தெ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கு 1
தெண் 1
தெம் 1
தெய்ய 2
தெய்வ 5
தெய்வம் 5
தெரிக்கோ 1
தெரித்தானும் 1
தெரிதர 1
தெரிந்து 3
தெரிந்தும் 1
தெரிய 4
தெரியல் 1
தெரியா 1
தெரியான் 1
தெரியுமா 1
தெரிவிப்ப 1
தெரிவு 1
தெரு 2
தெருக்கள் 2
தெருட்டல் 1
தெருத்-தொறும் 1
தெருமந்து 1
தெருவில் 1
தெருள் 3
தெவ் 1
தெவ்வு 1
தெவ்வை 1
தெள் 1
தெள்ளிய 1
தெள்ளு 3
தெளிதரு 1
தெளிந்தோர் 1
தெளியார் 1
தெளியுமாலோ 1
தெளிவன் 1
தெளிவுற 1
தெறித்திடு-தோறும் 1
தெறு 1
தெறுபாக்கு 1
தெறும் 1
தென் 3
தென்னை 2

தெங்கு (1)

தெங்கு இளநீர்கள் மற்றும் தேவரும் அரம்பைமாரும் – குசேலோ:1 11/2
மேல்

தெண் (1)

வாங்கு தெண் கடலில் மீனம் முதல் உயிர் மருவலாலே – குசேலோ:2 206/1
மேல்

தெம் (1)

தெம் முனை மழுங்க வளையும் வில் புருவ செம்பொன் செய் பட்டமும் கதிர்கள் – குசேலோ:3 616/2
மேல்

தெய்ய (2)

சென்றும் தெய்ய திகைத்து நின்றேம் அன்றே – குசேலோ:2 448/4
தெய்ய ஆர்த்து ஓடிவந்து ஓர் சிறு பிடி பிடித்தல் போன்றது – குசேலோ:2 482/2
மேல்

தெய்வ (5)

பொருவறு பந்தம் எல்லாம் புணர்த்திடும் தெய்வ சிந்தை – குசேலோ:1 110/1
மறையவருக்கு உயர் தெய்வ தலங்களிடத்து அமர் மாடம் வகுத்துளோரும் – குசேலோ:2 313/1
களியின் தெய்வ சிந்தனையும் கழிந்தே நிற்கும் அது கழிய – குசேலோ:3 660/1
மன்ற உண்டாகும் தெய்வ வலிக்கு எதிர் வலியும் உண்டோ – குசேலோ:3 740/4
தேம்பலின் தவிர்ந்த சிந்தை தெய்வ மா முனிவர் கோமான் – குசேலோ:3 741/2
மேல்

தெய்வம் (5)

தெய்வம் குரவன் அரசன் திருமுன்னர் செல்வோர் – குசேலோ:1 162/1
அந்தணரே அரசர் முதல் மூவருக்கும் ஆசிரியர் அருள் ஆர் தெய்வம்
அந்தணரே மறை கிழவன் முதலாய தேவரினும் ஆற்றல் சான்றோர் – குசேலோ:2 312/1,2
அந்தணரே தெய்வம் எனக்கு என்று கண்ணன் உரைக்கவும் யாம் அயிர்த்தல் என்னே – குசேலோ:2 312/4
விடல் அரும் கற்பு வாய்த்த மின்_அனார் வணங்கும் தெய்வம்
திடமுற முடிந்து வைத்த சிறு பொதி கண்டுகொண்டான் – குசேலோ:2 474/3,4
பகரும் தெய்வம் அம்மை வினை பயன் உண்டோ இன்றோ என்னும் – குசேலோ:3 649/1
மேல்

தெரிக்கோ (1)

தேங்கு சூளிகை சிறப்பினை இற்று என தெரிக்கோ
பாங்கு இயற்றிய சித்திர தொகுதியை பணிக்கோ – குசேலோ:2 346/3,4
மேல்

தெரித்தானும் (1)

வேதம் தெரித்தானும் வேதத்திற்கு உள்ளானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/1
மேல்

தெரிதர (1)

தெரிதர விசாரம்செய்பவர் ஒருபால் திகழ்தர பொலியும் அ சேரி – குசேலோ:1 47/4
மேல்

தெரிந்து (3)

செவ்விய மனத்தன் வீடு காடு என்ன தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த – குசேலோ:1 55/3
தன்மையும் ஏழையாம் நின் தன்மையும் தெரிந்து நோக்கில் – குசேலோ:2 272/2
தங்கள் குலம் விளக்கிய பேர் இரும் கருணை தெரிந்து உவகை தழைப்ப நாளும் – குசேலோ:3 709/1
மேல்

தெரிந்தும் (1)

இது தெரிந்தும் மனையாட்டி இயம்பிய சொற்கு உடம்பட்டு – குசேலோ:1 192/1
மேல்

தெரிய (4)

பல் எலாம் தெரிய காட்டி பருவரல் முகத்தில் கூட்டி – குசேலோ:1 66/1
திருவம் ஒருவற்கு உறல் தெரிய சிற்சில் குறி முன் தோன்றுதல் போல் – குசேலோ:2 464/1
மருவும் உலகுக்கு இருள் ஒதுக்கி வயங்கு கதிரோன் வரல் தெரிய
பருவ சில புள் எழுப்பு ஒலியும் பாய கீழை திசை விளர்ப்பும் – குசேலோ:2 464/2,3
தெரிய அரும் சிற்றிடை அ திருவுறையுள் அமைத்தல் பெரும் சீர்த்தி என்று – குசேலோ:3 711/3
மேல்

தெரியல் (1)

சிலையிட்ட தழும்பு வாய்ந்த தெரியல் அம் தடம் தோள் வேந்தே – குசேலோ:1 64/4
மேல்

தெரியா (1)

மண் என்பது தெரியா வகை வானத்திடை அமரர் – குசேலோ:2 529/1
மேல்

தெரியான் (1)

பழி_இல் பல் உபசாரங்கள் பண்ணவும் தெரியான் ஆகி – குசேலோ:2 410/3
மேல்

தெரியுமா (1)

தெரியுமா புகழ்ந்து ஏத்திட சிறந்தனன் என்னில் – குசேலோ:2 535/3
மேல்

தெரிவிப்ப (1)

தேம் தட மலராற்கு அணி நகர் இ மாதிரி கைசெய் என தெரிவிப்ப
சேந்த தன் நான்கு கரங்களால் சிருட்டி செயப்படு மா நகர் போலும் – குசேலோ:2 255/2,3
மேல்

தெரிவு (1)

சிந்தனை நின்றது என்றான் தெரிவு அரும் வஞ்ச கள்வன் – குசேலோ:2 471/4
மேல்

தெரு (2)

எங்கும் ஆராய்வுற்று அழைத்திடும் பின்னோர் இரும் தெரு நோக்கி உள் மகிழ்ந்தான் – குசேலோ:2 236/4
கற்றவர் ஏத்தெடுக்கும் முனி துவரை நெடும் தெரு பலவும் கடந்து போகி – குசேலோ:2 522/2
மேல்

தெருக்கள் (2)

திறமுற விற்கும் மின்னார் செறிதரும் தெருக்கள் பல்ல – குசேலோ:1 23/4
பெருமை சான்று ஒழுகும் பின்னோர் பெருகி வாழ் தெருக்கள் பல்ல – குசேலோ:1 24/4
மேல்

தெருட்டல் (1)

அழுந்துற செல்வம் என்னா அறிதர தெருட்டல் போன்ற – குசேலோ:3 561/4
மேல்

தெருத்-தொறும் (1)

சிற்றிடை வலைச்சிமார்கள் தெருத்-தொறும் கூறி விற்கும் – குசேலோ:2 213/1
மேல்

தெருமந்து (1)

தெருமந்து அல் நகு பாவம் சிதைதர – குசேலோ:2 221/2
மேல்

தெருவில் (1)

திருகு_இல் வித்துரும இந்தனம் அடுக்கி திரு மலி வணிகர்-தம் தெருவில்
அருமை சால் சிறிய பிணாக்கள் பண்ணையினும் அடும் தொழில் கற்பது கண்டான் – குசேலோ:2 237/3,4
மேல்

தெருள் (3)

தெருள் மறை செப்பலானும் சிறந்த தன் குலம் நீடித்து – குசேலோ:1 61/2
தெருள் மிக படைத்த மன்னன் செவி அறிவுறுப்பான் அல்லன் – குசேலோ:2 394/2
தெருள் செய் உள முனி வேந்தன் சீர் வேந்தன் பயந்த இருள் – குசேலோ:3 612/3
மேல்

தெவ் (1)

தெவ் உடல் பனிப்ப வெள் ஒளி நெடு வேல் செறி தடறு அகற்றுபு விதிர்ப்போய் – குசேலோ:1 55/4
மேல்

தெவ்வு (1)

ஓர் வரை குகை உள் புகுந்து அவனால் தெவ்வு உடல் பொடிப்பித்து முன்னவனோடு – குசேலோ:3 690/3
மேல்

தெவ்வை (1)

செயிருறு சீற்ற தெவ்வை சிதைத்து உளத்து உவகை செய்யார் – குசேலோ:2 208/4
மேல்

தெள் (1)

நலம் கொள் அம் மதியம் கண்டு நகை நிலா மணி பெய் தெள் நீர் – குசேலோ:3 557/3
மேல்

தெள்ளிய (1)

தெள்ளிய தரளம் நீற்றிய சுண்ணம் தீற்றிய மாட வாய்-தோறும் – குசேலோ:2 245/1
மேல்

தெள்ளு (3)

தெள்ளு புனல் நசை மிக்கு திரி மருப்பின் இரலை எலாம் – குசேலோ:1 182/1
தெள்ளு வெண் திரை சுருட்டும் சிறந்த பாற்கடலின் நாப்பண் – குசேலோ:3 555/3
தெள்ளு காரணம்தான் முன்னர் செய்த விண்ணப்பத்தாலே – குசேலோ:3 732/1
மேல்

தெளிதரு (1)

திப்பிய அணியும் பல பொருள் வாய்ப்பும் தெளிதரு நீர்மையும் சீரும் – குசேலோ:2 230/2
மேல்

தெளிந்தோர் (1)

உளம் மிக தெளிந்தோர் புகலும் நல் மாற்றம் உண்மையாம் பொய்ம்மை ஆகாதே – குசேலோ:1 91/4
மேல்

தெளியார் (1)

தெளியார் நல்லோர் இவன் உரை என்றார் சில மாதர் – குசேலோ:2 513/4
மேல்

தெளியுமாலோ (1)

சிந்தையுள் ஆய்ந்து பின்னர் இது என தெளியுமாலோ – குசேலோ:3 551/4
மேல்

தெளிவன் (1)

கோ இயல் கண்ணன் என்று உள் கொண்டு பின் தெளிவன் அம்மா – குசேலோ:2 397/4
மேல்

தெளிவுற (1)

சிவமுறு தென் சொல் ஐந்திலக்கணத்தில் தெளிவுற சிறியனேற்கு அருளும் – குசேலோ:0 14/3
மேல்

தெறித்திடு-தோறும் (1)

துணி நிலா விசும்பில் துள்ள தெறித்திடு-தோறும் ஆங்கு – குசேலோ:3 554/3
மேல்

தெறு (1)

தெறு புலன் அவித்த மேலோர் செய்ய மால்-தனாது செம் கேழ் – குசேலோ:1 27/2
மேல்

தெறுபாக்கு (1)

மேதினி முளைத்த ஆற்றால் விண்ணவர் தெறுபாக்கு உற்று அங்கு – குசேலோ:1 10/1
மேல்

தெறும் (1)

தெறும் நிரப்பு_உளோர் வாழ்ந்திடு செல்வர்-பால் செல்வரேல் மதியார்கள் – குசேலோ:1 163/1
மேல்

தென் (3)

சிவமுறு தென் சொல் ஐந்திலக்கணத்தில் தெளிவுற சிறியனேற்கு அருளும் – குசேலோ:0 14/3
தென் ஆர் அ கதிர் கீழும் பாய்ந்தது என உத்தரியம் திகழாநிற்க – குசேலோ:3 706/4
தென் பரவும் நல் பவள அம்புயமும் சமழ்ப்ப எழில் சிறவாநிற்க – குசேலோ:3 710/4
மேல்

தென்னை (2)

கந்தி களா விளா தென்னை கடுக்கை தேக்கு ஓமை முதல் – குசேலோ:1 35/3
வருக்கை வாழை தேமா கமுகு அறா பல தென்னை
முருக்கு நாரம் முள் மாதுளை மொய்த்த முந்திரிகை – குசேலோ:2 355/1,2
மேல்