தா – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தாங்கிக்கொள்ளே 1
தாங்கினான் 1
தாங்குநர் 1
தாணுவே 1
தாதாய் 1
தாது 3
தாதை 3
தாதை-தனை 1
தாதைக்கும் 1
தாதைக்கே 1
தாபத 1
தாபம் 1
தாம் 13
தாம்தாமே 1
தாமம் 1
தாமரை 4
தாமரைகள் 1
தாமே 2
தாய் 7
தாயானை 1
தாயில் 1
தாயின் 2
தாயினும் 1
தாயும் 2
தாயும்_இலி 2
தாயே 4
தாயொடு 1
தார் 5
தாரகை 2
தாரகைகள்-தாம் 1
தாரம் 1
தாரவனே 1
தாரா 1
தாராது 1
தாராய் 4
தாராயே 1
தாராவிடின் 1
தாரை 2
தாரை_ஆறு-அது 1
தாரைகள் 1
தாரோயை 1
தாவர 1
தாவர_சங்கமத்துள் 1
தாவி 1
தாழ் 8
தாழ்த்துவதும் 1
தாழ்ந்து 3
தாழாதே 1
தாழியை 1
தாழுருவி 1
தாழை 1
தாள் 37
தாள்_தாமரை 1
தாள்_இணை 6
தாள்கள் 1
தாள 2
தாளம் 1
தாளி 3
தாளே 1
தான் 24
தான்றியின் 1
தானவரும் 1
தானும் 8
தானே 6

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

தாங்கிக்கொள்ளே (1)

சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே – திருவா:6 1/4
மேல்


தாங்கினான் (1)

இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ – திருவா:12 15/4
மேல்


தாங்குநர் (1)

மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே – திருவா:6 23/3
மேல்


தாணுவே (1)

தாணுவே அழிந்தேன் நின் நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால் – திருவா:44 5/3
மேல்


தாதாய் (1)

தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட – திருவா:27 9/1
மேல்


தாது (3)

பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 13/4
தாது ஆடு கொன்றை சடையான் அடியாருள் – திருவா:16 6/2
தாது ஆடு பூம் சோலை தத்தாய் நமை ஆளும் – திருவா:19 3/1
மேல்


தாதை (3)

அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 3/3,4
என் தாதை தாதைக்கும் எம் அனைக்கும் தம் பெருமான் – திருவா:10 8/3
சதுர்முகன் தாதை என்று உந்தீ பற – திருவா:14 6/3
மேல்


தாதை-தனை (1)

சாதியும் வேதியன் தாதை-தனை தாள் இரண்டும் – திருவா:15 7/2
மேல்


தாதைக்கும் (1)

என் தாதை தாதைக்கும் எம் அனைக்கும் தம் பெருமான் – திருவா:10 8/3
மேல்


தாதைக்கே (1)

குமரன்-தன் தாதைக்கே உந்தீ பற – திருவா:14 17/3
மேல்


தாபத (1)

தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர் – திருவா:17 9/1
மேல்


தாபம் (1)

அவ பெரும் தாபம் நீங்காது அசைந்தன – திருவா:3/82
மேல்


தாம் (13)

தப்பாமே தாம் பிடித்தது சலியா – திருவா:4/59
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்-பால் – திருவா:5 16/1
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி – திருவா:5 16/2
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப்பேசி – திருவா:5 24/1
பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா – திருவா:5 24/2
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் – திருவா:5 96/3
மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியா – திருவா:10 1/3
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார் – திருவா:10 13/2
நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியோ – திருவா:12 17/3
பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே – திருவா:13 17/2
தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும் – திருவா:14 3/1
பல் நூறு கோடி இமையோர்கள் தாம் நிற்ப – திருவா:16 3/2
மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே – திருவா:36 9/4
மேல்


தாம்தாமே (1)

தகவே உடையான்-தனை சார தளராது இருப்பார் தாம்தாமே – திருவா:45 2/4
மேல்


தாமம் (1)

முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின் – திருவா:9 1/1
மேல்


தாமரை (4)

ஏற்று வந்து எதிர் தாமரை தாள் உறும் – திருவா:5 45/3
அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே – திருவா:6 29/3
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி – திருவா:8 6/4
தாள் செய்ய தாமரை சைவனுக்கு என் புன் தலையால் – திருவா:40 9/3
மேல்


தாமரைகள் (1)

தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும் – திருவா:35 6/3
மேல்


தாமே (2)

தாமே தமக்கு சுற்றமும் தாமே தமக்கு விதி வகையும் – திருவா:45 3/1
தாமே தமக்கு சுற்றமும் தாமே தமக்கு விதி வகையும் – திருவா:45 3/1
மேல்


தாய் (7)

தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான் – திருவா:5 47/2
தான் வந்து நாயேனை தாய் போல் தலையளித்திட்டு – திருவா:8 4/3
தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன் கருணை – திருவா:10 10/3
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 12/4
எந்தை எம் தாய் சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய – திருவா:13 2/1
கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு-அது ஆகாதே – திருவா:49 2/3
தாய் ஆய் முலையை தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய் – திருவா:50 5/1
மேல்


தாயானை (1)

தாயானை தத்துவனை தானே உலகு ஏழும் – திருவா:8 7/5
மேல்


தாயில் (1)

தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன் – திருவா:5 39/3
மேல்


தாயின் (2)

தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே – திருவா:1/61
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான் – திருவா:13 3/2
மேல்


தாயினும் (1)

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து நீ பாவியேனுடைய – திருவா:37 9/1
மேல்


தாயும் (2)

தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/2
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும் – திருவா:12 3/3
மேல்


தாயும்_இலி (2)

தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/2
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும் – திருவா:12 3/3
மேல்


தாயே (4)

தாயே ஆகி வளர்த்தனை போற்றி – திருவா:4/87
வானகத்து அமரர் தாயே போற்றி – திருவா:4/136
தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட – திருவா:27 9/1
தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே – திருவா:50 5/3
மேல்


தாயொடு (1)

தக்க தச_மதி தாயொடு தான் படும் – திருவா:4/24
மேல்


தார் (5)

ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 8/3
சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி – திருவா:7 14/5
செம் தார் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 15/5
மேய பெருந்துறையான் மெய் தார் என் தீய வினை – திருவா:19 9/2
தாளி அறுகு ஆம் உவந்த தார் – திருவா:19 9/4
மேல்


தாரகை (2)

தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண் – திருவா:6 48/1
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு – திருவா:20 3/2
மேல்


தாரகைகள்-தாம் (1)

தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல – திருவா:7 18/4
மேல்


தாரம் (1)

ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு – திருவா:6 36/3
மேல்


தாரவனே (1)

தழி சிறை நீரில் பிறை கலம் சேர்தரு தாரவனே – திருவா:6 47/4
மேல்


தாரா (1)

தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம் – திருவா:32 9/1
மேல்


தாராது (1)

தாய் ஆய் முலையை தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய் – திருவா:50 5/1
மேல்


தாராய் (4)

தாளி அறுகின் தாராய் போற்றி – திருவா:4/201
தாராய் உடையாய் அடியேற்கு உன் தாள்_இணை அன்பு – திருவா:5 87/1
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே – திருவா:5 89/4
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய – திருவா:32 8/3
மேல்


தாராயே (1)

தணியாது ஒல்லை வந்தருளி தளிர் பொன் பாதம் தாராயே – திருவா:32 8/4
மேல்


தாராவிடின் (1)

முகம்-தான் தாராவிடின் முடிவேன் பொன்னம்பலத்து எம் முழு_முதலே – திருவா:21 3/4
மேல்


தாரை (2)

ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/4
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப – திருவா:7 15/3
மேல்


தாரை_ஆறு-அது (1)

ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/4
மேல்


தாரைகள் (1)

அற்புதமான அமுத தாரைகள்
எற்பு துளை-தொறும் ஏற்றினன் உருகுவது – திருவா:3/174,175
மேல்


தாரோயை (1)

சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய்_அடியேன் – திருவா:5 16/3
மேல்


தாவர (1)

செல்லாஅநின்ற இ தாவர_சங்கமத்துள் – திருவா:1/30
மேல்


தாவர_சங்கமத்துள் (1)

செல்லாஅநின்ற இ தாவர_சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் – திருவா:1/30,31
மேல்


தாவி (1)

தாவி வரும் பரி பாகன் தாழ் சடையோன் வர கூவாய் – திருவா:18 8/4
மேல்


தாழ் (8)

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் – திருவா:4/21
வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே என கேட்டு வேட்ட நெஞ்சாய் – திருவா:5 21/1
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு – திருவா:5 21/2
சங்கம் அரற்ற சிலம்பு ஒலிப்ப தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட – திருவா:9 14/1
தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல் – திருவா:10 15/2
சயம் அன்றோ வானவர்க்கு தாழ் குழலாய் சாழலோ – திருவா:12 4/4
சால அமுது உண்டு தாழ் கடலின் மீது எழுந்து – திருவா:16 8/2
தாவி வரும் பரி பாகன் தாழ் சடையோன் வர கூவாய் – திருவா:18 8/4
மேல்


தாழ்த்துவதும் (1)

தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி – திருவா:5 16/2
மேல்


தாழ்ந்து (3)

என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து – திருவா:47 2/4
தாழ்ந்து உலகம் ஏத்த தகுவாரும் சூழ்ந்து அமரர் – திருவா:48 4/2
தையலார் மையலிலே தாழ்ந்து விழ கடவேனை – திருவா:51 7/1
மேல்


தாழாதே (1)

நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படு-மின் – திருவா:45 7/3
மேல்


தாழியை (1)

தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள் – திருவா:24 6/2
மேல்


தாழுருவி (1)

பையவே கொடு போந்து பாசம் எனும் தாழுருவி
உய்யும் நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை – திருவா:51 7/2,3
மேல்


தாழை (1)

தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 13/4
மேல்


தாள் (37)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க – திருவா:1/1
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க – திருவா:1/2
கோகழி ஆண்ட குரு மணி-தன் தாள் வாழ்க – திருவா:1/3
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – திருவா:1/4
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – திருவா:1/18
தாள் தளை இடு-மின் – திருவா:3/143
ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் தாள் தந்து – திருவா:5 39/1
ஏற்று வந்து எதிர் தாமரை தாள் உறும் – திருவா:5 45/3
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள்
கருப்பு மட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும் – திருவா:5 80/1,2
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் – திருவா:5 81/2
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் – திருவா:5 83/2
சிறவே செய்து வழுவாது சிவனே நின் தாள் சேர்ந்தாரே – திருவா:5 86/4
தாராய் உடையாய் அடியேற்கு உன் தாள்_இணை அன்பு – திருவா:5 87/1
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/3
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை – திருவா:5 91/1
பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையை போக்க பெற்று – திருவா:6 10/1
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே – திருவா:6 11/1,2
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து பணிசெய கூவித்து என்னை – திருவா:6 33/2,3
விழுது அனையேனை விடுதி கண்டாய் நின் வெறி மலர் தாள்
தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான் – திருவா:6 44/2,3
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் – திருவா:7 9/4
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவ பூண் முலையீர் வாயார நாம் பாடி – திருவா:7 15/6,7
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி – திருவா:8 6/4
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான் – திருவா:8 11/2
சாதியும் வேதியன் தாதை-தனை தாள் இரண்டும் – திருவா:15 7/2
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு – திருவா:16 1/3
ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி – திருவா:16 1/5
தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/3
தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள்
வாழி எப்போது வந்து எ நாள் வணங்குவன் வல் வினையேன் – திருவா:24 6/2,3
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள்
பூண்டேன் புறம் போகேன் இனி புறம்போகல் ஒட்டேனே – திருவா:34 7/3,4
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல் விரும்பு-மின் தாள்
பாண்டியனார் அருள் செய்கின்ற முத்தி பரிசு இதுவே – திருவா:36 6/3,4
பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர் – திருவா:38 4/1
முடியேன் பிறவேன் எனை தன தாள் முயங்குவித்த – திருவா:40 2/3
தாள் செய்ய தாமரை சைவனுக்கு என் புன் தலையால் – திருவா:40 9/3
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம் – திருவா:45 6/3
திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே – திருவா:45 8/4
தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே – திருவா:50 5/3
மேல்


தாள்_தாமரை (1)

தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி – திருவா:8 6/4
மேல்


தாள்_இணை (6)

தாராய் உடையாய் அடியேற்கு உன் தாள்_இணை அன்பு – திருவா:5 87/1
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/3
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை
வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 91/1,2
ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி – திருவா:16 1/5
தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/3
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
மேல்


தாள்கள் (1)

தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி – திருவா:9 13/3
மேல்


தாள (2)

கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே – திருவா:6 31/4
தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும் – திருவா:35 6/3
மேல்


தாளம் (1)

தாளம் இருந்த ஆறு அன்னே என்னும் – திருவா:17 8/4
மேல்


தாளி (3)

தாளி அறுகின் தாராய் போற்றி – திருவா:4/201
தாளி அறுகினர் சந்தன சாந்தினர் – திருவா:17 8/1
தாளி அறுகு ஆம் உவந்த தார் – திருவா:19 9/4
மேல்


தாளே (1)

புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
மேல்


தான் (24)

சதிர்பட சாத்தாய் தான் எழுந்தருளியும் – திருவா:2/28
தரியேன் நாயேன் தான் எனை செய்தது – திருவா:3/164
தக்க தச_மதி தாயொடு தான் படும் – திருவா:4/24
அடியேன் அல்லேன்-கொல்லோ தான் எனை ஆட்கொண்டிலை-கொல்லோ – திருவா:5 83/1
பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரை தான் பணியாள் – திருவா:7 15/4
தான் வந்து நாயேனை தாய் போல் தலையளித்திட்டு – திருவா:8 4/3
சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு – திருவா:10 9/2
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார் – திருவா:10 13/2
தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியா தன்மையனுக்கு – திருவா:11 18/2
என் அப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன் – திருவா:12 2/1
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/2
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும் – திருவா:12 3/3
தான் அந்தம்_இல்லான் தனை அடைந்த நாயேனை – திருவா:12 10/1
தான் புக்கு நட்டம் பயிலும்-அது என் ஏடீ – திருவா:12 14/2
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம் – திருவா:12 14/3
தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ – திருவா:12 19/4
அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி – திருவா:13 13/1
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா – திருவா:13 14/3
நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன் – திருவா:15 4/3
உலகு ஏழ் என திசை பத்து என தான் ஒருவனுமே – திருவா:15 5/3
தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு – திருவா:16 2/3
எனை தான் புகுந்து ஆண்டான் எனது அன்பின் புரை உருக்கி – திருவா:34 4/2
பினை தான் புகுந்து எல்லே பெருந்துறையில் உறை பெம்மான் – திருவா:34 4/3
தான் அடியோமுடனே உய வந்து தலைப்படும் ஆகாதே – திருவா:49 6/6
மேல்


தான்றியின் (1)

ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும் – திருவா:4/15
மேல்


தானவரும் (1)

முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும்
பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே – திருவா:13 17/1,2
மேல்


தானும் (8)

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி – திருவா:2/26
அவளும் தானும் உடனே காண்க – திருவா:3/65
தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம் என் தன்மையே – திருவா:5 58/4
தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 2/4
நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம் – திருவா:10 13/1
தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல் – திருவா:10 15/2
பங்கு உலவு கோதையும் தானும் பணிகொண்ட – திருவா:16 9/4
வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால் – திருவா:36 10/2
மேல்


தானே (6)

தானே ஆகிய தயாபரன் எம் இறை – திருவா:2/96
தன்_நேர்_இல்லோன் தானே ஆன தன்மை – திருவா:3/146
தானே வந்து எம்மை தலையளித்து ஆட்கொண்டருளும் – திருவா:7 6/5
தாயானை தத்துவனை தானே உலகு ஏழும் – திருவா:8 7/5
எ பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் – திருவா:8 12/5
தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான் – திருவா:38 10/3

மேல்