வை – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வைக்க 1
வைக்கமாட்டீர் 1
வைக்கவும் 1
வைகலும் 8
வைகி 1
வைகும் 2
வைச்சே 1
வைத்த 25
வைத்தது 2
வைத்தல் 1
வைத்தவன் 1
வைத்தவனை 1
வைத்தனன் 1
வைத்தாய் 3
வைத்தாய்க்கு 1
வைத்தார் 1
வைத்தார்க்கும் 1
வைத்தான் 3
வைத்தானை 2
வைத்திடும் 1
வைத்தீர் 5
வைத்து 22
வைப்பது 1
வைப்பினை 1
வைப்பை 1
வைம்-மின்கள் 1
வையகம் 3
வையம் 1


வைக்க (1)

வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1018/3,4
மேல்


வைக்கமாட்டீர் (1)

தேடித்தேடி திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர்
ஓடி போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:46/3,4
மேல்


வைக்கவும் (1)

சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன் – தேவா-சுந்:617/2
மேல்


வைகலும் (8)

சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு வைகலும்
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் – தேவா-சுந்:508/1,2
கருது நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும்
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:509/1,2
தொக்கு ஆய மனம் என்னொடு சூள் அறு வைகலும்
நக்கான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:510/1,2
வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும்
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/1,2
நில்லாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும்
நல்லான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:512/1,2
மறவல் நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும்
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:513/1,2
ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும்
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:514/1,2
எற்றே நினை என்னொடும் சூள் அறு வைகலும்
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற – தேவா-சுந்:516/1,2
மேல்


வைகி (1)

வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே – தேவா-சுந்:1022/2
மேல்


வைகும் (2)

மருதவானவர் வைகும் இடம் மற வேடுவர் – தேவா-சுந்:509/3
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
மேல்


வைச்சே (1)

வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/3
மேல்


வைத்த (25)

தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த
கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/2,3
வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
தாரம் ஆக கங்கையாளை சடையில் வைத்த அடிகேள் உம்தம் – தேவா-சுந்:50/3
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/3
சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே – தேவா-சுந்:98/2
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:98/3
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:98/3
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
ஐ வாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா – தேவா-சுந்:152/1
போய் அமலாமை தன் பொன் அடிக்கு என்னை பொருந்த வைத்த
வேயவனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:173/2,3
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:421/3,4
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/2,3
புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி – தேவா-சுந்:453/3
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:743/3,4
வாழுமவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட – தேவா-சுந்:788/3
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/2
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அடி நாய் சொல் – தேவா-சுந்:881/2,3
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே – தேவா-சுந்:912/3,4
மோடு உடைய சமணர்க்கும் முடை உடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடு உடைய புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:921/3,4
மேல்


வைத்தது (2)

விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/4
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும் – தேவா-சுந்:152/2
மேல்


வைத்தல் (1)

முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/2
மேல்


வைத்தவன் (1)

மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
மேல்


வைத்தவனை (1)

பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு – தேவா-சுந்:507/2,3
மேல்


வைத்தனன் (1)

வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
மேல்


வைத்தாய் (3)

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:1/3
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் – தேவா-சுந்:201/1
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய்
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:201/1,2
மேல்


வைத்தாய்க்கு (1)

புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ – தேவா-சுந்:202/2
மேல்


வைத்தார் (1)

மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/2
மேல்


வைத்தார்க்கும் (1)

சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/2
மேல்


வைத்தான் (3)

பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
சிகரத்திடை இள வெண் பிறை வைத்தான் இடம் தெரியில் – தேவா-சுந்:720/1
மாலை மதியும் வைத்தான் இடம் ஆம் – தேவா-சுந்:956/2
மேல்


வைத்தானை (2)

சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/4
மேல்


வைத்திடும் (1)

அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
மேல்


வைத்தீர் (5)

கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த – தேவா-சுந்:55/3
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர்
இல்லம்-தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே – தேவா-சுந்:1029/1,2
மேல்


வைத்து (22)

தாழ்வு எனும் தன்மை விட்டு தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார் – தேவா-சுந்:79/1,2
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
ஏவலனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:167/3
ஆகம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:169/2
தஞ்சம் கொண்டார் அடி சண்டியை தாம் என வைத்து உகந்தார் – தேவா-சுந்:170/2
நெஞ்சம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டு – தேவா-சுந்:170/3
எம்பிரானார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:171/3
வேட்டம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:172/2
வேயவனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:173/3
வேய் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:174/3
இடம் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:175/3
சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் – தேவா-சுந்:299/1
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:505/2
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/2
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள் – தேவா-சுந்:795/1
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை – தேவா-சுந்:879/2
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/4
மேல்


வைப்பது (1)

பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே – தேவா-சுந்:775/4
மேல்


வைப்பினை (1)

வம்பனை எ உயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரா – தேவா-சுந்:848/2
மேல்


வைப்பை (1)

நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
மேல்


வைம்-மின்கள் (1)

செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/2,3
மேல்


வையகம் (3)

வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
வையகம் முழுது உண்ட மாலொடு நான்முகனும் – தேவா-சுந்:863/1
மேல்


வையம் (1)

வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:817/2

மேல்