த – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 4
தக்கது 1
தக்கதே 1
தக்கன் 3
தக்கன்-தன் 1
தக்கனார் 1
தக்கனும் 1
தக்கனை 1
தக்கனையும் 2
தக்கான் 1
தகப்பன் 1
தகர் 1
தகர்த்து 1
தகவே 2
தகும் 1
தகுவனே 1
தகுவாரும் 1
தகேன் 1
தகை 1
தகையேன் 1
தகையேனை 1
தகைவு 1
தங்கள் 1
தங்கி 1
தங்கிநின்று 1
தங்கிய 1
தங்கு 5
தச்சு 1
தச 1
தச_மதி 1
தட்டுளுப்பு 1
தட 7
தடம் 14
தடிந்த 1
தடுமாறா 1
தடுமாறாமே 1
தடுமாறி 3
தடுமாறு 1
தடுமாறும் 2
தடைபட்டு 1
தண் 10
தண்டாலே 1
தண்டித்தால் 1
தண்ணீர் 2
தண்மை 1
தணி 1
தணியாது 1
தணியாய் 1
தத்தாய் 1
தத்துவனே 1
தத்துவனை 1
தத்துறு 1
ததும்ப 1
ததும்பி 1
ததும்பும் 1
தந்த 4
தந்தது 1
தந்தருள் 1
தந்தருள 1
தந்தருளவும் 1
தந்தருளாதே 1
தந்தருளினான் 1
தந்தருளு 1
தந்தருளும் 4
தந்தனை 1
தந்தாய் 3
தந்தால் 1
தந்தானை 1
தந்திரத்தில் 2
தந்து 13
தந்தே 1
தந்தை 3
தந்தை_இலி 2
தப்பாமே 2
தப்பு 1
தம் 11
தம்-கண் 1
தம்தம் 3
தம்பிரான் 3
தம்மை 3
தம்மையும் 1
தமக்கு 2
தமர் 2
தமரும் 1
தமியனேன் 1
தமியேன் 4
தமியேனை 1
தமிழ் 1
தமையன் 1
தயங்கு 1
தயா 3
தயாபரன் 1
தயிர் 2
தயிரில் 1
தயிரின் 1
தர்ப்பணம்-அதனில் 1
தர 1
தரணி 2
தரம் 1
தரமும் 3
தரவரும் 1
தரிக்கிலேன் 1
தரித்தனன் 1
தரித்தாய் 1
தரிப்பார் 1
தரிப்பு 1
தரியேன் 4
தரியேனே 1
தரு 5
தருக்கி 1
தருக 1
தரும் 8
தருவரால் 1
தருவன் 1
தருவாய் 1
தருவான் 1
தருவானே 1
தருவோய் 1
தலத்து 1
தலம் 1
தலை 30
தலை-மாலை 1
தலைப்படும் 1
தலையளித்திட்டு 1
தலையளித்து 1
தலையாய் 1
தலையால் 2
தலையில் 1
தலையினால் 1
தலையை 1
தலைவனை 1
தலைவா 6
தவ 1
தவத்தால் 1
தவம் 5
தவமே 2
தவர் 1
தவர்க்கு 2
தவருக்கு 2
தவிசு 4
தவிர்த்த 1
தவிர்த்து 1
தவிர்ந்து 1
தவிர்ந்துவிடும் 1
தவிரார் 1
தழங்கு 1
தழங்கு_அரும் 1
தழல் 13
தழல்-அது 1
தழலில் 1
தழி 1
தழுத்த 1
தழும்பு 3
தழுவிக்கொண்டு 1
தழை 1
தழைத்திடும் 1
தழைத்து 2
தழைப்பவர் 1
தழைப்பன 2
தளர்ந்தேன் 3
தளர்வு 1
தளர்வொடும் 1
தளராது 1
தளிர் 2
தளிர்கள் 1
தளை 1
தறி 1
தறித்தான் 1
தன் 44
தன்-வயின் 1
தன்_நேர்_இல்லோன் 1
தன்_நேர்_இல்லோன்-தானே 1
தன்மை 7
தன்மையன் 1
தன்மையனுக்கு 1
தன்மையில் 1
தன்மையினான் 1
தன்மையும் 3
தன்மையே 2
தன்மையொடு 1
தன்னில் 1
தன்னுடை 1
தன்னுள் 1
தன்னை 5
தன்னையே 1
தன்னொடு 1
தன 1
தனக்கு 2
தனி 7
தனிமை 1
தனியன் 2
தனியனேற்கே 1
தனியனேன் 1
தனியை 1
தனை 3

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

தக்க (4)

தக்க தச_மதி தாயொடு தான் படும் – திருவா:4/24
சகம்-தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:21 3/2
தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த – திருவா:29 3/2
சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:50 6/3
மேல்


தக்கது (1)

வேண்ட தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ – திருவா:33 6/1
மேல்


தக்கதே (1)

முடித்த ஆறும் என்-தனக்கே தக்கதே முன் அடியாரை – திருவா:5 57/1
மேல்


தக்கன் (3)

சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி – திருவா:5 4/1
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் – திருவா:13 4/2
தக்கனார் அன்றே தலை இழந்தார் தக்கன்
மக்களை சூழ நின்று உந்தீ பற – திருவா:14 16/1,2
மேல்


தக்கன்-தன் (1)

சந்திரனை தேய்த்தருளி தக்கன்-தன் வேள்வியினில் – திருவா:8 15/1
மேல்


தக்கனார் (1)

தக்கனார் அன்றே தலை இழந்தார் தக்கன் – திருவா:14 16/1
மேல்


தக்கனும் (1)

பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய – திருவா:13 15/3
மேல்


தக்கனை (1)

பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை
பார்ப்பது என்னே ஏடி உந்தீ பற – திருவா:14 8/1,2
மேல்


தக்கனையும் (2)

தக்கனையும் எச்சையும் தலை அறுத்து தேவர் கணம் – திருவா:12 5/1
சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும் – திருவா:15 11/3
மேல்


தக்கான் (1)

தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் – திருவா:2/67
மேல்


தகப்பன் (1)

தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி – திருவா:9 13/3
மேல்


தகர் (1)

சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி – திருவா:5 4/1
மேல்


தகர்த்து (1)

அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து
சிந்தி திசைதிசையே தேவர்களை ஓட்டு உகந்த – திருவா:8 15/3,4
மேல்


தகவே (2)

தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை எ புன்மையரை – திருவா:5 10/2
தகவே உடையான்-தனை சார தளராது இருப்பார் தாம்தாமே – திருவா:45 2/4
மேல்


தகும் (1)

நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே – திருவா:5 10/4
மேல்


தகுவனே (1)

தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே – திருவா:5 60/4
மேல்


தகுவாரும் (1)

தாழ்ந்து உலகம் ஏத்த தகுவாரும் சூழ்ந்து அமரர் – திருவா:48 4/2
மேல்


தகேன் (1)

புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே – திருவா:5 10/1
மேல்


தகை (1)

அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 12/3
மேல்


தகையேன் (1)

கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே – திருவா:6 12/4
மேல்


தகையேனை (1)

விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ – திருவா:6 12/2
மேல்


தகைவு (1)

தகைவு இலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் – திருவா:35 7/1
மேல்


தங்கள் (1)

தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த – திருவா:29 3/2
மேல்


தங்கி (1)

தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு – திருவா:16 2/3
மேல்


தங்கிநின்று (1)

ஊன் தங்கிநின்று உருக்கும் உத்தரகோசமங்கை – திருவா:16 2/4
மேல்


தங்கிய (1)

காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் – திருவா:23 9/2
மேல்


தங்கு (5)

வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள் – திருவா:16 2/2
கோன் தங்கு இடைமருது பாடி குல மஞ்ஞை – திருவா:16 2/5
தங்கு உலவு சோதி தனி உருவம் வந்தருளி – திருவா:16 9/2
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/2
மேல்


தச்சு (1)

தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும் – திருவா:14 3/1
மேல்


தச (1)

தக்க தச_மதி தாயொடு தான் படும் – திருவா:4/24
மேல்


தச_மதி (1)

தக்க தச_மதி தாயொடு தான் படும் – திருவா:4/24
மேல்


தட்டுளுப்பு (1)

தம்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க – திருவா:15 6/2
மேல்


தட (7)

கட களிறு ஏற்றா தட பெரு மதத்தின் – திருவா:3/155
தட கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் – திருவா:3/162
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மா தட கை – திருவா:6 24/2
தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில் – திருவா:12 15/3
தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள் – திருவா:24 6/2
தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும் – திருவா:35 6/3
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள் – திருவா:41 7/2
மேல்


தடம் (14)

விராவு கொங்கை நல்_தடம் படிந்தும் – திருவா:2/16
தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி – திருவா:5 27/1
கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய் – திருவா:6 2/1
கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே – திருவா:6 31/4
சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண் – திருவா:7 1/2
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன – திருவா:7 11/1
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா – திருவா:7 11/5
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க – திருவா:9 8/1
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4
பருகற்கு இனிய பரம் கருணை தடம் கடலை – திருவா:11 15/2
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா – திருவா:13 14/3
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண் – திருவா:24 5/2
பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு – திருவா:38 9/3
சாதல் பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறி – திருவா:51 8/1
மேல்


தடிந்த (1)

சலம் உடைய சலந்தரன்-தன் உடல் தடிந்த நல் ஆழி – திருவா:12 18/1
மேல்


தடுமாறா (1)

தலை தடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி – திருவா:3/152
மேல்


தடுமாறாமே (1)

தையலார் எனும் சுழி-தலை பட்டு நான் தலை தடுமாறாமே
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி – திருவா:41 1/2,3
மேல்


தடுமாறி (3)

உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப – திருவா:4/83
எண்ணம்-தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்-தன் – திருவா:5 25/2
சாதல் பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறி
காதலின் மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை – திருவா:51 8/1,2
மேல்


தடுமாறு (1)

சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி – திருவா:41 2/2
மேல்


தடுமாறும் (2)

சவலை கடல் உளனாய் கிடந்து தடுமாறும்
கவலை கெடுத்து கழல்_இணைகள் தந்தருளும் – திருவா:11 17/2,3
சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டு தடுமாறும்
ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு – திருவா:31 5/1,2
மேல்


தடைபட்டு (1)

தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை – திருவா:27 1/3
மேல்


தண் (10)

செழும் தண் பாற்கடல் திரை புரைவித்து – திருவா:3/168
தவமே புரிந்திலன் தண் மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் – திருவா:5 5/1
மத்து உறு தண் தயிரின் புலன் தீ கதுவ கலங்கி – திருவா:6 30/1
சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம் – திருவா:6 31/1
தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல – திருவா:7 18/4
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை – திருவா:8 10/3
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை – திருவா:8 10/3
தேன் புக்க தண் பனை சூழ் தில்லை சிற்றம்பலவன் – திருவா:12 14/1
சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 1/3
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 6/3
மேல்


தண்டாலே (1)

தண்டாலே பாண்டியன்-தன்னை பணிகொண்ட – திருவா:13 16/3
மேல்


தண்டித்தால் (1)

நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்
சயம் அன்றோ வானவர்க்கு தாழ் குழலாய் சாழலோ – திருவா:12 4/3,4
மேல்


தண்ணீர் (2)

தண்ணீர் பந்தர் சயம் பெற வைத்து – திருவா:2/58
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய் – திருவா:24 10/3
மேல்


தண்மை (1)

மதியில் தண்மை வைத்தோன் திண் திறல் – திருவா:3/21
மேல்


தணி (1)

தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே – திருவா:5 89/4
மேல்


தணியாது (1)

தணியாது ஒல்லை வந்தருளி தளிர் பொன் பாதம் தாராயே – திருவா:32 8/4
மேல்


தணியாய் (1)

வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா – திருவா:1/36
மேல்


தத்தாய் (1)

தாது ஆடு பூம் சோலை தத்தாய் நமை ஆளும் – திருவா:19 3/1
மேல்


தத்துவனே (1)

தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே – திருவா:1/61,62
மேல்


தத்துவனை (1)

தாயானை தத்துவனை தானே உலகு ஏழும் – திருவா:8 7/5
மேல்


தத்துறு (1)

தத்துறு நீறுடன் ஆர செம் சாந்து அணி சச்சையனே – திருவா:6 30/4
மேல்


ததும்ப (1)

உவா கடல் நள்ளும் நீர் உள்_அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்-தோறும் – திருவா:3/169,170
மேல்


ததும்பி (1)

கை-தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் – திருவா:5 1/2
மேல்


ததும்பும் (1)

ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு – திருவா:6 36/3
மேல்


தந்த (4)

தொண்ட உழவர் ஆர தந்த
அண்டத்து அரும்_பெறல் மேகன் வாழ்க – திருவா:3/94,95
பந்தம் பறிய பரி மேல்கொண்டான் தந்த
அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 3/5,6
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த
மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே – திருவா:9 6/3,4
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை – திருவா:27 1/3
மேல்


தந்தது (1)

தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர் – திருவா:22 10/1
மேல்


தந்தருள் (1)

ஊடு அகத்தே நின்று உருக தந்தருள் எம் உடையானே – திருவா:5 11/4
மேல்


தந்தருள (1)

கூசும் மலர் பாதம் தந்தருள வந்தருளும் – திருவா:7 2/6
மேல்


தந்தருளவும் (1)

கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா – திருவா:6 42/1
மேல்


தந்தருளாதே (1)

புகழே பெரிய பதம் எனக்கு புராண நீ தந்தருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னை குழைத்தாயே – திருவா:33 10/3,4
மேல்


தந்தருளினான் (1)

பிறவி என்னும் இ கடலை நீந்த தன் பேரருள் தந்தருளினான்
அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல் – திருவா:42 7/1,2
மேல்


தந்தருளு (1)

வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே – திருவா:5 100/4
மேல்


தந்தருளும் (4)

செங்கமல பொன் பாதம் தந்தருளும் சேவகனை – திருவா:7 17/5
வானோர் அறியா வழி எமக்கு தந்தருளும்
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் – திருவா:8 16/3,4
கவலை கெடுத்து கழல்_இணைகள் தந்தருளும்
செயலை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 17/3,4
ஊர் ஆக தந்தருளும் உத்தரகோசமங்கை – திருவா:16 1/4
மேல்


தந்தனை (1)

தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
மேல்


தந்தாய் (3)

என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு – திருவா:22 2/2
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம் – திருவா:32 9/1
என்னால் அறியா பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன் – திருவா:50 2/1
மேல்


தந்தால் (1)

பண்டு தந்தால் போல் பணித்து பணிசெய கூவித்து என்னை – திருவா:6 33/3
மேல்


தந்தானை (1)

வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 9/3,4
மேல்


தந்திரத்தில் (2)

இ தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு – திருவா:3/131
அ தந்திரத்தில் அ-வயின் ஒளித்தும் – திருவா:3/132
மேல்


தந்து (13)

ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் தாள் தந்து
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல் நெறி காட்டி – திருவா:5 39/1,2
உடல்-இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி – திருவா:5 64/3
கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும்-கொல்லோ என்று – திருவா:21 4/3
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய் – திருவா:24 10/3
பொருளை தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஓ – திருவா:25 1/2
வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே – திருவா:25 7/2
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை – திருவா:30 7/3
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி – திருவா:41 1/3
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/3
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு_அரியவன் உணர்வு தந்து ஒளி ஆக்கி – திருவா:41 8/2
அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 10/4
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/2
முத்தி தந்து இந்த மூ_உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் – திருவா:42 6/3
மேல்


தந்தே (1)

யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே – திருவா:22 9/4
மேல்


தந்தை (3)

தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான் – திருவா:5 47/2
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/2
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும் – திருவா:12 3/3
மேல்


தந்தை_இலி (2)

தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/2
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும் – திருவா:12 3/3
மேல்


தப்பாமே (2)

தப்பாமே தாம் பிடித்தது சலியா – திருவா:4/59
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான் – திருவா:8 11/2
மேல்


தப்பு (1)

தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள் – திருவா:41 7/2
மேல்


தம் (11)

வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின – திருவா:4/45
ஏனோர்க்கும் தம் கோனை பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 6/8
என் தாதை தாதைக்கும் எம் அனைக்கும் தம் பெருமான் – திருவா:10 8/3
நில முதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் இருவரும் தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ – திருவா:12 6/3,4
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ – திருவா:12 11/4
தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ – திருவா:12 19/4
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான் – திருவா:13 3/2
பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய – திருவா:13 15/3
ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில் – திருவா:14 2/1
தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே – திருவா:15 10/2
பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால் – திருவா:15 12/1
மேல்


தம்-கண் (1)

தம்-கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் – திருவா:7 13/3
மேல்


தம்தம் (3)

சமயவாதிகள் தம்தம் மதங்களே – திருவா:4/52
தம்தம் மனத்தன பேச எஞ்ஞான்று-கொல் சாவதுவே – திருவா:5 3/4
தம்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க – திருவா:15 6/2
மேல்


தம்பிரான் (3)

தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான் – திருவா:5 47/2
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை – திருவா:5 61/3
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரான் ஆம் – திருவா:35 2/2
மேல்


தம்மை (3)

மற்றவை தம்மை மயேந்திரத்து இருந்து – திருவா:2/19
சகம் பேய் என்று தம்மை சிரிப்ப – திருவா:4/68
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி – திருவா:5 16/2
மேல்


தம்மையும் (1)

மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே – திருவா:36 9/4
மேல்


தமக்கு (2)

தாமே தமக்கு சுற்றமும் தாமே தமக்கு விதி வகையும் – திருவா:45 3/1
தாமே தமக்கு சுற்றமும் தாமே தமக்கு விதி வகையும் – திருவா:45 3/1
மேல்


தமர் (2)

எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும் – திருவா:18 10/3
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம் – திருவா:32 9/1
மேல்


தமரும் (1)

ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று – திருவா:38 3/2
மேல்


தமியனேன் (1)

தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே – திருவா:5 68/4
மேல்


தமியேன் (4)

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி – திருவா:4/170
வருந்துவன் அ தமியேன் மற்று என்னே நான் ஆம் ஆறே – திருவா:5 13/4
பொருளே தமியேன் புகலிடமே நின் புகழ் இகழ்வார் – திருவா:6 17/1
தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே – திருவா:6 38/4
மேல்


தமியேனை (1)

வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க – திருவா:6 25/2
மேல்


தமிழ் (1)

தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை – திருவா:8 10/3
மேல்


தமையன் (1)

தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி – திருவா:9 13/3
மேல்


தயங்கு (1)

சடையானே தழல் ஆடீ தயங்கு மூ_இலை சூல – திருவா:39 2/1
மேல்


தயா (3)

தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே – திருவா:1/61
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான் – திருவா:13 3/2
தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே – திருவா:50 5/3
மேல்


தயாபரன் (1)

தானே ஆகிய தயாபரன் எம் இறை – திருவா:2/96
மேல்


தயிர் (2)

மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி – திருவா:5 40/2
தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள் – திருவா:24 6/2
மேல்


தயிரில் (1)

மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்து உறவே – திருவா:6 29/4
மேல்


தயிரின் (1)

மத்து உறு தண் தயிரின் புலன் தீ கதுவ கலங்கி – திருவா:6 30/1
மேல்


தர்ப்பணம்-அதனில் (1)

தர்ப்பணம்-அதனில் சாந்தம்புத்தூர் – திருவா:2/31
மேல்


தர (1)

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 2/4
மேல்


தரணி (2)

சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் – திருவா:12 7/3
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம் – திருவா:12 14/3
மேல்


தரம் (1)

எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 3/4
மேல்


தரமும் (3)

எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு – திருவா:8 1/3
எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய் – திருவா:8 3/3
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொள்வான் – திருவா:16 9/3
மேல்


தரவரும் (1)

நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம் – திருவா:3/80
மேல்


தரிக்கிலேன் (1)

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான – திருவா:5 61/1
மேல்


தரித்தனன் (1)

தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ – திருவா:12 11/4
மேல்


தரித்தாய் (1)

சடையிடை கங்கை தரித்தாய் போற்றி – திருவா:4/146
மேல்


தரிப்பார் (1)

தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் அவர் முன்னே – திருவா:21 9/3
மேல்


தரிப்பு (1)

தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே – திருவா:21 9/4
மேல்


தரியேன் (4)

தரியேன் நாயேன் தான் எனை செய்தது – திருவா:3/164
முறையோ தரியேன் முதல்வா போற்றி – திருவா:4/180
தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேனே – திருவா:5 18/4
தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால் – திருவா:44 2/2
மேல்


தரியேனே (1)

தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே – திருவா:5 60/4
மேல்


தரு (5)

கனி தரு செம் வாய் உமையொடு காளிக்கு – திருவா:2/142
மெய் தரு வேதியன் ஆகி வினை கெட – திருவா:4/88
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் – திருவா:20 9/3
இரும்பு தரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என் என்பு உருக்கி – திருவா:38 1/1
கரும்பு தரு சுவை எனக்கு காட்டினை உன் கழல்_இணைகள் – திருவா:38 1/2
மேல்


தருக்கி (1)

தனி துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த – திருவா:6 39/1
மேல்


தருக (1)

தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே – திருவா:5 68/4
மேல்


தரும் (8)

அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க – திருவா:3/45
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த எ உருவும் தன் உரு ஆய் – திருவா:18 2/1
தரும் பெருமான் சதுர பெருமான் என் மனத்தின் உள்ளே – திருவா:24 3/2
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் – திருவா:40 10/3
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/4
இருந்து இரந்துகொள் நெஞ்சே எல்லாம் தரும் காண் – திருவா:47 10/2
தரும் பரியின் மேல் வந்த வள்ளல் – திருவா:48 2/2
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே – திருவா:49 7/1
மேல்


தருவரால் (1)

கண்ணீர் தருவரால் அன்னே என்னும் – திருவா:17 2/4
மேல்


தருவன் (1)

இன்பம் தருவன் குயிலே ஏழ் உலகும் முழுது ஆளி – திருவா:18 6/1
மேல்


தருவாய் (1)

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில் – திருவா:1/42,43
மேல்


தருவான் (1)

முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்து-மினே – திருவா:36 8/4
மேல்


தருவானே (1)

தாய் ஆய் முலையை தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய் – திருவா:50 5/1
மேல்


தருவோய் (1)

வேண்ட தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ – திருவா:33 6/1
மேல்


தலத்து (1)

ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய – திருவா:27 2/1
மேல்


தலம் (1)

ஏழ் தலம் உருவ இடந்து பின் எய்த்து – திருவா:4/7
மேல்


தலை (30)

வெம் துயர் கோடை மா தலை கரப்ப – திருவா:3/71
தலை தடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி – திருவா:3/152
கை-தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் – திருவா:5 1/2
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன் – திருவா:5 37/3
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினை பிரிந்த – திருவா:6 9/1
வித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண் தலை மிலைச்சி – திருவா:6 30/2
விதி அடியேனை விடுதி கண்டாய் வெண் தலை முழையில் – திருவா:6 42/2
தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண் – திருவா:6 48/1
இந்திரனை தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து – திருவா:8 15/2
அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி – திருவா:9 18/1
பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே – திருவா:11 7/3
தக்கனையும் எச்சையும் தலை அறுத்து தேவர் கணம் – திருவா:12 5/1
எச்சனுக்கு மிகை தலை மற்று அருளினன் காண் சாழலோ – திருவா:12 5/4
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி – திருவா:12 12/1
இணை ஆர் திருவடி என் தலை மேல் வைத்தலுமே – திருவா:13 1/1
வணங்க தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து – திருவா:13 7/1
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான் – திருவா:13 10/2
வெம் சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சியவா பாடி உந்தீ பற – திருவா:14 10/1,2
ஆட்டின் தலையை விதிக்கு தலை ஆக – திருவா:14 11/1
தக்கனார் அன்றே தலை இழந்தார் தக்கன் – திருவா:14 16/1
நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற – திருவா:14 18/1,2
சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும் – திருவா:15 11/3
எய்யாது என்-தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று – திருவா:25 8/2
பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு – திருவா:37 3/2
மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப – திருவா:40 7/2
நடக்கும் திருவடி என் தலை மேல் நட்டமையால் – திருவா:40 8/2
தையலார் எனும் சுழி-தலை பட்டு நான் தலை தடுமாறாமே – திருவா:41 1/2
சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி – திருவா:41 2/2
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே – திருவா:49 4/7
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே – திருவா:49 6/5
மேல்


தலை-மாலை (1)

தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண் – திருவா:6 48/1
மேல்


தலைப்படும் (1)

தான் அடியோமுடனே உய வந்து தலைப்படும் ஆகாதே – திருவா:49 6/6
மேல்


தலையளித்திட்டு (1)

தான் வந்து நாயேனை தாய் போல் தலையளித்திட்டு
ஊன் வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து – திருவா:8 4/3,4
மேல்


தலையளித்து (1)

தானே வந்து எம்மை தலையளித்து ஆட்கொண்டருளும் – திருவா:7 6/5
மேல்


தலையாய் (1)

கலை தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும் – திருவா:6 40/3
மேல்


தலையால் (2)

தனி துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த – திருவா:6 39/1
தாள் செய்ய தாமரை சைவனுக்கு என் புன் தலையால்
ஆட்செய் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 9/3,4
மேல்


தலையில் (1)

ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் – திருவா:10 2/3
மேல்


தலையினால் (1)

தலையினால் நடந்தேன் விடை பாகா சங்கரா எண்_இல் வானவர்க்கு எல்லாம் – திருவா:23 3/2
மேல்


தலையை (1)

ஆட்டின் தலையை விதிக்கு தலை ஆக – திருவா:14 11/1
மேல்


தலைவனை (1)

தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன் – திருவா:5 39/3
மேல்


தலைவா (6)

சைவா போற்றி தலைவா போற்றி – திருவா:4/113
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய் ஆன – திருவா:5 59/1
ஒரு தலைவா மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 9/3
மலை தலைவா மலையாள் மணவாள என் வாழ்_முதலே – திருவா:6 40/4
தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் அவர் முன்னே – திருவா:21 9/3
எங்கள் நாயகனே என் உயிர் தலைவா ஏல வார் குழலி-மார் இருவர் – திருவா:29 3/1
மேல்


தவ (1)

தவ பெரு வாயிடை பருகி தளர்வொடும் – திருவா:3/81
மேல்


தவத்தால் (1)

கீழ் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு – திருவா:40 9/2
மேல்


தவம் (5)

உலவா காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனை காண்பான் – திருவா:5 54/1
நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து – திருவா:12 11/1
சித்தம் சிவம் ஆக்கி செய்தனவே தவம் ஆக்கும் – திருவா:15 6/3
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
நானேயோ தவம் செய்தேன் சிவாயநம என பெற்றேன் – திருவா:38 10/1
மேல்


தவமே (2)

தவமே புரிந்திலன் தண் மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் – திருவா:5 5/1
வான் பாவிய உலகத்தவர் தவமே செய அவமே – திருவா:34 10/1
மேல்


தவர் (1)

அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் – திருவா:3/138
மேல்


தவர்க்கு (2)

அரும் தவர்க்கு அருளும் ஆதி வாழ்க – திருவா:3/97
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே – திருவா:37 4/1
மேல்


தவருக்கு (2)

அரும் தவருக்கு ஆலின் கீழ் அறம் முதலா நான்கினையும் – திருவா:12 20/1
அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல் – திருவா:12 20/3
மேல்


தவிசு (4)

நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே – திருவா:5 28/2
நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த – திருவா:10 20/3
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு – திருவா:34 2/1
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே – திருவா:38 5/4
மேல்


தவிர்த்த (1)

அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க – திருவா:3/98
மேல்


தவிர்த்து (1)

அறம் பாவம் ஒன்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான் – திருவா:11 8/2
மேல்


தவிர்ந்து (1)

பொய்-தான் தவிர்ந்து உன்னை போற்றி சயசய போற்றி என்னும் – திருவா:5 1/3
மேல்


தவிர்ந்துவிடும் (1)

படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திரிந்து அடியேன் கும்பியிலே விழாவண்ணம் – திருவா:51 11/1,2
மேல்


தவிரார் (1)

சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ – திருவா:12 6/4
மேல்


தழங்கு (1)

தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய் – திருவா:24 10/3
மேல்


தழங்கு_அரும் (1)

தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய் – திருவா:24 10/3
மேல்


தழல் (13)

மொக்கணி அருளிய முழு தழல் மேனி – திருவா:2/33
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரி தழல் முழுகும் – திருவா:6 44/1
தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண் – திருவா:6 48/1
தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில் – திருவா:12 15/3
ஓவி அவர் உன்னி நிற்ப ஒள் தழல் விண் பிளந்து ஓங்கி – திருவா:18 8/2
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய் – திருவா:18 10/4
செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி – திருவா:20 8/3
செம் தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 8/2
தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த – திருவா:29 3/2
விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் – திருவா:29 4/2
கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி – திருவா:29 7/2
தறி செறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன் – திருவா:35 8/1
சடையானே தழல் ஆடீ தயங்கு மூ_இலை சூல – திருவா:39 2/1
மேல்


தழல்-அது (1)

தழல்-அது கண்ட மெழுகு-அது போல – திருவா:4/60
மேல்


தழலில் (1)

பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
மேல்


தழி (1)

தழி சிறை நீரில் பிறை கலம் சேர்தரு தாரவனே – திருவா:6 47/4
மேல்


தழுத்த (1)

தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம் – திருவா:27 7/2
மேல்


தழும்பு (3)

நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர் – திருவா:4/47
இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற – திருவா:5 13/2
கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி – திருவா:9 15/3
மேல்


தழுவிக்கொண்டு (1)

கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழும தழுவிக்கொண்டு
எய்யாது என்-தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று – திருவா:25 8/1,2
மேல்


தழை (1)

தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன் தழை
குரம்பை-தோறும் நாய்_உடல் அகத்தே – திருவா:3/171,172
மேல்


தழைத்திடும் (1)

அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும்
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/3,4
மேல்


தழைத்து (2)

தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம் – திருவா:27 7/2
பித்தனே எல்லா உயிரும் ஆய் தழைத்து பிழைத்து அவை அல்லை ஆய் நிற்கும் – திருவா:37 8/3
மேல்


தழைப்பவர் (1)

சாயா அன்பினை நாள்-தொறும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி – திருவா:4/86,87
மேல்


தழைப்பன (2)

தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே – திருவா:49 6/5
சங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே – திருவா:49 8/1
மேல்


தளர்ந்தேன் (3)

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி – திருவா:4/170
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே – திருவா:6 1/4
தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள் – திருவா:24 6/2
மேல்


தளர்வு (1)

தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்தி கிடப்பேனை – திருவா:31 2/2
மேல்


தளர்வொடும் (1)

தவ பெரு வாயிடை பருகி தளர்வொடும்
அவ பெரும் தாபம் நீங்காது அசைந்தன – திருவா:3/81,82
மேல்


தளராது (1)

தகவே உடையான்-தனை சார தளராது இருப்பார் தாம்தாமே – திருவா:45 2/4
மேல்


தளிர் (2)

முற்று_இலா இளம் தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன் – திருவா:5 34/3
தணியாது ஒல்லை வந்தருளி தளிர் பொன் பாதம் தாராயே – திருவா:32 8/4
மேல்


தளிர்கள் (1)

போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம் – திருவா:7 20/2,3
மேல்


தளை (1)

தாள் தளை இடு-மின் – திருவா:3/143
மேல்


தறி (1)

தறி செறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன் – திருவா:35 8/1
மேல்


தறித்தான் (1)

கையை தறித்தான் என்று உந்தீ பற – திருவா:14 7/2
மேல்


தன் (44)

கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி – திருவா:1/21
தன்_நேர்_இல்லோன்-தானே காண்க – திருவா:3/30
தன்_நேர்_இல்லோன் தானே ஆன தன்மை – திருவா:3/146
கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை – திருவா:8 5/3
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி – திருவா:8 6/4
எ பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால் – திருவா:8 12/2
கோன்-அவன் போல் வந்து என்னை தன் தொழும்பில் கொண்டருளும் – திருவா:8 14/5
கொற்ற குதிரையின் மேல் வந்தருளி தன் அடியார் – திருவா:8 20/2
தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன் கருணை – திருவா:10 10/3
நாயேனை தன் அடிகள் பாடுவித்த நாயகனை – திருவா:10 12/1
தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல் – திருவா:10 15/2
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ – திருவா:11 8/3
கல் நார் உரித்து என்ன என்னையும் தன் கருணையினால் – திருவா:11 9/1
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ் – திருவா:12 18/3
சிரம் மூன்று அற தன் திரு புருவம் நெரித்தருளி – திருவா:13 6/2
இணங்க தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான் – திருவா:13 7/2
நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே – திருவா:13 8/1
படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு – திருவா:13 14/1
தன் நீறு எனக்கு அருளி தன் கருணை வெள்ளத்து – திருவா:16 3/3
தன் நீறு எனக்கு அருளி தன் கருணை வெள்ளத்து – திருவா:16 3/3
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த எ உருவும் தன் உரு ஆய் – திருவா:18 2/1
அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 1/4
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 2/4
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 3/4
ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே – திருவா:26 4/2
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 4/4
அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 5/4
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 6/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 7/4
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 8/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 9/4
ஆலம் உண்டான் எங்கள் பாண்டி பிரான் தன் அடியவர்க்கு – திருவா:36 5/3
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும் – திருவா:36 7/3
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி – திருவா:41 1/3
பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் – திருவா:41 8/3
விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர் கழல் காட்டி – திருவா:41 9/3
இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி – திருவா:41 10/3
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/2
பிறவி என்னும் இ கடலை நீந்த தன் பேரருள் தந்தருளினான் – திருவா:42 7/1
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக – திருவா:43 9/3
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே – திருவா:49 6/5
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 3/3
எண்ணம்_இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன்
சுண்ண வெண்ணீறு அணிவித்து தூ நெறியே சேரும்வண்ணம் – திருவா:51 4/2,3
மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 8/3
மேல்


தன்-வயின் (1)

எவ்வெவர் தன்மையும் தன்-வயின் படுத்து – திருவா:2/95
மேல்


தன்_நேர்_இல்லோன் (1)

தன்_நேர்_இல்லோன் தானே ஆன தன்மை – திருவா:3/146
மேல்


தன்_நேர்_இல்லோன்-தானே (1)

தன்_நேர்_இல்லோன்-தானே காண்க – திருவா:3/30
மேல்


தன்மை (7)

அளப்பு_அரும் தன்மை வள பெரும் காட்சி – திருவா:3/2
தன்_நேர்_இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி – திருவா:3/146,147
தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை எ புன்மையரை – திருவா:5 10/2
தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம் என் தன்மையே – திருவா:5 58/4
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய் ஆன – திருவா:5 59/1
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை – திருவா:22 7/2
தாணுவே அழிந்தேன் நின் நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால் – திருவா:44 5/3
மேல்


தன்மையன் (1)

தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ – திருவா:12 19/4
மேல்


தன்மையனுக்கு (1)

தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியா தன்மையனுக்கு
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணவு கெட்டு என் உள்ளமும் போய் – திருவா:11 18/2,3
மேல்


தன்மையில் (1)

அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க – திருவா:3/45
மேல்


தன்மையினான் (1)

தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்
அ பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த – திருவா:8 11/2,3
மேல்


தன்மையும் (3)

தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரியூரில் உகந்து இனிது அருளி – திருவா:2/67,68
எவ்வெவர் தன்மையும் தன்-வயின் படுத்து – திருவா:2/95
எ பெரும் தன்மையும் எவ்வெவர் திறமும் – திருவா:2/125
மேல்


தன்மையே (2)

தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம் என் தன்மையே – திருவா:5 58/4
தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே – திருவா:5 60/4
மேல்


தன்மையொடு (1)

சுந்தர தன்மையொடு துதைந்து இருந்தருளியும் – திருவா:2/99
மேல்


தன்னில் (1)

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் – திருவா:2/70
மேல்


தன்னுடை (1)

தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி – திருவா:9 13/3
மேல்


தன்னுள் (1)

மு மதி தன்னுள் அ மதம் பிழைத்தும் – திருவா:4/17
மேல்


தன்னை (5)

சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் – திருவா:1/19,20
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்கு – திருவா:26 3/2
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை – திருவா:27 1/3
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி – திருவா:37 7/1
வேடு உரு ஆகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னை
தேட இருந்த சிவபெருமான் சிந்தனைசெய்து அடியோங்கள் உய்ய – திருவா:43 4/1,2
மேல்


தன்னையே (1)

தன்னையே கோவணமா சாத்தினன் காண் சாழலோ – திருவா:12 2/4
மேல்


தன்னொடு (1)

நீக்கி முன் எனை தன்னொடு நிலாவகை குரம்பையில் புக பெய்து – திருவா:26 8/1
மேல்


தன (1)

முடியேன் பிறவேன் எனை தன தாள் முயங்குவித்த – திருவா:40 2/3
மேல்


தனக்கு (2)

தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான் – திருவா:5 47/2
நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம் – திருவா:10 13/1
மேல்


தனி (7)

தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே – திருவா:6 38/4
தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே – திருவா:6 38/4
தனி துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த – திருவா:6 39/1
நேர் பாடல் பாடி நினைப்பு_அர்¢ய தனி பெரியோன் – திருவா:11 13/3
தங்கு உலவு சோதி தனி உருவம் வந்தருளி – திருவா:16 9/2
சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என – திருவா:30 6/3
மேல்


தனிமை (1)

தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே – திருவா:5 68/4
மேல்


தனியன் (2)

தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/2
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும் – திருவா:12 3/3
மேல்


தனியனேற்கே (1)

தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
மேல்


தனியனேன் (1)

தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி – திருவா:5 27/1
மேல்


தனியை (1)

தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம் – திருவா:27 7/2
மேல்


தனை (3)

தான் அந்தம்_இல்லான் தனை அடைந்த நாயேனை – திருவா:12 10/1
தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம் – திருவா:27 7/2
தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்தி கிடப்பேனை – திருவா:31 2/2

மேல்