யா – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 1
யாக்கை 2
யாக்கையனாய் 1
யாக 1
யாங்கள் 2
யாங்ஙனம் 1
யாத்த 3
யாதவர் 2
யாதானும் 1
யாதினை 1
யாது 5
யாப்பின் 1
யாப்பு 2
யாம் 11
யாமும் 2
யாமே 1
யாமோ 1
யார் 8
யார்க்கு 1
யார்க்கும் 2
யார்க்கேனும் 1
யாரும் 6
யாருமே 1
யாரே 1
யாரை 1
யாவர் 1
யாவர்-கண்ணும் 1
யாவர்க்கும் 4
யாவரும் 3
யாவரே 2
யாவரையும் 1
யாவன் 1
யாவும் 7
யாவையும் 3
யாழ் 2
யாளி 2
யான் 11
யானம்-நின்று 1
யானும் 1
யானே 1
யானை 8

யா (1)

நந்தாத வேங்கை ஞெமை நமை வருக்கை முருக்கு அகில் யா
சிந்தாத வழை புன்னை சிந்துவாரம் செருந்தி – குசேலோ:1 34/3,4
மேல்

யாக்கை (2)

மிக தரும் யாக்கை உடையவன் துவாரம் மேவும் அ பாலர் முன் குறுகி – குசேலோ:2 264/3
வற்றி என்பு எழுந்த யாக்கை மா தவன் நின் மேல் வைத்த – குசேலோ:2 384/1
மேல்

யாக்கையனாய் (1)

செழும் தசை வற்றி இளைத்த யாக்கையனாய் திகழ்ந்தனன் சீர்த்தி அந்தணனே – குசேலோ:1 52/4
மேல்

யாக (1)

அரு மறை முழக்கும் வினை தபும் யாக அழல்-கண் நல் மந்திர முழக்கும் – குசேலோ:1 45/1
மேல்

யாங்கள் (2)

என்று பல் துதி முழக்கி யாங்கள் பல் வாயில் நீந்தி – குசேலோ:2 388/1
அமரர் உடல் பிணி தவிர்க்கும் அசுவினி தேவர்கள் யாங்கள்
சமரம் மிகு வேள் ஆற்றல் தவிர்த்து எமை ஆள் என்று இரப்ப – குசேலோ:3 604/1,2
மேல்

யாங்ஙனம் (1)

மிக்க பல் முயற்சிபுரிகிலார்-தமக்கு அவ் விண்ணவன் யாங்ஙனம் அருளும் – குசேலோ:1 149/4
மேல்

யாத்த (3)

மணிகள் கால் யாத்த மாளிகை-தோறும் மருவிய புலவி தீர்பாக்கு – குசேலோ:2 241/1
பொன்னினால் செய்து மணிகள் கால் யாத்த வண் புரிசை – குசேலோ:2 341/1
இடனுற பூசி கொள்வான்-கொல் இரு காலும் யாத்த
தொடர் செய் பொன் நிகளம் சீக்க துணிந்தவன் இரும்பால் செய்ய – குசேலோ:3 729/2,3
மேல்

யாதவர் (2)

வேய்ங்குழல் இசையாம் வலிய மந்திரத்தின் மேன்மை சால் யாதவர் குலத்து – குசேலோ:0 3/1
யாதவர் குலத்தில் தோன்றிய அரசர் யாவர்க்கும் அதிபனாம் இணை_இல் – குசேலோ:1 90/1
மேல்

யாதானும் (1)

அண்டும் அன்பின் யாதானும் வைத்துக்கொண்டு – குசேலோ:2 488/3
மேல்

யாதினை (1)

இன்று வந்தமை யாதினை கருதி மற்று இவர் என உளத்து எண்ணி – குசேலோ:1 165/2
மேல்

யாது (5)

தொடுத்து வினாயினனால் அ சொல் பொருள் யாது அதுதான் எ சுவைத்து அன்னாய் நீ – குசேலோ:1 73/2
என் நினைத்து வந்தானோ அவன் இவனும் யாது நினைத்திருக்கின்றானோ – குசேலோ:2 521/1
யாது அதனை அறிவாம் என்று இல்லி வழி நோக்குதலும் – குசேலோ:3 589/2
வில் புருவ பைங்கிளி நின் பெயர் யாது விளம்புவையால் – குசேலோ:3 603/4
என் பெயர் யாது எனில் சுகனி இரும் தவத்து மேலானாய் – குசேலோ:3 605/1
மேல்

யாப்பின் (1)

விரை கெழு வென்றி பெரும் புகழ் யாப்பின் மேவர இயைத்து இடம்-தோறும் – குசேலோ:2 253/3
மேல்

யாப்பு (2)

தோன்ற யாப்பு அடங்க தொக சொற்றல் போல் – குசேலோ:2 446/3
திறன்படு சுரர் கால் யாப்பு செறி கழல் வித்து சீர்த்தி – குசேலோ:3 545/2
மேல்

யாம் (11)

விரும்பும் யாம் வணங்கும் பத கடவுளே விளங்கும் ஆவினை மிக்க – குசேலோ:0 6/1
பின்னர் எங்ஙனம் யாம் புகுவது என்று உளத்து பெரிதும் ஆராய்ந்து நின்றிடும் போது – குசேலோ:2 261/1
இறப்ப நேற்று உண்ட கூற்றை இன்று யாம் மறப்பம் ஆகில் – குசேலோ:2 276/4
பொன் செய்த ஊர்தியாம் இப்போது யாம் பெறுவது எங்கே – குசேலோ:2 308/2
ஏருறும் இனிய சொல்லன் என்னவே யாம் உள் கோடும் – குசேலோ:2 310/4
அந்தணரே தெய்வம் எனக்கு என்று கண்ணன் உரைக்கவும் யாம் அயிர்த்தல் என்னே – குசேலோ:2 312/4
காதிய தீவினை உடையேம் ஆதலினால் யாம் இன்று காண பெற்றேம் – குசேலோ:2 328/4
சற்று நீ இவ்விடம் இருக்கின் சார்ந்து யாம்
கொற்றம் ஆர் கண்ணற்கு உன் வரவு கூறுபு – குசேலோ:2 336/1,2
யாம் என்றும் சாரல் தகாது இவண் – குசேலோ:2 442/2
அ மறையோன் ஒரு பொருளும் கேளானாய் சென்றதை யாம் அறிந்தோம் மன்ற – குசேலோ:2 520/1
சிலதியர் யாம் செய்திலோம் என்று ஒழிந்தார் செய்த மகள் – குசேலோ:3 597/3
மேல்

யாமும் (2)

மலர் பொதுள் இ தீர்த்தத்து உன் மகிழ்நனும் யாமும் படியில் – குசேலோ:3 607/1
இகழ்வினுக்கு அஞ்சி அன்னாள் இரிதர இரிவம் யாமும்
அகழ் வினை தவத்தின் மேலோய் அழுத்திடு இவ் உரையை உள்ளம் – குசேலோ:3 739/3,4
மேல்

யாமே (1)

நொடி மிசை எழுந்து துள்ளி நோற்றுளோம் யாமே என்று – குசேலோ:3 717/4
மேல்

யாமோ (1)

பன்ன அரும் களிப்பை யாமோ பகர்ந்திட வல்லம் ஐய – குசேலோ:2 389/2
மேல்

யார் (8)

உற்றிடினும் கரும் கடல் யார் உதவி கொடு கடந்திடுவேன் – குசேலோ:1 193/2
பொற்ற அது கடப்பினும் அ புரத்தில் எனை யார் மதிப்பார் – குசேலோ:1 193/3
யார் என நினைத்தீர் இந்த இரும் தவ தலைவன்-தன்னை – குசேலோ:2 310/1
என்னுடைய பெறல் அரும் பேறு யார் பெற்றார் யார் பெறுவார் – குசேலோ:2 416/4
என்னுடைய பெறல் அரும் பேறு யார் பெற்றார் யார் பெறுவார் – குசேலோ:2 416/4
ஒழுங்குறும் முன் தவம் இல்லவர் யார் நட்பு உற்றால் என் – குசேலோ:2 516/1
இன் தவத்தன் யார் இளமை எங்ஙன் அடைந்தான் மடவாள் – குசேலோ:3 583/3
அருகுற வந்து யார் இது செய்தார் அறிவல் என பார்த்தான் – குசேலோ:3 590/3
மேல்

யார்க்கு (1)

இனிய எற்கு அன்றி யார்க்கு கொண்டுவந்திருக்கின்றாயே – குசேலோ:2 472/4
மேல்

யார்க்கும் (2)

இற்ற என்று உரைத்திட எளியன அல யார்க்கும் – குசேலோ:2 347/4
அலைத்து அடல் தொலைத்து சுரர் முதல் யார்க்கும் அச்சுறுத்திட்டதும் அன்றி – குசேலோ:3 665/2
மேல்

யார்க்கேனும் (1)

வென்றி அம் கழல் கால் வேந்தே மேதினியிடத்து யார்க்கேனும்
மன்ற உண்டாகும் தெய்வ வலிக்கு எதிர் வலியும் உண்டோ – குசேலோ:3 740/3,4
மேல்

யாரும் (6)

தழை விரி கற்ப நாடு சார்தலும் புவியில் யாரும்
விழைதரு போகம் துய்த்து மேவலும் நல்லூழாமால் – குசேலோ:1 124/1,2
ஈனம் ஆர் இன்மை புகுத்திடுமால் என்று யாரும் நன்கு உணர்தர நவில்வார் – குசேலோ:1 148/4
முகத்திடை நீண்ட உரோமம் மிக்கவன் எண் முடிதற்கும் இடம் அற யாரும்
நகத்தகு பற்பல் துளை உடை கந்தை நயந்துகொண்டவன் மதிப்பு இலாமை – குசேலோ:2 264/1,2
பொருள் நனி உளன் என்று யாரும் புகலும் ஓர் வார்த்தை வேண்டும் – குசேலோ:2 274/1
உற்ற கால் வழுக்கி வீழ்தல் ஒழிந்தனர் நடப்பார் யாரும் – குசேலோ:3 562/4
பொதி தரும் அன்பில் கேட்போர் பூசிப்போர் படிப்போர் யாரும்
கதிர் தரு செல்வம் பெற்று கால்முளை பல்க வாழ்ந்து – குசேலோ:3 744/2,3
மேல்

யாருமே (1)

சென்றவன் திருவடி தேருவார் யாருமே – குசேலோ:3 538/7
மேல்

யாரே (1)

வெயிலிடை உணக்கி பின்னும் விற்று உளம் மகிழ்வார் யாரே
செயிருறு சீற்ற தெவ்வை சிதைத்து உளத்து உவகை செய்யார் – குசேலோ:2 208/3,4
மேல்

யாரை (1)

இத்தனை மன்னர்-தம்முள் யாரை நீ ஒப்பாய் கந்தை – குசேலோ:2 304/1
மேல்

யாவர் (1)

மெத்திய மனத்தர் ஆகி விரும்பிடார் யாவர் என்பார் – குசேலோ:3 578/4
மேல்

யாவர்-கண்ணும் (1)

இரு நிலத்து யாவர்-கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன – குசேலோ:1 67/1
மேல்

யாவர்க்கும் (4)

யாதவர் குலத்தில் தோன்றிய அரசர் யாவர்க்கும் அதிபனாம் இணை_இல் – குசேலோ:1 90/1
எந்த நாளினும் பூபாலர் யாவர்க்கும் நண்பர் அல்லர் – குசேலோ:2 284/4
பாத்து அறிந்திட தேவர்க்கும் யாவர்க்கும் படாவால் – குசேலோ:2 350/4
விளங்கு மன்னர் முன் யாவர்க்கும் இவ் வகை விரும்பி – குசேலோ:3 639/4
மேல்

யாவரும் (3)

இந்த வனக்கு அழிவு இன்று என்று யாவரும் நன்கு எடுத்துரைப்ப – குசேலோ:1 38/2
அலகு_இல் செல்வத்தன் ஆகி அரசர் யாவரும் தன் போற்ற – குசேலோ:2 277/3
தா அரு மகிழ்ச்சி யாவரும் அடைய தடை அற வளர்தரு நாளில் – குசேலோ:3 677/4
மேல்

யாவரே (2)

முடிய யாவரே எடுத்துரைப்பவர் நசை முளைத்து – குசேலோ:2 340/3
இந்த மா மறையோன்-தன் பேறு யாவரே பெற்றார் என்பார் – குசேலோ:3 573/4
மேல்

யாவரையும் (1)

அணி முடங்கல் திசைதிசை உய்த்து யாவரையும் வரவழைத்து – குசேலோ:3 600/1
மேல்

யாவன் (1)

சொல் பெறு நின் பெறு தந்தை யாவன் மணி தூ முறுவல் – குசேலோ:3 603/3
மேல்

யாவும் (7)

அடருறு தானம் தவம் முதல் யாவும் ஆற்றும் நின் பணிவிடை அன்றோ – குசேலோ:1 158/2
பன்ன அரும் வருத்தம் உடங்குறல் யாவும் பரித்தனன் மென்மெல நடந்தான் – குசேலோ:2 261/4
அரவம் யாவும் அளை புக்கு ஒளித்தவே – குசேலோ:2 443/4
உள்ள யாவும் உதவி புகழ் படாம் – குசேலோ:2 456/1
காற்று குளிருக்கு ஆற்றான் போல் கரங்கள் யாவும் தொக முடக்கி – குசேலோ:2 457/3
யாவும் செய்யகிலாள் அயர்ந்தாவது – குசேலோ:2 495/2
உள்ளுதல் முதல யாவும் இயல்பினின் உணராநிற்கும் – குசேலோ:3 732/3
மேல்

யாவையும் (3)

எங்கு இருப்பினும் தாம் வேட்ட யாவையும் துய்ப்பர் அன்றே – குசேலோ:1 11/4
வியத்தக வேண்டும் யாவையும் அளிப்பன் விளம்புறு முயற்சிசெய்யானேல் – குசேலோ:1 150/2
கூட்டம் யாவையும் குமைத்து மை தோய்ந்து பொன் குழை பாய் – குசேலோ:2 339/3
மேல்

யாழ் (2)

நாரியர் சிலம்பின் சும்மை நரப்பு யாழ் அரவம் இன்ன – குசேலோ:1 28/3
பயிலும் யாழ் முனிவன் கண்டிட பதினாறாயிரம் திருவுரு காட்டி – குசேலோ:3 701/4
மேல்

யாளி (2)

துங்க யாளி துறுமி எழுப்புறும் – குசேலோ:1 42/3
பண் அகம் பொலி வயிர யாளி படி அமைத்து – குசேலோ:2 342/4
மேல்

யான் (11)

அனையரை யான் கேளாது இருந்திடினும் அது புரிந்திடல் அவர்க்கு இயல்பே – குசேலோ:0 16/4
இ தரையிடை காப்பாற்றற்கு யான் திரு நெடுமால் அல்லன் – குசேலோ:1 121/2
சேல் கரும் கண்ணாய் துன்ப செல்வமோ நண்ணுவேன் யான் – குசேலோ:1 143/4
ஒன்றும் இ குடும்ப சேற்றில் உழன்றிடேன் உழன்றிடேன் யான்
என்று உரைத்து இறுத்தான் பற்று_இல் இரும் தவர் ஏறு போல்வான் – குசேலோ:1 145/3,4
எந்தவாறு கையுறை இலாது ஐயன் முன் யான் படர்குவன் மாதே – குசேலோ:1 166/4
கோமகன்-தன் தலை வாயில் எவ்வாறு குறுகுவல் யான்
பூ மலியும் அவ் வாயில் புகினும் அவன் திருச்சேவை – குசேலோ:1 194/2,3
உன்னுடைய தரிசனத்தால் உடம்பு பூரித்தனன் யான்
மின் உடைய விளங்கு ஒளி வேல் வேந்தருளும் தேவருளும் – குசேலோ:2 416/2,3
இனிய நின் உள்ளம் இன்றோ எண்ணி யான் அறிதல் வேண்டும் – குசேலோ:2 472/2
எற்றை யான் புனைவல் வான் ஆற்று இரு புறம் நெருங்கி நிற்கும் – குசேலோ:3 550/2
தான்_அல் உடலை யான் என்றும் தன்னோடு உரிமை அல்லாமை – குசேலோ:3 646/1
அன்றே உள்ள அவித்தை எனல் அஞ்ஞானம் பல் விதம் மதித்து யான்
என்றே எழுதல் அகங்காரம் இது வேண்டுவது என்று எழுதல் அவா – குசேலோ:3 651/1,2
மேல்

யானம்-நின்று (1)

வாயிலை அடைந்த மறை குல தலைவன் மா மணி யானம்-நின்று இழிந்து – குசேலோ:3 614/1
மேல்

யானும் (1)

புலன் இலா யானும் காண கிடைத்தது புதுமை ஐய – குசேலோ:3 720/4
மேல்

யானே (1)

பாம்பணை பரன் யானே என தோன்றும் பவுண்டர வாசுதேவனையும் – குசேலோ:3 700/4
மேல்

யானை (8)

சிங்கம் யானை வெம் சீற்ற புலி உழை – குசேலோ:1 42/1
தத்திய கரட தறுகண் மால் யானை தரியலர் கூற்று என பொலிவோய் – குசேலோ:1 56/4
நெருப்போடு புகை உயிர்க்கும் நிரியாண கரட மத நெடும் கை யானை
பொருப்போடு செறுநர் படை முழுது உழக்கி சவட்டி வரும் புகர் வேல் வேந்தே – குசேலோ:1 76/3,4
கலங்கல்_இல் அருவி ஈட்டம் கார் கட களி நல் யானை – குசேலோ:3 557/4
அண்ணல் அம் களி நல் யானை ஆர்ப்பும் வாம் பரி முழக்கும் – குசேலோ:3 558/1
வில் தவழ் சூழி யானை மிக பொழி தானம் பாய்ந்து – குசேலோ:3 562/1
கொல் நுனை மருப்பு யானை குழாம் பொழி தானம் வாவும் – குசேலோ:3 563/1
நிலம் காவலொருவன் விடு களி யானை கோட்டினுக்கும் நிதமும் எண்_இல் – குசேலோ:3 713/1
மேல்