செ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கர் 2
செங்கயல் 1
செங்கயலே 1
செங்கழுநீர் 1
செங்கனி 3
செங்காந்தள் 1
செங்கை 1
செங்கோல் 1
செஞ்சொல் 1
செண்டும் 1
செண்பக 1
செந்தமிழ் 1
செந்தமிழ்வாணன் 1
செந்தமிழோர் 1
செந்தேன் 2
செந்நீர் 1
செந்நெல் 2
செப்பாது 1
செப்பி 1
செப்பு 3
செப்பு-மினே 1
செம் 21
செம்பழுக்காய் 1
செம்பியர் 1
செம்பு 1
செம்பொன் 4
செம்மை 1
செம்மையும் 1
செய் 6
செய்குவேன் 1
செய்குன்றமும் 1
செய்குன்றுகாள் 1
செய்கேன் 1
செய்தார் 1
செய்தாலும் 1
செய்துமே 1
செய்ய 7
செய்யா 1
செய்வேன் 1
செயத்தக்கதுவே 1
செயல் 2
செயலை 1
செயிர்த்தவர்க்கு 1
செயிர்த்தனளோ 1
செயிராத 1
செரு 3
செருக 1
செருந்தியுடன் 1
செருந்து 2
செல் 3
செல்ல 3
செல்லல் 3
செல்லா 1
செல்லாது 1
செல்லாமல் 1
செல்லின் 1
செல்லும் 5
செல்லும்படி 1
செல்லுமால் 1
செல்லுவரேனும் 1
செல்லேன் 1
செல்லை 1
செல்வது 1
செல்வதே 1
செல்வம் 1
செல்வர் 1
செல்வரோ 1
செல்வல் 1
செல்வனுமே 1
செல்வியர்க்கே 1
செல்வீர் 1
செல 4
செலவே 1
செலுத்திய 1
செவ் 10
செவ்வி 5
செவ்வியிலே 1
செவ்விளநீர்களும் 1
செவ்வேள் 1
செவ்வேளுக்கு 1
செவ்வேளை 1
செவிக்கு 1
செவிக்கே 1
செவிமடுத்தே 1
செழியன் 1
செழும் 15
செற்றும் 1
செறி 5
செறித்தார் 1
சென்ற 4
சென்றதால் 1
சென்றதுவே 1
சென்றவரே 2
சென்றார் 4
சென்றார்-தம் 1
சென்றால் 1
சென்றாலும் 1
சென்றாள் 1
சென்று 21
சென்றுசென்று 1
சென்றுவந்து 1
சென்றுழி 1
சென்றே 2
சென்றேவரல் 1
சென்றேன் 2

செக்கர் (2)

விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார் – தஞ்-வா-கோவை:1 9 64/3
இவள் ஆருயிர் புரந்து யான் இருந்தேன் செக்கர் இந்து அன்ன – தஞ்-வா-கோவை:1 17 259/1

மேல்

செங்கயல் (1)

பொருகின்ற செங்கயல் போல் விழியாய் பண்டு போய நின் கை – தஞ்-வா-கோவை:1 18 276/1

மேல்

செங்கயலே (1)

கனமே குழல் செங்கயலே விழி மொழி கார் குயிலே – தஞ்-வா-கோவை:1 8 49/1

மேல்

செங்கழுநீர் (1)

நீர் ஏற்ற செங்கழுநீர் மலர் போன்றது நின் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 247/4

மேல்

செங்கனி (3)

சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர் – தஞ்-வா-கோவை:1 8 43/2
தேரும்-தொறும் இனிதாம் தமிழ் போன்று இவள் செங்கனி வாய் – தஞ்-வா-கோவை:1 8 59/3
கொந்து ஆர் தெரியல் நின் செங்கனி வாயொடும் கொங்கையொடும் – தஞ்-வா-கோவை:1 13 176/3

மேல்

செங்காந்தள் (1)

கை போல் கவின்கொள் செங்காந்தள் அம் போது இவை கண்டருள் யான் – தஞ்-வா-கோவை:1 10 137/3

மேல்

செங்கை (1)

மாற்றாது அருள் செங்கை வாணன் தென்மாறையில் வந்து நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 10 126/3

மேல்

செங்கோல் (1)

செங்கோல் முறைமை செலுத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 55/2

மேல்

செஞ்சொல் (1)

துடிக்கின்ற திங்களின் தோன்றும் துறைவ செஞ்சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:1 16 232/2

மேல்

செண்டும் (1)

செண்டும் கொடுத்து அகல் செம்பியர் போல் அன்பர் சென்றுழி முள் – தஞ்-வா-கோவை:1 18 266/2

மேல்

செண்பக (1)

சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_மலரே – தஞ்-வா-கோவை:2 21 312/2

மேல்

செந்தமிழ் (1)

செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழும் கமல – தஞ்-வா-கோவை:1 17 252/3

மேல்

செந்தமிழ்வாணன் (1)

சிறந்தனள் ஆதலின் செந்தமிழ்வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 14 198/3

மேல்

செந்தமிழோர் (1)

செம் கண் இரும் குயில் ஆர்ப்பது கேட்கிலர் செந்தமிழோர்
தம்-கண் இடும்பை தவிர்த்து அருள் வாணன் தென் தஞ்சை வஞ்சி – தஞ்-வா-கோவை:3 33 421/2,3

மேல்

செந்தேன் (2)

தேறாக தெவ் வென்ற வாணன் தென்மாறை செந்தேன் அருவி – தஞ்-வா-கோவை:1 2 11/1
ஆனாது ஒழுகு செந்தேன் அல்லி மேவும் அரச_அன்னம் – தஞ்-வா-கோவை:1 7 36/3

மேல்

செந்நீர் (1)

செந்நீர் விழவு அணி நின் நகர்க்கே கொண்டு சேர்ந்து அருள் மற்று – தஞ்-வா-கோவை:2 21 305/2

மேல்

செந்நெல் (2)

அயலே பசும்பொன் கொடி நின்றதால் வெள்ளை அன்னம் செந்நெல்
வயலே தடம் பொய்கை சூழ் தஞ்சைவாணன் மலையத்திலே – தஞ்-வா-கோவை:1 1 1/3,4
காரா கழனி கரும்பு இனம் சாய கதழ்ந்து செந்நெல்
ஆராது அயலில் பைஞ்சாய் ஆரும் ஊரர் அயலவர்க்கே – தஞ்-வா-கோவை:3 28 380/3,4

மேல்

செப்பாது (1)

செப்பு ஏர் இளம் கொங்கை மங்கை செப்பாது அன்பர் சென்றதுவே – தஞ்-வா-கோவை:1 18 264/4

மேல்

செப்பி (1)

தேங்கிய காதர ஆதரம் செப்பி தண் செப்பு இணை போல் – தஞ்-வா-கோவை:1 2 5/1

மேல்

செப்பு (3)

தேங்கிய காதர ஆதரம் செப்பி தண் செப்பு இணை போல் – தஞ்-வா-கோவை:1 2 5/1
செப்பு ஓது இளமுலையாள் நகை வாள் முக திங்களை கண்டு – தஞ்-வா-கோவை:1 10 116/3
செப்பு ஏர் இளம் கொங்கை மங்கை செப்பாது அன்பர் சென்றதுவே – தஞ்-வா-கோவை:1 18 264/4

மேல்

செப்பு-மினே (1)

தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – தஞ்-வா-கோவை:1 15 221/4

மேல்

செம் (21)

நெய் ஆர் கரும் குழல் செம் மலர் வாடின நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 1 3/3
உமிழ் தண் தரள பவள செம் கேழ் வள்ளத்து உள் இருக்கும் – தஞ்-வா-கோவை:1 2 13/3
சிலை முழுதும் சுற்றுமுற்றும் எய்யாநிற்ப செம் நிறத்தே – தஞ்-வா-கோவை:1 8 41/2
தரை தாரு அன்ன செம் தண்ணளி வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 9 71/2
வரு நீர் வன முலை மங்கை நல்லாய் செம் கை வாணன் வையை – தஞ்-வா-கோவை:1 10 91/1
செயல் ஆர் குடம்பையில் செம் தலை அன்றில் சினை உள பைம் – தஞ்-வா-கோவை:1 10 106/1
கொள அரும்பா பைம் குரும்பை குலம் செம் குமுதத்து வெண் – தஞ்-வா-கோவை:1 10 108/2
செம் சூட்டு இளகு பொன் போல் தினை மூரலும் தெள் அமுதே – தஞ்-வா-கோவை:1 10 141/4
புனமும் பசும் தினை செம் குரல் ஏந்தும் புகன்ற கிள்ளை – தஞ்-வா-கோவை:1 12 156/1
செம் கேழ் விழிக்கும் மொழிக்கும் பகை திருப்பாற்கடலும் – தஞ்-வா-கோவை:1 12 161/1
நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிற கனி வாய் – தஞ்-வா-கோவை:1 14 194/2
முரலும் தளை அவிழ் மொய் மலர் காந்தள் அம் செம் மலர் கை – தஞ்-வா-கோவை:1 14 195/3
புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம் – தஞ்-வா-கோவை:1 16 242/1
அஞ்சாது செம் கை அயில் விளக்கா அணங்கின் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 16 244/2
மிகவும் பரந்த கரிய கண்ணீர் செம் கை வெள் வளை போல் – தஞ்-வா-கோவை:1 18 268/1
பொழி தோல் திரள் உந்தி வந்த செம் நீர் உந்தி பொற்பினுக்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 301/2
செம் நாள்_மலரின் திரு அன்ன கோல தெரிவையர்க்கு – தஞ்-வா-கோவை:2 21 311/1
வள வேய் மிடைந்த வழி படர்வீர் செம் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 25 360/1
மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர் – தஞ்-வா-கோவை:3 27 370/2
சேராதவர் என்ன தீவினையேன் நைய செம் கண் வன்கண் – தஞ்-வா-கோவை:3 28 380/2
செம் கண் இரும் குயில் ஆர்ப்பது கேட்கிலர் செந்தமிழோர் – தஞ்-வா-கோவை:3 33 421/2

மேல்

செம்பழுக்காய் (1)

சிலை தொடுத்தாங்கு எழில் சேர் நுதலாய் பயில் செம்பழுக்காய்
குலை தொடுத்து ஓங்கு பைம் கேழ் பூக நாக குழாம் கவர்ந்தே – தஞ்-வா-கோவை:1 10 118/3,4

மேல்

செம்பியர் (1)

செண்டும் கொடுத்து அகல் செம்பியர் போல் அன்பர் சென்றுழி முள் – தஞ்-வா-கோவை:1 18 266/2

மேல்

செம்பு (1)

தேர் தானை வாணன் தென்மாறை மின்னே அஞ்சல் செம்பு உருக்கி – தஞ்-வா-கோவை:1 18 267/1

மேல்

செம்பொன் (4)

கரும்பாம் மொழி வதனத்தொடு ஒவ்வாய் களி யானை செம்பொன்
தரும் பாரி வாணன் தமிழ் தஞ்சையான் தரியாரின் முன் செய் – தஞ்-வா-கோவை:1 7 37/2,3
திளைக்கும் திரை மேல் உனக்கு முன் தோன்றலில் செம்பொன் வெற்பை – தஞ்-வா-கோவை:1 9 64/1
செருந்து ஆர் பசும் தமிழ் தென்வரை மேல் செம்பொன் மேரு வெற்பால் – தஞ்-வா-கோவை:1 10 134/2
காவலரே மனம் காத்தனம் யாம் களி யானை செம்பொன்
நாவலரே பெற நல்கும் கை மேக நறும் குவளை – தஞ்-வா-கோவை:1 11 155/2,3

மேல்

செம்மை (1)

இரும் குன்று அன மதில் எம் பதிக்கு ஏகல் எளிது செம்மை
தரும் குங்கும முலை தையல் நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 189/1,2

மேல்

செம்மையும் (1)

தீட்டிய வாணன் தென்மாறை_அன்னீர் இதழ் செம்மையும் மை – தஞ்-வா-கோவை:1 9 65/2

மேல்

செய் (6)

கொழுது இயல் ஆர் செய் குழல் மடவீர் நும் குற்றேவல்செய்து – தஞ்-வா-கோவை:1 2 7/2
தரும் பாரி வாணன் தமிழ் தஞ்சையான் தரியாரின் முன் செய்
பெரும் பாவம் அல்லது நீர் நின்ற பேறு அல்லி பெற்றிலையே – தஞ்-வா-கோவை:1 7 37/3,4
மலங்கும் பொலம் தொடி சோர மெய் சோரும் மறம் செய் கொலை – தஞ்-வா-கோவை:1 16 243/2
நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய்
நூபுரம் சூழ் அடியாய் சென்று கூறு நுமர்-தமக்கே – தஞ்-வா-கோவை:2 24 358/3,4
உள்ளம் சிறியவர் மேல் செல்வரோ ஒளிர் கோமளம் செய்
வள்ளம் கமல மலர் தஞ்சைவாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:3 28 404/2,3
சிறந்தார் புகழ்தரும் தீம் புனல் ஊரன் செய் தீமை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 28 407/1

மேல்

செய்குவேன் (1)

யாணர் குழல்_மொழி என் செய்குவேன் கல்வி எல்லை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 29 409/1

மேல்

செய்குன்றமும் (1)

மேவும் செய்குன்றமும் சோலையுமாக பொன் வெற்பும் விண்ணோர் – தஞ்-வா-கோவை:1 10 81/3

மேல்

செய்குன்றுகாள் (1)

திரள் மா மரகத செய்குன்றுகாள் என்றும் செவ் வன நீர் – தஞ்-வா-கோவை:1 2 19/1

மேல்

செய்கேன் (1)

இன்னும் தெளிந்திலை என்னை என்னே என் செய்கேன் இதற்கு – தஞ்-வா-கோவை:3 28 399/2

மேல்

செய்தார் (1)

கொடியோர் துணிந்து செய்தார் குறியாத குறி நமக்கே – தஞ்-வா-கோவை:1 14 192/4

மேல்

செய்தாலும் (1)

முரண் மா தவங்கள் முயன்று செய்தாலும் முளரி_மங்கை – தஞ்-வா-கோவை:1 2 19/2

மேல்

செய்துமே (1)

யாம கடலகத்தும் தணியாது இனி என் செய்துமே – தஞ்-வா-கோவை:1 6 33/4

மேல்

செய்ய (7)

புறம் தாழ் கரிய குழல் செய்ய வாய் ஐய பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 11 145/4
பொன் பதி தாள் வளை வாய் செய்ய சூட்டு வன் புள் இனமே – தஞ்-வா-கோவை:1 14 208/4
பல கம்பலை செய்ய பூத்தன வேங்கை பனிவரை மேல் – தஞ்-வா-கோவை:1 16 234/2
நாக புகர் செய்ய புள்ளி பைம் கால் ஞெண்டு நாகு இளம் தண் – தஞ்-வா-கோவை:2 20 293/2
சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_மலரே – தஞ்-வா-கோவை:2 21 312/2
அரும்பா முலை செய்ய வாய் பசும் பாவைக்கு அளிக்கும் மின்னே – தஞ்-வா-கோவை:2 22 337/4
பண் காவல் கொண்ட மொழி செய்ய வாய் இதழ் பைங்கிளியே – தஞ்-வா-கோவை:3 30 411/4

மேல்

செய்யா (1)

விலங்கும் படிறு செய்யா குன்ற நாட விரைந்து அளிப்பாய் – தஞ்-வா-கோவை:1 16 243/3

மேல்

செய்வேன் (1)

உற அரிதாம் என் செய்வேன் என்று சோரும் என் ஓர் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 162/4

மேல்

செயத்தக்கதுவே (1)

தருவர் வம்பு ஆர் முலையாய் என்-கொலோ செயத்தக்கதுவே – தஞ்-வா-கோவை:1 10 117/4

மேல்

செயல் (2)

செயல் ஆர் குடம்பையில் செம் தலை அன்றில் சினை உள பைம் – தஞ்-வா-கோவை:1 10 106/1
செயல் கண் இணை அல்லவோ படுகின்றன திண் கடிப்பே – தஞ்-வா-கோவை:1 14 205/4

மேல்

செயலை (1)

செயலை தருவின் திரு நிழலே பெரும் சிற்றில்லமே – தஞ்-வா-கோவை:2 22 333/1

மேல்

செயிர்த்தவர்க்கு (1)

தெரியோர் பொருட்டு அன்று தேர்வு இன்றி ஊடல் செயிர்த்தவர்க்கு
கரியோர் தெளித்து என்ன காரணம் காட்டுவர் கான் உண்டு தேன் – தஞ்-வா-கோவை:3 28 397/1,2

மேல்

செயிர்த்தனளோ (1)

செயிராத அன்னை செயிர்த்தனளோ செறி நாரை திண் போர் – தஞ்-வா-கோவை:2 20 288/2

மேல்

செயிராத (1)

செயிராத அன்னை செயிர்த்தனளோ செறி நாரை திண் போர் – தஞ்-வா-கோவை:2 20 288/2

மேல்

செரு (3)

தேம் கண்ணி சூடி செரு வென்ற வாணன் தென்மாறை மின்னே – தஞ்-வா-கோவை:1 14 204/2
செல் ஏய் முரச செரு வென்ற வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:1 18 263/3
செரு மகள் ஏயும் புயத்து அயலான் பின் செல விடுத்து என் – தஞ்-வா-கோவை:2 22 343/1

மேல்

செருக (1)

செருக கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 42/3

மேல்

செருந்தியுடன் (1)

தென்நாக வண் தமிழ் வாணன் தென்மாறை செருந்தியுடன்
புன்னாகமும் கமழ் பூம் துறைவா சுரர் போற்று அமிர்தம் – தஞ்-வா-கோவை:1 16 245/1,2

மேல்

செருந்து (2)

செருந்து ஒன்று சோலை தென்மாறை அன்னீர் செழும் திங்கள் உங்கள் – தஞ்-வா-கோவை:1 2 9/2
செருந்து ஆர் பசும் தமிழ் தென்வரை மேல் செம்பொன் மேரு வெற்பால் – தஞ்-வா-கோவை:1 10 134/2

மேல்

செல் (3)

செல் காவி அன்ன விழி திருவே நின் திருமனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 185/4
செல் ஏய் முரச செரு வென்ற வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:1 18 263/3
செல் மாலை அந்தி கண்டு ஆற்ற அரியாள் என் திருந்து_இழையே – தஞ்-வா-கோவை:1 18 274/4

மேல்

செல்ல (3)

செல்ல திருவுளம்வைத்து அகல்வீர் நும் திருநகர்க்கே – தஞ்-வா-கோவை:1 17 251/4
ஒருதலைக்கு எய்திய கல்லதர்க்கு செல்ல ஓர் உயிர்த்தாய் – தஞ்-வா-கோவை:1 17 257/1
நஞ்சோ அழலோ எனும் சுரமே செல்ல நாடிய என் – தஞ்-வா-கோவை:2 21 308/1

மேல்

செல்லல் (3)

கொந்து சுற்றும் குழலாய் செல்லல் நீ அ குளிர் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 12 157/4
வண்டு ஆர் குழலி சொல்லாய் செல்லல் ஏது உன் மனத்திடையே – தஞ்-வா-கோவை:1 15 209/4
இரவு ஏய் குழலி இன்று ஏதிலன் பின் செல்லல் என்று சொல்லா – தஞ்-வா-கோவை:2 22 344/1

மேல்

செல்லா (1)

இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே – தஞ்-வா-கோவை:2 25 362/4

மேல்

செல்லாது (1)

முனையகத்து அல்கல் செல்லாது ஒருநாளும் முகிழ்_நகையே – தஞ்-வா-கோவை:3 27 376/4

மேல்

செல்லாமல் (1)

உவலை பதுக்கை முரம்பு செல்லாமல் உலக மங்கை – தஞ்-வா-கோவை:2 25 363/1

மேல்

செல்லின் (1)

செல்லின் கொடிய களிற்று அண்ணல் வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:2 21 313/1

மேல்

செல்லும் (5)

செல்லும் சலஞ்சலம் போல் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 62/2
பொன்னூடு செல்லும் புகழ் மணி போல் நின் புடை அகலா – தஞ்-வா-கோவை:1 8 62/3
இல்லின் கொடிய-கொல்லோ செல்லும் நாட்டு அவ் இரும் சுரமே – தஞ்-வா-கோவை:2 21 313/4
பொழி நான மன்றல் அம் பூம் குழல் நீங்கள் புணர்ந்து செல்லும்
வழி நாடி நும் பின் வருகுவல் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:2 21 315/1,2
செல்லும் சுரத்து அழல் அன்று உன் கண்ணீர் என் தெறுகின்றதே – தஞ்-வா-கோவை:2 22 330/4

மேல்

செல்லும்படி (1)

பதி ஏது செல்லும்படி சொல்லுவீர் படி மேல் படிந்த – தஞ்-வா-கோவை:1 9 70/2

மேல்

செல்லுமால் (1)

நகில் ஏந்து பூங்கொடி போல் செல்லுமால் நெஞ்சம் நம் உயிரே – தஞ்-வா-கோவை:1 5 27/4

மேல்

செல்லுவரேனும் (1)

வினையகத்து அல்குதல் செல்லுவரேனும் அவ் வேந்தர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:3 27 376/3

மேல்

செல்லேன் (1)

தொழவே தகுந்த தெய்வம் நோக்கி செல்லேன் என்று சொல்லியும் நீ – தஞ்-வா-கோவை:2 20 292/3

மேல்

செல்லை (1)

செல்லை அம் பொன் பளிங்கின் தலம் பாதம் சிவப்பிக்கவே – தஞ்-வா-கோவை:1 13 183/4

மேல்

செல்வது (1)

சே ஆறு தேர் மிசை செல்வது எல்லாம் எங்கள் சேரியில் சென்று – தஞ்-வா-கோவை:2 25 361/3

மேல்

செல்வதே (1)

பிரியும் பொழுது எல்லி-வாய் வினையேன் மனம் பின் செல்வதே – தஞ்-வா-கோவை:1 15 220/4

மேல்

செல்வம் (1)

தாவாத செல்வம் தரும் தஞ்சைவாணன் தடம் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 16 240/1

மேல்

செல்வர் (1)

சிலை வந்ததோ எனும் நல்_நுதலாய் ஒரு செல்வர் இங்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 304/2

மேல்

செல்வரோ (1)

உள்ளம் சிறியவர் மேல் செல்வரோ ஒளிர் கோமளம் செய் – தஞ்-வா-கோவை:3 28 404/2

மேல்

செல்வல் (1)

சேறலை அஞ்சுவல் செல்வல் பைம் பூக செழும் பழுக்காய் – தஞ்-வா-கோவை:2 25 364/3

மேல்

செல்வனுமே (1)

தேன் நகு அம்போருக மாது_அனையாளும் ஒர் செல்வனுமே – தஞ்-வா-கோவை:2 22 346/4

மேல்

செல்வியர்க்கே (1)

தேம் தரு சோலை வெற்பா உங்கள் நாட்டு உறை செல்வியர்க்கே – தஞ்-வா-கோவை:1 13 166/4

மேல்

செல்வீர் (1)

அரு வெம் களர் இயைந்து ஆறு செல்வீர் அருளீர் எழு பார் – தஞ்-வா-கோவை:2 22 341/2

மேல்

செல (4)

சூழ்ந்தார் செல தொங்கல் சூழ் குழலாய் சொல் பொருள் படைத்து – தஞ்-வா-கோவை:1 11 142/2
என் மாலுறும் நெஞ்சின் முன் செல நாகு இள ஏறு புல்லி – தஞ்-வா-கோவை:1 18 274/2
செரு மகள் ஏயும் புயத்து அயலான் பின் செல விடுத்து என் – தஞ்-வா-கோவை:2 22 343/1
தூதாக அன்பர் செல துணிந்தார் என்றும் சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:3 31 414/1

மேல்

செலவே (1)

செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழும் கமல – தஞ்-வா-கோவை:1 17 252/3

மேல்

செலுத்திய (1)

செங்கோல் முறைமை செலுத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 55/2

மேல்

செவ் (10)

திரள் மா மரகத செய்குன்றுகாள் என்றும் செவ் வன நீர் – தஞ்-வா-கோவை:1 2 19/1
செவ் வாளியும் கொண்டு சேண் சென்றதால் அன்று சீதை கொண்கன் – தஞ்-வா-கோவை:1 9 79/3
தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 85/3
செவ் வேல் நுழைப்பவர் சீலம் அன்றோ திருவே மருவார் – தஞ்-வா-கோவை:1 10 113/2
செவ் வண்ண வேல்_விழியாய் தஞ்சைவாணன் தென்மாறை நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 10 120/1
பரக்கின்ற செவ் இதழ் பங்கய பாதம் பணிந்து நின்னை – தஞ்-வா-கோவை:1 10 121/1
தேமா இளந்தளிர் செவ் வண்ணம் கொய்து சிலம்பு எதிர்கூய் – தஞ்-வா-கோவை:1 10 131/2
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 15 226/3
வரைகேன் வரும் துணை வல்லியை நீ தஞ்சைவாணன் செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 17 248/2
வெண் பால் நலம் கொள் செவ் வாய் அன்னமே அன்ன மெல்_நடையே – தஞ்-வா-கோவை:3 32 417/4

மேல்

செவ்வி (5)

தேன் வந்த வாய் இதழ் சே_இழையாய் இளம் செவ்வி நவ்வி – தஞ்-வா-கோவை:1 10 111/1
சில் நாள்_மலர் குழல் காரணமா செவ்வி பார்த்து உழன்று – தஞ்-வா-கோவை:1 10 139/1
சினம் சாலும் வேல் அண்ணலே மறவேல் எம்மை செவ்வி இரு – தஞ்-வா-கோவை:1 11 154/3
சேரி அம் பொய்கை துறை அலர் வாட நின் செவ்வி மணம் – தஞ்-வா-கோவை:2 19 285/3
செவ்வி தகை மலர் தூய் தெய்வம் வாழ்த்தும் திரு தகவே – தஞ்-வா-கோவை:2 19 287/4

மேல்

செவ்வியிலே (1)

சிலை பயில் வாள் நுதல் மின்னே பிறந்த அ செவ்வியிலே
கொலை பயில் நாக குருளையை போல் குறியோன் இருந்த – தஞ்-வா-கோவை:1 10 109/1,2

மேல்

செவ்விளநீர்களும் (1)

பூரித்த செவ்விளநீர்களும் தாங்கி அ பூங்கொடிதான் – தஞ்-வா-கோவை:1 8 51/2

மேல்

செவ்வேள் (1)

எண் சாய வென்றனை என்று செவ்வேள் இவரும் பவளம் – தஞ்-வா-கோவை:1 10 132/2

மேல்

செவ்வேளுக்கு (1)

மை கார் நிகர் குழல் வள்ளி செவ்வேளுக்கு வல்லவையாம் – தஞ்-வா-கோவை:1 10 83/3

மேல்

செவ்வேளை (1)

வெண்குன்று எறிந்த செவ்வேளை இவ்வாறு என் விளம்பி – தஞ்-வா-கோவை:2 20 299/4

மேல்

செவிக்கு (1)

என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 47/1

மேல்

செவிக்கே (1)

இரு பால் மருங்கினும் கொண்டு எறிந்தால் ஒத்தது என் செவிக்கே – தஞ்-வா-கோவை:1 15 226/4

மேல்

செவிமடுத்தே (1)

திரையும் குயிலும் விடாது எழும் ஓசை செவிமடுத்தே – தஞ்-வா-கோவை:3 27 371/4

மேல்

செழியன் (1)

செழியன் கயலை திசை வைத்த வாணன் தென்மாறை என் மேல் – தஞ்-வா-கோவை:1 13 178/1

மேல்

செழும் (15)

செருந்து ஒன்று சோலை தென்மாறை அன்னீர் செழும் திங்கள் உங்கள் – தஞ்-வா-கோவை:1 2 9/2
சென்றே பகை வென்ற திண் படை வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 3 24/1
திறை கொண்ட வாணன் செழும் தஞ்சை சூழும் சிலம்பில் இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 45/3
திறல் ஆர் முருகன் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 9 66/2
திகழ் ஆபரணன் செழும் தஞ்சைவாணன் சிலம்பின் உள்ளீர் – தஞ்-வா-கோவை:1 10 86/3
திரை தென்கடல் முத்தும் தென்மலை சந்தும் செழும் பனி நீர் – தஞ்-வா-கோவை:1 10 93/2
சிறந்தார் தெரிந்த செழும் தமிழ்வாணன் தென்மாறை வெற்பர் – தஞ்-வா-கோவை:1 11 145/1
சென்றார் முகக்கும் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 149/2
கொந்து ஆர் அசோகம் தரும் செழும் போது கொழும் தழையும் – தஞ்-வா-கோவை:1 13 174/3
செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழும் கமல – தஞ்-வா-கோவை:1 17 252/3
தெளித்தார் செழும் தஞ்சைவாணன் ஒன்னாரின் நம் சிந்தை நைய – தஞ்-வா-கோவை:1 17 253/3
தேர் அணி வென்ற செழும் புகர் வேல் விழி தேன் இனம் சூழ் – தஞ்-வா-கோவை:2 20 289/3
தென்மாறை நல் நகர் மன்னவன் வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:2 23 354/1
சேறலை அஞ்சுவல் செல்வல் பைம் பூக செழும் பழுக்காய் – தஞ்-வா-கோவை:2 25 364/3
திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 398/3

மேல்

செற்றும் (1)

செற்றும் படையின் வெம் போர் தணிப்பான் அன்று சென்றவரே – தஞ்-வா-கோவை:3 31 416/4

மேல்

செறி (5)

செறி வேழ வெம் சிலை வேள் தஞ்சைவாணன் திருந்தலர் மேல் – தஞ்-வா-கோவை:1 2 6/1
தேனும் சுரும்பும் செறி தொங்கல் வாணன் தென்மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 90/1
செறி வளர் காவி வயல் தஞ்சைவாணன் சிறுமலை மேல் – தஞ்-வா-கோவை:1 10 92/1
செயிராத அன்னை செயிர்த்தனளோ செறி நாரை திண் போர் – தஞ்-வா-கோவை:2 20 288/2
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – தஞ்-வா-கோவை:2 22 336/3

மேல்

செறித்தார் (1)

விரல் என்று-கொல் செறித்தார் நெறி தாழ் குழல் மெல்_இயலே – தஞ்-வா-கோவை:1 14 195/4

மேல்

சென்ற (4)

பெற அரிதால் அவன் பின் சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு – தஞ்-வா-கோவை:1 12 162/1
வனை கழலானும் வருவது எல்லாம் சென்ற வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 23 351/3
நாளே அனைய நல் நாள் உளவோ சென்ற நாள்களிலே – தஞ்-வா-கோவை:2 23 353/4
சேரும் பரத்தையர் சேரியிலே சென்ற சேடியை கண்டு – தஞ்-வா-கோவை:3 28 384/3

மேல்

சென்றதால் (1)

செவ் வாளியும் கொண்டு சேண் சென்றதால் அன்று சீதை கொண்கன் – தஞ்-வா-கோவை:1 9 79/3

மேல்

சென்றதுவே (1)

செப்பு ஏர் இளம் கொங்கை மங்கை செப்பாது அன்பர் சென்றதுவே – தஞ்-வா-கோவை:1 18 264/4

மேல்

சென்றவரே (2)

தேர் ஆதவனுடனே நென்னல் மாலையில் சென்றவரே – தஞ்-வா-கோவை:1 11 144/4
செற்றும் படையின் வெம் போர் தணிப்பான் அன்று சென்றவரே – தஞ்-வா-கோவை:3 31 416/4

மேல்

சென்றார் (4)

கை வண்ண வார் தழை கொண்டு சென்றார் தமை கண்டுகண்டே – தஞ்-வா-கோவை:1 10 120/4
சென்றார் முகக்கும் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 149/2
வார் அணி கொங்கை மணந்து சென்றார் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 20 289/2
தேர் தனி வீரன் திருநாளும் வந்தது சேர்-மின் சென்றார்
தார் தட மேரு எனும் புய வாணன் தஞ்சாபுரி-நின்று – தஞ்-வா-கோவை:3 33 422/2,3

மேல்

சென்றார்-தம் (1)

பொன் தேரின் வந்து புணர்ந்து சென்றார்-தம் பொருட்டு நம்மை – தஞ்-வா-கோவை:1 10 127/2

மேல்

சென்றால் (1)

கடம் குன்று இரண்டும் கடந்து சென்றால் கமல தடமும் – தஞ்-வா-கோவை:2 21 321/2

மேல்

சென்றாலும் (1)

வெள்ளம் பரந்து அன்ன வேட்கை சென்றாலும் மிக பெரியோர் – தஞ்-வா-கோவை:3 28 404/1

மேல்

சென்றாள் (1)

தந்தும் கவையும் தணந்து சென்றாள் என தாள் பணியார் – தஞ்-வா-கோவை:2 22 339/2

மேல்

சென்று (21)

சென்று உந்து சேல் விழி மின்னை முன் நாள் தந்த தெய்வம் நமக்கு – தஞ்-வா-கோவை:1 7 34/3
மின் ஊடு நுண் இடையாருடன் நீ சென்று மேவுகவே – தஞ்-வா-கோவை:1 8 62/4
தரும் மணி பின் பெற்று அணிபவர் போல் சென்று சார்ந்து இரந்து – தஞ்-வா-கோவை:1 9 69/2
வண்டு ஆர் குழல் மடவார் மணந்தார் சென்று வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 76/2
ஆடாள்-தனக்கு என்-கொலோ அடியேன் சென்று அறிவிப்பதே – தஞ்-வா-கோவை:1 10 110/4
யான் வந்தவா சென்று இயம்புதியேல் அவர் யாவர் என்னாள் – தஞ்-வா-கோவை:1 10 111/3
ஏற்றாது ஒழி எனை எம்பெருமாட்டி சென்று ஏற்றவர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 126/2
நேசத்தவர் குறி என்று சென்று யான் குறி நின்று வந்தேன் – தஞ்-வா-கோவை:1 14 191/2
அடியோம் என சென்று அடையலர் போல் அயர்கின்ற நின் கை – தஞ்-வா-கோவை:1 14 192/2
சேவலும் வாரணமும் தஞ்சைவாணனை சென்று இறைஞ்சா – தஞ்-வா-கோவை:1 15 211/3
தம்-பால் உடன் சென்று சார்குவமோ தரியாரை வென்று – தஞ்-வா-கோவை:1 15 212/2
ஈன்றாளினும் எனக்கு அன்புடையாய் சென்று இரந்துகொண்டு – தஞ்-வா-கோவை:1 15 223/1
சொல் பழியார் நமர் சொல்லு வல்லே சென்று சொல்லலையேல் – தஞ்-வா-கோவை:1 15 227/3
உழை போல் அரி நெடும் கண் மயிலே சென்று உணர்த்து இதுவே – தஞ்-வா-கோவை:1 18 260/4
ஒழுகிய அஞ்சன வெள்ளத்து உணங்கும் அணங்கை முன் சென்று
எழுக எனும் நெஞ்சம் என்னே அவரோ எனில் என் சொல்லுமே – தஞ்-வா-கோவை:1 18 273/3,4
தூண்டும் பரி முன் துனை முகில்காள் சென்று சொல்லும் இந்து – தஞ்-வா-கோவை:1 18 275/2
சென்றே பரந்த திசைகள் எல்லாம் சென்று தேர்ந்து அணங்கை – தஞ்-வா-கோவை:2 22 340/3
நூபுரம் சூழ் அடியாய் சென்று கூறு நுமர்-தமக்கே – தஞ்-வா-கோவை:2 24 358/4
தளவு ஏய் நகை என் துணைவியர்-பால் சென்று சாற்று-மின் போர்க்கள – தஞ்-வா-கோவை:2 25 360/2
சே ஆறு தேர் மிசை செல்வது எல்லாம் எங்கள் சேரியில் சென்று
யாய் ஆகிய கொடியாட்கு இனிதாக இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:2 25 361/3,4
விரல் கால இன்று மெலியன்-மின்னே சென்று மேதினி காத்து – தஞ்-வா-கோவை:3 30 413/2

மேல்

சென்றுசென்று (1)

திருமான் முக மலர் சே அரி பாய் கயல் சென்றுசென்று அவ் – தஞ்-வா-கோவை:1 6 30/3

மேல்

சென்றுவந்து (1)

திரை கேதகை மணம் கூடும் எம் பாடியில் சென்றுவந்து யான் – தஞ்-வா-கோவை:1 17 248/1

மேல்

சென்றுழி (1)

செண்டும் கொடுத்து அகல் செம்பியர் போல் அன்பர் சென்றுழி முள் – தஞ்-வா-கோவை:1 18 266/2

மேல்

சென்றே (2)

சென்றே பகை வென்ற திண் படை வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 3 24/1
சென்றே பரந்த திசைகள் எல்லாம் சென்று தேர்ந்து அணங்கை – தஞ்-வா-கோவை:2 22 340/3

மேல்

சென்றேவரல் (1)

உறையும் குழலி சென்றேவரல் வேண்டும் எம் ஊரகத்தே – தஞ்-வா-கோவை:1 17 250/4

மேல்

சென்றேன் (2)

எல்லி அம் போது சென்றேன் என்று கேள்வர் இயம்பினரே – தஞ்-வா-கோவை:1 14 200/4
கான் நெடும் குன்றம் கடந்து சென்றேன் ஒருகாலும் மை தோய் – தஞ்-வா-கோவை:1 18 279/1

மேல்