தோ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

தோடும் (1)

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும் – திருவா:10 18/1,2
மேல்


தோணி (2)

வரும் நீர் மடுவுள் மலை சிறு தோணி வடிவின் வெள்ளை – திருவா:6 26/3
பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும் – திருவா:30 4/3
மேல்


தோத்திரம் (1)

இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் – திருவா:20 4/1
மேல்


தோய் (2)

மஞ்சு தோய் மாட மணி உத்தரகோசமங்கை – திருவா:16 4/2
துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலை கண்கள் தோய் சுவடு – திருவா:29 5/1
மேல்


தோல் (9)

புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி – திருவா:1/53
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேல் கொண்டு உழிதருமே – திருவா:5 7/4
விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 1/2,3
கோயில் சுடுகாடு கொல் புலி தோல் நல் ஆடை – திருவா:12 3/1
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி – திருவா:12 12/1
அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம் – திருவா:12 19/1
ஆடு அர பூண் உடை தோல் பொடி பூசிற்று ஓர் – திருவா:17 4/1
மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த – திருவா:25 2/1
அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை – திருவா:25 5/1
மேல்


தோலின் (1)

தோலின் பாவைக்கூத்தாட்டு ஆய் சுழன்று விழுந்து கிடப்பேனை – திருவா:50 3/2
மேல்


தோலுடை (1)

உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு – திருவா:6 49/3
மேல்


தோலும் (1)

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும் – திருவா:10 18/1
மேல்


தோழன் (1)

ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன் – திருவா:7 10/5
மேல்


தோழா (1)

தோழா போற்றி துணைவா போற்றி – திருவா:4/120
மேல்


தோழி (2)

ஈதே எம் தோழி பரிசு எல் ஓர் எம்பாவாய் – திருவா:7 1/8
கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன் – திருவா:8 6/1
மேல்


தோழியும் (1)

உன்னை உகப்பன் குயிலே உன் துணை தோழியும் ஆவன் – திருவா:18 7/1
மேல்


தோள் (32)

தேறுகின்றிலம் இனி உனை சிக்கென சிவன்-அவன் திரள் தோள் மேல் – திருவா:5 33/2
நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன் – திருவா:5 60/2
எம் கொங்கை நின் அன்பர்_அல்லார் தோள் சேரற்க – திருவா:7 19/4
எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய் – திருவா:8 3/3
இந்திரனை தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து – திருவா:8 15/2
சூடுவேன் பூம் கொன்றை சூடி சிவன் திரள் தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று – திருவா:8 17/1,2
சூடகம் தோள் வளை ஆர்ப்பஆர்ப்ப தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/1
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி – திருவா:9 8/2
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள்
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/3,4
கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ – திருவா:12 11/2
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோள்_நோக்கம் – திருவா:15 1/4
துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 2/4
அருள் பெற்று நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 3/4
சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 4/4
பல ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 5/4
அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 6/4
பாதகமே சோறு பற்றினவா தோள்_நோக்கம் – திருவா:15 7/4
ஆனந்தம் ஆகி நின்று ஆடாமே தோள்_நோக்கம் – திருவா:15 8/4
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/4
எங்கும் பரவி நாம் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 10/4
தூய்மைகள் செய்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 11/4
பரம் ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 12/4
தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 13/4
துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 14/4
கணக்கு அற்றவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 15/4
என்-தான் கெட்டது இரங்கிடாய் எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 3/4
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 7/3
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன் – திருவா:35 6/2
துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால் – திருவா:40 2/1
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய – திருவா:40 7/1
வேய தோள் உமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான் – திருவா:42 5/2
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 8/4
மேல்


தோள்_நோக்கம் (15)

கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோள்_நோக்கம் – திருவா:15 1/4
துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 2/4
அருள் பெற்று நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 3/4
சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 4/4
பல ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 5/4
அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 6/4
பாதகமே சோறு பற்றினவா தோள்_நோக்கம் – திருவா:15 7/4
ஆனந்தம் ஆகி நின்று ஆடாமே தோள்_நோக்கம் – திருவா:15 8/4
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/4
எங்கும் பரவி நாம் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 10/4
தூய்மைகள் செய்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 11/4
பரம் ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 12/4
தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 13/4
துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 14/4
கணக்கு அற்றவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 15/4
மேல்


தோளா (3)

தோளா முத்த சுடரே போற்றி – திருவா:4/197
சுடர் பொன் குன்றை தோளா முத்தை வாளா தொழும்பு உகந்து – திருவா:27 1/1
நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே – திருவா:32 10/2
மேல்


தோளி (1)

பேர் அமை தோளி காதலன் வாழ்க – திருவா:3/103
மேல்


தோளியோடும் (1)

புன வேய் அன வளை தோளியோடும் புகுந்தருளி – திருவா:11 10/2
மேல்


தோற்ற (3)

தோற்ற சுடர் ஒளி ஆய் சொல்லாத நுண் உணர்வு ஆய் – திருவா:1/80
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நால் திசை – திருவா:3/108
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்ற செழும் சுடரே – திருவா:6 4/4
மேல்


தோற்றம் (4)

போற்றி எ உயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய் – திருவா:5 70/2
போற்றி எ உயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய் – திருவா:5 70/2
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம் – திருவா:7 20/3
மெய்ப்பொருள்-கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய் – திருவா:8 12/4
மேல்


தோற்றமும் (1)

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய – திருவா:3/8
மேல்


தோற்றி (1)

தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் – திருவா:44 6/2
மேல்


தோற்றிய (1)

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் – திருவா:2/41
மேல்


தோற்றியும் (1)

துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் – திருவா:2/5
மேல்


தோற்றுவித்து (1)

சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் – திருவா:2/10
மேல்


தோன்றா (1)

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே – திருவா:1/72
மேல்


தோன்றி (4)

கரு மா முகிலின் தோன்றி
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி – திருவா:3/67,68
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர – திருவா:3/72
ஆண் என தோன்றி அலி என பெயர்ந்து – திருவா:3/134
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி
பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 7/3,4
மேல்


தோன்றினாய் (1)

தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்
கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே – திருவா:5 42/3,4
மேல்


தோன்றும் (3)

சோதியாய் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய – திருவா:22 9/1
துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டரிடை புகுந்து – திருவா:32 8/1
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 8/3,4

மேல்