கே – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கேகயம் (1)

புன கேகயம் அன்ன நின் அடி போற்றி புகன்று கன்றும் – தஞ்-வா-கோவை:3 28 394/3

மேல்

கேச (1)

நிரை கேச வஞ்சி அஞ்சேல் என்று தேற்றுதல் நின் கடனே – தஞ்-வா-கோவை:1 17 248/4

மேல்

கேட்கலுற்றேன் (1)

அறியாமையான் ஒன்று கேட்கலுற்றேன் உம்மை ஆவது ஒன்றும் – தஞ்-வா-கோவை:2 20 298/1

மேல்

கேட்கிலர் (1)

செம் கண் இரும் குயில் ஆர்ப்பது கேட்கிலர் செந்தமிழோர் – தஞ்-வா-கோவை:3 33 421/2

மேல்

கேட்டருள் (1)

கிஞ்சுக வாய் வஞ்சி கேட்டருள் நீயும் கிளை தமிழோர் – தஞ்-வா-கோவை:1 11 150/2

மேல்

கேட்டனம் (1)

கேள் ஏய் பதி வரும் என்ன நல்லோர் சொல்ல கேட்டனம் இ – தஞ்-வா-கோவை:2 23 353/3

மேல்

கேட்டு (2)

ஒவ்வா அலரையும் கேட்டு இருவீரும் ஒருதனியே – தஞ்-வா-கோவை:1 17 258/4
ஆர்த்தது கேட்டு வந்தார் பொருள் தேட அகன்றவரே – தஞ்-வா-கோவை:3 33 422/4

மேல்

கேட்டும் (1)

இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய் – தஞ்-வா-கோவை:1 18 266/3

மேல்

கேண்மை (3)

உடன் ஆய கேண்மை ஒழிந்து அறியார் இவ் உலகத்திலே – தஞ்-வா-கோவை:2 21 314/4
அனை கேண்மை நண்ணிய அண்ணல் பின்னாக நம் அன்னை இன்று இ – தஞ்-வா-கோவை:2 24 357/2
உண்டாகிய பழம் கேண்மை இந்நாளும் ஒழிந்திலரே – தஞ்-வா-கோவை:3 28 406/4

மேல்

கேண்மையை (1)

இருதலைப்புள்ளின் இயைந்த நும் கேண்மையை எண்ணி எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 17 257/2

மேல்

கேதகை (2)

கேதகை என்னும் நல்லாய் கொண்கர் மாலை கிடைத்தது என்றே – தஞ்-வா-கோவை:1 14 194/4
திரை கேதகை மணம் கூடும் எம் பாடியில் சென்றுவந்து யான் – தஞ்-வா-கோவை:1 17 248/1

மேல்

கேழ் (7)

உமிழ் தண் தரள பவள செம் கேழ் வள்ளத்து உள் இருக்கும் – தஞ்-வா-கோவை:1 2 13/3
குலை தொடுத்து ஓங்கு பைம் கேழ் பூக நாக குழாம் கவர்ந்தே – தஞ்-வா-கோவை:1 10 118/4
செம் கேழ் விழிக்கும் மொழிக்கும் பகை திருப்பாற்கடலும் – தஞ்-வா-கோவை:1 12 161/1
புரை கேழ் மதர் விழி கோங்கு அரும்பு ஏர் முலை பூசல் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 248/3
சுனை கேழ் நனை கழுநீர் குழலாய் சில தூதர் இன்னே – தஞ்-வா-கோவை:2 24 357/4
புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ்
வரி ஆர் சிலை அண்ணலே தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:3 27 368/3,4
நயம் கேழ் பெரு வளம் நல்கும் நல் ஊர நயந்து நண்ணி – தஞ்-வா-கோவை:3 28 392/2

மேல்

கேழல் (1)

கொடுவரி கேழல் குழாம் பொரு கொல்லையும் குஞ்சரம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 165/2

மேல்

கேள் (3)

அல்லி அம்போருகை அன்ன நின் கேள் அருள் ஆசையில் நின் – தஞ்-வா-கோவை:1 14 200/3
கேள் ஏய் பதி வரும் என்ன நல்லோர் சொல்ல கேட்டனம் இ – தஞ்-வா-கோவை:2 23 353/3
பொன்னை புணர்ந்து நும் கேள் முன்னர் நீ பொன் புனைந்ததுவே – தஞ்-வா-கோவை:2 24 359/4

மேல்

கேள்-தொறும் (1)

கோள்மா குமிறும் கொடும் குரல் கேள்-தொறும் கூர் கணையால் – தஞ்-வா-கோவை:2 22 338/2

மேல்

கேள்வர் (2)

எல்லி அம் போது சென்றேன் என்று கேள்வர் இயம்பினரே – தஞ்-வா-கோவை:1 14 200/4
நெஞ்சை பொருள்-வயின் வைத்து நம் கேள்வர் நல் நீள் மதியின் – தஞ்-வா-கோவை:3 33 420/3

மேல்

கேள்வன் (1)

பூமாது கேள்வன் புகழ் தஞ்சைவாணன் பொருப்பில் இனி – தஞ்-வா-கோவை:2 24 355/3

மேல்

கேள்வியர் (1)

தரையகம் நான்மறை கேள்வியர் வேள்வியர் சான்றவர்-தம் – தஞ்-வா-கோவை:1 10 94/3

மேல்

கேளலர் (1)

தொடைக்கு அணி ஆர் தடம் தோளவர் கேளலர் தோகை_அன்னார் – தஞ்-வா-கோவை:1 11 151/1

மேல்

கேளிர் (4)

சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார் – தஞ்-வா-கோவை:1 16 233/3
பாரோ முலைவிலை என்பர் நின் கேளிர் என் பல் கிளை வாழ் – தஞ்-வா-கோவை:2 21 306/1
வெறுத்தார் ஒறுத்து உரை மேலும் நம் கேளிர் விழைதல் இன்றி – தஞ்-வா-கோவை:2 22 324/1
கொண்டானில் துன்னிய கேளிர் மற்று இல்லை குறிப்பின் என்று – தஞ்-வா-கோவை:3 28 406/1

மேல்

கேளிரும் (1)

எனை கேளிரும் நின்று இயற்ற அங்கே மண இன்பம் எய்தி – தஞ்-வா-கோவை:2 24 357/1

மேல்