மே – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேக 2
மேகங்கள் 1
மேகம் 2
மேகலை 1
மேகலையார் 1
மேகலையும் 1
மேகவாகனன் 1
மேடு 1
மேடை 1
மேடையின் 1
மேதக 3
மேதகத்தால் 1
மேதகு 2
மேதகையீர் 1
மேதினி 2
மேதினியிடத்து 1
மேதையோர் 1
மேய்த்த 1
மேய்த்திடும் 1
மேய்ந்த 1
மேய 8
மேயின 1
மேயினான் 1
மேருவை 1
மேல் 51
மேலவனை 1
மேலாக 1
மேலாம் 1
மேலாய் 2
மேலாய 1
மேலானாய் 1
மேலிட்டு 1
மேலிடலும் 1
மேலும் 3
மேலோய் 4
மேலோர் 2
மேலோன் 8
மேவ 2
மேவர 1
மேவரு 1
மேவல் 1
மேவலும் 1
மேவாது 1
மேவார் 1
மேவி 5
மேவிடாரால் 1
மேவிய 6
மேவியதால் 1
மேவினன் 1
மேவு 9
மேவுபு 1
மேவும் 11
மேவும்-கொல்லோ 1
மேவுமே-கொல் 1
மேவுற 3
மேற்கொண்டு 1
மேன்மேல் 1
மேன்மேலும் 1
மேன்மை 3
மேன்மையோய் 1
மேனி 10
மேனியன் 1
மேனியின் 1
மேனியோய் 1

மேக (2)

பா மேக வண்ணன் பதம் – குசேலோ:2 198/7
விரவு செம் மேக கற்றை விளங்கிடு செம்பொன் ஆடை – குசேலோ:3 556/3
மேல்

மேகங்கள் (1)

உடன் மேகங்கள் ஆர்த்தால் என உயர் வான் முகடு அதிர – குசேலோ:2 530/2
மேல்

மேகம் (2)

விண்ணின் மேல் பயில் மேகம் இ மண் விரவியது என்று – குசேலோ:2 356/2
கம்மை மேகம் அ காட்டை வளைந்தவே – குசேலோ:2 442/4
மேல்

மேகலை (1)

தருக்கு என்றும் அவிந்த இடை தயங்கு மேகலை அரற்ற – குசேலோ:3 593/3
மேல்

மேகலையார் (1)

அரவ மேகலையார் அமைத்திட்ட அ படுக்கை – குசேலோ:2 371/3
மேல்

மேகலையும் (1)

உருவ எண் கோவை காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும்
பொருவறும் ஈரெட்டு இரட்டிய கோவை புரி கலாபமும் விரி சிகையும் – குசேலோ:3 620/2,3
மேல்

மேகவாகனன் (1)

விழை கள் வார் கூந்தல் சுபத்திரை-தன்னை மேகவாகனன் மகற்கு ஈந்து – குசேலோ:3 696/4
மேல்

மேடு (1)

ஒருவர் கரம் மற்றொருவர் பிடித்து உறும் மேடு அவல் என்று உணராமல் – குசேலோ:2 460/1
மேல்

மேடை (1)

இந்திர நீல மேடை எழும் கதிர் கற்றை மீ போய் – குசேலோ:3 551/1
மேல்

மேடையின் (1)

வஞ்சி நுண் இடையினார் மேல் மாட மேடையின் இருந்து – குசேலோ:3 552/1
மேல்

மேதக (3)

மேதக கொண்ட நீரான் மெய் மறையவர் குலத்தான் – குசேலோ:2 383/3
பரவிய கிரண செம் துகிர் குவையும் பாய மேதக பெரும் குவையும் – குசேலோ:3 624/3
மேதக முன் இருந்த மிடியதே இன்னும் வேண்டும் – குசேலோ:3 730/2
மேல்

மேதகத்தால் (1)

நிறையும் மேதகத்தால் பல தூண் அடி நிலை வைத்து – குசேலோ:2 344/1
மேல்

மேதகு (2)

மேதகு மார்பத்து இலங்கு மாலைகளும் விரை கெழு கலவையும் இளமை – குசேலோ:2 234/2
மேதகு கருமம் என்று அ மடமையோர் விளம்பலோடும் – குசேலோ:2 307/2
மேல்

மேதகையீர் (1)

மேதகையீர் மூப்பு அகன்று விரும்பு இளமை பெற புரிந்த – குசேலோ:3 611/3
மேல்

மேதினி (2)

மேதினி முளைத்த ஆற்றால் விண்ணவர் தெறுபாக்கு உற்று அங்கு – குசேலோ:1 10/1
மேதினி பகை மேல் அம்பு தூற்றிட – குசேலோ:2 441/1
மேல்

மேதினியிடத்து (1)

வென்றி அம் கழல் கால் வேந்தே மேதினியிடத்து யார்க்கேனும் – குசேலோ:3 740/3
மேல்

மேதையோர் (1)

வீயினும் தாம் மறப்பர்களோ மேதையோர் மறப்பரேல் – குசேலோ:2 418/3
மேல்

மேய்த்த (1)

கற்றா மேய்த்த சிற்றாயன் காமர் சீர்த்தி வாழியவே – குசேலோ:2 203/4
மேல்

மேய்த்திடும் (1)

கருதுறு பிருந்தாவனம் அடைந்து உகளும் கற்று இனம் மேய்த்திடும் நாளில் – குசேலோ:3 681/2
மேல்

மேய்ந்த (1)

செய் கருங்குவளை மேய்ந்த திண் மருப்பு எருமை பாய – குசேலோ:1 8/3
மேல்

மேய (8)

துன்னிய இருளை மேய துறக்கம் என்று அமரர் நாளும் – குசேலோ:1 3/3
மேய பூம் பொய்கை வெண்தாமரையை மென் சேவல் அன்னம் – குசேலோ:2 298/2
கருகு இருள் மோலி மேய கடா களிறு என நிற்கின்றோன் – குசேலோ:2 302/1
மேய கொடும் கள்வரால் மற்று எவைகளாலும் இடர் விளைந்த போதில் – குசேலோ:2 314/2
மேய மேல் நிலை மாடங்கள் வெள் ஒளி விரித்து – குசேலோ:2 353/1
மேய கானும் பனிப்புற வெண்மையது – குசேலோ:2 447/2
மேய தன் முன்னர் கந்தை போல் துவாரம் மிக்க சிற்றிலை குடில் திரிந்து – குசேலோ:3 614/2
மேய பல் கடனும் விதியுளி முடித்து விலக்க அரும் கொடும் தொழில் கவந்தன் – குசேலோ:3 672/3
மேல்

மேயின (1)

மேயின அரசர் வில்லிடும் மகுடம் மிடைதலின் ஒன்றொடொன்று உரிஞ – குசேலோ:2 251/2
மேல்

மேயினான் (1)

பொரும் கை வேலினான் புகறல் மேயினான் – குசேலோ:2 483/4
மேல்

மேருவை (1)

பரு மணி சுடிகை பஃறலை அரவம் படர் ஒளி மேருவை பொதிந்தாங்கு – குசேலோ:1 44/1
மேல்

மேல் (51)

வை கழுக்கடையே போல் மேல் வாளை பாய் வாவி மல்கும் – குசேலோ:1 8/4
வெண் மணி கொழிக்கும் கடல் நெடு நகர் மேல் வெகுண்டு முற்றியது என ஒளிரும் – குசேலோ:1 15/1
செழும் கதிர் மாடம் மேல் சென்று உலாம் மயில் – குசேலோ:1 18/3
ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து – குசேலோ:1 70/1
அப்படி முற்றில் கீழ் மேல் ஆம் பகுப்பு இரண்டு உண்டாமோ – குசேலோ:1 95/4
பிழைபட நிரயத்து ஆழ்ந்து பெரும் துயருறலும் மண் மேல்
குழை மிடி ஆதி துன்பு கூர்தலும் தீயூழ் அன்றே – குசேலோ:1 124/3,4
சென்னி மேல் இரு கை குவித்து நன்கு ஒழுகி செயிருறு சமயம் உற்று அறிந்து – குசேலோ:1 176/3
மேல் ஓடும் புனல் வறப்ப அவற்று உறை மென் பறவைகள் நற்பாலான – குசேலோ:1 184/2
மின் உமிழ் கார் முகில் பயிலும் மேல் கடலின் கரை இறுத்தான் – குசேலோ:1 196/4
இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க – குசேலோ:2 231/2
கண் புலம் புகாதாம் நெருக்கிடை ஒதுங்கி கரங்கள் மேல் தூக்கி உள் புகுந்தான் – குசேலோ:2 232/4
சீதள பளிக்கு மாடம் மேல் மடவார் செறிதரு புலவியில் வெறுத்த – குசேலோ:2 240/1
மாதர் மேல் மைந்தர் மைந்தர் மேல் மாதர் மாறி வீழ்தர அடிக்கடி செய் – குசேலோ:2 240/3
மாதர் மேல் மைந்தர் மைந்தர் மேல் மாதர் மாறி வீழ்தர அடிக்கடி செய் – குசேலோ:2 240/3
விம்மு வான் செல்வ மாடமாளிகையின் மேல் தவழ்ந்திடுவன கண்டான் – குசேலோ:2 246/4
வெண்மையில் திகழ்ந்த மேல் நிலை மாட வியல் உபரிகையிடை இருந்து – குசேலோ:2 248/1
வெருக்கொள சென்றும் கரங்கள் மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும் வளைந்தும் – குசேலோ:2 262/2
எண் அகம் தப கொணர்ந்த கல் அடுக்கி மேல் எழுப்பி – குசேலோ:2 342/2
உறையும் மேல் பல மணி கடை தூணங்கள் உறுத்தி – குசேலோ:2 344/2
அன்ன போதி மேல் வெண்பொன் உத்தரம் இயைத்து அடுப்ப – குசேலோ:2 345/1
நன்னர் ஆக்கிய விடங்கமும் உறுத்தி மேல் நயப்ப – குசேலோ:2 345/2
பன்னு பொன் தகடு அடுக்கி வேய்ந்து அதற்கு மேல் பரிதி – குசேலோ:2 345/3
தங்கும் மேல் நிலை மாடம் மேல் வெள்ளிடை தணப்ப – குசேலோ:2 348/1
தங்கும் மேல் நிலை மாடம் மேல் வெள்ளிடை தணப்ப – குசேலோ:2 348/1
காத்து மேல் நிலை விழித்து நிற்பவர் கை வாள் ஒளியும் – குசேலோ:2 350/2
மேய மேல் நிலை மாடங்கள் வெள் ஒளி விரித்து – குசேலோ:2 353/1
நேய முத்தொடு பொங்கி மேல் எழுந்து என நிலவும் – குசேலோ:2 353/4
விண்ணின் மேல் பயில் மேகம் இ மண் விரவியது என்று – குசேலோ:2 356/2
கூர்ந்த முத்த வெண் மணல் அடி பரப்பி மேல் குலவ – குசேலோ:2 361/3
வரைவு_இல் பல் மணி கம்பலம் மேல் உற வயக்கி – குசேலோ:2 369/4
வற்றி என்பு எழுந்த யாக்கை மா தவன் நின் மேல் வைத்த – குசேலோ:2 384/1
இலக்கணம் இன்மை நோக்கி இதற்கு மேல் சொற்றான் அல்லன் – குசேலோ:2 391/1
மேதினி பகை மேல் அம்பு தூற்றிட – குசேலோ:2 441/1
பாற்றி இருளை பகல் செய்யும் பரிதி மேல் பால் மறைந்தனனே – குசேலோ:2 457/4
பொன் ஆர் வடவரை மேல் கதிர் புத்தேள் என பொலிய – குசேலோ:2 528/1
மின் ஆர் கதிர் உமிழும் ஒரு வியன் மா மணி தேர் மேல்
முன் ஆர் மறையோனை பல முகமன் புகன்று ஏற்றி – குசேலோ:2 528/2,3
கடல் மேல் எழுந்து ஆர்த்தால் என கடல் நீர் உற பருகி – குசேலோ:2 530/1
மடல் மேல் எழு தார் வானவர் வண் துந்துபி ஐந்தும் – குசேலோ:2 530/3
விடல் மேல் உளது ஆகா வகை மேலும் பெரிது ஆர்த்த – குசேலோ:2 530/4
வஞ்சி நுண் இடையினார் மேல் மாட மேடையின் இருந்து – குசேலோ:3 552/1
தாழ்ந்தனர் தேர் மேல் வந்த சாந்தனை அந்தகாரம் – குசேலோ:3 569/2
பயனுறு இ பனவன் மேல் அ பார்வை மிக்கு ஆயிற்று அந்த – குசேலோ:3 577/3
பொற்புறு மா தவன் உடம்பை புற்று மூடியது அதன் மேல்
கற்பு முதல் கொடி படர்ந்து காமரு பல் அரும்பு ஈன்று – குசேலோ:3 585/2,3
அ முகில்-நின்று வழுக்கி ஓர் மின்னல் அவிர் பிறை மேல் கிடந்தாங்கு – குசேலோ:3 616/1
பொலம் கெழு குவட்டில் பல் நிற அருவி பொலிந்து என கொங்கை மேல் ததும்பும் – குசேலோ:3 618/3
அங்கு ஒர் ஆதனம் இட்டனள் ஒருத்தி வந்து அதன் மேல்
துங்க மா மறை தலைமையோன் இருந்தனன் துனைந்து ஓர் – குசேலோ:3 630/1,2
வவ்வுதற்கு உரல் மேல் நின்று கல் மோதி வாய் பெய்து பூசைக்கும் கொடுத்து – குசேலோ:3 680/3
என துதி முழக்கி கண் கணீர் அரும்ப இரு கரம் சென்னி மேல் குவிய – குசேலோ:3 705/1
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/3
பூண்டவர்க்கு உரிய தாள் மேல் பொள்ளென வீழ்ந்து எழுந்து – குசேலோ:3 716/4
மென் தளிர் மேனி பூ மேல் விளங்கு இழை தாயர் கைகட்கு – குசேலோ:3 724/3
மேல்

மேலவனை (1)

கமலம்_மேலவனை தோற்றிய உந்தி கமலன் வெம் தொடர் என பகரும் – குசேலோ:1 154/1
மேல்

மேலாக (1)

ஒவ்வ பருவம் அடுப்ப அறல் கீழா உணவு மேலாக – குசேலோ:1 129/4
மேல்

மேலாம் (1)

நீங்குக என்று ஒழிப்பார் இ நிலை மேலாம் பிரமத்தின் நிலையே என்பார் – குசேலோ:2 323/3
மேல்

மேலாய் (2)

பயம் கெழு நகரம் சூழ்ந்து பாசம் நீத்து அறிவின் மேலாய்
உயர்ந்தவர்க்கு இனிது செய்த உதவி போல் உயர்ந்து மிக்க – குசேலோ:3 547/2,3
பொன்றல்_இல் தவத்தின் மேலாய் புண்ணியம் பழுத்த மேலோர் – குசேலோ:3 721/2
மேல்

மேலாய (1)

மெய் தசை இலாது ஒடுங்கி மேலாய தவத்து ஒடுங்கான் – குசேலோ:1 178/1
மேல்

மேலானாய் (1)

என் பெயர் யாது எனில் சுகனி இரும் தவத்து மேலானாய்
மன் பெறு மா முனி சிவனன் மனைக்கிழத்தி ஆதலினால் – குசேலோ:3 605/1,2
மேல்

மேலிட்டு (1)

ஒருவ மேலிட்டு நிற்கும் உறக்கமும் இறக்க செய்யும் – குசேலோ:1 110/2
மேல்

மேலிடலும் (1)

கல்வி அறிவு மேலிடலும் கரிசு_இல் பல்லோர் இயற்றிய நூல் – குசேலோ:2 466/1
மேல்

மேலும் (3)

மேலும் மேலும் விடா மழை ஆகலான் – குசேலோ:2 450/1
மேலும் மேலும் விடா மழை ஆகலான் – குசேலோ:2 450/1
விடல் மேல் உளது ஆகா வகை மேலும் பெரிது ஆர்த்த – குசேலோ:2 530/4
மேல்

மேலோய் (4)

ஒத்துற இயைந்தோர் புண்ணியர் அன்றோ உம்பரும் தொழத்தகு மேலோய் – குசேலோ:1 87/4
பந்தனை அகன்ற மேலோய் பற்பல நாட்கு பின்பு – குசேலோ:2 471/1
வைப்பு என நமது பூசை வாஞ்சித்து வயங்கும் மேலோய் – குசேலோ:3 736/4
அகழ் வினை தவத்தின் மேலோய் அழுத்திடு இவ் உரையை உள்ளம் – குசேலோ:3 739/4
மேல்

மேலோர் (2)

தெறு புலன் அவித்த மேலோர் செய்ய மால்-தனாது செம் கேழ் – குசேலோ:1 27/2
பொன்றல்_இல் தவத்தின் மேலாய் புண்ணியம் பழுத்த மேலோர்
துன்றி நிற்கின்றார் எல்லாம் நிற்க உள் அக தூய்து அன்மை – குசேலோ:3 721/2,3
மேல்

மேலோன் (8)

தாங்குறும் உளத்தன் பொறிகள் தீச்செயலில் சார்வுறாது அடக்குறும் மேலோன் – குசேலோ:1 48/4
ஒளவியம் அவித்த மேலோன் சற்று இருந்து அயர்வு உயிர்த்தான் – குசேலோ:2 216/4
தீதறு குணத்தான் மாண்ட செழும் தவ குசேல மேலோன்
ஏதம் மிக்குற தன் உள்ளத்து இவையிவை எண்ணுவானால் – குசேலோ:2 307/3,4
அளவிடற்கு அரிய மேலோன் ஆடு அமை தோளின் நல்லார் – குசேலோ:2 400/2
இருந்தனன் குசேல மேலோன் இவன் உளம் அறிந்த கண்ணன் – குசேலோ:2 473/4
ஊட்டிய புகழின் மேலோன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 479/4
பெரியவர் புகழப்பட்ட பெரும் தவ குசேல மேலோன்
உரிய அன்பினையும் கூட்டி ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 480/3,4
தரு நிதி அனைய கண்ணன்-தன் அருள் பெற்ற மேலோன்
பெரு நிதி நகரம் நோக்கில் பிறங்கிய செல்வம் வாய்ந்த – குசேலோ:3 546/2,3
மேல்

மேவ (2)

வகுத்த பல் உலகும் போற்ற மாற்றலர் கூற்றூர் மேவ
செகுத்து அரசாளும் கண்ண செம்மல் எங்கே நீ எங்கே – குசேலோ:2 271/1,2
காமரு நல் நெறி நடப்ப அறம் தழைப்ப எவ்வுயிரும் களிப்பில் மேவ
மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர் செவ் வாய்க்கு உண்டாய – குசேலோ:3 707/1,2
மேல்

மேவர (1)

விரை கெழு வென்றி பெரும் புகழ் யாப்பின் மேவர இயைத்து இடம்-தோறும் – குசேலோ:2 253/3
மேல்

மேவரு (1)

மேவரு மதனன் என்ன வெண் குடை நிழல் நிற்கின்றோன் – குசேலோ:2 292/1
மேல்

மேவல் (1)

விண்ணிடை ஏகுதல் மீள பாதலத்தில் புகல் மீட்டு புவியின் மேவல்
அண்ணிய பல் பரகாய பிரவேசம் செயல் உறையும் அவ்விடத்தே – குசேலோ:2 320/1,2
மேல்

மேவலும் (1)

விழைதரு போகம் துய்த்து மேவலும் நல்லூழாமால் – குசேலோ:1 124/2
மேல்

மேவாது (1)

விலக்குவர் நாம் கொண்டிருப்பின் மேவாது எ பகையும் என – குசேலோ:1 181/2
மேல்

மேவார் (1)

விம்மலுறும் நசையினரும் இவனிடத்து கேட்பதற்கு மேவார் என்றால் – குசேலோ:2 520/3
மேல்

மேவி (5)

விண்ட சிற்றிடமும் இன்று ஒரு கற்பம் மேவி நாம் காத்திருந்திடினும் – குசேலோ:2 258/3
விரவு பாற்கடல் படுக்கையின் சிறப்புற மேவி – குசேலோ:2 371/4
அன்று இரவு ஓர் மென் படுக்கை அணிந்து உதவ அதில் மேவி
மன் திகழ் அவ் உவளகத்து வளம் பலவும் கண்டதனால் – குசேலோ:2 505/1,2
மணி நிலா முற்றம் மேவி மாதரார் வயங்கு கண்கட்கு – குசேலோ:3 554/1
மெய்ப்பொருள் உணர்ந்த தூயோர் மேவி எங்கு உறைவரேனும் – குசேலோ:3 736/1
மேல்

மேவிடாரால் (1)

விறப்புறும் அஞ்ஞானியர் எவ் அறத்தினும் எவ் வகை சிறப்பும் மேவிடாரால் – குசேலோ:2 326/4
மேல்

மேவிய (6)

விஞ்சு வில் தொழில் மேவிய வேட்டுவர்-தம் – குசேலோ:1 40/2
மேவிய இன் சுவை புனலால் வீங்கினேம் இதுபொழுது – குசேலோ:1 185/2
விறந்த பல் காத வழி நடந்ததனால் மேவிய வருத்தமும் இளைப்பும் – குசேலோ:2 256/2
எடுத்து உண் காலையும் இடத்து மேவிய
தொடுத்த பூம் குழல் தோகை மா மயில் – குசேலோ:2 485/2,3
மேவிய ஓர் பிடி அவலின் மிக மகிழ்ச்சி உடையானாய் – குசேலோ:2 504/3
வில்படு விசேட கலன் நிறை பேழை மேவிய இருபத்தேழ் மகாரும் – குசேலோ:3 625/2
மேல்

மேவியதால் (1)

விண் கொதிப்ப அவ் வேனில் வெம் பருவம் மேவியதால் – குசேலோ:1 179/4
மேல்

மேவினன் (1)

மீட்டும் உள் துணியா அணி கொள் ஆங்கு ஒருசார் மென்மெல மேவினன் ஆங்கு – குசேலோ:2 260/1
மேல்

மேவு (9)

மா மேவு மணி மார்பன் மலர் அடிகள் மருவு திரு மனத்தினோன் பொன் – குசேலோ:0 17/1
கோ மேவு பொழில் திருவூர் அதிபதி சீர் கருணீகர் குல விசேடன் – குசேலோ:0 17/2
பா மேவு பெரும் சீர்த்தி மிகு நாராயண வள்ளல் பயந்த மைந்தர் – குசேலோ:0 17/3
தே மேவு மலர் மாலை கோவிந்த முகில் சீனிவாச செம்மல் – குசேலோ:0 17/4
விஞ்சு இருள் பூம் பொழில் மேவு கோகிலம் – குசேலோ:1 13/3
தே மேவு பைம் துளவம் சேர கமழ்வதுவும் – குசேலோ:2 198/2
மேவு நோய் கோள்பட்டீரும் மிளிர் பிதிர் கருமம்செய்ய – குசேலோ:2 280/2
விரை தரு தூமம் காட்டி மேவு நெய் விளக்கம் கோட்டி – குசேலோ:2 408/1
விதிக்கும் சித்திர அனங்களும் மேவு பாளிதமும் – குசேலோ:3 636/3
மேல்

மேவுபு (1)

விரும்பு பல் மாதர் குழாத்தொடும் பாடி மேவுபு தந்தையை கவரும் – குசேலோ:3 685/2
மேல்

மேவும் (11)

வெள்ள நீர் துளைந்து ஆடுறூஉம் எழில் வளம் மேவும் – குசேலோ:1 9/4
மேவும் மிகையால் பூத சாரத்தின் விண்ணோர் உதித்திடுவர் – குசேலோ:1 127/2
பூ மேவும் நான்முகத்தோன் போற்றி துதிப்பதுவும் – குசேலோ:2 198/1
மா மேவும் மா மறைகள் வாழ்த்த பொலிவதுவும் – குசேலோ:2 198/3
தா மேவும் வஞ்ச சகடம் உதைத்ததுவும் – குசேலோ:2 198/4
தீ மேவும் ஆரணியம் சென்று திரிந்ததுவும் – குசேலோ:2 198/5
தூ மேவும் அன்பர் உளம் தோன்ற பயில்வதுவும் – குசேலோ:2 198/6
மிக தரும் யாக்கை உடையவன் துவாரம் மேவும் அ பாலர் முன் குறுகி – குசேலோ:2 264/3
மேவும் அன்பன் மனக்கு விரோதமாய் – குசேலோ:2 495/1
வெந்து புழுங்காநின்றது உளம் மேவும் இவைக்கு காரணம் இ – குசேலோ:3 661/2
பாம்பணை பள்ளி மேவும் பண்ணவன் மறைதலோடும் – குசேலோ:3 741/1
மேல்

மேவும்-கொல்லோ (1)

வித்தகன் சேவை வாய்த்தல் எண்மையில் மேவும்-கொல்லோ – குசேலோ:2 304/4
மேல்

மேவுமே-கொல் (1)

விரைத்த பூம் குழலாய் துய்க்கும் உணவு இன்றி மேவுமே-கொல் – குசேலோ:1 100/4
மேல்

மேவுற (3)

தானம் மேவுற இருந்து உள் ததைய இவை எண்ணுவான் – குசேலோ:1 190/4
மெத்திய மனத்தர் ஆகி மேவுற பொலியும் கண்ண – குசேலோ:2 304/3
மேவுற பணிந்த புகழ் வசுதேவன் மென் மலர் தடம் கரம் அடைந்து – குசேலோ:3 676/4
மேல்

மேற்கொண்டு (1)

வலை வள தொழில் மேற்கொண்டு வாழ்வன பரத சாதி – குசேலோ:2 207/4
மேல்

மேன்மேல் (1)

விரவி நின்று தோத்திரம் எடுத்தியம்பினர் மேன்மேல் – குசேலோ:2 532/4
மேல்

மேன்மேலும் (1)

தே மலர் வாளிகள் பலவும் சிந்தினான் மேன்மேலும் – குசேலோ:3 591/4
மேல்

மேன்மை (3)

வேய்ங்குழல் இசையாம் வலிய மந்திரத்தின் மேன்மை சால் யாதவர் குலத்து – குசேலோ:0 3/1
வியக்கும் அரும் கற்புடையாரும் விரும்பும் மேன்மை மெல்_இயலே – குசேலோ:1 131/4
அன்னோ அன்னோ வேண்டாமை அன்ன மேன்மை பெரும் செல்வம் – குசேலோ:3 653/1
மேல்

மேன்மையோய் (1)

தடுத்தது இல்லையே சாற்றும் மேன்மையோய் – குசேலோ:2 485/4
மேல்

மேனி (10)

கடி கெழு காயாம்பூ கதிர் மேனி கண்ணனோடு அமர்ந்து கற்றனனே – குசேலோ:1 51/4
பாம மா கடலும் காமுறும் மேனி பண்ணவன் மலர் அடி துணையை – குசேலோ:1 82/3
மை கடல் மேனி வள்ளல் வேண்டிய ஈவான் என வாய்மலர்ந்தனையால் – குசேலோ:1 149/3
நீர் ஆர் பைம் கொண்டல் நிகர் திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/1
காயாம்பூ ஒத்த கதிர் திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/4
வற்றா கடல் நேர்வரு திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/7
மாம் தளிர் மேனி இலக்குமி மணாளன் மலர் தலை புவி வகுக்குறுங்கால் – குசேலோ:2 255/1
உங்களை நோக்கும்-தோறும் உவரியும் வெஃகும் மேனி
செம் கண் மால்-தனை கண்டாங்கு செறிந்திடும் உவகை அந்த – குசேலோ:2 266/1,2
மேனி பைத்து விரைவினில் மீண்டவே – குசேலோ:2 438/4
மென் தளிர் மேனி பூ மேல் விளங்கு இழை தாயர் கைகட்கு – குசேலோ:3 724/3
மேல்

மேனியன் (1)

அன்ன மேனியன் காண்டல் ஒப்பா மகிழ்ந்து – குசேலோ:2 224/2
மேல்

மேனியின் (1)

அளவு_இல் மேனியின் வனப்பினால் வென்ற மற்று அவர்-தம் – குசேலோ:1 29/3
மேல்

மேனியோய் (1)

பொத்திய மேனியோய் எண்ணிரட்டி ஆயிரம் பொன் அன்னார் – குசேலோ:2 304/2
மேல்