மே – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேகன் 1
மேதகு 2
மேய 13
மேயாய் 1
மேயானை 2
மேரு 1
மேருவே 1
மேல் 40
மேல்கொண்டான் 1
மேல்மேல் 1
மேலவர் 1
மேலாய் 1
மேலுளும் 1
மேலே 1
மேலை 3
மேலோடு 1
மேவ 1
மேவி 1
மேவிய 27
மேவினார் 2
மேவினான் 1
மேவினோம் 1
மேவுதலே 1
மேவும் 1
மேற்கொண்ட 2
மேற்கொண்டு 4
மேற்பட 1
மேன்மேல் 1
மேன்மேலும் 1
மேனி 17
மேனியர் 1
மேனியன் 1
மேனியனே 2
மேனியாய் 2
மேனியான் 1
மேனியானுக்கே 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

மேகன் (1)

அண்டத்து அரும்_பெறல் மேகன் வாழ்க – திருவா:3/95
மேல்


மேதகு (2)

வானில் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ் – திருவா:3/23,24
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் – திருவா:9 9/2
மேல்


மேய (13)

திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவி – திருவா:11 2/1
பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த – திருவா:11 16/2
இடம் ஆக கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான் – திருவா:13 14/2
பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை – திருவா:18 2/3
மன்னன் பரி மிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன் சீர் புயங்கள் வர கூவாய் – திருவா:18 7/3,4
மேய பெருந்துறையான் மெய் தார் என் தீய வினை – திருவா:19 9/2
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன் – திருவா:42 3/2
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி – திருவா:43 1/1
பெருந்துறையில் மேய பிரான் – திருவா:47 3/4
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன் – திருவா:47 4/3
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது – திருவா:47 5/3
திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி – திருவா:47 7/3,4
பெருந்துறையின் மேய பெரும் கருணையாளன் – திருவா:47 10/3
மேல்


மேயாய் (1)

மந்திர மா மலை மேயாய் போற்றி – திருவா:4/205
மேல்


மேயானை (2)

மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை – திருவா:8 7/3
திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை – திருவா:31 3/3
மேல்


மேரு (1)

வையகம் எல்லாம் உரல்-அது ஆக மா மேரு என்னும் உலக்கை நாட்டி – திருவா:9 9/1
மேல்


மேருவே (1)

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள் மூன்று எரித்த – திருவா:29 7/1
மேல்


மேல் (40)

நிலம்-தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காஅட்டி – திருவா:1/59
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே – திருவா:5 4/3,4
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேல் கொண்டு உழிதருமே – திருவா:5 7/4
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு – திருவா:5 21/2
தேறுகின்றிலம் இனி உனை சிக்கென சிவன்-அவன் திரள் தோள் மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இ காயம் – திருவா:5 33/2,3
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் – திருவா:7 1/6
ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப – திருவா:7 12/6
மின்னி பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல்
பொன் அம் சிலம்பில் சிலம்பி திரு புருவம் – திருவா:7 16/3,4
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை – திருவா:8 10/1
கொற்ற குதிரையின் மேல் வந்தருளி தன் அடியார் – திருவா:8 20/2
ஆவகை நாமும் வந்து அன்பர்-தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண் மேல்
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ – திருவா:9 16/1,2
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல்
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும் – திருவா:9 17/1,2
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று – திருவா:10 20/1
நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த – திருவா:10 20/3
அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல்
வரை ஆடு மங்கை-தன் பங்கொடும் வந்து ஆண்ட திறம் – திருவா:11 6/1,2
பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே – திருவா:11 7/3
அயல் மாண்டு அருவினை சுற்றமும் மாண்டு அவனியின் மேல்
மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய – திருவா:11 11/2,3
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ – திருவா:12 8/4
இணை ஆர் திருவடி என் தலை மேல் வைத்தலுமே – திருவா:13 1/1
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான் – திருவா:13 10/2
நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை – திருவா:14 18/1
தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே – திருவா:15 10/2
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல் – திருவா:16 7/4
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை – திருவா:18 6/3
பத்தர் எல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும் – திருவா:19 3/3
ஏதிலார் தூண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும் – திருவா:19 10/3
எய்யாது என்-தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று – திருவா:25 8/2
திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும் – திருவா:27 5/1
மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 5/4
உணக்கு இலாதது ஓர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின் – திருவா:30 1/3
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவது அறிந்திலேன் – திருவா:30 3/2
மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும் – திருவா:33 9/3
குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடி_கேடு கண்டீர் – திருவா:36 2/3
புரவியின் மேல் வர புத்தி கொளப்பட்ட பூங்கொடியார் – திருவா:36 9/3
மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப – திருவா:40 7/2
நடக்கும் திருவடி என் தலை மேல் நட்டமையால் – திருவா:40 8/2
யாவர்க்கும் மேல் ஆம் அளவு_இலா சீர் உடையான் – திருவா:47 8/1
தரும் பரியின் மேல் வந்த வள்ளல் – திருவா:48 2/2
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே – திருவா:49 2/6
கொந்து குழல் கோல் வளையார் குவி முலை மேல் விழுவேனை – திருவா:51 6/2
மேல்


மேல்கொண்டான் (1)

பந்தம் பறிய பரி மேல்கொண்டான் தந்த – திருவா:8 3/5
மேல்


மேல்மேல் (1)

மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி – திருவா:3/92
மேல்


மேலவர் (1)

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள் மூன்று எரித்த – திருவா:29 7/1
மேல்


மேலாய் (1)

மூ_உலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே – திருவா:28 9/3
மேல்


மேலுளும் (1)

நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும் – திருவா:5 46/3
மேல்


மேலே (1)

கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ – திருவா:12 11/2
மேல்


மேலை (3)

மேலை வானவரும் அறியாதது ஓர் – திருவா:5 43/1
நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடு எய்த – திருவா:8 6/5
விரவிய தீ வினை மேலை பிறப்பு முந்நீர் கடக்க – திருவா:36 9/1
மேல்


மேலோடு (1)

மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க – திருவா:3/50
மேல்


மேவ (1)

மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும் – திருவா:5 52/3
மேல்


மேவி (1)

மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன் – திருவா:18 8/3
மேல்


மேவிய (27)

ஒழிவு_அற நிறைந்து மேவிய பெருமை – திருவா:3/116
பராய்த்துறை மேவிய பரனே போற்றி – திருவா:4/153
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி – திருவா:4/154
கோகழி மேவிய கோவே போற்றி – திருவா:4/157
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி – திருவா:4/160
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி – திருவா:4/187
செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 1/4
செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 2/4
சிலையனே எனை செத்திட பணியாய் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 3/4
தென் பராய்த்துறையாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 4/4
சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 5/4
சிறை-கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 6/4
சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 7/4
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 8/4
சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 9/4
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 10/2
களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே – திருவா:23 10/4
நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 1/3
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 2/3
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 3/3
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 4/3
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 5/3
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 6/3
செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 7/3
சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 8/3
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 9/3
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 10/1
மேல்


மேவினார் (2)

வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் – திருவா:5 91/2,3
மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே – திருவா:5 92/3,4
மேல்


மேவினான் (1)

வேய தோள் உமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான்
காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய – திருவா:42 5/2,3
மேல்


மேவினோம் (1)

மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே – திருவா:5 30/4
மேல்


மேவுதலே (1)

வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே – திருவா:32 4/4
மேல்


மேவும் (1)

மேவும் உன்-தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே – திருவா:32 5/1
மேல்


மேற்கொண்ட (2)

தெரிவர நின்று உருக்கி பரி மேற்கொண்ட சேவகனார் – திருவா:36 1/3
பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார் – திருவா:36 3/2
மேல்


மேற்கொண்டு (4)

ஞாலம் மிக பரி மேற்கொண்டு நமை ஆண்டான் – திருவா:16 8/3
பள்ளி குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு என் – திருவா:17 7/3
மாய வன பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும் – திருவா:36 7/1
மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே – திருவா:36 9/4
மேல்


மேற்பட (1)

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன – திருவா:3/4
மேல்


மேன்மேல் (1)

விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் – திருவா:5 17/3
மேல்


மேன்மேலும் (1)

மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே – திருவா:5 30/4
மேல்


மேனி (17)

மொக்கணி அருளிய முழு தழல் மேனி
சொக்கது ஆக காட்டிய தொன்மையும் – திருவா:2/33,34
தூ வண மேனி காட்டிய தொன்மையும் – திருவா:2/51
தூய மேனி சுடர் விடு சோதி – திருவா:2/112
தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்_கோவே – திருவா:5 29/4
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே – திருவா:6 11/4
அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே – திருவா:6 29/3
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 8/6
பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன் – திருவா:18 7/2
கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே – திருவா:18 9/1
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய் – திருவா:18 9/4
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய் – திருவா:18 10/4
கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி
செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 7/2,3
கோல மேனி வராகமே குணம் ஆம் பெருந்துறை கொண்டலே – திருவா:30 5/1
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி – திருவா:35 4/2
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/4
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே – திருவா:49 3/6
மேல்


மேனியர் (1)

வேத மொழியர் வெண்ணீற்றர் செம் மேனியர்
நாத பறையினர் அன்னே என்னும் – திருவா:17 1/1,2
மேல்


மேனியன் (1)

செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 9/3
மேல்


மேனியனே (2)

பச்சையனே செய்ய மேனியனே ஒள் பட அரவ – திருவா:6 31/3
செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 1/4
மேல்


மேனியாய் (2)

மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 92/3
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை – திருவா:5 93/3
மேல்


மேனியான் (1)

கண்டம் கரியான் செம் மேனியான் வெண்ணீற்றான் – திருவா:8 9/3
மேல்


மேனியானுக்கே (1)

தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 20/4

மேல்