நூ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூக்குபு 1
நூல் 16
நூல்கள் 5
நூற்கு 1
நூற்படி 1

நூக்குபு (1)

இரு கவாடத்தை நூக்குபு தாழக்கோல் இறுக்கி – குசேலோ:3 641/3
மேல்

நூல் (16)

கடல் உடை புவி வாழ் உயிர் எலாம் களிக்க காத்து அருள் கண்ணனோடு அரு நூல்
அடலுற பயின்று பின் அவன் அருளால் அரும் திரு பெறு குசேலன்-தன் – குசேலோ:0 1/1,2
நினைவரு முழு நூல் உணர்ந்தவர் அகற்றி நீடு உலகினுக்கு இனிது ஆக்க – குசேலோ:0 16/3
அருப்பு மென் மலர் நந்தனவனம்-தன்னை அடைந்து எடுக்குநரும் நூல் ஆய்ந்த – குசேலோ:1 46/3
மன்னிய மறை நூல் மொழிந்திடும் அது-மன் வாய்மையே என்று உணர்ந்தவனாய் – குசேலோ:1 49/2
படி இலா மறை நூல் முற்று உணர்ந்து அடுத்தோர் பக்குவ திறன் மதித்து அறியா – குசேலோ:1 51/1
மலர் தலை உலகத்து என்று வகுப்பர் நூல் உணர்ந்த வல்லோர் – குசேலோ:1 101/4
உளம் மகிழ் கூர்வர் சற்றும் உண்மை நூல் உணர்ச்சி_இல்லார் – குசேலோ:1 103/4
செழு மதிக்கு சில் நூல் இழை பறித்திட்டு சிந்தித்தது உறல் போல – குசேலோ:1 167/3
செப்பு அரும் அரு நூல் மடம் தபு தேர்ச்சி செந்தமிழ் புலவர் தம் தூக்கின் – குசேலோ:2 230/1
அமைய அறிவுறுத்துவார் அந்தோ நூல் கற்று உணர்ந்த – குசேலோ:2 422/3
பெட்டு நூல் பெருக பயிலாதவர் – குசேலோ:2 445/1
கல்வி அறிவு மேலிடலும் கரிசு_இல் பல்லோர் இயற்றிய நூல்
சொல்லும் பொருளும் வெளிப்படையாய் தோன்ற விளங்குவன போல – குசேலோ:2 466/1,2
மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல்
ஒருவும் மதி அற்று உற பற்றல் உறும் அஞ்ஞானம் விபரீதம் – குசேலோ:3 648/2,3
நின்று ஏகிட நோய் ஒழியும் என நிகழ்த்தாநிற்கும் நிரம்பிய நூல் – குசேலோ:3 651/4
தந்தை உள் மகிழ்ந்து நூல் கடி முதலாம் சடங்குகள் இயற்றுவித்திடலும் – குசேலோ:3 688/1
கன திருமறை நூல் உணர்ச்சி மிக்கு உடைய காமரு குசேல மா முனிவன் – குசேலோ:3 705/2
மேல்

நூல்கள் (5)

மெய்ப்படு புராண நூல்கள் விருப்பொடு கேட்டு உவந்தும் – குசேலோ:1 114/2
கூடிய இரண்டு_ஐந்நூறு தொடி என கூறும் நூல்கள்
ஓடிய இரண்டு இயக்கக்கு உறுத்திய அளவை இன்றே – குசேலோ:1 140/3,4
அற பெரிய துறவறம் சார்ந்தவர்க்கும் இவர் அதிகம் என அறையும் நூல்கள்
விறப்புறும் அஞ்ஞானியர் எவ் அறத்தினும் எவ் வகை சிறப்பும் மேவிடாரால் – குசேலோ:2 326/3,4
மும்மை உலகிடத்தும் ஒரு ஞானி அரியவன் என்றே முழங்கும் நூல்கள்
எம்மை இனிது ஆண்டருள எழுந்தருளினான் என்றே எண்ணம் கோடும் – குசேலோ:2 327/3,4
வானவரும் செல்லரும் உலகம் புகுவான் என்னும் மறை நூல்கள் – குசேலோ:3 646/4
மேல்

நூற்கு (1)

பண்டை நூற்கு இயைய பாதுகாத்து அளித்தல் பகரும் நின் கடன் என பகர்ந்தாள் – குசேலோ:1 159/4
மேல்

நூற்படி (1)

பூம் குழல் மடவார்-தம்மை தன்வசமா புரிந்து வேள் நூற்படி கலவி – குசேலோ:0 3/2
மேல்