கீ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

கீடம் (2)

கீடம் புரையும் கிழவோன் நாள்-தொறும் – திருவா:3/19
ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய் – திருவா:8 14/1
மேல்


கீதங்கள் (1)

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை – திருவா:20 5/2
மேல்


கீதம் (1)

கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் – திருவா:18 1/1
மேல்


கீர்த்தி (1)

விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் – திருவா:8 8/3
மேல்


கீழ் (20)

சொல்லற்கு அரியானை சொல்லி திருவடி கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் – திருவா:1/92,93
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடி கீழ்
பல்லோரும் ஏத்த பணிந்து – திருவா:1/94,95
குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் – திருவா:2/61
இத்தி-தன்னின் கீழ் இரு_மூவர்க்கு – திருவா:4/162
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்_கழல் கீழ்
விரை ஆர்ந்த மலர் தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன் – திருவா:5 18/2,3
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு – திருவா:5 21/2
பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர் – திருவா:7 10/1
நில முதல் கீழ் அண்டம் உற நின்றது-தான் என் ஏடீ – திருவா:12 6/2
நில முதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் இருவரும் தம் – திருவா:12 6/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ – திருவா:12 16/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும் – திருவா:12 16/3
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ்
அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ – திருவா:12 18/3,4
அரும் தவருக்கு ஆலின் கீழ் அறம் முதலா நான்கினையும் – திருவா:12 20/1
அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி – திருவா:13 13/1
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ்
மறிவு அறியா செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பது ஓர் – திருவா:24 9/1,2
திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும் – திருவா:27 5/1
மூ_உலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே – திருவா:28 9/3
காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே – திருவா:33 8/4
கீழ் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு – திருவா:40 9/2
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை யாவரும் – திருவா:47 8/2
மேல்


கீழ்ப்படுத்தாய் (1)

கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே – திருவா:5 32/4
மேல்


கீழ்மையும் (1)

கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை – திருவா:41 10/2
மேல்


கீழ்மையே (1)

கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே – திருவா:5 91/4
மேல்


கீழாய் (1)

மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க – திருவா:3/50
மேல்


கீழுளும் (1)

நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும் – திருவா:5 46/3
மேல்


கீறு (1)

கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே – திருவா:5 91/4
மேல்


கீறுகின்றிலை (1)

கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே – திருவா:5 33/4
மேல்


கீறேன் (1)

முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன்
இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே – திருவா:5 37/3,4

மேல்