ஓ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓகை 1
ஓகையின் 1
ஓங்க 2
ஓங்கல் 1
ஓங்கி 2
ஓங்கிட 1
ஓங்கிடும் 1
ஓங்கியவால் 1
ஓங்கு 6
ஓங்கும் 5
ஓச்சிடும் 1
ஓச்சும் 1
ஓசை 2
ஓட்ட 1
ஓட்டம் 1
ஓட்டம்பிடித்து 1
ஓட்டி 2
ஓட்டெடுத்து 1
ஓட 2
ஓடி 9
ஓடிய 1
ஓடிவந்து 1
ஓடு 2
ஓடும் 1
ஓடை 1
ஓடைக்-கண் 1
ஓத்து 1
ஓத 1
ஓதி 2
ஓதிமத்தை 1
ஓதிய 1
ஓது 4
ஓதும் 1
ஓதுமால் 1
ஓதுறு 1
ஓதை 2
ஓதையும் 1
ஓப்பி 1
ஓப்பும் 1
ஓம்படை 1
ஓம்பல் 1
ஓம்பலுற்று 1
ஓம்பார் 1
ஓம்பி 1
ஓம்பும் 2
ஓம்புற 1
ஓமை 1
ஓர் 68
ஓர்தி 1
ஓர்ந்த 4
ஓர்ந்தான் 1
ஓர்ந்து 2
ஓர்ந்தோர் 1
ஓர்பால் 1
ஓர்விதத்தில் 1
ஓரம் 1
ஓரும் 1
ஓலம் 2
ஓலையும் 1
ஓவரும் 1
ஓவாது 2
ஓவிய 2

ஓகை (1)

ஓகை அம் களிப்பு மீக்கொண்டு ஒளி வளர் அரங்கு-தோறும் – குசேலோ:2 293/2
மேல்

ஓகையின் (1)

நை ஓகையின் வந்து அ காட்டுள் நண்ண நாமும் கண்டனமே – குசேலோ:2 467/4
மேல்

ஓங்க (2)

செயல் எலாம் செயும் படப்பை செழும் கரும்பு ஓங்க பாய்ந்து – குசேலோ:2 301/3
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க
தென் ஆர் அ கதிர் கீழும் பாய்ந்தது என உத்தரியம் திகழாநிற்க – குசேலோ:3 706/3,4
மேல்

ஓங்கல் (1)

பற்றை ஆர்ந்து உயர்ந்த ஓங்கல் பரிசு அன்ன பைம்பொன் மாடத்து – குசேலோ:3 550/1
மேல்

ஓங்கி (2)

அரும்பும் வாக்கியமும் தொழில் ஆறினோர் அறையும் ஆசிகள் ஓங்கி
பரம்ப எண்ணுறூஉம் பெரியவர் எண்ணமும் பாலிக்க நெடுமாலே – குசேலோ:0 6/3,4
குத்தரம் குடிகொண்டாங்கு கொழும் பொன் மாளிகைகள் ஓங்கி
சுத்தர் அங்கு அளவிலார்கள் தொகுப்புற இன்பம் நல்கி – குசேலோ:1 2/1,2
மேல்

ஓங்கிட (1)

அளவிலா மகிழ் தலை சிறந்து ஓங்கிட அவிர்ந்து – குசேலோ:2 531/1
மேல்

ஓங்கிடும் (1)

ஓங்கிடும் பிராணன் முதல் வளிகளும் உற்று – குசேலோ:1 137/1
மேல்

ஓங்கியவால் (1)

மந்திகளும் அறியாத மரங்கள் பல ஓங்கியவால் – குசேலோ:1 38/4
மேல்

ஓங்கு (6)

ஓங்கு கடல் சுவற்ற என உலகு உரைத்தல் அது பொய்யே – குசேலோ:1 187/2
ஓங்கு பெரு ஞானியர் போல் பேசுவார் அவர் உண்மை வேடம் போல – குசேலோ:2 323/1
ஓங்கு சந்திரகாந்த மாளிகைகளை உரைக்கோ – குசேலோ:2 346/1
ஓங்கு கைதை மந்தாரம் மாலதி ஒளிர் கற்பு – குசேலோ:2 358/3
ஓங்கு மை வரவு பார்க்கும் ஒண் தழை மஞ்ஞை போலும் – குசேலோ:2 398/4
ஓங்கு வேறு உடை உடீஇ நியதி கடன் உவகை – குசேலோ:3 632/3
மேல்

ஓங்கும் (5)

சீர் ஆரும் திரிசிராமலையின் வளர்ந்து எக்காலும் சிறப்பின் ஓங்கும்
ஏர் ஆரும் கலை கடல் முற்று உண்டு ஆங்கு நின்று எழீஇ என் விவேக – குசேலோ:0 13/1,2
பெரு வளம் ஓங்கும் தொண்டை நல் நாட்டில் பிறங்கும் வல்லூரினில் வாழ்வோன் – குசேலோ:0 23/3
ஓங்கும் இன் சுவை கொள் வாயன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 478/4
சவி அணி கை விரல் தருப்பை பவித்திரம் பொன் ஆழியாய் ததைந்தது ஓங்கும்
புவி அணியும் கட்டழகு காமனும் காமுறு சிறப்பில் பொலிந்தது அம்ம – குசேலோ:2 524/2,3
நிறை பல அறமும் ஓங்கும் நெடிய சாலைகளும் பல்ல – குசேலோ:3 559/4
மேல்

ஓச்சிடும் (1)

பணிதரு மைந்தர் சென்னியில் புயத்தில் பதம் எடுத்து ஓச்சிடும் மாதர் – குசேலோ:2 241/2
மேல்

ஓச்சும் (1)

பாற்று இனம் சுழலும் வசி நுதி நெடு வேல் பார்த்திபர் முன் கடிப்பு ஓச்சும்
ஏற்று உரி முரச வேற்று இடி முழக்கம் எழுதலும் வெளில் தபுத்து எழுந்து – குசேலோ:2 243/1,2
மேல்

ஓசை (2)

உணங்கல் மீன் கவர் புள் ஓப்பும் ஆர்ப்பும் மிக்கு ஓசை போக்கி – குசேலோ:2 209/3
வழு_இல் பைம் குளவி ஓசை அன்றி மற்றொன்றும் தேரா – குசேலோ:2 412/1
மேல்

ஓட்ட (1)

ஆள் சுடர் மணி வைத்து இழைத்த ஆழிகளும் அந்தகாரம் குடி ஓட்ட – குசேலோ:3 619/4
மேல்

ஓட்டம் (1)

ஓட்டம் ஈது என படர்ந்தனர் ஒளிர் நுதி வடி வேல் – குசேலோ:2 339/2
மேல்

ஓட்டம்பிடித்து (1)

தீட்டரும் புகழோன் என் செய்வான் நடுங்கி தியங்கி ஓட்டம்பிடித்து உய்ந்தான் – குசேலோ:2 260/4
மேல்

ஓட்டி (2)

மல் எலாம் அகல ஓட்டி மானம் என்பதனை வீட்டி – குசேலோ:1 66/3
பரந்த பேர் உண்கண் கன்னியை கவர்ந்து பகைத்த மன்னவர்களை ஓட்டி
அரம் தடி நெடு வேல் உருக்குமன் குடுமி அரிந்து வண் துவரையை அடைந்து – குசேலோ:3 692/2,3
மேல்

ஓட்டெடுத்து (1)

சலசல என்று ஓட்டெடுத்து தடம் கடலோ என பெருகும் – குசேலோ:1 36/4
மேல்

ஓட (2)

அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட
கடி கெழு காயாம்பூ கதிர் மேனி கண்ணனோடு அமர்ந்து கற்றனனே – குசேலோ:1 51/3,4
மா இயல் தானை சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து – குசேலோ:3 689/3
மேல்

ஓடி (9)

வேறு மனை சிறான் அயின்ற பக்கணம் கண்டு ஓடி வந்து விழி நீர் வார – குசேலோ:1 74/1
கூம்பு உடை கலம் மீகானால் குரை கடல் கிழிய ஓடி
தேம்பல்_இல் துவாரகைக்கு செல் துறை இறுத்தலோடும் – குசேலோ:2 219/1,2
ஒடுங்கல்_இல் வருக்கை நையா ஒழுகுறு செழும் தேன் ஓடி
அடும் கருப்பு ஆலை வீழ்த்தி அடர் புலி அடி பசும் காய் – குசேலோ:2 289/2,3
கயல் எலாம் வெருவும் கண்ணார் களை அரி கழுநீர் ஓடி
செயல் எலாம் செயும் படப்பை செழும் கரும்பு ஓங்க பாய்ந்து – குசேலோ:2 301/2,3
பொன் தொடி பூம் கொம்பு_அன்னாள் பொருக்கென ஓடி வந்து – குசேலோ:2 481/3
ஐய நுண் இடை கலாபம் அடி சிலம்பு அலம்ப ஓடி
பொய்_இலான் கையை தேவி பொருக்கென பிடித்த தோற்றம் – குசேலோ:2 482/3,4
பொங்கி எழு பெரும் காம புலிங்க தீ கொழுந்து ஓடி
மங்குதல் இலாது அழற்ற ஆற்றானாய் மா தவத்தோன் – குசேலோ:3 592/1,2
போரினுக்கு ஆற்றான் போல் விரைந்து ஓடி பொங்கு சீர் முசுகுந்தன் உறங்கும் – குசேலோ:3 690/2
தூண்டு தன் மனமும் பிந்த துனைவினின் ஓடி அன்பு – குசேலோ:3 716/3
மேல்

ஓடிய (1)

ஓடிய இரண்டு இயக்கக்கு உறுத்திய அளவை இன்றே – குசேலோ:1 140/4
மேல்

ஓடிவந்து (1)

தெய்ய ஆர்த்து ஓடிவந்து ஓர் சிறு பிடி பிடித்தல் போன்றது – குசேலோ:2 482/2
மேல்

ஓடு (2)

ஓடு பொறி சேட்டை எலாம் ஒடுக்கிய மா தவன் அன்றே – குசேலோ:2 503/2
ஓடு அரி கண் திருமடந்தை மணி காலும் வெயில் வருத்தமுறாது ஒதுங்க – குசேலோ:3 712/2
மேல்

ஓடும் (1)

மேல் ஓடும் புனல் வறப்ப அவற்று உறை மென் பறவைகள் நற்பாலான – குசேலோ:1 184/2
மேல்

ஓடை (1)

கால் ஓடை வாவி குளம் முதலாய கணக்கு_இல் அவல் – குசேலோ:1 184/1
மேல்

ஓடைக்-கண் (1)

கஞ்சம் மட்டு ஒழுக பூத்த கழனி கால் ஓடைக்-கண் நின்று – குசேலோ:2 299/2
மேல்

ஓத்து (1)

விரிதரும் ஓத்து கற்பவர் ஒருபால் மெய்ப்பொருள் பொய்ப்பொருள் இரண்டும் – குசேலோ:1 47/3
மேல்

ஓத (1)

ஓத நீர் உலகு ஓதுறு சாலையும் அவண – குசேலோ:1 16/4
மேல்

ஓதி (2)

மஞ்சு இனம் என மட மாதர் ஓதி கண்டு – குசேலோ:1 13/1
ஓதி நிற்க ஒரு வில் விண் தோன்றிற்றே – குசேலோ:2 441/4
மேல்

ஓதிமத்தை (1)

நரைத்த ஓதிமத்தை உயர்த்து அருள் கமல நான்முகன் அனைய தூயவனே – குசேலோ:1 83/4
மேல்

ஓதிய (1)

ஓதிய இவ் அன்றி இவன் அரசரிடை பெரும் கருமம் ஒன்றும் இன்றால் – குசேலோ:2 328/3
மேல்

ஓது (4)

ஓது வில் பத்திரம் கொண்டு உறு தளிரால் சிவந்து – குசேலோ:1 10/2
ஓது இருவினைக்கு தக்க உணவு உண்டு புந்தி மாழ்கேல் – குசேலோ:1 102/2
ஓது அரும் செல்வம் மிக்கோன் ஒருவனோ சிறந்தோன் ஆவன் – குசேலோ:2 281/2
ஓது சாகை உலோலித்து ஒலித்திடல் – குசேலோ:2 453/2
மேல்

ஓதும் (1)

மறுவறு முத்தீ என்றும் வளர்ப்பவர் ஐந்து என்று ஓதும்
தெறு புலன் அவித்த மேலோர் செய்ய மால்-தனாது செம் கேழ் – குசேலோ:1 27/1,2
மேல்

ஓதுமால் (1)

மண்டிய களங்கு என மயங்கி ஓதுமால் – குசேலோ:1 17/4
மேல்

ஓதுறு (1)

ஓத நீர் உலகு ஓதுறு சாலையும் அவண – குசேலோ:1 16/4
மேல்

ஓதை (2)

தேர் ஒலி புழைக்கை_மாக்கள் சீறு இசை பரி மா ஓதை
வார் இயை கழல் கால் வீரர் மணி புயம் தட்டும் ஆர்ப்பு – குசேலோ:1 28/1,2
பொங்கும் ஓதை புவனம் பொதியுமால் – குசேலோ:1 42/4
மேல்

ஓதையும் (1)

ஒண் நல் அம் கொடிஞ்சி திண் தேர் ஓதையும் வயவர் ஆர்ப்பும் – குசேலோ:3 558/2
மேல்

ஓப்பி (1)

பார் எலாம் இருள் ஓப்பி பரக்குமே – குசேலோ:1 43/4
மேல்

ஓப்பும் (1)

உணங்கல் மீன் கவர் புள் ஓப்பும் ஆர்ப்பும் மிக்கு ஓசை போக்கி – குசேலோ:2 209/3
மேல்

ஓம்படை (1)

ஓம்படை பெருமான் உள்ளம் உற்றது இவ்வாறோ என்று – குசேலோ:3 741/3
மேல்

ஓம்பல் (1)

ஒருவா அன்பு ஒரு மதலை எண்ணியவாறு அளித்து ஓம்பல் ஒல்லாது ஆகும் – குசேலோ:1 79/2
மேல்

ஓம்பலுற்று (1)

ஓம்பலுற்று இறங்குவாரோடு இறங்கினான் உவகை எய்தி – குசேலோ:2 219/4
மேல்

ஓம்பார் (1)

மருவு பல் கிளையும் ஓம்பார் வளம் படைத்து என் பெற்றாரால் – குசேலோ:1 106/4
மேல்

ஓம்பி (1)

ஓர் உறு கமடம் மீனம் உருவம் கொண்டு உயிர்கள் ஓம்பி
ஏர் உறு பவள செவ் வாய் இயைந்து பொன் புணர்ந்து தண்ணென் – குசேலோ:2 205/2,3
மேல்

ஓம்பும் (2)

சந்ததம் உற்ற விருந்தினை ஓம்பும் தக்க வேங்கடகிருட்டின பேர் – குசேலோ:0 25/1
பயிருறு களை கட்டு ஓம்பும் பால் மொழி உழத்திமார் தம் – குசேலோ:2 295/2
மேல்

ஓம்புற (1)

ஒக்கலோடு ஒளிர் கற்பக நிழல் மருந்து உண்டு உயிரை ஓம்புற கடும் கொடுமை – குசேலோ:1 172/3
மேல்

ஓமை (1)

கந்தி களா விளா தென்னை கடுக்கை தேக்கு ஓமை முதல் – குசேலோ:1 35/3
மேல்

ஓர் (68)

வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல் செய்வாம் – குசேலோ:0 12/4
நிறை புகழ் பாகவதத்தில் ஓர் கதையாய் நிலவிய குசேலன் மா கதையை – குசேலோ:0 15/3
கனி தருமம் நல்லொழுக்கம் குணம் அனைத்தும் ஓர் உருக்கொள் காட்சி போல்வான் – குசேலோ:0 19/3
பாற்கடல் மிசை ஓர் கார் கடல் போல பை அரவணை மிசை துயில்வோன் – குசேலோ:1 57/2
அறல் இயை கதுப்பினாள் ஓர் அணங்கினை வதுவைசெய்தான் – குசேலோ:1 58/3
குணமும் ஓர் உருவம் கொண்டு ஓர் குடிப்பிறந்து அனைய நீராள் – குசேலோ:1 59/4
குணமும் ஓர் உருவம் கொண்டு ஓர் குடிப்பிறந்து அனைய நீராள் – குசேலோ:1 59/4
மலையிட்ட செல்வத்தார்கள் மகிழ ஓர் மகவும் தாரான் – குசேலோ:1 64/1
அலை இட்ட முள் தாள் செய்ய அம்புய துறைவோன் ஓர் ஏழ் – குசேலோ:1 64/2
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்து – குசேலோ:1 68/2
அந்தோ என் வயிற்று எழுந்த பசி அடங்கிற்றில்லை என அழுமால் ஓர் சேய் – குசேலோ:1 71/1
சிந்தாத கஞ்சி வாக்கிலை எனக்கு அன்னாய் என பொய் செப்பும் ஓர் சேய் – குசேலோ:1 71/2
முந்து ஆர்வத்து ஒரு சேய் மிசைய புகும் போதினில் ஓர் சேய் முடுகி ஈர்ப்ப – குசேலோ:1 71/3
நந்தா மற்று அ சேயும் எதிர் ஈர்ப்ப சிந்துதற்கு நயக்கும் ஓர் சேய் – குசேலோ:1 71/4
குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை – குசேலோ:1 77/4
எவ்வாறு இ துயர் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால் – குசேலோ:1 80/4
உரைக்க அரும் சிங்கம் சரபம் வெம் புலிகள் உலவை ஓர் இரண்டு உடை வேழம் – குசேலோ:1 83/1
திரை கடல் வினைக்கு ஓர் ஆகரம் ஆகும் தேகத்தை வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 83/3
தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம் – குசேலோ:1 89/1
உலகம் ஓர் மூன்றும் வெருவர கொடிய உஞற்றிய கஞ்சன் ஆதியர் கொன்று – குசேலோ:1 92/1
கோடி பொன் அளிப்பன் இன்றே கோடிர் ஓர் மாத்திரைக்குள் – குசேலோ:1 109/1
ஊடிய கிளைக்கு ஓர் வார்த்தை உரைத்து அடைகுவன் என்றாலும் – குசேலோ:1 109/2
ஊரும் ஓர் அனந்தம் வாய்த்த உறவும் ஓர் அனந்தம் பெற்ற – குசேலோ:1 120/2
ஊரும் ஓர் அனந்தம் வாய்த்த உறவும் ஓர் அனந்தம் பெற்ற – குசேலோ:1 120/2
பேரும் ஓர் அனந்தம் கன்ம பெருக்கமும் அனந்தம் கொண்ட – குசேலோ:1 120/3
சீரும் ஓர் அனந்தம் இன்னும் சேர்வதும் அனந்தமாமால் – குசேலோ:1 120/4
உடல் பவம் தனக்கு ஓர் ஆகரம் ஆகும் உடல் நனி வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 152/4
நிறையிட்ட அவல் ஆக்கி குசேல முனி கந்தையினில் நேடி ஓர் பால் – குசேலோ:1 169/2
மானம் ஆர் பெரும் தவத்தோன் மனம் மெலிந்து முகம் புலந்து ஓர்
தானம் மேவுற இருந்து உள் ததைய இவை எண்ணுவான் – குசேலோ:1 190/3,4
மற்றை வழியும் கடக்க வலி இன்று ஓர் விதத்தினால் – குசேலோ:1 193/1
உற்றார் வினை அரவுக்கு ஓர் உவணம் என்பரால் – குசேலோ:2 199/9
ஓர் உறு கமடம் மீனம் உருவம் கொண்டு உயிர்கள் ஓம்பி – குசேலோ:2 205/2
ஒவ்வ மெல் வளி தண்ணென்ன வருட ஓர் புன்னை நீழல் – குசேலோ:2 216/3
உள் புகும் அரசை முன் புகுந்திருந்த ஓர் அரசு எதிர்கொளும் காலை – குசேலோ:2 232/1
விண் புலம் புகழும் மற்றும் ஓர் அரசு விரைவின் உள் புகுவது காணூஉ – குசேலோ:2 232/2
நுண்மையில் புனைய புகுந்த ஓர் மைந்தன் நுவல் அரும் காமத்தால் மயங்கி – குசேலோ:2 248/2
பொற்றை நல் மாடத்து உம்பர் ஓர் மடந்தை புரி குழல் தரள வெண் பிறையும் – குசேலோ:2 249/1
துன்னினான் அங்கு ஓர் அரசனை சூழ்ந்த சுடர்ந்த கஞ்சுக படிவு_உடையார் – குசேலோ:2 259/3
நச்சும் விண் உரிஞ்சும் போகு உயர் குவட்டு ஓர் நாகம் ஏந்தி தடுத்தருளும் – குசேலோ:2 269/2
தினகர ஒளியும் ஓர் கத்தியோதத்தின் ஒளியும் போலும் – குசேலோ:2 273/2
பொருள் நனி உளன் என்று யாரும் புகலும் ஓர் வார்த்தை வேண்டும் – குசேலோ:2 274/1
படும் கட கரி போன்று ஆங்கு ஓர் பரிக்கு அருகா நிற்கின்றோன் – குசேலோ:2 289/1
ஐய மா மதி நின்று அன்னாற்கு ஐந்து ஏழு ஒன்பானில் ஓர் கண் – குசேலோ:2 303/2
முடங்கு கை கால் ஓர் பேதை மூரி வான் அணவும் கோட்டின் – குசேலோ:2 305/1
நன்மை தரும் முன்னோர் எண்கு ஆறு ஒழுக பள்ளை என நயந்து ஓர் ஆயன் – குசேலோ:2 324/3
வருந்தும் ஓர் மிடியன் சேமவைப்பு எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/1
விள்ள அரும் ஓர் பெரும் காட்டுள் விறகு ஒடித்து திரிந்தனமே – குசேலோ:2 436/4
ஏற்ற காலை எழுந்து ஓர் கொடும் குளிர் – குசேலோ:2 452/3
இருள் போம் அளவும் இவண் உறைவோம் என்று ஓர் இடம் உற்று இருந்தனமே – குசேலோ:2 460/3
தெய்ய ஆர்த்து ஓடிவந்து ஓர் சிறு பிடி பிடித்தல் போன்றது – குசேலோ:2 482/2
ஓர் அடிச்சியாய் பணியில் ஊண் இட – குசேலோ:2 489/2
நிலம் மிசை உண்டாக என நினைந்து அவல் ஓர் பிடி எடுத்து – குசேலோ:2 496/3
மேவிய ஓர் பிடி அவலின் மிக மகிழ்ச்சி உடையானாய் – குசேலோ:2 504/3
அன்று இரவு ஓர் மென் படுக்கை அணிந்து உதவ அதில் மேவி – குசேலோ:2 505/1
களியாநின்று ஓர் காசும் ஈயான் கழிக என்றான் – குசேலோ:2 513/3
தார் உருவ பூண் மார்பா தயங்கு இமயகிரிப்-பால் ஓர்
வார் உலவை பூம் கானம் வதிந்து தவம் புரிந்தனனே – குசேலோ:3 584/3,4
அ முகில்-நின்று வழுக்கி ஓர் மின்னல் அவிர் பிறை மேல் கிடந்தாங்கு – குசேலோ:3 616/1
துங்க மா மறை தலைமையோன் இருந்தனன் துனைந்து ஓர்
மங்கை பொன் செய்த வள்ளத்து தைலம் முன் வைத்தாள் – குசேலோ:3 630/2,3
செம் கை பற்றி ஓர் நங்கை பொன் சிவிறியை வீச – குசேலோ:3 630/4
பூம் தடம் கண் ஓர் மட கொடி சென்னியில் பூசி – குசேலோ:3 631/2
உருகிய மனத்தின் மூ அடி மண் கொண்டு ஓர் அடிக்கு இடம் பெறாமையினால் – குசேலோ:3 666/3
மடன் இகு முனிவன் மகத்தினை காத்து ஓர் மாது கல் உருவினை அகற்றி – குசேலோ:3 668/4
மருவிய களிப்பின் அ நகர் நீங்கி மாண்பின் ஓர் கிராதனை நட்டு – குசேலோ:3 669/4
ஓர் வரை குகை உள் புகுந்து அவனால் தெவ்வு உடல் பொடிப்பித்து முன்னவனோடு – குசேலோ:3 690/3
அவற்கும் அஞ்சினன் போல் முன்னோடும் ஆங்கு ஓர் அணி வரை இவர்ந்து அழல் சூழ – குசேலோ:3 691/1
கரம் மலர் அளிப்ப கோளரி கவர பின்னர் ஓர் கரடிகை கவர்ந்து – குசேலோ:3 693/4
கொன் பரவும் உலகம் எலாம் உள் அடி ஓர் புறத்து உற நீள் குளிர் பூம் தாளில் – குசேலோ:3 710/2
விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/3
மேல்

ஓர்தி (1)

மணம் மலி புகழ் குசேலன் மனை சிறப்பினையும் ஓர்தி
அணவுறும் அஃது எற்று என்று வினவற்க அரசர் ஏறே – குசேலோ:3 566/3,4
மேல்

ஓர்ந்த (4)

எவ்வ நோயுறும் பிறக்கும் இறக்கும் இ துயரம் ஓர்ந்த
செவ்விய மனத்தர் மாயன் திருவடி புணையால் சென்ம – குசேலோ:1 139/2,3
உயத்தகு நெறி மால் அடி உனல் என்றே ஓர்ந்த மா தவ பெரும் கடலே – குசேலோ:1 150/4
உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இ குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பி – குசேலோ:2 270/3
பழைய நான்மறையும் ஓர்ந்த பங்கயத்தவனும் காணா – குசேலோ:3 722/1
மேல்

ஓர்ந்தான் (1)

நன்று இயலும் காரியம் என்று உளத்து ஓர்ந்தான் நல் தவனும் – குசேலோ:3 608/4
மேல்

ஓர்ந்து (2)

கலை முழுது ஓர்ந்து கரிசு எலாம் அறுத்த காந்தனே பரு மணி அரவ – குசேலோ:1 147/1
மன்னிய நெருக்கில் புகுந்திடில் நமக்கு வருவன வருக என்று ஓர்ந்து
துன்னினான் அங்கு ஓர் அரசனை சூழ்ந்த சுடர்ந்த கஞ்சுக படிவு_உடையார் – குசேலோ:2 259/2,3
மேல்

ஓர்ந்தோர் (1)

முழங்கும் ஈரொன்பான் புராணம் நன்கு ஓர்ந்தோர் மூரலால் உயிர் நிற்கும் என்னா – குசேலோ:1 85/3
மேல்

ஓர்பால் (1)

ஆசறு தானம் ஈயும் அரசர் வாழ் மறுகும் ஓர்பால் – குசேலோ:1 26/4
மேல்

ஓர்விதத்தில் (1)

அவ்வண்ண வாய் முத்தம் கொண்டும் நயந்து ஓர்விதத்தில் ஆற்றல் செய்வாள் – குசேலோ:1 72/4
மேல்

ஓரம் (1)

அல் இரிக்கும் முத்து ஓரம் வைத்து அலங்கு சாந்தாற்றி – குசேலோ:2 373/1
மேல்

ஓரும் (1)

ஓரும் அதில் என்பு அதில் மூளை உகிர் மூளையில் சுக்கிலம் அதனில் – குசேலோ:1 132/3
மேல்

ஓலம் (2)

இலகு நான்மறைகள் ஓலம் ஓலம் என்று எண்ணி நாள்கள் – குசேலோ:3 720/1
இலகு நான்மறைகள் ஓலம் ஓலம் என்று எண்ணி நாள்கள் – குசேலோ:3 720/1
மேல்

ஓலையும் (1)

குலவவுற்று இருந்தால் என செவி அணிந்த குரு மணி ஓலையும் பொலிய – குசேலோ:3 617/4
மேல்

ஓவரும் (1)

உன்ன அரும் கடவுள் கண்ணனது அருள் போல் ஓவரும் தானை தன் சூழ – குசேலோ:2 261/2
மேல்

ஓவாது (2)

ஓவாது மெய்யினிடை புளகம் எழுகின்றது கண் உருகாநின்ற – குசேலோ:2 329/2
பங்கமறு பல் துதிகள் முழக்கியும் இவ்வாறு வழிபடல் ஓவாது
கங்குல் பகல் நிற்போர்கள் நனி மூழ்கி இன்பு அடைய கமல கண்கள் – குசேலோ:3 708/2,3
மேல்

ஓவிய (2)

ஓவிய தொழில் வல்லாருக்கு ஒண் பொருள் வெறுப்ப வீசி – குசேலோ:2 397/1
ஓவிய புரிசை மதுரையை முனிவன் உந்து காலயவனன் வளைப்ப – குசேலோ:3 689/4
மேல்