பொ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொக்கங்களே 1
பொங்க 6
பொங்கி 1
பொங்கிய 2
பொங்கு 8
பொங்கும் 1
பொச்சை 1
பொடி 8
பொடித்த 1
பொத்திக்கொண்ட 1
பொத்தை 1
பொதிந்திடு 1
பொதிந்து 1
பொதியும் 1
பொதும்பு 1
பொதும்புறு 1
பொதுவினில் 2
பொந்தை 1
பொய் 20
பொய்-தனை 1
பொய்-தான் 1
பொய்க்கு 1
பொய்களே 1
பொய்கை 4
பொய்ந்நெறி 1
பொய்ம்மையும் 1
பொய்ம்மையே 1
பொய்மை 2
பொய்மையேன் 1
பொய்யர் 1
பொய்யர்-தம் 2
பொய்யர்-தம்மை 1
பொய்யவனேனை 1
பொய்யனேன் 2
பொய்யில் 2
பொய்யினை 2
பொய்யினையே 1
பொய்யும் 3
பொய்யோ 1
பொர 1
பொரா 1
பொரு 3
பொருட்கும் 2
பொருட்படுத்த 1
பொருட்படுத்து 1
பொருத்தம் 2
பொருது 2
பொருந்த 1
பொருந்தி 1
பொருந்திய 1
பொருந்தும் 1
பொருப்பு 1
பொரும் 1
பொருள் 25
பொருள்-அது 1
பொருள்கள் 2
பொருளனே 1
பொருளா 1
பொருளானே 1
பொருளுக்கு 1
பொருளும் 5
பொருளே 12
பொருளை 2
பொல்லா 16
பொல்லாதோ 1
பொல்லாமை 1
பொலா 1
பொலிகின்ற 1
பொலிதரு 2
பொலிந்த 1
பொலிந்திடும் 1
பொலிந்து 4
பொலிபவனே 1
பொலியும் 4
பொலியுமே 1
பொலிவாய் 1
பொலிவு 1
பொலிவே 1
பொழிகின்ற 1
பொழிந்திடும் 1
பொழியாய் 1
பொழில் 12
பொழில்கள் 1
பொழிற்கும் 1
பொழுதினை 1
பொழுதும் 1
பொள்ளல் 1
பொற்பால் 1
பொற்பு 1
பொறித்தலுமே 1
பொறுக்க 1
பொறுக்கிலேன் 1
பொறுக்கும் 2
பொறுக்கை 1
பொறுத்தல் 1
பொறுத்தே 1
பொறுப்பவனே 1
பொறுப்பார் 1
பொறேன் 2
பொன் 70
பொன்_சுண்ணம் 13
பொன்_நகர் 1
பொன்_நகர்-வாய் 1
பொன்_ஊசல் 9
பொன்னம்பல 2
பொன்னம்பலத்து 6
பொன்னம்பலம் 1
பொன்னியலும் 1
பொன்னின் 1
பொன்னுடை 1
பொன்னும் 1
பொன்னே 2
பொன்னை 2
பொனின் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

பொக்கங்களே (1)

போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும் – திருவா:7 5/2
மேல்

பொங்க (6)

கொங்கைகள் பொங்க குடையும் புனல் பொங்க – திருவா:7 13/7
கொங்கைகள் பொங்க குடையும் புனல் பொங்க
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 13/7,8
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி – திருவா:9 8/1,2
பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 14/4
இள முலை பொங்க நின்று உந்தீ பற – திருவா:14 4/3
கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவாது உருக அருளாயே – திருவா:32 2/3,4
மேல்

பொங்கி (1)

வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரும் நீர் மடுவுள் மலை சிறு தோணி வடிவின் வெள்ளை – திருவா:6 26/2,3
மேல்

பொங்கிய (2)

பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 14/4
பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 15/4
மேல்

பொங்கு (8)

பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண் – திருவா:5 65/2
பொங்கு மலர் பாதம் பூதலத்தே போந்தருளி – திருவா:8 1/2
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம் – திருவா:12 1/1
பொங்கு உலவு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 9/6
பொறுப்பவனே அரா பூண்பவனே பொங்கு கங்கை சடை – திருவா:24 2/2
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/2
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/4
மேல்

பொங்கும் (1)

பொங்கும் மடுவில் புக பாய்ந்துபாய்ந்து நம் – திருவா:7 13/5
மேல்

பொச்சை (1)

பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல – திருவா:41 9/1
மேல்

பொடி (8)

திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி – திருவா:5 89/3
காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ – திருவா:12 3/4
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 3/4
ஆடு அர பூண் உடை தோல் பொடி பூசிற்று ஓர் – திருவா:17 4/1
புளியம்பழம் ஒத்திருந்தேன் இருந்தும் விடையாய் பொடி ஆடி – திருவா:25 5/2
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/4
பொய்யும் பொடி ஆகாது என் செய்கேன் செய்ய – திருவா:47 1/2
மேல்

பொடித்த (1)

பொடித்த ஆறும் இவை உணர்ந்து கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே – திருவா:5 57/4
மேல்

பொத்திக்கொண்ட (1)

பொய்யவனேனை பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண் மிடற்று – திருவா:6 7/1,2
மேல்

பொத்தை (1)

பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை – திருவா:26 7/1
மேல்

பொதிந்திடு (1)

புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய்-தனை ஒழிவித்திடும் – திருவா:42 8/1
மேல்

பொதிந்து (1)

பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை – திருவா:26 7/1
மேல்

பொதியும் (1)

குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே – திருவா:6 26/4
மேல்

பொதும்பு (1)

பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே – திருவா:6 35/4
மேல்

பொதும்புறு (1)

பொதும்புறு தீ போல் புகைந்து எரிய புலன் தீ கதுவ – திருவா:6 36/1
மேல்

பொதுவினில் (2)

கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என – திருவா:2/128
பொலிதரு புலியூர் பொதுவினில் நடம் நவில் – திருவா:2/141
மேல்

பொந்தை (1)

பொந்தை பரவி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 2/4
மேல்

பொய் (20)

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி – திருவா:1/37
போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார் – திருவா:1/86
தீயில் வெம்மை செய்தோன் பொய் தீர் – திருவா:3/22
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா – திருவா:5 52/2
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான் – திருவா:5 73/2
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே – திருவா:5 89/4
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் – திருவா:5 90/1
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் – திருவா:5 90/1
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே – திருவா:5 90/1,2
கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம் – திருவா:5 100/3
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே – திருவா:6 28/1
பொய் தேவு பேசி புலம்புகின்ற பூதலத்தே – திருவா:10 5/2
பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்-தோறும் – திருவா:10 17/1
புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே – திருவா:22 3/2
பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை – திருவா:26 7/1
தூக்கி முன் செய்த பொய் அற துகள் அறுத்து எழுதரு சுடர் சோதி – திருவா:26 8/3
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி – திருவா:41 1/3
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே – திருவா:45 1/4
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே – திருவா:51 3/1
மேல்

பொய்-தனை (1)

புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய்-தனை ஒழிவித்திடும் – திருவா:42 8/1
மேல்

பொய்-தான் (1)

பொய்-தான் தவிர்ந்து உன்னை போற்றி சயசய போற்றி என்னும் – திருவா:5 1/3
மேல்

பொய்க்கு (1)

விச்சு கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய் – திருவா:5 81/1
மேல்

பொய்களே (1)

பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய் – திருவா:41 4/1
மேல்

பொய்கை (4)

மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன – திருவா:7 11/1
பூ திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம் – திருவா:7 12/7
பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி – திருவா:15 1/1
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 2/3
மேல்

பொய்ந்நெறி (1)

அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே – திருவா:26 10/4
மேல்

பொய்ம்மையும் (1)

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு – திருவா:9 20/1
மேல்

பொய்ம்மையே (1)

பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு – திருவா:37 3/2
மேல்

பொய்மை (2)

பேர்ந்தும் என் பொய்மை ஆட்கொண்டு அருளும் பெருமை போற்றி – திருவா:5 69/2
வேண்டும் நின் கழல்-கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே – திருவா:5 74/1
மேல்

பொய்மையேன் (1)

பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான் – திருவா:5 73/2
மேல்

பொய்யர் (1)

பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா – திருவா:5 52/2
மேல்

பொய்யர்-தம் (2)

பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன் – திருவா:35 1/1
மேல்

பொய்யர்-தம்மை (1)

போற்றி என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் – திருவா:5 63/1
மேல்

பொய்யவனேனை (1)

பொய்யவனேனை பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட – திருவா:6 7/1
மேல்

பொய்யனேன் (2)

பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே – திருவா:5 52/4
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
மேல்

பொய்யில் (2)

பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே – திருவா:5 92/4
போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே – திருவா:45 9/4
மேல்

பொய்யினை (2)

பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
நடித்து மண்ணிடை பொய்யினை பல செய்து நான் என எனும் மாயம் – திருவா:41 3/1
மேல்

பொய்யினையே (1)

பொறுப்பார் அன்றே பெரியோர் சிறு நாய்கள்-தம் பொய்யினையே – திருவா:6 6/4
மேல்

பொய்யும் (3)

போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே – திருவா:5 85/4
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு – திருவா:5 86/1
பொய்யும் பொடி ஆகாது என் செய்கேன் செய்ய – திருவா:47 1/2
மேல்

பொய்யோ (1)

பிரியேன் என்றுஎன்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே – திருவா:44 2/4
மேல்

பொர (1)

சுழி சென்று மாதர் திரை பொர காம சுறவு எறிய – திருவா:24 4/3
மேல்

பொரா (1)

திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 3/3
மேல்

பொரு (3)

வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும் – திருவா:2/32
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்து உறவே – திருவா:6 29/4
போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை – திருவா:23 8/1
மேல்

பொருட்கும் (2)

முன்னை பழம் பொருட்கும் முன்னை பழம் பொருளே – திருவா:7 9/1
எ பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் – திருவா:8 12/5
மேல்

பொருட்படுத்த (1)

நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த
தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 20/3,4
மேல்

பொருட்படுத்து (1)

நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான் – திருவா:13 3/1,2
மேல்

பொருத்தம் (2)

பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே – திருவா:5 92/4
பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் போத என்று எனை புரிந்து நோக்கவும் – திருவா:5 93/1
மேல்

பொருது (2)

சுழித்து எம் பந்த மா கரை பொருது அலைத்து இடித்து – திருவா:3/85
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே – திருவா:6 9/4
மேல்

பொருந்த (1)

பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே – திருவா:29 10/4
மேல்

பொருந்தி (1)

பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும் – திருவா:30 4/1
மேல்

பொருந்திய (1)

பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் – திருவா:5 13/3
மேல்

பொருந்தும் (1)

பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய் – திருவா:41 4/1
மேல்

பொருப்பு (1)

பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி – திருவா:4/192
மேல்

பொரும் (1)

பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே – திருவா:6 35/4
மேல்

பொருள் (25)

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் – திருவா:1/93
அழிதரும் ஆக்கை ஒழிய செய்த ஒள் பொருள்
இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி – திருவா:3/118,119
உண்டு ஓர் ஒள் பொருள் என்று உணர்வார்க்கு எலாம் – திருவா:5 42/1
புல் வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள்
எல்லை_இல் கழல் கண்டும் பிரிந்தனன் – திருவா:5 48/2,3
பொய்யவனேனை பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட – திருவா:6 7/1
போது ஆர் புனை முடியும் எல்லா பொருள் முடிவே – திருவா:7 10/2
வேத பொருள் பாடி அ பொருள் ஆமா பாடி – திருவா:7 14/4
வேத பொருள் பாடி அ பொருள் ஆமா பாடி – திருவா:7 14/4
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 12/6
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா – திருவா:12 2/3
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ – திருவா:12 10/4
பொருள் பற்றி செய்கின்ற பூசனைகள் போல் விளங்க – திருவா:15 3/1
புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள்புரிந்தனை புரிதலும் களித்து – திருவா:23 3/1
உற்ற ஆக்கையின் உறு பொருள் நறு மலர் எழுதரு நாற்றம் போல் – திருவா:26 9/1
பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே – திருவா:26 9/2
பொருள் என களித்து அரு நரகத்திடை விழ புகுகின்றேனை – திருவா:26 10/2
பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி – திருவா:31 10/1
பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே – திருவா:37 4/2
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி – திருவா:37 7/1
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை – திருவா:41 3/3
விண்ணவரும் அறியாத விழு பொருள் இ பொருள் ஆகாதே – திருவா:49 7/6
விண்ணவரும் அறியாத விழு பொருள் இ பொருள் ஆகாதே – திருவா:49 7/6
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:51 9/3
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை – திருவா:51 10/3
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை – திருவா:51 10/3
மேல்

பொருள்-அது (1)

முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும் – திருவா:4/43
மேல்

பொருள்கள் (2)

கேழ்_இல் விழு பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ – திருவா:7 8/4
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ – திருவா:12 13/4
மேல்

பொருளனே (1)

பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/2
மேல்

பொருளா (1)

பொருளா என்னை புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பல கூத்தா – திருவா:21 8/2
மேல்

பொருளானே (1)

ஓத்தானே பொருளானே உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:38 8/2
மேல்

பொருளுக்கு (1)

பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய் பேச்சு இறந்த – திருவா:48 7/1
மேல்

பொருளும் (5)

மருவி எ பொருளும் வளர்ப்போன் காண்க – திருவா:3/48
மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே – திருவா:22 5/2
சொல்லி பரவும் நாமத்தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை – திருவா:27 4/2
ஈண்டிய மாய இருள் கெட எ பொருளும் விளங்க – திருவா:36 6/1
தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து – திருவா:40 1/2
மேல்

பொருளே (12)

வாள் நிலா பொருளே இங்கு ஒர் பார்ப்பு என – திருவா:5 44/2
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே – திருவா:6 16/4
பொருளே தமியேன் புகலிடமே நின் புகழ் இகழ்வார் – திருவா:6 17/1
முன்னை பழம் பொருட்கும் முன்னை பழம் பொருளே
பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அ பெற்றியனே – திருவா:7 9/1,2
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
விண்ணக தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே உன தொழுப்பு அடியோங்கள் – திருவா:20 9/1
உணர்ந்த மா முனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு_அரும் பொருளே
இணங்கு_இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே – திருவா:22 4/1,2
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை – திருவா:23 5/2
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை – திருவா:28 8/3
பிறவி வேரறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே – திருவா:37 6/2,3
பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே
தேசு உடை விளக்கே செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 7/2,3
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே – திருவா:50 7/3
மேல்

பொருளை (2)

விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழு பொருளை
கண்ணுக்கு இனியானை பாடி கசிந்து உள்ளம் – திருவா:7 4/5,6
பொருளை தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஓ – திருவா:25 1/2
மேல்

பொல்லா (16)

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் – திருவா:1/25
புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே – திருவா:5 10/1
நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன – திருவா:5 51/2
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய் ஆன – திருவா:5 59/1
புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா – திருவா:24 1/3
பொருளை தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஓ – திருவா:25 1/2
புடைபட்டு இருப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 1/4
போற்றி புகழ்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 2/4
பூண்டு கிடப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 3/4
புல்லி புணர்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 4/4
புகழப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 5/4
புரிந்து நிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 6/4
புனையப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 7/4
புக்குநிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 8/4
போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 9/4
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 10/4
மேல்

பொல்லாதோ (1)

புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ – திருவா:7 3/5,6
மேல்

பொல்லாமை (1)

சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என – திருவா:30 6/3
மேல்

பொலா (1)

என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா – திருவா:35 3/3
மேல்

பொலிகின்ற (1)

பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையை போக்க பெற்று – திருவா:6 10/1
மேல்

பொலிதரு (2)

பொலிதரு புலியூர் பொதுவினில் நடம் நவில் – திருவா:2/141
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் – திருவா:2/145
மேல்

பொலிந்த (1)

புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும் – திருவா:35 7/2
மேல்

பொலிந்திடும் (1)

பொன்னியலும் திருமேனி வெண்ணீறு பொலிந்திடும் ஆகாதே – திருவா:49 6/1
மேல்

பொலிந்து (4)

பூவணம்-அதனில் பொலிந்து இருந்து அருளி – திருவா:2/50
பூவலம்-அதனில் பொலிந்து இனிது அருளி – திருவா:2/56
மின்னி பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல் – திருவா:7 16/3
மன்னி பொலிந்து இருந்த மா மறையோன்-தன் புகழே – திருவா:16 7/2
மேல்

பொலிபவனே (1)

பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே – திருவா:6 9/4
மேல்

பொலியும் (4)

மை பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 12/1
கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும் – திருவா:19 10/2
சிரம்-தனில் பொலியும் கமல சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 6/2
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம் – திருவா:45 9/2
மேல்

பொலியுமே (1)

பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/4
மேல்

பொலிவாய் (1)

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 1/2
மேல்

பொலிவு (1)

கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் – திருவா:2/30
மேல்

பொலிவே (1)

பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 4/2,3
மேல்

பொழிகின்ற (1)

பொழிகின்ற துன்ப புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு – திருவா:24 4/1
மேல்

பொழிந்திடும் (1)

பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே – திருவா:49 6/2
மேல்

பொழியாய் (1)

என்ன பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 16/8
மேல்

பொழில் (12)

விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க – திருவா:3/44
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 10/3
அருளே அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 17/3
செம் தார் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 15/5
கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே – திருவா:18 9/1
கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ – திருவா:18 10/1
மது வளர் பொழில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா – திருவா:20 7/3
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 5/3
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 10/1
செறி பொழில் சூழ் தில்லைநகர் திருச்சிற்றம்பலம் மன்னி – திருவா:31 6/3
விடையானே விரி பொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான் – திருவா:39 2/3
மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் – திருவா:43 8/2
மேல்

பொழில்கள் (1)

தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை – திருவா:5 30/1
மேல்

பொழிற்கும் (1)

ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் காதலவர்க்கு – திருவா:19 2/1,2
மேல்

பொழுதினை (1)

பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு – திருவா:37 3/2
மேல்

பொழுதும் (1)

உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னை பிரிந்து இங்கு ஒரு பொழுதும்
தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால் – திருவா:44 2/1,2
மேல்

பொள்ளல் (1)

பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா – திருவா:6 24/3
மேல்

பொற்பால் (1)

பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே – திருவா:45 7/2
மேல்

பொற்பு (1)

பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த – திருவா:10 1/1
மேல்

பொறித்தலுமே (1)

பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே
தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 7/3,4
மேல்

பொறுக்க (1)

பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று – திருவா:33 1/3
மேல்

பொறுக்கிலேன் (1)

பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா – திருவா:23 6/2
மேல்

பொறுக்கும் (2)

தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மா நகர் குறுக – திருவா:5 85/2,3
பேயேனது உள்ள பிழை பொறுக்கும் பெருமையனை – திருவா:10 12/2
மேல்

பொறுக்கை (1)

பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி – திருவா:5 66/3
மேல்

பொறுத்தல் (1)

போற்றா ஆக்கையை பொறுத்தல் புகலேன் – திருவா:3/123
மேல்

பொறுத்தே (1)

இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே – திருவா:32 3/2
மேல்

பொறுப்பவனே (1)

பொறுப்பவனே அரா பூண்பவனே பொங்கு கங்கை சடை – திருவா:24 2/2
மேல்

பொறுப்பார் (1)

பொறுப்பார் அன்றே பெரியோர் சிறு நாய்கள்-தம் பொய்யினையே – திருவா:6 6/4
மேல்

பொறேன் (2)

தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே – திருவா:6 39/4
சிதலை செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ – திருவா:6 41/3
மேல்

பொன் (70)

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் – திருவா:1/32
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்
பொலிதரு புலியூர் பொதுவினில் நடம் நவில் – திருவா:2/140,141
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ – திருவா:3/125
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் – திருவா:5 13/3
புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு – திருவா:5 36/1
போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி – திருவா:5 53/1
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு – திருவா:5 88/2
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன் – திருவா:5 92/2
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே – திருவா:6 11/4
திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா – திருவா:6 37/3
பூ திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம் – திருவா:7 12/7
பொன் அம் சிலம்பில் சிலம்பி திரு புருவம் – திருவா:7 16/4
செங்கமல பொன் பாதம் தந்தருளும் சேவகனை – திருவா:7 17/5
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம் – திருவா:7 20/3
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள் – திருவா:7 20/7
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 8/6
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/4
பூ இயல் வார் சடை எம்பிராற்கு பொன் திரு சுண்ணம் இடிக்கவேண்டும் – திருவா:9 2/1
சுந்தர நீறு அணிந்து மெழுகி தூய பொன் சிந்தி நிதி நிரப்பி – திருவா:9 3/1
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 3/4
பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 4/4
முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 5/4
மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே – திருவா:9 6/4
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/4
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 8/4
ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 9/4
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 10/4
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/4
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 13/4
பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 14/4
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 17/4
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 20/4
சுண்ண பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 4/4
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 11/4
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி – திருவா:11 9/2
மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை – திருவா:12 13/1
நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே – திருவா:13 8/1
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 9/4
பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 13/4
பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே – திருவா:13 17/2
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து – திருவா:16 1/2
போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 1/6
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 2/6
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 3/6
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 3/6
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 4/6
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 5/6
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 6/6
பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 7/6
பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 7/6
பூலித்து அகம் குழைந்து பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 8/6
பொங்கு உலவு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 9/6
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை – திருவா:18 6/3
கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே – திருவா:18 9/1
சுடர் பொன் குன்றை தோளா முத்தை வாளா தொழும்பு உகந்து – திருவா:27 1/1
தணியாது ஒல்லை வந்தருளி தளிர் பொன் பாதம் தாராயே – திருவா:32 8/4
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என் – திருவா:37 10/1
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே – திருவா:38 5/4
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே – திருவா:38 5/4
அம் பொன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 6/4
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி – திருவா:41 1/3
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/3
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள் – திருவா:41 7/2
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/2
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே – திருவா:45 7/2
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் அமரர் எல்லாம் – திருவா:50 1/2
மேல்

பொன்_சுண்ணம் (13)

அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/4
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 3/4
பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 4/4
முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 5/4
மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே – திருவா:9 6/4
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/4
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 8/4
ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 9/4
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 10/4
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/4
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 20/4
மேல்

பொன்_நகர் (1)

புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு – திருவா:5 36/1
மேல்

பொன்_நகர்-வாய் (1)

போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி – திருவா:5 53/1
மேல்

பொன்_ஊசல் (9)

போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 1/6
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 2/6
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 3/6
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 4/6
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 5/6
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 6/6
பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 7/6
பூலித்து அகம் குழைந்து பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 8/6
பொங்கு உலவு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 9/6
மேல்

பொன்னம்பல (2)

உன் நின்று இவன் ஆர் என்னாரோ பொன்னம்பல கூத்து உகந்தானே – திருவா:21 2/4
பொருளா என்னை புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பல கூத்தா – திருவா:21 8/2
மேல்

பொன்னம்பலத்து (6)

அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் பொன்னம்பலத்து எம் – திருவா:21 1/3
முகம்-தான் தாராவிடின் முடிவேன் பொன்னம்பலத்து எம் முழு_முதலே – திருவா:21 3/4
அழும்-அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே – திருவா:21 4/4
அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே என்று உன் அருள் நோக்கி – திருவா:21 5/1
ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனி-தான் இரங்காயே – திருவா:21 6/4
தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் அவர் முன்னே – திருவா:21 9/3
மேல்

பொன்னம்பலம் (1)

பல்கால் உன்னை பாவித்து பரவி பொன்னம்பலம் என்றே – திருவா:21 10/3
மேல்

பொன்னியலும் (1)

பொன்னியலும் திருமேனி வெண்ணீறு பொலிந்திடும் ஆகாதே – திருவா:49 6/1
மேல்

பொன்னின் (1)

விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை – திருவா:6 29/2
மேல்

பொன்னுடை (1)

பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 13/4
மேல்

பொன்னும் (1)

தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்ற செழும் சுடரே – திருவா:6 4/4
மேல்

பொன்னே (2)

பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்கு புகுவேனே – திருவா:5 59/4
பொருளா என்னை புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பல கூத்தா – திருவா:21 8/2
மேல்

பொன்னை (2)

பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன் – திருவா:18 7/2
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/3
மேல்

பொனின் (1)

ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய் – திருவா:18 9/4

மேல்