ஒ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒசிக்கும் 1
ஒடிக்கின்ற 1
ஒடுங்காத 1
ஒண் 8
ஒண்_தொடியாய் 1
ஒண்_நுதலே 1
ஒண்ணாது 2
ஒத்த 1
ஒத்தது 1
ஒதுக்கிடம் 1
ஒதுங்குதல் 1
ஒப்பவரே 1
ஒப்பீர் 1
ஒப்பு 1
ஒர் 6
ஒரு 27
ஒருகாலம் 1
ஒருகாலமும் 1
ஒருகாலும் 1
ஒருதலைக்கு 1
ஒருதனியே 1
ஒருநாள் 1
ஒருநாளும் 1
ஒருபோதும் 2
ஒருமையிலே 1
ஒருவர் 2
ஒருவின் 1
ஒல்க 1
ஒல்கா 1
ஒல்கிய 1
ஒல்கு 1
ஒல்லாது 1
ஒல்லார் 1
ஒல்லெனவே 1
ஒலி 1
ஒலியால் 1
ஒவ்வா 1
ஒவ்வாய் 2
ஒழி 5
ஒழி-மதி 1
ஒழிகுவரோ 1
ஒழிகை 1
ஒழித்து 1
ஒழிந்தனம் 1
ஒழிந்திலரே 1
ஒழிந்தீர் 1
ஒழிந்து 1
ஒழிய 2
ஒழியா 1
ஒழியாது 1
ஒழியாமல் 1
ஒழிவாய் 1
ஒழுக்கத்தினால் 1
ஒழுகிய 1
ஒழுகு 1
ஒள் 1
ஒள்_நுதலே 1
ஒளி 5
ஒளித்தார் 1
ஒளிந்து 1
ஒளிப்பது 1
ஒளிர் 3
ஒறுத்து 1
ஒன்றா 1
ஒன்றினால் 1
ஒன்றினும் 1
ஒன்று 17
ஒன்றுதான் 1
ஒன்றும் 3
ஒன்றே 1
ஒன்றை 1
ஒன்றையும் 1
ஒன்றோ 1
ஒன்னார் 16
ஒன்னார்க்கு 1
ஒன்னாரின் 1

ஒசிக்கும் (1)

வண் சாய் ஒசிக்கும் வயல் தஞ்சைவாணன் மலய மரா – தஞ்-வா-கோவை:1 10 132/3

மேல்

ஒடிக்கின்ற (1)

ஒடிக்கின்ற கொங்கை கண்டால் எவர் நெஞ்சு உருகாதவரே – தஞ்-வா-கோவை:1 16 232/4

மேல்

ஒடுங்காத (1)

கண் ஆர் தடங்களின் வாய் ஒடுங்காத கமலங்களே – தஞ்-வா-கோவை:1 13 181/4

மேல்

ஒண் (8)

மேதகு முள் எயிற்று ஒண் முகை கொங்கை வெண் தோட்டு மென் பூம் – தஞ்-வா-கோவை:1 14 194/3
ஊறு ஓர்பவர் இங்கு உலாவவும் கூடும் வந்து ஒண் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 16 236/1
உரியோன் உயர் வையை ஒண் துறை-வாய் உரவோர் தெளித்தும் – தஞ்-வா-கோவை:2 20 291/2
ஒண் குன்ற மங்கையர் முன்னர் மின்னே உமையாள் மகனை – தஞ்-வா-கோவை:2 20 299/2
ஊரோ அணியது அன்று ஒண்_தொடியாய் விந்தை உண்கண்களோ – தஞ்-வா-கோவை:2 21 306/2
விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர் – தஞ்-வா-கோவை:3 27 372/3
உன்-பால் புலவியுறாள் வண்ண வார் குழல் ஒண்_நுதலே – தஞ்-வா-கோவை:3 28 388/4
ஒருமையிலே வந்து உற தகைந்தான் மைந்தன் ஒண் சுடர் போல் – தஞ்-வா-கோவை:3 28 405/2

மேல்

ஒண்_தொடியாய் (1)

ஊரோ அணியது அன்று ஒண்_தொடியாய் விந்தை உண்கண்களோ – தஞ்-வா-கோவை:2 21 306/2

மேல்

ஒண்_நுதலே (1)

உன்-பால் புலவியுறாள் வண்ண வார் குழல் ஒண்_நுதலே – தஞ்-வா-கோவை:3 28 388/4

மேல்

ஒண்ணாது (2)

வெரு இருந்து எம் பதிக்கு ஏக ஒண்ணாது விதம்விதமாய் – தஞ்-வா-கோவை:1 13 163/2
போலும் சுரம் இனி போக ஒண்ணாது பொருப்பு அடைந்தான் – தஞ்-வா-கோவை:2 21 320/2

மேல்

ஒத்த (1)

ஊனும் கவர்கின்ற தன்னையர் போல் அயில் ஒத்த கண்ணாள் – தஞ்-வா-கோவை:1 10 90/3

மேல்

ஒத்தது (1)

இரு பால் மருங்கினும் கொண்டு எறிந்தால் ஒத்தது என் செவிக்கே – தஞ்-வா-கோவை:1 15 226/4

மேல்

ஒதுக்கிடம் (1)

ஊறாத காலத்தும் ஊறு தண் சாரல் ஒதுக்கிடம் தந்து – தஞ்-வா-கோவை:1 2 11/2

மேல்

ஒதுங்குதல் (1)

பின் பார்த்து ஒதுங்குதல் காண் வலவா ஒரு பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 5 28/4

மேல்

ஒப்பவரே (1)

ஓர் ஆழி சூழ் உலகத்து எவரே நின்னை ஒப்பவரே – தஞ்-வா-கோவை:1 8 44/4

மேல்

ஒப்பீர் (1)

வாக்கும் திறனும் மதனை ஒப்பீர் தஞ்சைவாணன் மஞ்சு – தஞ்-வா-கோவை:1 9 78/1

மேல்

ஒப்பு (1)

தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச – தஞ்-வா-கோவை:2 22 336/1

மேல்

ஒர் (6)

திருவாய் மலர்ந்து சிலம்பு எதிர்கூய் இன்று ஒர் தெய்வதப்பெண் – தஞ்-வா-கோவை:1 7 35/3
செருக கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 42/3
அவாவினன் ஆகி ஒர் மானை வினாவி வந்தானை இன்று இ – தஞ்-வா-கோவை:1 10 119/3
விளர் ஆர் திருநுதல் அன்னைக்கு ஒர் மாற்றம் விளம்பி உய்ந்தேன் – தஞ்-வா-கோவை:1 16 228/3
நீர் உறை நீலமும் நீயும் நண்பாக என்று நின் மகட்கு ஒர்
தார் உறை தோளவர் தந்தனர் வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:2 20 300/2,3
தேன் நகு அம்போருக மாது_அனையாளும் ஒர் செல்வனுமே – தஞ்-வா-கோவை:2 22 346/4

மேல்

ஒரு (27)

கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின் – தஞ்-வா-கோவை:1 1 1/2
இதயாரவிந்தத்து இனிது இருப்பீர் இரு கோட்டு ஒரு கை – தஞ்-வா-கோவை:1 2 12/2
நல் நாள் அரும்பு ஒரு தாள் இரண்டு ஈனும் நளினங்களே – தஞ்-வா-கோவை:1 3 21/4
அகில் ஏந்து கூந்தல் ஒரு கையில் ஏந்தி அசைந்து ஒரு கை – தஞ்-வா-கோவை:1 5 27/1
அகில் ஏந்து கூந்தல் ஒரு கையில் ஏந்தி அசைந்து ஒரு கை – தஞ்-வா-கோவை:1 5 27/1
பின் பார்த்து ஒதுங்குதல் காண் வலவா ஒரு பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 5 28/4
ஒரு மான் நகை முக மா மலர் ஓடை உலாவருமே – தஞ்-வா-கோவை:1 6 30/4
உருவாய் ஒரு தனியே நின்றதால் என் உயிர்க்குயிரே – தஞ்-வா-கோவை:1 7 35/4
கலை முழுதும் பட்டதால் ஒரு மான் முடி கண்ணியிலே – தஞ்-வா-கோவை:1 8 41/4
போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை – தஞ்-வா-கோவை:1 8 44/2
கறை கொண்ட வாள் அன்ன கண்களும் கொண்டு ஒரு கன்னி தெவ்வை – தஞ்-வா-கோவை:1 8 45/2
தன் மேல் விளாவ உண்டோ தரை மேல் ஒரு தண் புனலே – தஞ்-வா-கோவை:1 8 47/4
புண்பட்ட மேனியுமாய் வந்ததோ ஒரு போர் களிறே – தஞ்-வா-கோவை:1 9 72/4
ஒல்லார் களத்தின் உடைந்தது போல ஒரு கலை போர் – தஞ்-வா-கோவை:1 9 77/2
ஒரு விருந்து எங்களை போல் எய்துமோ கங்குல் உங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 13 163/4
மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே – தஞ்-வா-கோவை:1 15 222/4
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 15 226/3
சுழி தோற்றிடும் பகை தீர்க்கின்ற போது ஒரு தோன்றலும் அவ் – தஞ்-வா-கோவை:2 20 301/3
சிலை வந்ததோ எனும் நல்_நுதலாய் ஒரு செல்வர் இங்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 304/2
இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால் – தஞ்-வா-கோவை:2 21 305/3
நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி – தஞ்-வா-கோவை:2 21 322/3
மாயம் புகல் ஒரு காளை பின் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:2 22 331/3
ஒரு வெண்குடை இரு நீழல் முக்கோல் கொண்டு ஒழுக்கத்தினால் – தஞ்-வா-கோவை:2 22 341/1
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/4
இயங்கா வனம் என் மகள் ஒரு காளை பின் ஏகினள் என்று – தஞ்-வா-கோவை:2 22 342/1
ஒரு மகளே என்று உனை அயிர்த்தேன் புனை ஓவியம் போல் – தஞ்-வா-கோவை:2 22 343/2
வாடா வள மனை கொண்டுசென்றான் ஒரு வள்ளல் இன்றே – தஞ்-வா-கோவை:2 23 349/4

மேல்

ஒருகாலம் (1)

உழையும் வெம் காளமும் போலும் கண்ணாள் ஒருகாலம் உள்ளம் – தஞ்-வா-கோவை:1 10 99/1

மேல்

ஒருகாலமும் (1)

பிறவாது ஒழிகை நன்றே ஒருகாலமும் பெண் பிறப்பே – தஞ்-வா-கோவை:2 21 310/4

மேல்

ஒருகாலும் (1)

கான் நெடும் குன்றம் கடந்து சென்றேன் ஒருகாலும் மை தோய் – தஞ்-வா-கோவை:1 18 279/1

மேல்

ஒருதலைக்கு (1)

ஒருதலைக்கு எய்திய கல்லதர்க்கு செல்ல ஓர் உயிர்த்தாய் – தஞ்-வா-கோவை:1 17 257/1

மேல்

ஒருதனியே (1)

ஒவ்வா அலரையும் கேட்டு இருவீரும் ஒருதனியே – தஞ்-வா-கோவை:1 17 258/4

மேல்

ஒருநாள் (1)

வெம் கார்முக வெம் புருவ மின்னே அன்னை மேல் ஒருநாள்
எம் காதலர் இருள் எய்தல் கண்டாள் இந்த ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 296/1,2

மேல்

ஒருநாளும் (1)

முனையகத்து அல்கல் செல்லாது ஒருநாளும் முகிழ்_நகையே – தஞ்-வா-கோவை:3 27 376/4

மேல்

ஒருபோதும் (2)

துயரம் பெருகி இரா ஒருபோதும் துயின்றிலவே – தஞ்-வா-கோவை:1 14 190/4
மறந்தனள் ஆயினும் யாம் ஒருபோதும் மறவலமே – தஞ்-வா-கோவை:1 14 198/4

மேல்

ஒருமையிலே (1)

ஒருமையிலே வந்து உற தகைந்தான் மைந்தன் ஒண் சுடர் போல் – தஞ்-வா-கோவை:3 28 405/2

மேல்

ஒருவர் (2)

ஒருவர் நம் சாரல் உழை அகலார் தழை உள்ளது எல்லாம் – தஞ்-வா-கோவை:1 10 117/3
தார் அணி கொண்ட இரு தோள் ஒருவர் தனித்துழி என் – தஞ்-வா-கோவை:2 20 289/1

மேல்

ஒருவின் (1)

ஒருவின் பசலை உருக்குவதாம் நமக்கு ஊடல் எவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 386/2

மேல்

ஒல்க (1)

சூது அலந்து ஒல்க விம்மி திரள் மா முலை தோகையரே – தஞ்-வா-கோவை:2 23 352/4

மேல்

ஒல்கா (1)

ஒல்கா இருள் மணந்து ஒல்கு அரும் போழ்தின் உணர்ந்து நம்மை – தஞ்-வா-கோவை:1 13 185/1

மேல்

ஒல்கிய (1)

உடையான் உயர் தஞ்சைவாணன் ஒன்னார் என ஒல்கிய நுண் – தஞ்-வா-கோவை:1 10 125/3

மேல்

ஒல்கு (1)

ஒல்கா இருள் மணந்து ஒல்கு அரும் போழ்தின் உணர்ந்து நம்மை – தஞ்-வா-கோவை:1 13 185/1

மேல்

ஒல்லாது (1)

ஒல்லாது இது நுமக்கு என்று உணரேன் இன்று உணங்கி இ நாள் – தஞ்-வா-கோவை:1 10 89/3

மேல்

ஒல்லார் (1)

ஒல்லார் களத்தின் உடைந்தது போல ஒரு கலை போர் – தஞ்-வா-கோவை:1 9 77/2

மேல்

ஒல்லெனவே (1)

ஒல்லெனவே என் உறு துயர் தாமும் உணரும் வண்ணம் – தஞ்-வா-கோவை:1 15 218/1

மேல்

ஒலி (1)

ஒலி தெண் கடல் புடை சூழ் உலகு ஏழினும் ஊழ்வினைதான் – தஞ்-வா-கோவை:1 10 115/1

மேல்

ஒலியால் (1)

புனம் ஆர் குளிரி புடைப்பு ஒலியால் கிள்ளை போயின மீண்டு – தஞ்-வா-கோவை:1 9 73/2

மேல்

ஒவ்வா (1)

ஒவ்வா அலரையும் கேட்டு இருவீரும் ஒருதனியே – தஞ்-வா-கோவை:1 17 258/4

மேல்

ஒவ்வாய் (2)

அரும்பாம் அளவில் தனத்தொடு ஒவ்வாய் அலராம் அளவில் – தஞ்-வா-கோவை:1 7 37/1
கரும்பாம் மொழி வதனத்தொடு ஒவ்வாய் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 7 37/2

மேல்

ஒழி (5)

கனமா நறும் குழலீர் மொழியாது ஒழி காரணமே – தஞ்-வா-கோவை:1 9 73/4
ஏற்றாது ஒழி எனை எம்பெருமாட்டி சென்று ஏற்றவர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 126/2
தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே – தஞ்-வா-கோவை:1 15 223/4
ஒழி தோற்றிய சொல்லல் உன் மகள் ஓதிக்கு உடைந்த கொண்டல் – தஞ்-வா-கோவை:2 20 301/1
உயங்காது ஒழி அஃது உலகு இயல்பால் உலவும் புயல் தோய் – தஞ்-வா-கோவை:2 22 342/2

மேல்

ஒழி-மதி (1)

நையாது ஒழி-மதி நல் நெஞ்சமே இனி நம்மினும் தன் – தஞ்-வா-கோவை:1 1 3/2

மேல்

ஒழிகுவரோ (1)

தேராது ஒழிகுவரோ பெரியோர் தம் சிறுவனையே – தஞ்-வா-கோவை:3 28 391/4

மேல்

ஒழிகை (1)

பிறவாது ஒழிகை நன்றே ஒருகாலமும் பெண் பிறப்பே – தஞ்-வா-கோவை:2 21 310/4

மேல்

ஒழித்து (1)

தணியும் தொழில் ஒழித்து இன்பமும் துன்பமும் தன் பதமே – தஞ்-வா-கோவை:1 6 32/3

மேல்

ஒழிந்தனம் (1)

ஏனல் அம் காவலும் இன்றே ஒழிந்தனம் ஏழ் புவிக்கும் – தஞ்-வா-கோவை:1 11 153/3

மேல்

ஒழிந்திலரே (1)

உண்டாகிய பழம் கேண்மை இந்நாளும் ஒழிந்திலரே – தஞ்-வா-கோவை:3 28 406/4

மேல்

ஒழிந்தீர் (1)

எம் ஊரகத்து வரல் ஒழிந்தீர் எதிரேற்ற தெவ்வர்-தம் – தஞ்-வா-கோவை:1 14 197/2

மேல்

ஒழிந்து (1)

உடன் ஆய கேண்மை ஒழிந்து அறியார் இவ் உலகத்திலே – தஞ்-வா-கோவை:2 21 314/4

மேல்

ஒழிய (2)

அருளே ஒழிய உண்டோ நிழல் ஆவது அணங்கினுக்கே – தஞ்-வா-கோவை:2 21 307/4
உணங்கி கழிதல் ஒழிய என்-பால் வர உன்னை அன்பால் – தஞ்-வா-கோவை:2 22 327/2

மேல்

ஒழியா (1)

பருதி கண்டால் மலராது ஒழியா கய பங்கயமே – தஞ்-வா-கோவை:1 16 233/4

மேல்

ஒழியாது (1)

ஒழியாது என் முன்பு சொன்னாள் பேதையேன் ஒன்றை ஓர்ந்திலனே – தஞ்-வா-கோவை:2 22 326/4

மேல்

ஒழியாமல் (1)

மொய் நாள்_தழையொடு எல்லாம் ஒழியாமல் மொழி எனக்கே – தஞ்-வா-கோவை:1 13 167/4

மேல்

ஒழிவாய் (1)

பின் அயராது ஒழிவாய் இதணே இது பெற்றனமே – தஞ்-வா-கோவை:1 12 159/4

மேல்

ஒழுக்கத்தினால் (1)

ஒரு வெண்குடை இரு நீழல் முக்கோல் கொண்டு ஒழுக்கத்தினால்
அரு வெம் களர் இயைந்து ஆறு செல்வீர் அருளீர் எழு பார் – தஞ்-வா-கோவை:2 22 341/1,2

மேல்

ஒழுகிய (1)

ஒழுகிய அஞ்சன வெள்ளத்து உணங்கும் அணங்கை முன் சென்று – தஞ்-வா-கோவை:1 18 273/3

மேல்

ஒழுகு (1)

ஆனாது ஒழுகு செந்தேன் அல்லி மேவும் அரச_அன்னம் – தஞ்-வா-கோவை:1 7 36/3

மேல்

ஒள் (1)

உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே – தஞ்-வா-கோவை:2 19 281/4

மேல்

ஒள்_நுதலே (1)

உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே – தஞ்-வா-கோவை:2 19 281/4

மேல்

ஒளி (5)

சிலம்பு உறை சூர் வந்து தீண்டின போல் ஒளி தேம்பி இவ்வாறு – தஞ்-வா-கோவை:1 8 40/2
உம் நாட்டு அரிவையர் ஆடிடம் சாந்தம் ஒளி இழை பூ – தஞ்-வா-கோவை:1 13 167/3
வாரணத்தால் வென்ற வாணன் தென்மாறை வயங்கு ஒளி சேர் – தஞ்-வா-கோவை:1 18 265/2
ஒளி போல் விளங்கிய வெண் மணல் யாறும் உவந்து கண்டு – தஞ்-வா-கோவை:2 21 316/3
அலர் புரை நீடு ஒளி ஆடியுள் பாவை_அன்னாட்கு உள நீர் – தஞ்-வா-கோவை:3 28 389/3

மேல்

ஒளித்தார் (1)

ஒளித்தார் அவர் இங்ஙனே நன்றுநன்று இவ் இலகியலே – தஞ்-வா-கோவை:1 17 253/4

மேல்

ஒளிந்து (1)

ஒன்றே எனது உரை ஊங்கு உயர் சோலையினூடு ஒளிந்து
நின்றே வருவல் இங்கே விளையாடுக நீ சிறிதே – தஞ்-வா-கோவை:1 3 24/3,4

மேல்

ஒளிப்பது (1)

உவாமதி போலும் ஒளிர் முகத்தாய் என் ஒளிப்பது உன் மேல் – தஞ்-வா-கோவை:1 10 119/2

மேல்

ஒளிர் (3)

காது அளவா வெம் கடு அளவா ஒளிர் காவி அம் தண் – தஞ்-வா-கோவை:1 8 46/2
உவாமதி போலும் ஒளிர் முகத்தாய் என் ஒளிப்பது உன் மேல் – தஞ்-வா-கோவை:1 10 119/2
உள்ளம் சிறியவர் மேல் செல்வரோ ஒளிர் கோமளம் செய் – தஞ்-வா-கோவை:3 28 404/2

மேல்

ஒறுத்து (1)

வெறுத்தார் ஒறுத்து உரை மேலும் நம் கேளிர் விழைதல் இன்றி – தஞ்-வா-கோவை:2 22 324/1

மேல்

ஒன்றா (1)

ஒன்றா விதித்திலனே உயிர் போல உடம்பையுமே – தஞ்-வா-கோவை:1 11 149/4

மேல்

ஒன்றினால் (1)

ஆறலை வெம் சிலை கானவரேல் என் கை அம்பு ஒன்றினால்
நூறலை அஞ்சலன் நுண்_இடையாய் நுமரேல் அவர் முன் – தஞ்-வா-கோவை:2 25 364/1,2

மேல்

ஒன்றினும் (1)

மண்ணும் பயில் வித்தும் ஒன்றினும் சந்திரவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 112/1

மேல்

ஒன்று (17)

பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமள பூம் – தஞ்-வா-கோவை:1 2 9/1
செருந்து ஒன்று சோலை தென்மாறை அன்னீர் செழும் திங்கள் உங்கள் – தஞ்-வா-கோவை:1 2 9/2
முருந்து ஒன்று கோப முகம் கண்டு நாணி முயல் மறு தீர் – தஞ்-வா-கோவை:1 2 9/3
மருந்து ஒன்று நாடி அன்றோ வட மேரு வலம்கொள்வதே – தஞ்-வா-கோவை:1 2 9/4
பெரு மால் மருந்து ஒன்று பெற்றனம் யாம் நெஞ்சம் பேதுறல் பார் – தஞ்-வா-கோவை:1 6 30/1
என் காதலின் ஒன்று இயம்புகின்றேன் இங்கு இனி வருங்கால் – தஞ்-வா-கோவை:1 8 61/1
தூற்றும் தழை என்று இது ஒன்று எங்ஙனே வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:1 10 128/4
பேச தகுவது ஒன்று அன்று கண்டாய் பிறிதோர் குறியை – தஞ்-வா-கோவை:1 14 191/1
அவள் குறியாம் இது என்றே நினைந்து அல்லது ஒன்று
நினையா வரும் கங்குல் நின் குறியா வந்து நின்றது நம் – தஞ்-வா-கோவை:1 14 199/2,3
இல்லத்து உறையும் இவள் பொருட்டால் நுமக்கு யானும் ஒன்று
சொல்ல தவிர்கிலன் சூழ் கழலீர் சுடர் தோய் புரிசை – தஞ்-வா-கோவை:1 17 251/1,2
இன்புற்ற காலத்து இருவர்க்கும் ஒன்று உயிர் என்று சொன்னார் – தஞ்-வா-கோவை:1 18 272/1
அறியாமையான் ஒன்று கேட்கலுற்றேன் உம்மை ஆவது ஒன்றும் – தஞ்-வா-கோவை:2 20 298/1
கண்டார் அறியும்படியனவே அல்ல காரணம் ஒன்று
உண்டால் உயிர்_அனையாய் அயிராமல் உரை எனக்கே – தஞ்-வா-கோவை:2 20 303/3,4
படி ஒன்று சாலி_அனையவர் சேரி படர் பவள – தஞ்-வா-கோவை:3 28 383/1
கொடி ஒன்று நீலம் மலர்ந்தது காட்ட கொடிய வெம் போர் – தஞ்-வா-கோவை:3 28 383/2
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன் – தஞ்-வா-கோவை:3 28 383/3
தொடி ஒன்று தோள் மடவார் சேரி-வாய் வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:3 28 383/4

மேல்

ஒன்றுதான் (1)

தன் மா நகர் உய்க்குமோ சொல்லுவீர் ஒன்றுதான் எனக்கே – தஞ்-வா-கோவை:2 23 354/4

மேல்

ஒன்றும் (3)

குழி அன்றியும் வெம் சுழி ஒன்றும் யாறும் குழீஇ கொடிதாம் – தஞ்-வா-கோவை:1 13 178/3
துயிலா நிலை ஒன்றும் சொல்லாய் துணையுடன் சூழ் திரை தேன் – தஞ்-வா-கோவை:1 17 254/3
அறியாமையான் ஒன்று கேட்கலுற்றேன் உம்மை ஆவது ஒன்றும்
குறியா மறி உயிர் கொள்ள என்றோ குருதி பலி கூர் – தஞ்-வா-கோவை:2 20 298/1,2

மேல்

ஒன்றே (1)

ஒன்றே எனது உரை ஊங்கு உயர் சோலையினூடு ஒளிந்து – தஞ்-வா-கோவை:1 3 24/3

மேல்

ஒன்றை (1)

ஒழியாது என் முன்பு சொன்னாள் பேதையேன் ஒன்றை ஓர்ந்திலனே – தஞ்-வா-கோவை:2 22 326/4

மேல்

ஒன்றையும் (1)

இரக்கின்றது ஒன்றையும் எண்ணலையால் எழு பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 10 121/2

மேல்

ஒன்றோ (1)

ஒன்றோ நமக்கு வந்து எய்திய நன்மை உடன்று எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:3 27 374/1

மேல்

ஒன்னார் (16)

என் மலைவேன் என்னும் என் உயிர் தாங்கும் எதிர்ந்த ஒன்னார்
மன் மலை வேழம் திறைகொண்ட சேய் தஞ்சைவாணன் மஞ்சு ஆர் – தஞ்-வா-கோவை:1 2 16/2,3
வண் கொடி ஏய் மதில் மாறை வரோதயன் வாணன் ஒன்னார்
எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல் – தஞ்-வா-கோவை:1 3 23/1,2
மனை ஆகிய தஞ்சைவாணன் ஒன்னார் என மற்று இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 8 39/2
மை போது அணி தொங்கல் வாணன் ஒன்னார் என வல்வினையேற்கு – தஞ்-வா-கோவை:1 10 116/1
உடையான் உயர் தஞ்சைவாணன் ஒன்னார் என ஒல்கிய நுண் – தஞ்-வா-கோவை:1 10 125/3
வாச தமிழ் புனை தோள்_உடையான் தஞ்சைவாணன் ஒன்னார்
தேசத்தவரும் எய்தா வெய்ய நோய் எய்தி சே_இழையே – தஞ்-வா-கோவை:1 14 191/3,4
மறந்து ஆங்கு அமையவும் வல்லை அன்பா தஞ்சைவாணன் ஒன்னார்
நிறம் தாங்கு இவர் கணை போல் உண்கண் மா முகில் நீர்மை கொண்டு – தஞ்-வா-கோவை:1 17 249/2,3
மண்ணும் புகழ் தஞ்சைவாணன் ஒன்னார் என மை குவளை – தஞ்-வா-கோவை:1 17 256/2
வார் அணி கொங்கை மணந்து சென்றார் தஞ்சைவாணன் ஒன்னார்
தேர் அணி வென்ற செழும் புகர் வேல் விழி தேன் இனம் சூழ் – தஞ்-வா-கோவை:2 20 289/2,3
வல்லும் பொரும் கொங்கை மங்கை நல்லாய் தஞ்சைவாணன் ஒன்னார்
புல்லும் துணைவியர் போல் வினையேன் பெற்ற பூவை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 330/2,3
வயலை கொடி நொச்சி மண்டபமே தஞ்சைவாணன் ஒன்னார்
இயலை தனித்தனி தந்தனளே நமக்கு இன்று அது அன்றோ – தஞ்-வா-கோவை:2 22 333/2,3
வரு மகளே தஞ்சைவாணன் ஒன்னார் துன்னும் வன் சுரத்து ஓர் – தஞ்-வா-கோவை:2 22 343/3
வாமானின் வாழ்வனவாக பல் நாள் தஞ்சைவாணன் ஒன்னார்
போம் மான் அதரிடத்து என் ஐயர் தோன்ற புறங்கொடுத்த – தஞ்-வா-கோவை:2 25 365/2,3
மை தோய்ந்து அலர்ந்த மலர் தடம் சூழ் தஞ்சைவாணன் ஒன்னார்
மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர் – தஞ்-வா-கோவை:3 27 370/1,2
மனையகத்து அல்லிடை வைகுதலால் தஞ்சைவாணன் ஒன்னார்
வினையகத்து அல்குதல் செல்லுவரேனும் அவ் வேந்தர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:3 27 376/2,3
வற்றும் பருவத்தும் மண் புரப்பான் தஞ்சைவாணன் ஒன்னார்
செற்றும் படையின் வெம் போர் தணிப்பான் அன்று சென்றவரே – தஞ்-வா-கோவை:3 31 416/3,4

மேல்

ஒன்னார்க்கு (1)

மயில் ஆடு தண்டலை மாறை வரோதயன் வாணன் ஒன்னார்க்கு
எயில் ஆகிய கடல் கானல் அம் சேர்ப்பற்கு இடையிருள் யான் – தஞ்-வா-கோவை:1 17 254/1,2

மேல்

ஒன்னாரின் (1)

தெளித்தார் செழும் தஞ்சைவாணன் ஒன்னாரின் நம் சிந்தை நைய – தஞ்-வா-கோவை:1 17 253/3

மேல்