தெ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கங்களும் 1
தெங்கின் 1
தெங்கு 7
தெங்கும் 1
தெங்கொடு 1
தெண் 8
தெண்டர் 1
தெய்வ 1
தெய்வத்தவர் 1
தெய்வத்தினை 1
தெய்வம் 1
தெரித்த 2
தெரிதற்கு 1
தெரிந்த 1
தெரியல் 1
தெரியில் 1
தெரியும் 4
தெரிவு 2
தெருட்டி 1
தெருண்ட 1
தெருவிடை 1
தெருவில் 1
தெருவும் 1
தெருவே 1
தெவ்வர் 1
தெழித்திட்டு 1
தெழிப்பாய் 1
தெள்ளாறு 1
தெள்ளி 1
தெள்ளிதா 1
தெள்ளிய 1
தெள்ளும் 2
தெளி 2
தெளி-தன்னை 1
தெளித்து 1
தெளியீர் 1
தெளிவார்க்கு 1
தெளிவு 2
தெளிவை 1
தெற்கு 1
தெற்றியம் 1
தெற்று 1
தென் 38
தென்-பால் 3
தென்கரை 7
தென்நாட்டு 1
தென்பால் 10
தென்றல் 3
தென்னவனாய் 1
தென்னா 1
தென்னாத்தெனாத்தெத்தெனா 1
தென்னானை 1
தென்னூர் 1


தெங்கங்களும் (1)

தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை – தேவா-சுந்:721/2
மேல்


தெங்கின் (1)

பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
மேல்


தெங்கு (7)

குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:816/4
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/2
மேல்


தெங்கும் (1)

நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
மேல்


தெங்கொடு (1)

தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் – தேவா-சுந்:732/2
மேல்


தெண் (8)

தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:200/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/3
பல் உயிர் வாழும் தெண் நீர் பழமண்ணிப்படிக்கரையை – தேவா-சுந்:228/1
பெற்றம் ஊர்தி பெண் பாதி இடம் பெண்ணை தெண் நீர் – தேவா-சுந்:311/3
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:710/3
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும் – தேவா-சுந்:790/3
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/4
மேல்


தெண்டர் (1)

காதலாலே கருது தெண்டர் காரணத்தீர் ஆகி நின்றே – தேவா-சுந்:58/1
மேல்


தெய்வ (1)

நிலன் உடை மான் மறி கையது தெய்வ
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில் – தேவா-சுந்:107/1,2
மேல்


தெய்வத்தவர் (1)

தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல் – தேவா-சுந்:838/3
மேல்


தெய்வத்தினை (1)

தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் – தேவா-சுந்:834/3
மேல்


தெய்வம் (1)

விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால் – தேவா-சுந்:232/3
மேல்


தெரித்த (2)

தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
மேல்


தெரிதற்கு (1)

திருந்த நான்மறை பாட வல்லானை தேவர்க்கும் தெரிதற்கு அரியானை – தேவா-சுந்:590/1
மேல்


தெரிந்த (1)

தெரிந்த நான்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை – தேவா-சுந்:899/2
மேல்


தெரியல் (1)

திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய் – தேவா-சுந்:992/1
மேல்


தெரியில் (1)

சிகரத்திடை இள வெண் பிறை வைத்தான் இடம் தெரியில்
முகரத்திடை முத்தின் ஒளி பவள திரள் ஓதம் – தேவா-சுந்:720/1,2
மேல்


தெரியும் (4)

ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
தெரியும் மறை வல்லான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:815/4
தெரியும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:950/4
மேல்


தெரிவு (2)

செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான் – தேவா-சுந்:237/3
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
மேல்


தெருட்டி (1)

நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி
சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான் – தேவா-சுந்:664/1,2
மேல்


தெருண்ட (1)

தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
மேல்


தெருவிடை (1)

சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர்-தங்கள்-பால் – தேவா-சுந்:460/2,3
மேல்


தெருவில் (1)

தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1031/4
மேல்


தெருவும் (1)

தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/4
மேல்


தெருவே (1)

சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
மேல்


தெவ்வர் (1)

திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ – தேவா-சுந்:585/3
மேல்


தெழித்திட்டு (1)

தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
மேல்


தெழிப்பாய் (1)

தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய் – தேவா-சுந்:233/2
மேல்


தெள்ளாறு (1)

நள்ளாறு தெள்ளாறு அரத்துறை-வாய் எங்கள் நம்பனே – தேவா-சுந்:941/1
மேல்


தெள்ளி (1)

தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/2
மேல்


தெள்ளிதா (1)

தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
மேல்


தெள்ளிய (1)

தெள்ளிய பேய் பல பூதம் அவற்றொடு – தேவா-சுந்:106/1
மேல்


தெள்ளும் (2)

துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/3
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1034/4
மேல்


தெளி (2)

செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
மேல்


தெளி-தன்னை (1)

கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/3
மேல்


தெளித்து (1)

தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும் – தேவா-சுந்:790/3
மேல்


தெளியீர் (1)

தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக – தேவா-சுந்:797/3
மேல்


தெளிவார்க்கு (1)

தேடி மால் அயன் காண்பு அரியானை சித்தமும் தெளிவார்க்கு எளியானை – தேவா-சுந்:575/3
மேல்


தெளிவு (2)

செப்ப அரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய – தேவா-சுந்:522/1
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
மேல்


தெளிவை (1)

தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
மேல்


தெற்கு (1)

தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக – தேவா-சுந்:797/3
மேல்


தெற்றியம் (1)

தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/4
மேல்


தெற்று (1)

தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
மேல்


தென் (38)

தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர் – தேவா-சுந்:119/1
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/4
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:668/4
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:670/4
நீடு மாடங்கள் மாளிகை-தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:671/4
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/4
சிந்தை பராமரியா தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:842/3
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:843/3
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:844/3
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:845/3
செம்பொனை நல் மணியை தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:848/3
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:849/3
திண்ணிய மா மதில் சூழ் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:850/3
தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1027/4
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/4
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1029/4
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/4
தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1031/4
சேடை உடுத்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1032/4
இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/4
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1034/4
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1035/4
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/4
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை – தேவா-சுந்:1037/1
மேல்


தென்-பால் (3)

மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால்
பத்தர் பலர் பாட இருந்த பரமா – தேவா-சுந்:322/1,2
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்-பால்
குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:325/2,3
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால்
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகை – தேவா-சுந்:329/1,2
மேல்


தென்கரை (7)

அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:83/4
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:85/4
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/4
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:91/4
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/4
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/2
மேல்


தென்நாட்டு (1)

ஈழநாட்டு மாதோட்டம் தென்நாட்டு இராமேச்சுரம் – தேவா-சுந்:118/1
மேல்


தென்பால் (10)

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:1/3
வேய் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:2/3
மின் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:3/3
செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:4/3
தாது ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:5/3
மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:6/3
தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:7/3
ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:8/3
செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:9/3
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:10/3
மேல்


தென்றல் (3)

கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:843/3
தென்றல் புகுந்து உலவும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1009/4
மேல்


தென்னவனாய் (1)

தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
மேல்


தென்னா (1)

தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1027/4
மேல்


தென்னாத்தெனாத்தெத்தெனா (1)

தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசைதிசையன – தேவா-சுந்:16/1
மேல்


தென்னானை (1)

தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்


தென்னூர் (1)

தென்னூர் கைம்மை திரு சுழியல் திரு கானப்பேர் – தேவா-சுந்:117/1

மேல்