கீ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு


கீண்டு (1)

புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
மேல்


கீதங்கள் (1)

விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/3
மேல்


கீதத்தர் (1)

விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர்
கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் – தேவா-சுந்:541/1,2
மேல்


கீதம் (2)

தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
மேல்


கீதமும் (1)

மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும்
பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:370/2,3
மேல்


கீதனை (1)

விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
மேல்


கீழ் (23)

கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:219/3,4
அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து – தேவா-சுந்:281/1
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/4
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:792/4
பொன் நவிலும் கொன்றையினாய் போய் மகிழ் கீழ் இரு என்று – தேவா-சுந்:910/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற – தேவா-சுந்:1004/1
அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ்
இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1007/1,2
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


கீழ்வேளூர் (1)

கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
மேல்


கீழே (1)

சொன்ன எனை காணாமே சூளுறவு மகிழ் கீழே
என்ன வல்ல பெருமானே இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:910/2,3
மேல்


கீழையில் (1)

கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி அதே – தேவா-சுந்:118/4
மேல்


கீழைவழி (1)

கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும் – தேவா-சுந்:116/3
மேல்


கீள் (1)

கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் – தேவா-சுந்:240/1
மேல்


கீளும் (2)

துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும்
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/1,2
மேல்


கீளொடு (1)

அரை ஆர் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து – தேவா-சுந்:274/1
மேல்


கீளோடு (1)

கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே – தேவா-சுந்:796/4
மேல்


கீறி (2)

மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா – தேவா-சுந்:71/2
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/4
மேல்


கீறுமோ (1)

பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் – தேவா-சுந்:435/3
மேல்


கீறுவது (1)

பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் – தேவா-சுந்:793/1

மேல்