நெ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


நெஞ்சம் (10)

படம் பட்ட வாள் அரவு அல்குலிலே தளைபட்ட நெஞ்சம்
விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும் – தஞ்-வா-கோவை:1 2 10/1,2
நகில் ஏந்து பூங்கொடி போல் செல்லுமால் நெஞ்சம் நம் உயிரே – தஞ்-வா-கோவை:1 5 27/4
முன் பார்த்து என் நெஞ்சம் வரும் வழி பார்த்து முறைமுறையே – தஞ்-வா-கோவை:1 5 28/3
பெரு மால் மருந்து ஒன்று பெற்றனம் யாம் நெஞ்சம் பேதுறல் பார் – தஞ்-வா-கோவை:1 6 30/1
மாற்றாது அருள் செங்கை வாணன் தென்மாறையில் வந்து நெஞ்சம்
போற்றாது நின்று அயலேன் சொன்ன தீங்கு பொறுத்தருளே – தஞ்-வா-கோவை:1 10 126/3,4
பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்தும் நெஞ்சம்
கரவாத பொன்னை நின் காரணமாக கயிலை என்றே – தஞ்-வா-கோவை:1 13 172/1,2
நெஞ்சம் கலந்த நிலைமை எல்லாம் கண்டும் நீ அமுதில் – தஞ்-வா-கோவை:1 13 187/3
அல்லாமை நெஞ்சம் தடுமாற நல் இடை ஆக்கியதே – தஞ்-வா-கோவை:1 15 215/4
அலரும் தடம் கை_அலரும் தொடாநிற்ப அஞ்சி நெஞ்சம்
பலரும் புகழ் தஞ்சைவாணர் பிரானை பணியலர் போல் – தஞ்-வா-கோவை:1 15 219/2,3
எழுக எனும் நெஞ்சம் என்னே அவரோ எனில் என் சொல்லுமே – தஞ்-வா-கோவை:1 18 273/4

மேல்

நெஞ்சமும் (2)

பெற அரிதால் அவன் பின் சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு – தஞ்-வா-கோவை:1 12 162/1
எண் போன நெஞ்சமும் நீரும் என் பாதம் இறைஞ்சுதல் நும் – தஞ்-வா-கோவை:3 28 398/1

மேல்

நெஞ்சமே (10)

நீர்_அணங்கோ நெஞ்சமே தனியே இங்கு நின்றவரே – தஞ்-வா-கோவை:1 1 2/4
நையாது ஒழி-மதி நல் நெஞ்சமே இனி நம்மினும் தன் – தஞ்-வா-கோவை:1 1 3/2
பொறை ஆர் தவம்செய்திலேம் நெஞ்சமே என் புகல்வதுவே – தஞ்-வா-கோவை:1 2 14/4
மாயம்-கொலோ நெஞ்சமே மணம் போல் இங்கு வந்து உற்றதே – தஞ்-வா-கோவை:1 6 29/4
இன்றும் தரும் நெஞ்சமே எழு வாழி இங்கு என்னுடனே – தஞ்-வா-கோவை:1 7 34/4
இனையாது எழு-மதி நல் நெஞ்சமே நமக்கு இன் உயிரே_அனையான் – தஞ்-வா-கோவை:1 8 39/3
தனமே முகை என் தனி நெஞ்சமே இடை தன் பகைக்கு – தஞ்-வா-கோவை:1 8 49/2
மருந்து ஆவது நெஞ்சமே இல்லை வேறு மடல் அன்றியே – தஞ்-வா-கோவை:1 10 101/4
இப்போது இளகியதால் இந்துகாந்தம்-கொல் என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 10 116/4
யான் உற்ற நோய்கள் எல்லாம் படுவாய் இனி என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 14 193/4

மேல்

நெஞ்சின் (2)

என் மாலுறும் நெஞ்சின் முன் செல நாகு இள ஏறு புல்லி – தஞ்-வா-கோவை:1 18 274/2
அருள் கொண்ட நெஞ்சின் ஓர் அண்ணல் பின்னே அகன்றாள் அகல் வான் – தஞ்-வா-கோவை:2 25 362/3

மேல்

நெஞ்சினுக்கே (1)

நேரே இவள் பொருட்டால் என்று தோன்றும் என் நெஞ்சினுக்கே – தஞ்-வா-கோவை:1 9 75/4

மேல்

நெஞ்சினுள்ளே (1)

நெய்யுற்ற வேல் அன்ப நீ தணியாமையின் நெஞ்சினுள்ளே
ஐயுற்று அயர்வுற்று எம் அன்னையும் ஆயும் என் ஆரணங்கின் – தஞ்-வா-கோவை:1 16 231/2,3

மேல்

நெஞ்சு (6)

காண தகும் என்று காண்பது அல்லால் கழி காதல் நெஞ்சு
பூண தருகினும் பொற்பல்லள் ஆகுதல் கற்பு அல்லவால் – தஞ்-வா-கோவை:1 11 148/2,3
நெஞ்சு உக ஆய் மலர் அன்ன கண் நீர் மல்க நின்ற அம் சொல் – தஞ்-வா-கோவை:1 11 150/1
தம் சுக வாய் மொழி நெஞ்சு_உடையான் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 150/3
ஒடிக்கின்ற கொங்கை கண்டால் எவர் நெஞ்சு உருகாதவரே – தஞ்-வா-கோவை:1 16 232/4
பாவி தனி நெஞ்சு பார்த்து அஞ்சுமே கண் பயின்ற கண் ஆர் – தஞ்-வா-கோவை:1 18 270/2
அன்போடு நல் நெஞ்சு அறிவு அறைபோக அழலுள் வெந்த – தஞ்-வா-கோவை:3 28 378/2

மேல்

நெஞ்சு_உடையான் (1)

தம் சுக வாய் மொழி நெஞ்சு_உடையான் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 150/3

மேல்

நெஞ்சே (4)

குழையும் எம்-பால் என்று கொண்ட நெஞ்சே கலி கோடை மண் மேல் – தஞ்-வா-கோவை:1 10 99/2
மடவார் எனும் உரை வாய்மை நெஞ்சே தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 13 170/2
சோகாகுலம் எய்தல் காண்டும் நெஞ்சே நம் துறைவர் எனும் – தஞ்-வா-கோவை:2 19 284/1
பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன் – தஞ்-வா-கோவை:3 28 402/2

மேல்

நெஞ்சை (1)

நெஞ்சை பொருள்-வயின் வைத்து நம் கேள்வர் நல் நீள் மதியின் – தஞ்-வா-கோவை:3 33 420/3

மேல்

நெஞ்சோ (1)

நெஞ்சோ கொடியது நேர்_இழையாய் நிழல் மா மதியோ – தஞ்-வா-கோவை:2 21 308/2

மேல்

நெடுந்தகையே (2)

நில்லாது எழுந்தருள் நீயும் இப்போது நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 10 96/4
நின் ஊரகம் புகுந்தால் குறி காட்டு நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 13 188/4

மேல்

நெடும் (18)

வாமான் நெடும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 131/3
குல வேய் நிகர் பொன் தொடி நெடும் தோளி குறுகி வர – தஞ்-வா-கோவை:1 17 252/2
உழை போல் அரி நெடும் கண் மயிலே சென்று உணர்த்து இதுவே – தஞ்-வா-கோவை:1 18 260/4
வார்த்தால் அனைய வழி நெடும் பாலை மட பெடை நோய் – தஞ்-வா-கோவை:1 18 267/2
கான் நெடும் குன்றம் கடந்து சென்றேன் ஒருகாலும் மை தோய் – தஞ்-வா-கோவை:1 18 279/1
மான் நெடும் கண்ணி மறந்து அறியேன் வண் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 279/2
நீல் நெடும் பெண்ணை சுரும்பையும் சூதும் நெருங்கு கொங்கை – தஞ்-வா-கோவை:1 18 279/3
தேன் நெடும் கண்ணி மென் பூம் குழல் மாதர் திருமுகமே – தஞ்-வா-கோவை:1 18 279/4
புரவி புனை நெடும் தேர் அண்ணலே நின் பொருட்டு அணங்கை – தஞ்-வா-கோவை:2 19 286/3
மை நீர் நெடும் கண் மடந்தையுடன் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:2 21 305/1
தடம் குங்கும நெடும் தோள் வாணன் மாறையும் தஞ்சையுமே – தஞ்-வா-கோவை:2 21 321/4
கொன் ஆரும் நித்தில கோதை நம் மாதை கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:2 24 356/2
கோமான் மணி நெடும் தேர் நுகம் பூண்ட குரகதமே – தஞ்-வா-கோவை:2 25 365/4
மன்னவர் காம நெடும் கடல் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:3 28 387/1
நீர் ஆவி நீல நெடும் கண் மின்னே நின்னை நீப்பது அல்லால் – தஞ்-வா-கோவை:3 28 391/3
நினக்கே தகும் நின் நெடும் புனல் ஊரனும் நீயும் அவன்-தனக்கே – தஞ்-வா-கோவை:3 28 394/1
நிறம் தாரகை அன்ன நித்திலம் போலும் நெடும் குலத்தில் – தஞ்-வா-கோவை:3 28 407/3
கொண்டவாறும் நின் ஏவல் கொண்டு யான் இ கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:3 33 424/3

மேல்

நெய் (3)

நெய் ஆர் கரும் குழல் செம் மலர் வாடின நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 1 3/3
நெய் தோய்ந்து அன தழையே புணையா கொண்டு நீந்தினனே – தஞ்-வா-கோவை:3 27 370/4
நெய் அணி மேனியில் ஐயவி பூண்ட நிலை அறிந்தே – தஞ்-வா-கோவை:3 28 390/3

மேல்

நெய்தல் (1)

நதி தேன் இனம் புணர் மாதர் கண் போல நகைக்கும் நெய்தல்
பொதி தேன் நுகர்ந்து அகலும் கழி கானல் புலம்பர் வந்தே – தஞ்-வா-கோவை:2 20 290/3,4

மேல்

நெய்யாடினள் (1)

பலர் புகழ் பாலன் பயந்து நெய்யாடினள் பாங்கு எவர்க்கும் – தஞ்-வா-கோவை:3 28 389/2

மேல்

நெய்யுற்ற (1)

நெய்யுற்ற வேல் அன்ப நீ தணியாமையின் நெஞ்சினுள்ளே – தஞ்-வா-கோவை:1 16 231/2

மேல்

நெருங்கு (1)

நீல் நெடும் பெண்ணை சுரும்பையும் சூதும் நெருங்கு கொங்கை – தஞ்-வா-கோவை:1 18 279/3

மேல்

நெல் (1)

கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும் – தஞ்-வா-கோவை:1 18 260/1

மேல்

நெற்றி (1)

பிரியாது உறைய பெறுகுதிரால் பிறை மானும் நெற்றி
புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ் – தஞ்-வா-கோவை:3 27 368/2,3

மேல்

நெறி (5)

நெறி வேய் அலங்கல் முடி தலை சாய்த்து இங்ஙன் நிற்பதுதான் – தஞ்-வா-கோவை:1 2 6/3
நெறி வளர் வார் குழல் நேர்_இழையாள் அன்ன நீர்மையளேல் – தஞ்-வா-கோவை:1 10 92/2
முன் ஊர் அராவும் தெரியா இருள் நெறி முன்னி நையும் – தஞ்-வா-கோவை:1 13 188/1
விரல் என்று-கொல் செறித்தார் நெறி தாழ் குழல் மெல்_இயலே – தஞ்-வா-கோவை:1 14 195/4
கடன் ஆகிய நெறி கைவிட நீங்கினும் கந்து அலைக்கும் – தஞ்-வா-கோவை:2 21 314/2

மேல்

நெறிக்கு (1)

அரியும் கரியும் பொரு நெறிக்கு ஓர் துணையாய் அவர் மேல் – தஞ்-வா-கோவை:1 15 220/1

மேல்

நெறிமுறை (1)

வேல் போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய – தஞ்-வா-கோவை:1 9 68/3

மேல்

நெறியார் (1)

நெறியார் அருள் பெற நாம் நடுநாளிடை நீந்துதுமே – தஞ்-வா-கோவை:1 15 213/4

மேல்

நென்னல் (2)

மரு ஆய நாப்பண் மயில் உருவாய் நென்னல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 7 35/1
தேர் ஆதவனுடனே நென்னல் மாலையில் சென்றவரே – தஞ்-வா-கோவை:1 11 144/4

மேல்