கெ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு


கெட்ட (1)

கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/2
மேல்


கெட (4)

ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/3
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/3,4
நிலை கெட விண் அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய – தேவா-சுந்:1023/1
மேல்


கெடலும் (1)

இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் – தேவா-சுந்:340/3
மேல்


கெடவே (9)

என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:249/4
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:250/4
அத்தா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:251/4
அங்கணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:252/4
ஐயா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:253/4
அடிகேள் தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:254/4
அந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:255/4
அரசே தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:256/4
கூத்தா தந்து அருளாய் கொடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:257/4
மேல்


கெடில (10)

எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
மேல்


கெடுக்கும் (1)

மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை மணியினை பணிவார் வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த – தேவா-சுந்:695/1,2
மேல்


கெடுத்தானை (1)

என்னை நான் மறக்கும் ஆறு எம்பெருமானை என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை – தேவா-சுந்:751/4
மேல்


கெடுத்து (1)

பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
மேல்


கெடுதலையே (1)

கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல் – தேவா-சுந்:222/2
மேல்


கெடுப்பானை (3)

மாயம் ஆய மனம் கெடுப்பானை மனத்துள்ளே மதியாய் இருப்பானை – தேவா-சுந்:577/1
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/3,4
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை – தேவா-சுந்:578/3
மேல்


கெடுவிப்பாய் (1)

கெடுவிப்பாய் அல்லாதார் கேடு இலா பொன் அடிக்கே – தேவா-சுந்:297/3
மேல்


கெண்டை (5)

இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
மேல்


கெதி (1)

கெதி பேறுசெய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே – தேவா-சுந்:800/4
மேல்


கெழு (2)

மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
மேல்


கெழுமி (1)

கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3

மேல்