சீ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


சீக்க (1)

தொடர் செய் பொன் நிகளம் சீக்க துணிந்தவன் இரும்பால் செய்ய – குசேலோ:3 729/3
மேல்

சீசீ (1)

அம்மை நிரைய துயரும் உறும் அந்தோ சீசீ இ பொருளை – குசேலோ:3 642/3
மேல்

சீத (2)

சீத நீழல் செலின் சிற்றுயிர் தொகை – குசேலோ:2 227/1
சீத மலர் திரு_மார்பன் கோதறு சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/2
மேல்

சீதரப்பிரான் (1)

சீதரப்பிரான் படுத்திருந்தனன் களி சிறந்தே – குசேலோ:2 378/4
மேல்

சீதரனை (1)

உண்டு ஆடு சீதரனை ஒப்பிலா அற்புதனை – குசேலோ:3 541/3
மேல்

சீதள (2)

சீதள பளிக்கு மாடம் மேல் மடவார் செறிதரு புலவியில் வெறுத்த – குசேலோ:2 240/1
அரும்பு சீதள பாற்கடல் துயிலும் நாள் அவிரும் – குசேலோ:2 372/1
மேல்

சீயம் (1)

கோறலை குறித்த குடாவடி சீயம் கொடு வரி வேங்கை எய் ஆமான் – குசேலோ:1 173/2
மேல்

சீர் (29)

ஆங்கு அவர்-பால் பல் நாள் இயற்றிய சீர் ஆழி அம் கரதல கொண்டல் – குசேலோ:0 3/3
குமைத்து அருள் கண்ணன் பேசரும் சீர் இ குரை கடல் உலகில் வாழியவே – குசேலோ:0 8/4
சீர் ஆரும் திரிசிராமலையின் வளர்ந்து எக்காலும் சிறப்பின் ஓங்கும் – குசேலோ:0 13/1
கோ மேவு பொழில் திருவூர் அதிபதி சீர் கருணீகர் குல விசேடன் – குசேலோ:0 17/2
சீர் வளர் குசேலோபாக்கியானத்தை செந்தமிழ் பாவினில் செய்க என்று – குசேலோ:0 21/1
காமரு சீர் தேவராச பெரியோன் பல கலை தேர் கவிஞர் உள்ளம் – குசேலோ:0 22/2
திருவருள் பெற்ற குசேல மா முனிதன் சீர் வளர் சரித நன்கு உரைத்தான் – குசேலோ:0 23/2
சீர் திகழும் கருணீகர் குலத்து உதித்த தேவராசேந்த்ரன் மன்னோ – குசேலோ:0 24/4
சீர் அளாவி திகழ் கதிர் வார் கடல் – குசேலோ:1 43/3
சீர் உறு சங்கம் வாய்ந்து செழும் குவலயம் உண்டாக்கி – குசேலோ:2 205/1
பா திருந்திய சீர் கேட்டு பரிவுற போகம் துய்க்கும் – குசேலோ:2 287/2
பாய சீர் போர்வை போர்த்து படர் கதிர் என நிற்கின்றோன் – குசேலோ:2 298/1
ஆய்ந்த நின் பெரும் கலை அருமைப்பாடும் சீர்
வாய்ந்த மா தவம் வளர் மறாத செல்வமும் – குசேலோ:2 332/1,2
தன்னம் விண்டு விள்ளாத சீர் கதை சொல சமைந்தேன் – குசேலோ:2 367/4
அமைத்த சீர் மணி மாளிகை நாப்பண் வாள் அவிர – குசேலோ:2 370/1
சீர் ஆர் நின் ஊர்-நின்று சேர இவண் வருவாரால் – குசேலோ:2 431/1
சீர் ஆர் நுமக்கு கல்வி போல் செல்வ பொருளும் செழும் தொடையல் – குசேலோ:2 469/1
துன்றிய சீர் செல்வமே துன்னலார் முடி உரிஞ்சும் – குசேலோ:2 499/2
சீர் இயல செய்த அறம் சிறிதேனும் அ பயனால் – குசேலோ:2 502/2
பிரகலாதனன் பராசரன் பெரும் சவுனகன் சீர்
வர வியாதன் அம்பரீடன் புண்டரிகன் முன் மற்றோர் – குசேலோ:2 532/1,2
சீத மலர் திரு_மார்பன் கோதறு சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/2
செங்கமல திரு_மார்பன் கொங்கு அலர் சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/4
கனி மொழி செம் திரு_மார்பன் இனிய சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/6
கழிந்த காமுகர்-தம் நெஞ்சம் கனிந்த சீர் அணங்கு_அனார்-பால் – குசேலோ:3 561/1
சீர் புகழ் குசேலன் என்பான் சேய்மையே நகரம் நோக்கி – குசேலோ:3 567/2
நிலவுவம் அவ் உரு மூன்றில் நினக்கு இயைந்த சீர் உருவை – குசேலோ:3 607/3
தெருள் செய் உள முனி வேந்தன் சீர் வேந்தன் பயந்த இருள் – குசேலோ:3 612/3
வாய்ந்த நல் பெரும் சீர் உக்கிரசேனற்கு அரசுரிமை திறம் வகுத்து – குசேலோ:3 687/4
போரினுக்கு ஆற்றான் போல் விரைந்து ஓடி பொங்கு சீர் முசுகுந்தன் உறங்கும் – குசேலோ:3 690/2
மேல்

சீர்த்தி (9)

பா மேவு பெரும் சீர்த்தி மிகு நாராயண வள்ளல் பயந்த மைந்தர் – குசேலோ:0 17/3
மன்னிய இமைக்கும் சீர்த்தி மா நகர் அவந்தி உண்டால் – குசேலோ:1 3/4
செழும் தசை வற்றி இளைத்த யாக்கையனாய் திகழ்ந்தனன் சீர்த்தி அந்தணனே – குசேலோ:1 52/4
கற்றா மேய்த்த சிற்றாயன் காமர் சீர்த்தி வாழியவே – குசேலோ:2 203/4
சீர்த்தி மிகுந்தான் நன்றே என்றார் சில மாதர் – குசேலோ:2 511/4
அரும் தவர்கள் புகழ் சீர்த்தி அமைந்த திரு கண்ணபிரான் அருளினாலே – குசேலோ:2 523/1
திறன்படு சுரர் கால் யாப்பு செறி கழல் வித்து சீர்த்தி
நிறம் கிளர் வெள் வேல் ஐயன் நிறை குடியேற்றும் நாளில் – குசேலோ:3 545/2,3
சொல் அரும் சீர்த்தி பளிக்கு உரு அமைந்த தூயவ நின் அடி போற்றி – குசேலோ:3 675/4
தெரிய அரும் சிற்றிடை அ திருவுறையுள் அமைத்தல் பெரும் சீர்த்தி என்று – குசேலோ:3 711/3
மேல்

சீர்த்தியனை (1)

கொண்டாடும் சீர்த்தியனை கோவலர் பாடி தயிர் நெய் – குசேலோ:3 541/2
மேல்

சீர்த்தியான் (2)

இன்னும் பார்க்க எழுதிடும் சீர்த்தியான் – குசேலோ:2 226/4
தினமும் நல் நெறியில் நிற்கும் செயிர் இலா சீர்த்தியான் இ – குசேலோ:3 576/3
மேல்

சீர்த்தியை (1)

தளர்வு_இல் சீர்த்தியை சாற்றிட வல்லன் அல்லேனே – குசேலோ:1 29/4
மேல்

சீர (1)

அந்தம்_இல் சேடனாலும் அறைதர முடியா சீர
சுந்தர நகர் வளப்பம் சொல எனக்கு அடங்காவேனும் – குசேலோ:1 4/2,3
மேல்

சீரகம் (1)

செவ்விய இறும்பூது எய்தி சீரகம் துளிப்ப தன் மெய் – குசேலோ:2 216/2
மேல்

சீரும் (2)

சீரும் ஓர் அனந்தம் இன்னும் சேர்வதும் அனந்தமாமால் – குசேலோ:1 120/4
திப்பிய அணியும் பல பொருள் வாய்ப்பும் தெளிதரு நீர்மையும் சீரும்
தப்பு_இல் ஆழமும் கொண்டு அலர் மணம் உடைத்தாய் சாற்று-தோறு அகலமுற்று எவரும் – குசேலோ:2 230/2,3
மேல்

சீருறு (1)

சீருறு நல் திரு மைந்தன் சிவனன் எனும் பெயர் உடையான் – குசேலோ:3 584/2
மேல்

சீலம் (2)

சீலம் ஆர்தரு மறை செல்வ போற்றி மெய் – குசேலோ:2 335/2
சீலம் மிகு சிவனன் எனும் திரு முனிவன் சுகனி எனும் – குசேலோ:3 601/1
மேல்

சீவர் (1)

துப்பு இதழ் மடந்தை நல்லாய் தோன்றிய சீவர் எல்லாம் – குசேலோ:1 95/1
மேல்

சீவரம் (1)

வற்ற நெடும் சீவரம் போர்த்து ஒளிர்வதுவும் ஞானம் அன்று மற்றோர் போல – குசேலோ:2 322/3
மேல்

சீழ்கம்புலும் (1)

அனகம் ஆர் தருவும் புன் சீழ்கம்புலும் போலும் சேட – குசேலோ:2 273/3
மேல்

சீற்ற (2)

சிங்கம் யானை வெம் சீற்ற புலி உழை – குசேலோ:1 42/1
செயிருறு சீற்ற தெவ்வை சிதைத்து உளத்து உவகை செய்யார் – குசேலோ:2 208/4
மேல்

சீற்றம் (2)

செப்ப அரும் ஆசை பொய் கொடும் சீற்றம் செற்றுளாய் எனினும் விண் ஆளும் – குசேலோ:1 156/2
சீற்றம் மாற்றிடுவார் நட்போ சிறந்தது மிடி கோள்பட்டாய் – குசேலோ:2 279/4
மேல்

சீறி (2)

தளர்வறு பருவம் சார்ந்தால் தந்தை தாய் நடுங்க சீறி
அளமரு தம் மனம் செல் அவ் வழி ஒழுகிநிற்பார் – குசேலோ:1 119/3,4
திடம்படு பரிகள் தாவிடம் அதற்கும் திரிந்து ஒதுங்கிடும் இடம் சீறி
கடம் படு களிறு பாயிடம் அதற்கும் கண்டு ஒதுங்கிடும் இடம் கொடிஞ்சி – குசேலோ:2 233/2,3
மேல்

சீறு (1)

தேர் ஒலி புழைக்கை_மாக்கள் சீறு இசை பரி மா ஓதை – குசேலோ:1 28/1
மேல்

சீறுதல் (1)

சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய் – குசேலோ:1 74/2
மேல்

சீறூர் (1)

நன்றி மிக்குறும் அ சீறூர் நல பெரு நகர் ஆயிற்றே – குசேலோ:3 542/4
மேல்

சீனிவாச (2)

தே மேவு மலர் மாலை கோவிந்த முகில் சீனிவாச செம்மல் – குசேலோ:0 17/4
கந்த நல் கமல மாலை சூழ் தோளான் கலை உணர் சீனிவாச பேர் – குசேலோ:0 25/3
மேல்

சீனிவாசேந்த்ரன் (1)

ஆர் வளர் திருவூர் சீனிவாசேந்த்ரன் ஆர்வம் மிக்கு ஊர்தர புகல – குசேலோ:0 21/2
மேல்