பி – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிஞ்சை 1
பிடவு 1
பிடித்து 1
பிடியும் 1
பிடியொடு 1
பிணி 1
பிணி-தனக்கு 1
பிணிப்ப 1
பிணை 1
பிரான் 6
பிரானை 1
பிரிந்த 2
பிரிந்தவர் 1
பிரிந்தார் 1
பிரிந்தாரின் 1
பிரிந்திருந்தாரும் 1
பிரிந்திருந்தீர் 1
பிரிந்து 1
பிரிந்தோ 1
பிரிப்பவர் 1
பிரிபவர் 1
பிரியா 1
பிரியாது 1
பிரியினுமே 1
பிரியும் 1
பிரியேன் 2
பிரிவதற்கு 1
பிரிவான் 1
பிரிவு 1
பிழைத்தனவே 1
பிழையார் 1
பிற 1
பிறங்கு 1
பிறந்த 2
பிறந்தனள் 1
பிறந்தனன் 1
பிறந்தார் 2
பிறப்பே 1
பிறர் 3
பிறரால் 1
பிறவாது 1
பிறவியும் 1
பிறவும் 1
பிறழாது 1
பிறழார் 1
பிறிது-கொலோ 1
பிறிதோ-கொல் 1
பிறிதோர் 1
பிறை 6
பிறையும் 1
பிறையே 1
பின் 24
பின்பனி 1
பின்பனியே 1
பின்னல் 1
பின்னாக 2
பின்னிய 1
பின்னும் 1
பின்னே 6
பின்னை 3

பிஞ்சை (1)

பிஞ்சை புரை நுதலாய் பிரிவான் இன்று பேசினரே – தஞ்-வா-கோவை:3 33 420/4

மேல்

பிடவு (1)

பிடவு ஆர் சிறுநெறி-வாய் வரல் வேண்டினள் பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 13 170/4

மேல்

பிடித்து (1)

கரை ஊர் பொழுது இளங்காளையர் தாம் கிழி கை பிடித்து
தரை ஊர்-தொறும் பெண்ணை மா மடல் ஊர்வர் தவிர்ந்து இன்னும் – தஞ்-வா-கோவை:1 10 102/2,3

மேல்

பிடியும் (1)

மனமும் கவர் வெற்ப வாணன் தென்மாறை மட பிடியும்
அனமும் தொழும் நடை பால் பலகால் வரும் அன்னையுமே – தஞ்-வா-கோவை:1 12 156/3,4

மேல்

பிடியொடு (1)

தினையும் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்த இன் நீர் – தஞ்-வா-கோவை:1 10 123/2

மேல்

பிணி (1)

சுற்றும்_குழல் நின் பிணி விடுப்பான் வந்து தோன்றினர் பார் – தஞ்-வா-கோவை:3 31 416/1

மேல்

பிணி-தனக்கு (1)

பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காம பிணி-தனக்கு
மருந்து ஆவது நெஞ்சமே இல்லை வேறு மடல் அன்றியே – தஞ்-வா-கோவை:1 10 101/3,4

மேல்

பிணிப்ப (1)

வலை கால் பிணிப்ப வந்தார் வருந்தாரல்லர் மால் உழந்தே – தஞ்-வா-கோவை:1 8 53/4

மேல்

பிணை (1)

வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை – தஞ்-வா-கோவை:2 25 362/2

மேல்

பிரான் (6)

வளைக்கும் பிரான் முடி வைகுதலால் தஞ்சைவாணன் மண் மேல் – தஞ்-வா-கோவை:1 9 64/2
தக்கார் புகழ் தஞ்சைவாணர் பிரான் தமிழ்நாடு_அனையாய் – தஞ்-வா-கோவை:1 10 83/2
வெற்றி அவாவிய வாணர் பிரான் தஞ்சை வெற்பகத்து இ – தஞ்-வா-கோவை:1 15 224/1
மயராமல் வந்த பிரான் தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:1 18 280/4
மறுத்தார் அவற்கு மணம் அதனால் தஞ்சைவாணர் பிரான்
கறுத்தார் புரத்து நடந்தனள் காளை பின் காமர் கற்பால் – தஞ்-வா-கோவை:2 22 324/2,3
மஞ்சை புனை மதில் மாறை வரோதயன் வாணர் பிரான்
தஞ்சை பதி அண்ணல் எண்ணலர் போல் தனி நாம் இருக்க – தஞ்-வா-கோவை:3 33 420/1,2

மேல்

பிரானை (1)

பலரும் புகழ் தஞ்சைவாணர் பிரானை பணியலர் போல் – தஞ்-வா-கோவை:1 15 219/3

மேல்

பிரிந்த (2)

பேணி புணர்ந்து பிரிந்த பின் தோன்றலும் பேதை முகம் – தஞ்-வா-கோவை:1 15 210/2
மன்னற்கு உதவி பிரிந்த நம் காதலர் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 32 418/2

மேல்

பிரிந்தவர் (1)

காண பிரிந்தவர் காண்கிலரால் கடல் மேய்ந்து தஞ்சை – தஞ்-வா-கோவை:3 29 409/2

மேல்

பிரிந்தார் (1)

காரணத்தால் அல்லவோ பிரிந்தார் இன்று காதலரே – தஞ்-வா-கோவை:1 18 265/4

மேல்

பிரிந்தாரின் (1)

விம்மா வருந்துவது என் பிரிந்தாரின் விளங்கு_இழையே – தஞ்-வா-கோவை:3 28 379/4

மேல்

பிரிந்திருந்தாரும் (1)

பொன் மா மணியும் பிரிந்திருந்தாரும் புலம்ப மன்றில் – தஞ்-வா-கோவை:1 18 274/3

மேல்

பிரிந்திருந்தீர் (1)

புரையும் மென் கொங்கை பிரிந்திருந்தீர் முன் பொருப்பு எடுத்தே – தஞ்-வா-கோவை:3 27 371/2

மேல்

பிரிந்து (1)

நினையீர் பொருட்கு பிரிந்து அயல் நாட்டுழி நின்றுழி வேள்_அனையீர் – தஞ்-வா-கோவை:1 18 278/1

மேல்

பிரிந்தோ (1)

தாம் கண்_அனையர்-தமை பிரிந்தோ நம் தனிமை கண்டோ – தஞ்-வா-கோவை:1 14 204/3

மேல்

பிரிப்பவர் (1)

பின்னிய காதல் பிரிப்பவர் யார் இனி பேர் அருவி – தஞ்-வா-கோவை:1 3 22/3

மேல்

பிரிபவர் (1)

மருவி பிரிபவர் போல் இல்லையே மண்ணில் வன்கண்ணரே – தஞ்-வா-கோவை:1 12 158/4

மேல்

பிரியா (1)

இன் இயல் ஆரும் இளமர காவினிடம் பிரியா
கன்னியர் தாம் பலர் யார் நின்னை வாட்டிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 84/3,4

மேல்

பிரியாது (1)

பிரியாது உறைய பெறுகுதிரால் பிறை மானும் நெற்றி – தஞ்-வா-கோவை:3 27 368/2

மேல்

பிரியினுமே (1)

பெண் கொடியே பிரியேன் தரியேன் நின் பிரியினுமே – தஞ்-வா-கோவை:1 3 23/4

மேல்

பிரியும் (1)

பிரியும் பொழுது எல்லி-வாய் வினையேன் மனம் பின் செல்வதே – தஞ்-வா-கோவை:1 15 220/4

மேல்

பிரியேன் (2)

பெண் கொடியே பிரியேன் தரியேன் நின் பிரியினுமே – தஞ்-வா-கோவை:1 3 23/4
இ பேருவகை இனி பிரியேன் என்றும் என் முன் சொன்ன – தஞ்-வா-கோவை:1 18 264/1

மேல்

பிரிவதற்கு (1)

இறையும் பிரிவதற்கு எண்ணகிலேன் எண்ணலார் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 17 250/2

மேல்

பிரிவான் (1)

பிஞ்சை புரை நுதலாய் பிரிவான் இன்று பேசினரே – தஞ்-வா-கோவை:3 33 420/4

மேல்

பிரிவு (1)

பிறந்தார் எவர்க்கும் பிரிவு எய்துமால் வெய்ய பேர் அமர் கண் – தஞ்-வா-கோவை:1 11 145/3

மேல்

பிழைத்தனவே (1)

பெரியோர் பொறுப்பர் அன்றே சிறியோர்கள் பிழைத்தனவே – தஞ்-வா-கோவை:3 28 397/4

மேல்

பிழையார் (1)

பொய்யாது அவர்-தம் குறி பிழையார் அவர் பூண்ட அன்பு – தஞ்-வா-கோவை:1 14 196/1

மேல்

பிற (1)

உரைத்து என் பிற அந்த பைம்_தொடி ஆகம் உறாவிடில் வெண் – தஞ்-வா-கோவை:1 10 93/1

மேல்

பிறங்கு (1)

பெற்றிய சோலை பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும் – தஞ்-வா-கோவை:1 15 224/2

மேல்

பிறந்த (2)

அகத்தில் பிறந்த அரவிந்தமோ அடையார்-தமக்கு – தஞ்-வா-கோவை:1 8 48/2
சிலை பயில் வாள் நுதல் மின்னே பிறந்த அ செவ்வியிலே – தஞ்-வா-கோவை:1 10 109/1

மேல்

பிறந்தனள் (1)

பிறந்தனள் ஆகும் பெரும் திருமாது என பேதையரில் – தஞ்-வா-கோவை:1 14 198/2

மேல்

பிறந்தனன் (1)

ஏர் ஆர் புதல்வன் பிறந்தனன் வாழிய என்னும் முன்னே – தஞ்-வா-கோவை:3 28 391/1

மேல்

பிறந்தார் (2)

பிறந்தார் எவர்க்கும் பிரிவு எய்துமால் வெய்ய பேர் அமர் கண் – தஞ்-வா-கோவை:1 11 145/3
பிறந்தார் நிறைந்த கற்பு ஓர் வடிவே பெற்ற பெற்றியளே – தஞ்-வா-கோவை:3 28 407/4

மேல்

பிறப்பே (1)

பிறவாது ஒழிகை நன்றே ஒருகாலமும் பெண் பிறப்பே – தஞ்-வா-கோவை:2 21 310/4

மேல்

பிறர் (3)

தானும் பிறர் உள்ள நோய் அறியாத தகைமையளே – தஞ்-வா-கோவை:1 10 90/4
கரியோர் பிறர் இல்லை என்று அகன்றார் இனி காரிகையாய் – தஞ்-வா-கோவை:2 20 291/3
வேலான் என பிறர் வேட்டவர் யார் மணம் வெண் துகிலின் – தஞ்-வா-கோவை:2 26 366/2

மேல்

பிறரால் (1)

கறி வளர் சாரல் வெற்பா பிறரால் என்ன காரியமே – தஞ்-வா-கோவை:1 10 92/4

மேல்

பிறவாது (1)

பிறவாது ஒழிகை நன்றே ஒருகாலமும் பெண் பிறப்பே – தஞ்-வா-கோவை:2 21 310/4

மேல்

பிறவியும் (1)

பெண் என் பிறவியும் பேர் உடைத்து அன்று இ பெரும் பதி நம் – தஞ்-வா-கோவை:1 14 203/2

மேல்

பிறவும் (1)

இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல் – தஞ்-வா-கோவை:1 15 214/2

மேல்

பிறழாது (1)

பின் ஏய் குழலி பெறாள் அல்லளே பிறழாது எவர்க்கும் – தஞ்-வா-கோவை:2 22 329/2

மேல்

பிறழார் (1)

பெரியோர் மொழி பிறழார் என்று தேறுதல் பேதைமையே – தஞ்-வா-கோவை:2 20 291/4

மேல்

பிறிது-கொலோ (1)

இடையாய் பிறிது-கொலோ அறியேன் வெற்பர் எண்ணுவதே – தஞ்-வா-கோவை:1 10 125/4

மேல்

பிறிதோ-கொல் (1)

பிறிதோ-கொல் என்னும் பெருந்தகை தேற பெரிது உயிர்த்து – தஞ்-வா-கோவை:1 2 15/3

மேல்

பிறிதோர் (1)

பேச தகுவது ஒன்று அன்று கண்டாய் பிறிதோர் குறியை – தஞ்-வா-கோவை:1 14 191/1

மேல்

பிறை (6)

விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார் – தஞ்-வா-கோவை:1 9 64/3
வணர் ஆர் குழல் பிறை வாள்_நுதலாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 214/3
புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம் – தஞ்-வா-கோவை:1 16 242/1
தொடங்கும் பிறை நுதல் தோகையும் நீயும் முன் தோன்றுகின்ற – தஞ்-வா-கோவை:2 21 321/1
பிரியாது உறைய பெறுகுதிரால் பிறை மானும் நெற்றி – தஞ்-வா-கோவை:3 27 368/2
விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர் – தஞ்-வா-கோவை:3 27 372/3

மேல்

பிறையும் (1)

முருக கடவுள் அனைய வெற்பா முகிலும் பிறையும்
செருக கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 42/2,3

மேல்

பிறையே (1)

புயலே சுமந்து பிறையே அணிந்து பொரு விலுடன் – தஞ்-வா-கோவை:1 1 1/1

மேல்

பின் (24)

எறி தேன் அலம்பும் சிலம்பின் எப்போதும் இரந்து இவள் பின்
வெறிதே திரிந்து மெலிந்தனம் நாம் உள்ளம் மெல்_இயற்கு – தஞ்-வா-கோவை:1 2 15/1,2
பின் பார்த்து ஒதுங்குதல் காண் வலவா ஒரு பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 5 28/4
குழல் கண்ட பின் அல்லவோ அறல் நீருள் குளித்ததுவே – தஞ்-வா-கோவை:1 8 60/4
இவளை வர கண்டு நீ அணங்கே பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 9 67/4
தரும் மணி பின் பெற்று அணிபவர் போல் சென்று சார்ந்து இரந்து – தஞ்-வா-கோவை:1 9 69/2
ஊர் ஏது என முன் வினாவி பின் வேறொன்று உரைப்பது எல்லாம் – தஞ்-வா-கோவை:1 9 75/3
போய் யான் அளித்தலும் கைகுவித்து ஏற்ற பின் போற்றி அன்பால் – தஞ்-வா-கோவை:1 10 129/1
பின் அயராது ஒழிவாய் இதணே இது பெற்றனமே – தஞ்-வா-கோவை:1 12 159/4
பெற அரிதால் அவன் பின் சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு – தஞ்-வா-கோவை:1 12 162/1
பேணி புணர்ந்து பிரிந்த பின் தோன்றலும் பேதை முகம் – தஞ்-வா-கோவை:1 15 210/2
பிரியும் பொழுது எல்லி-வாய் வினையேன் மனம் பின் செல்வதே – தஞ்-வா-கோவை:1 15 220/4
இசையும்படி வல்லையேல் சொல்லி நீ பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 18 261/4
வழி நாடி நும் பின் வருகுவல் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:2 21 315/2
கறுத்தார் புரத்து நடந்தனள் காளை பின் காமர் கற்பால் – தஞ்-வா-கோவை:2 22 324/3
கழியாத அன்புடை காளை பின் நாளை கலந்து கொண்டல் – தஞ்-வா-கோவை:2 22 326/2
பின் ஏய் குழலி பெறாள் அல்லளே பிறழாது எவர்க்கும் – தஞ்-வா-கோவை:2 22 329/2
மாயம் புகல் ஒரு காளை பின் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:2 22 331/3
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/4
இயங்கா வனம் என் மகள் ஒரு காளை பின் ஏகினள் என்று – தஞ்-வா-கோவை:2 22 342/1
செரு மகள் ஏயும் புயத்து அயலான் பின் செல விடுத்து என் – தஞ்-வா-கோவை:2 22 343/1
இரவு ஏய் குழலி இன்று ஏதிலன் பின் செல்லல் என்று சொல்லா – தஞ்-வா-கோவை:2 22 344/1
காதலன் பின் வர கண்டனம் யாம் கண்டல் வேலி முந்நீர் – தஞ்-வா-கோவை:2 23 352/2
வேள் அனைய ஓர் காளை பின் போயினள் கான் பனி நீத்து – தஞ்-வா-கோவை:2 25 360/3
பின் உயிராமல் என் மேல் பூசும் நாளும் என் பேசுவதே – தஞ்-வா-கோவை:3 30 412/4

மேல்

பின்பனி (1)

நடுக்கம்செய் பின்பனி நாளின் வந்தார் அமர் நண்பன் உற்ற – தஞ்-வா-கோவை:3 32 419/3

மேல்

பின்பனியே (1)

பின்னல் கனை இருள் கூர் துன்பம் மேவிய பின்பனியே – தஞ்-வா-கோவை:3 32 418/4

மேல்

பின்னல் (1)

பின்னல் கனை இருள் கூர் துன்பம் மேவிய பின்பனியே – தஞ்-வா-கோவை:3 32 418/4

மேல்

பின்னாக (2)

பின்னாக முன் வந்த பேதை தன் காம பெரும் கடற்கு – தஞ்-வா-கோவை:1 16 245/3
அனை கேண்மை நண்ணிய அண்ணல் பின்னாக நம் அன்னை இன்று இ – தஞ்-வா-கோவை:2 24 357/2

மேல்

பின்னிய (1)

பின்னிய காதல் பிரிப்பவர் யார் இனி பேர் அருவி – தஞ்-வா-கோவை:1 3 22/3

மேல்

பின்னும் (1)

பெண் ஆரணங்கு அன்ன நின் முகம்தான் கண்ட பின்னும் உண்டோ – தஞ்-வா-கோவை:1 13 181/3

மேல்

பின்னே (6)

கண்டால் அருள் உள்ள நீ எனது ஆருயிர் காத்த பின்னே – தஞ்-வா-கோவை:1 10 95/4
பொருது அலைக்கும் குழலாள் அழ நீ கண்டு போய பின்னே – தஞ்-வா-கோவை:1 17 257/4
என் உற்றது என்று அறியேன் புனம் காவல் இருந்த பின்னே – தஞ்-வா-கோவை:2 20 297/4
மிக நல்லர் என்பது மன்பதை தேற விடலை பின்னே
மக நல்கும் மந்தி அம் கான் நடந்தாள் உன் மடந்தை இன்றே – தஞ்-வா-கோவை:2 22 328/3,4
வேளே அனைய விடலை பின்னே சுரம் மீண்டு இனி நம் – தஞ்-வா-கோவை:2 23 353/2
அருள் கொண்ட நெஞ்சின் ஓர் அண்ணல் பின்னே அகன்றாள் அகல் வான் – தஞ்-வா-கோவை:2 25 362/3

மேல்

பின்னை (3)

காலையில் வா பின்னை என் கையதாகும் நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 100/4
பேணா மகிழ்ந்து பெரும் துயில் ஏற்றவள் பின்னை நின்னை – தஞ்-வா-கோவை:1 16 246/3
அடல் மா களிற்று அன்ப நின்னை_அன்னார் பின்னை என்னை என்னார் – தஞ்-வா-கோவை:2 21 314/3

மேல்