தி – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திகழ் 5
திகழ்தரு 1
திகழ்ந்தாய் 1
திகழ்ந்து 1
திகழ 7
திகழா 1
திகழும் 8
திகழுமே 4
திகைத்தால் 1
திகைத்து 2
திகைத்தேன் 1
திகைப்பிக்க 1
திகைப்பு 1
திங்களில் 5
திசை 6
திசைகளும் 1
திசைதிசை 2
திசைதிசையே 1
திசைமுகன் 1
திசைமுகன்-பால் 1
திண் 9
திண்ணம்-தான் 1
திண்ணமே 1
திண்மை 1
திணி 3
திணிந்தது 1
திணிந்து 1
தித்திக்க 2
தித்திக்கும் 3
தித்திக்குமா 1
தித்தித்து 2
திதலை 1
திமில 1
திரட்டிய 1
திரண்டு 3
திரள் 6
திரளே 1
திரிதருகின்றேன் 1
திரிதரும் 1
திரிதவரே 1
திரிந்த 1
திரிந்து 4
திரிபுரம் 1
திரியும் 2
திரிவேனை 6
திரு 41
திருக்கழுக்குன்றில் 1
திருக்குறிப்பு 2
திருக்கோயில் 1
திருக்கோலம் 2
திருச்சிற்றம்பலம் 1
திருச்சிற்றம்பலவ 1
திருத்தகு 2
திருத்தகும் 1
திருத்தம் 1
திருத்தன் 1
திருத்தி 1
திருத்துருத்தி 1
திருந்த 3
திருந்து 2
திருநாமம் 4
திருநீற்றினை 1
திருநீற்று 1
திருநீற்றை 1
திருநீறே 2
திருப்பணிகள் 1
திருப்பனையூரில் 1
திருப்பாத 1
திருப்பாதம் 2
திருப்புயங்கன் 1
திருப்பெருந்துறை 49
திருப்பெருந்துறையாய் 1
திருப்பெருந்துறையில் 10
திருமால் 4
திருமாலும் 2
திருமாற்கு 1
திருமுகத்தின் 1
திருமுகத்து 2
திருமுண்டத்தர் 1
திருமுண்டம் 2
திருமேனி 7
திருமேனியும் 1
திருவடி 13
திருவடிக்கு 1
திருவடிக்கே 1
திருவடிகள் 1
திருவடியை 2
திருவருள் 7
திருவருள்_குன்றே 1
திருவருளால் 2
திருவருளாலே 1
திருவருளே 1
திருவாஞ்சியத்தில் 1
திருவாயால் 2
திருவார்த்தை 1
திருவாரூர் 3
திருவாரூரில் 1
திருவுரு 1
திருவுருவை 1
திருவை 2
திருவையாறா 1
திருவொடும் 1
திருவோலக்கம் 1
திரை 7
திரை-அது 1
திரையால் 1
திரையின் 1
தில்லை 42
தில்லைநகர் 1
தில்லையுள் 2
தில்லைவாணனுக்கே 1
திளைக்கும் 1
திளைத்தும் 1
திளைப்பன 2
திறத்திடை 1
திறத்தே 1
திறந்தபோதே 1
திறந்து 1
திறப்பாய் 1
திறம் 11
திறமும் 1
திறமை 1
திறல் 8
திறவாய் 4
திறவிலே 1
தின்று 1
தினைத்தனை 1
தினைத்தனையும் 1
தினைத்துணையேனும் 1
தினையின் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

திகழ் (5)

காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ்
நீரில் இன் சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட – திருவா:3/24,25
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:11 15/3
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய் – திருவா:15 1/3
கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே – திருவா:18 9/1
சீர் உடை செங்கமலத்தின் திகழ் உரு ஆகிய செல்வன் – திருவா:18 9/2
மேல்


திகழ்தரு (1)

தேவூர் தென்-பால் திகழ்தரு தீவில் – திருவா:2/71
மேல்


திகழ்ந்தாய் (1)

தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி – திருவா:4/139
மேல்


திகழ்ந்து (1)

என்ன திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் – திருவா:7 16/2
மேல்


திகழ (7)

மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் – திருவா:3/125,126
நங்கள் பெருமானை பாடி நலம் திகழ
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 17/7,8
ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
அளி வந்த அந்தணனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 18/5,6
தே ஆர்ந்த கோலம் திகழ பெருந்துறையான் – திருவா:13 20/2
தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப்பான் – திருவா:16 6/4
திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும் – திருவா:27 5/1
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி சிலிர்சிலிர்த்து – திருவா:27 8/3
மேல்


திகழா (1)

திகழா நின்ற திருமேனி காட்டி என்னை பணிகொண்டாய் – திருவா:33 10/2
மேல்


திகழும் (8)

பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்கு புகுவேனே – திருவா:5 59/4
பூ திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம் – திருவா:7 12/7
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை – திருவா:16 8/4
கோல அழகின் திகழும் கொடி மங்கை உள் உறை கோயில் – திருவா:18 3/2
பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன் – திருவா:18 7/2
திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும் – திருவா:27 5/1
ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும்
கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு – திருவா:43 2/2,3
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம் – திருவா:45 6/3
மேல்


திகழுமே (4)

சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/4
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 7/4
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/4
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/4
மேல்


திகைத்தால் (1)

தேறும் வகை என் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ – திருவா:33 5/4
மேல்


திகைத்து (2)

புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே – திருவா:6 28/1
தேடு-மின் எம்பெருமானை தேடி சித்தம் களிப்ப திகைத்து தேறி – திருவா:9 11/3
மேல்


திகைத்தேன் (1)

தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே – திருவா:50 6/4
மேல்


திகைப்பிக்க (1)

புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே – திருவா:6 28/1
மேல்


திகைப்பு (1)

தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ – திருவா:33 5/2
மேல்


திங்களில் (5)

ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் – திருவா:4/18
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் – திருவா:4/19
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் – திருவா:4/20
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் – திருவா:4/21
எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் – திருவா:4/22
மேல்


திசை (6)

நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நால் திசை
நடப்பன நடாஅய் கிடப்பன கிடாஅய் – திருவா:3/108,109
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர – திருவா:4/3
முன் பின் ஆகி முனியாது அ திசை
என்பு நைந்து உருகி நெக்குநெக்கு ஏங்கி – திருவா:4/79,80
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ – திருவா:7 6/3
உலகு ஏழ் என திசை பத்து என தான் ஒருவனுமே – திருவா:15 5/3
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின் – திருவா:20 2/1
மேல்


திசைகளும் (1)

வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான் – திருவா:10 15/3
மேல்


திசைதிசை (2)

திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய – திருவா:3/69
செம் சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுற – திருவா:3/77
மேல்


திசைதிசையே (1)

சிந்தி திசைதிசையே தேவர்களை ஓட்டு உகந்த – திருவா:8 15/4
மேல்


திசைமுகன் (1)

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் – திருவா:3/126
மேல்


திசைமுகன்-பால் (1)

செங்கண்-அவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால் – திருவா:7 17/1
மேல்


திண் (9)

சேவகன் ஆகி திண் சிலை ஏந்தி – திருவா:2/81
மதியில் தண்மை வைத்தோன் திண் திறல் – திருவா:3/21
தீயில் வீழ்கிலேன் திண் வரை உருள்கிலேன் செழும் கடல் புகுவேனே – திருவா:5 39/4
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே – திருவா:6 10/4
தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே – திருவா:6 39/4
திண் போர் விடையான் சிவபுரத்தார் போர் ஏறு – திருவா:13 16/1
சீர் ஆர் திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே – திருவா:13 18/1
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த – திருவா:31 7/3
திண் திறல் சித்தர்களே கடை கூழை செல்-மின்கள் – திருவா:46 2/3
மேல்


திண்ணம்-தான் (1)

திண்ணம்-தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லி சிந்திக்கேனே – திருவா:5 25/4
மேல்


திண்ணமே (1)

திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 5/2
மேல்


திண்மை (1)

மண்ணில் திண்மை வைத்தோன் என்றுஎன்று – திருவா:3/26
மேல்


திணி (3)

திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி – திருவா:5 89/3
திணி ஆர் மூங்கில் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் – திருவா:32 8/2
திணி நிலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு – திருவா:35 5/3
மேல்


திணிந்தது (1)

திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 4/3
மேல்


திணிந்து (1)

இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல் வினை சிறு குடில் இது இத்தை – திருவா:26 10/1
மேல்


தித்திக்க (2)

தித்திக்க பேசுவாய் வந்து உன் கடை திறவாய் – திருவா:7 3/3
தேனை பழ சுவை ஆயினானை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல – திருவா:9 15/2
மேல்


தித்திக்கும் (3)

தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறும் ஆறே – திருவா:5 90/3,4
திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை – திருவா:31 3/3
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான் – திருவா:38 10/2
மேல்


தித்திக்குமா (1)

தித்திக்குமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 12/4
மேல்


தித்தித்து (2)

தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு – திருவா:16 2/3
என்-கணிலே அமுது ஊறி தித்தித்து என் பிழைக்கு இரங்கும் – திருவா:24 7/3
மேல்


திதலை (1)

திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே – திருவா:6 41/4
மேல்


திமில (1)

திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 4/3
மேல்


திரட்டிய (1)

வெய்யவன் அங்கி விழுங்க திரட்டிய
கையை தறித்தான் என்று உந்தீ பற – திருவா:14 7/1,2
மேல்


திரண்டு (3)

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை – திருவா:21 9/1
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை – திருவா:21 9/1
சங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே – திருவா:49 8/1
மேல்


திரள் (6)

தேறுகின்றிலம் இனி உனை சிக்கென சிவன்-அவன் திரள் தோள் மேல் – திருவா:5 33/2
தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான் – திருவா:8 1/4
சூடுவேன் பூம் கொன்றை சூடி சிவன் திரள் தோள் – திருவா:8 17/1
திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 2/3
வழி முதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமி – திருவா:21 4/2
செழு கமல திரள் அன நின் சேவடி நேர்ந்து அமைந்த – திருவா:24 1/1
மேல்


திரளே (1)

தேச பளிங்கின் திரளே போற்றி – திருவா:4/103
மேல்


திரிதருகின்றேன் (1)

செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 2/4
மேல்


திரிதரும் (1)

சித்தனை சிவலோகனை திருநாமம் பாடி திரிதரும்
பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ – திருவா:42 10/2,3
மேல்


திரிதவரே (1)

தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே – திருவா:5 4/4
மேல்


திரிந்த (1)

தேனினை சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 9/3
மேல்


திரிந்து (4)

ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் – திருவா:5 3/3
பேர் ஆயிரமும் பரவி திரிந்து எம் பெருமான் என ஏத்த – திருவா:25 7/3
அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனை – திருவா:31 1/2
குடிமையிலே திரிந்து அடியேன் கும்பியிலே விழாவண்ணம் – திருவா:51 11/2
மேல்


திரிபுரம் (1)

வேவ திரிபுரம் செற்ற வில்லி வேடுவன் ஆய் கடி நாய்கள் சூழ – திருவா:43 6/1
மேல்


திரியும் (2)

அம்பலத்தே கூத்து ஆடி அமுது செய பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்-அது என் ஏடீ – திருவா:12 17/1,2
சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில்-இது சிதைய – திருவா:25 3/1
மேல்


திரிவேனை (6)

கடித்த வாயிலே நின்று முன் வினை மிக கழறியே திரிவேனை
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை – திருவா:41 3/2,3
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/2,3
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை
குணங்களும் குறிகளும் இலா குண கடல் கோமளத்தொடும் கூடி – திருவா:41 6/2,3
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை
விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர் கழல் காட்டி – திருவா:41 9/2,3
வம்பனாய் திரிவேனை வா என்று வல் வினை பகை மாய்த்திடும் – திருவா:42 9/1
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை
மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன்-தான் – திருவா:51 9/1,2
மேல்


திரு (41)

திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி – திருவா:2/54
ஆற்றல்-அது உடை அழகு அமர் திரு உரு – திருவா:2/103
தேவதேவன் திரு பெயர் ஆகவும் – திருவா:2/122
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி – திருவா:3/68
போற்றி செய் கதிர் முடி திரு நெடுமால் அன்று – திருவா:4/4
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் – திருவா:5 5/3
திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா – திருவா:6 37/3
பொன் அம் சிலம்பில் சிலம்பி திரு புருவம் – திருவா:7 16/4
பூ இயல் வார் சடை எம்பிராற்கு பொன் திரு சுண்ணம் இடிக்கவேண்டும் – திருவா:9 2/1
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 4/3
செறிவு உடை மு_மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 5/3
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 13/4
பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 14/4
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் – திருவா:9 17/1
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 17/4
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 14/4
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவி – திருவா:11 2/1
திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 5/4
சிரம் மூன்று அற தன் திரு புருவம் நெரித்தருளி – திருவா:13 6/2
தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய் – திருவா:13 18/3
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய் – திருவா:15 1/3
உன்னற்கு அரிய திரு உத்தரகோசமங்கை – திருவா:16 7/1
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை – திருவா:16 8/4
தெங்கு உலவு சோலை திரு உத்தரகோசமங்கை – திருவா:16 9/1
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை – திருவா:18 3/3
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய் – திருவா:18 10/4
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன் – திருவா:19 1/2
மது வளர் பொழில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா – திருவா:20 7/3
உடைந்து நைந்து உருகி உள் ஒளி நோக்கி உன் திரு மலர் பாதம் – திருவா:25 4/3
ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து – திருவா:26 1/3
திரு உயர் கோல சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 7/2
திரு உரு அன்றி மற்று ஓர் தேவர் எ தேவர் என்ன – திருவா:35 2/3
காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர – திருவா:44 5/1
கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை – திருவா:45 4/2
திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து – திருவா:45 8/3
திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து – திருவா:45 8/3
திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே – திருவா:45 8/4
திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே – திருவா:45 8/4
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ – திருவா:47 1/3
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை – திருவா:48 4/3
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே – திருவா:49 3/6
மேல்


திருக்கழுக்குன்றில் (1)

திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி – திருவா:4/191
மேல்


திருக்குறிப்பு (2)

தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே – திருவா:5 37/2
கோனே உன்-தன் திருக்குறிப்பு கூடுவார் நின் கழல் கூட – திருவா:5 55/3
மேல்


திருக்கோயில் (1)

கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் – திருவா:5 14/3
மேல்


திருக்கோலம் (2)

கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 1/4
காண்_ஒணா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 4/4
மேல்


திருச்சிற்றம்பலம் (1)

செறி பொழில் சூழ் தில்லைநகர் திருச்சிற்றம்பலம் மன்னி – திருவா:31 6/3
மேல்


திருச்சிற்றம்பலவ (1)

செம் பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம்பலவ போற்றி – திருவா:5 67/3
மேல்


திருத்தகு (2)

அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன் திண் திறல் – திருவா:3/20,21
திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய – திருவா:3/69
மேல்


திருத்தகும் (1)

கருத்துடை கடவுள் திருத்தகும்
அறுவகை சமயத்து அறுவகையோர்க்கும் – திருவா:3/16,17
மேல்


திருத்தம் (1)

திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 2/3
மேல்


திருத்தன் (1)

திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய – திருவா:47 7/3
மேல்


திருத்தி (1)

சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா – திருவா:32 9/3
மேல்


திருத்துருத்தி (1)

திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை – திருவா:31 3/3
மேல்


திருந்த (3)

அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் – திருவா:3/138
திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ – திருவா:12 20/4
சேர கருகி சிந்தனையை திருந்த வைத்து சிந்தி-மின் – திருவா:45 9/1
மேல்


திருந்து (2)

திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 10/1
திருந்து சேவடி சிலம்பு-அவை சிலம்பிட திருவொடும் அகலாதே – திருவா:41 4/3
மேல்


திருநாமம் (4)

திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 1/4
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம்
தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் அவர் முன்னே – திருவா:21 9/2,3
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு_எழுத்தும் என் ஏழைமை-அதனாலே – திருவா:26 6/1
சித்தனை சிவலோகனை திருநாமம் பாடி திரிதரும் – திருவா:42 10/2
மேல்


திருநீற்றினை (1)

நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/4
மேல்


திருநீற்று (1)

பால் திருநீற்று எம் பரமனை பரம் கருணையோடு எதிர்ந்து – திருவா:44 6/1
மேல்


திருநீற்றை (1)

ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் – திருவா:6 22/1
மேல்


திருநீறே (2)

பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா – திருவா:5 24/2
பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று – திருவா:5 82/1,2
மேல்


திருப்பணிகள் (1)

செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு – திருவா:40 10/2
மேல்


திருப்பனையூரில் (1)

திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் – திருவா:2/87
மேல்


திருப்பாத (1)

சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி – திருவா:5 26/1
மேல்


திருப்பாதம் (2)

விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர் திருப்பாதம்
முற்று_இலா இளம் தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன் – திருவா:5 34/2,3
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த – திருவா:31 7/3
மேல்


திருப்புயங்கன் (1)

தெருள்வீராகில் இது செய்-மின் சிவலோக கோன் திருப்புயங்கன்
அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே – திருவா:45 10/3,4
மேல்


திருப்பெருந்துறை (49)

சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 1/3
திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 2/3
தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/3
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 4/3
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து – திருவா:20 5/3
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 6/3
மது வளர் பொழில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா – திருவா:20 7/3
செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி – திருவா:20 8/3
சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம் – திருவா:20 10/2
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 1/3
திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 3/3
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 4/3
சிறை பெறா நீர் போல் சிந்தை-வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 5/3
சிரம்-தனில் பொலியும் கமல சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 6/2
சென்றுசென்று அணுவாய் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 7/3
சீர் உறு சிந்தை எழுந்தது ஓர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 8/3
தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 9/3
சிந்தையே கோயில்கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 10/3
செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 1/4
செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 2/4
சிலையனே எனை செத்திட பணியாய் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 3/4
தென் பராய்த்துறையாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 4/4
சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 5/4
சிறை-கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 6/4
சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 7/4
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 8/4
சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 9/4
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 10/2
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 1/2
செம் பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 2/3
தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 3/2
தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 4/2
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 5/2
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 6/2
திரு உயர் கோல சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 7/2
செம் தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 8/2
தேவர்-தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 9/2
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 10/2
செந்நாவலர் பசும் புகழ் திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 1/3
தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 2/3
சின மால் விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 3/3
தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர் – திருவா:34 5/3
சுடரும் சுடர் மதி சூடிய திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 6/3
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் – திருவா:34 7/3
சேற்று ஆர் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 8/3
செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 9/3
தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 10/3
தென்பாலை திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான் – திருவா:38 7/2
வேய தோள் உமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான் – திருவா:42 5/2
மேல்


திருப்பெருந்துறையாய் (1)

மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம் – திருவா:20 9/2
மேல்


திருப்பெருந்துறையில் (10)

நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 1/3
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 2/3
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 3/3
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 4/3
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 5/3
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 6/3
செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 7/3
சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 8/3
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 9/3
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 10/1
மேல்


திருமால் (4)

இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ – திருவா:12 15/4
ஆஆ திருமால் அவி பாகம் கொண்டு அன்று – திருவா:14 6/1
சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம் – திருவா:20 10/2
திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே – திருவா:45 8/4
மேல்


திருமாலும் (2)

திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை – திருவா:11 1/1
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்
வான் நாடர் கோவும் வழி அடியார் சாழலோ – திருவா:12 12/3,4
மேல்


திருமாற்கு (1)

அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரிய சிவம் – திருவா:11 5/1
மேல்


திருமுகத்தின் (1)

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/1,2
மேல்


திருமுகத்து (2)

அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை – திருவா:2/143
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம் – திருவா:20 1/2
மேல்


திருமுண்டத்தர் (1)

வெள்ளை கலிங்கத்தர் வெண் திருமுண்டத்தர்
பள்ளி குப்பாயத்தர் அன்னே என்னும் – திருவா:17 7/1,2
மேல்


திருமுண்டம் (2)

தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி – திருவா:9 8/2
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது – திருவா:35 9/3
மேல்


திருமேனி (7)

பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்கு புகுவேனே – திருவா:5 59/4
பேதை ஒரு-பால் திருமேனி ஒன்று அல்லன் – திருவா:7 10/3
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி சிலிர்சிலிர்த்து – திருவா:27 8/3
திகழா நின்ற திருமேனி காட்டி என்னை பணிகொண்டாய் – திருவா:33 10/2
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே உனை யானே – திருவா:34 8/4
பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே – திருவா:45 7/2
பொன்னியலும் திருமேனி வெண்ணீறு பொலிந்திடும் ஆகாதே – திருவா:49 6/1
மேல்


திருமேனியும் (1)

செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி – திருவா:20 8/3
மேல்


திருவடி (13)

சொல்லற்கு அரியானை சொல்லி திருவடி கீழ் – திருவா:1/92
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி – திருவா:2/1,2
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன்-தனக்கு பரிமா விற்று – திருவா:2/37,38
சிறுமை என்று இகழாதே திருவடி இணையை – திருவா:4/77
மின்னி பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல் – திருவா:7 16/3
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொன் உலக்கை வல கை பற்றி – திருவா:9 9/3
இணை ஆர் திருவடி என் தலை மேல் வைத்தலுமே – திருவா:13 1/1
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான் – திருவா:13 10/2
பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே – திருவா:13 17/2
சீர் ஆர் திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே – திருவா:13 18/1
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம் – திருவா:20 1/2
மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப – திருவா:40 7/2
நடக்கும் திருவடி என் தலை மேல் நட்டமையால் – திருவா:40 8/2
மேல்


திருவடிக்கு (1)

சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் – திருவா:5 5/3
மேல்


திருவடிக்கே (1)

ஆம் ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன் அன்பு உருகேன் – திருவா:5 14/1
மேல்


திருவடிகள் (1)

ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ – திருவா:12 10/3,4
மேல்


திருவடியை (2)

கெட்டேன் மறப்பேனோ கேடுபடா திருவடியை
ஒட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம் – திருவா:10 7/2,3
திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் – திருவா:11 1/1,2
மேல்


திருவருள் (7)

மன்னிய திருவருள் மலையே போற்றி – திருவா:4/128
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புக போகேன் – திருவா:5 40/3
தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 9/3
அறுக்கிலேன் உடல் துணிபட தீ புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன் – திருவா:23 6/1
ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே – திருவா:26 4/2
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி – திருவா:41 1/3
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே – திருவா:44 1/4
மேல்


திருவருள்_குன்றே (1)

தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 9/3
மேல்


திருவருளால் (2)

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழ – திருவா:15 7/3
செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வேரறுப்பவனே – திருவா:24 2/3
மேல்


திருவருளாலே (1)

எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா – திருவா:5 2/3
மேல்


திருவருளே (1)

சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் – திருவா:51 2/2
மேல்


திருவாஞ்சியத்தில் (1)

திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து – திருவா:2/79
மேல்


திருவாயால் (2)

பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடீ – திருவா:12 1/2
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 10/3,4
மேல்


திருவார்த்தை (1)

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம் – திருவா:21 9/1,2
மேல்


திருவாரூர் (3)

வேர் உறுவேனை விடுதி கண்டாய் விளங்கும் திருவாரூர்
உறைவாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 3/2,3
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 2/4
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின் – திருவா:39 1/3
மேல்


திருவாரூரில் (1)

தேன் அமர் சோலை திருவாரூரில்
ஞானம்-தன்னை நல்கிய நன்மையும் – திருவா:2/73,74
மேல்


திருவுரு (1)

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் – திருவா:20 7/2
மேல்


திருவுருவை (1)

உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும் – திருவா:10 16/1
மேல்


திருவை (2)

திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 15/4
மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை
உலகு அறிய தீ வேட்டான் என்னும்-அது என் ஏடீ – திருவா:12 13/1,2
மேல்


திருவையாறா (1)

சீர் ஆர் திருவையாறா போற்றி – திருவா:4/148
மேல்


திருவொடும் (1)

திருந்து சேவடி சிலம்பு-அவை சிலம்பிட திருவொடும் அகலாதே – திருவா:41 4/3
மேல்


திருவோலக்கம் (1)

தேசா நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க – திருவா:21 6/3
மேல்


திரை (7)

செழும் தண் பாற்கடல் திரை புரைவித்து – திருவா:3/168
திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா – திருவா:6 37/3
திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 6/4
திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 3/3
சுழி சென்று மாதர் திரை பொர காம சுறவு எறிய – திருவா:24 4/3
ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகள் எல்லாம் – திருவா:38 1/3
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில் – திருவா:43 5/3
மேல்


திரை-அது (1)

கடலின் திரை-அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என் – திருவா:34 6/1
மேல்


திரையால் (1)

தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி – திருவா:5 27/1
மேல்


திரையின் (1)

அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி – திருவா:3/151
மேல்


தில்லை (42)

தில்லை மூதூர் ஆடிய திருவடி – திருவா:2/1
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி – திருவா:4/92
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லை
கோனே உன்-தன் திருக்குறிப்பு கூடுவார் நின் கழல் கூட – திருவா:5 55/2,3
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி – திருவா:5 61/3,4
செம் பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம்பலவ போற்றி – திருவா:5 67/3
தேசன் சிவலோகன் தில்லை சிற்றம்பலத்துள் – திருவா:7 2/7
தீர்த்தன் நல் தில்லை சிற்றம்பலத்தே தீ ஆடும் – திருவா:7 12/2
தில்லை நகர் புக்கு சிற்றம்பலம் மன்னும் – திருவா:8 5/5
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி – திருவா:9 19/2
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் – திருவா:10 11/3
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள் – திருவா:11 16/3
அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:11 20/3
தென் பால் உகந்து ஆடும் தில்லை சிற்றம்பலவன் – திருவா:12 9/1
தேன் புக்க தண் பனை சூழ் தில்லை சிற்றம்பலவன் – திருவா:12 14/1
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 1/3
பண் பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே – திருவா:13 4/1
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 7/3
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா – திருவா:13 14/3
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய் – திருவா:15 1/3
குன்றாத சீர் தில்லை அம்பலவன் குணம் பரவி – திருவா:15 2/3
தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 4/2
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே – திருவா:31 1/4
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 2/4
அருத்தியினால் நாய்_அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே – திருவா:31 3/4
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 4/4
கோது_இல் அமுது ஆனானை குலாவு தில்லை கண்டேனே – திருவா:31 5/4
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே – திருவா:31 7/4
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே – திருவா:31 8/4
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 9/4
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே – திருவா:31 10/4
ஆடும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 1/4
அடியேன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 2/4
அன்பின் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 3/4
அறியும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 4/4
ஆரும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 5/4
அம் பொன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 6/4
அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 7/4
அடக்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 8/4
ஆட்செய் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 9/4
அம்மை குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 10/4
சித்தர் சூழ சிவபிரான் தில்லை மூதூர் நடம்செய்வான் – திருவா:42 4/2
தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே – திருவா:50 6/4
மேல்


தில்லைநகர் (1)

செறி பொழில் சூழ் தில்லைநகர் திருச்சிற்றம்பலம் மன்னி – திருவா:31 6/3
மேல்


தில்லையுள் (2)

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே – திருவா:1/90
நாயினேனை நலம் மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என – திருவா:2/127,128
மேல்


தில்லைவாணனுக்கே (1)

ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 9/4
மேல்


திளைக்கும் (1)

அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் – திருவா:10 11/3
மேல்


திளைத்தும் (1)

திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 10/2
மேல்


திளைப்பன (2)

சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே – திருவா:49 3/6
செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே – திருவா:49 8/5
மேல்


திறத்திடை (1)

செப்பு நேர் முலை மடவரலியர்-தங்கள் திறத்திடை நைவேனை – திருவா:26 1/2
மேல்


திறத்தே (1)

குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை – திருவா:26 5/2
மேல்


திறந்தபோதே (1)

திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து – திருவா:45 8/3
மேல்


திறந்து (1)

மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப – திருவா:9 11/1
மேல்


திறப்பாய் (1)

சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய் – திருவா:7 7/3,4
மேல்


திறம் (11)

மறை திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் – திருவா:3/130
சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி – திருவா:7 14/5
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடி – திருவா:7 14/6
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 14/8
சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 3/4
வரை ஆடு மங்கை-தன் பங்கொடும் வந்து ஆண்ட திறம்
உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர் – திருவா:11 6/2,3
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 8/4
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு – திருவா:24 5/1
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு – திருவா:25 9/1
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே உன் திறம் நினைந்தே – திருவா:38 4/4
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 2/4
மேல்


திறமும் (1)

எ பெரும் தன்மையும் எவ்வெவர் திறமும்
அ பரிசு-அதனால் ஆண்டுகொண்டருளி – திருவா:2/125,126
மேல்


திறமை (1)

திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 7/4
மேல்


திறல் (8)

மதியில் தண்மை வைத்தோன் திண் திறல்
தீயில் வெம்மை செய்தோன் பொய் தீர் – திருவா:3/21,22
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின் – திருவா:4/56
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே – திருவா:36 10/3
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே – திருவா:37 4/1
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய – திருவா:40 7/1
கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை – திருவா:40 8/3
ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்தீர்கள் – திருவா:46 2/2
திண் திறல் சித்தர்களே கடை கூழை செல்-மின்கள் – திருவா:46 2/3
மேல்


திறவாய் (4)

தித்திக்க பேசுவாய் வந்து உன் கடை திறவாய்
பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர் – திருவா:7 3/3,4
பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 5/3,4
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் – திருவா:7 6/6,7
வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ – திருவா:7 8/5,6
மேல்


திறவிலே (1)

திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே – திருவா:37 6/3
மேல்


தின்று (1)

சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி – திருவா:5 4/1
மேல்


தினைத்தனை (1)

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே – திருவா:10 3/1
மேல்


தினைத்தனையும் (1)

தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே – திருவா:5 76/2
மேல்


தினைத்துணையேனும் (1)

தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே – திருவா:6 39/4
மேல்


தினையின் (1)

தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே – திருவா:5 37/2

மேல்