சொ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொருக்கு 1
சொல் 31
சொல்கோ 1
சொல்ப 1
சொல்லலுற்றாள் 1
சொல்லன் 1
சொல்லா 1
சொல்லி 3
சொல்லினார் 1
சொல்லும் 2
சொல்லுமால் 1
சொல்வதும் 1
சொல்வாரால் 2
சொல்வான் 2
சொல்வானால் 2
சொல 3
சொலப்படும் 1
சொலப்படுவான் 1
சொலற்கு 2
சொலற்கே 1
சொலா 1
சொலும் 2
சொற்கு 2
சொற்படி 3
சொற்ற 1
சொற்றல் 1
சொற்றனன் 1
சொற்றனை 1
சொற்றான் 3
சொற்றிடலும் 1
சொற்றிடலுற்றனென் 1
சொற்றிடும் 1
சொற்றிடுவாம் 1
சொற்றும் 1
சொன்ன 2
சொன்னபடி 1

சொருக்கு (1)

நிறைதரு தானை சொருக்கு முன் தூங்க நீள விட்டவர் குழாம் கூடி – குசேலோ:2 239/2
மேல்

சொல் (31)

சிவமுறு தென் சொல் ஐந்திலக்கணத்தில் தெளிவுற சிறியனேற்கு அருளும் – குசேலோ:0 14/3
துறை கெழு செம் சொல் தீம் தமிழ் பாவால் சொற்றிடலுற்றனென் மன்னோ – குசேலோ:0 15/4
பொருவரு செம் சொல் சுவையும் பொருள் சுவையும் அணி நலமும் பொலிய ஆர்த்தி – குசேலோ:0 18/3
நிறை மலர் குழலார் உள்ளம் நெகிழ்தர இனிய தீம் சொல்
அறைதரும் அவரும் நீக்கி அம் கையின் ஏந்துவாரே – குசேலோ:1 21/3,4
சொல் எலாம் சொல்லி நாட்டி துணை கரம் விரித்து நீட்டி – குசேலோ:1 66/2
தொடுத்து வினாயினனால் அ சொல் பொருள் யாது அதுதான் எ சுவைத்து அன்னாய் நீ – குசேலோ:1 73/2
எண் தப சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பி சோர்வாள் – குசேலோ:1 75/4
சொல் பெரு நல் புகழ் கணவன் முகம் நோக்கி எண்ணியவை சொல்லலுற்றாள் – குசேலோ:1 81/4
வழங்குவர் அ சொல் மறி திரை கடல் சூழ் மண்ணிடத்து உண்மையே ஆமே – குசேலோ:1 85/4
சொல் அரி பரந்த உண்கண் துடி இடை பேதை மாதே – குசேலோ:1 98/4
பரித்திடும் அ சொல் தம்மை பன்மை முற்று ஆக வல்லோர் – குசேலோ:1 142/2
முறிதரும் ஏதிலர் சொல் கேட்டு உஞற்றல் முனி துயர் மனையாள் – குசேலோ:1 191/3
மான மால் கொண்டு அன்னார் சொல் வரம்பினை கடவார் ஆகி – குசேலோ:2 210/3
பெரியவர் சொலும் சொல் தேற்றும் பெரிய நீர் கடலும் ஆங்காங்கு – குசேலோ:2 212/3
என் செய்வாம் நன் சொல் கூறி இரப்பதே துணிவு என்று எண்ணி – குசேலோ:2 218/1
மறை பல கற்கும் கிடைகளும் நடை தேர் மாண்பு உடை ஆசிரியன் சொல்
குறைவற உணர்த்தும் பெருமையும் கண்டும் கேட்டும் உள் உவகை கூர்ந்தனனால் – குசேலோ:2 239/3,4
உன்னினால் கடல் உலகு சொல் கண்ணன் ஒண் நிறத்தை – குசேலோ:2 341/3
நல்லார் சொல் விரும்புவதும் நல்லாரை காண்பதுவும் – குசேலோ:2 419/1
மன் உடைய சொல் காத்து சோர்விலா மாண்பினளே – குசேலோ:2 425/2
மண்டு மறை சொல் என் நிமித்தம் மழையில் நனைந்தீர் வருத்தம் மிக – குசேலோ:2 468/3
சொல் பிறங்கிய நல் குல தோற்றத்தாள் – குசேலோ:2 492/1
தொக துன்றும் அடிமையாய் சொல் பணிகள் கடவானாய் – குசேலோ:2 497/4
சொல் படு புலவரானும் சொலற்கு அரும் சிறப்பு வாய்ந்து – குசேலோ:3 543/2
பண் நலம் கனிந்த தீம் சொல் பாவையர் கலன்கள் ஆர்ப்பும் – குசேலோ:3 558/3
சொல் பெறு மா மலர் பரப்பி துதைந்தனவால் அ நாளில் – குசேலோ:3 585/4
சொல் பெறு நின் பெறு தந்தை யாவன் மணி தூ முறுவல் – குசேலோ:3 603/3
புற அடி நோக்குபு மொழிந்த பொன்_அனையாள் சொல் கேளா – குசேலோ:3 606/1
சொல் பெறு விலை பட்டு அடுக்கிய பேழை தொகை இலாது இருப்பன கண்டான் – குசேலோ:3 625/4
சொல் ஆர்ந்து இலங்கும் வேண்டாமை-தன்னை வேண்ட துனைவின் வரும் – குசேலோ:3 652/4
சொல் அரும் சீர்த்தி பளிக்கு உரு அமைந்த தூயவ நின் அடி போற்றி – குசேலோ:3 675/4
நாரத முனிவன் சொல் கொடு கஞ்சன் செலுத்திட நண்ணிய கேசி – குசேலோ:3 686/1
மேல்

சொல்கோ (1)

சுற்றும் நாற்றிய பொன் மலர் பிணையலை சொல்கோ
கற்றை அம் கதிர் சாமரை தூக்கினை கரைகோ – குசேலோ:2 347/2,3
மேல்

சொல்ப (1)

ஒரு திடம்தான் கதிக்-கண் உய்க்கும் என சொல்ப
கருதிடம் தானவன் காமர் குலத்தான் – குசேலோ:3 537/1,2
மேல்

சொல்லலுற்றாள் (1)

சொல் பெரு நல் புகழ் கணவன் முகம் நோக்கி எண்ணியவை சொல்லலுற்றாள் – குசேலோ:1 81/4
மேல்

சொல்லன் (1)

ஏருறும் இனிய சொல்லன் என்னவே யாம் உள் கோடும் – குசேலோ:2 310/4
மேல்

சொல்லா (1)

இன்னணம் இவன் இருப்ப இவன் வரவு அனைத்தும் சொல்லா
முன்னரே உணர்ந்துகொண்ட முழுமுதல் கண்ணன் என்பான் – குசேலோ:2 415/1,2
மேல்

சொல்லி (3)

சொல் எலாம் சொல்லி நாட்டி துணை கரம் விரித்து நீட்டி – குசேலோ:1 66/2
பலப்பல சொல்லி என்னை பாணித்தல் கருமம் அன்று – குசேலோ:2 391/3
தொண்டு ஆள் துவன்றி என சொல்லி துதி முழக்கி – குசேலோ:3 541/5
மேல்

சொல்லினார் (1)

கரும்பு போன்ம் என கரையும் அம் சொல்லினார் கவரி – குசேலோ:2 372/3
மேல்

சொல்லும் (2)

துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும் – குசேலோ:1 54/2
சொல்லும் பொருளும் வெளிப்படையாய் தோன்ற விளங்குவன போல – குசேலோ:2 466/2
மேல்

சொல்லுமால் (1)

சுத்த விரத தவம் நல் துறை நின்றோன் சொல்லுமால் – குசேலோ:1 188/4
மேல்

சொல்வதும் (1)

தோமறும் அமைச்சு இடித்து சொல்வதும் கொள்ளார் அம்மா – குசேலோ:2 282/4
மேல்

சொல்வாரால் (2)

சுந்தர அறிவின் மாண்ட துவாரபாலகர் சொல்வாரால் – குசேலோ:2 309/4
இருமை சால் சிறப்பை உற்றான் என்று பற்பல சொல்வாரால் – குசேலோ:3 571/4
மேல்

சொல்வான் (2)

துன்றும் அற்பொடு கேட்டலும் சுகமுனி சொல்வான் – குசேலோ:2 536/4
ஆசறு நினது காட்சி ஐய என்று இனைய சொல்வான் – குசேலோ:3 718/4
மேல்

சொல்வானால் (2)

நலமுறு இ கதை கேள் என்று நல் தவ சுகன் சொல்வானால் – குசேலோ:1 1/4
அன்னவன் வதனம் நோக்கி அமைய இன்னன சொல்வானால் – குசேலோ:2 415/4
மேல்

சொல (3)

சுந்தர நகர் வளப்பம் சொல எனக்கு அடங்காவேனும் – குசேலோ:1 4/3
தன்னம் விண்டு விள்ளாத சீர் கதை சொல சமைந்தேன் – குசேலோ:2 367/4
ஆடு புகழ் பெரும் தவத்தோன் அப்பாலும் சொல புக்கான் – குசேலோ:2 503/4
மேல்

சொலப்படும் (1)

ஒத்து மா மறைகள் சொலப்படும் கண்ணனிடை அடைதர உளம் நினைந்தேன் – குசேலோ:2 268/4
மேல்

சொலப்படுவான் (1)

அற்றான் என்று சொலப்படுவான் ஆசை அற்றான் ஒருவனே – குசேலோ:3 654/1
மேல்

சொலற்கு (2)

ஈனமற நிற்கின்றதே எவரும் சொலற்கு அரியாய் – குசேலோ:2 430/4
சொல் படு புலவரானும் சொலற்கு அரும் சிறப்பு வாய்ந்து – குசேலோ:3 543/2
மேல்

சொலற்கே (1)

சென்று கொளும் நட்புடையர் என தேயம் சொலற்கே சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/2
மேல்

சொலா (1)

வலம்புரி கழுத்தை கண்டம் என்று அடுத்த மாதரும் சொலா வகை மறைத்த – குசேலோ:3 618/1
மேல்

சொலும் (2)

ஆசற துதிக்கும் கடவுளாம் என்னா அரிய நான்மறை சொலும் அதனால் – குசேலோ:1 157/2
பெரியவர் சொலும் சொல் தேற்றும் பெரிய நீர் கடலும் ஆங்காங்கு – குசேலோ:2 212/3
மேல்

சொற்கு (2)

இது தெரிந்தும் மனையாட்டி இயம்பிய சொற்கு உடம்பட்டு – குசேலோ:1 192/1
மங்கை திரு முகம் நோக்கி மற்று அவர் சொற்கு உடம்படு என – குசேலோ:3 609/1
மேல்

சொற்படி (3)

துன்றிய கதுப்பின் மாதர் சொற்படி உவளகம் போய் – குசேலோ:2 388/2
பழுது_இல் கற்புடையாள்-தன் சொற்படி வறும் செல்வம் வேண்டும் – குசேலோ:2 412/3
சந்தம் ஆர் தாதை சொற்படி வந்த வேதியன் தரு பெயர் பெற்று – குசேலோ:3 679/2
மேல்

சொற்ற (1)

என்று உணர்வார் போல சொற்ற இ சிறப்பினாலே – குசேலோ:3 566/2
மேல்

சொற்றல் (1)

தோன்ற யாப்பு அடங்க தொக சொற்றல் போல் – குசேலோ:2 446/3
மேல்

சொற்றனன் (1)

என்ன சொற்றனன் சிறிதும் விண்டேன் அலன் இனிமேல் – குசேலோ:2 367/2
மேல்

சொற்றனை (1)

நன்று சொற்றனை மற்றது நடத்துக என்று அடையார் – குசேலோ:2 536/2
மேல்

சொற்றான் (3)

போய் அழைத்திடு-மின் இன்னே என விரை பொருளில் சொற்றான் – குசேலோ:2 390/4
இலக்கணம் இன்மை நோக்கி இதற்கு மேல் சொற்றான் அல்லன் – குசேலோ:2 391/1
நா இயலும் துதி முழக்கி நல் முகமன் பல சொற்றான் – குசேலோ:2 504/4
மேல்

சொற்றிடலும் (1)

நண்ணி வா என்னா நங்கை சொற்றிடலும் நல் தவ குசேலன் ஈது உரைக்கும் – குசேலோ:1 93/4
மேல்

சொற்றிடலுற்றனென் (1)

துறை கெழு செம் சொல் தீம் தமிழ் பாவால் சொற்றிடலுற்றனென் மன்னோ – குசேலோ:0 15/4
மேல்

சொற்றிடும் (1)

சொற்றிடும் துயர் அழுந்தி முன் நிகழ்ச்சியும் தோன்ற – குசேலோ:1 138/2
மேல்

சொற்றிடுவாம் (1)

துடிதுடித்து நா எழுதலின் சிறிது சொற்றிடுவாம் – குசேலோ:2 340/4
மேல்

சொற்றும் (1)

தக்க வழக்கிடத்தின் உயர்திணை வினை அஃறிணை வினையாய் சமைய சொற்றும்
தொக்க படர்க்கை பெயர் முன்னிலை பெயர் ஆகிட உரைத்தும் சுழல்வது எல்லாம் – குசேலோ:2 325/2,3
மேல்

சொன்ன (2)

சொன்ன தீங்கு உரைகள் எல்லாம் சுடுகின்ற நம் உளத்தை – குசேலோ:2 393/3
சொன்ன காரியம் அனைத்தும் சொன்னபடி இயற்றுவளே – குசேலோ:2 426/1
மேல்

சொன்னபடி (1)

சொன்ன காரியம் அனைத்தும் சொன்னபடி இயற்றுவளே – குசேலோ:2 426/1
மேல்