மே – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேக 1
மேகம் 2
மேதகு 1
மேதினி 2
மேதினிக்கு 1
மேதினியோர் 1
மேய்ந்து 2
மேரு 4
மேரு_வில்லானொடும் 1
மேருவின் 1
மேல் 55
மேலனவாம் 1
மேலானவரும் 1
மேலும் 2
மேவலர் 2
மேவி 2
மேவிய 1
மேவினும் 1
மேவுகவே 1
மேவுதும் 1
மேவும் 3
மேழி 1
மேனாள் 1
மேனி 3
மேனியர் 1
மேனியில் 1
மேனியின் 1
மேனியினும் 1
மேனியும் 1
மேனியுமாய் 1

மேக (1)

நாவலரே பெற நல்கும் கை மேக நறும் குவளை – தஞ்-வா-கோவை:1 11 155/3

மேல்

மேகம் (2)

மேகம் தரும் மின் இடை அன்னமே விரை நாள்_மலர் வேய் – தஞ்-வா-கோவை:1 13 173/2
ஊண் அற்பம் என்ன எண்ணா வரும் மேகம் உருமுடனே – தஞ்-வா-கோவை:3 29 409/4

மேல்

மேதகு (1)

மேதகு முள் எயிற்று ஒண் முகை கொங்கை வெண் தோட்டு மென் பூம் – தஞ்-வா-கோவை:1 14 194/3

மேல்

மேதினி (2)

மிக்கு ஆர் உளர் அல்லர் மெல் இயல் மாதரின் மேதினி மேல் – தஞ்-வா-கோவை:1 10 83/1
விரல் கால இன்று மெலியன்-மின்னே சென்று மேதினி காத்து – தஞ்-வா-கோவை:3 30 413/2

மேல்

மேதினிக்கு (1)

வேல் அன்ன கூர்ம் கல் மிதிக்கும்-கொல் என்றனர் மேதினிக்கு
மால் அன்ன வாணன் தென்மாறை நல் நாட்டு வயல் உகளும் – தஞ்-வா-கோவை:2 21 309/2,3

மேல்

மேதினியோர் (1)

விடம் வார் கணை விழி மெல் இயல் மாதரை மேதினியோர்
மடவார் எனும் உரை வாய்மை நெஞ்சே தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 13 170/1,2

மேல்

மேய்ந்து (2)

தினையும் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்த இன் நீர் – தஞ்-வா-கோவை:1 10 123/2
காண பிரிந்தவர் காண்கிலரால் கடல் மேய்ந்து தஞ்சை – தஞ்-வா-கோவை:3 29 409/2

மேல்

மேரு (4)

மருந்து ஒன்று நாடி அன்றோ வட மேரு வலம்கொள்வதே – தஞ்-வா-கோவை:1 2 9/4
விடை ஆன் மிசை வரும் மேரு_வில்லானொடும் மேழி வென்றி – தஞ்-வா-கோவை:1 10 125/1
செருந்து ஆர் பசும் தமிழ் தென்வரை மேல் செம்பொன் மேரு வெற்பால் – தஞ்-வா-கோவை:1 10 134/2
தார் தட மேரு எனும் புய வாணன் தஞ்சாபுரி-நின்று – தஞ்-வா-கோவை:3 33 422/3

மேல்

மேரு_வில்லானொடும் (1)

விடை ஆன் மிசை வரும் மேரு_வில்லானொடும் மேழி வென்றி – தஞ்-வா-கோவை:1 10 125/1

மேல்

மேருவின் (1)

கழி நீடும் ஆடக மேருவின் மீதினும் காவல் கொண்டு – தஞ்-வா-கோவை:1 13 180/2

மேல்

மேல் (55)

வீங்கிய மா முலை மேவுதும் யாம் விசய கொடி மேல்
வாங்கிய சாபம் உயர்த்தவன் போர் வென்ற வாணன் வையம் – தஞ்-வா-கோவை:1 2 5/2,3
செறி வேழ வெம் சிலை வேள் தஞ்சைவாணன் திருந்தலர் மேல்
எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல் – தஞ்-வா-கோவை:1 2 6/1,2
என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த – தஞ்-வா-கோவை:1 3 21/2
வன் பால் திரள் முத்த வண்டலின் மேல் வரும் ஏதம் அஞ்சி – தஞ்-வா-கோவை:1 5 28/2
என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 47/1
வல் மேல் அடர் கொங்கை காரணமா தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 47/2
கல் மேல் அறைகின்ற மென் முளை போலும் கடல் வெதும்பில் – தஞ்-வா-கோவை:1 8 47/3
தன் மேல் விளாவ உண்டோ தரை மேல் ஒரு தண் புனலே – தஞ்-வா-கோவை:1 8 47/4
தன் மேல் விளாவ உண்டோ தரை மேல் ஒரு தண் புனலே – தஞ்-வா-கோவை:1 8 47/4
திளைக்கும் திரை மேல் உனக்கு முன் தோன்றலில் செம்பொன் வெற்பை – தஞ்-வா-கோவை:1 9 64/1
வளைக்கும் பிரான் முடி வைகுதலால் தஞ்சைவாணன் மண் மேல்
விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார் – தஞ்-வா-கோவை:1 9 64/2,3
பதி ஏது செல்லும்படி சொல்லுவீர் படி மேல் படிந்த – தஞ்-வா-கோவை:1 9 70/2
மிக்கு ஆர் உளர் அல்லர் மெல் இயல் மாதரின் மேதினி மேல்
தக்கார் புகழ் தஞ்சைவாணர் பிரான் தமிழ்நாடு_அனையாய் – தஞ்-வா-கோவை:1 10 83/1,2
செறி வளர் காவி வயல் தஞ்சைவாணன் சிறுமலை மேல்
நெறி வளர் வார் குழல் நேர்_இழையாள் அன்ன நீர்மையளேல் – தஞ்-வா-கோவை:1 10 92/1,2
சிமை ஆர் மலய தமிழ் தஞ்சைவாணன் சிறுமலை மேல்
அமை ஆகிய தடம் தோள் அன்னமே அணிய தகுமால் – தஞ்-வா-கோவை:1 10 97/1,2
குழையும் எம்-பால் என்று கொண்ட நெஞ்சே கலி கோடை மண் மேல்
மழையும் மந்தாரமும் வந்தன வாணன் தென்மாறையின் மாந்தழையும் – தஞ்-வா-கோவை:1 10 99/2,3
என்பு அணிவேன் மடல் மேல் வருவேன் இவை என் பணியே – தஞ்-வா-கோவை:1 10 103/4
பொலி தென் பொதியிலின் மேல் சந்தனாடவி பூம்_தழையே – தஞ்-வா-கோவை:1 10 115/4
உவாமதி போலும் ஒளிர் முகத்தாய் என் ஒளிப்பது உன் மேல்
அவாவினன் ஆகி ஒர் மானை வினாவி வந்தானை இன்று இ – தஞ்-வா-கோவை:1 10 119/2,3
சாயாத கொங்கையின் மேல் அணைத்தாள் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 129/2
செருந்து ஆர் பசும் தமிழ் தென்வரை மேல் செம்பொன் மேரு வெற்பால் – தஞ்-வா-கோவை:1 10 134/2
சாந்தமும் யாது தடம் பொழில் யாது தரணியின் மேல்
மாந்தரில் வேள் அன்ன வாணன் தென்மாறை வள நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 13 166/2,3
மை நாட்ட வெண் முத்த வாள் நகையாய் தஞ்சைவாணன் மண் மேல்
உம் நாட்டு அரிவையர் ஆடிடம் சாந்தம் ஒளி இழை பூ – தஞ்-வா-கோவை:1 13 167/2,3
செழியன் கயலை திசை வைத்த வாணன் தென்மாறை என் மேல்
கழி அன்பு உடைய நின் கால் கண்களாக கராம் பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 178/1,2
மல்கு ஆவி சூழ் தஞ்சைவாணன் தென்மாறையின் வள்ளையின் மேல்
செல் காவி அன்ன விழி திருவே நின் திருமனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 185/3,4
துறந்தனள் ஆகி அம்போருகம்-தன்னை இ தொல் வரை மேல்
பிறந்தனள் ஆகும் பெரும் திருமாது என பேதையரில் – தஞ்-வா-கோவை:1 14 198/1,2
புணரா விரகமும் போகா இரவும் புணர் முலை மேல்
இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல் – தஞ்-வா-கோவை:1 15 214/1,2
அரியும் கரியும் பொரு நெறிக்கு ஓர் துணையாய் அவர் மேல்
சொரியும் திவலை துடைக்க என்றோ குழை தோய்ந்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 15 220/1,2
அணி மனை-தோறும் கொழுந்துவிட்டு அம்பல் அரும்பி மண் மேல்
தணிவு இலதாக இப்போது அலர் பூத்தது உன் தண்ணளியே – தஞ்-வா-கோவை:1 16 229/3,4
பல கம்பலை செய்ய பூத்தன வேங்கை பனிவரை மேல்
திலகம் பதித்து என சேல் வைத்த வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:1 16 234/2,3
குரவும் கணியும் விரவும் வெற்பா வெய்ய குஞ்சரம் மேல்
வரவு உந்திய தெவ்வை மாற்றிய வாணன் தென்மாறை மின்னும் – தஞ்-வா-கோவை:1 16 239/1,2
இறையும் பிரிவதற்கு எண்ணகிலேன் எண்ணலார் வரை மேல்
மறையும்படி வென்ற சந்திரவாணன் தென்மாறையில் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 250/2,3
பயிலா மலரணை மேல் துயிலாநிற்றி பால் அன்னமே – தஞ்-வா-கோவை:1 17 254/4
கொழுது இமிரும் குழல் சோர கிடந்து குடங்கையின் மேல்
ஒழுகிய அஞ்சன வெள்ளத்து உணங்கும் அணங்கை முன் சென்று – தஞ்-வா-கோவை:1 18 273/2,3
மேல் வண்டு இருந்தது போல் கரு மா முக வெண் சங்கமே – தஞ்-வா-கோவை:1 18 277/4
இயமா மணம்புணர் ஈர்ம் துறை நாடர் எதிர்ந்தவர் மேல்
வயமா நடத்திய வாணன் தென்மாறை வருகுவரேல் – தஞ்-வா-கோவை:2 19 282/2,3
பொன் போல் இறுக பொதிந்துகொண்டாள் அன்னை பூவை என் மேல்
வன்பு ஓதிய மடவார் அலர் தூற்றியவாறு கண்டே – தஞ்-வா-கோவை:2 20 295/3,4
வெம் கார்முக வெம் புருவ மின்னே அன்னை மேல் ஒருநாள் – தஞ்-வா-கோவை:2 20 296/1
கண் அலை நீர் இட பாகமும் மேல் வந்த கை களிற்றின் – தஞ்-வா-கோவை:2 20 302/3
சிலம்பு உயர் சோலையும் சிற்றிலும் பேரிலும் தெண் திரை மேல்
வலம்புரி ஊர் வயல் சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 323/2,3
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – தஞ்-வா-கோவை:2 22 336/2
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – தஞ்-வா-கோவை:2 22 336/3
நின் மேல் அடுத்த பசலையின் காரணம் நின் துணைவி – தஞ்-வா-கோவை:3 27 367/1
என் மேல் அடுத்த இயல்பின் அன்றோ பெற்றது ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:3 27 367/2
தன் மேல் அடுத்த புகழ் தஞ்சைவாணன் தமிழ்க்கிரி நுண் – தஞ்-வா-கோவை:3 27 367/3
பொன் மேல் அடுத்தன போல் சுணங்கு ஈன்ற புணர் முலையே – தஞ்-வா-கோவை:3 27 367/4
விண் மேல் அமரர் விரும்பு அமராவதி வெள்ள முந்நீர் – தஞ்-வா-கோவை:3 27 375/1
மண் மேல் அடைந்து அன்ன வாழ்க்கையது ஆனது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 27 375/2
பண் மேல் அளி முரல் குங்கும தோளவர் பங்கயம் போல் – தஞ்-வா-கோவை:3 27 375/3
கண் மேல் அருள் பெற்று வாழ் மட மாதர் கடி மனையே – தஞ்-வா-கோவை:3 27 375/4
வன் போது அணி தொங்கல் வாணன் தென்மாறை மகிழ்நர் நம் மேல்
அன்போடு நல் நெஞ்சு அறிவு அறைபோக அழலுள் வெந்த – தஞ்-வா-கோவை:3 28 378/1,2
பூ ஆர் சடை முடி மேல் வைத்த போதும் பொறுத்தனளே – தஞ்-வா-கோவை:3 28 401/4
உள்ளம் சிறியவர் மேல் செல்வரோ ஒளிர் கோமளம் செய் – தஞ்-வா-கோவை:3 28 404/2
பின் உயிராமல் என் மேல் பூசும் நாளும் என் பேசுவதே – தஞ்-வா-கோவை:3 30 412/4
மேல் கொண்டவாறும் நம் ஊர் வந்தவாறும் வியப்பு எனக்கே – தஞ்-வா-கோவை:3 33 424/4

மேல்

மேலனவாம் (1)

வசையும் புகழும் நின் மேலனவாம் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 18 261/1

மேல்

மேலானவரும் (1)

மேலானவரும் கண்டால் உரையார் இந்த வீரங்களே – தஞ்-வா-கோவை:1 8 43/4

மேல்

மேலும் (2)

வெறுத்தார் ஒறுத்து உரை மேலும் நம் கேளிர் விழைதல் இன்றி – தஞ்-வா-கோவை:2 22 324/1
கயலை பொருத கண்ணாள் மேலும் வாழ்விக்கும் கட்டளையே – தஞ்-வா-கோவை:2 22 333/4

மேல்

மேவலர் (2)

மேவலர் போலும் கழற்று உரையாளர் வியன் அறிவே – தஞ்-வா-கோவை:1 11 146/4
மேவலர் போல் வெய்ய வாய் அடையா என் மெலிவு அறிந்தே – தஞ்-வா-கோவை:1 15 211/4

மேல்

மேவி (2)

மேவி கலை கடல் என் புலன் மீன் உண்டு மீண்டுவந்து என் – தஞ்-வா-கோவை:1 7 38/1
வேரி தடம் பொழில்-வாய் விளையாடும்-கொல் மேவி நின்றே – தஞ்-வா-கோவை:1 8 51/4

மேல்

மேவிய (1)

பின்னல் கனை இருள் கூர் துன்பம் மேவிய பின்பனியே – தஞ்-வா-கோவை:3 32 418/4

மேல்

மேவினும் (1)

தாமாக மேவினும் நம் மனைக்கே வந்து தண் சிலம்பு ஆர் – தஞ்-வா-கோவை:2 24 355/1

மேல்

மேவுகவே (1)

மின் ஊடு நுண் இடையாருடன் நீ சென்று மேவுகவே – தஞ்-வா-கோவை:1 8 62/4

மேல்

மேவுதும் (1)

வீங்கிய மா முலை மேவுதும் யாம் விசய கொடி மேல் – தஞ்-வா-கோவை:1 2 5/2

மேல்

மேவும் (3)

ஆனாது ஒழுகு செந்தேன் அல்லி மேவும் அரச_அன்னம் – தஞ்-வா-கோவை:1 7 36/3
தண் பட்டம் மேவும் வயல் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 9 72/1
மேவும் செய்குன்றமும் சோலையுமாக பொன் வெற்பும் விண்ணோர் – தஞ்-வா-கோவை:1 10 81/3

மேல்

மேழி (1)

விடை ஆன் மிசை வரும் மேரு_வில்லானொடும் மேழி வென்றி – தஞ்-வா-கோவை:1 10 125/1

மேல்

மேனாள் (1)

மேனாள் வரம்கிடந்து என் போல் வருந்தி மிகவும் மெய் நொந்து – தஞ்-வா-கோவை:2 22 332/1

மேல்

மேனி (3)

கொண்டலை நீர் குடைந்தோ இவள் மேனி குழைந்ததுவே – தஞ்-வா-கோவை:1 9 63/4
காயாமலர் அன்ன மேனி மெய் ஆக நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 129/3
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 15 221/1

மேல்

மேனியர் (1)

ஏ அலர் ஏய் விழி மாந்தளிர் மேனியர் ஏனல் இனி – தஞ்-வா-கோவை:1 11 155/1

மேல்

மேனியில் (1)

நெய் அணி மேனியில் ஐயவி பூண்ட நிலை அறிந்தே – தஞ்-வா-கோவை:3 28 390/3

மேல்

மேனியின் (1)

முயங்கேல் சிறுவன் பயந்த என் மேனியின் முத்து வடம் – தஞ்-வா-கோவை:3 28 392/3

மேல்

மேனியினும் (1)

வேளினும் ஏர் நல்ல வெற்பனும் நீயும் என் மேனியினும்
தோளினும் நோய் அறியீர் அறியாதது என் தொல்வினையே – தஞ்-வா-கோவை:1 15 216/3,4

மேல்

மேனியும் (1)

மெலிகின்ற சிந்தையும் மேனியும் கொண்டு விளர்ப்பு எனும் பேர் – தஞ்-வா-கோவை:3 31 415/2

மேல்

மேனியுமாய் (1)

புண்பட்ட மேனியுமாய் வந்ததோ ஒரு போர் களிறே – தஞ்-வா-கோவை:1 9 72/4

மேல்