சே – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 4
சேட்சியன் 1
சேட்டை 1
சேடு 1
சேண்-வயின் 1
சேதிப்ப 1
சேய 2
சேயது 1
சேயன் 1
சேயாய் 2
சேயானை 1
சேயோன்-தன் 1
சேர் 24
சேர்-மின்களே 2
சேர்த்தலும் 1
சேர்தரு 1
சேர்ந்த 3
சேர்ந்தார் 2
சேர்ந்தாரே 1
சேர்ந்து 3
சேர்ந்தேன் 1
சேர்வோமே 1
சேர 3
சேரவன் 1
சேரற்க 1
சேராமே 1
சேரும் 2
சேரும்வண்ணம் 4
சேல் 3
சேலும் 1
சேவக 1
சேவகன் 8
சேவகனார் 2
சேவகனே 1
சேவகனை 3
சேவடி 11
சேவடி-கண் 10
சேவடிக்கே 2
சேவடிகள் 2
சேவடியாய் 1
சேவடியானே 1
சேவடியானை 1
சேவடியே 2
சேவிக்க 1
சேற்றில் 1
சேற்று 2

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

சே (4)

சே ஆர் வெல் கொடி சிவனே போற்றி – திருவா:4/95
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி – திருவா:9 14/2
சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற – திருவா:9 16/3
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 1/4
மேல்


சேட்சியன் (1)

சித்தமும் செல்லா சேட்சியன் காண்க – திருவா:3/41
மேல்


சேட்டை (1)

சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 5/4
மேல்


சேடு (1)

விருப்புற்று வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து அங்கு – திருவா:15 3/3
மேல்


சேண்-வயின் (1)

வாள் நுதல் பெண் என ஒளித்தும் சேண்-வயின்
ஐம்புலன் செல விடுத்து அரு வரை-தொறும் போய் – திருவா:3/135,136
மேல்


சேதிப்ப (1)

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழ – திருவா:15 7/3
மேல்


சேய (2)

சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே – திருவா:36 7/4
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/4
மேல்


சேயது (1)

வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
மேல்


சேயன் (1)

சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 7/4
மேல்


சேயாய் (2)

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே – திருவா:1/44
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் – திருவா:6 22/3
மேல்


சேயானை (1)

சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின் – திருவா:8 7/2
மேல்


சேயோன்-தன் (1)

புறந்தார்க்கு சேயோன்-தன் பூம் கழல்கள் வெல்க – திருவா:1/8
மேல்


சேர் (24)

மா புகை கரை சேர் வண்டு உடை குளத்தின் – திருவா:3/91
விரை சேர் சரண விகிர்தா போற்றி – திருவா:4/105
நதி சேர் செம் சடை நம்பா போற்றி – திருவா:4/109
செடி சேர் உடலம்-இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா – திருவா:5 83/3
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய் வெள் நகை கரும் கண் – திருவா:6 37/2
திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா – திருவா:6 37/3
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய் – திருவா:7 7/4
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி – திருவா:7 18/5,6
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும் – திருவா:8 16/4,5
செய்ய வாய் பைம் சிறகின் செல்வீ நம் சிந்தை சேர்
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய் – திருவா:19 4/1,2
கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால் – திருவா:21 5/3
பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/4
போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை – திருவா:23 8/1
ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப – திருவா:25 8/3
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 4/3
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 6/3
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 9/3
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று – திருவா:33 1/3
செடி சேர் உடலை சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா – திருவா:33 2/3
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறு ஆடி – திருவா:39 1/2
கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை – திருவா:45 4/2
செடி சேர் உடலை செல நீக்கி சிவலோகத்தே நமை வைப்பான் – திருவா:45 4/3
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/4
திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து – திருவா:45 8/3
மேல்


சேர்-மின்களே (2)

சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே – திருவா:36 7/4
தேற்றம் இலாதவர் சேவடி சிக்கென சேர்-மின்களே – திருவா:36 10/4
மேல்


சேர்த்தலும் (1)

பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்து இந்த மூ_உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் – திருவா:42 6/2,3
மேல்


சேர்தரு (1)

தழி சிறை நீரில் பிறை கலம் சேர்தரு தாரவனே – திருவா:6 47/4
மேல்


சேர்ந்த (3)

அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் – திருவா:5 86/3
அழுகேன் நின்-பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு – திருவா:5 88/1,2
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 10/4
மேல்


சேர்ந்தார் (2)

இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் – திருவா:5 81/2,3
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார்
செடி சேர் உடலம்-இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா – திருவா:5 83/2,3
மேல்


சேர்ந்தாரே (1)

சிறவே செய்து வழுவாது சிவனே நின் தாள் சேர்ந்தாரே – திருவா:5 86/4
மேல்


சேர்ந்து (3)

வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை-தான் வந்து அடர்வனவே – திருவா:6 37/4
செய்யானை வெண்ணீறு அணிந்தானை சேர்ந்து அறியா – திருவா:8 13/3
பாவியேற்கும் உண்டாமோ பரமானந்த பழம் கடல் சேர்ந்து
ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே – திருவா:32 5/3,4
மேல்


சேர்ந்தேன் (1)

தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் – திருவா:34 7/3
மேல்


சேர்வோமே (1)

திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே – திருவா:45 8/4
மேல்


சேர (3)

சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட – திருவா:5 53/3
உடையார் உடையாய் நின் பாதம் சேர கண்டு இங்கு ஊர் நாயின் – திருவா:5 56/2
சேர கருகி சிந்தனையை திருந்த வைத்து சிந்தி-மின் – திருவா:45 9/1
மேல்


சேரவன் (1)

தென்னவன் சேரவன் சோழன் சீர் புயங்கள் வர கூவாய் – திருவா:18 7/4
மேல்


சேரற்க (1)

எம் கொங்கை நின் அன்பர்_அல்லார் தோள் சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எ பணியும் செய்யற்க – திருவா:7 19/4,5
மேல்


சேராமே (1)

சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் – திருவா:51 2/2
மேல்


சேரும் (2)

காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால் – திருவா:32 5/2
சேரும் வகையால் சிவன் கருணை தேன் பருகி – திருவா:40 5/3
மேல்


சேரும்வண்ணம் (4)

சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறி ஒன்றும் இல்லாத கூத்தன்-தன் கூத்தை எனக்கு – திருவா:51 2/2,3
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம்
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 3/3,4
சுண்ண வெண்ணீறு அணிவித்து தூ நெறியே சேரும்வண்ணம்
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 4/3,4
மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும்வண்ணம்
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 8/3,4
மேல்


சேல் (3)

சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 14/4
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:25 10/1
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே – திருவா:49 3/6
மேல்


சேலும் (1)

சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 9/4
மேல்


சேவக (1)

சென்னியில் வைத்த சேவக போற்றி – திருவா:4/130
மேல்


சேவகன் (8)

குதிரை சேவகன் ஆகிய கொள்கையும் – திருவா:2/45
நல் நீர் சேவகன் ஆகிய நன்மையும் – திருவா:2/59
சேவகன் ஆகி திண் சிலை ஏந்தி – திருவா:2/81
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க – திருவா:3/98
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 16/4
தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன் – திருவா:42 1/1
சிட்டன் மெய் சிவலோக_நாயகன் தென் பெருந்துறை சேவகன்
மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன் – திருவா:42 2/2,3
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன் – திருவா:42 3/2
மேல்


சேவகனார் (2)

தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் – திருவா:8 16/4
தெரிவர நின்று உருக்கி பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை அன்றி உருவு அறியாது என்-தன் உள்ளம்-அதே – திருவா:36 1/3,4
மேல்


சேவகனே (1)

ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே
தேற்றம் இலாதவர் சேவடி சிக்கென சேர்-மின்களே – திருவா:36 10/3,4
மேல்


சேவகனை (3)

செங்கமல பொன் பாதம் தந்தருளும் சேவகனை
அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை – திருவா:7 17/5,6
சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின் – திருவா:8 7/2
சிந்துர சேவடியானை சேவகனை வர கூவாய் – திருவா:18 5/4
மேல்


சேவடி (11)

தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி – திருவா:1/12
புவனியல் சேவடி தீண்டினன் காண்க – திருவா:3/61
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோள்_நோக்கம் – திருவா:15 1/4
தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே – திருவா:15 10/2
அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி – திருவா:18 10/2
செழு கமல திரள் அன நின் சேவடி நேர்ந்து அமைந்த – திருவா:24 1/1
கருட கொடியோன் காணமாட்டா கழல் சேவடி என்னும் – திருவா:25 1/1
திணி நிலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு – திருவா:35 5/3
சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே – திருவா:36 7/4
தேற்றம் இலாதவர் சேவடி சிக்கென சேர்-மின்களே – திருவா:36 10/4
திருந்து சேவடி சிலம்பு-அவை சிலம்பிட திருவொடும் அகலாதே – திருவா:41 4/3
மேல்


சேவடி-கண் (10)

தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே – திருவா:42 1/4
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/4
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/4
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/4
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/4
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/4
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 7/4
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 8/4
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/4
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/4
மேல்


சேவடிக்கே (2)

சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 1/4
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 15/4
மேல்


சேவடிகள் (2)

கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழும தழுவிக்கொண்டு – திருவா:25 8/1
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே – திருவா:30 3/3
மேல்


சேவடியாய் (1)

சிரம்-தனில் பொலியும் கமல சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 6/2
மேல்


சேவடியானே (1)

வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர் சேவடியானே
முத்தா உன்-தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண – திருவா:25 6/2,3
மேல்


சேவடியானை (1)

சிந்துர சேவடியானை சேவகனை வர கூவாய் – திருவா:18 5/4
மேல்


சேவடியே (2)

ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 17/6
செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே – திருவா:47 3/1
மேல்


சேவிக்க (1)

தேசா நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க
ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனி-தான் இரங்காயே – திருவா:21 6/3,4
மேல்


சேற்றில் (1)

சேற்றில் அழுந்தா சிந்தைசெய்து சிவன் எம்பெருமான் என்று ஏத்தி – திருவா:27 2/2
மேல்


சேற்று (2)

சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 1/3
சேற்று ஆர் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 8/3

மேல்