கை – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 35
கைக்கொடு 1
கைக்கொள் 1
கைக்கொள்வேன் 1
கைகட்கு 1
கைசெய் 1
கைத்தலத்தும் 1
கைத்தலம் 2
கைத்து 1
கைதவனாய் 1
கைதை 2
கைப்பட 1
கைப்பற்றில் 1
கைப்பொருளை 1
கையளித்து 1
கையனாய் 1
கையாது 1
கையார் 1
கையாரொடும் 1
கையால் 3
கையின் 1
கையும் 3
கையுறை 4
கையுறைகளோடும் 1
கையுறையொடு 1
கையை 2
கைவந்த 1
கைவரை 1
கைவலான் 1

கை (35)

இலகு செங்கோல் கை கொண்ட எழில் பரீட்சித்து வேந்தே – குசேலோ:1 1/3
உள்ளம் மிக்கு உவந்து உடங்கு கை கோத்தனர் சென்று – குசேலோ:1 9/3
வந்து தன் மனை கை நீட்ட வாங்கி மற்று அவற்றை குற்றி – குசேலோ:1 68/1
ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து – குசேலோ:1 70/1
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/2
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/2
நெருப்போடு புகை உயிர்க்கும் நிரியாண கரட மத நெடும் கை யானை – குசேலோ:1 76/3
விது முக பதுமை செம் கை மெல்லென வருட சேந்து – குசேலோ:1 113/2
கை பொருள் பெற்ற ஞான்றே கடவுள் ஆலயத்திற்கு ஈந்தும் – குசேலோ:1 114/1
சென்னி மேல் இரு கை குவித்து நன்கு ஒழுகி செயிருறு சமயம் உற்று அறிந்து – குசேலோ:1 176/3
இணங்கு கை தோணி ஏறி எறி வலை வீசும் ஆர்ப்பும் – குசேலோ:2 209/1
வெம்மை தீர்பாக்கு சிறுவர் கை தோணி விட்டு உலாய் ஆடுதல் கண்டான் – குசேலோ:2 244/4
வெருக்கொள சென்றும் கரங்கள் மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும் வளைந்தும் – குசேலோ:2 262/2
வச்சிர தட கை வாசவன் ஏவ மஞ்சு இனம் பொழிந்த கல்மழையை – குசேலோ:2 269/1
வன்மை செய் புழை கை மாவும் மசகமும் போலும் வாரி – குசேலோ:2 272/3
முடங்கு கை கால் ஓர் பேதை மூரி வான் அணவும் கோட்டின் – குசேலோ:2 305/1
காத்து மேல் நிலை விழித்து நிற்பவர் கை வாள் ஒளியும் – குசேலோ:2 350/2
மெல் இயல் கவின் ஒருத்தி கை பற்றுபு வீச – குசேலோ:2 373/2
உண்டு கொண்டிடு என்று ஒருத்தி பூம் செண்டு கை உதவ – குசேலோ:2 375/4
தழை ஒளி செழும் பாதுகை ஒருத்தி கை தாங்க – குசேலோ:2 376/2
கை நனைந்து இரு கால் நனைந்து அம்மவோ – குசேலோ:2 449/3
மீது கை அமைத்து அவ் வனம் விண் மழை – குசேலோ:2 453/3
பரும் கை மால் வரை பகை உழக்குபு – குசேலோ:2 483/3
பொரும் கை வேலினான் புகறல் மேயினான் – குசேலோ:2 483/4
தேன் அமரும் தார் மார்பன் செம் கை பிடித்து தடுத்தாள் – குசேலோ:2 498/4
தேவியால் தடைபட்டு செறிதர கை கொளும் அவலை – குசேலோ:2 504/1
செழும் கை தரிப்பது மண் வளை என்றார் சில மாதர் – குசேலோ:2 516/4
சவி அணி கை விரல் தருப்பை பவித்திரம் பொன் ஆழியாய் ததைந்தது ஓங்கும் – குசேலோ:2 524/2
பரி நிரை செண்டு போகும் பைம்பொன் வார் மறுகும் நீள் கை
கரி நிரை கடம் பெய்து ஏகும் காமரு மறுகும் செம்பொன் – குசேலோ:3 560/1,2
கொங்கு அலர் மென் குழல் மடவாள் கோல் தொடி கை பற்றினான் – குசேலோ:3 592/4
மணி நகை வாய் பசும்_கொடியை மா தவன் கை கொடுத்தனனே – குசேலோ:3 600/4
செம் கை பற்றி ஓர் நங்கை பொன் சிவிறியை வீச – குசேலோ:3 630/4
நிலவும் மெய் பணி மாதரார் எடுத்து கை நீட்ட – குசேலோ:3 634/1
ஏண் உடை பரசிராம ஐம்படை கை இறையவ நின் அடி போற்றி – குசேலோ:3 667/4
நந்தகோன் தட கை பற்றுபு குறும் தாள் பெயர்த்து மென்மெல நடந்து உலவி – குசேலோ:3 679/1
மேல்

கைக்கொடு (1)

வெல தகு வாகையொடும் அவன் மகளை மணியினை கைக்கொடு மீண்டு – குசேலோ:3 694/3
மேல்

கைக்கொள் (1)

அழிவு_இல் அம் மணி கைக்கொள் சததனுவா ஆருயிர் இற தொலைத்து அகற்றி – குசேலோ:3 695/4
மேல்

கைக்கொள்வேன் (1)

பின்னர் கைக்கொள்வேன் ஆகில் பேரறிவு உடையன் அன்றே – குசேலோ:3 728/2
மேல்

கைகட்கு (1)

மென் தளிர் மேனி பூ மேல் விளங்கு இழை தாயர் கைகட்கு
ஒன்றும் அ பாத வெப்பம் உறும் என அஞ்சுகின்றேன் – குசேலோ:3 724/3,4
மேல்

கைசெய் (1)

தேம் தட மலராற்கு அணி நகர் இ மாதிரி கைசெய் என தெரிவிப்ப – குசேலோ:2 255/2
மேல்

கைத்தலத்தும் (1)

பொங்கு கதிர் திகிரியும் சங்கமும் இரு கைத்தலத்தும் நனி பொலியாநிற்க – குசேலோ:3 709/4
மேல்

கைத்தலம் (2)

சேந்த கைத்தலம் கொண்டு ஒள் அறல் இறைத்து செறி களி இன்பு உவந்து ஆடும் – குசேலோ:2 229/3
தேம்பல்_இல் மைந்தன் மகன் சிறை புரிந்த திறலினன் கைத்தலம் சிதைத்து – குசேலோ:3 700/2
மேல்

கைத்து (1)

கைத்து முன் செயல் எலாம் நிட்காமியம் ஆக்கி என்றும் – குசேலோ:1 125/3
மேல்

கைதவனாய் (1)

உன்ன அரிய கைதவனாய் ஒரு மானுடவன்-தனை போல – குசேலோ:2 470/3
மேல்

கைதை (2)

கரும் கொடி அடம்பு சூழ்ந்த கைதை அம் கானல் வேலி – குசேலோ:2 214/4
ஓங்கு கைதை மந்தாரம் மாலதி ஒளிர் கற்பு – குசேலோ:2 358/3
மேல்

கைப்பட (1)

கைப்பட பற்றும்-கொல்லோ அவரை அஃது அசத்து கண்டாய் – குசேலோ:3 736/3
மேல்

கைப்பற்றில் (1)

கதமுறு காலர் வந்து கைப்பற்றில் கணக்கு_இல் துன்பம் – குசேலோ:1 118/3
மேல்

கைப்பொருளை (1)

பக்குவம்_இல் மடவோரை மயக்கி அவர் கைப்பொருளை பறித்தற்கு அன்றே – குசேலோ:2 325/4
மேல்

கையளித்து (1)

கழி மகிழ்சிறந்து மணியை அ மாமன் கையளித்து அறன் மகன் முதலோர் – குசேலோ:3 695/2
மேல்

கையனாய் (1)

கூம்பலின் பெயரா கையனாய் களி கூர்ந்து இருந்தான் – குசேலோ:3 741/4
மேல்

கையாது (1)

மோதுற வழியும் கும்பம் மூத்திர பாத்திரம் கையாது
பல் கிருமி குப்பை அடர்ந்த தீ நாற்ற கூடு இ – குசேலோ:1 116/2,3
மேல்

கையார் (1)

வண்டு அலர்ந்த கையார் உரு சாயலை வௌவும் – குசேலோ:1 12/4
மேல்

கையாரொடும் (1)

பந்து அடுத்த கையாரொடும் பயில் மணி சிகரத்து – குசேலோ:2 338/3
மேல்

கையால் (3)

பற்று கோரி கையால் மொண்டு வாக்கி பற்றாமை கண்டு – குசேலோ:1 69/3
கோகனக பூம் கையால் குளிர் செய் பொன் கவரி வீசி – குசேலோ:2 409/4
குலவு தன் கையால் குய் கமழ் கருனை நல் வறையல் – குசேலோ:3 634/3
மேல்

கையின் (1)

அறைதரும் அவரும் நீக்கி அம் கையின் ஏந்துவாரே – குசேலோ:1 21/4
மேல்

கையும் (3)

இரு கையும் கடகம் வேண்டும் இலங்கு குண்டலங்கள் வேண்டும் – குசேலோ:2 274/2
கரையறு தவத்தோன் வாயும் கையும் ஒள் அறலின் பூசி – குசேலோ:2 408/4
மன்பதைகள் முறையிடாது அஞ்சல் என எடுத்து அபயம் வழங்கும் கையும்
கொன் பரவும் உலகம் எலாம் உள் அடி ஓர் புறத்து உற நீள் குளிர் பூம் தாளில் – குசேலோ:3 710/1,2
மேல்

கையுறை (4)

எந்தவாறு கையுறை இலாது ஐயன் முன் யான் படர்குவன் மாதே – குசேலோ:1 166/4
முழுமுதற்கும் ஏதாவது கையுறை கொண்டு முன் உறல் வேண்டும் – குசேலோ:1 167/4
கவிகை தாங்குநரும் வேண்டும் கையுறை சிறப்ப வேண்டும் – குசேலோ:2 275/3
கந்தையில் பொதிந்த நம்தம் கையுறை கண்டார் ஆகில் – குசேலோ:2 309/1
மேல்

கையுறைகளோடும் (1)

அருமை சால் களிப்பு பொங்க அமைந்த கையுறைகளோடும்
திரு மலி மங்கலங்கள் சிறப்புற ஏந்தி காரும் – குசேலோ:3 568/2,3
மேல்

கையுறையொடு (1)

கையுறையொடு நிற்கின்றோன் கவின் முழு சலராசிக்-கண் – குசேலோ:2 303/1
மேல்

கையை (2)

நெய் அடை கவளம் கொள்ளும் நெடும் கட களிற்றின் கையை
தெய்ய ஆர்த்து ஓடிவந்து ஓர் சிறு பிடி பிடித்தல் போன்றது – குசேலோ:2 482/1,2
பொய்_இலான் கையை தேவி பொருக்கென பிடித்த தோற்றம் – குசேலோ:2 482/4
மேல்

கைவந்த (1)

கைவந்த பெற்று செலீஇ காண்குவர் கண்ணன் முன்பு – குசேலோ:1 162/3
மேல்

கைவரை (1)

இமையளவினில் கைவரை முறையிட சென்று இனிது அருள் சுரந்தவ போற்றி – குசேலோ:3 704/3
மேல்

கைவலான் (1)

பாங்குற புரியும் இன்ப நல் கலவி பகுப்பு எலாம் கைவலான் கொண்டு – குசேலோ:2 252/3
மேல்