வி – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விசய 1
விட்டு 1
விடம் 2
விடலை 2
விடாத 1
விடாது 1
விடார் 1
விடுத்து 2
விடுப்பான் 1
விடை 1
விண் 5
விண்டார் 1
விண்ணோர் 1
வித்த 1
வித்தகம் 2
வித்தி 1
வித்திய 1
வித்து 1
வித்தும் 1
விதம்விதமாய் 1
விதி 1
விதித்திலனே 1
விதித்து 1
விந்தை 6
விந்தை_மங்கை 1
விம் 1
விம்ம 1
விம்மா 1
விம்மி 1
விம்மும் 1
வியப்பு 1
வியராமல் 1
வியல் 1
வியன் 3
விரகமும் 1
விரல் 2
விரவா 1
விரவும் 1
விராய 1
விரி 1
விருந்தினர்க்கு 1
விருந்தினராய் 1
விருந்து 3
விருப்பு 1
விரும்பினரே 1
விரும்பினையேல் 1
விரும்பு 1
விரும்பும் 1
விரை 7
விரைந்து 1
விரையில் 1
வில் 6
வில்லானொடும் 1
வில்லி 1
வில்லின் 1
வில்லும் 1
விலங்கும் 1
விலுடன் 1
விலையாக 1
விழவு 1
விழி 23
விழி_அனையாள் 1
விழிக்கு 1
விழிக்கும் 1
விழியாய் 6
விழியால் 1
விழுப்புண்ணின் 1
விழைதல் 1
விளக்கா 2
விளக்காம் 1
விளக்கிய 1
விளங்கனி 1
விளங்கிய 1
விளங்கு 2
விளங்கு_இழையே 1
விளங்குக 1
விளங்குதலால் 1
விளங்கும் 1
விளம்பி 2
விளம்புதி 1
விளர் 1
விளர்ப்பது 1
விளர்ப்பு 1
விளாவ 1
விளைக்கும் 1
விளைத்து 1
விளைந்தது 1
விளையாடிய 2
விளையாடு 1
விளையாடுக 2
விளையாடுகம் 1
விளையாடும் 5
விளையாடும்-கொல் 1
வினவி 1
வினாவி 3
வினையகத்து 1
வினையால் 1
வினையேன் 3

விசய (1)

வீங்கிய மா முலை மேவுதும் யாம் விசய கொடி மேல் – தஞ்-வா-கோவை:1 2 5/2

மேல்

விட்டு (1)

வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்து – தஞ்-வா-கோவை:1 9 77/3

மேல்

விடம் (2)

விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும் – தஞ்-வா-கோவை:1 2 10/2
விடம் வார் கணை விழி மெல் இயல் மாதரை மேதினியோர் – தஞ்-வா-கோவை:1 13 170/1

மேல்

விடலை (2)

மிக நல்லர் என்பது மன்பதை தேற விடலை பின்னே – தஞ்-வா-கோவை:2 22 328/3
வேளே அனைய விடலை பின்னே சுரம் மீண்டு இனி நம் – தஞ்-வா-கோவை:2 23 353/2

மேல்

விடாத (1)

வேரி அம் தொங்கல் விரை கமழ் மார்ப விடாத அம்பல் – தஞ்-வா-கோவை:2 19 285/2

மேல்

விடாது (1)

திரையும் குயிலும் விடாது எழும் ஓசை செவிமடுத்தே – தஞ்-வா-கோவை:3 27 371/4

மேல்

விடார் (1)

கல் ஆர் வியன் புனம் காவல் விடார் அவர் காணின் மிக – தஞ்-வா-கோவை:1 10 96/2

மேல்

விடுத்து (2)

வியராமல் இல்லின் விடுத்து அகன்றாளை மென் பூம் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 18 280/2
செரு மகள் ஏயும் புயத்து அயலான் பின் செல விடுத்து என் – தஞ்-வா-கோவை:2 22 343/1

மேல்

விடுப்பான் (1)

சுற்றும்_குழல் நின் பிணி விடுப்பான் வந்து தோன்றினர் பார் – தஞ்-வா-கோவை:3 31 416/1

மேல்

விடை (1)

விடை ஆன் மிசை வரும் மேரு_வில்லானொடும் மேழி வென்றி – தஞ்-வா-கோவை:1 10 125/1

மேல்

விண் (5)

விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும் – தஞ்-வா-கோவை:1 2 10/2
விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார் – தஞ்-வா-கோவை:1 9 64/3
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல் அம் கழி சூழ் – தஞ்-வா-கோவை:1 15 222/1
விண் மேல் அமரர் விரும்பு அமராவதி வெள்ள முந்நீர் – தஞ்-வா-கோவை:3 27 375/1
விண் காவல் கொண்ட திலோத்தமை தான் முதல் மெல்_இயலார் – தஞ்-வா-கோவை:3 30 411/1

மேல்

விண்டார் (1)

விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 15 209/1

மேல்

விண்ணோர் (1)

மேவும் செய்குன்றமும் சோலையுமாக பொன் வெற்பும் விண்ணோர்
காவும் தரவும் வல்லேன் எனை ஆளும் கடைக்கண் வைத்தே – தஞ்-வா-கோவை:1 10 81/3,4

மேல்

வித்த (1)

சொல் வித்த என்று அழல் ஆர் சுரம் போக துணிந்தனரே – தஞ்-வா-கோவை:3 29 408/4

மேல்

வித்தகம் (2)

இவ் வித்தகம் இவட்கு எய்தியது எவ்வணம் எவ்வுலகும் – தஞ்-வா-கோவை:2 19 287/1
மல் வித்தகம் கொண்ட தோளுடையான் தஞ்சைவாணன் தொல் சீர் – தஞ்-வா-கோவை:3 29 408/1

மேல்

வித்தி (1)

இளம் கொங்கை கொண்டு உழுது ஈரம் கொள் மார்பின் முத்து ஏற்ப வித்தி
விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர் – தஞ்-வா-கோவை:3 27 372/2,3

மேல்

வித்திய (1)

திரு வித்திய தஞ்சைவாணன் சிலம்பும் இ சிற்றிலும் பேர் – தஞ்-வா-கோவை:1 12 158/2

மேல்

வித்து (1)

நல் வித்து அகன் புவி நாவில் வைத்தோன் வையைநாடு_அனையாய் – தஞ்-வா-கோவை:3 29 408/2

மேல்

வித்தும் (1)

மண்ணும் பயில் வித்தும் ஒன்றினும் சந்திரவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 112/1

மேல்

விதம்விதமாய் (1)

வெரு இருந்து எம் பதிக்கு ஏக ஒண்ணாது விதம்விதமாய்
வரு விருந்து என்றும் புரந்து அருள் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 13 163/2,3

மேல்

விதி (1)

மின்னிய மாமை விளர்ப்பது என்னே விதி கூட்ட நம்மில் – தஞ்-வா-கோவை:1 3 22/2

மேல்

விதித்திலனே (1)

ஒன்றா விதித்திலனே உயிர் போல உடம்பையுமே – தஞ்-வா-கோவை:1 11 149/4

மேல்

விதித்து (1)

மயனார் விதித்து அன்ன மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 135/1

மேல்

விந்தை (6)

இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை
தனம் காவலன் தஞ்சைவாணன் நல் நாட்டு இவர் தங்களில் தாம் – தஞ்-வா-கோவை:1 9 80/2,3
வாவும் கலை விந்தை காவலன் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 10 81/1
வெயில் உந்து அரவிந்த மென் மலர் அன்னமும் விந்தை வெற்றி – தஞ்-வா-கோவை:1 13 179/1
மின்னாது இடித்து என அன்னை கொண்டாள் வெறி விந்தை_மங்கை – தஞ்-வா-கோவை:1 15 225/1
கொன்னே இரங்கி வருந்தல் கண்டாய் கொற்ற நேமி விந்தை
மன்னே என வந்த வாணன் தென்மாறை வரவு உணர்த்த – தஞ்-வா-கோவை:1 18 271/2,3
ஊரோ அணியது அன்று ஒண்_தொடியாய் விந்தை உண்கண்களோ – தஞ்-வா-கோவை:2 21 306/2

மேல்

விந்தை_மங்கை (1)

மின்னாது இடித்து என அன்னை கொண்டாள் வெறி விந்தை_மங்கை
மன் ஆண்மை மன்னிய வாணன் தென்மாறை வரையில் வண்டு யாழ் – தஞ்-வா-கோவை:1 15 225/1,2

மேல்

விம் (1)

விம் ஊர் துயர் கடல் வெள்ளத்துள்ளே எம்மை வீழ்வித்து நீர் – தஞ்-வா-கோவை:1 14 197/1

மேல்

விம்ம (1)

கொத்து அலர் ஓதி அம் கொம்பர்_அன்னாள் பொங்கு கொங்கை விம்ம
முத்து அலர் ஆகம் முயங்கினம் யாம் முழு நீர் விழி போல் – தஞ்-வா-கோவை:3 33 425/1,2

மேல்

விம்மா (1)

விம்மா வருந்துவது என் பிரிந்தாரின் விளங்கு_இழையே – தஞ்-வா-கோவை:3 28 379/4

மேல்

விம்மி (1)

சூது அலந்து ஒல்க விம்மி திரள் மா முலை தோகையரே – தஞ்-வா-கோவை:2 23 352/4

மேல்

விம்மும் (1)

சந்தனம் தோய்ந்து தயங்கு முத்தாரம் தரித்து விம்மும்
நம் தனம் தாங்கி நடுங்கு இடை போல நடந்து இங்ஙனே – தஞ்-வா-கோவை:2 21 322/1,2

மேல்

வியப்பு (1)

மேல் கொண்டவாறும் நம் ஊர் வந்தவாறும் வியப்பு எனக்கே – தஞ்-வா-கோவை:3 33 424/4

மேல்

வியராமல் (1)

வியராமல் இல்லின் விடுத்து அகன்றாளை மென் பூம் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 18 280/2

மேல்

வியல் (1)

வியல் ஊர் எயில்புறம் நொச்சியின் ஊழ் மலர் வீழ்-தொறு எண்ணி – தஞ்-வா-கோவை:1 14 201/1

மேல்

வியன் (3)

கல் ஆர் வியன் புனம் காவல் விடார் அவர் காணின் மிக – தஞ்-வா-கோவை:1 10 96/2
மேவலர் போலும் கழற்று உரையாளர் வியன் அறிவே – தஞ்-வா-கோவை:1 11 146/4
வெம் சுர நாடு வியன் சுரலோகமும் வெம் கடும் கான் – தஞ்-வா-கோவை:2 22 335/1

மேல்

விரகமும் (1)

புணரா விரகமும் போகா இரவும் புணர் முலை மேல் – தஞ்-வா-கோவை:1 15 214/1

மேல்

விரல் (2)

விரல் என்று-கொல் செறித்தார் நெறி தாழ் குழல் மெல்_இயலே – தஞ்-வா-கோவை:1 14 195/4
விரல் கால இன்று மெலியன்-மின்னே சென்று மேதினி காத்து – தஞ்-வா-கோவை:3 30 413/2

மேல்

விரவா (1)

மெய் நாண் உயிரினும் மிக்கது என்றால் விரவா அரசர் – தஞ்-வா-கோவை:2 21 311/2

மேல்

விரவும் (1)

குரவும் கணியும் விரவும் வெற்பா வெய்ய குஞ்சரம் மேல் – தஞ்-வா-கோவை:1 16 239/1

மேல்

விராய (1)

வில் ஏய் குறும்பும் இறும்பும் எவ்வாயும் விராய வெவ் வாய் – தஞ்-வா-கோவை:1 18 263/1

மேல்

விரி (1)

அணியும் சுடர் விரி சங்கு பங்கேருகம் ஆடகமும் – தஞ்-வா-கோவை:1 6 32/1

மேல்

விருந்தினர்க்கு (1)

வெம் சூட்டு இழுது அன்ன ஊனும் பைம் தேனும் விருந்தினர்க்கு
செம் சூட்டு இளகு பொன் போல் தினை மூரலும் தெள் அமுதே – தஞ்-வா-கோவை:1 10 141/3,4

மேல்

விருந்தினராய் (1)

மெய் வண்ணம் வாடி வெறிதே வருந்தி விருந்தினராய்
கை வண்ண வார் தழை கொண்டு சென்றார் தமை கண்டுகண்டே – தஞ்-வா-கோவை:1 10 120/3,4

மேல்

விருந்து (3)

வரு விருந்து என்றும் புரந்து அருள் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 13 163/3
ஒரு விருந்து எங்களை போல் எய்துமோ கங்குல் உங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 13 163/4
புரவே எதிர்ந்த நமக்கு விருந்து இன்று போல என்றும் – தஞ்-வா-கோவை:3 28 396/1

மேல்

விருப்பு (1)

விருப்பு ஆகிய குறை உள்ளது எல்லாம் சொல்லி வேண்டுக நீ – தஞ்-வா-கோவை:1 10 88/3

மேல்

விரும்பினரே (1)

மெய் உற்ற நோய் தணிப்பான் வெறியாடல் விரும்பினரே – தஞ்-வா-கோவை:1 16 231/4

மேல்

விரும்பினையேல் (1)

விரை அக நாள்_மலர் மெல் இயல் மாதை விரும்பினையேல்
வரையக நாட வரைந்துகொள் நீ தஞ்சைவாணன் முந்நீர் – தஞ்-வா-கோவை:1 10 94/1,2

மேல்

விரும்பு (1)

விண் மேல் அமரர் விரும்பு அமராவதி வெள்ள முந்நீர் – தஞ்-வா-கோவை:3 27 375/1

மேல்

விரும்பும் (1)

கண்டோர் விரும்பும் கரும் பனையாரை கடல் துறைவா – தஞ்-வா-கோவை:1 10 107/2

மேல்

விரை (7)

கான கடி வரை-வாய் விரை நாள்_மலர் கா அகத்தே – தஞ்-வா-கோவை:1 2 17/4
விரை அக நாள்_மலர் மெல் இயல் மாதை விரும்பினையேல் – தஞ்-வா-கோவை:1 10 94/1
விரை ஊர் குழலியர் தந்த சிந்தாகுல வெள்ளம் நிறை – தஞ்-வா-கோவை:1 10 102/1
நறை அலர் ஆ விரை போது இசையா திசை நால் முகத்தும் – தஞ்-வா-கோவை:1 10 105/1
மேகம் தரும் மின் இடை அன்னமே விரை நாள்_மலர் வேய் – தஞ்-வா-கோவை:1 13 173/2
விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 15 209/1
வேரி அம் தொங்கல் விரை கமழ் மார்ப விடாத அம்பல் – தஞ்-வா-கோவை:2 19 285/2

மேல்

விரைந்து (1)

விலங்கும் படிறு செய்யா குன்ற நாட விரைந்து அளிப்பாய் – தஞ்-வா-கோவை:1 16 243/3

மேல்

விரையில் (1)

விரையில் களவை எல்லாம் அறிந்தாள் அன்னை மெய்யுறவே – தஞ்-வா-கோவை:1 16 230/4

மேல்

வில் (6)

வில் மலை வேல் அன்ன நல் நுதல் வாள் கண்ணி வேட்கை எண்ணாள் – தஞ்-வா-கோவை:1 2 16/1
வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்து – தஞ்-வா-கோவை:1 9 77/3
வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல – தஞ்-வா-கோவை:1 10 89/1
அம்பு உக வில் வணக்கிய வாணன் தென்மாறை நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 136/3
வில் ஏய் குறும்பும் இறும்பும் எவ்வாயும் விராய வெவ் வாய் – தஞ்-வா-கோவை:1 18 263/1
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா – தஞ்-வா-கோவை:3 28 386/3

மேல்

வில்லானொடும் (1)

விடை ஆன் மிசை வரும் மேரு_வில்லானொடும் மேழி வென்றி – தஞ்-வா-கோவை:1 10 125/1

மேல்

வில்லி (1)

மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 15 221/1

மேல்

வில்லின் (1)

வில்லின் கொடிய புருவ மின்னே என் விளம்புதி நீ – தஞ்-வா-கோவை:2 21 313/2

மேல்

வில்லும் (1)

கைக்கும் களம் கெழு பாசறையூடு கயலும் வில்லும்
மொய்க்கும் சுடர் இள அம்புலிதானும் முயங்கி எல்லா – தஞ்-வா-கோவை:3 33 423/2,3

மேல்

விலங்கும் (1)

விலங்கும் படிறு செய்யா குன்ற நாட விரைந்து அளிப்பாய் – தஞ்-வா-கோவை:1 16 243/3

மேல்

விலுடன் (1)

புயலே சுமந்து பிறையே அணிந்து பொரு விலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின் – தஞ்-வா-கோவை:1 1 1/1,2

மேல்

விலையாக (1)

முந்நீர் உலகும் கொள்ளார் விலையாக முலையினுக்கே – தஞ்-வா-கோவை:2 21 305/4

மேல்

விழவு (1)

செந்நீர் விழவு அணி நின் நகர்க்கே கொண்டு சேர்ந்து அருள் மற்று – தஞ்-வா-கோவை:2 21 305/2

மேல்

விழி (23)

நல்லார் விழி போல் இருந்தும் அளி எனும் நாமம் பெற்றும் – தஞ்-வா-கோவை:1 2 8/1
சென்று உந்து சேல் விழி மின்னை முன் நாள் தந்த தெய்வம் நமக்கு – தஞ்-வா-கோவை:1 7 34/3
ஆவி கமலத்து அமர் அன்னமே நின் அயில் விழி போல் – தஞ்-வா-கோவை:1 7 38/2
போது அளவா விழி என்னும் என் ஆசை புறத்து அளவா – தஞ்-வா-கோவை:1 8 46/3
கனமே குழல் செங்கயலே விழி மொழி கார் குயிலே – தஞ்-வா-கோவை:1 8 49/1
மானே விழி முகம் மா மதியே தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 52/2
பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காம பிணி-தனக்கு – தஞ்-வா-கோவை:1 10 101/3
மான் வந்த வாள் விழி வஞ்சிக்கு நீ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 111/2
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின் – தஞ்-வா-கோவை:1 10 137/1
ஏ அலர் ஏய் விழி மாந்தளிர் மேனியர் ஏனல் இனி – தஞ்-வா-கோவை:1 11 155/1
விடம் வார் கணை விழி மெல் இயல் மாதரை மேதினியோர் – தஞ்-வா-கோவை:1 13 170/1
மயிலும் பயில் புயல் வாணன் தென்மாறை நின் வாள் விழி போல் – தஞ்-வா-கோவை:1 13 179/2
செல் காவி அன்ன விழி திருவே நின் திருமனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 185/4
வாளினும் நீள் விழி வாள்_நுதலாய் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 15 216/1
கற்பு அழியாமலும் காரணமாக கயல்_விழி நின் – தஞ்-வா-கோவை:1 15 227/2
புரை கேழ் மதர் விழி கோங்கு அரும்பு ஏர் முலை பூசல் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 248/3
விழி குழியும்படி தேர் வழி பார்த்தனை வீழ்ந்து வண்டு – தஞ்-வா-கோவை:1 18 273/1
தேர் அணி வென்ற செழும் புகர் வேல் விழி தேன் இனம் சூழ் – தஞ்-வா-கோவை:2 20 289/3
மான் ஆர் விழி_அனையாள் விளையாடிய வண்டல் கண்டே – தஞ்-வா-கோவை:2 22 332/4
வாள் ஏய் விழி நின் மயில்_அனையாள் தஞ்சை வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 23 353/1
மை அணி வேல் விழி வாள்_நுதல் கூர்ந்தது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 390/1
அரவு ஏய் நுடங்கு இடையாள் விழி ஊர் சிவப்பு ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:3 28 396/4
முத்து அலர் ஆகம் முயங்கினம் யாம் முழு நீர் விழி போல் – தஞ்-வா-கோவை:3 33 425/2

மேல்

விழி_அனையாள் (1)

மான் ஆர் விழி_அனையாள் விளையாடிய வண்டல் கண்டே – தஞ்-வா-கோவை:2 22 332/4

மேல்

விழிக்கு (1)

வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல – தஞ்-வா-கோவை:1 10 89/1

மேல்

விழிக்கும் (1)

செம் கேழ் விழிக்கும் மொழிக்கும் பகை திருப்பாற்கடலும் – தஞ்-வா-கோவை:1 12 161/1

மேல்

விழியாய் (6)

செவ் வண்ண வேல்_விழியாய் தஞ்சைவாணன் தென்மாறை நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 10 120/1
மையும் கலந்து உண்ட வாள்_விழியாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 10 124/3
தோய் அம் புகர் இணை வேல் விழியாய் நின் துணையுடனே – தஞ்-வா-கோவை:1 10 136/4
பொருகின்ற செங்கயல் போல் விழியாய் பண்டு போய நின் கை – தஞ்-வா-கோவை:1 18 276/1
சேல் அன்ன நீள்_விழியாய் தெரியாது அன்பர் சிந்தனை – தஞ்-வா-கோவை:2 21 309/4
மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர் – தஞ்-வா-கோவை:3 27 370/2

மேல்

விழியால் (1)

அலை பயில் ஆல் விழியால் எனது ஆவி அணங்கினளே – தஞ்-வா-கோவை:1 10 109/4

மேல்

விழுப்புண்ணின் (1)

வெவ் வேல் எறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியது ஓர் – தஞ்-வா-கோவை:1 10 113/1

மேல்

விழைதல் (1)

வெறுத்தார் ஒறுத்து உரை மேலும் நம் கேளிர் விழைதல் இன்றி – தஞ்-வா-கோவை:2 22 324/1

மேல்

விளக்கா (2)

மின்னே அயிலொடு மின் விளக்கா வந்த வெற்பரை நாம் – தஞ்-வா-கோவை:1 13 175/1
அஞ்சாது செம் கை அயில் விளக்கா அணங்கின் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 16 244/2

மேல்

விளக்காம் (1)

சுடர் விளக்காம் மடவார் குழை மாணிக்கமே – தஞ்-வா-கோவை:1 13 189/4

மேல்

விளக்கிய (1)

வேளாண் மரபு விளக்கிய வாணன் மின் ஆர் கழல் சூழ் – தஞ்-வா-கோவை:3 28 382/1

மேல்

விளங்கனி (1)

விளங்கனி போல் வறிதா நிறை வாங்கிய மென்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 56/4

மேல்

விளங்கிய (1)

ஒளி போல் விளங்கிய வெண் மணல் யாறும் உவந்து கண்டு – தஞ்-வா-கோவை:2 21 316/3

மேல்

விளங்கு (2)

விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர் – தஞ்-வா-கோவை:3 27 372/3
விம்மா வருந்துவது என் பிரிந்தாரின் விளங்கு_இழையே – தஞ்-வா-கோவை:3 28 379/4

மேல்

விளங்கு_இழையே (1)

விம்மா வருந்துவது என் பிரிந்தாரின் விளங்கு_இழையே – தஞ்-வா-கோவை:3 28 379/4

மேல்

விளங்குக (1)

போல் வண் தமிழ் மன்னர் போற்ற விளங்குக பொன் கொழிக்கும் – தஞ்-வா-கோவை:1 18 277/2

மேல்

விளங்குதலால் (1)

விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார் – தஞ்-வா-கோவை:1 9 64/3

மேல்

விளங்கும் (1)

கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல்-வாய் விளங்கும்
மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே – தஞ்-வா-கோவை:1 15 222/3,4

மேல்

விளம்பி (2)

விளர் ஆர் திருநுதல் அன்னைக்கு ஒர் மாற்றம் விளம்பி உய்ந்தேன் – தஞ்-வா-கோவை:1 16 228/3
வெண்குன்று எறிந்த செவ்வேளை இவ்வாறு என் விளம்பி – தஞ்-வா-கோவை:2 20 299/4

மேல்

விளம்புதி (1)

வில்லின் கொடிய புருவ மின்னே என் விளம்புதி நீ – தஞ்-வா-கோவை:2 21 313/2

மேல்

விளர் (1)

விளர் ஆர் திருநுதல் அன்னைக்கு ஒர் மாற்றம் விளம்பி உய்ந்தேன் – தஞ்-வா-கோவை:1 16 228/3

மேல்

விளர்ப்பது (1)

மின்னிய மாமை விளர்ப்பது என்னே விதி கூட்ட நம்மில் – தஞ்-வா-கோவை:1 3 22/2

மேல்

விளர்ப்பு (1)

மெலிகின்ற சிந்தையும் மேனியும் கொண்டு விளர்ப்பு எனும் பேர் – தஞ்-வா-கோவை:3 31 415/2

மேல்

விளாவ (1)

தன் மேல் விளாவ உண்டோ தரை மேல் ஒரு தண் புனலே – தஞ்-வா-கோவை:1 8 47/4

மேல்

விளைக்கும் (1)

விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார் – தஞ்-வா-கோவை:1 9 64/3

மேல்

விளைத்து (1)

விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர் – தஞ்-வா-கோவை:3 27 372/3

மேல்

விளைந்தது (1)

வினையால் விளைந்தது என்றே வெறிதே அன்ப மீண்டனளே – தஞ்-வா-கோவை:1 14 199/4

மேல்

விளையாடிய (2)

கார் உறை சோலையில் யாம் விளையாடிய காலையிலே – தஞ்-வா-கோவை:2 20 300/4
மான் ஆர் விழி_அனையாள் விளையாடிய வண்டல் கண்டே – தஞ்-வா-கோவை:2 22 332/4

மேல்

விளையாடு (1)

இனி நாம் அகன்று இளையார் விளையாடு இடம் எய்துதுமே – தஞ்-வா-கோவை:1 10 138/4

மேல்

விளையாடுக (2)

நின்றே வருவல் இங்கே விளையாடுக நீ சிறிதே – தஞ்-வா-கோவை:1 3 24/4
வேறு ஓர் பொதும்பரில் போய் விளையாடுக வேல் படையான் – தஞ்-வா-கோவை:1 16 236/2

மேல்

விளையாடுகம் (1)

பூ மாதவி பந்தர்-வாய் விளையாடுகம் போதுகவே – தஞ்-வா-கோவை:1 10 131/4

மேல்

விளையாடும் (5)

இழை விளையாடும் இள முலை சாயற்கு இடைந்த மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 16 238/1
கழை விளையாடும் கடி புனம் காத்தும் கலை அகலாது – தஞ்-வா-கோவை:1 16 238/2
உழை விளையாடும் உயர் சிலம்பா இன்னும் உன் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 16 238/3
மழை விளையாடும் மதில் தஞ்சைவாணன் மலயத்திலே – தஞ்-வா-கோவை:1 16 238/4
போயே தெருவில் தனி விளையாடும் புதல்வன் புல்ல – தஞ்-வா-கோவை:3 28 400/1

மேல்

விளையாடும்-கொல் (1)

வேரி தடம் பொழில்-வாய் விளையாடும்-கொல் மேவி நின்றே – தஞ்-வா-கோவை:1 8 51/4

மேல்

வினவி (1)

நம்-பால் நலன் உண்ட நம் பாதகர்-தம் நகர் வினவி
தம்-பால் உடன் சென்று சார்குவமோ தரியாரை வென்று – தஞ்-வா-கோவை:1 15 212/1,2

மேல்

வினாவி (3)

ஊர் ஏது என முன் வினாவி பின் வேறொன்று உரைப்பது எல்லாம் – தஞ்-வா-கோவை:1 9 75/3
அவாவினன் ஆகி ஒர் மானை வினாவி வந்தானை இன்று இ – தஞ்-வா-கோவை:1 10 119/3
கலை வந்ததோ என வந்து வினாவி நம் காரிகைக்கு – தஞ்-வா-கோவை:2 20 304/3

மேல்

வினையகத்து (1)

வினையகத்து அல்குதல் செல்லுவரேனும் அவ் வேந்தர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:3 27 376/3

மேல்

வினையால் (1)

வினையால் விளைந்தது என்றே வெறிதே அன்ப மீண்டனளே – தஞ்-வா-கோவை:1 14 199/4

மேல்

வினையேன் (3)

பிரியும் பொழுது எல்லி-வாய் வினையேன் மனம் பின் செல்வதே – தஞ்-வா-கோவை:1 15 220/4
புல்லும் துணைவியர் போல் வினையேன் பெற்ற பூவை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 330/3
ஆமே நடக்க அரு வினையேன் பெற்ற அம் அனைக்கே – தஞ்-வா-கோவை:2 22 336/4

மேல்