நோ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


நோக்க (1)

விண் தேவர் இமைத்திலர் நோக்க விளங்கு பொற்பின் – குசேலோ:1 22/1
மேல்

நோக்காது (1)

அல்லது மிகு நட்பே என்று அற்றம் நோக்காது செல்லின் – குசேலோ:2 285/1
மேல்

நோக்கார் (1)

வயக்கும் மெய் சூழ்தல் நோக்கார் மணம் அவர்க்கு இயற்கை என்பர் – குசேலோ:3 564/2
மேல்

நோக்கி (28)

உணர்வினார் மொழியும் மாற்றம் உவள் செயல் நோக்கி போலும் – குசேலோ:1 59/2
இவ்வண்ணம் கலாம் விளைக்கும் மைந்தர்களை நனி நோக்கி இரங்கி ஏங்கி – குசேலோ:1 72/1
சொல் பெரு நல் புகழ் கணவன் முகம் நோக்கி எண்ணியவை சொல்லலுற்றாள் – குசேலோ:1 81/4
ஆற்றல் சால் கருமம் என்பர் அ கருமத்தை நோக்கி
சாற்றும் இ பிறப்பில் தக்க தரித்திரம் செல்வம் நல்கி – குசேலோ:1 96/2,3
ஒண்ணும் மனையாள் முகம் நோக்கி உரைக்கலுற்றான் – குசேலோ:1 161/4
இவ்வகை வளங்கள் எல்லாம் இனிது கண் விட்டு நோக்கி
செவ்விய இறும்பூது எய்தி சீரகம் துளிப்ப தன் மெய் – குசேலோ:2 216/1,2
எங்கும் ஆராய்வுற்று அழைத்திடும் பின்னோர் இரும் தெரு நோக்கி உள் மகிழ்ந்தான் – குசேலோ:2 236/4
பந்தியின் மட நல்லார் பொன் பந்து எறிந்து ஆடல் நோக்கி
நந்திய பொழிலில் தேமா நறும் கனி பறித்துக்கொண்டு – குசேலோ:2 288/2,3
அந்தில் நின்று உயங்கும் கால் அவ் அடர் மடமையரை நோக்கி
சுந்தர அறிவின் மாண்ட துவாரபாலகர் சொல்வாரால் – குசேலோ:2 309/3,4
புகழ்ந்து நறு விரை கலவை பூசிடினும் புல்லியரை போல நோக்கி
இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப்பு என்ப அவர்க்கு என்றும் இல்லை – குசேலோ:2 319/1,2
குன்று_அனான் திரு முகம் நோக்கி கூறுவார் – குசேலோ:2 330/4
வாயில் காவல்செய் மாதரார் வாள் முகம் நோக்கி
போய் உரைத்திடும் எம் வரவு இறைக்கு என புகன்றார் – குசேலோ:2 379/2,3
முந்து தானையும் ஒடுக்கி முன்னர் நிற்பாரை நோக்கி
வந்த காரியம் என் என்றான் வகுத்து உரையாடலுற்றார் – குசேலோ:2 381/3,4
இலக்கணம் இன்மை நோக்கி இதற்கு மேல் சொற்றான் அல்லன் – குசேலோ:2 391/1
அன்னவன் வதனம் நோக்கி அமைய இன்னன சொல்வானால் – குசேலோ:2 415/4
மலிதரும் அன்பின் வந்த வண் பொதி அவிழ்த்து நோக்கி
வலிதரும் அவற்றுள் நன்று வாய்த்தது நமக்கு இது என்னா – குசேலோ:2 475/1,2
பற்பல அடுக்கு மாடம் பரந்த விண் தாங்கல் நோக்கி
அற்புறும் நம்தம் பொன் நாடு அந்தரம் நிற்றலாலே – குசேலோ:3 549/1,2
கந்து அடு வெண் களிற்றை கரும் களிறு ஆக்கல் நோக்கி
முந்தை நாள் சாபம் மீட்டும் முளைத்தது-கொல் என்று அஞ்சி – குசேலோ:3 551/2,3
சீர் புகழ் குசேலன் என்பான் சேய்மையே நகரம் நோக்கி
தார் பொலி மார்ப கண்ணன்-தன் அருள் வலியால் இன்னும் – குசேலோ:3 567/2,3
மருவுற வதனம் வைத்து மங்கைமார் மகிழ்ந்து நோக்கி
பொருவு_இல் இ மறையோன் செய்த புண்ணியம் எற்றோ இந்த – குசேலோ:3 571/2,3
வாய் புலர்ந்து கண் சாம்பி மயங்கினாள் செயல் நோக்கி
பாய வனத்து என் கண்டோ பயந்தாள் மற்று இவள் என்று – குசேலோ:3 594/1,2
அன்புற்று கொண்டாடி அடி பணிந்தான் உரு நோக்கி
இன்புற்ற விழியிடை நீர் வார இது செய்தவர் எவ் – குசேலோ:3 596/2,3
மங்கை திரு முகம் நோக்கி மற்று அவர் சொற்கு உடம்படு என – குசேலோ:3 609/1
செங்கதிரோன் உதயம் என திகழ் மூவர் உரு நோக்கி
மங்கையர் சூளாமணிதான் வடுவுறாது ஒழிதர என் – குசேலோ:3 610/1,2
போத அஞர் கடல் அழுந்தும் புலவர் இருவரை நோக்கி
மேதகையீர் மூப்பு அகன்று விரும்பு இளமை பெற புரிந்த – குசேலோ:3 611/2,3
அந்த வேலையில் பால் பொங்குபு வழிதல் ஆற்றுவான் அகன்றமை நோக்கி – குசேலோ:3 679/4
நிலத்திடை வருதல் நோக்கி அ பிலத்தை நேர்ந்து சாம்பவனொடு பொருது – குசேலோ:3 694/2
நின்ற அந்தணனை நோக்கி நெடிய மால் கருணை பூத்து – குசேலோ:3 725/3
மேல்

நோக்கிடல் (1)

செம்மை ஆர் அரசுபுரி நகர் வளத்தின் சிறப்பு நோக்கிடல் குறித்து ஆங்கு – குசேலோ:2 246/2
மேல்

நோக்கில் (2)

தன்மையும் ஏழையாம் நின் தன்மையும் தெரிந்து நோக்கில்
வன்மை செய் புழை கை மாவும் மசகமும் போலும் வாரி – குசேலோ:2 272/2,3
பெரு நிதி நகரம் நோக்கில் பிறங்கிய செல்வம் வாய்ந்த – குசேலோ:3 546/3
மேல்

நோக்கினன் (1)

பாய பல் வளனும் நிறைதர பொலியும் பண்பினை நோக்கினன் நின்றான் – குசேலோ:3 614/4
மேல்

நோக்கினனாய் (1)

இந்திரன் திசை நோக்கினனாய் உவந்திருந்தான் – குசேலோ:3 633/1
மேல்

நோக்கினார் (1)

உழை கிழித்து ஒளிர் நோக்கினார் ஊசலாட்டு உவப்பும் – குசேலோ:2 357/2
மேல்

நோக்குதலும் (1)

யாது அதனை அறிவாம் என்று இல்லி வழி நோக்குதலும்
தீது அகல் நல் தவ பெரியோன் செய்ய விழி தோன்ற இறும்பூது – குசேலோ:3 589/2,3
மேல்

நோக்குபு (1)

புற அடி நோக்குபு மொழிந்த பொன்_அனையாள் சொல் கேளா – குசேலோ:3 606/1
மேல்

நோக்கும் (2)

உள் ஆதவன் கதிரை உற நோக்கும் நெருஞ்சியே – குசேலோ:2 432/4
கரை_இல் பல் வளம் சென்று உலாய் நோக்கும் அ காலை – குசேலோ:3 629/1
மேல்

நோக்கும்-தோறும் (1)

உங்களை நோக்கும்-தோறும் உவரியும் வெஃகும் மேனி – குசேலோ:2 266/1
மேல்

நோக்குவான் (1)

நேய நெய்தல் நிறை வளம் நோக்குவான்
பாய அன்னம் பறந்தன போன்ம் என – குசேலோ:2 437/2,3
மேல்

நோய் (5)

தீதற கொண்டு கொடுத்து நம் சிறுவர் செல்லல் நோய் தவிர்க்குதல் வேண்டும் – குசேலோ:1 90/4
மேவு நோய் கோள்பட்டீரும் மிளிர் பிதிர் கருமம்செய்ய – குசேலோ:2 280/2
பொத்து நோய் மிடி கோள் பட்ட நினக்கு இது பொருந்தாது ஆகும் – குசேலோ:2 306/4
மறிவரும் பீழை நோய் கடல்-கண் மாய்வரே – குசேலோ:2 333/4
நின்று ஏகிட நோய் ஒழியும் என நிகழ்த்தாநிற்கும் நிரம்பிய நூல் – குசேலோ:3 651/4
மேல்

நோயடையின் (1)

விதலை நோயடையின் துன்பம் வியன் பருவத்தும் துன்பம் – குசேலோ:1 118/2
மேல்

நோயுறும் (1)

எவ்வ நோயுறும் பிறக்கும் இறக்கும் இ துயரம் ஓர்ந்த – குசேலோ:1 139/2
மேல்

நோலையும் (1)

உதிக்கும் நோலையும் அடையும் மற்று உள்ள சிற்றுணவும் – குசேலோ:3 636/2
மேல்

நோவரே (1)

தீயது என்பர் பின் சிந்தை நோவரே – குசேலோ:2 487/4
மேல்

நோவாள் (1)

தேறுதல்_இல் சிறு மகவை எடுத்து மார்பிடை அணைத்து சிந்தை நோவாள் – குசேலோ:1 74/4
மேல்

நோற்றான் (1)

இவர் தந்தை என் நோற்றான் என்று அறிஞர் உரைக்கும் வகை – குசேலோ:2 428/1
மேல்

நோற்றுளோம் (1)

நொடி மிசை எழுந்து துள்ளி நோற்றுளோம் யாமே என்று – குசேலோ:3 717/4
மேல்

நோன்பு (1)

சேருறு பொய்மை இல்லன் செறிந்த நோன்பு உழந்த நல்லன் – குசேலோ:2 310/2
மேல்