சோ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


சோகாப்பர் (1)

பௌவம் ஏழையும் கடப்பர் பரிந்து சோகாப்பர் மற்றோர் – குசேலோ:1 139/4
மேல்

சோதி (1)

வார் ஆரும் இருபத்துநான்காம் நாள் பரிதிவாரம் ஒன்பான் திதி சோதி சிங்க இலக்கினத்தில் – குசேலோ:0 20/2
மேல்

சோபான (1)

வீங்கும் நாசி சோபான வண்மையை விரித்திடுகோ – குசேலோ:2 346/2
மேல்

சோபானத்தில் (1)

கரு உளைந்து சோபானத்தில் கான்ற பல் முத்தம் – குசேலோ:2 365/2
மேல்

சோம்பலை (1)

தரித்திரம் அளவா சோம்பலை எழுப்பும் சாற்ற அரும் உலோபத்தை மிகுக்கும் – குசேலோ:1 88/2
மேல்

சோமகாசுரன் (1)

முழு வலி சோமகாசுரன் உயிரை முனை கெழு மீனமாய் சவட்டி – குசேலோ:3 662/2
மேல்

சோமகாந்த (1)

திரு வில் கான்றிடு சோமகாந்த செழும் சிகரம் – குசேலோ:2 352/1
மேல்

சோர்வாள் (1)

எண் தப சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பி சோர்வாள் – குசேலோ:1 75/4
மேல்

சோர்விலா (1)

மன் உடைய சொல் காத்து சோர்விலா மாண்பினளே – குசேலோ:2 425/2
மேல்

சோரி (1)

கொழு நிணம் தின்று சோரி குடிக்கும் வேலொடு நிற்கின்றோன் – குசேலோ:2 297/1
மேல்

சோலை (7)

கார் பொலியும் சோலை புடை உடுத்து ஒளிர் வல்லூர் ஆளி கவிஞர் போற்றும் – குசேலோ:0 24/3
பல்லவ சோலை சூழ் வல்லூராளி பகரரும் தேவராச பேர் – குசேலோ:0 26/3
தீதறு சுவர்க்க நாட்டை தினமும் சென்று உரிஞ்சும் சோலை – குசேலோ:1 10/4
பொங்கு பல்லவ பூம் சோலை புது மது கனிகள் காய்கள் – குசேலோ:1 11/1
மின் அவிர் அ பூம் சோலை வினோதம் நிமித்தமதாக – குசேலோ:3 595/3
நனி மலர் சோலை அகம் புறம் உருவம் பல கொடு அன்னவர் நலம் உண்டு – குசேலோ:3 683/4
நீடு அமைத்த இளம் சோலை என தழைந்து மணம் கான்று நிலவும் மென் பூம் – குசேலோ:3 712/3
மேல்

சோலை-தோறும் (1)

பாகை நேர் மொழியார் ஆட பைம் தளிர் சோலை-தோறும்
தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 293/3,4
மேல்

சோலைகள் (1)

பெருக்கி என்றும் நல் வளம் தரு சோலைகள் பிறங்கும் – குசேலோ:2 355/4
மேல்

சோலையில் (1)

வரம் தரு கவுரி திருவடி வணங்கி மா மலர் சோலையில் நின்ற – குசேலோ:3 692/1
மேல்

சோலையின் (1)

மழை கிழித்த அ சோலையின் மறாது என்றும் வயங்கும் – குசேலோ:2 357/4
மேல்

சோற்றுக்கே (1)

சூடுபு வந்தான் இங்கு ஒருவேளை சோற்றுக்கே
தேடுவர் சான்றோர் இவன் புகழ் என்றார் சில மாதர் – குசேலோ:2 514/3,4
மேல்

சோறு (1)

துங்கமுடன் ஒருவேளை சோறு உண்டது உயர்ந்த வரை துளைத்து போகி – குசேலோ:2 517/3
மேல்

சோனகநாட்டு (1)

தூய பேடு ஒதுங்கி மாழ்கும் சோனகநாட்டு மன்னன் – குசேலோ:2 298/4
மேல்