 2
ஊன்றினார் 1
ஊன்றுகோல் 1
ஊன்றும் 1
ஊன்றுவது 1
ஊனத்தினால் 1
ஊனத்து 1
ஊனம் 4
ஊனமிலி 1
ஊனாய் 2
ஊனை 4


ஊட்டிக்கொண்டு (1)

ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
மேல்


ஊட்டிட (1)

மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை – தேவா-சுந்:803/2
மேல்


ஊட்டிடும் (1)

தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/4
மேல்


ஊடல் (1)

தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
மேல்


ஊடி (2)

அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன் – தேவா-சுந்:791/2
மேல்


ஊடியும் (1)

ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன் – தேவா-சுந்:698/2
மேல்


ஊடினால் (1)

ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
மேல்


ஊடு (1)

மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா – தேவா-சுந்:71/2
மேல்


ஊடும் (1)

ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:381/4
மேல்


ஊண் (4)

ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண்
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:195/3,4
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் – தேவா-சுந்:1036/2
மேல்


ஊர் (99)

கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/2
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:10/3
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:47/4
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/2
கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் – தேவா-சுந்:93/1
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/2
அண்டத்து அண்டத்தின் அ புறத்து ஆடும் அமுதன் ஊர்
தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு – தேவா-சுந்:113/1,2
நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர்
கோலம் நீற்றன் குற்றாலம் குரங்கணில்முட்டமும் – தேவா-சுந்:114/2,3
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை – தேவா-சுந்:115/2
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்
நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர்நாட்டு நறையூரே – தேவா-சுந்:115/3,4
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் – தேவா-சுந்:117/2
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர் – தேவா-சுந்:117/3
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய – தேவா-சுந்:118/3
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர்
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று – தேவா-சுந்:121/2,3
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனைஅரையன் – தேவா-சுந்:177/1
நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனைஅரையன் – தேவா-சுந்:177/1
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று – தேவா-சுந்:177/2
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம் – தேவா-சுந்:180/2
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/3
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே – தேவா-சுந்:197/4
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் – தேவா-சுந்:218/1
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் – தேவா-சுந்:218/1
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
முந்தை ஊர் முதுகுன்றம் குரங்கணில்முட்டம் – தேவா-சுந்:310/1
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர் – தேவா-சுந்:310/2
பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி – தேவா-சுந்:310/3
எந்தை ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:310/4
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர் – தேவா-சுந்:311/1
ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா – தேவா-சுந்:311/2
இடம் கொள் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:312/4
பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர் – தேவா-சுந்:313/2
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை – தேவா-சுந்:313/3
இச்சை ஊர் எமது அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:313/4
இருக்கும் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:316/4
நாசன் ஊர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த – தேவா-சுந்:317/3
கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல் – தேவா-சுந்:318/3
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:329/1
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:329/4
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர்
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/2,3
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர்
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/2,3
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர்
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/2,3
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/2
ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ – தேவா-சுந்:436/2
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே – தேவா-சுந்:478/3
மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே – தேவா-சுந்:478/4
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே – தேவா-சுந்:481/2
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/4
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர் – தேவா-சுந்:502/2
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:508/2,3
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:551/4
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/4
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:554/4
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/2
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:613/1
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் – தேவா-சுந்:836/2
பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான் – தேவா-சுந்:841/3
ஊர் அரவம் அரைக்கு அசைத்தான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:908/4
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய் – தேவா-சுந்:949/1
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம் – தேவா-சுந்:949/2
வார் ஊர் முலையார் மருவும் மறுகில் – தேவா-சுந்:949/3
தேர் ஊர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:949/4
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:974/3
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:974/4
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/4
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/4
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/4
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/4
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:993/4
மேல்


ஊர்-தொறும் (1)

ஊர்-தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று – தேவா-சுந்:864/1
மேல்


ஊர்கள்-தோறும் (1)

செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய – தேவா-சுந்:443/1
மேல்


ஊர்கின்ற (1)

படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி – தேவா-சுந்:312/3
மேல்


ஊர்தரு (3)

சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
நீர் ஊர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே – தேவா-சுந்:728/4
நீர் ஊர்தரு நிமலன் திருமலையார்க்கு அயல் அருகே – தேவா-சுந்:841/1
மேல்


ஊர்தரும் (1)

தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல் – தேவா-சுந்:841/2
மேல்


ஊர்தான் (1)

ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர் – தேவா-சுந்:546/3
மேல்


ஊர்தி (3)

விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
பெற்றம் ஊர்தி பெண் பாதி இடம் பெண்ணை தெண் நீர் – தேவா-சுந்:311/3
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
மேல்


ஊர்தீ (1)

முடியேன் இனி பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ
கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ – தேவா-சுந்:4/1,2
மேல்


ஊர்ப்புறம் (1)

சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/2
மேல்


ஊர்வது (2)

ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான் உம்பர்_கோனை – தேவா-சுந்:625/1
மேல்


ஊர்வனவும் (1)

ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
மேல்


ஊரன் (41)

மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
அம்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சி – தேவா-சுந்:82/2
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார் – தேவா-சுந்:103/3
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை – தேவா-சுந்:111/3
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் – தேவா-சுந்:133/3
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/2
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/1,2
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால் – தேவா-சுந்:360/2
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை – தேவா-சுந்:445/2
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய – தேவா-சுந்:455/2
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ் மாலை – தேவா-சுந்:487/3
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு – தேவா-சுந்:507/3
அடியார்அடியன் நாவல் ஊரன் உரைத்தன – தேவா-சுந்:517/2
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள் – தேவா-சுந்:539/3
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/3
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/3
தேவன் திரு கேதாரத்தை ஊரன் உரைசெய்த – தேவா-சுந்:801/3
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன்
செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பதமலையை – தேவா-சுந்:811/1,2
மறை ஆர் புகழ் ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த – தேவா-சுந்:821/3
மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால் – தேவா-சுந்:831/3
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன்
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/2,3
நாடிய இன் தமிழால் நாவல ஊரன் சொல் – தேவா-சுந்:871/3
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த – தேவா-சுந்:932/3
அற்றார் அடியார் அடி நாய் ஊரன்
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/3,4
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை – தேவா-சுந்:984/3
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:994/2
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1025/4
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/2
மேல்


ஊரனேன் (1)

ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன் – தேவா-சுந்:791/2,3
மேல்


ஊரனை (1)

அடியன் ஊரனை ஆள்வரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:339/4
மேல்


ஊரிடை (1)

பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
மேல்


ஊரினும் (1)

சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால் – தேவா-சுந்:178/2
மேல்


ஊரும் (18)

நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:50/4
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம் – தேவா-சுந்:180/2
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/2
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் – தேவா-சுந்:268/1
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ – தேவா-சுந்:452/3
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம் – தேவா-சுந்:529/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி – தேவா-சுந்:529/2
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை – தேவா-சுந்:881/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
ஒற்றி ஊரும் அரவும் பிறையும் – தேவா-சுந்:932/1
பற்றி ஊரும் பவள சடையான் – தேவா-சுந்:932/2
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:943/2
மேல்


ஊர்ஊர் (1)

உச்சம்போதா ஊர்ஊர் திரிய கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:416/2
மேல்


ஊர்ஊரன் (4)

ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே – தேவா-சுந்:529/4
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே – தேவா-சுந்:881/4
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/2
ஒருவர்க்கு ஒருவர் அரிதாகில் உடை வெண் தலை கொண்டு ஊர்ஊரன்
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/1,2
மேல்


ஊழ்வினை (1)

ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே – தேவா-சுந்:771/4
மேல்


ஊழி (2)

உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/2
ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை – தேவா-சுந்:1026/1
மேல்


ஊழி-தொறு (1)

ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை – தேவா-சுந்:1026/1
மேல்


ஊழிகள் (1)

வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
மேல்


ஊழிகளும் (1)

ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
மேல்


ஊழியான் (1)

உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர் உறைவான் – தேவா-சுந்:185/1
மேல்


ஊழியும் (1)

உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:513/2
மேல்


ஊழும் (1)

ஊழும் மாறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:374/4
மேல்


ஊறல் (2)

ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா – தேவா-சுந்:311/2
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
மேல்


ஊறி (1)

ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன் – தேவா-சுந்:319/1
மேல்


ஊறும் (5)

பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/3
நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும்
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் – தேவா-சுந்:680/1,2
நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:690/4
மேல்


ஊன் (9)

ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம் – தேவா-சுந்:74/1
ஊன் நேர் இ உடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே – தேவா-சுந்:214/2
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:378/4
ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகு எல்லாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை – தேவா-சுந்:677/1
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம் – தேவா-சுந்:918/1
ஊன் ஆர் உடை வெண் தலை உண் பலி கொண்டு – தேவா-சுந்:948/1
ஊன் உடை இ உடலம் ஒடுங்கி புகுந்தான் பரந்தான் – தேவா-சுந்:987/3
ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1017/4
மேல்


ஊன்ற (1)

வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
மேல்


ஊன்றி (2)

நக்கு இறையே விரலால் இற ஊன்றி
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் – தேவா-சுந்:110/2,3
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/1,2
மேல்


ஊன்றினார் (1)

தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர் – தேவா-சுந்:546/2,3
மேல்


ஊன்றுகோல் (1)

ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/4
மேல்


ஊன்றும் (1)

பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
மேல்


ஊன்றுவது (1)

ஊன்றுவது ஓர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:911/4
மேல்


ஊனத்தினால் (1)

ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அதுதானோ – தேவா-சுந்:327/1
மேல்


ஊனத்து (1)

ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:818/1
மேல்


ஊனம் (4)

ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
ஊனம் இல்லா அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:828/1
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/3
மேல்


ஊனமிலி (1)

உறவிலி ஊனமிலி உணரார் புரம் மூன்று எரிய – தேவா-சுந்:986/1
மேல்


ஊனாய் (2)

ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய் – தேவா-சுந்:7/1
ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் – தேவா-சுந்:832/1
மேல்


ஊனை (4)

ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன் – தேவா-சுந்:422/1
ஊனை காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே – தேவா-சுந்:484/4
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன் – தேவா-சுந்:1018/2

மேல்