மி – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 13
மிக்கஃது 1
மிக்கதுவால் 1
மிக்கவன் 2
மிக்காள் 1
மிக்கான் 2
மிக்கீர் 1
மிக்கு 26
மிக்குற்று 1
மிக்குற 3
மிக்குறும் 1
மிக்கோன் 1
மிக 17
மிகவும் 1
மிகில் 1
மிகு 17
மிகுக்கும் 2
மிகுத்த 1
மிகுத்து 1
மிகுதிதான் 1
மிகுதியால் 1
மிகுதியாலே 1
மிகுந்தான் 2
மிகும் 3
மிகையால் 2
மிகையானால் 1
மிசை 18
மிசைய 1
மிடல் 2
மிடற்று 1
மிடி 11
மிடியதே 1
மிடியர் 1
மிடியவர் 1
மிடியன் 2
மிடியில் 1
மிடை 1
மிடைதலின் 1
மிடைந்து 1
மித்திரவிந்தையை 1
மிதப்ப 1
மிதித்திடு 1
மிதித்து 2
மிதிலை 1
மிளிர் 2
மிளிர்தர 1
மிளிர்தரு 1
மின் 13
மின்-வயின் 1
மின்_அனார் 1
மின்மினி 1
மின்மை 1
மின்னல் 3
மின்னல்செய் 1
மின்னார் 3
மின்னிய 1
மின்னின் 1
மின்னினால் 1
மின்னு 2
மின்னுகள் 1
மின்னும் 1
மின்னே 1
மினார் 1

மிக்க (13)

விரும்பும் யாம் வணங்கும் பத கடவுளே விளங்கும் ஆவினை மிக்க
பெரும் புகழ்ச்சி சால் மறையவர் குழாத்தினை பேணுக என வேதம் – குசேலோ:0 6/1,2
மன்னி வாழ்வு எய்தும் மிக்க மறுகுகள் பல வயங்கும் – குசேலோ:1 25/4
தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கி சரீரத்தை உலர்தர வாட்டும் – குசேலோ:1 88/1
மிக்க வெம் துயரத்து ஆழ்வர் இதற்கு உளம் மெலிதல் என்னே – குசேலோ:1 94/4
மிக்க பல் முயற்சிபுரிகிலார்-தமக்கு அவ் விண்ணவன் யாங்ஙனம் அருளும் – குசேலோ:1 149/4
மிக்க செம் தழலின் சிகை கொழுந்து எழுந்து மெய் வெதுப்புறும் என அஞ்சி – குசேலோ:1 172/1
குல மறை உணர்ச்சி மிக்க குசேலன் சென்று இறுக்கப்பட்ட – குசேலோ:2 204/3
வினை தவாது உஞற்ற மிக்க வெயில் வளம் வேண்டி நிற்பார் – குசேலோ:2 215/4
மிக்க அறிவுடையாரை போன்றும் உடல் பற்று அனைத்தும் விடுத்தார் போன்றும் – குசேலோ:2 325/1
நாதனுக்கு இனிமை மிக்க நண்பு உடையவனே போற்றி – குசேலோ:2 387/4
உயர்ந்தவர்க்கு இனிது செய்த உதவி போல் உயர்ந்து மிக்க
வயம் கொள பொலிந்தன்று எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி மாதோ – குசேலோ:3 547/3,4
மங்கல பொலிவு மிக்க மாடமாளிகையும் வாச – குசேலோ:3 565/1
மேய தன் முன்னர் கந்தை போல் துவாரம் மிக்க சிற்றிலை குடில் திரிந்து – குசேலோ:3 614/2
மேல்

மிக்கஃது (1)

இனிது அமிர்த சுவையினும் மிக்கஃது இதன் இன் சுவை அது என இயற்றினானால் – குசேலோ:0 19/1
மேல்

மிக்கதுவால் (1)

விடல் மிக்கதுவால் எவற்றினுக்கும் விருப்பின் சில உள்ளனவேனும் – குசேலோ:3 644/3
மேல்

மிக்கவன் (2)

மிக்கவன் கேளாது உய்ப்ப விரும்புறு சிறப்பும் இல்லேன் – குசேலோ:2 217/2
முகத்திடை நீண்ட உரோமம் மிக்கவன் எண் முடிதற்கும் இடம் அற யாரும் – குசேலோ:2 264/1
மேல்

மிக்காள் (1)

கற்புடைய அருந்ததியே முதல் மடவார் புகழ வரும் கற்பின் மிக்காள்
பொற்பு அமையா மிடி என்னும் சாகரத்துள் அழுந்தி மனம் புண்ணே ஆகி – குசேலோ:1 81/1,2
மேல்

மிக்கான் (2)

கோதறு குணத்தின் மிக்கான் குசேலன் என்று இயம்பினான் பேர் – குசேலோ:2 383/4
வளர் மறை உணர்ச்சி மிக்கான் வரவு பார்த்து இருப்ப அந்த – குசேலோ:2 400/1
மேல்

மிக்கீர் (1)

மக்களுள் மிக்கீர் நீலவண்ணனுக்கு அடியீர் தூய்தா – குசேலோ:2 265/1
மேல்

மிக்கு (26)

ஆர் வளர் திருவூர் சீனிவாசேந்த்ரன் ஆர்வம் மிக்கு ஊர்தர புகல – குசேலோ:0 21/2
உள்ளம் மிக்கு உவந்து உடங்கு கை கோத்தனர் சென்று – குசேலோ:1 9/3
மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த – குசேலோ:1 44/3
நேசம் மிக்கு உடையாள் கொண்கன் நினைப்பு அறிந்து ஒழுகும் நீராள் – குசேலோ:1 60/2
வருவாய் மிக்கு உடையராய் அளவிறந்த செல்வத்தின் வளம் உள்ளார்க்கும் – குசேலோ:1 79/1
கறை இட்டு நனி காண உலக்கை கொடு மிக்கு இடித்து கரிசு போக்கி – குசேலோ:1 169/1
தெள்ளு புனல் நசை மிக்கு திரி மருப்பின் இரலை எலாம் – குசேலோ:1 182/1
நலம் மலி நெய்தல் சார்ந்த நளிர் கடல் வளம் மிக்கு அன்றே – குசேலோ:2 204/4
உணங்கல் மீன் கவர் புள் ஓப்பும் ஆர்ப்பும் மிக்கு ஓசை போக்கி – குசேலோ:2 209/3
எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும் – குசேலோ:2 267/1
இழிவற உண்டு உடுத்தல் இன்றி மிக்கு எண்ணம் கொண்டு – குசேலோ:2 286/2
நிலவு பெரும் குலம் அரியது அதனினும் மற்று அஃதினும் மிக்கு அரிய நீரால் – குசேலோ:2 311/3
உறந்த பல் மணி மாளிகை தனக்கு மிக்கு உரித்து என்று – குசேலோ:2 351/2
விண்டு மென் பனி நீர் உறைத்திடும் இதின் விரை மிக்கு
உண்டு கொண்டிடு என்று ஒருத்தி பூம் செண்டு கை உதவ – குசேலோ:2 375/3,4
நேயம் மிக்கு உடையன் ஆகி நெஞ்சினுள் உவகை பூப்ப – குசேலோ:2 390/2
ஆதலின் எம்பிரானுக்கு அகத்து மிக்கு உவகை உய்ப்ப – குசேலோ:2 392/1
மோகம் மிக்கு அருகு இருந்து முதுகு தைவந்து பின்னும் – குசேலோ:2 409/3
நாட்டும் இவ் அவல் விருப்பம் நமக்கு மிக்கு உள்ளது என்று – குசேலோ:2 479/1
ஆர் அமைச்சு நேர் மதி அமைந்து மிக்கு
ஓர் அடிச்சியாய் பணியில் ஊண் இட – குசேலோ:2 489/1,2
மிக்கு ஆர்வத்தொடும் அடியில் வீழ்ந்து வணங்கிட மகிழ்ந்து – குசேலோ:2 507/2
பொருந்து விரதாதிகளால் மிக்கு இளைத்த தன் உடம்பு பூரிப்புற்றது – குசேலோ:2 523/2
பங்கம்_இல் மக்கட்பேறும் பண்பும் மிக்கு உளது அ மூதூர் – குசேலோ:3 565/4
பயனுறு இ பனவன் மேல் அ பார்வை மிக்கு ஆயிற்று அந்த – குசேலோ:3 577/3
கவற்சி மிக்கு உடைய பரதனுக்கு இனிய கழறி பாதுகை கொடுத்து அனுப்பி – குசேலோ:3 670/3
கன திருமறை நூல் உணர்ச்சி மிக்கு உடைய காமரு குசேல மா முனிவன் – குசேலோ:3 705/2
நேசம் மிக்கு ஊன்றி பொங்க நேர்நின்று குடந்தம்பட்டு – குசேலோ:3 718/2
மேல்

மிக்குற்று (1)

கொழுந்துவிட்டு எரியும் பசி தழல் அவித்து கோது_இல் வைராக்கியம் மிக்குற்று
அழுந்துபட்டிடாத சாந்திராயணம் முன் அளப்பரும் செயற்கு அரு விரதம் – குசேலோ:1 52/1,2
மேல்

மிக்குற (3)

பயிர்ப்பு மிக்குற நல்லோரை பழித்தல் பொய்க்கரி உரைத்தல் – குசேலோ:1 104/3
ஈனம் மிக்குற பொன் எல்லாம் ஈந்து அளித்தவையே கொள்வார் – குசேலோ:2 210/4
ஏதம் மிக்குற தன் உள்ளத்து இவையிவை எண்ணுவானால் – குசேலோ:2 307/4
மேல்

மிக்குறும் (1)

நன்றி மிக்குறும் அ சீறூர் நல பெரு நகர் ஆயிற்றே – குசேலோ:3 542/4
மேல்

மிக்கோன் (1)

ஓது அரும் செல்வம் மிக்கோன் ஒருவனோ சிறந்தோன் ஆவன் – குசேலோ:2 281/2
மேல்

மிக (17)

உளம் மிக தெளிந்தோர் புகலும் நல் மாற்றம் உண்மையாம் பொய்ம்மை ஆகாதே – குசேலோ:1 91/4
பாயும் வெண்புனல் செம்புனலினும் மிக பரவின் – குசேலோ:1 133/1
மிக தரும் யாக்கை உடையவன் துவாரம் மேவும் அ பாலர் முன் குறுகி – குசேலோ:2 264/3
அருள் மிக படைத்த சிந்தை அந்தணன் ஆதலாலே – குசேலோ:2 394/1
தெருள் மிக படைத்த மன்னன் செவி அறிவுறுப்பான் அல்லன் – குசேலோ:2 394/2
பொருள் மிக படைத்த வேந்தர் போற்றிடும் சிறப்புற்றான் என்று – குசேலோ:2 394/3
இருள் மிக படைத்த நெஞ்சர் இன்னவாறு இயம்பி நிற்க – குசேலோ:2 394/4
மண்டு மறை சொல் என் நிமித்தம் மழையில் நனைந்தீர் வருத்தம் மிக
கொண்டு நின்றீர் கற்ற கடன் கொடுத்தீர் விடுத்தீர் கோது அனைத்தும் – குசேலோ:2 468/3,4
மிக துன்றும் அஃது அன்றி மீட்டும் ஒரு பிடி எடுத்து – குசேலோ:2 497/2
மேவிய ஓர் பிடி அவலின் மிக மகிழ்ச்சி உடையானாய் – குசேலோ:2 504/3
நிதியம் மிக பெற்றவனாய் நினைந்து ஊர்க்கு வழிக்கொண்டான் – குசேலோ:2 506/4
நல் தவமாம் தன் இலக்கில் சிந்தையுற மிக மகிழ்ந்து நடக்கும் காலை – குசேலோ:2 522/4
ஆய இவை அனைத்தும் உணர்ந்து இறும்பூது மிக கொண்டான் அன்ன காலை – குசேலோ:2 525/4
வில் தவழ் சூழி யானை மிக பொழி தானம் பாய்ந்து – குசேலோ:3 562/1
தோய் புழுதி துடைத்து மிக உபசரிப்ப துயர் தீர்ந்தாள் – குசேலோ:3 594/4
இறவு உள தன்மையர் ஆகி எழில் பொலிவு மிக வாய்த்த – குசேலோ:3 606/2
மீது புரந்தரன் உலவும் விழவு மிக சமழ்ப்பு அடைய – குசேலோ:3 613/2
மேல்

மிகவும் (1)

மெத்திய ஏவலாளர் மிகவும் உண்டு ஆதலாலே – குசேலோ:2 306/2
மேல்

மிகில் (1)

ஏயும் ஆண் சுரோணிதம் மிகில் பெண் நிகர்த்து இரண்டும் – குசேலோ:1 133/2
மேல்

மிகு (17)

இடம் கொள் பல் உலகும் மிகு சுகம் உறுக என்றும் ஆரியரும் மோனியரும் – குசேலோ:0 5/2
பா மேவு பெரும் சீர்த்தி மிகு நாராயண வள்ளல் பயந்த மைந்தர் – குசேலோ:0 17/3
புனிதம் மிகு கலை உணர்ச்சி தேவராச குரிசில் புலவர் ஏறே – குசேலோ:0 19/4
அல்லது மிகு நட்பே என்று அற்றம் நோக்காது செல்லின் – குசேலோ:2 285/1
கொள்ளை மறை உணர்ச்சி மிகு குருராயன் பத்தினியாம் – குசேலோ:2 436/1
சீலம் மிகு சிவனன் எனும் திரு முனிவன் சுகனி எனும் – குசேலோ:3 601/1
சமரம் மிகு வேள் ஆற்றல் தவிர்த்து எமை ஆள் என்று இரப்ப – குசேலோ:3 604/2
தமரம் மிகு கரும் கழல் கால் தரியலர் கூற்று என பொலி வேல் – குசேலோ:3 604/3
பமரம் மிகு தார் பெருமான் பார் ஆள் சையாதி மகள் – குசேலோ:3 604/4
வளம் மிகு குறையா கறிகளும் குறைந்த மாண் கறி குப்பையும் மற்றை – குசேலோ:3 628/2
விறல் மிகு விசயன் வாவு மான் தடம் தேர் பாகனாய் நடத்தி வீடுமன் முன் – குசேலோ:3 703/1
திறல் மிகு வேந்தர் ஐவரால் மடிய செய்து பூ பாரமும் கழிப்பி – குசேலோ:3 703/2
நிறம் மிகு கமல கண்ணுடை கண்ண நின்மல நின் அடி போற்றி – குசேலோ:3 703/4
அறம் மிகு தலங்கள் சார்ந்தும் ஆரணியங்கள் சார்ந்தும் – குசேலோ:3 719/1
நிறம் மிகு வரைகள் சார்ந்தும் நெடிய நாள் இருந்து ஊண் இன்றி – குசேலோ:3 719/2
மறம் மிகு பொறியை வாட்டி வளர் தவம் புரிவார்க்கு அன்றி – குசேலோ:3 719/3
மின்னும் நீதியும் வாழி மிகு நலம் – குசேலோ:3 746/3
மேல்

மிகுக்கும் (2)

தரித்திரம் அளவா சோம்பலை எழுப்பும் சாற்ற அரும் உலோபத்தை மிகுக்கும்
தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே தடுப்ப அரும் கலாம் பல விளைக்கும் – குசேலோ:1 88/2,3
மிகுக்கும் சாரம் என்பதும் அத்துணைத்தாம் விரை பூம் குழல் மாதே – குசேலோ:1 130/4
மேல்

மிகுத்த (1)

போகு உயர் இரத நிலைகளும் மிகுத்த புடை வள பெரு நகர் கடந்தான் – குசேலோ:2 228/4
மேல்

மிகுத்து (1)

எத்துணைய செல்வம் மிகுத்து இருந்தாலும் ஈத்து உவத்தல் இவன்-பால் இல்லை – குசேலோ:2 519/1
மேல்

மிகுதிதான் (1)

பணை புகை மிகுதியாலே படர் தழல் மிகுதிதான் இத்துணையது – குசேலோ:3 566/1
மேல்

மிகுதியால் (1)

காதல் மிகுதியால் பெயர்த்து கத்தும் தரங்க கடலிடை இட்டு – குசேலோ:3 656/3
மேல்

மிகுதியாலே (1)

பணை புகை மிகுதியாலே படர் தழல் மிகுதிதான் இத்துணையது – குசேலோ:3 566/1
மேல்

மிகுந்தான் (2)

பூர்த்தி மிகுந்தான் அந்தோ வாளா போக என்றான் – குசேலோ:2 511/3
சீர்த்தி மிகுந்தான் நன்றே என்றார் சில மாதர் – குசேலோ:2 511/4
மேல்

மிகும் (3)

என்னரும் இறும்பூது எய்தும் எழில் மிகும் வணிகர் என்றும் – குசேலோ:1 25/3
விளியின் கொடிய நிரையம் எலாம் புகுந்து கிடக்கும் வேலை மிகும் – குசேலோ:3 660/4
புறம் மிகும் பாவியேற்கும் கிடைத்ததே புகழ் சால் காட்சி – குசேலோ:3 719/4
மேல்

மிகையால் (2)

பாவம் மிகையால் பூதத்து உற்பவிப்பர் நரகர் புண்ணியங்கள் – குசேலோ:1 127/1
மேவும் மிகையால் பூத சாரத்தின் விண்ணோர் உதித்திடுவர் – குசேலோ:1 127/2
மேல்

மிகையானால் (1)

உருவ உடம்பும் மிகையானால் தொடர்ப்பாடு இன்னும் உளவே-கொல் – குசேலோ:3 645/4
மேல்

மிசை (18)

கதிரவன் உதயகிரி மிசை வரும் முன் கன்னல் ஐந்து என துயில் ஒழிந்து – குசேலோ:1 53/1
பாற்கடல் மிசை ஓர் கார் கடல் போல பை அரவணை மிசை துயில்வோன் – குசேலோ:1 57/2
பாற்கடல் மிசை ஓர் கார் கடல் போல பை அரவணை மிசை துயில்வோன் – குசேலோ:1 57/2
வரை மிசை முளைத்த கழை நுனி கழன்ற மாசுண உரி அசைந்தால் போல் – குசேலோ:2 242/1
தரை மிசை கொடுங்கோல் நடவிய கஞ்சன் சாளவனே சிசுபாலன் – குசேலோ:2 253/1
வளம் கெழு கவான் மிசை முடி தலை வைத்து – குசேலோ:2 377/4
மாதர் சத்தியபாமை தன் கவான் மிசை வைத்து – குசேலோ:2 378/3
சிந்தையுள் மகிழ்ச்சி பொங்க சிரம் மிசை கரங்கள் கூப்பி – குசேலோ:2 381/1
நிலம் மிசை உண்டாக என நினைந்து அவல் ஓர் பிடி எடுத்து – குசேலோ:2 496/3
வயிர ஒண் சுட்டி நுதல் மிசை பொலிய மார்பிடை ஐம்படை விளங்க – குசேலோ:3 627/1
செயிரறு பொன் நாண் அரை மிசை கதிர்ப்ப சிறு சிலம்பு அடிகளில் கவின – குசேலோ:3 627/3
இனிதுற ஏறி கரை மிசை இவர்ந்தோர்க்கு எடுத்தெடுத்து அம் துகில் ஈந்து – குசேலோ:3 683/3
நிவப்புற விடுத்த தூது கண்டு ஆங்கு ஞெரேலென தேர் மிசை சென்று – குசேலோ:3 691/4
முடி மிசை கரம் கூப்பா மும்முறை பிரதக்கணம்செய்து – குசேலோ:3 717/1
அடி மிசை அன்பு பொங்க ஆனந்த கண்ணீர் வார – குசேலோ:3 717/2
படி மிசை கிடத்தும் தண்டின் பரிசு என மீட்டும் வீழ்ந்து – குசேலோ:3 717/3
நொடி மிசை எழுந்து துள்ளி நோற்றுளோம் யாமே என்று – குசேலோ:3 717/4
முடி மிசை ஏற்றி நின்று மூதறிவுடையோர் கொள்ளா – குசேலோ:3 726/2
மேல்

மிசைய (1)

முந்து ஆர்வத்து ஒரு சேய் மிசைய புகும் போதினில் ஓர் சேய் முடுகி ஈர்ப்ப – குசேலோ:1 71/3
மேல்

மிடல் (2)

மிடல் உடை காதை விளம்பிட ஊறு விரவிடாது அளித்து அருள்புரியும் – குசேலோ:0 1/3
மிடல் உடை கரத்தால் எடுத்து உணாது எங்ஙன் வீங்கும் வெம் பசி பிணி ஒழிப்பன் – குசேலோ:1 152/3
மேல்

மிடற்று (1)

இயக்கம் இரண்டாய் மிடற்று வழுக்காய் மூக்கு இளகு சளி நீராய் – குசேலோ:1 131/1
மேல்

மிடி (11)

என்பரால் நிற்க அன்னாற்கு இயை மிடி வெளிக்கொண்டன்றே – குசேலோ:1 65/4
இவ்வாறு மிடி என்னும் பெரும் கடலுள் அழுந்தியும் தற்கு இனிமை சான்ற – குசேலோ:1 80/1
பொற்பு அமையா மிடி என்னும் சாகரத்துள் அழுந்தி மனம் புண்ணே ஆகி – குசேலோ:1 81/2
குழை மிடி ஆதி துன்பு கூர்தலும் தீயூழ் அன்றே – குசேலோ:1 124/4
பனகமும் சிறு நாங்கூழும் போலும் பாய் மிடி பார்ப்பானே – குசேலோ:2 273/4
சீற்றம் மாற்றிடுவார் நட்போ சிறந்தது மிடி கோள்பட்டாய் – குசேலோ:2 279/4
பொத்து நோய் மிடி கோள் பட்ட நினக்கு இது பொருந்தாது ஆகும் – குசேலோ:2 306/4
என்ன மிடி வரினும் வெளி எடுத்தியம்பா இயலினளே – குசேலோ:2 426/2
விழுங்கும் மிடி துயர் தீர் அரும் நீரினர் மெய் ஈதால் – குசேலோ:2 516/2
பாய பெரும் மிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை என பாறி மாய்ந்தது – குசேலோ:2 525/1
சான்றவர் திரு உற்றாலும் தகுதியின் மிடி உற்றாலும் – குசேலோ:3 581/1
மேல்

மிடியதே (1)

மேதக முன் இருந்த மிடியதே இன்னும் வேண்டும் – குசேலோ:3 730/2
மேல்

மிடியர் (1)

பெறப்படும் மிடியர் ஆகில் பிடர் பிடித்து உந்துவார்கள் – குசேலோ:2 276/2
மேல்

மிடியவர் (1)

ஒன்றும் வேண்டலராயினும் செல்வர்-பால் உறு மிடியவர் சார்ந்தால் – குசேலோ:1 165/1
மேல்

மிடியன் (2)

தீது அமை மிடியன் ஆயின் சிறந்திடான் வேத்தவைக்கே – குசேலோ:2 281/4
வருந்தும் ஓர் மிடியன் சேமவைப்பு எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/1
மேல்

மிடியில் (1)

இருவா நின்றிடும் மிடியில் பல் மகவுள்ளாள் செய்கை எற்றே எற்றே – குசேலோ:1 79/4
மேல்

மிடை (1)

கானின் மிடை கார் களிறு எல்லாம் காமர் அயிராவதம் எனவும் – குசேலோ:2 463/2
மேல்

மிடைதலின் (1)

மேயின அரசர் வில்லிடும் மகுடம் மிடைதலின் ஒன்றொடொன்று உரிஞ – குசேலோ:2 251/2
மேல்

மிடைந்து (1)

சில்லி அம் தடம் தேர் முன் பல் சேனையும் மிடைந்து சூழ – குசேலோ:3 570/2
மேல்

மித்திரவிந்தையை (1)

விரி பெரும் புகழ் சால் அவந்தி மன் அளித்த மித்திரவிந்தையை கவர்ந்து – குசேலோ:3 697/4
மேல்

மிதப்ப (1)

வரிசைகள் மிதப்ப பெற்று வளர் பெறும் திருவும் பெற்று இ – குசேலோ:3 580/3
மேல்

மிதித்திடு (1)

மின்மை செய் பகைஞர் மோலி மிதித்திடு கழல் கால் கண்ணன் – குசேலோ:2 272/1
மேல்

மிதித்து (2)

விண்டார்-தம் மணி மௌலி மிதித்து உழக்கும் கரும் கழல் கால் – குசேலோ:2 508/1
அரும்பு பல் அரவை கால் மிதித்து அகற்றி அமைதரு கானம் மீட்டு அடைந்து – குசேலோ:3 685/3
மேல்

மிதிலை (1)

பெரு வள மிதிலை நகர் அகம் புகுந்து பெயர்க்க அரும் கார்முகம் இறுத்து – குசேலோ:3 669/1
மேல்

மிளிர் (2)

விளங்கனியும் மாங்கனியும் மிளிர் பாகல் செழும் கனியும் – குசேலோ:1 37/1
மேவு நோய் கோள்பட்டீரும் மிளிர் பிதிர் கருமம்செய்ய – குசேலோ:2 280/2
மேல்

மிளிர்தர (1)

வீங்கிய புலவு மாற்றி மிளிர்தர பூத்த நெய்தல் – குசேலோ:2 206/2
மேல்

மிளிர்தரு (1)

விரை கெழு தூமம் கமழ்தர கோட்டி மிளிர்தரு விளக்கமும் காட்டி – குசேலோ:3 623/1
மேல்

மின் (13)

மின் உமிழ் கார் முகில் பயிலும் மேல் கடலின் கரை இறுத்தான் – குசேலோ:1 196/4
மின் செய்த மதாணியாம் முத்தாரமாம் விளங்கு பட்டாம் – குசேலோ:2 308/1
தூ துளி படு குயின் குழாம் மின் தொகும் ஒளியும் – குசேலோ:2 350/3
மின் திகழ் மடவார் சூழ வீற்றிருந்தானை கண்டு – குசேலோ:2 388/4
மின் உடைய விளங்கு ஒளி வேல் வேந்தருளும் தேவருளும் – குசேலோ:2 416/3
விடல் அரும் கற்பு வாய்த்த மின்_அனார் வணங்கும் தெய்வம் – குசேலோ:2 474/3
மின் திகழும் மணி மார்பன் பணி செயல் வேண்டுவது இன்றே – குசேலோ:2 499/4
மின் அனைய நுண் இடை பேர் அமர் கண் மட மாதர் சிலர் விளம்பினாரே – குசேலோ:2 521/4
மின் ஆர் கதிர் உமிழும் ஒரு வியன் மா மணி தேர் மேல் – குசேலோ:2 528/2
மின் திகழ் பிறழ் பல் கூற்றம் விலா புடை வீங்க உண்ண – குசேலோ:3 542/1
மின் அவிர் அ பூம் சோலை வினோதம் நிமித்தமதாக – குசேலோ:3 595/3
மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழு செல்வம் – குசேலோ:3 653/3
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/2
மேல்

மின்-வயின் (1)

மின்-வயின் பொலிய உயர்ந்த மாளிகை என் வியன் வயிற்று அடக்கி மீட்டு உமிழும் – குசேலோ:2 254/2
மேல்

மின்_அனார் (1)

விடல் அரும் கற்பு வாய்த்த மின்_அனார் வணங்கும் தெய்வம் – குசேலோ:2 474/3
மேல்

மின்மினி (1)

மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப – குசேலோ:3 620/4
மேல்

மின்மை (1)

மின்மை செய் பகைஞர் மோலி மிதித்திடு கழல் கால் கண்ணன் – குசேலோ:2 272/1
மேல்

மின்னல் (3)

வெட்டும் வாள் என மின்னல் விதிர்த்தவே – குசேலோ:2 439/4
அ முகில்-நின்று வழுக்கி ஓர் மின்னல் அவிர் பிறை மேல் கிடந்தாங்கு – குசேலோ:3 616/1
கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க – குசேலோ:3 714/4
மேல்

மின்னல்செய் (1)

மின்னல்செய் வாகுவலயமும் வாளும் வெயிலுற பரப்புதல் கண்டான் – குசேலோ:2 247/4
மேல்

மின்னார் (3)

நெய் கரும் கூந்தல் மின்னார் நீர் குடைந்து அகற்றும் நானம் – குசேலோ:1 8/1
திறமுற விற்கும் மின்னார் செறிதரும் தெருக்கள் பல்ல – குசேலோ:1 23/4
கண்டார்கள் ஆங்கு இருக்கும் கார் குழல் மின்னார் பலரும் – குசேலோ:2 508/4
மேல்

மின்னிய (1)

மின்னிய வாளால் பற்பலர் துரப்ப வெரீஇயினான் சேயிடை அகன்றான் – குசேலோ:2 259/4
மேல்

மின்னின் (1)

விரவு மின்னின் ஒளிக்கும் வெருவு இடி – குசேலோ:2 443/1
மேல்

மின்னினால் (1)

மின்னினால் பொலியப்படும் முகில் விராய் துயில்வ – குசேலோ:2 341/2
மேல்

மின்னு (2)

மின்னு தாரகை குழாத்திடை விளங்கு ஒளி மதி போல் – குசேலோ:2 380/3
காலும் மின்னு விளக்கம் இ காட்டினுக்கு – குசேலோ:2 455/1
மேல்

மின்னுகள் (1)

வளம் நிலாவிய மின்னுகள் நடித்து என மணி வாய் – குசேலோ:2 531/3
மேல்

மின்னும் (1)

மின்னும் நீதியும் வாழி மிகு நலம் – குசேலோ:3 746/3
மேல்

மின்னே (1)

உவர் குடி குயினில் கட்டினர் அதனை உறும் மின்னே என்ன உட்கொண்டான் – குசேலோ:2 250/4
மேல்

மினார் (1)

பானல் அம் துவரை பன் மினார் கண் வாயால் – குசேலோ:2 220/1
மேல்