வி – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்குற 1
விசயன் 1
விசாரம்செய்பவர் 1
விசும்பில் 1
விசும்பு 1
விசேட 1
விசேடன் 1
விசை 2
விசைத்து 1
விஞ்சி 1
விஞ்சு 2
விஞ்சை 1
விட்டவர் 1
விட்டில் 1
விட்டு 10
விட்டுவிட்டு 1
விட 1
விடங்கமும் 1
விடம் 4
விடமாய் 1
விடல் 6
விடற்கு 1
விடா 1
விடாது 1
விடு 2
விடுக்க 1
விடுத்த 1
விடுத்தல் 1
விடுத்தார் 1
விடுத்தீர் 1
விடுத்து 1
விடுதி 1
விடும் 2
விடுவிடு 1
விடுவித்து 1
விடை 2
விண் 20
விண்ட 1
விண்டார்-தம் 1
விண்டு 2
விண்டேன் 1
விண்ணகம் 1
விண்ணப்பத்தாலே 1
விண்ணப்பம் 2
விண்ணவர் 1
விண்ணவர்கள் 1
விண்ணவன் 1
விண்ணிடை 1
விண்ணில் 1
விண்ணின் 1
விண்ணும் 2
விண்ணுலகம் 1
விண்ணோர் 3
வித்தக 1
வித்தகன் 1
வித்தி 1
வித்திட 1
வித்திலான்-தனக்கு 1
வித்து 4
வித்துரும 1
வித்துருமத்தினால் 1
விதத்தினால் 1
விதம் 3
விதர்ப்பநாட்டு 1
விதலை 1
விதி 3
விதிக்கும் 1
விதிப்படியே 1
விதியுளி 1
விதிர்த்தவே 1
விதிர்த்து 1
விதிர்ப்போய் 1
விதிர்விதிர்ப்ப 1
விது 1
விதைப்பித்து 1
விபரீதம் 1
விம்ம 1
விம்மலுறும் 1
விம்மு 1
விம்மும் 1
விமல 2
விமானம் 1
வியக்கும் 1
வியத்தக 1
வியந்துகொள்வார் 1
வியப்ப 2
வியல் 1
வியன் 9
வியாத 1
வியாதன் 1
விரத 1
விரதம் 1
விரதமும் 1
விரதாதிகளால் 1
விரல் 2
விரல்-தொறும் 1
விரல்கள் 1
விரவி 1
விரவிடா 1
விரவிடாது 1
விரவியது 1
விரவில் 1
விரவு 3
விராதனை 1
விராய் 2
விராய 1
விரி 6
விரிக்கும் 2
விரித்தலால் 1
விரித்திடுகோ 1
விரித்து 10
விரித்துவிட்டால் 1
விரிதரும் 1
விரிப்பதற்கும் 1
விருகத்தால் 1
விருகம் 2
விருத்தி 2
விருத்திக்காக 1
விருந்திடும் 1
விருந்தினை 1
விருந்துசெய்தனன் 1
விருந்தை 1
விருப்பம் 2
விருப்பின் 3
விருப்பினுள் 1
விருப்பு 4
விருப்புணா 1
விருப்பொடு 4
விருப்போடு 1
விரும்ப 1
விரும்பாது 1
விரும்பி 5
விரும்பிடார் 1
விரும்பினால் 1
விரும்பு 4
விரும்பும் 2
விரும்புவதும் 1
விரும்புறு 2
விரை 19
விரைத்த 2
விரைதர 2
விரைந்து 10
விரைய 1
விரைவின் 3
விரைவினில் 3
விரோதமாய் 1
வில் 17
வில்_வல்லான் 1
வில்படு 1
வில்லிட 1
வில்லிடும் 1
விலக்க 2
விலக்கு 1
விலக்குவர் 1
விலகாராலும் 1
விலகிலா 1
விலங்கல் 3
விலங்கலை 1
விலங்கு 1
விலா 2
விலாப்புடை 1
விலாழி 2
விலை 3
விலைக்கொள 1
விலைப்-பால் 1
விவேக 1
விழல் 1
விழவு 1
விழி 9
விழித்து 1
விழியாம் 1
விழியிடை 1
விழியினாள் 1
விழு 1
விழுங்கு 1
விழுங்கும் 1
விழுங்குறு 1
விழுந்தான் 1
விழை 1
விழைதரு 1
விழையும் 1
விள்ள 1
விள்ளல் 1
விள்ளாத 1
விள்ளார்கள் 1
விள்ளாள் 1
விள 1
விளக்கம் 3
விளக்கமும் 1
விளக்கி 1
விளக்கிய 1
விளக்கியாங்கு 1
விளக்கே 1
விளங்க 2
விளங்கனியும் 1
விளங்காநிற்கும் 1
விளங்கிட 2
விளங்கிடு 1
விளங்கிடும் 1
விளங்கியவே 1
விளங்கினவே 1
விளங்கு 11
விளங்கு_இழை 1
விளங்குபு 1
விளங்கும் 4
விளங்குவன 1
விளம்பல் 1
விளம்பலோடும் 1
விளம்பிட 1
விளம்பினாரே 1
விளம்புவையால் 1
விளம்புறு 1
விளர்க்கும் 1
விளர்த்தவே 1
விளர்ப்பு 1
விளர்ப்பும் 1
விளா 1
விளியின் 1
விளைக்கும் 7
விளைந்த 1
விளைப்பது 1
விளைப்பாரும் 1
விளைப்போர் 1
விளையாநிற்கும் 1
விளைவினோடும் 1
விற்கும் 2
விற்று 2
விறகு 2
விறகும் 1
விறந்த 1
விறப்புறும் 1
விறல் 3
வினயத்தினும் 1
வினவற்க 1
வினவி 2
வினவிட 1
வினாயினனால் 1
வினாவினர் 1
வினாவுதல் 1
வினை 18
வினைக்கு 3
வினையாய் 1
வினையால் 1
வினையினேன் 1
வினையை 1
வினோதத்தினும் 1
வினோதம் 1

விக்குற (1)

ஒழுங்குறு சுடர்களை உற்று விக்குற
விழுங்குறு பாப்பு இனம் விட்டு ஒளித்திடல் – குசேலோ:1 18/1,2
மேல்

விசயன் (1)

விறல் மிகு விசயன் வாவு மான் தடம் தேர் பாகனாய் நடத்தி வீடுமன் முன் – குசேலோ:3 703/1
மேல்

விசாரம்செய்பவர் (1)

தெரிதர விசாரம்செய்பவர் ஒருபால் திகழ்தர பொலியும் அ சேரி – குசேலோ:1 47/4
மேல்

விசும்பில் (1)

துணி நிலா விசும்பில் துள்ள தெறித்திடு-தோறும் ஆங்கு – குசேலோ:3 554/3
மேல்

விசும்பு (1)

அறம் தவாது எழு மதி விசும்பு ஆறு செல் வருத்தம் – குசேலோ:2 351/3
மேல்

விசேட (1)

வில்படு விசேட கலன் நிறை பேழை மேவிய இருபத்தேழ் மகாரும் – குசேலோ:3 625/2
மேல்

விசேடன் (1)

கோ மேவு பொழில் திருவூர் அதிபதி சீர் கருணீகர் குல விசேடன்
பா மேவு பெரும் சீர்த்தி மிகு நாராயண வள்ளல் பயந்த மைந்தர் – குசேலோ:0 17/2,3
மேல்

விசை (2)

இன்னல் தீர்தர எட்டி விசை கொளீஇ – குசேலோ:2 224/3
காண்டலும் உவகை பூத்து கால் விசை கொடு நடந்தான் – குசேலோ:2 403/1
மேல்

விசைத்து (1)

களி தரு செருக்கினோடு கால் விசைத்து எழுந்து வாளை – குசேலோ:2 290/3
மேல்

விஞ்சி (1)

கொடிய விஞ்சி வட்காரை குனித்து அடும் – குசேலோ:2 222/1
மேல்

விஞ்சு (2)

விஞ்சு இருள் பூம் பொழில் மேவு கோகிலம் – குசேலோ:1 13/3
விஞ்சு வில் தொழில் மேவிய வேட்டுவர்-தம் – குசேலோ:1 40/2
மேல்

விஞ்சை (1)

விஞ்சை வல்லவன் நம் கேள்வன் என உளம் வியந்துகொள்வார் – குசேலோ:3 552/4
மேல்

விட்டவர் (1)

நிறைதரு தானை சொருக்கு முன் தூங்க நீள விட்டவர் குழாம் கூடி – குசேலோ:2 239/2
மேல்

விட்டில் (1)

பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு – குசேலோ:2 434/2
மேல்

விட்டு (10)

விழுங்குறு பாப்பு இனம் விட்டு ஒளித்திடல் – குசேலோ:1 18/2
அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட – குசேலோ:1 51/3
தேடிய கால தூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே-கொல் – குசேலோ:1 109/3
மல்லல் நீர் உலகில் தோன்றி மறைந்திடும் நும்மை விட்டு
செல்வம் என்று உறுவதற்கும் செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று – குசேலோ:1 112/2,3
எண் கொதிப்ப நறு நீழல் இயை மனை விட்டு அகலார்க்கும் – குசேலோ:1 179/2
இவ்வகை வளங்கள் எல்லாம் இனிது கண் விட்டு நோக்கி – குசேலோ:2 216/1
வெம்மை தீர்பாக்கு சிறுவர் கை தோணி விட்டு உலாய் ஆடுதல் கண்டான் – குசேலோ:2 244/4
சித்தம் விட்டு அகலாது ஐயன் திருவுரு தியானம்செய்து – குசேலோ:2 411/3
ஆன்ற எனது உளத்தினை விட்டு அகன்றிலை இந்நாள்-காறும் – குசேலோ:2 417/2
குரு விட்டு ஒழி தாரா கணமும் குறியாய் முன்னர் தோன்றினவே – குசேலோ:2 464/4
மேல்

விட்டுவிட்டு (1)

விட்டுவிட்டு உறை மென்மெல வீழ்ந்தவே – குசேலோ:2 445/4
மேல்

விட (1)

கலவிய விட நீர் உண்டு உடல் துறந்த உயிர்கள் உய்ந்திட கடைக்கண் பார்த்து – குசேலோ:3 682/2
மேல்

விடங்கமும் (1)

நன்னர் ஆக்கிய விடங்கமும் உறுத்தி மேல் நயப்ப – குசேலோ:2 345/2
மேல்

விடம் (4)

விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல் – குசேலோ:2 233/1
விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ – குசேலோ:2 305/4
கடுத்த கார் விடம் கயிலை கண்_நுதல் – குசேலோ:2 485/1
பன்னும் மந்திரம் உள்ளாரை பாம்பின் வாய் விடம் என் செய்யும் – குசேலோ:3 737/2
மேல்

விடமாய் (1)

பொருவா வெம் கடும் கூற்றாய் கொடு விடமாய் வடவையாய் புகுந்து வாட்டத்து – குசேலோ:1 79/3
மேல்

விடல் (6)

முற்ற ஒழிந்து விடல்
துன்று பவம் விளைக்கும் பந்தத்து உழல் நெஞ்சே – குசேலோ:2 201/3,4
என்றும் ஒழிந்து விடல்
நந்தும் வினைக்கு இடனாம் பந்தத்து உழல் நெஞ்சே – குசேலோ:2 201/6,7
அந்தோ ஒழிந்து விடல் – குசேலோ:2 201/9
விடல் அரும் கற்பு வாய்த்த மின்_அனார் வணங்கும் தெய்வம் – குசேலோ:2 474/3
விடல் மேல் உளது ஆகா வகை மேலும் பெரிது ஆர்த்த – குசேலோ:2 530/4
விடல் மிக்கதுவால் எவற்றினுக்கும் விருப்பின் சில உள்ளனவேனும் – குசேலோ:3 644/3
மேல்

விடற்கு (1)

விடற்கு அரும் தவத்தோடு ஒருங்குற வளர்ப்போன் வெகுளியும் காமமும் மயக்கும் – குசேலோ:1 50/2
மேல்

விடா (1)

மேலும் மேலும் விடா மழை ஆகலான் – குசேலோ:2 450/1
மேல்

விடாது (1)

வெருக்கொள சென்றும் கரங்கள் மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும் வளைந்தும் – குசேலோ:2 262/2
மேல்

விடு (2)

உயிர் குடித்து அந்த வாரணவாசி ஒன்னலன் மகன் விடு பூதம் – குசேலோ:3 701/1
நிலம் காவலொருவன் விடு களி யானை கோட்டினுக்கும் நிதமும் எண்_இல் – குசேலோ:3 713/1
மேல்

விடுக்க (1)

மாயையின் அறிந்த மாதுலன் விடுக்க வந்த பூதனை உயிர் சவட்டி – குசேலோ:3 678/1
மேல்

விடுத்த (1)

நிவப்புற விடுத்த தூது கண்டு ஆங்கு ஞெரேலென தேர் மிசை சென்று – குசேலோ:3 691/4
மேல்

விடுத்தல் (1)

தரை தலைவந்த ஞான்றே சல மலம் விடுத்தல் உண்டே – குசேலோ:1 100/3
மேல்

விடுத்தார் (1)

மிக்க அறிவுடையாரை போன்றும் உடல் பற்று அனைத்தும் விடுத்தார் போன்றும் – குசேலோ:2 325/1
மேல்

விடுத்தீர் (1)

கொண்டு நின்றீர் கற்ற கடன் கொடுத்தீர் விடுத்தீர் கோது அனைத்தும் – குசேலோ:2 468/4
மேல்

விடுத்து (1)

விதி வழி மலம் நீர் விடுத்து ஒளிர் கரக மென் புனலால் சுத்தி அமைத்து – குசேலோ:1 53/2
மேல்

விடுதி (1)

வெம்புறேல் கவலை எல்லாம் விடுதி என்று உடலம் தைவந்து – குசேலோ:3 734/2
மேல்

விடும் (2)

மோது அடு கூற்றொடும் பொருத முடங்கல் விடும் தடம் கரும் கண் – குசேலோ:2 500/3
நின்றிடின் பல் நாள் உடலை விடும் கால் வேறு எண் கலவாது – குசேலோ:3 650/3
மேல்

விடுவிடு (1)

மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல் – குசேலோ:1 99/4
மேல்

விடுவித்து (1)

புல்லினை கிழித்து பற்பல் நாள் வருந்து புரவலர் சிறை விடுவித்து
நல் அற மைந்தன் இராசசூயத்தில் நடை பிறழ் சேதிபன் தடிந்து – குசேலோ:3 702/2,3
மேல்

விடை (2)

பெரு விடை துலாக்கோன் பின்னும் பிரிவு இன்றி செல செல் காலும் – குசேலோ:2 302/3
புரவு பூண்டு உயரும் கோசலத்து அரசன் போர் விடை ஏழையும் தழுவி – குசேலோ:3 698/2
மேல்

விண் (20)

மெய் கவின் மறைத்த சாந்தம் விண் உலாம் நதியும் நாற – குசேலோ:1 8/2
விண் தேவர் இமைத்திலர் நோக்க விளங்கு பொற்பின் – குசேலோ:1 22/1
நறவு பாயும் நறு மலர் கொம்பர் விண்
உறவு கொண்டிட உற்ற அ கானிடை – குசேலோ:1 39/2,3
செப்ப அரும் ஆசை பொய் கொடும் சீற்றம் செற்றுளாய் எனினும் விண் ஆளும் – குசேலோ:1 156/2
விண் கொதிப்ப அவ் வேனில் வெம் பருவம் மேவியதால் – குசேலோ:1 179/4
விண் புலம் புகழும் மற்றும் ஓர் அரசு விரைவின் உள் புகுவது காணூஉ – குசேலோ:2 232/2
அந்தில்-நின்று எழுந்து விண் முகடு உடைக்க அளவு_இல் பல் வளத்தவாய் பொலியும் – குசேலோ:2 257/3
நச்சும் விண் உரிஞ்சும் போகு உயர் குவட்டு ஓர் நாகம் ஏந்தி தடுத்தருளும் – குசேலோ:2 269/2
ஆய காலை விண் ஆறு எழு வெண் முகில் – குசேலோ:2 437/1
ஓதி நிற்க ஒரு வில் விண் தோன்றிற்றே – குசேலோ:2 441/4
மீது கை அமைத்து அவ் வனம் விண் மழை – குசேலோ:2 453/3
தளவ மூரல் விண் மடந்தையர் நடித்தனர் தயங்க – குசேலோ:2 531/4
பற்பல அடுக்கு மாடம் பரந்த விண் தாங்கல் நோக்கி – குசேலோ:3 549/1
அஞ்சும் ஊடலின் விண் மாதர் எறிந்த முத்தாரம் வீழ – குசேலோ:3 552/3
விலங்கல் விண் உயர்ந்த மாடம் வியன் கொடி முடங்கல் ஆங்கண் – குசேலோ:3 557/1
நயக்கும் மாதர்கள்-தம் கூந்தற்கு இடும் நறும் புகை விண் மாதர் – குசேலோ:3 564/1
மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல் – குசேலோ:3 648/2
தவ பெரு முனிவர் குடிகொளும் பன்னசாலைகள் கடந்து விண் தடவ – குசேலோ:3 670/1
இலங்கையுள் புகுந்து தசமுகனவனுக்கு இளவல் விண் இறையவன் பகை முன் – குசேலோ:3 674/1
நயம் கெழு பூ மழை அமரர் பொழிதர விண் அரமகளிர் நடியாநிற்க – குசேலோ:3 715/2
மேல்

விண்ட (1)

விண்ட சிற்றிடமும் இன்று ஒரு கற்பம் மேவி நாம் காத்திருந்திடினும் – குசேலோ:2 258/3
மேல்

விண்டார்-தம் (1)

விண்டார்-தம் மணி மௌலி மிதித்து உழக்கும் கரும் கழல் கால் – குசேலோ:2 508/1
மேல்

விண்டு (2)

தன்னம் விண்டு விள்ளாத சீர் கதை சொல சமைந்தேன் – குசேலோ:2 367/4
விண்டு மென் பனி நீர் உறைத்திடும் இதின் விரை மிக்கு – குசேலோ:2 375/3
மேல்

விண்டேன் (1)

என்ன சொற்றனன் சிறிதும் விண்டேன் அலன் இனிமேல் – குசேலோ:2 367/2
மேல்

விண்ணகம் (1)

வெண் திரை வீசும் கரும் கடல் புடவி விண்ணகம் பாதலம் இவற்றுள் – குசேலோ:1 159/1
மேல்

விண்ணப்பத்தாலே (1)

தெள்ளு காரணம்தான் முன்னர் செய்த விண்ணப்பத்தாலே
வெள் இடை விலங்கல் போல விளங்குபு கிடந்தது ஐய – குசேலோ:3 732/1,2
மேல்

விண்ணப்பம் (2)

தேவாதிதேவனுக்கு இ தவன் வரவை விண்ணப்பம் செய்ய வேண்டும் – குசேலோ:2 329/4
வெற்றி கொள் கழல் கால் வேந்தே விண்ணப்பம் இதுவே என்றார் – குசேலோ:2 384/4
மேல்

விண்ணவர் (1)

மேதினி முளைத்த ஆற்றால் விண்ணவர் தெறுபாக்கு உற்று அங்கு – குசேலோ:1 10/1
மேல்

விண்ணவர்கள் (1)

சிங்கல் அற்ற விண்ணவர்கள் கண் ஊறு சேராமை – குசேலோ:2 348/3
மேல்

விண்ணவன் (1)

மிக்க பல் முயற்சிபுரிகிலார்-தமக்கு அவ் விண்ணவன் யாங்ஙனம் அருளும் – குசேலோ:1 149/4
மேல்

விண்ணிடை (1)

விண்ணிடை ஏகுதல் மீள பாதலத்தில் புகல் மீட்டு புவியின் மேவல் – குசேலோ:2 320/1
மேல்

விண்ணில் (1)

ஏகு வாம் பரி மந்திரங்களும் வாள் போர் இலகு கல்லூரியும் விண்ணில்
போகு உயர் இரத நிலைகளும் மிகுத்த புடை வள பெரு நகர் கடந்தான் – குசேலோ:2 228/3,4
மேல்

விண்ணின் (1)

விண்ணின் மேல் பயில் மேகம் இ மண் விரவியது என்று – குசேலோ:2 356/2
மேல்

விண்ணும் (2)

தமரம் விண்ணும் சலிப்ப எழுந்தவே – குசேலோ:2 440/4
வழிந்திடும் நீர்மை முட்ட வாவுவ விண்ணும் வாயு – குசேலோ:3 561/3
மேல்

விண்ணுலகம் (1)

இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க – குசேலோ:2 231/2
மேல்

விண்ணோர் (3)

இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர் – குசேலோ:0 8/1
மேவும் மிகையால் பூத சாரத்தின் விண்ணோர் உதித்திடுவர் – குசேலோ:1 127/2
அருந்து உணவு இழந்தோன் விண்ணோர் அமுது எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/2
மேல்

வித்தக (1)

வித்தக மா மறை தலைவன்-தன்னை முழு ஞானி என விளம்பல் வேண்டும் – குசேலோ:2 316/2
மேல்

வித்தகன் (1)

வித்தகன் சேவை வாய்த்தல் எண்மையில் மேவும்-கொல்லோ – குசேலோ:2 304/4
மேல்

வித்தி (1)

தறை சமம்செய்து வித்தி தண் புனல் மள்ளர் பாய்ச்ச – குசேலோ:1 5/3
மேல்

வித்திட (1)

உற உற்று உதிக்கும் கசிவினில் கீடாதி உருவம் வித்திட மண் – குசேலோ:1 128/2
மேல்

வித்திலான்-தனக்கு (1)

நிலைபெற உழுது வித்திலான்-தனக்கு நீள் பயன் உற்றிடும்-கொல்லோ – குசேலோ:1 147/4
மேல்

வித்து (4)

அவ் வித்து உயிர்ப்ப அவற்று அரிய யவை முன் செந்நெல் ஈறான – குசேலோ:1 129/1
முத்திக்கு வித்து ஆகும் முழுது உணர்ந்தோர் பெரு நட்பே – குசேலோ:2 424/1
திறன்படு சுரர் கால் யாப்பு செறி கழல் வித்து சீர்த்தி – குசேலோ:3 545/2
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் எழுமை பவமும் ஈன்றிடும் வித்து
ஒல்லா அவாவே அ பவத்தின் உறு துன்பு அறிந்தோன் உதியாமை – குசேலோ:3 652/1,2
மேல்

வித்துரும (1)

திருகு_இல் வித்துரும இந்தனம் அடுக்கி திரு மலி வணிகர்-தம் தெருவில் – குசேலோ:2 237/3
மேல்

வித்துருமத்தினால் (1)

வெள்ளியால் பொன்னால் பதுமராகத்தால் வித்துருமத்தினால் மற்றை – குசேலோ:2 245/2
மேல்

விதத்தினால் (1)

மற்றை வழியும் கடக்க வலி இன்று ஓர் விதத்தினால்
உற்றிடினும் கரும் கடல் யார் உதவி கொடு கடந்திடுவேன் – குசேலோ:1 193/1,2
மேல்

விதம் (3)

மாற்று விதம் இல் பறவை எலாம் வாய் தாழ்க்கொண்டு மரம்-தோறும் – குசேலோ:2 457/1
ஆதலின் தன் நாயகனுக்கு அமைந்த இதம் ஆகும் விதம்
காது அமர் பொன் குழை கிழித்து கருங்குவளை குலம் சவட்டி – குசேலோ:2 500/1,2
அன்றே உள்ள அவித்தை எனல் அஞ்ஞானம் பல் விதம் மதித்து யான் – குசேலோ:3 651/1
மேல்

விதர்ப்பநாட்டு (1)

நவ தளிர் பொழில் சூழ் விதர்ப்பநாட்டு அரசன் நங்கை முன்னோன் உரைக்கு அஞ்சி – குசேலோ:3 691/3
மேல்

விதலை (1)

விதலை நோயடையின் துன்பம் வியன் பருவத்தும் துன்பம் – குசேலோ:1 118/2
மேல்

விதி (3)

தீர்ந்திடச்செய் விதி ஆகி கன்று ஆக்கட்கு உரிஞ்சு செறி தறியும் ஆகி – குசேலோ:0 12/3
விதி வழி மலம் நீர் விடுத்து ஒளிர் கரக மென் புனலால் சுத்தி அமைத்து – குசேலோ:1 53/2
மா மறை முழங்கி கூறி வரு விதி விலக்கு அயர்ப்பர் – குசேலோ:2 282/3
மேல்

விதிக்கும் (1)

விதிக்கும் சித்திர அனங்களும் மேவு பாளிதமும் – குசேலோ:3 636/3
மேல்

விதிப்படியே (1)

தணிவு_இல் மகிழ் தலைசிறப்ப தழல் முன்னர் விதிப்படியே
கணிதம்_இல் வண் புகழ் மன்னன் கலியாண வினை முடித்து – குசேலோ:3 600/2,3
மேல்

விதியுளி (1)

மேய பல் கடனும் விதியுளி முடித்து விலக்க அரும் கொடும் தொழில் கவந்தன் – குசேலோ:3 672/3
மேல்

விதிர்த்தவே (1)

வெட்டும் வாள் என மின்னல் விதிர்த்தவே – குசேலோ:2 439/4
மேல்

விதிர்த்து (1)

வெருக்கொண்டு பதைபதைத்து விதிர்த்து உதறி கரம் பறித்து – குசேலோ:3 593/1
மேல்

விதிர்ப்போய் (1)

தெவ் உடல் பனிப்ப வெள் ஒளி நெடு வேல் செறி தடறு அகற்றுபு விதிர்ப்போய் – குசேலோ:1 55/4
மேல்

விதிர்விதிர்ப்ப (1)

தாது இவர் தண் பூம் கற்ப தரு குலம் விதிர்விதிர்ப்ப
தீதறு சுவர்க்க நாட்டை தினமும் சென்று உரிஞ்சும் சோலை – குசேலோ:1 10/3,4
மேல்

விது (1)

விது முக பதுமை செம் கை மெல்லென வருட சேந்து – குசேலோ:1 113/2
மேல்

விதைப்பித்து (1)

போற்றல்_இல் வரபு கொள் முன் பொலிதர விதைப்பித்து பின் – குசேலோ:2 279/3
மேல்

விபரீதம் (1)

ஒருவும் மதி அற்று உற பற்றல் உறும் அஞ்ஞானம் விபரீதம்
இருவும் பிறப்பில் எஞ்ஞான்றும் அதனால் ஒழிதல் இன்பமே – குசேலோ:3 648/3,4
மேல்

விம்ம (1)

என்றலும் உவகை விம்ம எழில் முகம் மலர்ச்சி காட்ட – குசேலோ:2 385/1
மேல்

விம்மலுறும் (1)

விம்மலுறும் நசையினரும் இவனிடத்து கேட்பதற்கு மேவார் என்றால் – குசேலோ:2 520/3
மேல்

விம்மு (1)

விம்மு வான் செல்வ மாடமாளிகையின் மேல் தவழ்ந்திடுவன கண்டான் – குசேலோ:2 246/4
மேல்

விம்மும் (1)

விம்மும் அ பிறையின் உரோகணி உள்வாய் வீற்றிருந்து என வியன் கற்றை – குசேலோ:3 616/3
மேல்

விமல (2)

விமல வேதிய நீ உளத்தின் வேண்டுவையேல் வேண்டுவ வேண்டியாங்கு அளிக்கும் – குசேலோ:1 154/3
வெய்யோன் எழுந்த அப்பொழுதே விமல ஆசாரியனான – குசேலோ:2 467/1
மேல்

விமானம் (1)

திரை நரை மூப்பு_இல் அமரர் ஊர் விமானம் சிக்குண்டு கிடப்பதும் கண்டான் – குசேலோ:2 242/4
மேல்

வியக்கும் (1)

வியக்கும் அரும் கற்புடையாரும் விரும்பும் மேன்மை மெல்_இயலே – குசேலோ:1 131/4
மேல்

வியத்தக (1)

வியத்தக வேண்டும் யாவையும் அளிப்பன் விளம்புறு முயற்சிசெய்யானேல் – குசேலோ:1 150/2
மேல்

வியந்துகொள்வார் (1)

விஞ்சை வல்லவன் நம் கேள்வன் என உளம் வியந்துகொள்வார் – குசேலோ:3 552/4
மேல்

வியப்ப (2)

மும்மை நல் உலகும் வியப்ப நீள் நதியாய் முடுகிட கதிரவன் உறுத்தும் – குசேலோ:2 244/3
திரை செறி கடல் சூழ் உலகினர் வியப்ப தித்திக்க பாடுதல் கேட்டான் – குசேலோ:2 253/4
மேல்

வியல் (1)

வெண்மையில் திகழ்ந்த மேல் நிலை மாட வியல் உபரிகையிடை இருந்து – குசேலோ:2 248/1
மேல்

வியன் (9)

விருப்பொடு நல் ஆன் ஐந்து கூட்டுநரும் வியன் பவித்திரம் முடிகுநரும் – குசேலோ:1 46/2
விதலை நோயடையின் துன்பம் வியன் பருவத்தும் துன்பம் – குசேலோ:1 118/2
ஆவ வியன் மானிடம் விருகம் அனைத்தும் பையுள் ஆவனவே – குசேலோ:1 127/4
வில் தார் அணி நல் பதம் இரண்டும் வியன் மா நிலம் தீண்டிட நடந்து – குசேலோ:2 203/3
மின்-வயின் பொலிய உயர்ந்த மாளிகை என் வியன் வயிற்று அடக்கி மீட்டு உமிழும் – குசேலோ:2 254/2
வேந்தர்கள் நெருங்கும் முரசு கண்படா இவ் வியன் நகர் எனவும் உட்கொண்டான் – குசேலோ:2 255/4
மின் ஆர் கதிர் உமிழும் ஒரு வியன் மா மணி தேர் மேல் – குசேலோ:2 528/2
விலங்கல் விண் உயர்ந்த மாடம் வியன் கொடி முடங்கல் ஆங்கண் – குசேலோ:3 557/1
விம்மும் அ பிறையின் உரோகணி உள்வாய் வீற்றிருந்து என வியன் கற்றை – குசேலோ:3 616/3
மேல்

வியாத (1)

மறை முழுது உணர்ந்த வியாத மா முனிவன் மைந்தனாம் சுக பெயர் முனிவன் – குசேலோ:0 15/1
மேல்

வியாதன் (1)

வர வியாதன் அம்பரீடன் புண்டரிகன் முன் மற்றோர் – குசேலோ:2 532/2
மேல்

விரத (1)

சுத்த விரத தவம் நல் துறை நின்றோன் சொல்லுமால் – குசேலோ:1 188/4
மேல்

விரதம் (1)

அழுந்துபட்டிடாத சாந்திராயணம் முன் அளப்பரும் செயற்கு அரு விரதம்
எழுந்துவிட்டு ஒளிர பல் பகல் ஆற்றி என்பொடு நரம்புகள் தோன்றி – குசேலோ:1 52/2,3
மேல்

விரதமும் (1)

அன்னதும் அன்றி கொண்ட விரதமும் அழித்தான் ஆனேன் – குசேலோ:3 728/3
மேல்

விரதாதிகளால் (1)

பொருந்து விரதாதிகளால் மிக்கு இளைத்த தன் உடம்பு பூரிப்புற்றது – குசேலோ:2 523/2
மேல்

விரல் (2)

வரு விரல் ஆழி வேண்டும் மார்பிடை மதாணி வேண்டும் – குசேலோ:2 274/3
சவி அணி கை விரல் தருப்பை பவித்திரம் பொன் ஆழியாய் ததைந்தது ஓங்கும் – குசேலோ:2 524/2
மேல்

விரல்-தொறும் (1)

நீள் சுடர் தொடரும் அமைந்த சூடகமும் நிரை விரல்-தொறும் எழு கதிரை – குசேலோ:3 619/3
மேல்

விரல்கள் (1)

வரம் கொள் மாதராய் விரல்கள் நால் மதியிடை மருவும் – குசேலோ:1 135/4
மேல்

விரவி (1)

விரவி நின்று தோத்திரம் எடுத்தியம்பினர் மேன்மேல் – குசேலோ:2 532/4
மேல்

விரவிடா (1)

பலவும் இன் புளி விரவிடா பாய தீம் கறியும் – குசேலோ:3 634/4
மேல்

விரவிடாது (1)

மிடல் உடை காதை விளம்பிட ஊறு விரவிடாது அளித்து அருள்புரியும் – குசேலோ:0 1/3
மேல்

விரவியது (1)

விண்ணின் மேல் பயில் மேகம் இ மண் விரவியது என்று – குசேலோ:2 356/2
மேல்

விரவில் (1)

விரவில் இவன் என் செய்வான் சிந்து பழம் கந்தை அன்றி வேறொன்று இல்லான் – குசேலோ:2 518/3
மேல்

விரவு (3)

விரவு பாற்கடல் படுக்கையின் சிறப்புற மேவி – குசேலோ:2 371/4
விரவு மின்னின் ஒளிக்கும் வெருவு இடி – குசேலோ:2 443/1
விரவு செம் மேக கற்றை விளங்கிடு செம்பொன் ஆடை – குசேலோ:3 556/3
மேல்

விராதனை (1)

உவப்புற எவரும் தண்டகம் புகுந்து அங்கு உடன்று எழு விராதனை மாட்டி – குசேலோ:3 670/4
மேல்

விராய் (2)

மின்னினால் பொலியப்படும் முகில் விராய் துயில்வ – குசேலோ:2 341/2
பருகுதற்கு அமைந்த இன் சுவை குழம்பு பால் விராய் உபசரித்து ஊட்ட – குசேலோ:3 626/2
மேல்

விராய (1)

வெம்மை தீர் இடம் என்று விராய போல் – குசேலோ:2 442/3
மேல்

விரி (6)

தழை விரி கற்ப நாடு சார்தலும் புவியில் யாரும் – குசேலோ:1 124/1
விரி மணி உருளை திண் தேர் விரைந்து செல் மறுகும் வீரர் – குசேலோ:3 560/3
பொருவறும் ஈரெட்டு இரட்டிய கோவை புரி கலாபமும் விரி சிகையும் – குசேலோ:3 620/3
வெம் திறல் அவுணன் வரை நிறம் கிழித்து விரி கதிர் சங்கம் ஒன்று எடுத்து – குசேலோ:3 688/3
விரி பெரும் புகழ் சால் அவந்தி மன் அளித்த மித்திரவிந்தையை கவர்ந்து – குசேலோ:3 697/4
விரி அதிர் வெண் திரை திருப்பாற்கடல் அளித்த வரிசையை பால் விலகாராலும் – குசேலோ:3 711/2
மேல்

விரிக்கும் (2)

பாய் ஒளி விரிக்கும் பொன் தகடு இணங்க பதித்து நன்கு இயற்றிய மறுகில் – குசேலோ:2 251/1
முதிர் ஒளி விரிக்கும் தண்ணென் முத்த அக்கதையும் சாத்தி – குசேலோ:2 407/3
மேல்

விரித்தலால் (1)

நிலவு வெள் ஒளி விரித்தலால் தன் அரை நிரம்ப – குசேலோ:2 364/2
மேல்

விரித்திடுகோ (1)

வீங்கும் நாசி சோபான வண்மையை விரித்திடுகோ
தேங்கு சூளிகை சிறப்பினை இற்று என தெரிக்கோ – குசேலோ:2 346/2,3
மேல்

விரித்து (10)

சொல் எலாம் சொல்லி நாட்டி துணை கரம் விரித்து நீட்டி – குசேலோ:1 66/2
பல் கதிர் விரித்து தோன்றி பாடுசெய் கதிரே போல – குசேலோ:1 112/1
விரித்து உரை பொருள் நீ சற்றும் விளங்கிட உணர்ந்தாய் அல்லை – குசேலோ:1 142/3
காதல் அங்கை விரித்து கவித்து அரோ – குசேலோ:2 227/4
மேய மேல் நிலை மாடங்கள் வெள் ஒளி விரித்து
பாய தாரகை கணத்தொடு பயிலுறு காட்சி – குசேலோ:2 353/1,2
தரை செறிந்திட நறு மயிர் படாம் தவ விரித்து
வரைவு_இல் பல் மணி கம்பலம் மேல் உற வயக்கி – குசேலோ:2 369/3,4
இரவு எழும் சுடர் கதிர் தவழ்ந்து என விரித்து இயக்கி – குசேலோ:2 371/2
பழுது_இல் அ மறையை உலகிடை விரித்து பளகு அறுத்து உயிர் எலாம் புரந்தாய் – குசேலோ:3 662/3
மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர் செவ் வாய்க்கு உண்டாய – குசேலோ:3 707/2
திரு அரையில் கொய்து விரித்து அலங்காரம் பெற உடுத்த செம்பொன் ஆடை – குசேலோ:3 714/1
மேல்

விரித்துவிட்டால் (1)

நிலை சேர் வான மகள் கூந்தல் நீள விரித்துவிட்டால் போல் – குசேலோ:2 459/1
மேல்

விரிதரும் (1)

விரிதரும் ஓத்து கற்பவர் ஒருபால் மெய்ப்பொருள் பொய்ப்பொருள் இரண்டும் – குசேலோ:1 47/3
மேல்

விரிப்பதற்கும் (1)

இலகு பொன் கண்ணன் உயிர் குடிப்பதற்கும் இமைப்பின் அ புவி விரிப்பதற்கும்
நிலவு வெண் பிறை கோட்டு அடல் வலி கேழல் நிமிர் உரு கொண்ட எம் பெரும – குசேலோ:3 664/2,3
மேல்

விருகத்தால் (1)

தீய புலி முதல் விருகத்தால் கொடுங்கோல் மன்னவரால் தீயால் நீரால் – குசேலோ:2 314/1
மேல்

விருகம் (2)

ஆவ வியன் மானிடம் விருகம் அனைத்தும் பையுள் ஆவனவே – குசேலோ:1 127/4
வெய்ய கொடும் கள்வர் வன விருகம் முதல் பல கேடு – குசேலோ:2 434/3
மேல்

விருத்தி (2)

அருமை சால் அறம் விருத்தி ஆகுக என்றும் என்று – குசேலோ:3 574/1
ஒருமை அன்பினில் உஞற்றி வந்தனன் உதன் விருத்தி
இருமை இ செல்வம் கண்டீர் இன்னும் என் பெறுமோ என்பார் – குசேலோ:3 574/3,4
மேல்

விருத்திக்காக (1)

தன் குல விருத்திக்காக தன் மனை எண்ணம் வாய்ப்ப – குசேலோ:1 65/1
மேல்

விருந்திடும் (1)

வென்றி கொள் செறுநர் சாய்த்து விருந்திடும் வெள் வேல் வேந்தே – குசேலோ:3 542/2
மேல்

விருந்தினை (1)

சந்ததம் உற்ற விருந்தினை ஓம்பும் தக்க வேங்கடகிருட்டின பேர் – குசேலோ:0 25/1
மேல்

விருந்துசெய்தனன் (1)

விருந்துசெய்தனன் சாந்தம் பூம் பாகு வெள்ளிலையும் – குசேலோ:3 640/1
மேல்

விருந்தை (1)

தொங்கல் அம் கூந்தல் நல்லார் தொகுதியும் விருந்தை ஊட்டும் – குசேலோ:3 565/2
மேல்

விருப்பம் (2)

நீதிய நம் அரசனை கண்டிடும் விருப்பம் மீக்கூர நேடி வந்தான் – குசேலோ:2 328/2
நாட்டும் இவ் அவல் விருப்பம் நமக்கு மிக்கு உள்ளது என்று – குசேலோ:2 479/1
மேல்

விருப்பின் (3)

அறிதரு விருப்பின் இல்லின் அமைத்ததே பழைதும் அன்று – குசேலோ:2 476/2
விடல் மிக்கதுவால் எவற்றினுக்கும் விருப்பின் சில உள்ளனவேனும் – குசேலோ:3 644/3
விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/3
மேல்

விருப்பினுள் (1)

வெருவு_இல் நல் திருநாமங்கள் விருப்பினுள் துதித்தும் ஐந்தும் – குசேலோ:2 413/3
மேல்

விருப்பு (4)

எண் புகா புகழ் அவன்-தன் செயல் கண்டு மனைவி விருப்பு இகத்தல் இல்லை – குசேலோ:1 78/4
விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ – குசேலோ:2 305/4
இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப்பு என்ப அவர்க்கு என்றும் இல்லை – குசேலோ:2 319/2
விள்ளார்கள் சேய்மைக்-கண் இருந்தாலும் விருப்பு ஒழியார் – குசேலோ:2 432/2
மேல்

விருப்புணா (1)

விலகிலா வினைக்கு தக்க விருப்புணா வெறுப்புணாவும் – குசேலோ:1 101/2
மேல்

விருப்பொடு (4)

விருப்பொடு நல் ஆன் ஐந்து கூட்டுநரும் வியன் பவித்திரம் முடிகுநரும் – குசேலோ:1 46/2
மெய்ப்படு புராண நூல்கள் விருப்பொடு கேட்டு உவந்தும் – குசேலோ:1 114/2
மீன் விலைக்கொள அ சேரி விருப்பொடு புகுந்த மைந்தர் – குசேலோ:2 210/1
வேளை வாய்த்திட பல் முத்தம் விருப்பொடு காண்போர் கந்தி – குசேலோ:2 294/3
மேல்

விருப்போடு (1)

விருப்போடு தருதி என்றும் மக்கள் அழும் போதெல்லாம் விள்ளாள் ஒன்றும் – குசேலோ:1 76/2
மேல்

விரும்ப (1)

விரை நறும் செழும் தயிலக்காப்பு இடுபு என் உள் விரும்ப
உரை சிறந்திடு நானம் செய்தருளும் என்று உரைப்ப – குசேலோ:3 629/3,4
மேல்

விரும்பாது (1)

பாற்கடல் அடுத்த மீன் அ பால் விரும்பாது மற்ற – குசேலோ:1 143/1
மேல்

விரும்பி (5)

புந்தியின் விரும்பி பாதம் போற்றி நின்று இதனை கூறும் – குசேலோ:1 146/4
மெய் ஆதி நல் குணங்கள் விரும்பி அடைதர பொலிவோன் – குசேலோ:3 586/3
விளங்கு மன்னர் முன் யாவர்க்கும் இவ் வகை விரும்பி – குசேலோ:3 639/4
வினயத்தினும் வினோதத்தினும் விரும்பி பேசிடவும் அவர்கள் – குசேலோ:3 657/3
துலங்குற விரும்பி சத்தியபாமை தொழுதிட ஐம் தரு நல்கி – குசேலோ:3 699/4
மேல்

விரும்பிடார் (1)

மெத்திய மனத்தர் ஆகி விரும்பிடார் யாவர் என்பார் – குசேலோ:3 578/4
மேல்

விரும்பினால் (1)

ஏற்குமா விரும்பினால் போல் எம்பிரான் திருமுன் சார்ந்து – குசேலோ:1 143/2
மேல்

விரும்பு (4)

மெய் வந்த அன்னார் அருள் வேண்டி விரும்பு எதேனும் – குசேலோ:1 162/2
விரும்பு செம் துகிரோடு அலை கொழுந்து எழீஇ விழல் போல் – குசேலோ:2 372/2
மேதகையீர் மூப்பு அகன்று விரும்பு இளமை பெற புரிந்த – குசேலோ:3 611/3
விரும்பு பல் மாதர் குழாத்தொடும் பாடி மேவுபு தந்தையை கவரும் – குசேலோ:3 685/2
மேல்

விரும்பும் (2)

விரும்பும் யாம் வணங்கும் பத கடவுளே விளங்கும் ஆவினை மிக்க – குசேலோ:0 6/1
வியக்கும் அரும் கற்புடையாரும் விரும்பும் மேன்மை மெல்_இயலே – குசேலோ:1 131/4
மேல்

விரும்புவதும் (1)

நல்லார் சொல் விரும்புவதும் நல்லாரை காண்பதுவும் – குசேலோ:2 419/1
மேல்

விரும்புறு (2)

மிக்கவன் கேளாது உய்ப்ப விரும்புறு சிறப்பும் இல்லேன் – குசேலோ:2 217/2
மெச்சும் நும் கடன் என்று உரைத்தனன் எவரும் விரும்புறு குசேல மா தவனே – குசேலோ:2 269/4
மேல்

விரை (19)

மெல் நடை கரிய வாள் கண் விரை கரும் தாழ் குழாலே – குசேலோ:1 117/4
மிகுக்கும் சாரம் என்பதும் அத்துணைத்தாம் விரை பூம் குழல் மாதே – குசேலோ:1 130/4
மேதகு மார்பத்து இலங்கு மாலைகளும் விரை கெழு கலவையும் இளமை – குசேலோ:2 234/2
விரை கெழு வென்றி பெரும் புகழ் யாப்பின் மேவர இயைத்து இடம்-தோறும் – குசேலோ:2 253/3
புகழ்ந்து நறு விரை கலவை பூசிடினும் புல்லியரை போல நோக்கி – குசேலோ:2 319/1
நின்ற பல் விரை வருக்கமும் நிறைதர கூட்டி – குசேலோ:2 368/4
விரை துவன்றிய மென் பனி நீரிடை குழைத்து – குசேலோ:2 369/1
விண்டு மென் பனி நீர் உறைத்திடும் இதின் விரை மிக்கு – குசேலோ:2 375/3
மழை முகில் குழல் ஒருத்தி மெல் விரை புகை வயக்க – குசேலோ:2 376/4
போய் அழைத்திடு-மின் இன்னே என விரை பொருளில் சொற்றான் – குசேலோ:2 390/4
பிதிர் கருப்பூரம் நானம் பெய் விரை சாந்தம் சாத்தி – குசேலோ:2 407/2
விரை தரு தூமம் காட்டி மேவு நெய் விளக்கம் கோட்டி – குசேலோ:2 408/1
பொருவா விரை குங்குமம் குழைத்து பூசி வைத்தால் போல் தோன்றும் – குசேலோ:2 458/3
காமர் நறு விரை துளப கண்ணியனை புண்ணியனை – குசேலோ:3 539/1
பூம் கொம்பர் போல் நடந்து பொலி விரை பல் மலர் கொய்வாள் – குசேலோ:3 588/2
விரை கெழு தூமம் கமழ்தர கோட்டி மிளிர்தரு விளக்கமும் காட்டி – குசேலோ:3 623/1
விரை நறும் செழும் தயிலக்காப்பு இடுபு என் உள் விரும்ப – குசேலோ:3 629/3
தளம் கொள் பூம் தொடை விரை கெழு பாகு அடை தாங்கி – குசேலோ:3 639/3
வெப்பு இலா கற்பகப்பூ விரை கெழு மாரி பெய்ய – குசேலோ:3 743/2
மேல்

விரைத்த (2)

விரைத்த பூம் குழலாய் துய்க்கும் உணவு இன்றி மேவுமே-கொல் – குசேலோ:1 100/4
வீங்கு சாதி முன் பல உள விரைத்த உய்யானம் – குசேலோ:2 358/4
மேல்

விரைதர (2)

வேற்று வண் கழுதை ஏரின் விரைதர உழுவித்து உண்ண – குசேலோ:2 279/2
வேதம் முற்று உணர்ந்த ஐயன் விரைதர நடக்கலுற்றான் – குசேலோ:2 392/4
மேல்

விரைந்து (10)

ஆய இடர்க்கு அந்தோ என்று உளம் இரங்கி விரைந்து பொருள் ஆதி நல்கி – குசேலோ:2 314/3
நாவார துதிப்பதற்கு துடிதுடிக்கின்றது விரைந்து நாம் போய் இன்னே – குசேலோ:2 329/3
நேய மாதரும் விரைந்து சென்று அது நிகழ்த்தினரால் – குசேலோ:2 379/4
மெத்து நய மொழிகளால் மயங்கி ஒன்றும் கேளானாய் விரைந்து போனான் – குசேலோ:2 519/2
விரி மணி உருளை திண் தேர் விரைந்து செல் மறுகும் வீரர் – குசேலோ:3 560/3
வெருவு பல்லியம் இயம்ப விரைந்து எதிர்கொள்ள வந்தார் – குசேலோ:3 568/4
என் செய்தாய் பேதாய் என்று இரங்கி விரைந்து ஆங்கு எய்தி – குசேலோ:3 598/1
போரினுக்கு ஆற்றான் போல் விரைந்து ஓடி பொங்கு சீர் முசுகுந்தன் உறங்கும் – குசேலோ:3 690/2
கவற்சி இன்று ஆகி விரைந்து குப்புற்று கடி மதில் துவரையை அடைந்து – குசேலோ:3 691/2
காண்டலும் விரைந்து எழுந்து கரை உடைத்து எழு நீத்தம் போல் – குசேலோ:3 716/1
மேல்

விரைய (1)

புரை_இல் கற்புடை மனைவியார் விரைய முன் போந்து – குசேலோ:3 629/2
மேல்

விரைவின் (3)

விண் புலம் புகழும் மற்றும் ஓர் அரசு விரைவின் உள் புகுவது காணூஉ – குசேலோ:2 232/2
விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல் – குசேலோ:2 233/1
நலக்க நீ விரைவின் எய்தாவிடின் அவன் நண்ணும் இங்ஙன் – குசேலோ:2 391/4
மேல்

விரைவினில் (3)

வாயிலும் விரைவினில் கடந்தனர் இலங்கி – குசேலோ:2 337/2
பொன்றல்_இல் கருணை பொங்கி பொழிதர விரைவினில் சென்று – குசேலோ:2 385/2
மேனி பைத்து விரைவினில் மீண்டவே – குசேலோ:2 438/4
மேல்

விரோதமாய் (1)

மேவும் அன்பன் மனக்கு விரோதமாய்
யாவும் செய்யகிலாள் அயர்ந்தாவது – குசேலோ:2 495/1,2
மேல்

வில் (17)

செம்பொனால் வெண்பொனால் வில் செறி பல மணிகளால் செய்து – குசேலோ:1 7/1
ஓது வில் பத்திரம் கொண்டு உறு தளிரால் சிவந்து – குசேலோ:1 10/2
விஞ்சு வில் தொழில் மேவிய வேட்டுவர்-தம் – குசேலோ:1 40/2
வாங்கு வில் கரும் கார் மருங்கு உற மருண்டு மையல் அம் பிடி என அணைத்த – குசேலோ:1 171/1
வில் தார் அணி நல் பதம் இரண்டும் வியன் மா நிலம் தீண்டிட நடந்து – குசேலோ:2 203/3
ஏ திருந்திய வில்_வல்லான் சேவைக்கு வந்து இவ் வாயில் – குசேலோ:2 287/3
திரு வில் கான்றிடு சோமகாந்த செழும் சிகரம் – குசேலோ:2 352/1
ஓதி நிற்க ஒரு வில் விண் தோன்றிற்றே – குசேலோ:2 441/4
வில் பிறங்கிய வாள் நுதல் மெல் இயல் – குசேலோ:2 492/3
கூன் அமரும் வில் புருவ குயில் அமரும் மென் மொழியாள் – குசேலோ:2 498/3
வில் படும் அமரர் நாடு வீழ்ந்து மண் இறைகொண்டால் போல் – குசேலோ:3 543/3
வில் பட நிலத்து எவ் வேலை வீழுமோ என்று உள் கொண்ட – குசேலோ:3 549/3
வில் தவழ் சூழி யானை மிக பொழி தானம் பாய்ந்து – குசேலோ:3 562/1
வில் புருவ பைங்கிளி நின் பெயர் யாது விளம்புவையால் – குசேலோ:3 603/4
தெம் முனை மழுங்க வளையும் வில் புருவ செம்பொன் செய் பட்டமும் கதிர்கள் – குசேலோ:3 616/2
அரவு உயர் கொடியோன் ஆதியோர் உள்ளம் அச்சுற வில் வளைத்து அமர்த்து – குசேலோ:3 698/1
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/2
மேல்

வில்_வல்லான் (1)

ஏ திருந்திய வில்_வல்லான் சேவைக்கு வந்து இவ் வாயில் – குசேலோ:2 287/3
மேல்

வில்படு (1)

வில்படு விசேட கலன் நிறை பேழை மேவிய இருபத்தேழ் மகாரும் – குசேலோ:3 625/2
மேல்

வில்லிட (1)

மலை எடுத்து அனைய திண் தோள் வலயம் வில்லிட நிற்கின்றோன் – குசேலோ:2 291/1
மேல்

வில்லிடும் (1)

மேயின அரசர் வில்லிடும் மகுடம் மிடைதலின் ஒன்றொடொன்று உரிஞ – குசேலோ:2 251/2
மேல்

விலக்க (2)

விலக்க அரும் புகழ் வாய்ந்த விளங்கு_இழை – குசேலோ:2 494/2
மேய பல் கடனும் விதியுளி முடித்து விலக்க அரும் கொடும் தொழில் கவந்தன் – குசேலோ:3 672/3
மேல்

விலக்கு (1)

மா மறை முழங்கி கூறி வரு விதி விலக்கு அயர்ப்பர் – குசேலோ:2 282/3
மேல்

விலக்குவர் (1)

விலக்குவர் நாம் கொண்டிருப்பின் மேவாது எ பகையும் என – குசேலோ:1 181/2
மேல்

விலகாராலும் (1)

விரி அதிர் வெண் திரை திருப்பாற்கடல் அளித்த வரிசையை பால் விலகாராலும்
தெரிய அரும் சிற்றிடை அ திருவுறையுள் அமைத்தல் பெரும் சீர்த்தி என்று – குசேலோ:3 711/2,3
மேல்

விலகிலா (1)

விலகிலா வினைக்கு தக்க விருப்புணா வெறுப்புணாவும் – குசேலோ:1 101/2
மேல்

விலங்கல் (3)

வென்றி வார் குடையாகிய விலங்கல் அம் குவட்டில் – குசேலோ:2 349/3
விலங்கல் விண் உயர்ந்த மாடம் வியன் கொடி முடங்கல் ஆங்கண் – குசேலோ:3 557/1
வெள் இடை விலங்கல் போல விளங்குபு கிடந்தது ஐய – குசேலோ:3 732/2
மேல்

விலங்கலை (1)

விலங்கலை வேரோடு பறித்து ஒன்றினையொன்று அடர வளி வீசினாலும் – குசேலோ:2 318/2
மேல்

விலங்கு (1)

நந்திய பறவை கானம் நயந்து உறை விலங்கு முன்னா – குசேலோ:1 97/2
மேல்

விலா (2)

மின் திகழ் பிறழ் பல் கூற்றம் விலா புடை வீங்க உண்ண – குசேலோ:3 542/1
இவர்ந்த ஆசையின் விலா புடை வீங்க உண்டு எழுந்த – குசேலோ:3 638/3
மேல்

விலாப்புடை (1)

அறையும் அறுசுவை உணவு விலாப்புடை வீங்கிட உணுமாறு அளித்துளோரும் – குசேலோ:2 313/4
மேல்

விலாழி (2)

காற்று வெம் பரி விலாழி நீர் சேற்றில் கால் பதிந்து எழா வகை கண்டான் – குசேலோ:2 243/4
துன்னு உளை பரி விலாழி துலங்கும் அ நகரம்-நின்றும் – குசேலோ:3 563/2
மேல்

விலை (3)

பெரும் துளப மணி ஆரம் பெரு விலை முத்தாரமா பிறங்கிற்றாலோ – குசேலோ:2 523/4
பெரு விலை செம்பட்டு உடுத்திய இடையில் கவ்விய ஒட்டியாணமும் பேர் – குசேலோ:3 620/1
சொல் பெறு விலை பட்டு அடுக்கிய பேழை தொகை இலாது இருப்பன கண்டான் – குசேலோ:3 625/4
மேல்

விலைக்கொள (1)

மீன் விலைக்கொள அ சேரி விருப்பொடு புகுந்த மைந்தர் – குசேலோ:2 210/1
மேல்

விலைப்-பால் (1)

குறிதரு விலைப்-பால் சென்று கோடல் இவ் வளத்ததோ என்று – குசேலோ:2 476/3
மேல்

விவேக (1)

ஏர் ஆரும் கலை கடல் முற்று உண்டு ஆங்கு நின்று எழீஇ என் விவேக
வார் ஆரும் தடம் நிரம்ப மன பறம்பின் இனிய தமிழ் மாரி பெய்த – குசேலோ:0 13/2,3
மேல்

விழல் (1)

விரும்பு செம் துகிரோடு அலை கொழுந்து எழீஇ விழல் போல் – குசேலோ:2 372/2
மேல்

விழவு (1)

மீது புரந்தரன் உலவும் விழவு மிக சமழ்ப்பு அடைய – குசேலோ:3 613/2
மேல்

விழி (9)

மலர் விழி தேவகிக்கு நல் மகனாய் மகிதலத்து அவதரித்து அதன் பின் – குசேலோ:0 4/1
அரு மறை நான்கும் அன்புடன் ஏத்த அரவணை-தனில் விழி வளர்வோன் – குசேலோ:0 23/1
ஏ உலாம் இரு விழி இபத்தின் மெல் நடை – குசேலோ:1 14/1
சேர்தலும் நரம்பு பைத்து சேல் விழி குழிந்து காட்ட – குசேலோ:1 62/1
வேறு மனை சிறான் அயின்ற பக்கணம் கண்டு ஓடி வந்து விழி நீர் வார – குசேலோ:1 74/1
அயில் விழி பகையாம் என்பது அறிந்து உயிர் செகுப்பார் போல – குசேலோ:2 208/1
உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இ குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பி – குசேலோ:2 270/3
தீது அகல் நல் தவ பெரியோன் செய்ய விழி தோன்ற இறும்பூது – குசேலோ:3 589/3
தறி என மதியை நாட்டி வெண் பிறை பல் தழல் விழி அரவ நாண் பூட்டி – குசேலோ:3 663/2
மேல்

விழித்து (1)

காத்து மேல் நிலை விழித்து நிற்பவர் கை வாள் ஒளியும் – குசேலோ:2 350/2
மேல்

விழியாம் (1)

அமை தட மென் தோள் ஆய்ச்சியர் விழியாம் அம்புய தே மலர் மலர – குசேலோ:0 8/2
மேல்

விழியிடை (1)

இன்புற்ற விழியிடை நீர் வார இது செய்தவர் எவ் – குசேலோ:3 596/3
மேல்

விழியினாள் (1)

கொல் நவில் வேல் விழியினாள் கோதறு தே மொழியினாள் – குசேலோ:3 587/2
மேல்

விழு (1)

மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழு செல்வம் – குசேலோ:3 653/3
மேல்

விழுங்கு (1)

குலவு தனை விழுங்கு உவகை கொண்ட கோட்கு இனமாகி – குசேலோ:1 180/1
மேல்

விழுங்கும் (1)

விழுங்கும் மிடி துயர் தீர் அரும் நீரினர் மெய் ஈதால் – குசேலோ:2 516/2
மேல்

விழுங்குறு (1)

விழுங்குறு பாப்பு இனம் விட்டு ஒளித்திடல் – குசேலோ:1 18/2
மேல்

விழுந்தான் (1)

போய் எதிர்கொண்டான் காலில் விழுந்தான் புனைவித்தான் – குசேலோ:2 510/2
மேல்

விழை (1)

விழை கள் வார் கூந்தல் சுபத்திரை-தன்னை மேகவாகனன் மகற்கு ஈந்து – குசேலோ:3 696/4
மேல்

விழைதரு (1)

விழைதரு போகம் துய்த்து மேவலும் நல்லூழாமால் – குசேலோ:1 124/2
மேல்

விழையும் (1)

விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/3
மேல்

விள்ள (1)

விள்ள அரும் ஓர் பெரும் காட்டுள் விறகு ஒடித்து திரிந்தனமே – குசேலோ:2 436/4
மேல்

விள்ளல் (1)

விள்ளல் இன்றி கொண்டு என்ன விளர்த்தவே – குசேலோ:2 456/4
மேல்

விள்ளாத (1)

தன்னம் விண்டு விள்ளாத சீர் கதை சொல சமைந்தேன் – குசேலோ:2 367/4
மேல்

விள்ளார்கள் (1)

விள்ளார்கள் சேய்மைக்-கண் இருந்தாலும் விருப்பு ஒழியார் – குசேலோ:2 432/2
மேல்

விள்ளாள் (1)

விருப்போடு தருதி என்றும் மக்கள் அழும் போதெல்லாம் விள்ளாள் ஒன்றும் – குசேலோ:1 76/2
மேல்

விள (1)

ஒரு கரும் கன்று கொடு விள எறிந்து அங்கு உற்ற புள் வாய் கிழித்து அரவ – குசேலோ:3 681/3
மேல்

விளக்கம் (3)

அவிகை_இல் விளக்கம் வேண்டும் அரசவை குறுகுவார்க்கே – குசேலோ:2 275/4
விரை தரு தூமம் காட்டி மேவு நெய் விளக்கம் கோட்டி – குசேலோ:2 408/1
காலும் மின்னு விளக்கம் இ காட்டினுக்கு – குசேலோ:2 455/1
மேல்

விளக்கமும் (1)

விரை கெழு தூமம் கமழ்தர கோட்டி மிளிர்தரு விளக்கமும் காட்டி – குசேலோ:3 623/1
மேல்

விளக்கி (1)

செம் தளிர் கரத்தால் திருவடி விளக்கி சிறந்த வெண்பட்டினால் ஒற்றி – குசேலோ:3 622/3
மேல்

விளக்கிய (1)

தங்கள் குலம் விளக்கிய பேர் இரும் கருணை தெரிந்து உவகை தழைப்ப நாளும் – குசேலோ:3 709/1
மேல்

விளக்கியாங்கு (1)

சிலை தொழில் விளக்கியாங்கு செறி கரும் புருவ பாவாய் – குசேலோ:1 141/4
மேல்

விளக்கே (1)

மா மறை தலைவா போற்றி மதி குல விளக்கே போற்றி – குசேலோ:2 382/1
மேல்

விளங்க (2)

பம்மும் ஒள் வயிர பொட்டும் மற்று அணிந்த பல் கதிர் பணிகளும் விளங்க – குசேலோ:3 616/4
வயிர ஒண் சுட்டி நுதல் மிசை பொலிய மார்பிடை ஐம்படை விளங்க
கயில் செறி தொடரும் கடகமும் கரத்தில் காதில் அம் பொன் குழை தயங்க – குசேலோ:3 627/1,2
மேல்

விளங்கனியும் (1)

விளங்கனியும் மாங்கனியும் மிளிர் பாகல் செழும் கனியும் – குசேலோ:1 37/1
மேல்

விளங்காநிற்கும் (1)

உத்தரமதுரை என்னும் ஒரு நகர் விளங்காநிற்கும் – குசேலோ:1 2/4
மேல்

விளங்கிட (2)

ஆசு இலாத பல் குறிகளும் விளங்கிட அமையும் – குசேலோ:1 136/3
விரித்து உரை பொருள் நீ சற்றும் விளங்கிட உணர்ந்தாய் அல்லை – குசேலோ:1 142/3
மேல்

விளங்கிடு (1)

விரவு செம் மேக கற்றை விளங்கிடு செம்பொன் ஆடை – குசேலோ:3 556/3
மேல்

விளங்கிடும் (1)

துன்னு புற குடி மூன்றும் தொக்கு உறைய விளங்கிடும் அ – குசேலோ:1 33/3
மேல்

விளங்கியவே (1)

மானம் உறு புல் இனம் எல்லாம் மடங்கல் எனவும் விளங்கியவே – குசேலோ:2 463/4
மேல்

விளங்கினவே (1)

ஒல்லை இன்னயின்ன என உணருமாறு விளங்கினவே – குசேலோ:2 466/4
மேல்

விளங்கு (11)

வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி – குசேலோ:1 19/3
விண் தேவர் இமைத்திலர் நோக்க விளங்கு பொற்பின் – குசேலோ:1 22/1
களங்கனியும் விளங்கு அருணக்கனியும் நரந்தக்கனியும் – குசேலோ:1 37/2
மின் செய்த மதாணியாம் முத்தாரமாம் விளங்கு பட்டாம் – குசேலோ:2 308/1
மின்னு தாரகை குழாத்திடை விளங்கு ஒளி மதி போல் – குசேலோ:2 380/3
மின் உடைய விளங்கு ஒளி வேல் வேந்தருளும் தேவருளும் – குசேலோ:2 416/3
விலக்க அரும் புகழ் வாய்ந்த விளங்கு_இழை – குசேலோ:2 494/2
தரை செய் பேறு என விளங்கு தன் ஊர்ப்புறம் சார்ந்தான் – குசேலோ:2 534/4
வெள்ளிய மாடம்-தோறும் விளங்கு எழில் மணி பூண் நல்லார் – குசேலோ:3 555/1
விளங்கு மன்னர் முன் யாவர்க்கும் இவ் வகை விரும்பி – குசேலோ:3 639/4
மென் தளிர் மேனி பூ மேல் விளங்கு இழை தாயர் கைகட்கு – குசேலோ:3 724/3
மேல்

விளங்கு_இழை (1)

விலக்க அரும் புகழ் வாய்ந்த விளங்கு_இழை
நலக்கும் அன்பற்கு நன்மை இல்லாது ஒன்று – குசேலோ:2 494/2,3
மேல்

விளங்குபு (1)

வெள் இடை விலங்கல் போல விளங்குபு கிடந்தது ஐய – குசேலோ:3 732/2
மேல்

விளங்கும் (4)

விரும்பும் யாம் வணங்கும் பத கடவுளே விளங்கும் ஆவினை மிக்க – குசேலோ:0 6/1
திரு பொலி பெரியோர்க்கு உபசரிக்குநரும் செறிதர விளங்கும் அ சேரி – குசேலோ:1 46/4
வெய்யவன் தொடு சிகை அளவு_இல் அறை விளங்கும் – குசேலோ:2 354/4
வெருவா நின்று கண் பனிப்ப விளங்கும் நெடியோன் திருமார்பில் – குசேலோ:2 458/2
மேல்

விளங்குவன (1)

சொல்லும் பொருளும் வெளிப்படையாய் தோன்ற விளங்குவன போல – குசேலோ:2 466/2
மேல்

விளம்பல் (1)

வித்தக மா மறை தலைவன்-தன்னை முழு ஞானி என விளம்பல் வேண்டும் – குசேலோ:2 316/2
மேல்

விளம்பலோடும் (1)

மேதகு கருமம் என்று அ மடமையோர் விளம்பலோடும்
தீதறு குணத்தான் மாண்ட செழும் தவ குசேல மேலோன் – குசேலோ:2 307/2,3
மேல்

விளம்பிட (1)

மிடல் உடை காதை விளம்பிட ஊறு விரவிடாது அளித்து அருள்புரியும் – குசேலோ:0 1/3
மேல்

விளம்பினாரே (1)

மின் அனைய நுண் இடை பேர் அமர் கண் மட மாதர் சிலர் விளம்பினாரே – குசேலோ:2 521/4
மேல்

விளம்புவையால் (1)

வில் புருவ பைங்கிளி நின் பெயர் யாது விளம்புவையால் – குசேலோ:3 603/4
மேல்

விளம்புறு (1)

வியத்தக வேண்டும் யாவையும் அளிப்பன் விளம்புறு முயற்சிசெய்யானேல் – குசேலோ:1 150/2
மேல்

விளர்க்கும் (1)

அல் மணி விளர்க்கும் வண்ணன் அணங்கு_அனாரொடும் இருக்கும் – குசேலோ:2 396/3
மேல்

விளர்த்தவே (1)

விள்ளல் இன்றி கொண்டு என்ன விளர்த்தவே – குசேலோ:2 456/4
மேல்

விளர்ப்பு (1)

கனம் விளர்ப்பு என கறுத்த கண்ணன்-தன் அடிக்கே ஆக்கி – குசேலோ:3 576/2
மேல்

விளர்ப்பும் (1)

பருவ சில புள் எழுப்பு ஒலியும் பாய கீழை திசை விளர்ப்பும்
குரு விட்டு ஒழி தாரா கணமும் குறியாய் முன்னர் தோன்றினவே – குசேலோ:2 464/3,4
மேல்

விளா (1)

கந்தி களா விளா தென்னை கடுக்கை தேக்கு ஓமை முதல் – குசேலோ:1 35/3
மேல்

விளியின் (1)

விளியின் கொடிய நிரையம் எலாம் புகுந்து கிடக்கும் வேலை மிகும் – குசேலோ:3 660/4
மேல்

விளைக்கும் (7)

கடக்க அரும் தீமை நாள்-தொறும் விளைக்கும் கயவர்கள் தொடர்ச்சியும் தன்னை – குசேலோ:1 50/3
இவ்வண்ணம் கலாம் விளைக்கும் மைந்தர்களை நனி நோக்கி இரங்கி ஏங்கி – குசேலோ:1 72/1
தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே தடுப்ப அரும் கலாம் பல விளைக்கும்
தரித்திரம் அவமானம் பொய் பேராசை தரும் இதில் கொடியது ஒன்று இலையே – குசேலோ:1 88/3,4
துன்று பவம் விளைக்கும் பந்தத்து உழல் நெஞ்சே – குசேலோ:2 201/4
தினை முதல் வரகு முன் செஞ்சாலி முன் விளைக்கும் மூன்று – குசேலோ:2 215/1
வயல் எலாம் விளைக்கும் செல்வ மச்சநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 301/4
வேண்டுமேல் புனல் பெருகவும் சுருங்கவும் விளைக்கும்
சேண் துலங்கிய தூம்புகள் பற்பல செறியும் – குசேலோ:2 362/3,4
மேல்

விளைந்த (1)

மேய கொடும் கள்வரால் மற்று எவைகளாலும் இடர் விளைந்த போதில் – குசேலோ:2 314/2
மேல்

விளைப்பது (1)

அல்லலை விளைப்பது ஆகாது அரும் பெறல் செல்வம் பாவாய் – குசேலோ:1 112/4
மேல்

விளைப்பாரும் (1)

வெளிவருவாரும் உள்புகுவாரும் வீதியில் கலாம் விளைப்பாரும்
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில் – குசேலோ:2 235/1,2
மேல்

விளைப்போர் (1)

பனை செறி இ நிலத்து படும் உப்பு விளைப்போர் என்றும் – குசேலோ:2 215/3
மேல்

விளையாநிற்கும் (1)

வெம்மை புரி மூ வகை துயரும் விளையாநிற்கும் பாவத்தால் – குசேலோ:3 642/2
மேல்

விளைவினோடும் (1)

ஒருவு_இல் காம வினை விளைவினோடும் கூடும் மன உடம்பும் – குசேலோ:3 645/3
மேல்

விற்கும் (2)

திறமுற விற்கும் மின்னார் செறிதரும் தெருக்கள் பல்ல – குசேலோ:1 23/4
சிற்றிடை வலைச்சிமார்கள் தெருத்-தொறும் கூறி விற்கும்
வற்றல் மீன் நாற்றம் போக்கும் அலர் மணி குழல் தாழம்பூ – குசேலோ:2 213/1,2
மேல்

விற்று (2)

வெயிலிடை உணக்கி பின்னும் விற்று உளம் மகிழ்வார் யாரே – குசேலோ:2 208/3
களிதர பயில போகம் விற்று உண்ணும் கணிகையர் சேரியை கடந்தான் – குசேலோ:2 235/4
மேல்

விறகு (2)

விள்ள அரும் ஓர் பெரும் காட்டுள் விறகு ஒடித்து திரிந்தனமே – குசேலோ:2 436/4
மாட்டும் விறகு தேட போய் மயங்கி இருந்த நமக்கு இரங்கி – குசேலோ:2 461/1
மேல்

விறகும் (1)

மெய் நனைந்து விறகும் நனைந்ததே – குசேலோ:2 449/4
மேல்

விறந்த (1)

விறந்த பல் காத வழி நடந்ததனால் மேவிய வருத்தமும் இளைப்பும் – குசேலோ:2 256/2
மேல்

விறப்புறும் (1)

விறப்புறும் அஞ்ஞானியர் எவ் அறத்தினும் எவ் வகை சிறப்பும் மேவிடாரால் – குசேலோ:2 326/4
மேல்

விறல் (3)

வரு விறல் மடங்கல் மன்னன் வருடை தேள் அதிபன் முன்னும் – குசேலோ:2 302/2
கணி வார் புய விறல் வேந்தர்கள் கழலா களிப்புற்றார் – குசேலோ:2 527/4
விறல் மிகு விசயன் வாவு மான் தடம் தேர் பாகனாய் நடத்தி வீடுமன் முன் – குசேலோ:3 703/1
மேல்

வினயத்தினும் (1)

வினயத்தினும் வினோதத்தினும் விரும்பி பேசிடவும் அவர்கள் – குசேலோ:3 657/3
மேல்

வினவற்க (1)

அணவுறும் அஃது எற்று என்று வினவற்க அரசர் ஏறே – குசேலோ:3 566/4
மேல்

வினவி (2)

தன்னமும் இலான் பதிகர்-தமை வினவி வழி தேர்ந்து தடை இலாது – குசேலோ:1 170/2
நன்னர் வினவி பின்னும் இது நயந்து கூற தொடங்கினனால் – குசேலோ:2 470/4
மேல்

வினவிட (1)

வீரன் இங்ஙனம் வினவிட குறு – குசேலோ:2 491/2
மேல்

வினாயினனால் (1)

தொடுத்து வினாயினனால் அ சொல் பொருள் யாது அதுதான் எ சுவைத்து அன்னாய் நீ – குசேலோ:1 73/2
மேல்

வினாவினர் (1)

எந்திடத்து என வினாவினர் இலங்கு எழில்தரு பொன் – குசேலோ:2 338/2
மேல்

வினாவுதல் (1)

வள்ளல் நீ அறியான் போல வினாவுதல் மாட்சித்தேயோ – குசேலோ:3 732/4
மேல்

வினை (18)

அரு மறை முழக்கும் வினை தபும் யாக அழல்-கண் நல் மந்திர முழக்கும் – குசேலோ:1 45/1
நல்_வினை அடைந்த காலை நனி நலம் திளைப்பர் நன்மை – குசேலோ:1 122/1
அல்_வினை அடைந்த காலை அல்லல்_இல் துளைவர் எல்லாம் – குசேலோ:1 122/2
தொல்_வினை வழியது ஆகும் தோன்று அனுபவங்கள் தாம் தம் – குசேலோ:1 122/3
பூவினிடத்து அவ் வினை இரண்டால் பூத பரிணாமத்து உயிர்கள் – குசேலோ:1 127/3
முன்பு நல்_வினை செய்தவர் முயற்று இன்றி முன்னிய எலாம் உண்பர் என்னில் – குசேலோ:1 151/1
தேர்வார் வினை இருட்கு செங்கதிரோன் என்பரால் – குசேலோ:2 199/3
ஆய்வார் வினை வாரிக்கு ஆர் வடவை என்பரால் – குசேலோ:2 199/6
உற்றார் வினை அரவுக்கு ஓர் உவணம் என்பரால் – குசேலோ:2 199/9
வினை தவாது உஞற்ற மிக்க வெயில் வளம் வேண்டி நிற்பார் – குசேலோ:2 215/4
அரி கண் மாதர்க்கு ஒதுங்கியும் ஆழ் வினை
பரிக்கலாதான் படருகின்றான் அரோ – குசேலோ:2 225/3,4
செம்மையில் செய் வினை நல்லோர்-தமை சூழ செழும் போகம் சிறப்ப துய்த்திட்டு – குசேலோ:2 315/2
தக்க வழக்கிடத்தின் உயர்திணை வினை அஃறிணை வினையாய் சமைய சொற்றும் – குசேலோ:2 325/2
கணிதம்_இல் வண் புகழ் மன்னன் கலியாண வினை முடித்து – குசேலோ:3 600/3
ஒருவு_இல் காம வினை விளைவினோடும் கூடும் மன உடம்பும் – குசேலோ:3 645/3
பகரும் தெய்வம் அம்மை வினை பயன் உண்டோ இன்றோ என்னும் – குசேலோ:3 649/1
கலகம் ஆர் வினை கோள்பட்டு கலங்குபு மருளின் மூழ்கும் – குசேலோ:3 720/3
அகழ் வினை தவத்தின் மேலோய் அழுத்திடு இவ் உரையை உள்ளம் – குசேலோ:3 739/4
மேல்

வினைக்கு (3)

திரை கடல் வினைக்கு ஓர் ஆகரம் ஆகும் தேகத்தை வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 83/3
விலகிலா வினைக்கு தக்க விருப்புணா வெறுப்புணாவும் – குசேலோ:1 101/2
நந்தும் வினைக்கு இடனாம் பந்தத்து உழல் நெஞ்சே – குசேலோ:2 201/7
மேல்

வினையாய் (1)

தக்க வழக்கிடத்தின் உயர்திணை வினை அஃறிணை வினையாய் சமைய சொற்றும் – குசேலோ:2 325/2
மேல்

வினையால் (1)

புல்_வினையால் என்று எண்ணல் புலமையோரிடத்து இன்றாமால் – குசேலோ:1 122/4
மேல்

வினையினேன் (1)

கழல் தரா வினையினேன் இன்று அறிந்தனன் கடவுள் ஏறே – குசேலோ:3 723/4
மேல்

வினையை (1)

திடமுற நெஞ்சத்து உன்னி வல்_வினையை சிதர்தர செகுத்த மா மறையோய் – குசேலோ:1 158/4
மேல்

வினோதத்தினும் (1)

வினயத்தினும் வினோதத்தினும் விரும்பி பேசிடவும் அவர்கள் – குசேலோ:3 657/3
மேல்

வினோதம் (1)

மின் அவிர் அ பூம் சோலை வினோதம் நிமித்தமதாக – குசேலோ:3 595/3
மேல்