வை – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 1
வை-மின் 1
வைக்கவேண்டும் 1
வைகுவது 1
வைச்சு 1
வைத்த 10
வைத்தலுமே 2
வைத்தவா 1
வைத்தனையோ 1
வைத்தாய் 2
வைத்தாய்க்கு 1
வைத்திட்டிருக்கும்-அது 1
வைத்திட்டு 1
வைத்திடும் 1
வைத்து 12
வைத்தோன் 3
வைப்பதோ 1
வைப்பனே 1
வைப்பாய் 1
வைப்பான் 1
வைப்பிடம் 1
வைப்பு 3
வைப்பே 2
வையகத்தின் 1
வையகத்து 1
வையகத்துடைய 1
வையகத்தே 1
வையகம் 1
வையத்து 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

வை (1)

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால் – திருவா:6 18/1
மேல்


வை-மின் (1)

முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின்
சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/1,2
மேல்


வைக்கவேண்டும் (1)

பேரானந்தம் பேராமை வைக்கவேண்டும் பெருமானே – திருவா:32 9/4
மேல்


வைகுவது (1)

மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே – திருவா:49 4/5
மேல்


வைச்சு (1)

வைச்சு வாங்குவாய் வஞ்சக பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில் – திருவா:5 96/2
மேல்


வைத்த (10)

படிம பாதம் வைத்த அ பரிசும் – திருவா:2/76
சென்னியில் வைத்த சேவக போற்றி – திருவா:4/130
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி – திருவா:5 64/4
வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும் – திருவா:10 6/1
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான் – திருவா:13 10/2
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 3/3,4
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி – திருவா:30 5/2
மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன் – திருவா:42 2/3
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/4
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 9/2
மேல்


வைத்தலுமே (2)

மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி – திருவா:12 7/1
இணை ஆர் திருவடி என் தலை மேல் வைத்தலுமே
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் – திருவா:13 1/1,2
மேல்


வைத்தவா (1)

ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே – திருவா:5 95/3,4
மேல்


வைத்தனையோ (1)

நேசமும் வைத்தனையோ நேர்_இழையாய் நேர்_இழையீர் – திருவா:7 2/3
மேல்


வைத்தாய் (2)

விச்சு கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் – திருவா:5 81/1,2
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர் சேவடியானே – திருவா:25 6/2
மேல்


வைத்தாய்க்கு (1)

பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு என் எம்பெருமான் – திருவா:47 8/3
மேல்


வைத்திட்டிருக்கும்-அது (1)

மாய பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும்-அது அன்றி – திருவா:33 8/2
மேல்


வைத்திட்டு (1)

புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு
இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே – திருவா:45 6/1,2
மேல்


வைத்திடும் (1)

முத்தி தந்து இந்த மூ_உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/3,4
மேல்


வைத்து (12)

தண்ணீர் பந்தர் சயம் பெற வைத்து
நல் நீர் சேவகன் ஆகிய நன்மையும் – திருவா:2/58,59
கை-தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் – திருவா:5 1/2
அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம் – திருவா:6 35/3
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழில் சுடர் வைத்து கொடி எடு-மின் – திருவா:9 3/2
நன்று ஆக வைத்து என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:10 8/2
வணங்க தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து – திருவா:13 7/1
வணங்க தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து
இணங்க தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான் – திருவா:13 7/1,2
இணங்க தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான் – திருவா:13 7/2
எய்யாது என்-தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று – திருவா:25 8/2
எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்-கணே வைத்து
மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 5/3,4
சேர கருகி சிந்தனையை திருந்த வைத்து சிந்தி-மின் – திருவா:45 9/1
மருந்தின் அடி என் மனத்தே வைத்து – திருவா:48 7/4
மேல்


வைத்தோன் (3)

மதியில் தண்மை வைத்தோன் திண் திறல் – திருவா:3/21
வானில் கலப்பு வைத்தோன் மேதகு – திருவா:3/23
மண்ணில் திண்மை வைத்தோன் என்றுஎன்று – திருவா:3/26
மேல்


வைப்பதோ (1)

வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே – திருவா:5 98/4
மேல்


வைப்பனே (1)

வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே – திருவா:5 98/4
மேல்


வைப்பாய் (1)

காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே – திருவா:33 8/4
மேல்


வைப்பான் (1)

செடி சேர் உடலை செல நீக்கி சிவலோகத்தே நமை வைப்பான்
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/3,4
மேல்


வைப்பிடம் (1)

இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே – திருவா:30 3/3
மேல்


வைப்பு (3)

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க – திருவா:3/105
மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம் – திருவா:11 19/2
வைப்பு மாடு என்று மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே – திருவா:26 1/1
மேல்


வைப்பே (2)

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி – திருவா:4/121
மன துணையே என்-தன் வாழ்_முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே
தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே – திருவா:6 39/3,4
மேல்


வையகத்தின் (1)

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் – திருவா:1/81
மேல்


வையகத்து (1)

வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே – திருவா:5 98/4
மேல்


வையகத்துடைய (1)

ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே – திருவா:5 95/4
மேல்


வையகத்தே (1)

வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க – திருவா:47 9/3
மேல்


வையகம் (1)

வையகம் எல்லாம் உரல்-அது ஆக மா மேரு என்னும் உலக்கை நாட்டி – திருவா:9 9/1
மேல்


வையத்து (1)

உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து உறையுள் வேல் மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான் – திருவா:47 3/2,3

மேல்