நா – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 16
நாக்கும் 1
நாகங்கள் 1
நாகத்தராய் 1
நாகத்தை 2
நாகம் 12
நாகமோ 2
நாகர் 1
நாகன் 1
நாகேச்சரத்து 11
நாகை 12
நாகைக்காரோணம் 11
நாங்கூர் 3
நாசங்கள் 1
நாசன் 1
நாட்டக 1
நாட்டம் 2
நாட்டி 1
நாட்டியத்தான்குடி 10
நாட்டு 1
நாட்டையும் 1
நாட 1
நாடகம் 1
நாடர் 1
நாடனே 1
நாடனை 1
நாடா 1
நாடி 4
நாடிய 4
நாடியர் 1
நாடியும் 3
நாடு 8
நாடும் 2
நாடுமதும் 3
நாடுவன் 2
நாண் 9
நாணனை 1
நாணி 1
நாணியில் 2
நாணியின் 1
நாத்தான் 1
நாத்தானும் 1
நாத 1
நாதம் 1
நாதன் 2
நாதன்-பால் 1
நாதனுக்கு 1
நாதனே 2
நாதனை 5
நாதா 1
நாதியன் 1
நாபிக்கு 1
நாம் 17
நாமங்கள் 1
நாமம் 2
நாமமும் 1
நாய் 7
நாய்தான் 1
நாயகராய் 1
நாயகன் 2
நாயகனார்க்கு 1
நாயகனே 2
நாயகனை 3
நாயினேன் 9
நாயினேன்-தன்னை 1
நாயினேனை 1
நாயேன் 13
நாயேனை 1
நாரணன் 2
நாரை 1
நாரைகாள் 3
நாரையொடு 1
நால் 4
நால்_ஐந்தும் 1
நால்வர்க்கு 3
நாலூர் 1
நாவர் 1
நாவல் 15
நாவல 5
நாவலர் 13
நாவலர்_கோமான் 1
நாவலர்_கோன் 10
நாவலனார்க்கு 1
நாவலா 1
நாவலூர் 8
நாவலூர்_கோன் 2
நாவலூரன் 5
நாவலூரான் 1
நாவலூரே 10
நாவன் 4
நாவனூர் 1
நாவில் 1
நாவின் 2
நாவின்மிசைஅரையனொடு 1
நாவினுக்கரையன் 1
நாவினை 1
நாவுக்குஅரசரும் 1
நாவும் 1
நாழி 1
நாழிகையும் 1
நாள் 23
நாள்-தொறும் 9
நாள்-தோறும் 1
நாள்களில் 1
நாள்நாளும் 2
நாளார் 1
நாளால் 1
நாளும் 29
நாளே 1
நாளை 4
நாளைப்போவானும் 1
நாற 3
நாறிய 3
நாறு 5
நாறும் 6
நான் 70
நான்கினையும் 1
நான்கு 1
நான்குடன் 1
நான்கும் 8
நான்மறை 7
நான்மறைக்கு 1
நான்மறையார் 1
நான்மறையால் 1
நான்மறையான் 1
நான்மறையோர் 3
நான்மறையோர்க்கு 1
நான்முகத்தினானை 1
நான்முகன் 4
நான்முகனும் 5
நானாவிதம் 1
நானிலத்தில் 1
நானும் 2
நானேல் 2


நா (16)

நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
நா ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:174/4
உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும் – தேவா-சுந்:216/2
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே – தேவா-சுந்:237/1
கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே – தேவா-சுந்:266/2
நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/4
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/4
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:490/4
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/4
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/4
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/4
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/4
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:496/4
நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு – தேவா-சுந்:975/3
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார் – தேவா-சுந்:977/1
மேல்


நாக்கும் (1)

நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
மேல்


நாகங்கள் (1)

கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக – தேவா-சுந்:544/1
மேல்


நாகத்தராய் (1)

துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
மேல்


நாகத்தை (2)

பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்


நாகம் (12)

தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை – தேவா-சுந்:59/1,2
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:169/4
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:178/4
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே – தேவா-சுந்:285/1
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர – தேவா-சுந்:334/3
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/2
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
மேல்


நாகமோ (2)

கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ – தேவா-சுந்:331/2
ஆரம் ஆவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:361/4
மேல்


நாகர் (1)

திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் – தேவா-சுந்:540/3
மேல்


நாகன் (1)

விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல் – தேவா-சுந்:903/3
மேல்


நாகேச்சரத்து (11)

சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/4
செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1007/4
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1008/4
தென்றல் புகுந்து உலவும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1009/4
திரை பொரு தண் பழன திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1010/4
செங்கயல் பாய் கழனி திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1011/4
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1012/4
திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1013/4
செங்கயல் நின்று உகளும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1014/4
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/4
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/2
மேல்


நாகை (12)

மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1027/4
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/4
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1029/4
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/4
தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1031/4
சேடை உடுத்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1032/4
இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/4
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1034/4
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1035/4
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/4
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை – தேவா-சுந்:1037/1
மேல்


நாகைக்காரோணம் (11)

கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/4
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
காசு அருளிச்செய்தீர் இன்று எனக்கு அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:473/4
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
மேல்


நாங்கூர் (3)

நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர்நாட்டு நறையூரே – தேவா-சுந்:115/4
நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர்நாட்டு நறையூரே – தேவா-சுந்:115/4
நாங்கூர் உறைவாய் தேங்கூர்நகராய் நல்லூர் நம்பானே – தேவா-சுந்:483/3
மேல்


நாசங்கள் (1)

நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
மேல்


நாசன் (1)

நாசன் ஊர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த – தேவா-சுந்:317/3
மேல்


நாட்டக (1)

நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/2
மேல்


நாட்டம் (2)

நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:172/4
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் – தேவா-சுந்:397/3
மேல்


நாட்டி (1)

கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த – தேவா-சுந்:564/1
மேல்


நாட்டியத்தான்குடி (10)

நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:146/4
நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:147/4
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
நல்லேன்அல்லேன் நான் உமக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:149/4
நட்டேனாதலால் நான் மறக்கில்லேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:150/4
நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:151/4
நைவான் அன்று உமக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:152/4
நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:153/4
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா – தேவா-சுந்:155/2
மேல்


நாட்டு (1)

நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர்நாட்டு நறையூரே – தேவா-சுந்:115/4
மேல்


நாட்டையும் (1)

மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:893/3,4
மேல்


நாட (1)

நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/3
மேல்


நாடகம் (1)

வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும் – தேவா-சுந்:895/3
மேல்


நாடர் (1)

வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே – தேவா-சுந்:1022/2
மேல்


நாடனே (1)

வான நாடனே வழித்துணை மருந்தே மாசு இலா மணியே மறைப்பொருளே – தேவா-சுந்:717/1
மேல்


நாடனை (1)

மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
மேல்


நாடா (1)

நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
மேல்


நாடி (4)

மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் – தேவா-சுந்:442/3
நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள் – தேவா-சுந்:549/3
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் – தேவா-சுந்:939/1
மேல்


நாடிய (4)

ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன் – தேவா-சுந்:319/1
நாடிய இன் தமிழால் நாவல ஊரன் சொல் – தேவா-சுந்:871/3
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:998/4
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனை – தேவா-சுந்:1005/2
மேல்


நாடியர் (1)

வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும் – தேவா-சுந்:895/3
மேல்


நாடியும் (3)

பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய – தேவா-சுந்:150/3
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை – தேவா-சுந்:692/2
மேல்


நாடு (8)

பேணி நாடு அதனில் திரியும் பெருமான்-தனை – தேவா-சுந்:122/1
நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:127/2
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா – தேவா-சுந்:155/2
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும் – தேவா-சுந்:921/1
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/4
மேல்


நாடும் (2)

நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய – தேவா-சுந்:60/3
காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:432/1
மேல்


நாடுமதும் (3)

பரவி நாடுமதும் பாடி நாடுமதும் – தேவா-சுந்:380/3
பரவி நாடுமதும் பாடி நாடுமதும்
உருகி நாடுமதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:380/3,4
உருகி நாடுமதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:380/4
மேல்


நாடுவன் (2)

நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல் – தேவா-சுந்:464/2
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல் – தேவா-சுந்:464/2
மேல்


நாண் (9)

பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே – தேவா-சுந்:215/1
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர – தேவா-சுந்:334/3
ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/3
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
பூண் நாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:940/3
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
மேல்


நாணனை (1)

நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
மேல்


நாணி (1)

நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
மேல்


நாணியில் (2)

கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல் – தேவா-சுந்:222/2
சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து – தேவா-சுந்:937/2
மேல்


நாணியின் (1)

கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
மேல்


நாத்தான் (1)

நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும் – தேவா-சுந்:680/1
மேல்


நாத்தானும் (1)

நாத்தானும் உனை பாடல் அன்றி நவிலாது எனா – தேவா-சுந்:938/1
மேல்


நாத (1)

நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
மேல்


நாதம் (1)

நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
மேல்


நாதன் (2)

நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
நன்றும் நல்ல நாதன் நரை ஏறு – தேவா-சுந்:929/3
மேல்


நாதன்-பால் (1)

நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும் – தேவா-சுந்:921/1
மேல்


நாதனுக்கு (1)

நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனைஅரையன் – தேவா-சுந்:177/1
மேல்


நாதனே (2)

நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ – தேவா-சுந்:707/3
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/2
மேல்


நாதனை (5)

நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/4
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார் – தேவா-சுந்:635/1
ஆத்தம் என்று எனை ஆள்உகந்தானை அமரர் நாதனை குமரனை பயந்த – தேவா-சுந்:638/1
நாதனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:695/4
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
மேல்


நாதா (1)

நாதா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:129/4
மேல்


நாதியன் (1)

நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/4
மேல்


நாபிக்கு (1)

நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல் – தேவா-சுந்:464/2
மேல்


நாம் (17)

ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:178/4
அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:179/4
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம் – தேவா-சுந்:180/2
ஆரம் பாம்பு ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:180/4
யானை தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:181/4
ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:182/4
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:183/4
அ தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:184/4
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:185/4
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:186/4
திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம் – தேவா-சுந்:353/3
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:572/2
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:630/2
மேல்


நாமங்கள் (1)

வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
மேல்


நாமம் (2)

பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
பெற்றான் இனிது உறைய திறம்பாமை திரு நாமம்
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/3,4
மேல்


நாமமும் (1)

வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
மேல்


நாய் (7)

பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன் – தேவா-சுந்:264/1
சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள் – தேவா-சுந்:441/1
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
ஆரூரன் அடி நாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:613/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அடி நாய் சொல் – தேவா-சுந்:881/3
அற்றார் அடியார் அடி நாய் ஊரன் – தேவா-சுந்:963/3
மேல்


நாய்தான் (1)

நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:972/3
மேல்


நாயகராய் (1)

மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே – தேவா-சுந்:861/4
மேல்


நாயகன் (2)

திருவின்_நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்செய்திடும் தேவர் பிரானை – தேவா-சுந்:586/1
அறவனை அதரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகன் ஆன – தேவா-சுந்:694/2
மேல்


நாயகனார்க்கு (1)

நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:173/4
மேல்


நாயகனே (2)

ஏத்தாது இருந்து அறியேன் இமையோர் தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கு எல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:257/1,2
இமையோர்_நாயகனே இறைவா என் இடர் துணையே – தேவா-சுந்:260/1
மேல்


நாயகனை (3)

அ நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள் – தேவா-சுந்:525/2
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
மேல்


நாயினேன் (9)

நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:688/4
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:689/4
நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:690/4
நஞ்சம் உண்ட நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:691/4
நங்கள் கோனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:692/4
நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:693/4
நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:694/4
நாதனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:695/4
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:696/4
மேல்


நாயினேன்-தன்னை (1)

நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன்-தன்னை ஆட்கொண்ட – தேவா-சுந்:705/1
மேல்


நாயினேனை (1)

நான் என பாடல் அந்தோ நாயினேனை பொருட்படுத்துவான் – தேவா-சுந்:1017/2
மேல்


நாயேன் (13)

நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை – தேவா-சுந்:2/1
பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் – தேவா-சுந்:78/2,3
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன்
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/3,4
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன்
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:581/3,4
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்கும் ஆறு எம்பெருமானை என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை – தேவா-சுந்:751/3,4
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை – தேவா-சுந்:752/3,4
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/3,4
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
அறியும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை – தேவா-சுந்:754/3,4
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/3,4
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/3,4
விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/3,4
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை – தேவா-சுந்:758/3,4
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/3,4
மேல்


நாயேனை (1)

பொறுத்தாய் எத்தனையும் நாயேனை பொருள்படுத்து – தேவா-சுந்:231/2
மேல்


நாரணன் (2)

நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே – தேவா-சுந்:461/2
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:496/3
மேல்


நாரை (1)

நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர் – தேவா-சுந்:969/1
மேல்


நாரைகாள் (3)

சூழும் ஓடி சுழன்று உழலும் வெண் நாரைகாள்
ஆளும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:374/1,2
இலை கொள் சோலை தலை இருக்கும் வெண் நாரைகாள்
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:376/1,2
சுற்றுமுற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள்
அற்றம் முற்ற பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:379/1,2
மேல்


நாரையொடு (1)

தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
மேல்


நால் (4)

நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர் – தேவா-சுந்:315/2
நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை – தேவா-சுந்:386/1
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல் – தேவா-சுந்:464/2
மேல்


நால்_ஐந்தும் (1)

பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
மேல்


நால்வர்க்கு (3)

அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து – தேவா-சுந்:281/1
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


நாலூர் (1)

நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர்
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல – தேவா-சுந்:315/2,3
மேல்


நாவர் (1)

குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் – தேவா-சுந்:306/3
மேல்


நாவல் (15)

வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:198/2
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/3
ஆரா இன்னமுதை அணி நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:268/2
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
அடியார்அடியன் நாவல் ஊரன் உரைத்தன – தேவா-சுந்:517/2
நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள் – தேவா-சுந்:549/3
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/2
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:750/3
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் – தேவா-சுந்:780/3
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:1016/3
மேல்


நாவல (5)

நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/2
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் – தேவா-சுந்:811/1
நாடிய இன் தமிழால் நாவல ஊரன் சொல் – தேவா-சுந்:871/3
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:994/2
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/2
மேல்


நாவலர் (13)

தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:238/3
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:248/3
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/2
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான் – தேவா-சுந்:841/3
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன் – தேவா-சுந்:851/2
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
மேல்


நாவலர்_கோமான் (1)

பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான்
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே – தேவா-சுந்:841/3,4
மேல்


நாவலர்_கோன் (10)

தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:238/3
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:248/3
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன்
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:288/2,3
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன் – தேவா-சுந்:851/2
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
மேல்


நாவலனார்க்கு (1)

நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:167/4
மேல்


நாவலா (1)

நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:490/4
மேல்


நாவலூர் (8)

செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன் – தேவா-சுந்:133/1
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று – தேவா-சுந்:177/2
கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை – தேவா-சுந்:187/1
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திரு நாவலூர் கோன் – தேவா-சுந்:403/3
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை – தேவா-சுந்:697/1
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் – தேவா-சுந்:1037/2
மேல்


நாவலூர்_கோன் (2)

கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை – தேவா-சுந்:187/1
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
மேல்


நாவலூரன் (5)

விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன்
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும் – தேவா-சுந்:61/2,3
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/2
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
மேல்


நாவலூரான் (1)

வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:339/2
மேல்


நாவலூரே (10)

நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:167/4
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:168/4
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:169/4
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:170/4
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:171/4
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:172/4
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:173/4
நா ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:174/4
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:175/4
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/4
மேல்


நாவன் (4)

மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன்
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/2,3
விடை ஆர் கொடியன் வேத நாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை – தேவா-சுந்:928/2,3
மேல்


நாவனூர் (1)

நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர் – தேவா-சுந்:114/2
மேல்


நாவில் (1)

நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:690/4
மேல்


நாவின் (2)

நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மேல்


நாவின்மிசைஅரையனொடு (1)

நாவின்மிசைஅரையனொடு தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சுந்:801/1
மேல்


நாவினுக்கரையன் (1)

நல் தமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும் – தேவா-சுந்:563/1
மேல்


நாவினை (1)

ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/3
மேல்


நாவுக்குஅரசரும் (1)

நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்குஅரசரும் பாடிய நல் தமிழ் மாலை – தேவா-சுந்:681/1
மேல்


நாவும் (1)

வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
மேல்


நாழி (1)

நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
மேல்


நாழிகையும் (1)

காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி – தேவா-சுந்:994/1
மேல்


நாள் (23)

கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி – தேவா-சுந்:138/2
புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி – தேவா-சுந்:138/2
இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும் எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:142/2
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள்
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/2,3
தன்மையினால் அடியேனை தாம் ஆட்கொண்ட நாள் சபை முன் – தேவா-சுந்:168/1
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள்
இடம் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:175/2,3
மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:244/3
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி – தேவா-சுந்:316/3
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள் – தேவா-சுந்:489/1
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/1,2
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/2
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல் – தேவா-சுந்:490/1
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல் – தேவா-சுந்:490/1
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல் – தேவா-சுந்:490/1
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/2
எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:518/4
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி – தேவா-சுந்:796/2
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் – தேவா-சுந்:874/2
மேல்


நாள்-தொறும் (9)

நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு – தேவா-சுந்:75/3
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/3
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல் – தேவா-சுந்:464/1,2
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:500/2
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/2
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும்
அம் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:895/3,4
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/3
தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/3
மேல்


நாள்-தோறும் (1)

முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
மேல்


நாள்களில் (1)

நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆருயிரை – தேவா-சுந்:845/1
மேல்


நாள்நாளும் (2)

வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/3
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் – தேவா-சுந்:610/2
மேல்


நாளார் (1)

நாளார் வந்து அணுகி நலியா முனம் நின்-தனக்கே – தேவா-சுந்:244/1
மேல்


நாளால் (1)

குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/2
மேல்


நாளும் (29)

நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை – தேவா-சுந்:2/1
முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு – தேவா-சுந்:81/3
நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர் – தேவா-சுந்:119/1
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா – தேவா-சுந்:155/2
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி – தேவா-சுந்:306/1
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி – தேவா-சுந்:308/1
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும்
ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன் – தேவா-சுந்:559/1,2
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:572/2
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும்
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/3,4
விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை – தேவா-சுந்:611/1
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும்
என் எனக்கு இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன் எந்தாய் – தேவா-சுந்:616/1,2
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:630/2
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் – தேவா-சுந்:642/1
அறையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:761/3,4
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:762/3,4
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:763/3,4
அம் தண் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:764/3,4
அணையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:765/3,4
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை நாளும்
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:766/3,4
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:767/3,4
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:767/4
அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை நாளும்
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே – தேவா-சுந்:768/3,4
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:769/3,4
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் – தேவா-சுந்:829/2
மடித்து ஆடும் அடிமை-கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும்
தடுத்தாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:913/1,2
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும்
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் – தேவா-சுந்:918/2,3
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும்
செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:920/2,3
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும்
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:921/1,2
மேல்


நாளே (1)

புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி – தேவா-சுந்:138/2
மேல்


நாளை (4)

நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார் – தேவா-சுந்:435/1
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/3,4
என் எனக்கு இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன் எந்தாய் – தேவா-சுந்:616/2
மேல்


நாளைப்போவானும் (1)

நல் தமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும்
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/1,2
மேல்


நாற (3)

போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாற
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக – தேவா-சுந்:234/2,3
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று – தேவா-சுந்:380/1
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
மேல்


நாறிய (3)

மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:498/3
மேல்


நாறு (5)

கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ – தேவா-சுந்:331/2
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/4
கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய் – தேவா-சுந்:422/2
கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை – தேவா-சுந்:724/3
நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு – தேவா-சுந்:883/1
மேல்


நாறும் (6)

கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/4
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:364/3
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/3,4
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:829/4
மேல்


நான் (70)

வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/3
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான்
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/1,2
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன் – தேவா-சுந்:81/2
நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:147/4
நல்லேன்அல்லேன் நான் உமக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:149/4
நட்டேனாதலால் நான் மறக்கில்லேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:150/4
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:153/4
சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
நஞ்சேன் நான் அடியேன் நலம் ஒன்று அறியாமையினால் – தேவா-சுந்:263/2
துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய் – தேவா-சுந்:263/3
நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான்
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-சுந்:295/2,3
நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை – தேவா-சுந்:386/1
பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான்
தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர – தேவா-சுந்:457/1,2
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/4
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/4
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:490/4
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/4
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன் – தேவா-சுந்:492/1
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/4
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/4
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/4
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:496/4
எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:519/4
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:521/4
என் செய நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:524/4
செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான்
என் அறிவான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:525/3,4
அறிவே அழிந்தேன் ஐயா நான் மை ஆர் கண்டம் உடையானே – தேவா-சுந்:533/2
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என் உனை நான் மறவேனேல் – தேவா-சுந்:556/3
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன் – தேவா-சுந்:558/2
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/2
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி – தேவா-சுந்:703/1
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன் – தேவா-சுந்:743/1
நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன் – தேவா-சுந்:748/1
என்னை நான் மறக்கும் ஆறு எம்பெருமானை என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை – தேவா-சுந்:751/4
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் – தேவா-சுந்:781/1
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான்
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/2,3
மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன் – தேவா-சுந்:783/1
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
எதிர்த்து நீந்தமாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே – தேவா-சுந்:789/2
இடு பலி கொள்ளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:846/4
ஏழ்உலகு ஆளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:847/4
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
நம்பி இங்கே இருந்தீரே என்று நான் கேட்டலுமே – தேவா-சுந்:905/3
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/4
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான்
பூண் நாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:940/2,3
செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத – தேவா-சுந்:983/1
கடியேன் நான் கண்டதே கண்டதே காமுறும் – தேவா-சுந்:983/2
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத – தேவா-சுந்:983/3
அடியேன் நான் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:983/4
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/4
நான் என பாடல் அந்தோ நாயினேனை பொருட்படுத்துவான் – தேவா-சுந்:1017/2
மேல்


நான்கினையும் (1)

சோதியன் சொற்பொருளாய் சுருங்கா மறை நான்கினையும்
ஓதியன் உம்பர்-தம் கோன் உலகத்தினுள் எ உயிர்க்கும் – தேவா-சுந்:985/2,3
மேல்


நான்கு (1)

கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
மேல்


நான்குடன் (1)

அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:721/1
மேல்


நான்கும் (8)

முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும்
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/1,2
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/3
மங்கை ஓர்கூறு அமர்ந்தீர் மறை நான்கும் விரித்து உகந்தீர் – தேவா-சுந்:252/1
அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி – தேவா-சுந்:636/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மறைகள் ஆயின நான்கும் மற்று உள பொருள்களும் எல்லா – தேவா-சுந்:761/1
மேல்


நான்மறை (7)

பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/2
ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன் – தேவா-சுந்:559/2
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை – தேவா-சுந்:571/2
திருந்த நான்மறை பாட வல்லானை தேவர்க்கும் தெரிதற்கு அரியானை – தேவா-சுந்:590/1
அரிய நான்மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை – தேவா-சுந்:685/3
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல் – தேவா-சுந்:1010/1
மேல்


நான்மறைக்கு (1)

நம்பினார்க்கு அருள்செய்யும் அந்தணர் நான்மறைக்கு இடம் ஆய வேள்வியுள் – தேவா-சுந்:892/1
மேல்


நான்மறையார் (1)

ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்கும் ஆகி அடல் – தேவா-சுந்:191/1
மேல்


நான்மறையால் (1)

அங்கம் நான்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும் – தேவா-சுந்:692/3
மேல்


நான்மறையான் (1)

பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா – தேவா-சுந்:998/1
மேல்


நான்மறையோர் (3)

திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை – தேவா-சுந்:896/2
புண்ணிய நான்மறையோர் முறையால் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:995/3
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் – தேவா-சுந்:1000/3
மேல்


நான்மறையோர்க்கு (1)

தெரிந்த நான்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை – தேவா-சுந்:899/2
மேல்


நான்முகத்தினானை (1)

புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/2,3
மேல்


நான்முகன் (4)

கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய – தேவா-சுந்:167/1
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க – தேவா-சுந்:196/3
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே – தேவா-சுந்:461/2
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தைசெய்த மலர்கள் நித்தலும் சேரவே – தேவா-சுந்:829/2,3
மேல்


நான்முகனும் (5)

சிந்துரக்கண்ணனும் நான்முகனும் உடனாய் தனியே – தேவா-சுந்:186/3
கரியவன் நான்முகனும் அடியும் முடி காண்பு அரிய – தேவா-சுந்:226/3
நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும் – தேவா-சுந்:254/1
நெடியானொடு நான்முகனும் அறிவு ஒண்ணா – தேவா-சுந்:328/1
வையகம் முழுது உண்ட மாலொடு நான்முகனும்
பை அரவு இள அல்குல் பாவையொடும் உடனே – தேவா-சுந்:863/1,2
மேல்


நானாவிதம் (1)

நானாவிதம் நினைவார்-தமை நலியார் நமன் தமரே – தேவா-சுந்:832/4
மேல்


நானிலத்தில் (1)

நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/3,4
மேல்


நானும் (2)

நானும் இத்தனை வேண்டுவது அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை – தேவா-சுந்:555/3
நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை – தேவா-சுந்:579/3
மேல்


நானேல் (2)

நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:146/4
நானேல் உன் அடியே நினைந்தேன் நினைதலுமே – தேவா-சுந்:214/1

மேல்