நா – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 1
நாக 5
நாகம் 2
நாகு 2
நாட்ட 1
நாட்டவர் 1
நாட்டிற்கும் 1
நாட்டு 14
நாட்டுழி 1
நாட 4
நாடர் 2
நாடா 1
நாடி 3
நாடிய 1
நாடினும் 1
நாடு 4
நாடும் 1
நாண் 5
நாண 1
நாணம் 1
நாணமும் 2
நாணி 4
நாணிய 1
நாணில் 1
நாணினும் 1
நாணும் 5
நாப்பண் 1
நாம் 18
நாமம் 2
நாமன் 1
நாயகன் 1
நாரை 1
நால் 1
நாலும் 1
நாவலர்க்கு 1
நாவலரே 1
நாவியும் 1
நாவில் 1
நாள் 37
நாள்-தொறும் 3
நாள்_தழையொடு 1
நாள்_மலர் 7
நாள்_மலர்_ஓதி 1
நாள்_மலரின் 1
நாள்_மலரும் 1
நாள்_மலரே 2
நாள்_அனையான் 1
நாள்களிலே 1
நாளில் 2
நாளின் 1
நாளினும் 2
நாளும் 2
நாளே 1
நாளை 4
நாறு 1
நான் 2
நான்மறை 1
நான்முகத்தோன் 1
நான 2
நானும் 1

நா (1)

மொழி நா அடங்க மொழிந்து அயலாரை முகம் கவிழ்த்தே – தஞ்-வா-கோவை:2 21 315/4

மேல்

நாக (5)

கொலை பயில் நாக குருளையை போல் குறியோன் இருந்த – தஞ்-வா-கோவை:1 10 109/2
குலை தொடுத்து ஓங்கு பைம் கேழ் பூக நாக குழாம் கவர்ந்தே – தஞ்-வா-கோவை:1 10 118/4
நகை கொண்ட வல்லி_அன்னார் எல்லி நாக நறு நிழலே – தஞ்-வா-கோவை:1 13 168/4
நின் நேர் இயல் மயில் கண் துயில் நாக நிழலகத்தே – தஞ்-வா-கோவை:1 13 175/4
நாக புகர் செய்ய புள்ளி பைம் கால் ஞெண்டு நாகு இளம் தண் – தஞ்-வா-கோவை:2 20 293/2

மேல்

நாகம் (2)

கடு வரி நாகம் தவர் மல்கு கல் அளை கானமுமே – தஞ்-வா-கோவை:1 13 165/4
நாகம் தழுவும் குடம்பையின்-வாய் நடுநாள் இரவில் – தஞ்-வா-கோவை:1 13 173/3

மேல்

நாகு (2)

என் மாலுறும் நெஞ்சின் முன் செல நாகு இள ஏறு புல்லி – தஞ்-வா-கோவை:1 18 274/2
நாக புகர் செய்ய புள்ளி பைம் கால் ஞெண்டு நாகு இளம் தண் – தஞ்-வா-கோவை:2 20 293/2

மேல்

நாட்ட (1)

மை நாட்ட வெண் முத்த வாள் நகையாய் தஞ்சைவாணன் மண் மேல் – தஞ்-வா-கோவை:1 13 167/2

மேல்

நாட்டவர் (1)

எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல் – தஞ்-வா-கோவை:1 13 167/1

மேல்

நாட்டிற்கும் (1)

நிலத்திற்கும் மாமணி ஆகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும் – தஞ்-வா-கோவை:1 16 241/2

மேல்

நாட்டு (14)

சரண் மாறை வாணன் தமிழ் தஞ்சை நாட்டு என் தனி உயிர்க்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 2 19/3
தனம் காவலன் தஞ்சைவாணன் நல் நாட்டு இவர் தங்களில் தாம் – தஞ்-வா-கோவை:1 9 80/3
நல்குற்றவை இந்த நாட்டு உள அன்மையின் நல்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 10 98/2
திவாகரனே அன்ன பேரொளி வாணன் தென்மாறை நல் நாட்டு
உவாமதி போலும் ஒளிர் முகத்தாய் என் ஒளிப்பது உன் மேல் – தஞ்-வா-கோவை:1 10 119/1,2
செவ் வண்ண வேல்_விழியாய் தஞ்சைவாணன் தென்மாறை நல் நாட்டு
இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பது அன்றால் நின் இடை என தாம் – தஞ்-வா-கோவை:1 10 120/1,2
தேம் தரு சோலை வெற்பா உங்கள் நாட்டு உறை செல்வியர்க்கே – தஞ்-வா-கோவை:1 13 166/4
உம் நாட்டு அரிவையர் ஆடிடம் சாந்தம் ஒளி இழை பூ – தஞ்-வா-கோவை:1 13 167/3
போர் கடந்த தடம் புய வாணன் தமிழ் தஞ்சை நாட்டு
அம்போருகம் அல்லவோ திருக்கோயில் அணங்கினுக்கே – தஞ்-வா-கோவை:1 13 186/3,4
தேடுகம் வா தஞ்சைவாணன் நல் நாட்டு அன்பர் தேர் வழி நாம் – தஞ்-வா-கோவை:1 17 255/3
மாலை பொழுது வருகுவல் யான் தஞ்சைவாணன் நல் நாட்டு
ஆலை பழனம் அணிந்த எம் ஊர் நும் அகம் குளிர – தஞ்-வா-கோவை:1 18 262/2,3
மால் அன்ன வாணன் தென்மாறை நல் நாட்டு வயல் உகளும் – தஞ்-வா-கோவை:2 21 309/3
தம் நாள் முறைமை தவிர்த்து அருள் வாணன் தமிழ் தஞ்சை நாட்டு
அ நாணமும் மடவாய் கற்பு நோக்க அழகிது அன்றே – தஞ்-வா-கோவை:2 21 311/3,4
இல்லின் கொடிய-கொல்லோ செல்லும் நாட்டு அவ் இரும் சுரமே – தஞ்-வா-கோவை:2 21 313/4
மலை ஆகிய மதில் வையை நல் நாட்டு எங்கை மான் படுக்கும் – தஞ்-வா-கோவை:3 28 393/2

மேல்

நாட்டுழி (1)

நினையீர் பொருட்கு பிரிந்து அயல் நாட்டுழி நின்றுழி வேள்_அனையீர் – தஞ்-வா-கோவை:1 18 278/1

மேல்

நாட (4)

வரையக நாட வரைந்துகொள் நீ தஞ்சைவாணன் முந்நீர் – தஞ்-வா-கோவை:1 10 94/2
நாட தகுவன அல்ல கல் ஆர நறும் தழையே – தஞ்-வா-கோவை:1 10 122/4
கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன் – தஞ்-வா-கோவை:1 16 230/2
விலங்கும் படிறு செய்யா குன்ற நாட விரைந்து அளிப்பாய் – தஞ்-வா-கோவை:1 16 243/3

மேல்

நாடர் (2)

என்னா அசுணம் இறைகொள்ளும் நாடர் எனக்கு அருளால் – தஞ்-வா-கோவை:1 15 225/3
இயமா மணம்புணர் ஈர்ம் துறை நாடர் எதிர்ந்தவர் மேல் – தஞ்-வா-கோவை:2 19 282/2

மேல்

நாடா (1)

நாடா இடம் இல்லை ஞாலத்து அகல்-வயின் நன் கமல – தஞ்-வா-கோவை:2 23 349/2

மேல்

நாடி (3)

மருந்து ஒன்று நாடி அன்றோ வட மேரு வலம்கொள்வதே – தஞ்-வா-கோவை:1 2 9/4
உரையகம் நாடி முன்னிட்டனது ஆகும் உலகியலே – தஞ்-வா-கோவை:1 10 94/4
வழி நாடி நும் பின் வருகுவல் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:2 21 315/2

மேல்

நாடிய (1)

நஞ்சோ அழலோ எனும் சுரமே செல்ல நாடிய என் – தஞ்-வா-கோவை:2 21 308/1

மேல்

நாடினும் (1)

நல்கா இயல்பு அன்னை நாடினும் நாடும் நடந்தருள் நீ – தஞ்-வா-கோவை:1 13 185/2

மேல்

நாடு (4)

கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரை கன்னி பொன் நாண் – தஞ்-வா-கோவை:1 2 18/2
வெம் சுர நாடு வியன் சுரலோகமும் வெம் கடும் கான் – தஞ்-வா-கோவை:2 22 335/1
காடு ஆர் பழன கழனி நல் நாடு கடந்து தன் ஊர் – தஞ்-வா-கோவை:2 23 349/3
மனையறம் பாலித்தும் வாழ்வது அல்லால் தஞ்சைவாணன் நல் நாடு
அனைய வண்டு ஆர் குழல் ஆரணங்கே நமக்கு அன்பர் இ நாள் – தஞ்-வா-கோவை:3 28 381/2,3

மேல்

நாடும் (1)

நல்கா இயல்பு அன்னை நாடினும் நாடும் நடந்தருள் நீ – தஞ்-வா-கோவை:1 13 185/2

மேல்

நாண் (5)

கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரை கன்னி பொன் நாண்
முலை நாம் முயன்று முயங்கினமால் முயன்றால் இனி ஐந்தலைநாக – தஞ்-வா-கோவை:1 2 18/2,3
பொன் நாண் அணி கொங்கை போல வண்டீர் உங்கள் பொய்கை உண்டோ – தஞ்-வா-கோவை:1 3 21/3
ஆற்றும் தலைவர் அரும் துயர் ஆற்றினும் ஆற்றிலன் நாண்
மாற்றும் புனையின் மயில்_அனையாய் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 128/1,2
கன நாண் அணிந்து பொன் கச்சு அற வீசி கதித்து எழுந்த – தஞ்-வா-கோவை:1 16 235/2
மெய் நாண் உயிரினும் மிக்கது என்றால் விரவா அரசர் – தஞ்-வா-கோவை:2 21 311/2

மேல்

நாண (1)

தான் நாண நீடு மதில் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பின் – தஞ்-வா-கோவை:2 22 332/3

மேல்

நாணம் (1)

துறவாத நாணம் துறப்பது வேண்டலின் தொல் உலகில் – தஞ்-வா-கோவை:2 21 310/3

மேல்

நாணமும் (2)

பேணற்கு அரிய நின் பெண்மையும் நாணமும் பேணியவர் – தஞ்-வா-கோவை:1 11 148/1
அ நாணமும் மடவாய் கற்பு நோக்க அழகிது அன்றே – தஞ்-வா-கோவை:2 21 311/4

மேல்

நாணி (4)

முருந்து ஒன்று கோப முகம் கண்டு நாணி முயல் மறு தீர் – தஞ்-வா-கோவை:1 2 9/3
நாவியும் கார் அகில் ஆவியும் தோய்_குழல் நாணி அஞ்சேல் – தஞ்-வா-கோவை:1 3 20/1
நாணி கவிழ்ந்ததனால் அறிந்தாள் அன்னை நம் களவே – தஞ்-வா-கோவை:1 15 210/4
என நாணி நின் பழி தான் மறைத்தாள் அன்ப என்னையுமே – தஞ்-வா-கோவை:1 16 235/4

மேல்

நாணிய (1)

பாணித்தல் இன்றி மதி கண்டு நாணிய பங்கயம் போல் – தஞ்-வா-கோவை:1 15 210/3

மேல்

நாணில் (1)

பன்னக நாணில் கடைந்து இதழ் வார் திரைப்பட்ட நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 387/3

மேல்

நாணினும் (1)

நாணினும் தார் அணி கற்பு நன்று என்று நயந்து முத்தம் – தஞ்-வா-கோவை:2 22 348/1

மேல்

நாணும் (5)

கந்தாரம் நாணும் கனிந்த சொல்லாய் நம் கடி மனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 174/1
நந்தா வன பொய்கை நான் கொய்குவேன் குழல் நாணும் கங்குல் – தஞ்-வா-கோவை:1 13 176/2
தனம் நாணும் நுண் இடை தையல் நல்லாள் பழி சாற்றுவல் யான் – தஞ்-வா-கோவை:1 16 235/3
நவ்வி தொகையின் நாணும் மென் நோக்கி நறை புகையா – தஞ்-வா-கோவை:2 19 287/3
சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா – தஞ்-வா-கோவை:2 21 315/3

மேல்

நாப்பண் (1)

மரு ஆய நாப்பண் மயில் உருவாய் நென்னல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 7 35/1

மேல்

நாம் (18)

தடம்பட்ட வாவியும் சூழ் தஞ்சைவாணன் தமிழ்க்கிரி நாம்
இடம்பட்ட ஆர முலை தடம் தோய்தற்கு இடம் இதுவே – தஞ்-வா-கோவை:1 2 10/3,4
வெறிதே திரிந்து மெலிந்தனம் நாம் உள்ளம் மெல்_இயற்கு – தஞ்-வா-கோவை:1 2 15/2
முலை நாம் முயன்று முயங்கினமால் முயன்றால் இனி ஐந்தலைநாக – தஞ்-வா-கோவை:1 2 18/3
நாம் அ கலவி நலம் கவர் போது நமக்கு அளித்த – தஞ்-வா-கோவை:1 6 33/2
சூது அளவா முலை என்னும் என் நாம் இனி சொல்லுவதே – தஞ்-வா-கோவை:1 8 46/4
பரு மணி நன் கல பாங்கியை நீங்கி அ பாவையை நாம்
மரு மணி வண்டு உறை தார் வாணன் மாறை மருவுதுமே – தஞ்-வா-கோவை:1 9 69/3,4
நாம் ஆவி மூழ்கி நறு மலர் குற்று நந்தாவனத்து – தஞ்-வா-கோவை:1 10 131/1
இனி நாம் அகன்று இளையார் விளையாடு இடம் எய்துதுமே – தஞ்-வா-கோவை:1 10 138/4
மின்னே அயிலொடு மின் விளக்கா வந்த வெற்பரை நாம்
பொன்னே எதிர்கொள போதுகம் வா புவி ஏழினுக்கும் – தஞ்-வா-கோவை:1 13 175/1,2
நாம் கண்ணுறங்கினுமோ உறங்கார் கண் நகரவரே – தஞ்-வா-கோவை:1 14 204/4
வம்பு ஏறு கொங்கை மயில்_இயல் நாம் அஞ்ச மன்ற மராம் – தஞ்-வா-கோவை:1 14 207/3
நெறியார் அருள் பெற நாம் நடுநாளிடை நீந்துதுமே – தஞ்-வா-கோவை:1 15 213/4
தேடுகம் வா தஞ்சைவாணன் நல் நாட்டு அன்பர் தேர் வழி நாம்
சூடுகம் வா கவலாது அவர் கானல் துறை மலரே – தஞ்-வா-கோவை:1 17 255/3,4
இனம் சேர்ந்து அகவின நாம் தனி வாடி இருத்தல் கண்டே – தஞ்-வா-கோவை:1 18 269/4
அன்புற்ற காதலர் ஆதலினால் அகன்றார் என நாம்
துன்புற்ற காலத்து அவரும் உறாரல்லர் தோழி சொல்லும் – தஞ்-வா-கோவை:1 18 272/2,3
அரம் மான கல் உன் அடி மலர் ஆற்றல ஆதலின் நாம்
சுரம் ஆறும் எல்லை நல்லாய் இருப்பாம் இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:2 21 317/3,4
என்னாம் இயம்புவது யாய்க்கு இனி நாம் அன்னை இன்று தம் இல் – தஞ்-வா-கோவை:2 24 356/1
தஞ்சை பதி அண்ணல் எண்ணலர் போல் தனி நாம் இருக்க – தஞ்-வா-கோவை:3 33 420/2

மேல்

நாமம் (2)

வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வண்டு – தஞ்-வா-கோவை:1 2 7/1
நல்லார் விழி போல் இருந்தும் அளி எனும் நாமம் பெற்றும் – தஞ்-வா-கோவை:1 2 8/1

மேல்

நாமன் (1)

நந்து சுற்றும் கடல் ஞாலம் எல்லாம் புகழ் நாமன் வளர் – தஞ்-வா-கோவை:1 12 157/1

மேல்

நாயகன் (1)

தனி நாயகன் தஞ்சைவாணன் தண் சாரல் தனித்து நில்லாது – தஞ்-வா-கோவை:1 10 138/3

மேல்

நாரை (1)

செயிராத அன்னை செயிர்த்தனளோ செறி நாரை திண் போர் – தஞ்-வா-கோவை:2 20 288/2

மேல்

நால் (1)

நறை அலர் ஆ விரை போது இசையா திசை நால் முகத்தும் – தஞ்-வா-கோவை:1 10 105/1

மேல்

நாலும் (1)

நாலும் சிலம்பர் நவ மணி ஆழி நறவு உண் வண்டு – தஞ்-வா-கோவை:1 14 195/2

மேல்

நாவலர்க்கு (1)

நான குழலியை நான் இன்று பெற்றது நாவலர்க்கு
தான களிறு தரும் புயல் வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 2 17/2,3

மேல்

நாவலரே (1)

நாவலரே பெற நல்கும் கை மேக நறும் குவளை – தஞ்-வா-கோவை:1 11 155/3

மேல்

நாவியும் (1)

நாவியும் கார் அகில் ஆவியும் தோய்_குழல் நாணி அஞ்சேல் – தஞ்-வா-கோவை:1 3 20/1

மேல்

நாவில் (1)

நல் வித்து அகன் புவி நாவில் வைத்தோன் வையைநாடு_அனையாய் – தஞ்-வா-கோவை:3 29 408/2

மேல்

நாள் (37)

கான கடி வரை-வாய் விரை நாள்_மலர் கா அகத்தே – தஞ்-வா-கோவை:1 2 17/4
நல் நாள் அரும்பு ஒரு தாள் இரண்டு ஈனும் நளினங்களே – தஞ்-வா-கோவை:1 3 21/4
சென்று உந்து சேல் விழி மின்னை முன் நாள் தந்த தெய்வம் நமக்கு – தஞ்-வா-கோவை:1 7 34/3
ஒல்லாது இது நுமக்கு என்று உணரேன் இன்று உணங்கி இ நாள்
எல்லாம் இரந்தது நின் குறையே அல்ல என் குறையே – தஞ்-வா-கோவை:1 10 89/3,4
விரை அக நாள்_மலர் மெல் இயல் மாதை விரும்பினையேல் – தஞ்-வா-கோவை:1 10 94/1
மற்று ஏது அவர் நினைவார் தஞ்சைவாணன் வரையின் மு நாள்
பொன் தேரின் வந்து புணர்ந்து சென்றார்-தம் பொருட்டு நம்மை – தஞ்-வா-கோவை:1 10 127/1,2
குற்றேவல் மங்கை குறையிரந்தாள் எனும் குற்றம் இ நாள்
எற்றே தவறு நம்-பால் இல்லையாகவும் எய்தியதே – தஞ்-வா-கோவை:1 10 127/3,4
குனி நாள் மதி நுதல் கோகிலமே நின் குழலில் எல்லா – தஞ்-வா-கோவை:1 10 138/1
பனி நாள்_மலரும் பறித்து அணிந்தேன் இந்த பார்_மடந்தை – தஞ்-வா-கோவை:1 10 138/2
சில் நாள்_மலர் குழல் காரணமா செவ்வி பார்த்து உழன்று – தஞ்-வா-கோவை:1 10 139/1
பல் நாள் உரைத்த பணி மொழி நோக்கி பழி நமக்கு ஈது – தஞ்-வா-கோவை:1 10 139/2
தலைப்பெய்த நாள்_அனையான் தஞ்சைவாணன் சயிலத்து எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 10 140/3
நறவு அரி தாழ் முல்லை நாள்_மலர் ஓதி நகரும் எனக்கு – தஞ்-வா-கோவை:1 12 162/3
மொய் நாள்_தழையொடு எல்லாம் ஒழியாமல் மொழி எனக்கே – தஞ்-வா-கோவை:1 13 167/4
மேகம் தரும் மின் இடை அன்னமே விரை நாள்_மலர் வேய் – தஞ்-வா-கோவை:1 13 173/2
நகையாய் அவை இவை நின் குழற்காம் முல்லை நாள்_மலரே – தஞ்-வா-கோவை:1 13 184/4
முன் நாள் அருளிய நோய் தணிப்பான் இன்று மொய்_குழலே – தஞ்-வா-கோவை:1 15 225/4
வன நாள் முளரி முகை வென்று வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 16 235/1
தல வேதியன் பெறும் நாள் பெற்று வாழ்பவன் தஞ்சையிலே – தஞ்-வா-கோவை:1 17 252/4
வண்டு ஆர் குழலி தன் வண்ணமும் கண்ணும் வடிவும் முன் நாள்
கண்டார் அறியும்படியனவே அல்ல காரணம் ஒன்று – தஞ்-வா-கோவை:2 20 303/2,3
செம் நாள்_மலரின் திரு அன்ன கோல தெரிவையர்க்கு – தஞ்-வா-கோவை:2 21 311/1
தம் நாள் முறைமை தவிர்த்து அருள் வாணன் தமிழ் தஞ்சை நாட்டு – தஞ்-வா-கோவை:2 21 311/3
சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_மலரே – தஞ்-வா-கோவை:2 21 312/2
நாள் மாதவி மலர் நாறு இரும் கூந்தல் நடந்த வழி – தஞ்-வா-கோவை:2 22 338/1
நாளே அனைய நல் நாள் உளவோ சென்ற நாள்களிலே – தஞ்-வா-கோவை:2 23 353/4
நல் நாள் மணம்புணர்ந்தார் என்று தூதர் நவின்றனரே – தஞ்-வா-கோவை:2 24 356/4
வாமானின் வாழ்வனவாக பல் நாள் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 25 365/2
வரையும் இ நாள் அளவு எவ்வாறு நீர் எம் மடந்தை முகை – தஞ்-வா-கோவை:3 27 371/1
நனை அகத்து அல்கிய நாள்_மலர்_ஓதி நயந்து உறையும் – தஞ்-வா-கோவை:3 27 376/1
அனைய வண்டு ஆர் குழல் ஆரணங்கே நமக்கு அன்பர் இ நாள்
இனையர் என்று ஆர்வம் இல்லா உரையாடல் இயல்பு அல்லவே – தஞ்-வா-கோவை:3 28 381/3,4
கொய் அணி நாள்_மலர் கொம்பர்_அன்னாள் குழவி பயந்து – தஞ்-வா-கோவை:3 28 390/2
மை நாள்_மலர் தொடை வாணன் தென்மாறை எம் மன்ன உவந்து – தஞ்-வா-கோவை:3 28 403/1
அ நாள் முயங்கி அமிழ்து என ஆர்ந்தனிர் ஆர்வமுற்ற – தஞ்-வா-கோவை:3 28 403/2
மு நாள் மதி வட்ட மென் முலை மாதை முனிந்து நஞ்சு என்று – தஞ்-வா-கோவை:3 28 403/3
இ நாள் மிக உவர்த்தீர் புலவாநிற்றிர் எங்களையே – தஞ்-வா-கோவை:3 28 403/4
வண்டு ஆர் மலர் புயன் வாணன் தென்மாறை மகிழ்நர் முன் நாள்
உண்டாகிய பழம் கேண்மை இந்நாளும் ஒழிந்திலரே – தஞ்-வா-கோவை:3 28 406/3,4
முற்றும் பொழிகின்ற முன்பனி நாள் முகிலும் கடலும் – தஞ்-வா-கோவை:3 31 416/2

மேல்

நாள்-தொறும் (3)

எனவே நடக்கின்றதால் அன்னை நாள்-தொறும் இல்லறமே – தஞ்-வா-கோவை:3 27 373/4
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3

மேல்

நாள்_தழையொடு (1)

மொய் நாள்_தழையொடு எல்லாம் ஒழியாமல் மொழி எனக்கே – தஞ்-வா-கோவை:1 13 167/4

மேல்

நாள்_மலர் (7)

கான கடி வரை-வாய் விரை நாள்_மலர் கா அகத்தே – தஞ்-வா-கோவை:1 2 17/4
விரை அக நாள்_மலர் மெல் இயல் மாதை விரும்பினையேல் – தஞ்-வா-கோவை:1 10 94/1
சில் நாள்_மலர் குழல் காரணமா செவ்வி பார்த்து உழன்று – தஞ்-வா-கோவை:1 10 139/1
நறவு அரி தாழ் முல்லை நாள்_மலர் ஓதி நகரும் எனக்கு – தஞ்-வா-கோவை:1 12 162/3
மேகம் தரும் மின் இடை அன்னமே விரை நாள்_மலர் வேய் – தஞ்-வா-கோவை:1 13 173/2
கொய் அணி நாள்_மலர் கொம்பர்_அன்னாள் குழவி பயந்து – தஞ்-வா-கோவை:3 28 390/2
மை நாள்_மலர் தொடை வாணன் தென்மாறை எம் மன்ன உவந்து – தஞ்-வா-கோவை:3 28 403/1

மேல்

நாள்_மலர்_ஓதி (1)

நனை அகத்து அல்கிய நாள்_மலர்_ஓதி நயந்து உறையும் – தஞ்-வா-கோவை:3 27 376/1

மேல்

நாள்_மலரின் (1)

செம் நாள்_மலரின் திரு அன்ன கோல தெரிவையர்க்கு – தஞ்-வா-கோவை:2 21 311/1

மேல்

நாள்_மலரும் (1)

பனி நாள்_மலரும் பறித்து அணிந்தேன் இந்த பார்_மடந்தை – தஞ்-வா-கோவை:1 10 138/2

மேல்

நாள்_மலரே (2)

நகையாய் அவை இவை நின் குழற்காம் முல்லை நாள்_மலரே – தஞ்-வா-கோவை:1 13 184/4
சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_மலரே
சுமந்த வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 21 312/2,3

மேல்

நாள்_அனையான் (1)

தலைப்பெய்த நாள்_அனையான் தஞ்சைவாணன் சயிலத்து எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 10 140/3

மேல்

நாள்களிலே (1)

நாளே அனைய நல் நாள் உளவோ சென்ற நாள்களிலே – தஞ்-வா-கோவை:2 23 353/4

மேல்

நாளில் (2)

முலை வந்ததோ இல்லையோ என்னும் நாளில் முயங்கினரே – தஞ்-வா-கோவை:2 20 304/4
நலிகின்ற முன்பனி நாளில் நண்ணார் முனை நண்ணினரே – தஞ்-வா-கோவை:3 31 415/4

மேல்

நாளின் (1)

நடுக்கம்செய் பின்பனி நாளின் வந்தார் அமர் நண்பன் உற்ற – தஞ்-வா-கோவை:3 32 419/3

மேல்

நாளினும் (2)

நாளினும் நாளும் நலம் தொலைவேன் நகை ஆர் அயில் வேல் – தஞ்-வா-கோவை:1 15 216/2
கை அணி வால் வளையை கண்ட நாளினும் காதன்மையே – தஞ்-வா-கோவை:3 28 390/4

மேல்

நாளும் (2)

நாளினும் நாளும் நலம் தொலைவேன் நகை ஆர் அயில் வேல் – தஞ்-வா-கோவை:1 15 216/2
பின் உயிராமல் என் மேல் பூசும் நாளும் என் பேசுவதே – தஞ்-வா-கோவை:3 30 412/4

மேல்

நாளே (1)

நாளே அனைய நல் நாள் உளவோ சென்ற நாள்களிலே – தஞ்-வா-கோவை:2 23 353/4

மேல்

நாளை (4)

முன் பணிவேன் இன்று நாளை வெண்பூளை முகிழ் எருக்கோடு – தஞ்-வா-கோவை:1 10 103/3
கடைக்கணியார் கணியார் நம்மை நாளை கரும்_கணியே – தஞ்-வா-கோவை:1 11 151/4
வல் ஏய் முலைவிலை தான் தந்து நாளை மணம் பெறவே – தஞ்-வா-கோவை:1 18 263/4
கழியாத அன்புடை காளை பின் நாளை கலந்து கொண்டல் – தஞ்-வா-கோவை:2 22 326/2

மேல்

நாறு (1)

நாள் மாதவி மலர் நாறு இரும் கூந்தல் நடந்த வழி – தஞ்-வா-கோவை:2 22 338/1

மேல்

நான் (2)

நான குழலியை நான் இன்று பெற்றது நாவலர்க்கு – தஞ்-வா-கோவை:1 2 17/2
நந்தா வன பொய்கை நான் கொய்குவேன் குழல் நாணும் கங்குல் – தஞ்-வா-கோவை:1 13 176/2

மேல்

நான்மறை (1)

தரையகம் நான்மறை கேள்வியர் வேள்வியர் சான்றவர்-தம் – தஞ்-வா-கோவை:1 10 94/3

மேல்

நான்முகத்தோன் (1)

நன்றாம் இறைவற்கும் நன்றியிலேற்கு முன் நான்முகத்தோன்
ஒன்றா விதித்திலனே உயிர் போல உடம்பையுமே – தஞ்-வா-கோவை:1 11 149/3,4

மேல்

நான (2)

நான குழலியை நான் இன்று பெற்றது நாவலர்க்கு – தஞ்-வா-கோவை:1 2 17/2
பொழி நான மன்றல் அம் பூம் குழல் நீங்கள் புணர்ந்து செல்லும் – தஞ்-வா-கோவை:2 21 315/1

மேல்

நானும் (1)

நலம் புனை ஆயமும் நீயும் நற்றாயொடு நானும் நல் பொன் – தஞ்-வா-கோவை:2 22 323/1

மேல்