கா – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 1
காக்கும் 1
காட்ட 1
காட்டலும் 1
காட்டியதால் 1
காட்டியதே 1
காட்டு 2
காட்டும் 1
காட்டுவர் 2
காடவி 1
காடு 1
காண் 4
காண்-தொறும் 2
காண்க 1
காண்கிலரால் 1
காண்டும் 1
காண்பது 1
காண்பர்களே 1
காண்பு 2
காண 3
காணாள் 1
காணிய-கொல் 2
காணின் 2
காணினும் 1
காத்த 1
காத்தருள் 1
காத்தலின் 1
காத்தனம் 1
காத்து 3
காத்தும் 1
காதர 1
காதல் 7
காதல்கொண்டு 1
காதலர் 10
காதலரே 2
காதலன் 3
காதலியொடு 1
காதலின் 2
காதலினால் 1
காதலுடன் 1
காதன்மையே 1
காது 1
காந்தள் 4
காந்தள 1
காந்தளம் 1
காம 8
காமம் 2
காமர் 1
காமவல்லி 1
காய்ந்து 2
காய்வர் 1
காயாமலர் 1
கார் 13
கார்முக 1
காரணத்தால் 1
காரணம் 6
காரணமா 2
காரணமாக 2
காரணமே 2
காரா 1
காரிகை 2
காரிகைக்கு 1
காரிகைக்கே 1
காரிகையாய் 2
காரிகையே 2
காரியமே 1
கால் 10
கால்கொள 1
கால்வனவாய் 1
கால 3
காலத்தினும் 1
காலத்து 2
காலத்தும் 1
காலம் 2
காலும் 4
காலை 4
காலையில் 1
காலையிலே 1
காவல் 11
காவலர் 6
காவலரே 1
காவலன் 8
காவலனே 1
காவலனை 1
காவலும் 1
காவி 5
காவியும் 1
காவிரி 2
காவில் 1
காவினிடம் 1
காவும் 3
காள 2
காளம் 1
காளமும் 1
காளை 8
கான் 15
கான்றது 1
கான 1
கானகம் 3
கானத்து 1
கானம் 2
கானமுமே 1
கானல் 6
கானவர் 1
கானவரேல் 1
கானிடையே 1
கானில் 2

கா (1)

கான கடி வரை-வாய் விரை நாள்_மலர் கா அகத்தே – தஞ்-வா-கோவை:1 2 17/4

மேல்

காக்கும் (1)

காக்கும் புனம் மருங்கே தனியே வர கண்டிலமே – தஞ்-வா-கோவை:1 9 78/4

மேல்

காட்ட (1)

கொடி ஒன்று நீலம் மலர்ந்தது காட்ட கொடிய வெம் போர் – தஞ்-வா-கோவை:3 28 383/2

மேல்

காட்டலும் (1)

அவளை மறைத்து உன்னை காட்டலும் மா மலர் தேன் குதிக்க – தஞ்-வா-கோவை:1 9 67/2

மேல்

காட்டியதால் (1)

கடி மலர் சூட்டவும் காட்டியதால் கள்வர் காய்ந்து எறியும் – தஞ்-வா-கோவை:2 21 318/2

மேல்

காட்டியதே (1)

கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை யாவதும் காட்டியதே – தஞ்-வா-கோவை:1 1 4/4

மேல்

காட்டு (2)

நின் ஊரகம் புகுந்தால் குறி காட்டு நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 13 188/4
தூரியம் சங்கு அதிர காட்டு நீ அன்று சூட்டு அலரே – தஞ்-வா-கோவை:2 19 285/4

மேல்

காட்டும் (1)

காவியும் சேலும் கமலமும் காட்டும் நின் கண் மலரும் – தஞ்-வா-கோவை:1 3 20/3

மேல்

காட்டுவர் (2)

தொலையாத இன்பமும் துன்பமும் காட்டுவர் தூங்கு அருவி – தஞ்-வா-கோவை:1 11 147/3
கரியோர் தெளித்து என்ன காரணம் காட்டுவர் கான் உண்டு தேன் – தஞ்-வா-கோவை:3 28 397/2

மேல்

காடவி (1)

கானகம் போயினர் கண்டனிரோ கற்ப காடவி சூழ் – தஞ்-வா-கோவை:2 22 346/2

மேல்

காடு (1)

காடு ஆர் பழன கழனி நல் நாடு கடந்து தன் ஊர் – தஞ்-வா-கோவை:2 23 349/3

மேல்

காண் (4)

பின் பார்த்து ஒதுங்குதல் காண் வலவா ஒரு பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 5 28/4
முன்னே நடந்தன காண் கடும் கால முகில் இனமே – தஞ்-வா-கோவை:1 18 271/4
வந்தனம் காண் இது காண் வாணன் மாறை வள நகரே – தஞ்-வா-கோவை:2 21 322/4
வந்தனம் காண் இது காண் வாணன் மாறை வள நகரே – தஞ்-வா-கோவை:2 21 322/4

மேல்

காண்-தொறும் (2)

கையும் தழையும் முன் காண்-தொறும் காண்-தொறும் கட்டுரைத்த – தஞ்-வா-கோவை:1 10 124/1
கையும் தழையும் முன் காண்-தொறும் காண்-தொறும் கட்டுரைத்த – தஞ்-வா-கோவை:1 10 124/1

மேல்

காண்க (1)

குருகு இன்று அணித்து இறைகொள்வது காண்க நம் கொண்கர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 18 276/2

மேல்

காண்கிலரால் (1)

காண பிரிந்தவர் காண்கிலரால் கடல் மேய்ந்து தஞ்சை – தஞ்-வா-கோவை:3 29 409/2

மேல்

காண்டும் (1)

சோகாகுலம் எய்தல் காண்டும் நெஞ்சே நம் துறைவர் எனும் – தஞ்-வா-கோவை:2 19 284/1

மேல்

காண்பது (1)

காண தகும் என்று காண்பது அல்லால் கழி காதல் நெஞ்சு – தஞ்-வா-கோவை:1 11 148/2

மேல்

காண்பர்களே (1)

கான் கண்ட மெய் குளிர பொய்கை சூழ் தஞ்சை காண்பர்களே – தஞ்-வா-கோவை:2 22 347/4

மேல்

காண்பு (2)

கழை வளர் சாரலில் கண்டு உனை யான் வந்து காண்பு அளவும் – தஞ்-வா-கோவை:1 8 50/3
கன்னல் கடிகை அறிவது அல்லால் பகல் காண்பு அரிதாம் – தஞ்-வா-கோவை:3 32 418/3

மேல்

காண (3)

காண தகும் என்று காண்பது அல்லால் கழி காதல் நெஞ்சு – தஞ்-வா-கோவை:1 11 148/2
காணினும் காண அந்தோ அரிதால் இந்த கானிடையே – தஞ்-வா-கோவை:2 22 348/4
காண பிரிந்தவர் காண்கிலரால் கடல் மேய்ந்து தஞ்சை – தஞ்-வா-கோவை:3 29 409/2

மேல்

காணாள் (1)

காணாள் கலங்கினளால் கலங்கா மன காவலனே – தஞ்-வா-கோவை:1 16 246/4

மேல்

காணிய-கொல் (2)

தான் காணிய-கொல் இ சந்தன சோலையை தன்னை இன்று – தஞ்-வா-கோவை:1 12 160/3
யான் காணிய-கொல் எழுந்தருளாதது இன்று என் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 160/4

மேல்

காணின் (2)

கல் ஆர் வியன் புனம் காவல் விடார் அவர் காணின் மிக – தஞ்-வா-கோவை:1 10 96/2
கண் போலும் எங்கையர் காணின் நன்றோ கயல் மாதிரத்து – தஞ்-வா-கோவை:3 28 398/2

மேல்

காணினும் (1)

காணினும் காண அந்தோ அரிதால் இந்த கானிடையே – தஞ்-வா-கோவை:2 22 348/4

மேல்

காத்த (1)

கண்டால் அருள் உள்ள நீ எனது ஆருயிர் காத்த பின்னே – தஞ்-வா-கோவை:1 10 95/4

மேல்

காத்தருள் (1)

நிரையும் இ ஞாலமும் காத்தருள் தானன் பதாகையின் நீள் – தஞ்-வா-கோவை:3 27 371/3

மேல்

காத்தலின் (1)

ஏ மான் என அஞ்சும் என் காத்தலின் அவ் இரவி பொன் தேர் – தஞ்-வா-கோவை:2 25 365/1

மேல்

காத்தனம் (1)

காவலரே மனம் காத்தனம் யாம் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 11 155/2

மேல்

காத்து (3)

தரு-வாய் தழை கொய்து தண் புனம் காத்து தடம் குடைந்து – தஞ்-வா-கோவை:1 7 35/2
எங்கே இனி தங்குவார் ஏனல் காத்து இங்கு இருந்தவரே – தஞ்-வா-கோவை:1 12 161/4
விரல் கால இன்று மெலியன்-மின்னே சென்று மேதினி காத்து
உரல் கால குஞ்சரம் அஞ்ச மஞ்சூ ஊர்ந்து உறை வீசுகின்ற – தஞ்-வா-கோவை:3 30 413/2,3

மேல்

காத்தும் (1)

கழை விளையாடும் கடி புனம் காத்தும் கலை அகலாது – தஞ்-வா-கோவை:1 16 238/2

மேல்

காதர (1)

தேங்கிய காதர ஆதரம் செப்பி தண் செப்பு இணை போல் – தஞ்-வா-கோவை:1 2 5/1

மேல்

காதல் (7)

பின்னிய காதல் பிரிப்பவர் யார் இனி பேர் அருவி – தஞ்-வா-கோவை:1 3 22/3
பொன் காதல் கொண்டு தொழும் சிலம்பு ஆர் அடி பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 61/4
புகழ் ஆர் வரை எம் புரவலன் காதல் புதல்வியை நீர் – தஞ்-வா-கோவை:1 10 86/1
காண தகும் என்று காண்பது அல்லால் கழி காதல் நெஞ்சு – தஞ்-வா-கோவை:1 11 148/2
கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே – தஞ்-வா-கோவை:3 28 395/2
பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன் – தஞ்-வா-கோவை:3 28 402/2
காதல் கயம் படிந்து உன்னொடு காம களி நுகராது – தஞ்-வா-கோவை:3 29 410/1

மேல்

காதல்கொண்டு (1)

புயம் காதல்கொண்டு அணைந்தாள் அயனார் தந்த பூமகளே – தஞ்-வா-கோவை:2 22 342/4

மேல்

காதலர் (10)

கட வாரணம் திரி கங்குல் நம் கண் அன்ன காதலர் முள் – தஞ்-வா-கோவை:1 13 170/3
கங்குல் அவாவினர் காதலர் ஆயின் களி பயந்த – தஞ்-வா-கோவை:1 13 171/3
இன்னே வருவர் நின் காதலர் ஏதிலர் ஏங்க இனி – தஞ்-வா-கோவை:1 18 271/1
அன்புற்ற காதலர் ஆதலினால் அகன்றார் என நாம் – தஞ்-வா-கோவை:1 18 272/2
தொலைவு இலை ஆகிய பல் பொருள் காதலர் சூது அமர் நின் – தஞ்-வா-கோவை:2 19 281/1
எம் காதலர் இருள் எய்தல் கண்டாள் இந்த ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 296/2
புனை அலர் ஏதிலர் காதலர் தாயர் பொறாமையில் போய் – தஞ்-வா-கோவை:2 23 351/1
கன்னாடர் மண் கொண்ட வாணன் தென்மாறையில் காதலர் தாம் – தஞ்-வா-கோவை:2 24 356/3
கல்வி தடம் கடல் நீந்திய காதலர் கற்றவர் முன் – தஞ்-வா-கோவை:3 29 408/3
மன்னற்கு உதவி பிரிந்த நம் காதலர் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 32 418/2

மேல்

காதலரே (2)

கயல் ஏறு அனைய நின்-பால் வரல் வேண்டினர் காதலரே – தஞ்-வா-கோவை:1 13 169/4
காரணத்தால் அல்லவோ பிரிந்தார் இன்று காதலரே – தஞ்-வா-கோவை:1 18 265/4

மேல்

காதலன் (3)

காதலன் தஞ்சைவாணன் தென்மாறை தண் தாமரை வாழ் – தஞ்-வா-கோவை:1 8 61/3
வெண் தாமரை மங்கை காதலன் ஆகிய வேதியன்-பால் – தஞ்-வா-கோவை:1 10 95/1
காதலன் பின் வர கண்டனம் யாம் கண்டல் வேலி முந்நீர் – தஞ்-வா-கோவை:2 23 352/2

மேல்

காதலியொடு (1)

நின் காதலியொடு நீ வரல் வேண்டும் நிலமடந்தை-தன் – தஞ்-வா-கோவை:1 8 61/2

மேல்

காதலின் (2)

என் காதலின் ஒன்று இயம்புகின்றேன் இங்கு இனி வருங்கால் – தஞ்-வா-கோவை:1 8 61/1
யான் கண்ட அண்ணலும் எண் அரும் காதலின் ஏகிய என் – தஞ்-வா-கோவை:2 22 347/1

மேல்

காதலினால் (1)

எற்றிய காதலினால் இசைத்தாள் அன்னை என்று உரையே – தஞ்-வா-கோவை:1 15 224/4

மேல்

காதலுடன் (1)

உளம் கனி காதலுடன் நின்றதால் நின் உடலம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 56/2

மேல்

காதன்மையே (1)

கை அணி வால் வளையை கண்ட நாளினும் காதன்மையே – தஞ்-வா-கோவை:3 28 390/4

மேல்

காது (1)

காது அளவா வெம் கடு அளவா ஒளிர் காவி அம் தண் – தஞ்-வா-கோவை:1 8 46/2

மேல்

காந்தள் (4)

கோள் இணை கோல குரும்பை கை காந்தள் கொடி கரும்பு ஆர் – தஞ்-வா-கோவை:1 10 85/2
கண் சாயல் கை உரு கொண்டு தன் வேல் மயில் காந்தள் வள்ளி – தஞ்-வா-கோவை:1 10 132/1
முரலும் தளை அவிழ் மொய் மலர் காந்தள் அம் செம் மலர் கை – தஞ்-வா-கோவை:1 14 195/3
குருதி கண்டால் அன்ன காந்தள் அம் சாரல் குறி வெறிதே – தஞ்-வா-கோவை:1 16 233/1

மேல்

காந்தள (1)

கணி பொன் சொரியும் நின் சாரல் மென் காந்தள கையகத்தே – தஞ்-வா-கோவை:1 3 25/4

மேல்

காந்தளம் (1)

வகை கொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின் முத்தம் – தஞ்-வா-கோவை:1 13 168/1

மேல்

காம (8)

கறை ஆர் இலங்கு இலை வேல் அன்பர் காம கடற்கு எதிர்ந்த – தஞ்-வா-கோவை:1 2 14/1
காம கனல் அவர் கையகல் காலை கடும் பனி கூர் – தஞ்-வா-கோவை:1 6 33/3
நம் கோன் மெலிய நலிகின்ற காம வெம் நஞ்சினை – தஞ்-வா-கோவை:1 8 55/3
பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காம பிணி-தனக்கு – தஞ்-வா-கோவை:1 10 101/3
களவு அரும்பா கருநீலங்கள் காம கடவுளும் மால் – தஞ்-வா-கோவை:1 10 108/1
பின்னாக முன் வந்த பேதை தன் காம பெரும் கடற்கு – தஞ்-வா-கோவை:1 16 245/3
மன்னவர் காம நெடும் கடல் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:3 28 387/1
காதல் கயம் படிந்து உன்னொடு காம களி நுகராது – தஞ்-வா-கோவை:3 29 410/1

மேல்

காமம் (2)

காவலர் காமம் துறக்கில் என்னாம் கடம் பாய் மதுகை – தஞ்-வா-கோவை:1 11 146/2
புள் அம் புனல் வயல் ஊர புன் காமம் புகல்வது அன்றே – தஞ்-வா-கோவை:3 28 404/4

மேல்

காமர் (1)

கறுத்தார் புரத்து நடந்தனள் காளை பின் காமர் கற்பால் – தஞ்-வா-கோவை:2 22 324/3

மேல்

காமவல்லி (1)

பொலம் காமவல்லி கடைந்த அப்போது புடைபெயர்ந்து – தஞ்-வா-கோவை:1 8 54/3

மேல்

காய்ந்து (2)

கல் ஏய் கவலை கடம் கடந்தார் நமர் காய்ந்து எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:1 18 263/2
கடி மலர் சூட்டவும் காட்டியதால் கள்வர் காய்ந்து எறியும் – தஞ்-வா-கோவை:2 21 318/2

மேல்

காய்வர் (1)

காவலர் காய்வர் நிலா மதி காலும் கடும் குடிஞை – தஞ்-வா-கோவை:1 15 211/2

மேல்

காயாமலர் (1)

காயாமலர் அன்ன மேனி மெய் ஆக நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 129/3

மேல்

கார் (13)

நாவியும் கார் அகில் ஆவியும் தோய்_குழல் நாணி அஞ்சேல் – தஞ்-வா-கோவை:1 3 20/1
கனமே குழல் செங்கயலே விழி மொழி கார் குயிலே – தஞ்-வா-கோவை:1 8 49/1
கான் ஏய் அளகம் கரும் புயலே இயல் கார் மயிலே – தஞ்-வா-கோவை:1 8 52/1
விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார்
தளைக்கும் குழல் திருவே தொழவே தகும் தன்மையதே – தஞ்-வா-கோவை:1 9 64/3,4
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார்
புரை யானை அம்பொடு போந்தது உண்டோ என்பர் பூங்கொடியீர் – தஞ்-வா-கோவை:1 9 74/2,3
மை கார் நிகர் குழல் வள்ளி செவ்வேளுக்கு வல்லவையாம் – தஞ்-வா-கோவை:1 10 83/3
கார் ஏற்ற கங்குலின் பீர் அலர் போன்றது காவி உண்கண் – தஞ்-வா-கோவை:1 16 247/2
உகவும் துறந்தவர் உன்னலரால் உறை கார் பொழிய – தஞ்-வா-கோவை:1 18 268/2
வன்புற்ற கார் அளிக்கும் தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:1 18 272/4
கார் அணி மென் குழலாய் அதுவே கலுழ் காரணமே – தஞ்-வா-கோவை:2 20 289/4
கார் உறை சோலையில் யாம் விளையாடிய காலையிலே – தஞ்-வா-கோவை:2 20 300/4
கண் காவல் கொண்டு அருள் காரிகை காவலர் கார் கடல் சூழ் – தஞ்-வா-கோவை:3 30 411/2
கைத்தலம் மான இனி பொழி வாழிய கார் முகிலே – தஞ்-வா-கோவை:3 33 425/4

மேல்

கார்முக (1)

வெம் கார்முக வெம் புருவ மின்னே அன்னை மேல் ஒருநாள் – தஞ்-வா-கோவை:2 20 296/1

மேல்

காரணத்தால் (1)

காரணத்தால் அல்லவோ பிரிந்தார் இன்று காதலரே – தஞ்-வா-கோவை:1 18 265/4

மேல்

காரணம் (6)

இ காரணம் உணராது என்-கொலோ நின்று இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 10 83/4
கயல் வென்ற உண்கண்ணி காரணம் ஏது-கொல் கைதை அம் கான் – தஞ்-வா-கோவை:1 14 190/1
கண்டார் அறியும்படியனவே அல்ல காரணம் ஒன்று – தஞ்-வா-கோவை:2 20 303/3
நின் மேல் அடுத்த பசலையின் காரணம் நின் துணைவி – தஞ்-வா-கோவை:3 27 367/1
அயர் காரணம் ஆகும் என்றே கொங்கை யானையுடன் – தஞ்-வா-கோவை:3 28 377/2
கரியோர் தெளித்து என்ன காரணம் காட்டுவர் கான் உண்டு தேன் – தஞ்-வா-கோவை:3 28 397/2

மேல்

காரணமா (2)

வல் மேல் அடர் கொங்கை காரணமா தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 47/2
சில் நாள்_மலர் குழல் காரணமா செவ்வி பார்த்து உழன்று – தஞ்-வா-கோவை:1 10 139/1

மேல்

காரணமாக (2)

கரவாத பொன்னை நின் காரணமாக கயிலை என்றே – தஞ்-வா-கோவை:1 13 172/2
கற்பு அழியாமலும் காரணமாக கயல்_விழி நின் – தஞ்-வா-கோவை:1 15 227/2

மேல்

காரணமே (2)

கனமா நறும் குழலீர் மொழியாது ஒழி காரணமே – தஞ்-வா-கோவை:1 9 73/4
கார் அணி மென் குழலாய் அதுவே கலுழ் காரணமே – தஞ்-வா-கோவை:2 20 289/4

மேல்

காரா (1)

காரா கழனி கரும்பு இனம் சாய கதழ்ந்து செந்நெல் – தஞ்-வா-கோவை:3 28 380/3

மேல்

காரிகை (2)

கழல் கண்டது அன்ன கதிர் முத்த மாளிகை காரிகை நின் – தஞ்-வா-கோவை:1 8 60/3
கண் காவல் கொண்டு அருள் காரிகை காவலர் கார் கடல் சூழ் – தஞ்-வா-கோவை:3 30 411/2

மேல்

காரிகைக்கு (1)

கலை வந்ததோ என வந்து வினாவி நம் காரிகைக்கு
முலை வந்ததோ இல்லையோ என்னும் நாளில் முயங்கினரே – தஞ்-வா-கோவை:2 20 304/3,4

மேல்

காரிகைக்கே (1)

கையால் அழைப்பன போல் இமையாநிற்கும் காரிகைக்கே – தஞ்-வா-கோவை:1 1 3/4

மேல்

காரிகையாய் (2)

கரியோர் பிறர் இல்லை என்று அகன்றார் இனி காரிகையாய்
பெரியோர் மொழி பிறழார் என்று தேறுதல் பேதைமையே – தஞ்-வா-கோவை:2 20 291/3,4
தார் ஆகம் நல்கினர் காரிகையாய் தஞ்சைவாணன்-தன்னை – தஞ்-வா-கோவை:3 28 380/1

மேல்

காரிகையே (2)

கன்னியர் தாம் பலர் யார் நின்னை வாட்டிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 84/4
கரக்கின்றது என்னை-கொல் என் உயிர் ஆகிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 121/4

மேல்

காரியமே (1)

கறி வளர் சாரல் வெற்பா பிறரால் என்ன காரியமே – தஞ்-வா-கோவை:1 10 92/4

மேல்

கால் (10)

கொலை கால் அயில் படை நேரியர்கோன் அகம் கோட அங்கை – தஞ்-வா-கோவை:1 8 53/1
சிலை கால் வளைத்து திருத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 53/2
வலை கால் பிணிப்ப வந்தார் வருந்தாரல்லர் மால் உழந்தே – தஞ்-வா-கோவை:1 8 53/4
கலை தொட கீண்ட கருவி அம் தேன் பல கால் கொடு மா – தஞ்-வா-கோவை:1 10 118/1
கழி அன்பு உடைய நின் கால் கண்களாக கராம் பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 178/2
கால் வண்டல் வையை கரை மல்கும் மல்லிகை கால் முகையின் – தஞ்-வா-கோவை:1 18 277/3
கால் வண்டல் வையை கரை மல்கும் மல்லிகை கால் முகையின் – தஞ்-வா-கோவை:1 18 277/3
நாக புகர் செய்ய புள்ளி பைம் கால் ஞெண்டு நாகு இளம் தண் – தஞ்-வா-கோவை:2 20 293/2
நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி – தஞ்-வா-கோவை:2 21 322/3
கால் கொண்ட வாள் அமர் கையகல் பாசறை கை-வயின் முள்கோல் – தஞ்-வா-கோவை:3 33 424/2

மேல்

கால்கொள (1)

முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண் – தஞ்-வா-கோவை:1 8 53/3

மேல்

கால்வனவாய் (1)

கை தோய்ந்து அளிப்ப அசோகத்தவாய் நிறம் கால்வனவாய்
நெய் தோய்ந்து அன தழையே புணையா கொண்டு நீந்தினனே – தஞ்-வா-கோவை:3 27 370/3,4

மேல்

கால (3)

முன்னே நடந்தன காண் கடும் கால முகில் இனமே – தஞ்-வா-கோவை:1 18 271/4
விரல் கால இன்று மெலியன்-மின்னே சென்று மேதினி காத்து – தஞ்-வா-கோவை:3 30 413/2
உரல் கால குஞ்சரம் அஞ்ச மஞ்சூ ஊர்ந்து உறை வீசுகின்ற – தஞ்-வா-கோவை:3 30 413/3

மேல்

காலத்தினும் (1)

கரை தாவி உந்திய காவிரி வைகிய காலத்தினும்
தரை தாரு அன்ன செம் தண்ணளி வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 9 71/1,2

மேல்

காலத்து (2)

இன்புற்ற காலத்து இருவர்க்கும் ஒன்று உயிர் என்று சொன்னார் – தஞ்-வா-கோவை:1 18 272/1
துன்புற்ற காலத்து அவரும் உறாரல்லர் தோழி சொல்லும் – தஞ்-வா-கோவை:1 18 272/3

மேல்

காலத்தும் (1)

ஊறாத காலத்தும் ஊறு தண் சாரல் ஒதுக்கிடம் தந்து – தஞ்-வா-கோவை:1 2 11/2

மேல்

காலம் (2)

கண்டு ஆதரவை எல்லாம் சொல்லவே நல்ல காலம் இதே – தஞ்-வா-கோவை:1 9 76/4
வரல் காலம் என்று என்று என பல கூடல்வளைத்து உதிரம் – தஞ்-வா-கோவை:3 30 413/1

மேல்

காலும் (4)

காவலர் காய்வர் நிலா மதி காலும் கடும் குடிஞை – தஞ்-வா-கோவை:1 15 211/2
கனம் சேர்ந்து அலர் துளி காலும் முன்னே வம்பு காலும் என்னா – தஞ்-வா-கோவை:1 18 269/3
கனம் சேர்ந்து அலர் துளி காலும் முன்னே வம்பு காலும் என்னா – தஞ்-வா-கோவை:1 18 269/3
ஆவித்து அகம் தளரும் மணி காலும் அரா என்னவே – தஞ்-வா-கோவை:1 18 270/4

மேல்

காலை (4)

காம கனல் அவர் கையகல் காலை கடும் பனி கூர் – தஞ்-வா-கோவை:1 6 33/3
காலை அம்போருக வாள் முகத்தாள் அன்பர் கையகல – தஞ்-வா-கோவை:1 11 143/1
காலை பொழுது கடும் பரி தேர் பண்ணி கானகம் போய் – தஞ்-வா-கோவை:1 18 262/1
ஏகா இருள் கங்குலாம் கடல் காலை எனும் கரையே – தஞ்-வா-கோவை:2 19 284/4

மேல்

காலையில் (1)

காலையில் வா பின்னை என் கையதாகும் நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 100/4

மேல்

காலையிலே (1)

கார் உறை சோலையில் யாம் விளையாடிய காலையிலே – தஞ்-வா-கோவை:2 20 300/4

மேல்

காவல் (11)

புனம் காவல் அன்று இவள் பூண்டதும் ஆண்டகை போந்ததும் மான் – தஞ்-வா-கோவை:1 9 80/1
இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை – தஞ்-வா-கோவை:1 9 80/2
மனம் காவல் கொண்டது எல்லாம் கண்களே சொல்லும் வாய் திறந்தே – தஞ்-வா-கோவை:1 9 80/4
கல் ஆர் வியன் புனம் காவல் விடார் அவர் காணின் மிக – தஞ்-வா-கோவை:1 10 96/2
கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரி தேர் இல்லை காவல் வெய்யோற்கு – தஞ்-வா-கோவை:1 13 177/2
கழி நீடும் ஆடக மேருவின் மீதினும் காவல் கொண்டு – தஞ்-வா-கோவை:1 13 180/2
என் உற்றது என்று அறியேன் புனம் காவல் இருந்த பின்னே – தஞ்-வா-கோவை:2 20 297/4
விண் காவல் கொண்ட திலோத்தமை தான் முதல் மெல்_இயலார் – தஞ்-வா-கோவை:3 30 411/1
கண் காவல் கொண்டு அருள் காரிகை காவலர் கார் கடல் சூழ் – தஞ்-வா-கோவை:3 30 411/2
மண் காவல் கொண்ட மனத்தினர் ஆயினர் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 30 411/3
பண் காவல் கொண்ட மொழி செய்ய வாய் இதழ் பைங்கிளியே – தஞ்-வா-கோவை:3 30 411/4

மேல்

காவலர் (6)

காவலர் காமம் துறக்கில் என்னாம் கடம் பாய் மதுகை – தஞ்-வா-கோவை:1 11 146/2
கயல் கண் இணை அஞ்சி நீர் மல்க காவலர் கை பறையின் – தஞ்-வா-கோவை:1 14 205/3
காவலர் காய்வர் நிலா மதி காலும் கடும் குடிஞை – தஞ்-வா-கோவை:1 15 211/2
துஞ்சாள் கடும் துடி கை நகர் காவலர் துஞ்சினுமே – தஞ்-வா-கோவை:1 16 244/4
கண் காவல் கொண்டு அருள் காரிகை காவலர் கார் கடல் சூழ் – தஞ்-வா-கோவை:3 30 411/2
என் உயிர் காவலர் ஏந்து_இழையாய் இதயம் புலர்த்தி – தஞ்-வா-கோவை:3 30 412/2

மேல்

காவலரே (1)

காவலரே மனம் காத்தனம் யாம் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 11 155/2

மேல்

காவலன் (8)

தமிழ் தங்கிய தஞ்சை காவலன் வாணன் தடம் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 2 13/1
கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரை கன்னி பொன் நாண் – தஞ்-வா-கோவை:1 2 18/2
தலம் காவலன் தஞ்சைவாணன் முந்நீர் பொரும் தண் பொருந்தத்து – தஞ்-வா-கோவை:1 8 54/1
தனம் காவலன் தஞ்சைவாணன் நல் நாட்டு இவர் தங்களில் தாம் – தஞ்-வா-கோவை:1 9 80/3
வாவும் கலை விந்தை காவலன் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 10 81/1
மணி மாளிகை வைத்த வாணன் மண் காவலன் மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 130/2
மாறையர் காவலன் வாணன் தென் தஞ்சையில் வாள்_நுதற்கு இவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 377/1
மன் உயிர் காவலன் வாணன் தென்மாறையில் வந்து அளியார் – தஞ்-வா-கோவை:3 30 412/1

மேல்

காவலனே (1)

காணாள் கலங்கினளால் கலங்கா மன காவலனே – தஞ்-வா-கோவை:1 16 246/4

மேல்

காவலனை (1)

சான்றாண்மை அன்பர்-தமக்கு உரை நீ தஞ்சை காவலனை
தேன் தாழ் வரை தமிழ் சேர்த்திய வாணனை சேரலர்க்கும் – தஞ்-வா-கோவை:1 15 223/2,3

மேல்

காவலும் (1)

ஏனல் அம் காவலும் இன்றே ஒழிந்தனம் ஏழ் புவிக்கும் – தஞ்-வா-கோவை:1 11 153/3

மேல்

காவி (5)

காது அளவா வெம் கடு அளவா ஒளிர் காவி அம் தண் – தஞ்-வா-கோவை:1 8 46/2
செறி வளர் காவி வயல் தஞ்சைவாணன் சிறுமலை மேல் – தஞ்-வா-கோவை:1 10 92/1
துறை அலர் ஆவி அம் காவி அம் கண்ணி துணிந்து சொல்லும் – தஞ்-வா-கோவை:1 10 105/3
செல் காவி அன்ன விழி திருவே நின் திருமனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 185/4
கார் ஏற்ற கங்குலின் பீர் அலர் போன்றது காவி உண்கண் – தஞ்-வா-கோவை:1 16 247/2

மேல்

காவியும் (1)

காவியும் சேலும் கமலமும் காட்டும் நின் கண் மலரும் – தஞ்-வா-கோவை:1 3 20/3

மேல்

காவிரி (2)

கரை தாவி உந்திய காவிரி வைகிய காலத்தினும் – தஞ்-வா-கோவை:1 9 71/1
மா காவிரி அன்ன வாணன் தென்மாறை மன்னன் பகையும் – தஞ்-வா-கோவை:2 19 284/3

மேல்

காவில் (1)

குறி வளர் காவில் முன் கூடியவாறு இன்னும் கூடுக நீ – தஞ்-வா-கோவை:1 10 92/3

மேல்

காவினிடம் (1)

இன் இயல் ஆரும் இளமர காவினிடம் பிரியா – தஞ்-வா-கோவை:1 10 84/3

மேல்

காவும் (3)

காவும் தரவும் வல்லேன் எனை ஆளும் கடைக்கண் வைத்தே – தஞ்-வா-கோவை:1 10 81/4
அளி போல் குளிர்ந்த இள மர காவும் அவன் புகழின் – தஞ்-வா-கோவை:2 21 316/2
கழங்கு ஆடிடமும் கடி மலர் காவும் கடந்து புள்ளும் – தஞ்-வா-கோவை:3 28 402/3

மேல்

காள (2)

பயில் காள பந்தி புயல் அன்ன ஓதியை பைங்கிள்ளைகாள் – தஞ்-வா-கோவை:1 11 152/1
அயில் காள வெம் கதிர் வேல் அன்பர் சால அயர்ப்பினுமே – தஞ்-வா-கோவை:1 11 152/4

மேல்

காளம் (1)

குயில் காளம் எங்கும் இயம்பு தண் சோலையில் கூடி இன்பம் – தஞ்-வா-கோவை:1 11 152/3

மேல்

காளமும் (1)

உழையும் வெம் காளமும் போலும் கண்ணாள் ஒருகாலம் உள்ளம் – தஞ்-வா-கோவை:1 10 99/1

மேல்

காளை (8)

கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள் – தஞ்-வா-கோவை:2 19 282/1
கறுத்தார் புரத்து நடந்தனள் காளை பின் காமர் கற்பால் – தஞ்-வா-கோவை:2 22 324/3
கழியாத அன்புடை காளை பின் நாளை கலந்து கொண்டல் – தஞ்-வா-கோவை:2 22 326/2
மாயம் புகல் ஒரு காளை பின் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:2 22 331/3
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/4
இயங்கா வனம் என் மகள் ஒரு காளை பின் ஏகினள் என்று – தஞ்-வா-கோவை:2 22 342/1
அடு சிலை காளை அடி அவையே அறிந்தோர் அறிய – தஞ்-வா-கோவை:2 22 345/2
வேள் அனைய ஓர் காளை பின் போயினள் கான் பனி நீத்து – தஞ்-வா-கோவை:2 25 360/3

மேல்

கான் (15)

கான் ஏய் அளகம் கரும் புயலே இயல் கார் மயிலே – தஞ்-வா-கோவை:1 8 52/1
கானல் அம் கான் மலர் கள் வாய் கரும் கணி கட்டுரையால் – தஞ்-வா-கோவை:1 11 153/1
கயல் வென்ற உண்கண்ணி காரணம் ஏது-கொல் கைதை அம் கான்
அயல் நின்ற புன்னையின் அன்னம் எலாம் அடல் ஆழி அங்கை – தஞ்-வா-கோவை:1 14 190/1,2
கான் உற்ற கானல் கனை இருள்-வாய் வர கற்பித்த நீ – தஞ்-வா-கோவை:1 14 193/3
வல்லியம் போதகம் போர் பயில் கான் வந்து வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 14 200/2
நஞ்சு ஆர் அரவம் திரிதரு கான் நடுநாள் இரவில் – தஞ்-வா-கோவை:1 16 244/1
இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய் – தஞ்-வா-கோவை:1 18 266/3
கான் நெடும் குன்றம் கடந்து சென்றேன் ஒருகாலும் மை தோய் – தஞ்-வா-கோவை:1 18 279/1
மக நல்கும் மந்தி அம் கான் நடந்தாள் உன் மடந்தை இன்றே – தஞ்-வா-கோவை:2 22 328/4
வெம் சுர நாடு வியன் சுரலோகமும் வெம் கடும் கான்
ஐஞ்சுர தாரு வனங்களும் ஆக அகில் புகை போல் – தஞ்-வா-கோவை:2 22 335/1,2
கான் கண்ட தண்ணளி சந்திரவாணன் தரியலர் போம் – தஞ்-வா-கோவை:2 22 347/3
கான் கண்ட மெய் குளிர பொய்கை சூழ் தஞ்சை காண்பர்களே – தஞ்-வா-கோவை:2 22 347/4
இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன் – தஞ்-வா-கோவை:2 23 351/2
வேள் அனைய ஓர் காளை பின் போயினள் கான் பனி நீத்து – தஞ்-வா-கோவை:2 25 360/3
கரியோர் தெளித்து என்ன காரணம் காட்டுவர் கான் உண்டு தேன் – தஞ்-வா-கோவை:3 28 397/2

மேல்

கான்றது (1)

கரு இருந்து எண் திசையும் கன மா மழை கான்றது உள்ளம் – தஞ்-வா-கோவை:1 13 163/1

மேல்

கான (1)

கான கடி வரை-வாய் விரை நாள்_மலர் கா அகத்தே – தஞ்-வா-கோவை:1 2 17/4

மேல்

கானகம் (3)

காலை பொழுது கடும் பரி தேர் பண்ணி கானகம் போய் – தஞ்-வா-கோவை:1 18 262/1
நேயம் புணை துணையாக வெம் கானகம் நீந்தல் எண்ணி – தஞ்-வா-கோவை:2 22 331/1
கானகம் போயினர் கண்டனிரோ கற்ப காடவி சூழ் – தஞ்-வா-கோவை:2 22 346/2

மேல்

கானத்து (1)

அறையும் பொறையும் மணந்த வெம் கானத்து அணங்கை இல் வைத்து – தஞ்-வா-கோவை:1 17 250/1

மேல்

கானம் (2)

யாரோ தனி நடப்பார் அரும் கானம் இவளுடனே – தஞ்-வா-கோவை:2 21 306/4
இடுக்கண் களைய என்றே அகல் கானம் இகந்தவரே – தஞ்-வா-கோவை:3 32 419/4

மேல்

கானமுமே (1)

கடு வரி நாகம் தவர் மல்கு கல் அளை கானமுமே – தஞ்-வா-கோவை:1 13 165/4

மேல்

கானல் (6)

கானல் அம் கான் மலர் கள் வாய் கரும் கணி கட்டுரையால் – தஞ்-வா-கோவை:1 11 153/1
கான் உற்ற கானல் கனை இருள்-வாய் வர கற்பித்த நீ – தஞ்-வா-கோவை:1 14 193/3
எயில் ஆகிய கடல் கானல் அம் சேர்ப்பற்கு இடையிருள் யான் – தஞ்-வா-கோவை:1 17 254/2
சூடுகம் வா கவலாது அவர் கானல் துறை மலரே – தஞ்-வா-கோவை:1 17 255/4
பொதி தேன் நுகர்ந்து அகலும் கழி கானல் புலம்பர் வந்தே – தஞ்-வா-கோவை:2 20 290/4
முழவு ஏய முந்நீர் முழங்கு இரும் கானல் முழுது உலகும் – தஞ்-வா-கோவை:2 20 292/2

மேல்

கானவர் (1)

தொடு சிலை கானவர் ஓடிய வேற்று சுவடு உவையே – தஞ்-வா-கோவை:2 22 345/1

மேல்

கானவரேல் (1)

ஆறலை வெம் சிலை கானவரேல் என் கை அம்பு ஒன்றினால் – தஞ்-வா-கோவை:2 25 364/1

மேல்

கானிடையே (1)

காணினும் காண அந்தோ அரிதால் இந்த கானிடையே – தஞ்-வா-கோவை:2 22 348/4

மேல்

கானில் (2)

புரமான வல் அழல் பொங்கு வெம் கானில் பொருந்திய கூர் – தஞ்-வா-கோவை:2 21 317/2
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – தஞ்-வா-கோவை:2 22 336/3

மேல்