கொ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொங்கு 1
கொங்கை 27
கொங்கையர் 1
கொங்கையின் 1
கொங்கையும் 2
கொங்கையொடும் 1
கொடி 15
கொடிச்சியரேம் 1
கொடிதாம் 1
கொடிய 4
கொடிய-கொல்லோ 1
கொடியது 1
கொடியனவாம் 1
கொடியாட்கு 1
கொடியாள் 1
கொடியே 6
கொடியேன் 2
கொடியை 1
கொடியோர் 1
கொடு 1
கொடுத்தார் 1
கொடுத்து 1
கொடும் 3
கொடுவரி 1
கொடுவினையேன் 1
கொடை 4
கொடையுடையான் 1
கொண்க 1
கொண்கர் 2
கொண்கன் 1
கொண்ட 27
கொண்டது 1
கொண்டதே 1
கொண்டல் 3
கொண்டலை 1
கொண்டவாறு 2
கொண்டவாறும் 2
கொண்டால் 1
கொண்டாள் 1
கொண்டானில் 1
கொண்டு 25
கொண்டுசென்றான் 1
கொண்டுவந்தால் 1
கொண்டே 2
கொத்து 1
கொந்தளபாரம் 1
கொந்து 3
கொம்பர் 4
கொம்பர்_அன்னாள் 2
கொம்பர்_அன்னீர் 1
கொம்பாகிய 1
கொம்பினை 1
கொம்பினையே 1
கொம்பு 3
கொம்பு_அனையார் 1
கொய் 1
கொய்குவேன் 1
கொய்தார் 1
கொய்து 2
கொய்தோ 1
கொய்யாது 1
கொய்யார் 1
கொல்லையும் 1
கொலை 6
கொழிக்கும் 1
கொழுது 2
கொழுந்துவிட்டு 1
கொழும் 1
கொள் 4
கொள்வதோ 1
கொள்ள 1
கொள்ளா 1
கொள்ளாது 2
கொள்ளார் 1
கொள்ளாள் 1
கொள்ளுமோ 1
கொள்ளைகொண்டு 1
கொள 1
கொளுத்தி 1
கொளுந்த 1
கொற்ற 1
கொற்றம் 1
கொற்றவ 2
கொன் 3
கொன்றை 1
கொன்னே 1

கொங்கு (1)

கொங்கு உலவா அலர் சூழ் குழலாய் என்-கொல் கூறுவதே – தஞ்-வா-கோவை:1 13 171/4

மேல்

கொங்கை (27)

அரண் மான் அனைய கண்ணாள் கொங்கை போறல் அரிது உமக்கே – தஞ்-வா-கோவை:1 2 19/4
பொன் நாண் அணி கொங்கை போல வண்டீர் உங்கள் பொய்கை உண்டோ – தஞ்-வா-கோவை:1 3 21/3
போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை
வாரால் அணைப்ப வருந்தினை நீ தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 44/2,3
வல் மேல் அடர் கொங்கை காரணமா தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 47/2
இலங்கு ஆர வல் வட கொங்கை வெற்பால் இணை நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 8 54/2
வல் ஆர் இளம் கொங்கை வஞ்சி_அன்னீர் தஞ்சைவாணனை கண்டு – தஞ்-வா-கோவை:1 9 77/1
தாள் இணை மாந்தளிர் அல்குல் பொன் தேர் இடை சங்கை கொங்கை
கோள் இணை கோல குரும்பை கை காந்தள் கொடி கரும்பு ஆர் – தஞ்-வா-கோவை:1 10 85/1,2
வனைந்தால் அன கொங்கை மாது உருவாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 87/1
வெண் தோடு அணி முக பைம் குரும்பை கொங்கை வெய்ய உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 107/1
சந்து சுற்றும் கொங்கை மங்கையர் வேள் சஞ்சரீகம் நறை – தஞ்-வா-கோவை:1 12 157/2
மேதகு முள் எயிற்று ஒண் முகை கொங்கை வெண் தோட்டு மென் பூம் – தஞ்-வா-கோவை:1 14 194/3
வம்பு ஏறு கொங்கை மயில்_இயல் நாம் அஞ்ச மன்ற மராம் – தஞ்-வா-கோவை:1 14 207/3
ஒடிக்கின்ற கொங்கை கண்டால் எவர் நெஞ்சு உருகாதவரே – தஞ்-வா-கோவை:1 16 232/4
அலகு அம்பு அன கண் இவள் கொங்கை மென் சுணங்கு ஆகி வண்டு – தஞ்-வா-கோவை:1 16 234/1
ஏர் ஏற்ற கொங்கை இளம் கொடி மாந்தளிர் ஏய்ந்த வண்ணம் – தஞ்-வா-கோவை:1 16 247/1
குளித்தார் இளம் கொங்கை ஆவியில் ஆவி குளிர்ப்ப நம்மை – தஞ்-வா-கோவை:1 17 253/1
செப்பு ஏர் இளம் கொங்கை மங்கை செப்பாது அன்பர் சென்றதுவே – தஞ்-வா-கோவை:1 18 264/4
நீல் நெடும் பெண்ணை சுரும்பையும் சூதும் நெருங்கு கொங்கை
தேன் நெடும் கண்ணி மென் பூம் குழல் மாதர் திருமுகமே – தஞ்-வா-கோவை:1 18 279/3,4
வார் அணி கொங்கை மணந்து சென்றார் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 20 289/2
வல்லும் பொரும் கொங்கை மங்கை நல்லாய் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 22 330/2
கோங்க நல் மா முகை கொங்கை நல்லாய் மணம்கூடும் எல்லை – தஞ்-வா-கோவை:3 27 369/1
புரையும் மென் கொங்கை பிரிந்திருந்தீர் முன் பொருப்பு எடுத்தே – தஞ்-வா-கோவை:3 27 371/2
இளம் கொங்கை கொண்டு உழுது ஈரம் கொள் மார்பின் முத்து ஏற்ப வித்தி – தஞ்-வா-கோவை:3 27 372/2
அயர் காரணம் ஆகும் என்றே கொங்கை யானையுடன் – தஞ்-வா-கோவை:3 28 377/2
குரவு ஏய் கரு முகில் கொந்தளபாரம் குரும்பை கொங்கை
அரவு ஏய் நுடங்கு இடையாள் விழி ஊர் சிவப்பு ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:3 28 396/3,4
தாவாத சங்கரன் கங்கை-தன் கொங்கை தழீஇ இதழி – தஞ்-வா-கோவை:3 28 401/3
கொத்து அலர் ஓதி அம் கொம்பர்_அன்னாள் பொங்கு கொங்கை விம்ம – தஞ்-வா-கோவை:3 33 425/1

மேல்

கொங்கையர் (1)

வல் எனவே கொண்ட கொங்கையர் வேள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 15 218/3

மேல்

கொங்கையின் (1)

சாயாத கொங்கையின் மேல் அணைத்தாள் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 129/2

மேல்

கொங்கையும் (2)

பொறை கொண்ட தாமரை போது அன்ன கொங்கையும் பொங்கு அரி சேர் – தஞ்-வா-கோவை:1 8 45/1
பொன்னுற்ற கொங்கையும் முத்துற்ற கண்ணும் இப்போது கண்டேன் – தஞ்-வா-கோவை:2 20 297/1

மேல்

கொங்கையொடும் (1)

கொந்து ஆர் தெரியல் நின் செங்கனி வாயொடும் கொங்கையொடும்
பைம் தாமரையையும் சேதாம்பலையும் பகைப்பித்ததே – தஞ்-வா-கோவை:1 13 176/3,4

மேல்

கொடி (15)

அயலே பசும்பொன் கொடி நின்றதால் வெள்ளை அன்னம் செந்நெல் – தஞ்-வா-கோவை:1 1 1/3
வீங்கிய மா முலை மேவுதும் யாம் விசய கொடி மேல் – தஞ்-வா-கோவை:1 2 5/2
வண் கொடி ஏய் மதில் மாறை வரோதயன் வாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 3 23/1
நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுர தாள் – தஞ்-வா-கோவை:1 3 23/3
கோள் இணை கோல குரும்பை கை காந்தள் கொடி கரும்பு ஆர் – தஞ்-வா-கோவை:1 10 85/2
கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன் – தஞ்-வா-கோவை:1 16 230/2
குராம் தொடை மென் குழல் கொம்பினை வேண்டி கொடி முல்லை நீள் – தஞ்-வா-கோவை:1 16 242/2
ஏர் ஏற்ற கொங்கை இளம் கொடி மாந்தளிர் ஏய்ந்த வண்ணம் – தஞ்-வா-கோவை:1 16 247/1
தீண்டும் கொடி மதில் சூழ் தஞ்சைவாணனை சேரலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 275/3
வயலை கொடி நொச்சி மண்டபமே தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 22 333/2
குரவே அறவும் கொடியை கண்டாய் கொடி கோகனகம் – தஞ்-வா-கோவை:2 22 344/2
கொன் ஆரும் நித்தில கோதை நம் மாதை கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:2 24 356/2
கோபுரம் சோலை கொடி மதில் மாடம் குலாவு இமையோர் – தஞ்-வா-கோவை:2 24 358/1
கொடி ஒன்று நீலம் மலர்ந்தது காட்ட கொடிய வெம் போர் – தஞ்-வா-கோவை:3 28 383/2
கொண்டவாறும் நின் ஏவல் கொண்டு யான் இ கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:3 33 424/3

மேல்

கொடிச்சியரேம் (1)

கோ குஞ்சரமும் குருதியும் சோர கொடிச்சியரேம்
காக்கும் புனம் மருங்கே தனியே வர கண்டிலமே – தஞ்-வா-கோவை:1 9 78/3,4

மேல்

கொடிதாம் (1)

குழி அன்றியும் வெம் சுழி ஒன்றும் யாறும் குழீஇ கொடிதாம்
வழி அன்ப நீ எங்ஙனே வந்தவாறு இ மழை இருளே – தஞ்-வா-கோவை:1 13 178/3,4

மேல்

கொடிய (4)

செல்லின் கொடிய களிற்று அண்ணல் வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:2 21 313/1
வில்லின் கொடிய புருவ மின்னே என் விளம்புதி நீ – தஞ்-வா-கோவை:2 21 313/2
சொல்லில் கொடிய நம் அன்னையை போல்பவர் சூழ்ந்திருக்கும் – தஞ்-வா-கோவை:2 21 313/3
கொடி ஒன்று நீலம் மலர்ந்தது காட்ட கொடிய வெம் போர் – தஞ்-வா-கோவை:3 28 383/2

மேல்

கொடிய-கொல்லோ (1)

இல்லின் கொடிய-கொல்லோ செல்லும் நாட்டு அவ் இரும் சுரமே – தஞ்-வா-கோவை:2 21 313/4

மேல்

கொடியது (1)

நெஞ்சோ கொடியது நேர்_இழையாய் நிழல் மா மதியோ – தஞ்-வா-கோவை:2 21 308/2

மேல்

கொடியனவாம் (1)

கோல் போல் கொடியனவாம் கொலை யானையின் கோடு கண்டே – தஞ்-வா-கோவை:1 9 68/4

மேல்

கொடியாட்கு (1)

யாய் ஆகிய கொடியாட்கு இனிதாக இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:2 25 361/4

மேல்

கொடியாள் (1)

இணங்கி புவனத்து எவரும் இல்லா என் இளம்_கொடியாள் – தஞ்-வா-கோவை:2 22 327/1

மேல்

கொடியே (6)

பெண் கொடியே பிரியேன் தரியேன் நின் பிரியினுமே – தஞ்-வா-கோவை:1 3 23/4
என்னூடு நின்ற இளம்_கொடியே சங்கம் ஏய்ந்து குழாம்-தன்னூடு – தஞ்-வா-கோவை:1 8 62/1
வருந்தா அமுது அளித்தாள் வல்லளாம் இ மட_கொடியே – தஞ்-வா-கோவை:1 10 134/4
பொறுத்தாள் அழல் சுரம்-தன்னை அன்னாய் நின் பொலம்_கொடியே – தஞ்-வா-கோவை:2 22 324/4
கொடியே வர கரை நீ கொடியேன் பெற்ற கொம்பினையே – தஞ்-வா-கோவை:2 22 334/4
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா – தஞ்-வா-கோவை:3 28 386/3

மேல்

கொடியேன் (2)

எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல் – தஞ்-வா-கோவை:1 3 23/2
கொடியே வர கரை நீ கொடியேன் பெற்ற கொம்பினையே – தஞ்-வா-கோவை:2 22 334/4

மேல்

கொடியை (1)

குரவே அறவும் கொடியை கண்டாய் கொடி கோகனகம் – தஞ்-வா-கோவை:2 22 344/2

மேல்

கொடியோர் (1)

கொடியோர் துணிந்து செய்தார் குறியாத குறி நமக்கே – தஞ்-வா-கோவை:1 14 192/4

மேல்

கொடு (1)

கலை தொட கீண்ட கருவி அம் தேன் பல கால் கொடு மா – தஞ்-வா-கோவை:1 10 118/1

மேல்

கொடுத்தார் (1)

முகம் நல்கி நல்க முலைகொடுத்தாரின் முத்தம் கொடுத்தார்
மிக நல்லர் என்பது மன்பதை தேற விடலை பின்னே – தஞ்-வா-கோவை:2 22 328/2,3

மேல்

கொடுத்து (1)

செண்டும் கொடுத்து அகல் செம்பியர் போல் அன்பர் சென்றுழி முள் – தஞ்-வா-கோவை:1 18 266/2

மேல்

கொடும் (3)

கோதம்படாதி கொடும் தெய்வமே என்று கூர் பலி தூய் – தஞ்-வா-கோவை:2 20 294/3
கோள்மா குமிறும் கொடும் குரல் கேள்-தொறும் கூர் கணையால் – தஞ்-வா-கோவை:2 22 338/2
கொன் உயிர் வாடை கொடும் பனி நீரில் குளிர் குழைத்து – தஞ்-வா-கோவை:3 30 412/3

மேல்

கொடுவரி (1)

கொடுவரி கேழல் குழாம் பொரு கொல்லையும் குஞ்சரம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 165/2

மேல்

கொடுவினையேன் (1)

போற்றும் கொடுவினையேன் புனையாவிடில் போந்து அலரே – தஞ்-வா-கோவை:1 10 128/3

மேல்

கொடை (4)

வலம்புரி போல் கொடை வாணன் தென்மாறை மழை வளர் பூம் – தஞ்-வா-கோவை:1 8 40/1
குன்றாகிய பொன்னும் வேழ குழாமும் கொடை புகழ்ந்து – தஞ்-வா-கோவை:1 11 149/1
மாரி அஞ்சும் கொடை வாணன் தென்மாறையில் வாழி வண்டு ஆர் – தஞ்-வா-கோவை:2 19 285/1
தளி போல் கொடை பயில் சந்திரவாணன் தமிழ் தஞ்சையான் – தஞ்-வா-கோவை:2 21 316/1

மேல்

கொடையுடையான் (1)

தரும் தாரு அஞ்சும் கொடையுடையான் தஞ்சைவாணன் இன் சொல் – தஞ்-வா-கோவை:1 10 134/1

மேல்

கொண்க (1)

வருதலை கொண்க நினைந்திலை வாணன் தென்மாறை வண்டு – தஞ்-வா-கோவை:1 17 257/3

மேல்

கொண்கர் (2)

கேதகை என்னும் நல்லாய் கொண்கர் மாலை கிடைத்தது என்றே – தஞ்-வா-கோவை:1 14 194/4
குருகு இன்று அணித்து இறைகொள்வது காண்க நம் கொண்கர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 18 276/2

மேல்

கொண்கன் (1)

செவ் வாளியும் கொண்டு சேண் சென்றதால் அன்று சீதை கொண்கன்
கை வாளியும் கொண்டு போன பொய் மானினும் கள்ளத்ததே – தஞ்-வா-கோவை:1 9 79/3,4

மேல்

கொண்ட (27)

மலைநாடு கொண்ட வழுதி கண்_போல்பவன் வாணன் எண்ணெண் – தஞ்-வா-கோவை:1 2 18/1
பொறை கொண்ட தாமரை போது அன்ன கொங்கையும் பொங்கு அரி சேர் – தஞ்-வா-கோவை:1 8 45/1
கறை கொண்ட வாள் அன்ன கண்களும் கொண்டு ஒரு கன்னி தெவ்வை – தஞ்-வா-கோவை:1 8 45/2
திறை கொண்ட வாணன் செழும் தஞ்சை சூழும் சிலம்பில் இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 45/3
குழையும் எம்-பால் என்று கொண்ட நெஞ்சே கலி கோடை மண் மேல் – தஞ்-வா-கோவை:1 10 99/2
வகை கொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின் முத்தம் – தஞ்-வா-கோவை:1 13 168/1
தகை கொண்ட சந்தன சாந்து அணிந்து ஆடுவர் தஞ்சையர்கோன் – தஞ்-வா-கோவை:1 13 168/2
மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட வாணன் வெற்பா எமது ஊர் – தஞ்-வா-கோவை:1 13 168/3
நகை கொண்ட வல்லி_அன்னார் எல்லி நாக நறு நிழலே – தஞ்-வா-கோவை:1 13 168/4
வழி நீள் புகழ் கொண்ட வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 13 180/3
விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 15 209/1
வல் எனவே கொண்ட கொங்கையர் வேள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 15 218/3
மை வாரணம் கொண்ட வாணன் தென்மாறை மருவலர் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/3
தார் அணி கொண்ட இரு தோள் ஒருவர் தனித்துழி என் – தஞ்-வா-கோவை:2 20 289/1
கன்னாடர் மண் கொண்ட வாணன் தென்மாறையில் காதலர் தாம் – தஞ்-வா-கோவை:2 24 356/3
மருள் கொண்ட சிந்தை மலை கிழவோய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 25 362/1
வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை – தஞ்-வா-கோவை:2 25 362/2
அருள் கொண்ட நெஞ்சின் ஓர் அண்ணல் பின்னே அகன்றாள் அகல் வான் – தஞ்-வா-கோவை:2 25 362/3
இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே – தஞ்-வா-கோவை:2 25 362/4
வளம் கொண்ட தஞ்சை வரோதயன் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:3 27 372/1
மலர் புரை ஏர் கொண்ட வாள் கண் எம் கோ மங்கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 389/1
மல் வித்தகம் கொண்ட தோளுடையான் தஞ்சைவாணன் தொல் சீர் – தஞ்-வா-கோவை:3 29 408/1
விண் காவல் கொண்ட திலோத்தமை தான் முதல் மெல்_இயலார் – தஞ்-வா-கோவை:3 30 411/1
மண் காவல் கொண்ட மனத்தினர் ஆயினர் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 30 411/3
பண் காவல் கொண்ட மொழி செய்ய வாய் இதழ் பைங்கிளியே – தஞ்-வா-கோவை:3 30 411/4
மால் கொண்ட வாரண வாணன் தென்மாறை வலவ நண்ணார் – தஞ்-வா-கோவை:3 33 424/1
கால் கொண்ட வாள் அமர் கையகல் பாசறை கை-வயின் முள்கோல் – தஞ்-வா-கோவை:3 33 424/2

மேல்

கொண்டது (1)

மனம் காவல் கொண்டது எல்லாம் கண்களே சொல்லும் வாய் திறந்தே – தஞ்-வா-கோவை:1 9 80/4

மேல்

கொண்டதே (1)

உரையாதது என் என்பரால் என்-கொலோ இவர் உள் கொண்டதே – தஞ்-வா-கோவை:1 9 74/4

மேல்

கொண்டல் (3)

ஒழி தோற்றிய சொல்லல் உன் மகள் ஓதிக்கு உடைந்த கொண்டல்
பொழி தோல் திரள் உந்தி வந்த செம் நீர் உந்தி பொற்பினுக்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 301/1,2
கழியாத அன்புடை காளை பின் நாளை கலந்து கொண்டல்
பொழியாத வெம் சுரம் போகுவல் யான் என்று போம் குறிப்பால் – தஞ்-வா-கோவை:2 22 326/2,3
இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே – தஞ்-வா-கோவை:2 25 362/4

மேல்

கொண்டலை (1)

கொண்டலை நீர் குடைந்தோ இவள் மேனி குழைந்ததுவே – தஞ்-வா-கோவை:1 9 63/4

மேல்

கொண்டவாறு (2)

நிறை கொண்டவாறு அறியாது இகழாநிற்றி நீயும் நின்றே – தஞ்-வா-கோவை:1 8 45/4
இரும்பா மனம் கொண்டவாறு என்னை நீ தன்னை ஏத்தி என்றும் – தஞ்-வா-கோவை:2 22 337/1

மேல்

கொண்டவாறும் (2)

கொண்டவாறும் நின் ஏவல் கொண்டு யான் இ கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:3 33 424/3
மேல் கொண்டவாறும் நம் ஊர் வந்தவாறும் வியப்பு எனக்கே – தஞ்-வா-கோவை:3 33 424/4

மேல்

கொண்டால் (1)

பேறு ஓர் வடிவு கொண்டால் அன்ன நீயும் என் பேதையுமே – தஞ்-வா-கோவை:1 16 236/4

மேல்

கொண்டாள் (1)

மின்னாது இடித்து என அன்னை கொண்டாள் வெறி விந்தை_மங்கை – தஞ்-வா-கோவை:1 15 225/1

மேல்

கொண்டானில் (1)

கொண்டானில் துன்னிய கேளிர் மற்று இல்லை குறிப்பின் என்று – தஞ்-வா-கோவை:3 28 406/1

மேல்

கொண்டு (25)

என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த – தஞ்-வா-கோவை:1 3 21/2
சூர் ஆர் சிலம்பில் சிலம்பி மெல் நூல் கொண்டு சுற்ற வெற்றி – தஞ்-வா-கோவை:1 8 44/1
கறை கொண்ட வாள் அன்ன கண்களும் கொண்டு ஒரு கன்னி தெவ்வை – தஞ்-வா-கோவை:1 8 45/2
பொன் காதல் கொண்டு தொழும் சிலம்பு ஆர் அடி பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 61/4
ஊட்டிய வாளின் கருமையும் தான் கொண்டு உமக்கு இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 9 65/3
செவ் வாளியும் கொண்டு சேண் சென்றதால் அன்று சீதை கொண்கன் – தஞ்-வா-கோவை:1 9 79/3
கை வாளியும் கொண்டு போன பொய் மானினும் கள்ளத்ததே – தஞ்-வா-கோவை:1 9 79/4
கொண்டு ஓர் குறை முடி கொம்பு_அனையார் நின் குறை மறுத்தால் – தஞ்-வா-கோவை:1 10 107/3
கை வண்ண வார் தழை கொண்டு சென்றார் தமை கண்டுகண்டே – தஞ்-வா-கோவை:1 10 120/4
கண் சாயல் கை உரு கொண்டு தன் வேல் மயில் காந்தள் வள்ளி – தஞ்-வா-கோவை:1 10 132/1
கழி நீடும் ஆடக மேருவின் மீதினும் காவல் கொண்டு
வழி நீள் புகழ் கொண்ட வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 13 180/2,3
இரு பால் மருங்கினும் கொண்டு எறிந்தால் ஒத்தது என் செவிக்கே – தஞ்-வா-கோவை:1 15 226/4
நிறம் தாங்கு இவர் கணை போல் உண்கண் மா முகில் நீர்மை கொண்டு
புறம் தாழ கரும் குழல் வெண் முத்த வாள் நகை பொன்னினையே – தஞ்-வா-கோவை:1 17 249/3,4
இழை போல் இடையாள் முலைவிலைக்கு ஆவன யாவையும் கொண்டு
உழை போல் அரி நெடும் கண் மயிலே சென்று உணர்த்து இதுவே – தஞ்-வா-கோவை:1 18 260/3,4
சங்கு ஆழி கொண்டு எறியும் கண்டல் வேலி அம் தண் துறைக்கே – தஞ்-வா-கோவை:2 20 296/4
செந்நீர் விழவு அணி நின் நகர்க்கே கொண்டு சேர்ந்து அருள் மற்று – தஞ்-வா-கோவை:2 21 305/2
ஒரு வெண்குடை இரு நீழல் முக்கோல் கொண்டு ஒழுக்கத்தினால் – தஞ்-வா-கோவை:2 22 341/1
நெய் தோய்ந்து அன தழையே புணையா கொண்டு நீந்தினனே – தஞ்-வா-கோவை:3 27 370/4
இளம் கொங்கை கொண்டு உழுது ஈரம் கொள் மார்பின் முத்து ஏற்ப வித்தி – தஞ்-வா-கோவை:3 27 372/2
உளம் கொண்டு அருத்துதலால் அன்னை ஊரன் உவப்புறுமே – தஞ்-வா-கோவை:3 27 372/4
பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து – தஞ்-வா-கோவை:3 28 378/3
வரும் அயிலே கொண்டு மா தடிந்தான் அன்ன வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 405/3
கண் காவல் கொண்டு அருள் காரிகை காவலர் கார் கடல் சூழ் – தஞ்-வா-கோவை:3 30 411/2
மெலிகின்ற சிந்தையும் மேனியும் கொண்டு விளர்ப்பு எனும் பேர் – தஞ்-வா-கோவை:3 31 415/2
கொண்டவாறும் நின் ஏவல் கொண்டு யான் இ கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:3 33 424/3

மேல்

கொண்டுசென்றான் (1)

வாடா வள மனை கொண்டுசென்றான் ஒரு வள்ளல் இன்றே – தஞ்-வா-கோவை:2 23 349/4

மேல்

கொண்டுவந்தால் (1)

கொன் பதி வேல் வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான் – தஞ்-வா-கோவை:1 14 208/2

மேல்

கொண்டே (2)

பைம் கோல் மணி வளையார் தணியாரல்லர் பார்வை கொண்டே – தஞ்-வா-கோவை:1 8 55/4
கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி – தஞ்-வா-கோவை:3 28 393/3

மேல்

கொத்து (1)

கொத்து அலர் ஓதி அம் கொம்பர்_அன்னாள் பொங்கு கொங்கை விம்ம – தஞ்-வா-கோவை:3 33 425/1

மேல்

கொந்தளபாரம் (1)

குரவு ஏய் கரு முகில் கொந்தளபாரம் குரும்பை கொங்கை – தஞ்-வா-கோவை:3 28 396/3

மேல்

கொந்து (3)

கொந்து சுற்றும் குழலாய் செல்லல் நீ அ குளிர் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 12 157/4
கொந்து ஆர் அசோகம் தரும் செழும் போது கொழும் தழையும் – தஞ்-வா-கோவை:1 13 174/3
கொந்து ஆர் தெரியல் நின் செங்கனி வாயொடும் கொங்கையொடும் – தஞ்-வா-கோவை:1 13 176/3

மேல்

கொம்பர் (4)

குமிழ் தங்கிய மதி கொம்பர்_அன்னீர் குளிர் வெண்ணிலவு ஊடு – தஞ்-வா-கோவை:1 2 13/2
மாணிக்க மென் கொம்பர் என் சொல்லுகேன் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 210/1
கொய் அணி நாள்_மலர் கொம்பர்_அன்னாள் குழவி பயந்து – தஞ்-வா-கோவை:3 28 390/2
கொத்து அலர் ஓதி அம் கொம்பர்_அன்னாள் பொங்கு கொங்கை விம்ம – தஞ்-வா-கோவை:3 33 425/1

மேல்

கொம்பர்_அன்னாள் (2)

கொய் அணி நாள்_மலர் கொம்பர்_அன்னாள் குழவி பயந்து – தஞ்-வா-கோவை:3 28 390/2
கொத்து அலர் ஓதி அம் கொம்பர்_அன்னாள் பொங்கு கொங்கை விம்ம – தஞ்-வா-கோவை:3 33 425/1

மேல்

கொம்பர்_அன்னீர் (1)

குமிழ் தங்கிய மதி கொம்பர்_அன்னீர் குளிர் வெண்ணிலவு ஊடு – தஞ்-வா-கோவை:1 2 13/2

மேல்

கொம்பாகிய (1)

கொம்பாகிய மருங்குல் கரும்பாம் மொழி கோமளமே – தஞ்-வா-கோவை:1 15 212/4

மேல்

கொம்பினை (1)

குராம் தொடை மென் குழல் கொம்பினை வேண்டி கொடி முல்லை நீள் – தஞ்-வா-கோவை:1 16 242/2

மேல்

கொம்பினையே (1)

கொடியே வர கரை நீ கொடியேன் பெற்ற கொம்பினையே – தஞ்-வா-கோவை:2 22 334/4

மேல்

கொம்பு (3)

கொண்டு ஓர் குறை முடி கொம்பு_அனையார் நின் குறை மறுத்தால் – தஞ்-வா-கோவை:1 10 107/3
கொம்பு ஏறி நள்ளிருள்-வாய் குழறாநின்ற கூகைகளே – தஞ்-வா-கோவை:1 14 207/4
பணிமொழியாள் என்னும் கொள் கொம்பு மூடி படர்ந்து அயல் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 229/2

மேல்

கொம்பு_அனையார் (1)

கொண்டு ஓர் குறை முடி கொம்பு_அனையார் நின் குறை மறுத்தால் – தஞ்-வா-கோவை:1 10 107/3

மேல்

கொய் (1)

கொய் அணி நாள்_மலர் கொம்பர்_அன்னாள் குழவி பயந்து – தஞ்-வா-கோவை:3 28 390/2

மேல்

கொய்குவேன் (1)

நந்தா வன பொய்கை நான் கொய்குவேன் குழல் நாணும் கங்குல் – தஞ்-வா-கோவை:1 13 176/2

மேல்

கொய்தார் (1)

கூனல் அம் சாய் பொன் குரலும் கொய்தார் எமர் கொற்றவ யாம் – தஞ்-வா-கோவை:1 11 153/2

மேல்

கொய்து (2)

தரு-வாய் தழை கொய்து தண் புனம் காத்து தடம் குடைந்து – தஞ்-வா-கோவை:1 7 35/2
தேமா இளந்தளிர் செவ் வண்ணம் கொய்து சிலம்பு எதிர்கூய் – தஞ்-வா-கோவை:1 10 131/2

மேல்

கொய்தோ (1)

தண்டலை ஆர தழைகள் கொய்தோ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 9 63/2

மேல்

கொய்யாது (1)

முல்லை அம் போது முகையும் கொய்யாது முகிழ் முலையாய் – தஞ்-வா-கோவை:1 13 183/3

மேல்

கொய்யார் (1)

உடைக்கு அணியாம் தழை கொய்யார் உழவர் உடைத்த தெள் நீர் – தஞ்-வா-கோவை:1 11 151/2

மேல்

கொல்லையும் (1)

கொடுவரி கேழல் குழாம் பொரு கொல்லையும் குஞ்சரம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 165/2

மேல்

கொலை (6)

கொலை முழுதும் கற்ற கூரிய வாளி குளிப்ப இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 41/3
கொலை கால் அயில் படை நேரியர்கோன் அகம் கோட அங்கை – தஞ்-வா-கோவை:1 8 53/1
கோல் போல் கொடியனவாம் கொலை யானையின் கோடு கண்டே – தஞ்-வா-கோவை:1 9 68/4
கொலை பயில் நாக குருளையை போல் குறியோன் இருந்த – தஞ்-வா-கோவை:1 10 109/2
கொலை மா கரி இரை தேர்ந்து உழலாநிற்கும் கொற்றவ பொன் – தஞ்-வா-கோவை:1 13 164/3
மலங்கும் பொலம் தொடி சோர மெய் சோரும் மறம் செய் கொலை
விலங்கும் படிறு செய்யா குன்ற நாட விரைந்து அளிப்பாய் – தஞ்-வா-கோவை:1 16 243/2,3

மேல்

கொழிக்கும் (1)

போல் வண் தமிழ் மன்னர் போற்ற விளங்குக பொன் கொழிக்கும்
கால் வண்டல் வையை கரை மல்கும் மல்லிகை கால் முகையின் – தஞ்-வா-கோவை:1 18 277/2,3

மேல்

கொழுது (2)

கொழுது இயல் ஆர் செய் குழல் மடவீர் நும் குற்றேவல்செய்து – தஞ்-வா-கோவை:1 2 7/2
கொழுது இமிரும் குழல் சோர கிடந்து குடங்கையின் மேல் – தஞ்-வா-கோவை:1 18 273/2

மேல்

கொழுந்துவிட்டு (1)

அணி மனை-தோறும் கொழுந்துவிட்டு அம்பல் அரும்பி மண் மேல் – தஞ்-வா-கோவை:1 16 229/3

மேல்

கொழும் (1)

கொந்து ஆர் அசோகம் தரும் செழும் போது கொழும் தழையும் – தஞ்-வா-கோவை:1 13 174/3

மேல்

கொள் (4)

அணி மா மலர் மயிலை புய தூணம் கொள் ஆகம் எனும் – தஞ்-வா-கோவை:1 10 130/1
பணிமொழியாள் என்னும் கொள் கொம்பு மூடி படர்ந்து அயல் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 229/2
இளம் கொங்கை கொண்டு உழுது ஈரம் கொள் மார்பின் முத்து ஏற்ப வித்தி – தஞ்-வா-கோவை:3 27 372/2
வெண் பால் நலம் கொள் செவ் வாய் அன்னமே அன்ன மெல்_நடையே – தஞ்-வா-கோவை:3 32 417/4

மேல்

கொள்வதோ (1)

படையானொடும் வெம் பகை கொள்வதோ பகல் போலும் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 10 125/2

மேல்

கொள்ள (1)

குறியா மறி உயிர் கொள்ள என்றோ குருதி பலி கூர் – தஞ்-வா-கோவை:2 20 298/2

மேல்

கொள்ளா (1)

கயலாம் எனில் கயல் கள்ளம் கொள்ளா கரும் தாழ் அளகம் – தஞ்-வா-கோவை:1 6 31/2

மேல்

கொள்ளாது (2)

புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இ புனை இழையார் – தஞ்-வா-கோவை:1 6 31/3
கொள்ளாது எதிர்கொள்வதே குணம் ஆவது கோமளமே – தஞ்-வா-கோவை:3 28 385/4

மேல்

கொள்ளார் (1)

முந்நீர் உலகும் கொள்ளார் விலையாக முலையினுக்கே – தஞ்-வா-கோவை:2 21 305/4

மேல்

கொள்ளாள் (1)

பன்னுற்ற சொல்லும் இன் பாலும் கொள்ளாள் பதினால் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 297/2

மேல்

கொள்ளுமோ (1)

இரு நீர் நிலம் கொள்ளுமோ அறியாள் என்னும் இவ் உரையே – தஞ்-வா-கோவை:1 10 91/4

மேல்

கொள்ளைகொண்டு (1)

கூர் ஆதரம் நல்கி வல்வினையேன் நலம் கொள்ளைகொண்டு
தேர் ஆதவனுடனே நென்னல் மாலையில் சென்றவரே – தஞ்-வா-கோவை:1 11 144/3,4

மேல்

கொள (1)

கொள அரும்பா பைம் குரும்பை குலம் செம் குமுதத்து வெண் – தஞ்-வா-கோவை:1 10 108/2

மேல்

கொளுத்தி (1)

ஆறா அரும் துயர் ஆற்றுகின்றீர் அறிவே கொளுத்தி
ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 325/2,3

மேல்

கொளுந்த (1)

ஆலையம் போல் உங்கள் ஆதவன் கோயில் அழல் கொளுந்த
வேலை அம்போடு உழல்வீர் பரிகாள் என்றும் வெய்துயிர்த்தே – தஞ்-வா-கோவை:1 11 143/3,4

மேல்

கொற்ற (1)

கொன்னே இரங்கி வருந்தல் கண்டாய் கொற்ற நேமி விந்தை – தஞ்-வா-கோவை:1 18 271/2

மேல்

கொற்றம் (1)

மலை முழுதும் கொற்றம் வைக்கின்ற வாணன் தென்மாறை நண்பா – தஞ்-வா-கோவை:1 8 41/1

மேல்

கொற்றவ (2)

கூனல் அம் சாய் பொன் குரலும் கொய்தார் எமர் கொற்றவ யாம் – தஞ்-வா-கோவை:1 11 153/2
கொலை மா கரி இரை தேர்ந்து உழலாநிற்கும் கொற்றவ பொன் – தஞ்-வா-கோவை:1 13 164/3

மேல்

கொன் (3)

கொன் பதி வேல் வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான் – தஞ்-வா-கோவை:1 14 208/2
கொன் ஆரும் நித்தில கோதை நம் மாதை கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:2 24 356/2
கொன் உயிர் வாடை கொடும் பனி நீரில் குளிர் குழைத்து – தஞ்-வா-கோவை:3 30 412/3

மேல்

கொன்றை (1)

தெரி ஆடக இதழ் பூம் கொன்றை வேணியும் தேவியும் போல் – தஞ்-வா-கோவை:3 27 368/1

மேல்

கொன்னே (1)

கொன்னே இரங்கி வருந்தல் கண்டாய் கொற்ற நேமி விந்தை – தஞ்-வா-கோவை:1 18 271/2

மேல்