வை – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


வை (1)

வை வேல் அமர் வென்ற வாணன் தென்மாறை மயில் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 10 113/3

மேல்

வைக்கின்ற (1)

மலை முழுதும் கொற்றம் வைக்கின்ற வாணன் தென்மாறை நண்பா – தஞ்-வா-கோவை:1 8 41/1

மேல்

வைகா (1)

நனை ஈர் இதழ் கண் வைகா வெவ்வ நோயுற்ற நவ்வியையே – தஞ்-வா-கோவை:1 18 278/4

மேல்

வைகிய (1)

கரை தாவி உந்திய காவிரி வைகிய காலத்தினும் – தஞ்-வா-கோவை:1 9 71/1

மேல்

வைகினன் (1)

மயல் ஊர் மனத்தொடு வைகினன் யான் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 14 201/2

மேல்

வைகுதலால் (2)

வளைக்கும் பிரான் முடி வைகுதலால் தஞ்சைவாணன் மண் மேல் – தஞ்-வா-கோவை:1 9 64/2
மனையகத்து அல்லிடை வைகுதலால் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:3 27 376/2

மேல்

வைத்த (6)

மணி மாளிகை வைத்த வாணன் மண் காவலன் மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 130/2
செழியன் கயலை திசை வைத்த வாணன் தென்மாறை என் மேல் – தஞ்-வா-கோவை:1 13 178/1
மண்-பால் புகழ் வைத்த வாணன் தென்மாறை நம் மன்னர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 14 206/2
திலகம் பதித்து என சேல் வைத்த வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:1 16 234/3
மா தலம் தன் இரு தோள் வைத்த வாணன் தென்மாறை வண்ண – தஞ்-வா-கோவை:2 23 352/3
பூ ஆர் சடை முடி மேல் வைத்த போதும் பொறுத்தனளே – தஞ்-வா-கோவை:3 28 401/4

மேல்

வைத்தால் (1)

மிசையும் கரும்பினில் வேம்பு வைத்தால் அன்ன வேட்கை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 18 261/2

மேல்

வைத்து (9)

வைத்து அங்கு அகன்று மறந்து உறையார் வறியோர் கவர – தஞ்-வா-கோவை:1 4 26/2
தோயம்-கொலோ எனும் நேயம் நம்-பால் வைத்து சோலை மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 6 29/2
தன் நேயம் வைத்து அருள் சந்திரவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 13 175/3
வைத்து அணி சேர வகுத்தது போல் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:1 16 237/2
அறையும் பொறையும் மணந்த வெம் கானத்து அணங்கை இல் வைத்து
இறையும் பிரிவதற்கு எண்ணகிலேன் எண்ணலார் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 17 250/1,2
மணி பாலிகை முத்தம் வைத்து ஆங்கு அடம்பு அலர் வார் திரை தூய் – தஞ்-வா-கோவை:2 19 283/1
மன் போல் எவர்க்கும் வழங்கி உண்ணாதவர் வைத்து இழக்கும் – தஞ்-வா-கோவை:2 20 295/2
தன் நேயம் வைத்து அருளும் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:2 22 329/3
நெஞ்சை பொருள்-வயின் வைத்து நம் கேள்வர் நல் நீள் மதியின் – தஞ்-வா-கோவை:3 33 420/3

மேல்

வைத்தே (1)

காவும் தரவும் வல்லேன் எனை ஆளும் கடைக்கண் வைத்தே – தஞ்-வா-கோவை:1 10 81/4

மேல்

வைத்தோன் (1)

நல் வித்து அகன் புவி நாவில் வைத்தோன் வையைநாடு_அனையாய் – தஞ்-வா-கோவை:3 29 408/2

மேல்

வையகம் (1)

மை பேர் அலை கடல் வையகம் தாங்கிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 264/3

மேல்

வையத்து (1)

வையத்து உறைகின்ற மானிடரோ அன்றி வானவரோ – தஞ்-வா-கோவை:2 21 319/2

மேல்

வையம் (4)

வாங்கிய சாபம் உயர்த்தவன் போர் வென்ற வாணன் வையம்
தாங்கிய மால்_அனையான் தஞ்சை சூழ் வரை தாழ்_குழற்கே – தஞ்-வா-கோவை:1 2 5/3,4
மை ஆழி வையம் நிலையிட்ட வாணன் தென்மாறை வெற்பின் – தஞ்-வா-கோவை:1 14 196/3
வெண் பாற்கடலின் வையம் பதினாலும் மிதக்கின்றவே – தஞ்-வா-கோவை:1 14 206/4
தன்-பால் புலவி தணிக என்ற நீ தஞ்சைவாணன் வையம்
அன்பால் பரவும் புகழுடையான் அருளே_அனையாய் – தஞ்-வா-கோவை:3 28 388/2,3

மேல்

வையை (22)

வாரணம் கோடி தரும் தஞ்சைவாணன் தென்மாறை வையை
நீர்_அணங்கோ நெஞ்சமே தனியே இங்கு நின்றவரே – தஞ்-வா-கோவை:1 1 2/3,4
தத்தும் கரை வையை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே – தஞ்-வா-கோவை:1 4 26/4
சீயம்-கொலோ என தெவ் வென்ற வாணன் தென்மாறை வையை
தோயம்-கொலோ எனும் நேயம் நம்-பால் வைத்து சோலை மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 6 29/1,2
வாரும் துறை வையை சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 59/2
திறல் ஆர் முருகன் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வையை
அறல் ஆர் குழலாய் நுதல் குறுவேர்வும் அழகும் நின் போல் – தஞ்-வா-கோவை:1 9 66/2,3
மதி ஏய் சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வையை
நதி ஏய் சுழி நிகரும் பழி தீர் உந்தி நல்லவரே – தஞ்-வா-கோவை:1 9 70/3,4
வரு நீர் வன முலை மங்கை நல்லாய் செம் கை வாணன் வையை
தரும் நீர் மலி வயல் தஞ்சை_அன்னாள் அன்று தஞ்சம் இலேன் – தஞ்-வா-கோவை:1 10 91/1,2
மறை அலரா வந்த மால் மகன் யான் தஞ்சைவாணன் வையை
துறை அலர் ஆவி அம் காவி அம் கண்ணி துணிந்து சொல்லும் – தஞ்-வா-கோவை:1 10 105/2,3
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறை வையை துறைவா – தஞ்-வா-கோவை:1 10 106/3
தண்ணென் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 203/1
வரைப்-பால் மதுர தமிழ் தெரி வாணன் தென்மாறை வையை
நுரை பால் முகந்து அன்ன நுண் துகிலாய் இந்த நோய் அவர்க்கு இன்று – தஞ்-வா-கோவை:1 15 217/1,2
வைத்து அணி சேர வகுத்தது போல் தஞ்சைவாணன் வையை
பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னை பாசிலை வெண் – தஞ்-வா-கோவை:1 16 237/2,3
மண்டும் திரை வையை சூழ் தஞ்சைவாணற்கு வன் புலியும் – தஞ்-வா-கோவை:1 18 266/1
கால் வண்டல் வையை கரை மல்கும் மல்லிகை கால் முகையின் – தஞ்-வா-கோவை:1 18 277/3
மதித்தேன் அயர்ந்து மதியிலியேன் தஞ்சைவாணன் வையை
நதி தேன் இனம் புணர் மாதர் கண் போல நகைக்கும் நெய்தல் – தஞ்-வா-கோவை:2 20 290/2,3
உரியோன் உயர் வையை ஒண் துறை-வாய் உரவோர் தெளித்தும் – தஞ்-வா-கோவை:2 20 291/2
மா தங்கம் நல்கும் கை வாணன் தென்மாறை வையை துறைவர் – தஞ்-வா-கோவை:2 20 294/1
வழி நாடி நும் பின் வருகுவல் யான் தஞ்சைவாணன் வையை
சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா – தஞ்-வா-கோவை:2 21 315/2,3
சேல் ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:2 26 366/1
மலை ஆகிய மதில் வையை நல் நாட்டு எங்கை மான் படுக்கும் – தஞ்-வா-கோவை:3 28 393/2
வண் புனல் ஊர் வையை சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 28 395/1
தழங்கு ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன்-தனது அருள் போல் – தஞ்-வா-கோவை:3 28 402/1

மேல்

வையைநாட்டு (3)

மத யானை வாணன் வரும் தஞ்சை சூழ் வையைநாட்டு உறைவோர் – தஞ்-வா-கோவை:1 2 12/3
தளவு அரும்பா நண்பனே தஞ்சைவாணன் தமிழ் வையைநாட்டு
இள அரும்பாம் இவள்-மாட்டு என்-கொலோ நின்று இரப்பதுவே – தஞ்-வா-கோவை:1 10 108/3,4
வண் போது அளவிய நீர் வையைநாட்டு உறை மன்னவரே – தஞ்-வா-கோவை:3 28 398/4

மேல்

வையைநாடு (2)

நன்றே தரு வையைநாடு_அனையாய் நமது ஆர் உயிர் போல் – தஞ்-வா-கோவை:1 3 24/2
நல் வித்து அகன் புவி நாவில் வைத்தோன் வையைநாடு_அனையாய் – தஞ்-வா-கோவை:3 29 408/2

மேல்

வையைநாடு_அனையாய் (2)

நன்றே தரு வையைநாடு_அனையாய் நமது ஆர் உயிர் போல் – தஞ்-வா-கோவை:1 3 24/2
நல் வித்து அகன் புவி நாவில் வைத்தோன் வையைநாடு_அனையாய்
கல்வி தடம் கடல் நீந்திய காதலர் கற்றவர் முன் – தஞ்-வா-கோவை:3 29 408/2,3

மேல்

வையையிலே (1)

வழி தோற்றி வந்து எடுத்தான் தஞ்சைவாணன் தென் வையையிலே – தஞ்-வா-கோவை:2 20 301/4

மேல்