சு – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக 1
சுடர் 6
சுடரவன் 1
சுணங்கு 3
சுதை 2
சுமந்த 3
சுமந்து 4
சுமந்துசுமந்து 1
சுமந்தே 1
சுர 2
சுரத்திடை 1
சுரத்து 2
சுரத்தூடு 1
சுரத்தே 1
சுரம் 10
சுரம்-தன்னை 1
சுரமே 2
சுரர் 1
சுரலோகமும் 1
சுருதி 1
சுரும்பும் 1
சுரும்பையும் 1
சுருள் 3
சுவடு 1
சுழி 5
சுளித்து 1
சுளியும் 1
சுற்ற 1
சுற்றும் 5
சுற்றும்_குழல் 1
சுற்றுமுற்றும் 1
சுறவு 1
சுனை 5
சுனையாம் 1
சுனையும் 1
சுனையே 1

சுக (1)

தம் சுக வாய் மொழி நெஞ்சு_உடையான் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 150/3

மேல்

சுடர் (6)

அணியும் சுடர் விரி சங்கு பங்கேருகம் ஆடகமும் – தஞ்-வா-கோவை:1 6 32/1
சுடர் விளக்காம் மடவார் குழை மாணிக்கமே – தஞ்-வா-கோவை:1 13 189/4
சொல்ல தவிர்கிலன் சூழ் கழலீர் சுடர் தோய் புரிசை – தஞ்-வா-கோவை:1 17 251/2
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/4
ஒருமையிலே வந்து உற தகைந்தான் மைந்தன் ஒண் சுடர் போல் – தஞ்-வா-கோவை:3 28 405/2
மொய்க்கும் சுடர் இள அம்புலிதானும் முயங்கி எல்லா – தஞ்-வா-கோவை:3 33 423/3

மேல்

சுடரவன் (1)

துணி மா மரகத பாசறை வேலை சுடரவன் போல் – தஞ்-வா-கோவை:1 10 130/3

மேல்

சுணங்கு (3)

அலகு அம்பு அன கண் இவள் கொங்கை மென் சுணங்கு ஆகி வண்டு – தஞ்-வா-கோவை:1 16 234/1
சுருள் ஏய் குழலும் சுணங்கு ஏய் முலையும் சுமந்து கற்பு – தஞ்-வா-கோவை:2 21 307/1
பொன் மேல் அடுத்தன போல் சுணங்கு ஈன்ற புணர் முலையே – தஞ்-வா-கோவை:3 27 367/4

மேல்

சுதை (2)

மதி ஏய் சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 9 70/3
மஞ்சு ஊட்டி அன்ன சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 141/1

மேல்

சுமந்த (3)

அ பேருரை பழுதாம் என்னவே அரவம் சுமந்த
மை பேர் அலை கடல் வையகம் தாங்கிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 264/2,3
பலரே சுமந்த உரைகளும் தாயர்-தம் பார்வைகளும் – தஞ்-வா-கோவை:2 21 312/1
சுமந்த வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 21 312/3

மேல்

சுமந்து (4)

புயலே சுமந்து பிறையே அணிந்து பொரு விலுடன் – தஞ்-வா-கோவை:1 1 1/1
முயங்கிய நூபுர பங்கய தாளும் முலை சுமந்து
தயங்கிய நூல் இடைதானும் என் போல தளர்வுறும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 133/1,2
சுருள் ஏய் குழலும் சுணங்கு ஏய் முலையும் சுமந்து கற்பு – தஞ்-வா-கோவை:2 21 307/1
சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_மலரே – தஞ்-வா-கோவை:2 21 312/2

மேல்

சுமந்துசுமந்து (1)

அலரே சுமந்துசுமந்து இந்த ஊர் நின்று அழுங்குகவே – தஞ்-வா-கோவை:2 21 312/4

மேல்

சுமந்தே (1)

பூம் கனம் ஆர் குழலார் அலர் மாலை பொறை சுமந்தே – தஞ்-வா-கோவை:3 27 369/4

மேல்

சுர (2)

வெம் சுர நாடு வியன் சுரலோகமும் வெம் கடும் கான் – தஞ்-வா-கோவை:2 22 335/1
சுர வேய் அழல் வழியே தனி போய என் தோகையையே – தஞ்-வா-கோவை:2 22 344/4

மேல்

சுரத்திடை (1)

துடி மலர் சீர்க்கு எதிர் கூகை இரட்டும் சுரத்திடை ஓர் – தஞ்-வா-கோவை:2 21 318/3

மேல்

சுரத்து (2)

செல்லும் சுரத்து அழல் அன்று உன் கண்ணீர் என் தெறுகின்றதே – தஞ்-வா-கோவை:2 22 330/4
வரு மகளே தஞ்சைவாணன் ஒன்னார் துன்னும் வன் சுரத்து ஓர் – தஞ்-வா-கோவை:2 22 343/3

மேல்

சுரத்தூடு (1)

நைய படும் அழல் வெம் சுரத்தூடு நடந்தவர் என்று – தஞ்-வா-கோவை:2 21 319/3

மேல்

சுரத்தே (1)

இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே – தஞ்-வா-கோவை:2 25 362/4

மேல்

சுரம் (10)

மழை போல் வருகுவன் வன் சுரம் போய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 260/2
உயர் ஆமலகத்து அரும் கனி நீர் நசைக்கு உண் சுரம் போய் – தஞ்-வா-கோவை:1 18 280/1
பொருளே என சுரம் போதும் அப்போது புகழ் வெயிலான் – தஞ்-வா-கோவை:2 21 307/2
சுரம் ஆறும் எல்லை நல்லாய் இருப்பாம் இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:2 21 317/4
போலும் சுரம் இனி போக ஒண்ணாது பொருப்பு அடைந்தான் – தஞ்-வா-கோவை:2 21 320/2
பொழியாத வெம் சுரம் போகுவல் யான் என்று போம் குறிப்பால் – தஞ்-வா-கோவை:2 22 326/3
பொன்னே அனைய நல்லாய் அவமே சுரம் போக்கினையே – தஞ்-வா-கோவை:2 22 329/4
வேளே அனைய விடலை பின்னே சுரம் மீண்டு இனி நம் – தஞ்-வா-கோவை:2 23 353/2
பொன் மாதிரத்து புலன் உணர்வீர் சுரம் போய் வருவோன் – தஞ்-வா-கோவை:2 23 354/2
சொல் வித்த என்று அழல் ஆர் சுரம் போக துணிந்தனரே – தஞ்-வா-கோவை:3 29 408/4

மேல்

சுரம்-தன்னை (1)

பொறுத்தாள் அழல் சுரம்-தன்னை அன்னாய் நின் பொலம்_கொடியே – தஞ்-வா-கோவை:2 22 324/4

மேல்

சுரமே (2)

நஞ்சோ அழலோ எனும் சுரமே செல்ல நாடிய என் – தஞ்-வா-கோவை:2 21 308/1
இல்லின் கொடிய-கொல்லோ செல்லும் நாட்டு அவ் இரும் சுரமே – தஞ்-வா-கோவை:2 21 313/4

மேல்

சுரர் (1)

புன்னாகமும் கமழ் பூம் துறைவா சுரர் போற்று அமிர்தம் – தஞ்-வா-கோவை:1 16 245/2

மேல்

சுரலோகமும் (1)

வெம் சுர நாடு வியன் சுரலோகமும் வெம் கடும் கான் – தஞ்-வா-கோவை:2 22 335/1

மேல்

சுருதி (1)

சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார் – தஞ்-வா-கோவை:1 16 233/3

மேல்

சுரும்பும் (1)

தேனும் சுரும்பும் செறி தொங்கல் வாணன் தென்மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 90/1

மேல்

சுரும்பையும் (1)

நீல் நெடும் பெண்ணை சுரும்பையும் சூதும் நெருங்கு கொங்கை – தஞ்-வா-கோவை:1 18 279/3

மேல்

சுருள் (3)

சுருள் ஏய் குழலும் சுணங்கு ஏய் முலையும் சுமந்து கற்பு – தஞ்-வா-கோவை:2 21 307/1
பஞ்சுரம் ஆகும் மொழி சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 22 335/4
திக்கும் தொழுவருமே சுருள் ஓலை திருமுகமே – தஞ்-வா-கோவை:3 33 423/4

மேல்

சுவடு (1)

தொடு சிலை கானவர் ஓடிய வேற்று சுவடு உவையே – தஞ்-வா-கோவை:2 22 345/1

மேல்

சுழி (5)

நதி ஏய் சுழி நிகரும் பழி தீர் உந்தி நல்லவரே – தஞ்-வா-கோவை:1 9 70/4
குழி அன்றியும் வெம் சுழி ஒன்றும் யாறும் குழீஇ கொடிதாம் – தஞ்-வா-கோவை:1 13 178/3
சுழி நீர் அலை கடல் தொல் உலகு ஏழினும் தோற்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 13 180/1
சுழி தோற்றிடும் பகை தீர்க்கின்ற போது ஒரு தோன்றலும் அவ் – தஞ்-வா-கோவை:2 20 301/3
சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா – தஞ்-வா-கோவை:2 21 315/3

மேல்

சுளித்து (1)

நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலை சுளித்து
மறம் கூர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாள்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 8 57/2,3

மேல்

சுளியும் (1)

சின வேய் சுளியும் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:3 27 373/1

மேல்

சுற்ற (1)

சூர் ஆர் சிலம்பில் சிலம்பி மெல் நூல் கொண்டு சுற்ற வெற்றி – தஞ்-வா-கோவை:1 8 44/1

மேல்

சுற்றும் (5)

நந்து சுற்றும் கடல் ஞாலம் எல்லாம் புகழ் நாமன் வளர் – தஞ்-வா-கோவை:1 12 157/1
சந்து சுற்றும் கொங்கை மங்கையர் வேள் சஞ்சரீகம் நறை – தஞ்-வா-கோவை:1 12 157/2
வந்து சுற்றும் தொங்கல் வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 12 157/3
கொந்து சுற்றும் குழலாய் செல்லல் நீ அ குளிர் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 12 157/4
சுற்றும்_குழல் நின் பிணி விடுப்பான் வந்து தோன்றினர் பார் – தஞ்-வா-கோவை:3 31 416/1

மேல்

சுற்றும்_குழல் (1)

சுற்றும்_குழல் நின் பிணி விடுப்பான் வந்து தோன்றினர் பார் – தஞ்-வா-கோவை:3 31 416/1

மேல்

சுற்றுமுற்றும் (1)

சிலை முழுதும் சுற்றுமுற்றும் எய்யாநிற்ப செம் நிறத்தே – தஞ்-வா-கோவை:1 8 41/2

மேல்

சுறவு (1)

துன்றும் புயல் இளம் சோலையின்-வாய் சுறவு குழையை – தஞ்-வா-கோவை:1 7 34/2

மேல்

சுனை (5)

தொழுது இயல் ஆய தொகுதியொடு ஆடி சுனை குடையாது – தஞ்-வா-கோவை:1 2 7/3
புண் தலை வேலினும் கண் சிவப்பு ஆர பொலம் சுனை தேன் – தஞ்-வா-கோவை:1 9 63/3
சூட்டியவாறு நன்றால் முல்லை மாலை சுனை புனலே – தஞ்-வா-கோவை:1 9 65/4
சுனை உண்டு அசோக நிழல் சோகம் நீங்கி துயில்வது கண்டு – தஞ்-வா-கோவை:1 10 123/3
சுனை கேழ் நனை கழுநீர் குழலாய் சில தூதர் இன்னே – தஞ்-வா-கோவை:2 24 357/4

மேல்

சுனையாம் (1)

சுனையாம் அது மலர் சோலைகளாம் உவை தூய வண்டல் – தஞ்-வா-கோவை:2 23 350/2

மேல்

சுனையும் (1)

சூடாள் குவளையும் முல்லை அம் சூட்டும் சுனையும் பந்தும் – தஞ்-வா-கோவை:1 10 110/3

மேல்

சுனையே (1)

பெறலாம் எனில் குடைவேன் அடியேனும் பெரும் சுனையே – தஞ்-வா-கோவை:1 9 66/4

மேல்